என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 16 ஆகஸ்ட், 2014

VGK 29 / 02 / 03 SECOND PRIZE WINNERS - அட்டெண்டர் ஆறுமுகம்
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு : VGK-29  


 அட்டெண்டர் ஆறுமுகம்  


இணைப்பு: 

 


 மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  ஐந்து
  
இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள்.   


மற்றவர்களுக்கு:     


இனிப்பான இரண்டாம் பரிசினை 


 வென்றுள்ளவர்கள்  மொத்தம் இருவர்: 

 
அதில் ஒருவர் திருமதி
 இராஜராஜேஸ்வரி  
அவர்கள்


http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"
 


 


இனிப்பான இரண்டாம்  


பரிசினை  வென்றுள்ள 


திருமதி
 இராஜராஜேஸ்வரி  
அவர்களின் விமர்சனம் இதோ:

கதையின் தலைப்பாகட்டும், ஆரம்ப குணச்சித்திர வர்ணணைகளாகட்டும் மிக வேகமாக பாயும் புத்தம்  புது வெள்ளமாகக் கரைபுரண்டு கதைக்குள் கண் பதிப்பவர்களின் கருத்தை ஈர்த்து தன் போக்கில் அழைத்துச்செல்லும் வல்லமையாளராக கதாசிரியரை வியக்கிறோம்..!

நடைமுறை சமுதாயத்தின் மிக பிரதானமான கௌரவப்பிரச்சினையை  மிகவும் அருமையாகக் கண்முன் காட்சியாக்குகின்றனவே..!  

படிக்காதவராக இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து தன் பிரச்சினையைக் கூறி அதற்குத் தீர்வும் பெற்ற அட்டெண்டர் ஆறுமுகம் கதாபாத்திரம் கண்முன் உலாவருமாறு படைத்தது படைப்பாளியின் தனித்திறமை..

ஒரு சின்ன புள்ளியை மையமாக வைத்து வண்ணக் கலவைகள் கொண்டு ரங்கோலி தீட்டுவது போல வர்ணணைகளால் உணர்ச்சிக் கலவைகளை நவரசங்களாக் தகுந்த இடங்களில் நகாசு வேலைகளால் அழகுபடுத்தி மெருகு ஏற்றி அழகான கதையாகப் படைத்த நுட்பம் ரசிக்கவைக்கிறது..! 

காட்சிக்கு எளியராக, தன் கீழ்பணிபுரியும் அட்டெண்டர்தானே என்று அலட்சியம் செய்யாமல்  என்ன வேணும் சொல்லுங்க!!” என்று மேனேஜர்  கனிவுடன் மரியாதையுடன் விளித்து வினவும் போதே ஆறுமுகத்தின் வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை புத்தொளி பிறந்துவிடுகிறது படிப்பவர்களுக்கு..!

பல மேலாளர்கள் தன் கீழ் பணிபுரிபவர் ஏதாவது பேசவந்தாலே லீவு கேட்பாரோ, பணம் கேட்பாரோ என நினைத்து பாராமுகமாக அலட்சியமாக இருப்பதைப் போலல்லாமல் கனிவுடன் வாஞ்சையாக அழைக்கும் தொனியே உற்சாகமூட்டுகிறது..!

அட்டெண்டரின் மகளுக்குத் திருமணம் என்றதுமே மேலாளர் எத்தனை உதவிகள் செய்யமுன்வருகிறார்..!

நம்முடைய வாழ்க்கை மேடையிலும் இப்படியொருவர் இருந்து நாம் சோர்வடையும்போதெல்லாம் வந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? என்று எண்ணமிட வைக்கும் மேலாளர் பாத்திரம் பாத்திரப்படைப்புகளின் உச்சம் என்று சொல்லலாம்..

இராம பிரான் தன் குடிக்களிடம் யாது நலம் ? ஏதும் குறையுள்ளதோ என இனிமையாகக்கேட்டு இராமராஜ்ஜியம் பரிபலனம் செய்த  கம்ப சித்திரமும் நினைவில் நிழலாடுகிறது..

புகை தோன்றினால் அங்கு நெருப்பு இருக்கும் என ஊகித்து சிறு பிரச்சினை, சிறு சிறு மனக்குறைப்பாடுகள் தோன்றும்  அந்தக் கணத்திலேயே இளைத்தாக முள்மரம் களையும் நேர்த்தியுடன் செயல்பட்டு, இனிமையான மகிழ்ச்சிச் செய்தியும் தரும் மேலாளரை கோவில்கட்டி கும்பிடத்தோன்றுகிறது..

இருளில் தவித்தவருக்கு வெளிச்சம் தந்து துள்ளிக்குதிக்காத குறையாக சந்தோஷம் கொண்டாட வைக்கிறாரே..மேலாளர்..!

வருங்கால மாப்பிள்ளை - மாமனாராகப் போகும் தன்னை அட்டெண்டராக அறியக்கூடாது என்று தன் முனைப்புடன்  பவ்வியமாக செயல் பட்டு வெற்றியும் பெறுகிறாரே..!

வெற்றி பெற நினைப்பவர்கள் பெற வேண்டிய பாடமல்லவா அது..!

இருபது வயதில் வேலைக்குச்சேர்ந்து இருபது மேலாளர்கள் பதவி உயர்வுடன் சென்றதை ஏக்கமுடன் பார்த்து முப்பதாறு வருட அட்டெண்டர் உத்தியோகத்தில் கணவனாக,  கடன் வாங்காமல் மகள் திருமணத்தை நடத்தும் பொறுப்புமிக்க தந்தையாக 

வாழ்வில் பெற்ற பிரமோஷன்கள் உத்தியோகத்தில் கிடைக்காமல் 

கிணற்றில் போட்ட கல்லாக, 
இடிச்சு வைத்த புளிமூட்டையாக, 
பிடித்து வைத்தப் பிள்ளையாராக 

மாற்றமில்லாத அட்டெண்டர்  உத்தியோகத்தின் பெயர்தான் ஆறுமுகத்தின்  வெட்கமாகவும், வேதனையாகவும், வெறுப்பாகவும் 
மன உளைச்சலைத் தந்து வாட்டி வரும் பிரச்சினை..!


இந்த சமூகப்பிரச்சினையை சுமுகமாக  இயக்குனர்கள் கூட்டத்தில் முன்வைத்து ஆபீஸ் 

கிளார்க்’ ஆகப் பிரமோஷன் கொடுத்து  இருள் நீக்கி பிரகாசிக்கவைக்கிறார் அட்டெண்டர் 

ஆறுமுகத்தின் வாழ்க்கையை..!


எக்கி எக்கி இடித்தவளுக்கு 


மூணு கொழுக்கட்டையாம், 


எட்டி எட்டிப் பார்த்தவளுக்கு 


ஏழு கொழுக்கட்டையாம் கதையாக  


மாப்பிள்ளை வந்த 


நேரம் என்று பேச்சு வரும் போது ஆறுமுகத்தின் சிரமங்களை நினைத்துப் பார்க்கிறோம்..இந்த சமயத்தில்  மாப்பிள்ளையின் அப்பா ஆறுமுகத்திடம் பேச அலுவலகத்துக்குப் போன் 

செய்ய../ ???என்ன நடக்கபோகிறதோ.. ! ஆறுமுகம் ஐயா இருக்காரா என்றால் அந்த அலுவலக 

சிப்பந்திக்குப்புரிந்தால்தானே..!ஏங்க அட்டெண்டர் ஆறுமுகம் என்று விவரமாகக்கேளுங்க என்கிற இலவச அறிவுரை 

வேறு கிடைக்கிறது..!அப்போதும் தன் ட்ரேட்மார்க் அசட்டுச்சிரிப்புடனே பிரமோசன் வந்து கொஞ்சநாள்தான் 

ஆகிறது  என்கிற தன்னிலை விளக்கம் கேட்டு .....


"PAY ME FORTY - CALL ME தோட்டி”  என்று  உற்சாகமாக வெள்ளைக்காரன் .. 

காலத்துக் கௌரவக் கதையை சொல்லி வயிற்றில் பாலை வார்க்கிறார்..மனிதர்..!ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப்பார்த்து 


மெருகேற்றி சிறு சிறு  நகாசு வார்த்தைகளால் 


ஜொலிக்கவைத்து பிரமாதப்படுத்துகிறார் கதை 


ஆசிரியர்..!


பவித்திரமான காராம்பசுவின் பாலை பக்குவமாக இளம் தீயில் காய்ச்சி, கச்சிதமாக புரை ஊற்றி, கண்ணன் கேட்ட வெண்ணையை கோகுலத்து யசோதை  திரட்டிக்கொடுத்த மாதிரி சுவைமிக்க கதையை நேர்த்தியுடன் படைத்திருக்கிறார் படைப்பாளி..!

கதை சொல்லும் நீதி எந்த காலத்திற்கும் ஏற்புடையது .. !
நெய் எத்தனை ஆண்டுகளானாலும் மணம் மாறாமல் 
சுவை குன்றாமல் பலனளிப்பது போல ..! 


அமர்க்களமான திருமணத்துடன் அமர்க்களமான கதை என்று கெட்டி மேளத்துடன் 


தண்டோரா சப்தமும் சேர்ந்து முழங்க மின்னலாக கதை சொன்ன விதம் பளிச்சிடுகிறது.. .! 
-oOo-


Thanks a Lot, Madam.


- vgk   

மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


    
  
VGK-26 To VGK-29

திருமதி


 இராஜராஜேஸ்வரி  

அவர்கள்
    


  
   
   
தனது ஐந்தாவது ஹாட்-ட்ரிக் பரிசினை 


நான்காம் சுற்றிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள்.மனம் நிறைந்த பாராட்டுக்கள் 

அன்பான இனிய நல்வாழ்த்துகள் Hat-Trick Prize Amount will be fixed later 


according to Her Continuous Further Success in VGK-30 and VGK-31 
 
    

இனிப்பான இரண்டாம் பரிசினை  


வென்றுள்ள மற்றொருவர்  


  
 

கன்னுக்குட்டி .... என் .... செல்லக் .... கன்னுக்குட்டி   திருநிறைச்செல்வன்   


J. அரவிந்த் குமார்      


அவர்கள்


வலைத்தள முகவரி


 

இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள

திருநிறைச்செல்வன் J. அரவிந்த் குமார்  

  
அவர்களின் விமர்சனம் இதோகதையின் தலைப்பிலேயே  யாரைப்பற்றிய 
கதை என்றும் அவர் உத்தியோகமும் அறிமுகப்படுத்தியாகிவிட்டது..!

முதல் பத்தியிலேயே அவர் உயரம் நடை உடை பாவனைகள், பண்பு எல்லாம் கச்சிதமாகத் தீட்டிய சித்திர உருவமாக கணிணியில் கதை படிக்க ஆரம்பிக்கும் நேரத்திலேயே கூழைக்கும்பிடும் , அசட்டுச்சிரிப்புமாக உழைப்பாளியான  படிக்காத மேதை உயிர்பெற்று எழுந்தாற்போல உணரவைக்கும் அசாத்திய வர்ணணைகள் மனம் கவருகின்றன..!

அட்டெண்டர் ஆறுமுகத்தின் உருவத்தைக்  கதை ஆசிரியர் விவரிக்கும் போதே  உயிர்ப்புடன் எழுந்து வந்துவிடுகிறார்..!

ஒரு மேலதிகாரி எப்படி ஆதரவுத்தன்மையாக கடைநிலை ஊழியரின் மனநிலையை தன் தனித்துவம் மிக்க அனுபவ மொழிகள் மூலம் கேட்டு உணர்ந்து, உடனே அதன் அவசரம் மனதில் கொண்டு ஆவன செய்து நலம் செய்கிறார் என்று உணரும் போது அது நம் கதாசிரியரோ என்கிற பிம்பம் மனதில் ஏற்படும்..


ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும் என்னும் நுணுக்கம் அறிந்தவர்
படிக்காத மேதையான ஆறுமுகம் ..!

தகுதியான காலம்... எவ்வளவு ஆழமான வார்த்தை ..

இந்த வாழ்க்கை ஒரு எழுதப்பட்ட கதை. பலருக்கு இன்னமும் புலப்படவில்லை என்றால் அவர் முயற்சிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். 

காலத்தை அறிய முயற்சியுடன் இருப்பவன் அறிகிறான். 

காலத்தை அறிந்து வாழும்போது அதற்கு ஏற்ப  நேரத்தை தேர்ந்தெடுத்து 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல்

என்று புத்திசாலித்தனமான அட்டெண்டர்
தன் கோரிக்கை நியமானதாக இருந்தால் கூட
அதை சொல்லுகிற விதமும் அதன் காரணமாகவே
செய்ய நினைக்கிறவர்களும் மனமுவந்து செய்துதர
எண்ணுகிற மாதிரி நடந்து கொண்ட விதமும்
அனைவருக்குமான அருமையான படிப்பினை..

தன் உழைப்பை சொல்லி அதுவும் பவ்யமாவே ஐம்பத்தி ஆறு வயது ஆஜானுபாவ மனிதருக்கு அத்தனை பவ்யம் .. 

இத்தனை வருஷம் வேலை செய்து எத்தனை நல்ல பெயர் பெற்றிருந்தால்  வாஞ்சையாக தன் கீழ் பணி புரியும் ஒரு அட்டெண்டரின் மகள் திருமணத்திற்கு அத்தனை உதவிகளையும் செய்ய  மேலாளர் முன்வந்திருப்பார் ? 

ஒருத்தருக்காக இத்தனை பெரிய மீட்டிங்கில்  சுமுகமான முடிவு எடுக்க வேண்டுமென்றால்  இத்தனை வருஷ சர்வீஸ் ஏனோ தானோன்னு வேலை செய்யாம மனசாத்மார்த்தமா அவர் உழைத்த  உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது ..!

மேலாரின் ஆத்மார்த்தமான அர்பணிப்பு மிக்க அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி..!

மேலாளரின் பாத்திரப்படைப்பு தன்னை முன் நிறுத்தியே கதாசிரியர் படைத்திருப்பாரோ என எண்ணவைக்கிறது..!

கர்ம வீரர் காமராஜர் படிக்காத தாமே பதவியில் இருக்கும் போது அய்யாக்கண்ணு என்னும் படிக்காத கடைநிலை ஊழியரை படிக்காதவர் என்னும் சட்டத்தைக் காட்டி வீட்டுக்கு அனுப்புவது என்ன நியாயம்ணேன்? சட்டதை மாற்று .. அவரை வேலையில் தொடர விடு என்று  ஒரு குடும்பத்தின் வாழ்வை  பாதுகாத்த சம்பவமும் நினைவுக்கு வருகிறது..!

ஆறுமுகத்தின் பொறுமை, பணிவு, அனுகியவிதம், மேனேஜரின் நல்ல மனது மனதைக் கவர்ந்தது..


ஒரு சிறு விஷயத்தையும் கதையாகப் படைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு.. கடைநிலை ஊழியரின் மனதைப் புரிந்து கொண்ட மனிதாபிமானம் மிக்க மேனேஜர்....! எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரே பதவியில் இருப்பதன் சோகம்....!! எல்லாவற்றையும் அழகாய்ச் சொல்லிச் சென்ற கதை சொல்லும் பாங்கு ஒரு சமுதாய சிந்தனையை தூண்டி விட்டு அதற்கு ஒரு தீர்வும் கண்டடைந்த நேர்த்தியுடன் யதார்த்தமான கதை சொல்லும் பாணி சிலாகித்து.. சபாஷ் போடவைக்கிறது..திருமணமாகி கணவன், தந்தை என்றெல்லாம் வாழ்க்கையில் பதவி உயர்வு பெற்ற ஆறுமுகம்  அலுவலகத்தில்  பணிபுரிபவர்களெல்லாம்  தன் கண்முன்னே பிரமோஷனுடன் மகிழ்ச்சியுடன் சென்றுவிட கல்லுப்பிள்ளையாராய் அதே அட்டெண்டர் டெசிக்னேஷனில் இருந்தால் ஏக்கம் வரத்தானே செய்யும் ..!எந்த வேலையாக இருந்தால் என்ன? அட்டெண்டராக இருந்தாலும் தன் மகளை நன்றாக வளர்த்து நல்ல இடத்தில் வரன் பார்த்திருக்கின்றாரே.தனது மகளின் எதிர்காலத்திற்காக துணிந்து சென்று மேலாளரை பார்த்து பேசிய விதம்...நிறைவளிக்கிறது..!

அவருக்குள் தோன்றிய தாழ்வு மனப்பான்மை. தான் இன்னமும் அதே அட்டெண்டர் தானா என்று அவர் நினைத்திருப்பது .. கௌரவப்பிரச்சினை.!

நம் நாட்டில் Dignity of labor அந்த அளவில்தான இருக்கிறது..!  

பலநாடுகள் முன்னேறியதற்கும், நம் நாடு வளரும் நாடாக இருப்பதற்கும் இதுவே அடிப்படை !

அட்டெண்டர் என்றால் கடைசிவரை அட்டெண்டர்தான். !!

நேரம் காலமில்லாமல் உயர் அதிகாரிகள் வேலை வாங்கிவிட்டு, ஊதிய உயர்வு சமயத்தில் நீ என்ன படிச்சியா என்று கேள்வி வேறு கேட்பார்கள். 
இதுவும் ஒரு சமூக அநீதிதான்.!

மகள் திருமணத்தை  கடன் வாங்காமல் நடத்தும் அளவுக்கு பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் ,  முப்பத்தாறு வருடங்கள் ஒரே அலுவலகத்தில் பழம் தின்று கொட்டை போட்டு விருட்சமாக வளர்ந்தாலும் தாழ்வு மனப்பான்மையால் திண்டாடி, மேலதிகாரியிடம் கேட்டு  அட்டெண்டர் ஆறுமுகம் ’ஆபீஸ் கிளார்க்’ ஆகப் பிரமோஷன் 

பெற்றுக்கொள்கிறார்..!அதே சம்பளம் , அதே உத்தியோகம் தான் பேருதான் பெத்த பேரு..! அவருக்கும் அதுதானே 

குறை .. குறைதீர்த்து நன்மை செய்த அதிகாரியை நாமும் ஆறுமுகத்துடன் 

வாழ்த்துகிறோம்..மாப்பிள்ளை வந்த நேரம் தான் இந்த பிரமோஷன் என்று  பேச்சுவரும்போது சிரிப்புதான் 

வருகிறது..! உண்மையாக இருக்குமோ..! மாப்பிள்ளை மதிக்கவேண்டும்  என்கிற 

தன்முனைப்புதானே பேவேண்டிய விதத்தில் மேலதிகாரியிடம் பேசி காரியத்தை கனிய 

வைத்தது..!
அதுவும் வருங்கால மாப்பிள்ளை, சம்பந்தி முன் கௌரவமாக சொல்லிக்கொள்ளும்படி பெயரைத்தானே மாற்றக்கோருகிறார்..!


திருமணப்பத்திரிகையில் போடுவதற்காகத்தானே நிறையப்பேர் பெண்களை சொல்லிக்கொள்ளும்படியான பட்டப்படிப்பில் சேர்க்கின்றனர் .. 

உத்தியோகத்திற்குச்செல்லகூடாது என்று கண்டிஷனோடு இருந்தாலும் பத்திரிகையில் உறவினரிடம் பெருமை பேசவேண்டும் என்பதற்காக தனியார் கல்லூரியில் பெரும் பணமும், காலமும் செலவிட்டு படிப்பவர்களை கண்டுதானே வருகிறோம் ..! 

சின்ன கதைதான் ஆனாலும் மன நிறைவைத் தந்த
முடிவு.

வைகோ அல்ல கதைக்கோ என கதாசிரியரை பாராட்டவைக்கும் கதை..!


பட்டை தீட்டத்தீட்ட ஒளிவிடும் வைரமாக நுணுக்கமான நகாசு  வார்த்தைகளால் 

ஒவ்வொருவர் குணச்சித்திரங்களையும் வார்த்தெடுத்து பிரமிக்க வைக்கிறார் கதை 

ஆசிரியர்..!
பட்டை தீட்டி ஜொலிக்கும் வைரக்கல்லை ஆழ்கடலில் 

ஆழ்ந்தெடுத்த முத்தோடு சேர்த்து   பத்தரை மாற்றுத் தங்கத்தில் 

பதித்து வேலைப்பாடு மிக்க  ஆபரணமாக்கி  கர்ப்பக்கிரஹ 

அம்பாளின்  மணிமகுடமாக்கி தீபாரதனையில் ஜாஜ்வல்யமாக 

ஜொலி ஜொலிக்குமாறு அணிவித்த மாதிரியான உணர்வில் 

கதையை ரசிக்க வைத்த நுட்பத்திற்குப்பாராட்டுக்கள்..


இனி தலைநிமிர்ந்து கம்பீரமாக சொல்லிக்கொள்ளலாம் மாப்பிள்ளை வீட்டாரிடம்..!

குட்டி கதையில்  ஒரு பெரிய மெசெஜ்  அளித்தவிதம் மிகவும் கவர்கிறது..

திருட கூடாது பொய் பேச கூடாது ஏமாத்த கூடாது...  
"PAY ME FORTY - CALL ME தோட்டி”  என்று கௌரவத்திற்கு  அருமையான  முத்தாய்ப்பாக 

வந்த சம்பந்தி மனிதர்  கொடுக்கும் விளக்கம்  அட்சரலட்சம் பெறும்..! கதையைப் 

பிரமாதப்படுத்தி பிரகடனப்படுத்தி பிரதானப்படுத்தும் இந்தப்பாத்திரம்    சிறப்பு 

சேர்க்கிறது


ஆனால் ஒருவயதில் மூக்குசளியுடன் பார்த்த குழந்தையை அழகான  அலங்காரத்துடன் 

மணப்பெண்ணாக மணமேடையில் பார்த்தாலும்  மூக்குச்சளி சித்ரா என்றால்தான் 

சிலருக்கு அடையாளம் புரிகிறது..அடையாளப்பெயர்கள்  எளிதில் மாறிப் போகாது , 


அட்டெண்டர் ஆறுமுகமே முதலாளியானாலும்  அடையாளம்  எளிதில் போகாது..


பழம் நழுவிப்பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தாற்போல் 
தித்திப்புடன் அமர்க்களமான திருமணத்தில் நிறைவடைந்து  மனதில் சிம்மாசனமிட்டுக் 
கொள்கிறது கதை..!கதாசிரியரே ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும் கூடுவிட்டுக் கூடுபாய்நதாற் போல் 

அந்தந்த பாத்திரங்களை மோனோ ஆக்டிங் என்னும் தனி நடிப்புக்கலையாக  மூன்றே 

மூன்று பாத்திரங்களையும் கைதேர்ந்த நுணுக்கத்துடன் பார்த்துப்பார்த்து செதுக்கி 

அந்தந்த கதாபாத்திரமாக வர்ண்ணைகளுட்ன் ஒப்பனை செய்து  சின்னச்சின்ன நகாசு 

வேலைகளுடன் உயிர் பெற்று நம்முடன் உலவுவதுபோன்று உணரவைக்கும் நேர்த்தியில் 

சொக்கித்தான் போகிறோம் ..!கதை என்கிற  உணர்வே மறைந்துபோய் உயிரோவியமாக பாத்திரங்களை  நடமாட 

விட்ட நுணுக்கம்  கதாசிரியரின் தனித்தன்மை..!


மனம் மயங்கும் மாலைநேரத்தில்  பளிச்சிடும் வண்ணத்தில் தோன்றிய வானவில்லின் 

வர்ணங்களை தேர்ந்த ஓவியர் தன் கைவண்ணத்தால் உணர்ச்சிகள் ததும்பும் சித்திரமாக 

வடித்தெடுத்தாற் போலத்தானே நவரசங்களும் நிரம்பிய கதையாக  சிறப்பாக 

சமைத்திருக்கிறார் கதாசிரியர்..!சுவைத்து சுவைத்து ரசிக்கிறோம் ..சிரித்து சிரித்து சிந்திக்கவும் செய்கிறோம் ..! 

அதுதானே கதாசிரியரின் தனித்துவம் மிக்க திறமையை முரசறைந்து   மின்னலான 

வெளிச்சமிட்டு பளிச்சிடுகிறது..!Thank you very much ....

My Dear Arvind Kumar ! 


- vgk

  


மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.  


       

அனைவருக்கும் இனிய 

கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

  

   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது

.இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.

காணத்தவறாதீர்கள் !

அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


இணைப்பு: 

கதையின் தலைப்பு: VGK-31 


     முதிர்ந்த பார்வை    
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


21.08.2014
இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்
    19 கருத்துகள்:

 1. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
  திருநிறைச்செல்வன் J. அரவிந்த் குமார் அவர்களின்
  விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

  இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. எமது விமர்சனத்தை பரிசுக்குரியதாக
  தேர்ந்தெடுத்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 3. பழமொழிகளும் புராணக்கதை எடுத்துக்காட்டுகளுமாய் அழகானதொரு விமர்சனம் எழுதி இரண்டாம் பரிசைப் பெற்றுள்ள திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு இனிய பாராட்டுகள். முகப்பில் கங்காருவும் குட்டியும் படத்தைப் பார்த்தபோதே தாய்க்கு அடுத்தது பிள்ளையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அது சரிதான். காமராஜர் காலத்து சம்பவத்தை எடுத்துக்காட்டி அசத்தலான விமர்சனமெழுதி பரிசு பெறும் திரு. அரவிந்த் குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. ஒருத்தருக்காக இத்தனை பெரிய மீட்டிங்கில் சுமுகமான முடிவு எடுக்க வேண்டுமென்றால் இத்தனை வருஷ சர்வீஸ் ஏனோ தானோன்னு வேலை செய்யாம மனசாத்மார்த்தமா அவர் உழைத்த உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது ..! மேலாளரின் ஆத்மார்த்தமான அர்பணிப்பு மிக்க அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி..!//அருமையான விமர்சனம்! பரிசுபெற்ற திரு. அரவிந்த்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 5. //பவித்திரமான காராம்பசுவின் பாலை பக்குவமாக இளம் தீயில் காய்ச்சி, கச்சிதமாக புரை ஊற்றி, கண்ணன் கேட்ட வெண்ணையை கோகுலத்து யசோதை திரட்டிக்கொடுத்த மாதிரி சுவைமிக்க கதையை நேர்த்தியுடன் படைத்திருக்கிறார் படைப்பாளி..!// அருமை! பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 6. // ரோஜா என்றாலே மணக்கும், கற்கண்டை நினைத்தாலே இனிக்கும், என்னோட வலை ‘வாத்தியார்’ VGK என்றாலே பாசம் அரவணைக்கும்! அந்த வாத்யாரப்போல பரிசுகளை அள்ளிக்கொடுக்கும்! போட்டின்னா உண்மையான போட்டி இதுதான்! மகளிரணி, ஆடவரணி, அம்மா புள்ள, கணவன் மனைவி, சீனியர் ஜூனியர்ன்னு பலவிதமான புது காம்பினேஷன்ல வந்து மாத்தி மாத்தி நாக்(கு) அவுட் பண்ணிகிட்டே இருப்பாங்க! //

  வலைச்சர அறிமுகத்தின் ஒரு சிறு பகுதிதான் இது..

  இன்றைய வலைச்சரத்தின்
  இனிக்கும் அறிமுகத்துக்கு
  மகிழ்ச்சியான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_17.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி August 17, 2014 at 8:24 AM

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   ***** ரோஜா என்றாலே மணக்கும், கற்கண்டை நினைத்தாலே இனிக்கும், என்னோட வலை ‘வாத்தியார்’ VGK என்றாலே பாசம் அரவணைக்கும்! அந்த வாத்யாரப்போல பரிசுகளை அள்ளிக்கொடுக்கும்! போட்டின்னா உண்மையான போட்டி இதுதான்! மகளிரணி, ஆடவரணி, அம்மா புள்ள, கணவன் மனைவி, சீனியர் ஜூனியர்ன்னு பலவிதமான புது காம்பினேஷன்ல வந்து மாத்தி மாத்தி நாக்(கு) அவுட் பண்ணிகிட்டே இருப்பாங்க! *****

   //வலைச்சர அறிமுகத்தின் ஒரு சிறு பகுதிதான் இது..//

   ஆஹா, நினைவூட்டலுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். 100வது வலைச்சர அறிமுகத்தினை வெகு விரைவில் அடியேன் நெருங்கப்போவதை நினைக்க மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

   எல்லாப்புகழும் உங்களுக்கே - அதாவது என் அம்பாள் ஸ்ரீ. இராஜராஜேஸ்வரிக்கு மட்டுமே ! ;)

   //இன்றைய வலைச்சரத்தின் இனிக்கும் அறிமுகத்துக்கு
   மகிழ்ச்சியான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

   http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_17.html//

   நேற்று இரவும் சுத்தமாக தூக்கம் வராமல் இன்று விடியற்காலம் 3.30 வரை விழித்திருந்து, பிறகு கண்கள் கோஜா வாங்க, தூங்கலாம் எனப்போகும்போது தான் இந்த வலைச்சர அறிமுகத்தைக்காண நேர்ந்தது. அதற்கும் ஏதோ எனக்குத்தோன்றிய கருத்துக்களை தூக்கக்கலக்கத்தில் அனுப்பிவிட்டு பிறகு படுத்துக்கொண்டு, இப்போத்தான் எழுந்து இந்தத்தங்களின் தங்கமான கமெண்ட்டைப் பார்த்ததும் களிப்படைந்தேன்.

   இதுவே எனக்கு ரோஜாவாக மணக்கிறது. கற்கண்டாக இனிக்கிறது.

   நன்றி, நன்றி, நன்றி .......

   ’ஆயிரம் நிலவே வா’வுக்கு என் ஆயிரம் நன்றிகள்.

   பிரியமுள்ள VGK
   நீக்கு
 7. இரண்டாம் பரிசினை வென்றுள்ள சகோதரி ராஜராஜேசுவரி அவர்களுக்கும், நண்பர் அரவிந்த் குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. இரண்டாம் பரிசினை வென்று தொடர்ந்து தன் பரிசுகளைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் திருமதி ராஜராஜேஸ்வரிக்கும், திருநிறைச் செல்வன் அரவிந்த் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. இரண்டாவது பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. இரண்டாவது பரிசினை வென்ற அம்மாவுக்கும், பிள்ளைக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. சிறப்பாக விமரிசனம் எழுதி பரிசு பெறும் தாயார் மகனுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. அம்மா - பிள்ளை காம்பினேஷன் எப்பவும் டச்சிங், சக்சஸ்ஃபுல். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு