About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, December 29, 2014

எங்கள் பயணம் [துபாய்-13]

16.11.2014 முதல் 12.12.2014 வரை
பொதுவாக நாங்கள் சுற்றிப்பார்த்த
 பல வணிக வளாகங்கள்.

{ SHOPPING MALLS AT VARIOUS PLACES IN DUBAI }

-oOo-

அழகழகான இயற்கைப் பூக்களைக்கொண்டு 
அதி வேகமாக மிக அழகாக பொக்கே செய்துதரும்
விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்றோம்.

அங்குள்ள பொக்கே செய்யும் பூக்கலைஞரின் 
கைத்திறனைக் கண்டு வியந்துபோனேன்.   

என் மனதை மகிழ்வித்து
மணம் பரப்பிய இடம்.

அதில் சில படங்கள் இதோ:


பலவண்ண ரோஜாக்கள்

எதேதோ பூக்கள்




 

வெகு வேகமாக மிக அழகாக
பொறுமையுடன் பொக்கே செய்யும் கலைஞர்


துபாயிலுள்ள பல்வேறு மால்களுக்கு
அவ்வப்போது விஜயம் செய்து மகிழ்ந்தோம்.
அவற்றின் சில புகைப்படங்கள்




தங்கத்திலேயே கலசம் போலச் செய்த மிகப்பெரிய
பருப்புத்தேங்காய்க் கூடாக இருக்குமோ ? :)



ஒட்டகப் பாலில் தயாரித்த 
ஒஸத்தியான சாக்லேட் 
இங்கு விற்கப்படுகிறதாம் :)



மிகப்பெரிய சுவர் போன்ற தொலைகாட்சிப்பெட்டி

நகைக்கடைகளில் புன்னகையுடன்
மாமியாரும் மருமகளும்










ஓரிடத்தில் 
மோதிர மோகத்துடன் 
மோதிப்பார்க்கும் சம்பந்தி.
அதனை வியந்துபார்க்கும் அடியேன்.


 

 

 

 
வீட்டருகே அமைந்துள்ள 
SUNRISE CITY SUPERMARKET

துபாய் மாலில் உள்ள புத்தகக்கடல் 
BOOKS
KINOKUNIYA

இதனுள் உள்ள புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை
நிச்சயமாக பல லட்சங்கள் இருக்கும் என்பது என் மதிப்பீடு.

அவ்வளவு மிகப்பெரிய புத்தக விற்பனை நிலையம்.

உள்ளே எந்தப்புத்தகத்தையும் தொடாமல் 
ஒரு ரவுண்டு சுற்றிப்பார்த்து விட்டு வர மட்டுமே
குறைந்தது இரண்டு மணி நேரங்கள் தேவைப்படும்.

ஏராளமான தலைப்புகளில் அழகழகாக பல புத்தகங்கள்
புத்தம்புதியதாக அடுக்கி வைத்து 
நன்கு படுசுத்தமாகப் பராமரிக்கிறார்கள்.

புத்தகம் ஏதும் வாங்காமலேயே அங்கேயே நாம் அமர்ந்து 
அவற்றைப் படித்து விட்டும் வரலாம்.

துபாய் மாலுக்குச் செல்லும் நம் பதிவர்கள் அவசியமாக 
இதனுள் ஒருமுறை சென்று விட்டு 
வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மாபெரும் புத்தகக் கடலுக்குள் 
புகைப்படம் எடுக்க மட்டும் அனுமதிக்கவில்லை.

அப்படியும் விடுவோமா ? 
ஒரே ஒரு படம் மட்டும் இதோ 



 

முழுவதும் துபாய்த் தங்கத்திலேயே 
செய்துள்ள ஓர் கார் ! :)
சும்மா ஜொலிக்குது பாருங்கோ !

 


பயணம் தொடரும்

28 comments:

  1. அந்த ஜொலிக்கும் தங்கக் கார் நிஜமாகவே தங்கத்தினால் ஆனதா? தங்கக் கலர் பெயின்ட் தானே.!

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam December 29, 2014 at 10:59 PM

      வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

      //அந்த ஜொலிக்கும் தங்கக் கார் நிஜமாகவே தங்கத்தினால் ஆனதா? தங்கக் கலர் பெயின்ட் தானே.!//

      இல்லை மேடம். அது தங்கத்தினால் செய்த காரே தான். உலகில் உள்ள சில பெரும் பணக்காரர்கள் இதுபோல ஏதாவது புதுமையாகச்செய்து பிறர் கவனத்தை ஈர்ப்பதுண்டு. பணத்தில் படுத்து உருளுவோருக்கு இதெல்லாம் ஒரு சர்வ சாதாரண விஷயமாகும்.

      நீங்களும் நானும் ஒரு சிறிய தங்க மூக்குத்தி வாங்குவதுபோலவே தான் அவர்களுக்கு ஸ்பெஷலாக இதுபோன்ற தங்கத்தினால் செய்த காருக்கு ஆர்டர் செய்து வரவழைப்பது என்பது.

      இதைவிட வேடிக்கை, நான் முன்பு தினமலர் வாரமலரில் ஓர் செய்தி படித்தேன். ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒரு கோடீஸ்வரர் தங்கத்தினாலேயே டாய்லட் கட்டி, உபயோகித்து வருகிறாராம். மொத்தச்செலவு 20 கோடியோ என்னவோ படித்த ஞாபகம். அதோடு ஒப்பிடும் போது இதுபோல கார் வைத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? சொல்லுங்கோ.

      இதுபோன்ற காரை நான் இந்தமுறை நேரில் அங்கு பார்க்க முடியவில்லை. இதோ இந்த வெப் சைட்டுக்குப்போங்கோ. தங்கக்கார்கள் என்ன ... வைரக்கார்களையே கூட நீங்கள் நிறையவே பார்க்க முடியும்.

      https://www.google.co.in/search?hl=en&site=imghp&tbm=isch&source=hp&biw=960&bih=489&q=gold+car+dubai&oq=gold+car+dubai&gs_l=img.3..0j0i5.1689.12701.0.13405.37.21.2.13.14.0.258.2171.0j11j2.13.0.msedr...0...1ac.1.60.img..24.13.1877.0VNN0lHIWXk

      இந்த ஒரு படம் மட்டும் நான் அங்கிருந்து எடுத்துப் போட்டதாகும்.

      அன்புடன் கோபு

      Delete
  2. எல்லாம் அடிக்கடி பார்ப்பது என்றாலும் பதிவில் பார்க்கும்போது புதுமையாகத்தான் இருக்கு.....

    ReplyDelete
  3. படங்களுடன் பகிர்வு அருமை...
    அபுதாபிக்கும் வந்திருக்கலாம்... தாங்கள் வந்தது தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. 'பரிவை' சே.குமார் December 29, 2014 at 11:49 PM

      வாருங்கள், வணக்கம்.

      //படங்களுடன் பகிர்வு அருமை... அபுதாபிக்கும் வந்திருக்கலாம்... தாங்கள் வந்தது தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம்....//

      இந்த முறை நான் அபுதாபி பக்கம் வர இயலவில்லை. சென்றமுறை 11.10.2004 ஒருநாள் முழுக்க அபுதாபியில் தான் நான் இருந்தேன்.

      SHAIKH KHALIFA MEDICAL CENTRE என்ற மிகப்பெரிய ஆஸ்பத்தரிக்கு என் மகனுடன் அவருடைய அலுவலக வேலையாக வந்திருந்தேன்.

      அங்கு MARINA MALL என்ற மிகப்பெரிய SHOPPING MALL சென்று, அங்குள்ள செயற்கை மழை பொழியும் காட்சிகளை வெகுவாக ரஸித்து வந்தேன்.

      அபுதாபி to துபாய் வரும் வழியில் AL FALAH PLAZA என்ற ஷாப்பிங் மாலுக்கும் போய் சில குறிப்பிட்ட பொருட்கள் வாங்கி வந்தோம்.

      அதன் பிறகு ARBHA அருகில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பினோம். அதன் அருகே BON FOOD / BROWSING CENTRE / P.O.BOXES / PEPSI / SHEZAN RESTAURANT / BASKING ROBBONS ICE CREAMS / LARI EXCHANGE என நிறைய விஷயங்கள் இருந்தன. அதிலேயே FORTY FRUITY என பல்வேறு பழ வகைகள்
      டிசைன் டிசைனாக வெட்டப்பட்டு கூடை கூடையாக வெகு அழகாக விற்கப்பட்டன. நாம் சாப்பிடவும், அப்படியே கூடையுடன் பரிசளிக்கவும் தகுந்தவாறு வெகு அழகாக பார்ஸல் கட்டித் தந்தார்கள். அவையெல்லாம் என்றுமே மறக்க இயலாத இனிய அனுபவங்கள்.

      கடற்கரை தாண்டிய அபுதாபி காட்சிகளை வெகுவாக ரசித்து நிறைய போட்டோக்கள் எடுத்திருந்தேன்.

      எல்லாம் என் அன்றைய டயரியில் பதிவு செய்துள்ளேன்.

      அடுத்த முறை பிராப்தம் இருந்தால் நாம் சந்திக்கலாம்.

      அன்புடன் VGK

      Delete
    2. கண்டிப்பாக அடுத்தமுறை வரும்போது சந்திப்போம் ஐயா..
      நன்றி.

      Delete
  4. எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாடத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் துபாய் சென்று அந்தத் தங்கக் காரை வாங்கி விட்டுத்தான் மறு வேலை.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி December 30, 2014 at 3:17 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாடத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் துபாய் சென்று அந்தத் தங்கக் காரை வாங்கி விட்டுத்தான் மறு வேலை.//

      வாழ்த்துகள் ஐயா. தாங்கள் கட்டாயம் அந்த தங்கத்தால் செய்த காரை வாங்கி விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      NOTHING IS IMPOSSIBLE, Sir.

      சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, நம்மில் பெரும்பாலானோரிடம் இன்றுள்ள, நாம் அனுபவித்துவருகிற எந்த ஒரு நவநாகரீகப் பொருட்களுமே கிடையாது. ஒரு சைக்கிள் கூட இருந்திருப்பது சந்தேகமே.

      இவ்வாறு ஒரு 50 ஆண்டுகளில் நம் வாழ்க்கைத்தரமும் பொருளாதாரமும் உயர்ந்து, இவ்வாறு நாம் வீடு வாசல், கார், பைக், உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிடும் மொபைல் போன், உடனுக்குடன் உலகச்செய்திகளை மின்னல் வேகத்தில் அறிய வீட்டுக்குள் டி.வி., ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, ஏ.ஸி., கம்ப்யூட்டர், போதிய பேங்க் பேலன்ஸ் என சகலவிதமான வசதிகளுடன் வாழ்வோம் என கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம் அல்லவா !

      அதுபோல நமக்கு விடாமுயற்சியும், ஆசையும், ஆர்வமும், ஆயுளும், அதிர்ஷ்டமும் இருந்தால் போதும். நாம் அடைய முடியாததே இந்த உலகில் ஏதும் கிடையாது.

      விரைவில் தாங்கள் இந்தக்காரை வாங்கிவிடுவீர்கள். அதற்கு இப்போதே என் அட்வான்ஸ் நல் வாழ்த்துகள்.

      அன்புடன் VGK

      Delete
  5. சார்... நல்லாவே சுற்றிக்காண்பிக்கிறீர்கள். நேரில் பார்த்த திருப்தி.
    அதென்ன ...நகைக்கடையில் புன்னகையுடன் மாமியாரும் மருமகளும்// இது அவங்களை கலாய்க்கிற மாதிரி இருக்கே..!

    ReplyDelete
  6. மிக அருமை சார்.அல் அயினில் இருக்கும் எனக்கும் நான் பார்க்காத பல இடங்களைச் சுற்றி காட்டுகிறீர்கள்.சார் நீங்க அல் அயின் வந்தீர்களா? அதுவும் ஒரு சுற்றுலா தளம் தான்.யாராவது ப்ளாக்கர்ஸ் சந்தித்தீர்களா? இதையொட்டி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Asiya Omar December 30, 2014 at 8:08 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிக அருமை சார்.அல் அயினில் இருக்கும் எனக்கும் நான் பார்க்காத பல இடங்களைச் சுற்றி காட்டுகிறீர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //சார் நீங்க அல் அயின் வந்தீர்களா? அதுவும் ஒரு சுற்றுலா தளம் தான்.//

      இந்தமுறை துபாய் தவிர வேறெங்கும் நாங்கள் செல்லவில்லை. நேரமில்லாமல் போய் விட்டது. சென்றமுறை 2004 செப்டெம்பர் + அக்டோபரில் 45 நாட்கள் தங்கியதால் எமிரேட்ஸின் 7 பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது AL MULLA PLAZA + Lu Lu HIPER MARKET போன்ற இடங்களில் 10.10.2004 அன்று ஓர் இரவு முழுவதும் சுற்றினோம். ஒருவேளை அது தாங்கள் இருக்கும் இடமாக இருக்குமோ என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஏதோ என் மகன் காரில் பல இடங்களுக்குக் கூட்டிச் செல்வார். போவேன். ஆங்காங்கே உள்ள தகவல்களையும், நான் மிகவும் ரஸித்த காட்சிகளையும் என் டயரியில் தேதிவாரியாகக் குறித்துக்கொள்வேன். அத்தோடு சரி.

      // யாராவது ப்ளாக்கர்ஸ் சந்தித்தீர்களா? //

      இல்லை சந்திக்க இயலவில்லை. முயற்சிக்கவும் இல்லை. திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களை முடிந்தால் ஷார்ஜாவில் சந்திக்கணும் என நினைத்தேன். அதுவும் முடியவில்லை. மேலும் அவர்கள் நான் அங்கு வந்து இறங்கிய 10 நாட்களுக்குள் இங்கு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்கள். இப்போதும் இங்கு தான் தஞ்சையில் உள்ளார்கள். போன் மூலம் பேசினேன்.

      //இதையொட்டி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கலாம்.//

      பிராப்தம் இருந்தால் அடுத்தமுறை நாம் முயற்சிக்கலாம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  7. அழகான இடங்கள். அழகான தங்ககார் எல்லாம் அழகு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. Aha ha intha pathivil ellame annakku pitithatha irrukke.........

    ReplyDelete
  9. பருப்புத் தேங்காய்க்கூடு - உங்கள் ரசனையை நான் மிகவும் ரசித்தேன். படங்கள் அனைத்தும் அருமை கோபு சார். கினோகுனியா புத்தகக்கடை இங்கும் உள்ளது. நீங்கள் சொல்வது போல் சும்மா சுற்றிப் பார்க்கவே இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும். அருமை.. தங்கக்கார்... ஆஹா..

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி December 30, 2014 at 4:43 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பருப்புத் தேங்காய்க்கூடு - உங்கள் ரசனையை நான் மிகவும் ரசித்தேன்.//

      VGK-07, VGK-13 and VGK-39 ஆகியவற்றிற்கு விமர்சனம்
      எழுதி என்னையே சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த
      தங்களால் மட்டும்தான் பருப்புத்தேங்காய்க்கூட்டையும்
      மிகவும் ரசிக்க முடியும் :) மிக்க மகிழ்ச்சி.

      //படங்கள் அனைத்தும் அருமை கோபு சார்.//

      சந்தோஷம். பார்த்துப்பார்த்து பிரமித்துப்போய் எடுத்துவந்த
      ஏராளமான படங்களில் மிகவும் வடிகட்டி எனக்கு மிகவும்
      பிடித்த சிலவற்றை மட்டும் பதிவினில் ஏற்றியுள்ளேன்.

      // கினோகுனியா புத்தகக்கடை இங்கும் உள்ளது. நீங்கள் சொல்வது போல் சும்மா சுற்றிப் பார்க்கவே இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும். அருமை..//

      ஆஹா, அப்படியா, இதன் தலைமையகம் சிங்கப்பூரில்
      உள்ளது எனக்கேள்விப்பட்டேன். நான் இதுவரை இவ்வளவு
      பெரியதோர் புத்தகக்கடையை எங்குமே பார்த்தது இல்லை.
      எனக்கு இது முதல் அனுபவம். அதனால் நான் மிகவும்
      வியந்து போனேன்.

      //தங்கக்கார்... ஆஹா.. ஆஹ்ஹ்ஹா //

      அது மட்டும் நெட்டிலிருந்து எடுத்துப்போட்டுள்ளேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  10. தங்கத்திலேயே கலசம் போலச் செய்த மிகப்பெரிய
    பருப்புத்தேங்காய்க் கூடாக இருக்குமோ ? :)//

    ஹஹ ஹா. கோபு அண்ணா உள்ளுக்குள்ள மனோகரம் இருக்கான்னு பாத்தேளா?

    புத்தகக் கடையில் தமிழ் புத்தகங்கள் இருக்கா? நீங்க எழுதின புத்தகம் இருக்கா?

    புகைப் படங்கள் சூப்பரோ சூப்பர். அதுவும் அந்த ப்ளூ டீ ஷர்ட்டில் நீங்கள் தனியாக நிற்கும் படமும், அப்புக்குட்டி யானை மனிதனுடன் படமும் முத்தாய்ப்பு.

    வாழ்த்துக்கள் அண்ணா.

    உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய. சிம்லா போய் விட்டு வந்து 8 மாசம் ஆகிறது. இன்னும் பயணக் கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.

    இனி எங்கு பயணம் சென்றாலும் உங்களுக்கு குரு வணக்கம் செலுத்தி, குறிப்பெடுப்பதுதான் முதல் வேலை.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya January 1, 2015 at 7:16 PM

      அன்பின் ஜெயா, வாங்கோ, வணக்கம்.

      **தங்கத்திலேயே கலசம் போலச் செய்த மிகப்பெரிய
      பருப்புத்தேங்காய்க் கூடாக இருக்குமோ ? :)**

      //ஹஹ ஹா. கோபு அண்ணா உள்ளுக்குள்ள மனோகரம் இருக்கான்னு பாத்தேளா?//

      தூக்கிப்பார்த்தேன் ஜெ! :) ஆனால் அதனுள் மனோகரம்
      இல்லை. மண்ணாங்கட்டி தான் உள்ளது. மனோகரம் நீங்க
      எனக்குக் கொடுத்தால் தான் உண்டு. எனக்கு நீங்க ஏற்கனவே தரவேண்டிய பெண்டிங் அதிரஸங்களோடு இதையும் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கோ, ஜெயா.

      //புத்தகக் கடையில் தமிழ் புத்தகங்கள் இருக்கா? நீங்க எழுதின புத்தகம் இருக்கா?//

      அடடா, அதை விசாரிக்க நான் அன்று மறந்துட்டேன் ஜெ. வெளியே நீண்டதூரம் வந்த பிறகுதான் நினைத்துக்கொண்டேன்.

      ஆனால் சிங்கப்பூர் போன்ற பல அயல் நாடுகளில் உள்ள மிகப்பெரிய LIBRARY களில் என் படைப்புகள் உள்ளன, ஜெ. அதற்கான தகவல் இதோ இந்த இணைப்பில் உள்ளது பாருங்கோ: http://gopu1949.blogspot.in/2014/01/106-2-3.html

      //புகைப் படங்கள் சூப்பரோ சூப்பர். அதுவும் அந்த ப்ளூ டீ ஷர்ட்டில் நீங்கள் தனியாக நிற்கும் படமும், அப்புக்குட்டி யானை மனிதனுடன் படமும் முத்தாய்ப்பு. வாழ்த்துக்கள் அண்ணா.//

      அந்த ப்ளூ டீ ஷர்ட் எனக்கும் மிகவும் பிடித்துள்ளது. மிகவும் SOFT ஆகவும், இதுவரை நான் போட்டுக்கொள்ளாத கலராகவும் உள்ளது. திருச்சி சாரதாஸ் கடையில் சம்பந்தி மாமாவும் மாமியும் வாங்கிக்கொண்டுவந்து, இரகசியமாக வைத்திருந்து அங்கு துபாயில் 8.12.2014 அன்று என் பிறந்த நாளுக்கு GIFT ஆகக் கொடுத்தார்கள். :)))))

      //உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய. சிம்லா போய் விட்டு வந்து 8 மாசம் ஆகிறது. இன்னும் பயணக் கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். //

      ஆஹா, தங்களின் சிம்லா பயணக்கட்டுரையை படிக்க எங்களுக்கு [குறிப்பாக எனக்குப்] பிராப்தம் இல்லாமல் போயிடுச்சே ! :(

      //இனி எங்கு பயணம் சென்றாலும் உங்களுக்கு குரு வணக்கம் செலுத்தி, குறிப்பெடுப்பதுதான் முதல் வேலை.
      அன்புடன் ஜெயந்தி ரமணி//

      ஆஹா, என்னே ஒரு குருபக்தி ! :))))) குரு தக்ஷணையையும் அனுப்பி வைத்துவிட்டு, பிறகு பயணம்
      கிளம்புங்கோ :)))))

      [சேச்சே ... இந்த அதிராவுடன் சேர்ந்து பழகினதால் நானும் இப்படி எழுதும்படியாக ஆகிவிட்டதே, என வேதனையாக உணர்கிறேன். :))))) ] தயவுசெய்து அதிராவிடம் இதைச்
      சொல்லிடாதீங்கோ, நமக்குள் மட்டும் இது இரகசியமாக இருக்கட்டும்.

      பிரியமுள்ள கோபு











      Delete
  11. என்ன கருத்துரை எழுதுவது என்றே தெரியவில்லை. ஒரே ஜொலிப்பு.

    ஒட்டகப் பால் சாக்லேட் என்றதும், நான் சிறுவனாக இருந்த போது S.R COLLEGE ரோட்டில் இருந்த ஒரு குடோனில் இருந்து வீசப்பட்ட, கெட்டுப் போன ஹார்லிக்ஸை சிலர் ஒட்டகப்பால் சாக்லேட் என்று விற்றது ஞாபகம் வந்தது.

    தங்கக் கார் நம்ம ஊர் சமயபுரம் கோயில் தங்கத் தேரை நினைவுபடுத்தியது.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அசர வைக்கும் படங்கள்...

    உங்களின் மின்னஞ்சல் மூலம் தான் இப்பதிவை அறிந்தேன்... அதற்கு மிகவும் நன்றி ஐயா... வீட்டில் அனைவருமே கண்டுகளித்தோம்...

    ReplyDelete
  13. தங்கக்கார், பருப்பு தேங்காய் கூடு, ஒட்டகப்பாலில் செய்த சாக்லேட்டுகள், மலர்கள் என அனைத்தும் அழகு.

    ReplyDelete
  14. தங்கரதம் வந்தது வீதியிலே எனப் பாடத் தோன்றும் படம்! ஒட்டகப்பாலில் சாக்லேட்டுகள்! பிரமிப்பூட்டும் படங்கள்! நன்றி ஐயா!

    ReplyDelete
  15. இனிமேல சாக்லெட் சாப்பிடும் போதெல்லாம் ஒட்டகபால் நினைவில் வந்துடுமே

    ReplyDelete
  16. தங்கமாக ஜொலி ஜொலிக்கும் பகிர்வுகள்....

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:41 PM

      வாங்கோ வணக்கம்.

      //தங்கமாக ஜொலி ஜொலிக்கும் பகிர்வுகள்....//

      கொங்கு நாட்டு கோவைத் தங்கமல்லவா ! துபாய்த் தங்கம் போல ஜொலிக்கத்தான் செய்யும் ..... இந்தப்பகிர்வும்.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க.

      Delete
  17. படங்களும் பதிவும் அடி தூள் கெளப்பிகிட்டு இருக்குது. நிதானமா ரசிச்சு படிச்சிகிட்டே வாரயிலதா ஐயயோ கமண்டு போடோணுமேன்னு நெனப்பே வந்திச்சி.

    ReplyDelete
  18. படங்கள் பகிர்வு சூப்பர் இதைத்தவிர வேர என்னசொல்ல. கூடவே பருப்புகூடாக உங்க நகைச்சுவைகள்வேறு.

    ReplyDelete
  19. சாக்லேட்லயும் ஒட்டகப்பாலா??? இவிங்க ஓங்கு தாங்கா வளர்ரதுக்கு இதுவும் ஒரு காரணமோ?? எவ்வளவு பெரிய வண்ண வண்ண ரோஜாக்கள்??? துபாய்ல எல்லாருமே மைதாஸ்-தானா தொட்டதெல்லாமே தங்கமா இருக்கே?? மூக்குத்தி கதைல வர்ற நகைகடையவே மிஞ்சிடும்போல இருக்கு மால். கண்ணைப்பறிக்கும் பதிவு. நன்றி.

    ReplyDelete