About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, December 21, 2015

சாதனையாளர் விருது ... செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்கள் [வசந்தம்]

அன்புடையீர், 


அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.


அதற்கான இணைப்பு தங்கள் நினைவுக்காக இதோ:


மேற்படி போட்டியில் கலந்துகொண்டு
வெற்றிபெற, வரும் 31.12.2015 
நிறைவு நாள் ஆகும்.


இதில் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோர் அனைவருக்கும் தலா ரூபாய் ஆயிரம் [Rs. 1000/-] வீதம் ரொக்கமாகப் பரிசளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 

 சாதனையாளர் செல்வி:
 MEHRUN NIZA   
அவர்கள்


வலைத்தளம்: வசந்தம்
http://httpvasantham.blogspot.in/


 சாதனையாளர் விருது 
செல்வி:
 MEHRUN NIZA   
அவர்கள்

வலைத்தளம்: வசந்தம்
VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

பிரியமுள்ள குருஜி
வை. கோபாலகிருஷ்ணன்
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }கல்லூரியில் படிக்கும் மாணவியான இவர் 
மிகவும் தயக்கத்துடனும், மிகவும் தாமதமாகவும் 
இந்தப்போட்டியில் கலந்துகொண்டார்.

இவர் போட்டியில் கலந்துகொள்ள 
ஆரம்பித்த நாள் : 07.10.2015 மட்டுமே.
முற்றிலுமாக முடித்த நாள்: 06.11.2015


{ ’VOLVO’ BUS SPEED }

போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்து
வெறும்  31 நாட்களுக்குள்ளாகவே 
தன்னிடமுள்ள அலைபேசி மூலமே முற்றிலும் 
முடித்து வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனையாகும்.

வேற்று மதத்தைச் சேர்ந்த பெண்மணி என்பதாலும்,

 என் ஒருசில ஆன்மிகப் பதிவுகளுக்குப் 
பின்னூட்டங்கள் இடுவதில் இவருக்கு ஏதும் 
சங்கடங்கள் ஏற்படாமல் இருக்கவேண்டியும்,

போட்டியில் கலந்துகொள்ளத் துடித்த 
இவரின் ஆர்வத்தினை மெச்சியும், 

இவருக்கு மட்டும், நானே
சில சிறப்புச் சலுகைகளை அளித்திருந்தேன்.

 


இவருக்கான பரிசுத்தொகையை
என்னை நேரில் சந்தித்து பெற்றுக்கொள்வதாக 
இவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.அன்புள்ள முருகு, 

போட்டியில் வெற்றி பெற்றுள்ள
தங்களுக்கு என்
மனம் நிறைந்த 
பாராட்டுகள் +
அன்பான இனிய
நல்வாழ்த்துகள்!

பிரியமுள்ள
குருஜி கோபு

  


முருகு எழுதியுள்ள உருக்கமானதோர்
நேயர் கடிதம் படிக்க
http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html


  


விடியற்காலம் நான் 
’வசந்தம்’ 
வீசிடும் ஓர் கனவு கண்டேன்.


திடீரென்று அதிர்ஷ்டவசமாக 
செல்வி. முருகு .... திருமதி. முருகு ஆகிவிடும் 
இனிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பெரிய இடத்து மாப்பிள்ளை ....
இதுவரை மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்த 
நம் முருகுவுக்கு 
வெளிநாட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழும்
சந்தர்ப்பம் சாதகமாக அமைகிறது.

அவருக்கான இந்தப் பரிசுத் தொகையை, 
புதுமண ஜோடியாக வருகை தந்து, 
நேரிலேயே என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு
என் ஆசியுடன் விமானத்தில் ஏறிச் செல்கிறார்கள். 


 


மொத்தத்தில் இந்தப்பொண்ணு தன்
ஸீ.யே படிப்பில் சேரும் முன்பே தாயே 
 ஆகிவிடும் வாய்ப்பு அமைந்து விடும் என்பதை நினைக்க 
எனக்கு மிகவும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. 


 

வாழ்க்கையில், 
பருவ வயதில் உள்ள ஒரு பொண்ணுக்கு 
இதுவும் (நிக்காஹ்) மிக மிக முக்கியம் தானே! 

நான் கண்ட இந்தக்கனவு, நனவாகி 

முருகு .... மகிழ்ச்சியுடனும் 
மலர்ச்சியுடனும் 
வாழப் பிரார்த்திக்கிறேன் !

முருகுவுடன் முறுக்கிக்கொண்டுள்ள இந்த என் இன்றையப் பதிவு

என் 800 ஆவது பதிவாக 
அமைந்துள்ளதில் 
மேலும் எனக்கு மகிழ்ச்சியே :)


மற்ற சாதனையாளர்கள் பற்றிய செய்திகள் 
இனியும் அவ்வப்போது தொடரும்

வெற்றியாளர்கள் பற்றிய ஒட்டுமொத்தச் செய்திகள் 
இறுதியில் தனிப்பதிவாகவும் வெளியிடப்படும். 


என்றும் அன்புடன் தங்கள் 
[வை. கோபாலகிருஷ்ணன்] 

133 comments:

 1. அஹா மெஹ்ருன்னிசாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு நிரூபிச்சிட்டாங்க. :) அழகாகப் போட்டி நடத்திப் பரிசை அள்ளி வழங்கும் எங்கள் அன்பு கோபால் சாருக்கும் சிறப்பு வாழ்த்துகள். வாழ்க வளமுடன் :)

  ReplyDelete
  Replies
  1. தேனம்மை மேடம் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

   Delete
  2. Thenammai Lakshmanan December 21, 2015 at 2:00 AM

   //அஹா மெஹ்ருன்னிசாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு நிரூபிச்சிட்டாங்க. :) அழகாகப் போட்டி நடத்திப் பரிசை அள்ளி வழங்கும் எங்கள் அன்பு கோபால் சாருக்கும் சிறப்பு வாழ்த்துகள். வாழ்க வளமுடன் :)//

   வாங்கோ ஹனி மேடம், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் கோபால்

   Delete
 2. மெஹ்ரின்னிசா வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெற்று ஆனந்த வாழ்வு வாழ உங்கள் பரிசு அச்சாரமாய் விளங்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா குருஜி கையால பரிசு வாங்கிட்டது ரொம்ப சந்தோசமுங்க. உங்கட வாழ்த்துக்கு நன்றிங்க.

   Delete
  2. பழனி. கந்தசாமி December 21, 2015 at 4:47 AM

   //மெஹ்ரின்னிசா வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெற்று ஆனந்த வாழ்வு வாழ உங்கள் பரிசு அச்சாரமாய் விளங்கட்டும்.//

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //ஆனந்த வாழ்வு .... பரிசு ஓர் அச்சாரம்.//

   ஆனந்தம்... ஆனந்தம்... ஆனந்தமே !

   மிக்க மகிழ்ச்சி சார். மிக்க நன்றி, சார்.

   Delete
 3. Replies
  1. கே. பி. ஜனா... December 21, 2015 at 5:03 AM
   வாழ்த்துக்கள்!//

   மிக்க நன்றி, சார்

   Delete
 4. வணக்கம்
  வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள் சிறப்பாக நடத்தி முடித்த தங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள்.

   Delete
 5. ஆகா.. வாழ்த்துக்கள்.
  (இந்தப் போட்டியை எப்படித் தவறவிட்டேன்?)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி சார்

   Delete
  2. அப்பாதுரை December 21, 2015 at 5:23 AM

   //ஆகா.. வாழ்த்துக்கள். (இந்தப் போட்டியை எப்படித் தவறவிட்டேன்?)//

   தவறுவதெல்லாம்... தங்கம் என்று சொல்லுவார்கள்.
   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   Delete
 6. எட்டு நூறாவது பதிவினை
  எட்டிப்பிடித்துள்ள வலைத்தளத்திற்கு
  சிறப்பான வாழ்த்துகள்... பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி December 21, 2015 at 8:29 AM

   வாங்கோ ... வணக்கம்.

   //எட்டு நூறாவது பதிவினை
   எட்டிப்பிடித்துள்ள வலைத்தளத்திற்கு
   சிறப்பான வாழ்த்துகள்... பாராட்டுக்கள்..//

   ஏதோ என்னால் முடிந்தது .... அவ்வளவு தான் எட்டிப்பிடிக்க முடிந்துள்ளது.

   தங்களில் பாதியாகவாவது இன்று நான் இருப்பதில் ஓர் சின்ன மகிழ்ச்சி. :)

   சிறப்பான தங்களின் வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

   Delete
 7. முருகு ....சீரும் சிறப்புடனும்
  மகிழ்ச்சியுடனும்
  மலர்ச்சியுடனும்
  வாழப் பிரார்த்திக்கிறேன் !
  வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!!

  ReplyDelete
  Replies
  1. அம்மா வாழ்த்துக்கு நன்றிம்மா.
   Delete
  2. இராஜராஜேஸ்வரி December 21, 2015 at 8:31 AM

   வாங்கோ, வாங்கோ, வணக்கம். :))

   //முருகு ....சீரும் சிறப்புடனும்
   மகிழ்ச்சியுடனும்
   மலர்ச்சியுடனும்
   வாழப் பிரார்த்திக்கிறேன் !
   வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!!//

   ஆஹா, நம்ம முருகு (மின்னலு) நல்ல அதிர்ஷ்டக்காரிதான் போலிருக்கு !

   வைகுண்ட ஏகாதஸியன்று அருளியுள்ள வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!! க்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 8. எண்ணூறாவது பதிவினை பிரம்மாண்டமாக -
  வெளியிட்டுள்ள தங்களுடைய மகிழ்ச்சியில்
  நானும் பங்கு கொள்கின்றேன்..

  மேலும் பலநூறு பதிவுகள் வழங்கிட வேண்டும்..

  அருகிருக்கும் அரங்கனும் ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மியும்
  ஐயன் ஜம்புகேஸ்வரனும் அன்னை அகிலாண்டேஸ்வரியும் தங்களுக்கு எல்லா நலன்களையும் வழங்கிட வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ December 21, 2015 at 9:24 AM

   //எண்ணூறாவது பதிவினை பிரம்மாண்டமாக -
   வெளியிட்டுள்ள தங்களுடைய மகிழ்ச்சியில்
   நானும் பங்கு கொள்கின்றேன்..

   மேலும் பலநூறு பதிவுகள் வழங்கிட வேண்டும்..

   அருகிருக்கும் அரங்கனும் ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மியும்
   ஐயன் ஜம்புகேஸ்வரனும் அன்னை அகிலாண்டேஸ்வரியும் தங்களுக்கு எல்லா நலன்களையும் வழங்கிட வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்..//

   வாங்கோ பிரதர். வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டுகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 9. அட! 800 அது பதிவு மெஹ்ருனிசாவைப் பாராட்டி வாழ்த்தும் பதிவு! மெஹ்ருனிசாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்! தங்களது 800 வது பதிவிற்கும் வாழ்த்துகள் சார்! மெஹ்ருனிசா மேலும் பல சாதனைகள் புரியவும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் சார்.

   Delete
  2. Thulasidharan V Thillaiakathu
   December 21, 2015 at 10:12 AM

   //அட! 800 அது பதிவு மெஹ்ருனிசாவைப் பாராட்டி வாழ்த்தும் பதிவு! மெஹ்ருனிசாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்! தங்களது 800 வது பதிவிற்கும் வாழ்த்துகள் சார்! மெஹ்ருனிசா மேலும் பல சாதனைகள் புரியவும் வாழ்த்துகள்!//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   Delete
 10. வொண்டர்ஃபுல். சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹருன்நிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் நேயர் கடிதமு கொச்சைத் தமிழில் இருந்தாலும் சொன்ன விதம் ரொம்ப டச்சிங்கா இருக்கு. ஜாதி மதம் ஏழை பணக்காரா என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் கோபால் சாரின் பெருந்தன்மையான குணத்திற்கு ஈடு இணையே கிடையாது. பாராட்டுகள் சார். 800---வது பதிவுக்கு வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி சார் ( சாரா மேடமா) பேரு வித்யாசமா இருக்குதுல்லா.

   Delete
  2. ஸ்ரத்தா, ஸபுரி... December 21, 2015 at 10:22 AM

   //வொண்டர்ஃபுல். சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹருன்நிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் நேயர் கடிதமு கொச்சைத் தமிழில் இருந்தாலும் சொன்ன விதம் ரொம்ப டச்சிங்கா இருக்கு. ஜாதி மதம் ஏழை பணக்காரா என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் கோபால் சாரின் பெருந்தன்மையான குணத்திற்கு ஈடு இணையே கிடையாது. பாராட்டுகள் சார். 800---வது பதிவுக்கு வாழ்த்துகள். ரொம்ப சந்தோஷமாக இருக்கு.//

   தங்களின் அன்பான வருகைக்கும், வொண்டர்ஃபுல் ஆன கருத்துக்களுக்கும், விரிவான பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 11. சாதனையாளர் மெஹருன்னிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள் எவ்வளவு திறமை சாலிகளை த்தேடிப்பிடித்து அறிமுகம் செய்து வருகிறீர்கள். நிறைய பதிவர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல் எப்பூடில்லா பேரு யோசிக்காக. வாழ்த்துக்கு நன்றிகள்.

   Delete
  2. ஆல் இஸ் வெல்....... December 21, 2015 at 10:45 AM

   //சாதனையாளர் மெஹருன்னிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள் எவ்வளவு திறமை சாலிகளை த்தேடிப்பிடித்து அறிமுகம் செய்து வருகிறீர்கள். நிறைய பதிவர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சார்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   ALL IS ALWAYS WELL !

   Delete
 12. வாம்மா மின்னலு. கோபால சார் மோதிரக்கையால சாதனையாளர் விருது வாங்கிட்டீங்களா. குட் வெரிகுட் வாழ்த்துகள். ஸார் பாராட்டுகள். எப்படித்தான் அடுத்தடுத்து உடனுக்குடன் பதிவு போடுறீங்களோ. 800-- வது பதிவுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஹை மின்னலு இதுகூட நல்லாதா இருக்குதுங்கோ. வாழ்த்துனதுக்கு நன்றிகள் குருஜி கையால விருது வாங்குறது எம்பூட்டு சந்தோசம் இல்லீங்களா குருஜி ஒங்கள தான மொதகா பாராட்டினாக. அப்பூடின்னாக்க நீங்க கூட லக்கி தான. இன்னா நா சொலுலுது கரீட்டுதான.

   Delete
  2. பூந்தளிர் December 21, 2015 at 10:56 AM

   வாங்கோ சிவகாமி, வணக்கம். பூந்தளிர் இன்னும் பூக்கக்காணுமே எனக் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன்.

   நினைத்தேன் வந்தாய் ..... நூறு வயது!

   //வாம்மா மின்னலு.//

   :) சூப்பரான பெயர். ஸ்பெஷல் நன்றிகள். :)

   //கோபால சார் மோதிரக்கையால சாதனையாளர் விருது வாங்கிட்டீங்களா. குட் வெரிகுட் வாழ்த்துகள்.//

   எதையாவது இதுபோலச் சொல்லி அவ்வப்போது உசிப்பி விடுகிறீர்களே !

   //ஸார் பாராட்டுகள்.//

   பாராட்டுகளுக்கு மிகவும் சந்தோஷம்மா. :)

   //எப்படித்தான் அடுத்தடுத்து உடனுக்குடன் பதிவு போடுறீங்களோ.//

   மனம் சோர்ந்துபோகும் போதெல்லாம் பூந்தளிரை நினைத்துக் கொள்வேன். உடனே உற்சாகத்துடன் பேரெழுச்சி ஏற்பட்டு விடுகிறது. பூந்தளிர் என்ற அழகான பெயர் ராசிதான் இதற்குக்காரணம்.

   //800-- வது பதிவுக்கு வாழ்த்துகள்//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சிவகாமி.

   பிரியமுள்ள கோபு

   Delete
 13. சலுகை கொடுத்த விதத்தில்
  உங்கள் விசால குணமும் பெருந்தன்மையும் புரிந்தது
  வெற்றி பெற்றவர்களுக்கெல்லாம் எனது
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் சார்.

   Delete
  2. Ramani S December 21, 2015 at 11:00 AM

   //சலுகை கொடுத்த விதத்தில் உங்கள் விசால குணமும் பெருந்தன்மையும் புரிந்தது. வெற்றி பெற்றவர்களுக்கெல்லாம் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

   வாங்கோ சார், வணக்கம் சார். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். அன்புடன் VGK

   Delete
 14. சாதனையாளர் செல்வி மெஹ்ருன்னிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் சார்

   Delete
  2. srini vasan December 21, 2015 at 11:02 AM

   //சாதனையாளர் செல்வி மெஹ்ருன்னிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். கோபால் சார் அவர்களுக்கு பாராட்டுகள்.//

   வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 15. குருஜி கும்பிட்டுகிடுதேன். எனக்கு போயி சாதனையாளர் விருதெல்லா கொடுத்துபிட்டீகளே. சிரிப்பாணி பொத்துகிச்சி குருஜி. ஏன்னு கேக்கீகளா?? இதுக்கு முன்ன நாலு பேருக்கு சாதனையாளர் வருது கொடுத்துபோட்டீக. அது நாயமான வெசயம். அவுக அல்லாருமே 4, 5,--வருசமா பதிவு எளுதுறாக. பல வெசயங்க பத்தி சூப்பரா பதிவெல்லா எளுதி இருக்காக. ராஜராஜேஸ்வரிம்மா 1600-- பதிவு போட்டிருக்காக. ஜெயந்தி ஆண்டி பூந்தளிர் மேடம்லா கூட அட்டகாசமா பதிவு எளுதுறாக. நீங்க புதுசு புதுசா இன்னா போட்டிகலா வச்சுகிட்டாலும் கலந்துகிட்டு கெலிச்சு போட்டு பரிசெல்லா வாங்கி இருக்காக. அவுக அல்லா பதிவு எளுதுறதுல புலிகளா இருக்காக. நா நாலு பதிவு கூட ஒளுங்கா எளுத தெரியாத குட்டி பூனை. புலிக கூட பூனகுட்டிய சேத்து பாராட்டிகிட கூடாதுல்ல. நா இன்னா சாதன பண்ணி போட்டன். ஒங்கட பதிவு படிச்சு என்கட புரியாத தமிளுல நாலு வரி கிறுக்கி அதுக்கு பேரு கமண்டுனு சொல்லிகினன். அது சாதனயா????????
  ஆனாகூட குருஜி எங்கட பதிவு படங்கதா அல்லாத்த வுடவும் சூப்பரா இருக்குது

  இன்னொரு வெசயம் அந்த பார்க்கரு பேனா எங்கிட்டு போச்சி. இங்கன காங்கலியே. படத்துல பாத்துபிட்டாச்சிம் சந்தோச பட்டுகிடுவேன்ல. 800--வது பதிவுக்கு வாழ்த்துகள் குருஜி.

  ReplyDelete
  Replies
  1. mru December 21, 2015 at 11:20 AM

   //குருஜி கும்பிட்டுகிடுதேன்.//

   வாம்மா மின்னலு { என் டியரஸ்ட் ஃப்ரண்டு + நம்மாளு .... முருகுவுக்கு வைத்துள்ள இந்தப்பெயர் எனக்கும் ரொம்ப ரொம்பப் பிடிச்சுப்போச்சு .... ஆஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! }.

   வணக்கம். நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

   ’மின்னலு’வைப்பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு.

   WOULD BE யோட ஃபோனில் பேசிக்கிட்டு ஜாலியோ ஜாலியா, ஜாலிலோ ஜிம்கானாவாக பிஸியா இருப்பீங்கோன்னு நினைக்கிறேன். மிகவும் சந்தோஷம்மா. :)

   >>>>>

   Delete
  2. குருஜி >>>>> மின்னலு முருகு (2)

   //எனக்கு போயி சாதனையாளர் விருதெல்லா கொடுத்துபிட்டீகளே. சிரிப்பாணி பொத்துகிச்சி குருஜி.//

   நான் கவனித்தவரை ’மின்னலு’க்கு அடிக்கடி எதற்கெடுத்தாலும் சிரிப்பாணி பொத்துக்கிட்டுத்தான் இருக்கு. வயசுக்கோளாறா இருக்குமோ என்னவோ :)

   //ஏன்னு கேக்கீகளா??//

   ஆமாம் ..... ஏன் மின்னலு ?

   //இதுக்கு முன்ன நாலு பேருக்கு சாதனையாளர் வருது கொடுத்துபோட்டீக. அது நாயமான வெசயம்.//

   நான் எது செய்தாலும் அது நியாயமாக மட்டுமே, இருக்கும் மின்னலு.

   //அவுக அல்லாருமே 4, 5,--வருசமா பதிவு எளுதுறாக. பல வெசயங்க பத்தி சூப்பரா பதிவெல்லா எளுதி இருக்காக.//

   அப்படியா மின்னலு .... எனக்குத்தெரியாத விஷயமெல்லாம் புட்டுப்புட்டுச் சொல்றீகளே :)

   அடுத்த 4-5 வருஷம் கழித்து, நம் ’மின்னலு’ வும் பல விஷயங்களைப்பத்தி சூப்பரா பதிவு எழுதுவாளாக்கும். எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது, மின்னலு.

   >>>>>

   Delete
  3. குருஜி >>>>> மின்னலு முருகு (3)

   //ராஜராஜேஸ்வரிம்மா 1600-- பதிவு போட்டிருக்காக.//

   அப்படியா? இதைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கு மின்னலு :)

   //ஜெயந்தி ஆண்டி//

   எங்க ஜெயந்தி ஒன்றும் ஆண்டியல்ல. மிகப் பெரிய கோடீஸ்வரியாக்கும். :) எங்கட ’ஜெயா’வைப்போய் ஆண்டின்னு சொன்னா எனக்குக் கோபமாக வருது :)

   //பூந்தளிர் மேடம்லா கூட அட்டகாசமா பதிவு எளுதுறாக.//

   பூந்தளிர் எவ்ளோ அழகானதோர் பெயர் பாருங்கோ மின்னலு. பெயரே இப்படி அழகோ அழகாக அட்டகாசமாக இருக்கும்போது அவங்க பதிவு எழுதுவதும் அட்டகாசமாகத்தானே இருக்கும், மின்னலு. :)

   இதில் நாம் ஆச்சர்யப்பட என்ன இருக்கு சொல்லுங்கோ, மின்னலு.

   அந்த அவங்களின் பாயஸப்பதிவு ஒன்னு போதுமே.
   எவ்ளோ டேஸ்டோ டேஸ்டூஊஊஊஊ. நாக்கில் ஜலம் ஊறுகிறது .... எனக்கு :)

   >>>>>

   Delete
  4. குருஜி >>>>> மின்னலு முருகு (4)

   //நீங்க புதுசு புதுசா இன்னா போட்டிகலா வச்சுகிட்டாலும் கலந்துகிட்டு கெலிச்சு போட்டு பரிசெல்லா வாங்கி இருக்காக. அவுக அல்லா பதிவு எளுதுறதுல புலிகளா இருக்காக.//

   அவங்க எல்லாம் என்றும் புலியாகவே இருக்கட்டும், மின்னலு. நாம் இருவரும் பூனையாகவே இருந்துவிட்டுப்போவோம். அதனால் என்ன மின்னலு.
   மியாவ் ... மியாவ் ... பூனைக்குட்டி ......
   மீசைக்காரப் பூனைக்குட்டி ..... :)

   >>>>>

   Delete
  5. குருஜி >>>>> மின்னலு முருகு (5)

   //நா நாலு பதிவு கூட ஒளுங்கா எளுத தெரியாத குட்டி பூனை. புலிக கூட பூனகுட்டிய சேத்து பாராட்டிகிட கூடாதுல்ல.//

   குட்டிப்பூனையானாலும் சுட்டிப்பூனையாக இருக்கீங்கோ, மின்னலு.

   ஏற்கனவே பூனை அல்லது பூஸார் என்றாலே பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே அருமைப்பேத்தி, ஸ்வீட் சிக்ஸ்டீன் அட்டகாச, அலம்பல், அதிரடி ’அதிரா’ என்றோர் பதிவர் ஞாபகமே எனக்கு வரும்.

   http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html இதில் போய் அதிரடி அதிராவுக்கு இரட்டைக்குழந்தை பிறந்ததைப் பாருங்கோ மின்னலு :)

   இப்போ அந்தப்பூனையார் ஏனோ என் பதிவுகள் பக்கமே வருவதே இல்லை. ஃபேஸ்புக் பக்கம் அது ஒளிந்துகொண்டுள்ளதாகக் கேள்விப் படுகிறேன். :)

   அதன் இடத்தை இப்போ மின்னலு பிடிச்சாச்சு. மகிழ்ச்சியே :)

   //நா இன்னா சாதன பண்ணி போட்டன். ஒங்கட பதிவு படிச்சு என்கட புரியாத தமிளுல நாலு வரி கிறுக்கி அதுக்கு பேரு கமண்டுனு சொல்லிகினன். அது சாதனயா????????//

   கிளி கொஞ்சும் கொச்சைத்தமிழில் மின்னலு எழுதும்போது அழகாகவும் அருமையாகவும் உள்ளதாக பலரும் பாராட்டிச் சொல்லியுள்ளார்கள், தங்களின் நேயர் கடிதம் பகுதிக்கு வந்த பின்னூட்டங்களில் http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html .... மொத்தப்பின்னூட்ட எண்ணிக்கைகளே 133 எனக்காட்டுது பாருங்கோ. :) இது ஒரு மிகப்பெரிய சாதனைதானே, மின்னலு.

   //ஆனாகூட குருஜி எங்கட பதிவு படங்கதா அல்லாத்த வுடவும் சூப்பரா இருக்குது//

   மின்னலு சூப்பரான ஆளு என்பதால் பதிவின் படங்களும் சூப்பராகக் காட்டப்பட்டுள்ளன. [ உடனே மின்னலு முகத்தில் தோன்றும் வெட்கத்தைப்பாரு .... :) ]

   >>>>>

   Delete
  6. குருஜி >>>>> மின்னலு முருகு (6)

   //இன்னொரு வெசயம் அந்த பார்க்கரு பேனா எங்கிட்டு போச்சி. இங்கன காங்கலியே. படத்துல பாத்துபிட்டாச்சிம் சந்தோச பட்டுகிடுவேன்ல.//

   அந்தப் பார்க்கரு பேனா எங்கேயும் போகலை. என்னிடம்தான் பத்திரமாக உள்ளது. ஊர் மாறி குடிமாறி போய் விட்டதால் எனக்கு மின்னலு தன் விலாசத்தையே இன்னும் விலாவரியாகச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்நேரம் பரிசுப்பணமும், அந்தப்பார்க்கர் பேனாவும் மின்னலு கைகளில் மின்னல் வேகத்தில் என்றோ வந்து சேர்ந்திருக்கும்.

   ஏற்கனவே ஒருமுறை, அந்தப்பேனாவை என் பதிவினிலே படமாகக் காட்டிய அதிர்ஷ்டமே மின்னலுவை (முருகுவை) இன்று கல்யாணப்பொண்ணாக மாற்றி சாதனை செய்துள்ளது. மீண்டும் காட்டச்சொல்றீங்கோ! :)

   ஆச்சி ஆச்சின்னு ஒரு பதிவர். மின்னலுக்குத் தெரியுமோ தெரியாதோ. முன்னொரு காலத்தில் பதிவுலகில் இருந்திச்சு. இப்போ ஃபேஸ்புக்கில் எப்போதாவது தோன்றுகிறது.

   இதோ இந்த என் பதிவினில் ஆச்சியின் போட்டோ படங்கள் உள்ளன

   http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html.

   முருகுவின் நேயர் கடிதத்தைப் படிச்சுட்டு என்னுடன் என் பிறந்தநாள் (08.12.2015) அன்னிக்கு டெலிஃபோனில் விடிய விடிய அந்த ஆச்சி பேசிச்சு. அதுக்கும் சிரிப்பாணி பொத்துக்கிச்சு.

   அது என்னை எப்போதும் உரிமையுடன் கேலியும் கிண்டலும் பண்ணிக்கிட்டே இருக்கும். ”முருகுவுக்குக் கல்யாணம் குதிர்ந்து வரும்போல இருக்குது”ன்னு நான் சொன்னதும், எல்லாம் உங்க பெயர் ராசி + உங்கப் பேனாவின் ராசி எனக் கிண்டல் பண்ணி சிரிக்குது. :) எனக்கும் உடனே சிரிப்பாணி பொத்துக்கிச்சு. :))

   >>>>>

   Delete
  7. குருஜி >>>>> மின்னலு முருகு (7)

   //800--வது பதிவுக்கு வாழ்த்துகள் குருஜி.//

   முருகுவுடன் முறுக்கிக்கொண்டுள்ள 800-வது பதிவுக்கு வாழ்த்துச் சொன்ன மின்னலுவுக்கு .... மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா ! வாழ்க !!

   அன்புடன் குருஜி

   Delete
  8. குருஜி எனிக்கு மட்டுமால எம்பூட்டு ரிப்லை பண்ணிப்போட்டீக.சந்தோசம்.....................
   இப்பூடி எங்கட் அம்மி ஒரு சொலவட சொல்லிகிடும் அத இங்கீட்டு சொல்ல ஏலாது. ஆச்சி பதிவரு பத்தி ஒங்கட பதிவுல சொல்லினிங்க. பதிவர் சந்திப்பு ஒங்கட வூட்ல இருந்துபிட்டுலா.
   இன்னா குருஜி ஒங்களயும் பூனயா சொல்லிப்போட்டீக. ஓ...ஓ.. 800-- பதிவு போட்டுகிட்ட திற்மசாலி பூனயோ அப்பாலிக்க ஓக்கேதா. பிரித்தானியாவ நெனச்சிகிடாம இருக்கவே மாட்டீகளா. சரி சரி நா பொறவால வந்துகிடுதேன்.

   Delete
  9. mru December 22, 2015 at 11:02 AM

   //குருஜி எனிக்கு மட்டுமால எம்பூட்டு ரிப்லை பண்ணிப்போட்டீக. சந்தோசம்...................//

   முருகுவுக்கு ‘மின்னலு’ன்னு எங்கட பூந்தளிர் ஓர் புதிய பெயர் சூட்டியுள்ளதால் ஏற்பட்ட மகிழ்ச்சியினால் இம்பூட்டு ரிப்ளை கொடுத்துள்ளேன். :)

   //இப்பூடி எங்கட் அம்மி ஒரு சொலவட சொல்லிகிடும் அத இங்கீட்டு சொல்ல ஏலாது.//

   அடடா, வடை போச்சே ! சொல்ல வந்த சொலவடை என்னவோ. தெரிஞ்சுக்காட்டி என் மண்டையே வெடித்து விடுமே, மின்னலு. :(

   //ஆச்சி பதிவரு பத்தி ஒங்கட பதிவுல சொல்லினிங்க. பதிவர் சந்திப்பு ஒங்கட வூட்ல இருந்துபிட்டுலா.//

   :) ஆமாம். ஆச்சி எங்க வீட்டுக்கு வந்துட்டுப்போனாக.

   //இன்னா குருஜி ஒங்களயும் பூனயா சொல்லிப்போட்டீக.//

   பூனையில்லாமல் பிறகு என்ன? நான் யானையா? :)

   //ஓ...ஓ.. 800-- பதிவு போட்டுகிட்ட திறமசாலி பூனயோ அப்பாலிக்க ஓக்கேதா.//

   திறமையாவது வெங்காயமாவது. நான் மிக மிகச் சாதாரணமானவன் மட்டும்தானாக்கும்.

   //பிரித்தானியாவ நெனச்சிகிடாம இருக்கவே மாட்டீகளா. சரி சரி நா பொறவால வந்துகிடுதேன்.//

   ஒருசிலரை மட்டும் மறக்க மனம் கூடுதில்லையே :) இதோ இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

   Delete
  10. என்ன நடக்குது இங்க. நான் வராத நேரமா பாத்து என் மண்டய உருட்டுறீங்களா நானும் இங்கியேதான் சுத்திக்ட்டு இருக்கேனாக்கும் நெனப்புல இருக்கட்டும்.

   Delete
  11. பூந்தளிர் December 22, 2015 at 2:08 PM

   ஆஹா, பூந்தளிர் மீண்டும் இங்கே பூத்துள்ளதே :) இது கனவா நனவா? அமுதாவா அமுதாப்பாட்டியா? என நினைக்கத்தோன்றுகிறதே. புரியாட்டி இதோ இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html

   //என்ன நடக்குது இங்க. நான் வராத நேரமா பாத்து என் மண்டய உருட்டுறீங்களா நானும் இங்கியேதான் சுத்திக்ட்டு இருக்கேனாக்கும் நெனப்புல இருக்கட்டும்.//

   அடடா, இங்கேயேதான் என்றால் திருச்சியில் எங்க ஆத்துப்பக்கமா, சிவகாமி. எங்கே இருக்கீங்கன்னு கரெக்டா தெளிவாச் சொல்லுங்கோ. உடனே ஓடி வந்து அழைத்துக் கொள்கிறேன்.

   ஏதோ இப்போ நீங்க ‘நாசிக்’கிலே இருக்கீங்களோன்னு நான் தப்பா நினைச்சுக்கிட்டிருக்கிறேன்.

   Delete
  12. பூங்கதவே .... தாழ் திறவாய் ....

   பூந்தளிரே !

   அப்புறம் உங்க வலைத்தள வெளியீடான ஆட்டோக்காரரைப் பார்க்கவும் படிக்கவும் என் விசிறியான திரு. ஸ்ரீனிவாஸன் என்பவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பியிருந்தேனே, இந்நேரம் அங்கு வந்திருப்பாரே, சந்தோஷம்தானே, சிவகாமி. :)

   பிரியமுள்ள கோபு

   Delete
  13. இங்கேன்னா உங்க பதிவு பக்கம்னு அர்த்தம். திருச்சி லாம் உங்க பதிவுமூலமா தெரிஞ்சுக்கதான் முடியும். நேர்ல எங்க வர முடியும்
   உங்க விசிறிகள் நெறய பேரு இருக்காங்களே. ஏன் எல்லாரையும் அனுப்ப வேண்டியதுதானே. ஒரு விசிறிய மட்டும் ஏன் அனுப்பினீங்க.

   Delete
  14. பூந்தளிர் December 22, 2015 at 5:57 PM

   //இங்கேன்னா உங்க பதிவு பக்கம்னு அர்த்தம். திருச்சி லாம் உங்க பதிவுமூலமா தெரிஞ்சுக்கதான் முடியும். நேர்ல எங்க வர முடியும்//

   ஏன் வர முடியாது? ஜாலியாக Free Bird ஆகத்தானே இருக்கேள். வந்தால் என்னவாம்? அக்டோபர் செகண்ட் வீக்கே ஆவலுடன் நான் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். மனசு இருந்தால் மார்க்கமுண்டு எனச் சொல்லுவார்கள். கொஞ்சம் மனசைத்தான் வைய்யுங்கோளேன். நேரில் வருகை தந்து தங்களின் பரிசினையும், மீதி அனைத்து மரியாதைகளையும் பெற்றுச்செல்லுங்கோ, ப்ளீஸ்.

   //உங்க விசிறிகள் நெறய பேரு இருக்காங்களே. ஏன் எல்லாரையும் அனுப்ப வேண்டியதுதானே. ஒரு விசிறிய மட்டும் ஏன் அனுப்பினீங்க.//

   இப்போ மார்கழி மாதம் ... பொதுவாகக் குளிர் காலம் அல்லவா ... அதனால் விசிறி அதிகம் தங்களுக்குத் தேவைப்படாதோ என நான் நினைத்து விட்டேன்.

   ஒருவேளை நீங்க இருக்கும் இடத்தில் வெயில் ஜாஸ்தியோ? அங்கு ரொம்பவும்தான் வேர்க்குமோ?

   பிரியமுள்ள கோபு

   Delete
 16. எண்ணூறு உங்கள் பரிசு மழை விசிறி போன்று ஆயிரமாக மலர்ந்திட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ December 21, 2015 at 12:31 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //எண்ணூறு உங்கள் பரிசு மழை விசிறி போன்று ஆயிரமாக மலர்ந்திட வாழ்த்துக்கள்!//

   ஆஹா, ஆயிரமாக மலர்ந்திட ஆசைதான். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   அன்புடன் VGK

   Delete
  2. ஏற்கனவே ஒருமுறை இந்த சகோதரிக்கு வாழ்த்து சொல்லி இருப்பதாக நினைவு. அதனால் என்ன. மீண்டும் சகோதரி மெஹருனிஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

   Delete
  3. வாழ்த்துக்கு நன்றி சார்

   Delete
 17. சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.

  தங்கள் 800 வது, அருமை ஐயா, இன்னும் எழுதுங்கள். தொடர்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran December 21, 2015 at 3:30 PM

   //சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.

   தங்கள் 800 வது, அருமை ஐயா, இன்னும் எழுதுங்கள். தொடர்கிறேன். நன்றி.//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
  2. வாழ்த்துக்கு நன்றி

   Delete
 18. ஸ்ரீராம். December 21, 2015 at 7:32 PM

  //வாழ்த்துகள்.//

  வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

  மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

  ReplyDelete
 19. முயற்சி திருவினையாக்கும் என்றபடிக்கு... சாதித்து வென்ற சகோதரி மெஹ்ருன்னிசாவிற்கு வாழ்த்துகள்!
  அட, அதுக்குள்ளே திருமணமா? (கனவுதான்!)

  ReplyDelete
  Replies
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்
   December 21, 2015 at 10:08 PM

   வாங்கோ நண்பரே, வணக்கம்.

   //முயற்சி திருவினையாக்கும் என்றபடிக்கு... சாதித்து வென்ற சகோதரி மெஹ்ருன்னிசாவிற்கு வாழ்த்துகள்!//

   சாதனைதான். தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

   //அட, அதுக்குள்ளே திருமணமா? (கனவுதான்!)//

   இறைநாட்டப்படி, எது அந்தப்பெண்ணுக்கு நல்லதோ அது நல்லபடியாக நல்ல நேரத்தில் நடக்கட்டும் என நாம் பிரார்த்திப்போம்.

   தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள், நண்பரே.

   Delete
  2. வாழ்த்துக்கு நன்றிகள். இந்த குருஜிலா ஏதாச்சிம் சொல்லி பகிடி பண்ணிகிட்டே இருப்பாக. என்னய சீண்டிகிட்டே இல்லாகாட்டி அவுகளுக்கு ஒறக்கமே வந்திகிடாது.

   Delete
  3. mru December 22, 2015 at 11:05 AM

   //வாழ்த்துக்கு நன்றிகள். இந்த குருஜிலா ஏதாச்சிம் சொல்லி பகிடி பண்ணிகிட்டே இருப்பாக. என்னய சீண்டிகிட்டே இல்லாகாட்டி அவுகளுக்கு ஒறக்கமே வந்திகிடாது.//

   ஆமாம், இல்லாட்டி மட்டும் உறக்கம் வந்து கிழிக்குதாக்கும். நான் இரவில் தூங்கியே 2 வருஷத்திற்கு மேல் ஆச்சு, தெரியுமா :(

   இனி 01.01.2016 முதலாவது, புதிய பதிவேதும் வெளியிடாமல், இரவினில் நிம்மதியாகத் தூங்கணும் என நினைத்துள்ளேன். அதுவும் நடக்குமோ நடக்காதோ .... யாருக்குத்தெரியும் !

   Delete
 20. வாழ்த்துக்கள் பெண்ணே!

  //சிரிப்பாணி பொத்துகிச்சி குருஜி. ஏன்னு கேக்கீகளா?? இதுக்கு முன்ன நாலு பேருக்கு சாதனையாளர் வருது கொடுத்துபோட்டீக. அது நாயமான வெசயம்.//\\

  அட நீ வேற. நான் முந்தாநாள் பெஞ்ச மழையில நேத்து முளைச்ச காளான்.

  //”முருகுவுக்குக் கல்யாணம் குதிர்ந்து வரும்போல இருக்குது”ன்னு நான் சொன்னதும், //

  எனக்கு இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகணும், இது உண்மையா இல்ல கனவா?

  ReplyDelete
  Replies
  1. ஆண்டி வாங்க நீங்களே இந்த நாயத்த கேளுக. நா ஒங்க ஆண்டினுபிட் சொல்லின கோடாதம்ல குருஜி சொல்லினாக. வேற எப்பூடி சொல்லுவினம். மேடம்லா எனிக்கு புடிக்கல. எனிக்கு நிக்காவுனு குருஜி கனவுதான கண்டுகிட்டிக. ஒரு வேள பகல் கனவா இருந்துகிடும்வா. அட நீங்க காளான்னு சொல்லி பிட்டீக. நானு நேத்து மொளச்ச சுண்டக்கா ஆண்டி. வாழ்த்துக்கு நன்றி.

   Delete
  2. Jayanthi Jaya December 22, 2015 at 9:58 AM

   **”முருகுவுக்குக் கல்யாணம் குதிர்ந்து வரும்போல இருக்குது”ன்னு நான் சொன்னதும்,**

   //எனக்கு இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகணும், இது உண்மையா இல்ல கனவா?//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! என் கனவு விரைவில் நிச்சயமாகப் பலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

   உண்மையா என நான் இப்போது இங்கு சொல்ல முடியாத நிலையில் உள்ளேன், ஜெயா. புரிஞ்சுக்கோங்கோ, ப்ளீஸ். :)))))))))))

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 21. கோபு அண்ணா

  நீங்க ரொம்ப மோசம். ஓரவஞ்சன. என் பதிவில இவ்வளவு பின்னூட்டத்துக்கு நீங்க பதில் கொடுக்கலயே.

  போனாப்போறது சின்ன பொண்ணுன்னு இங்க இப்படி பதிவு கொடுத்திருப்பாரோ?

  800வது பதிவுக்கு வாஆஆஆஆஆஆஆஆஆஆழ்த்து (கோபமா இருக்கேன்).

  ReplyDelete
  Replies
  1. அதான நானுகுட குருஜிவ கேட்டுபிட்டன்.

   Delete
  2. Jayanthi Jaya December 22, 2015 at 10:00 AM

   //கோபு அண்ணா, நீங்க ரொம்ப மோசம். ஓரவஞ்சன. என் பதிவில இவ்வளவு பின்னூட்டத்துக்கு நீங்க பதில் கொடுக்கலயே.//

   ஃபேண்டா கலர் புடவையில் அழகாக ஜொலிக்கும் என் அன்புத்தங்கச்சி, ஜெயா முகத்துக்கு அடியில் திருஷ்டிப்பரிகாரம் போல இந்த கோபு அண்ணவின் படம் தோன்றவேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே நான் பதில் ஏதும் கொடுக்கவில்லையாக்கும்.

   { ஹையோ, எதையோ சாமர்த்தியமாச் சொல்லி சமாளிச்சாச்சு :) }

   //போனாப்போறது சின்ன பொண்ணுன்னு இங்க இப்படி பதிவு கொடுத்திருப்பாரோ?//

   அதே அதே, சபாபதே !

   { இது மிகவும் பொடியான வெள்ளரிப்பிஞ்சாச்சே :) }

   //800வது பதிவுக்கு வாஆஆஆஆஆஆஆஆஆஆழ்த்து (கோபமா இருக்கேன்).//

   பொம்மனாட்டிகளுக்கு கோபம் வந்தாலே அது ஒரு தனி அழகோ அழகு தான். :)

   மிகவும் சந்தோஷம், ஜெயா. கோபம் வந்ததால் மட்டுமே, லேட்டா வந்தாலும் நிறைய பின்னூட்டங்கள் எனக்குக் கிடைத்துள்ளன.

   சந்தோஷம். அடிக்கடி கோபு மேல் கோபப்படக் கடவது. :))))))))))))))

   அன்புடன் கோபு அண்ணா

   Delete
  3. ஆமா ஒங்க குருஜி ரொம்ப பாரஷால்டிதான் பண்ணுறாங்க. ஜெயந்தி மேடம் போனா போகுது முருகு சின்ன பொண்ணுதானே. நாம விட்டுக்கொடுத்துடலாம்.

   Delete
  4. பூந்தளிர் December 22, 2015 at 2:11 PM

   வாங்கோம்மா, பூந்தளிர், வணக்கம்மா.

   //ஆமா ஒங்க குருஜி ரொம்ப பாரஷால்டிதான் பண்ணுறாங்க.//

   நானா .... ரொம்பவும் பார்ஷியாலிடி பண்றேனா .... நோ..நோ இதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். எனக்கு வலைத்தளம் மூலம் கிடைத்த டாலடிக்கும் நவரத்தின உறவுகளில் பூந்தளிரும் உண்டு, ஜெயாவும் உண்டு, இந்தச்சின்னப் பொண்ணு ’மின்னலு’வும் உண்டு. இன்னும் சிலரும் உண்டு. எனக்கெதற்கு ஊர்வம்ப்ஸ்ஸ் அதனால் சொல்ல மாட்டேனாக்கும்.:)

   //ஜெயந்தி மேடம் போனா போகுது முருகு சின்ன பொண்ணுதானே. நாம விட்டுக்கொடுத்துடலாம்.//

   குட், வெரிகுட், அதுதான் என்னை அவ்வப்போது சொக்க வைக்கும் பூந்தளிரின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. வாழ்க! வாழ்கவே !!

   பிரியமுள்ள கோபு

   Delete
 22. //எங்க ஜெயந்தி ஒன்றும் ஆண்டியல்ல. மிகப் பெரிய கோடீஸ்வரியாக்கும். :) எங்கட ’ஜெயா’வைப்போய் ஆண்டின்னு சொன்னா எனக்குக் கோபமாக வருது :)//

  எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

  வீட்டுல நாலு கோடி (நாலு மூலை) இருக்கு. அதுக்கு நாந்தான் சொந்தக்காரி.

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஆண்டி இது தப்பான வார்த்தயோ. இனிமேக்கொண்டு கோடீஸ்வரி ஆண்டினு சொல்லிகினவா.

   Delete
  2. Jayanthi Jaya December 22, 2015 at 10:02 AM

   **எங்க ஜெயந்தி ஒன்றும் ஆண்டியல்ல. மிகப் பெரிய கோடீஸ்வரியாக்கும். :) எங்கட ’ஜெயா’வைப்போய் ஆண்டின்னு சொன்னா எனக்குக் கோபமாக வருது :)**

   //எல்லாம் உங்க ஆசீர்வாதம். வீட்டுல நாலு கோடி (நாலு மூலை) இருக்கு. அதுக்கு நாந்தான் சொந்தக்காரி.//

   படித்தேன் .... ரஸித்தேன் .... சிரித்தேன். :)

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   Delete
 23. //அவங்க எல்லாம் என்றும் புலியாகவே இருக்கட்டும், மின்னலு. நாம் இருவரும் பூனையாகவே இருந்துவிட்டுப்போவோம். அதனால் என்ன மின்னலு.
  மியாவ் ... மியாவ் ... பூனைக்குட்டி ......//

  ம்க்கும். புலியா. பதிவும் போட முடியாம, பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு நினைச்ச வலைத்தளங்களுக்கு போகவும் முடியாம, பின்னூட்டம் கொடுக்கவும் முடியாம அடுப்படியே கதின்னு இருக்கேன்.

  நல்ல ஜோக் போங்கோ.

  ReplyDelete
  Replies
  1. அப்பூடி இல்ல கோடீஸ்வரி ஆண்டி புலி பசிச்சாகாட்டியும் புல்லு திங்காதுகாட்டியும்லா
   நீங்கலாம் தெறமயான பதிவருகதா

   Delete
  2. Jayanthi Jaya December 22, 2015 at 10:04 AM

   **அவங்க எல்லாம் என்றும் புலியாகவே இருக்கட்டும், மின்னலு. நாம் இருவரும் பூனையாகவே இருந்துவிட்டுப்போவோம். அதனால் என்ன மின்னலு.
   மியாவ் ... மியாவ் ... பூனைக்குட்டி ......**

   //ம்க்கும். புலியா. பதிவும் போட முடியாம, பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு நினைச்ச வலைத்தளங்களுக்கு போகவும் முடியாம, பின்னூட்டம் கொடுக்கவும் முடியாம அடுப்படியே கதின்னு இருக்கேன். நல்ல ஜோக் போங்கோ.//

   ஆஹா, எனக்கு இப்போ ரொம்பப் பசிக்குது ஜெயா. அழைத்தால் அடுப்படியில் உங்களுக்கு உதவவும், அப்படியே ஜெயா கையால் சமைத்ததை நன்னா மூக்கைப்பிடிக்க சாப்பிடவும் வந்துடுவேனே :)

   பசியுடன் கோபு அண்ணா

   Delete

 24. சாதனையாளர் விருதைப் பெற்ற செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பரிசளித்து சிறப்பித்த தங்களுக்கு பாராட்டுக்கள்!

  தங்களின் 800 ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி சார்.

   Delete
  2. வே.நடனசபாபதி December 22, 2015 at 12:53 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //சாதனையாளர் விருதைப் பெற்ற செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பரிசளித்து சிறப்பித்த தங்களுக்கு பாராட்டுக்கள்!

   தங்களின் 800 ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! //

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் அழகான கருத்துக்கள் + பாராட்டுகள் + வாழ்த்துகள் அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   Delete
 25. ஸார் என்பதிவு பக்கம் வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி. இன்று அடுத்த பதிவு போட்டிருக்கேன். வாங்க.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... December 22, 2015 at 3:33 PM

   //ஸார் என்பதிவு பக்கம் வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி. இன்று அடுத்த பதிவு போட்டிருக்கேன். வாங்க.//

   தகவலுக்கு நன்றிகள்.

   Delete
 26. அன்புள்ள முருகு ... மின்னலு,

  இன்று என் வலைத்தளத்தினில் புதிய 386 வது FOLLOWER ஆகி அசத்தியுள்ளீர்கள். WELCOME. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  பிரியமுள்ள குருஜி கோபு

  ReplyDelete
  Replies
  1. ஹை...... அதயும் பாத்த்தகிட்டீகளா. அப்பூடிலா பாத்துகிட ஏலுமா குருஜி.நேத்து பெரிய வாப்பா வூடு கம்ப்யூட்டர்ல கொறச்ச நேரம் ஒங்கட பதிவுக அல்லா கண்டு கிட்டேனா அங்கிட்டுதா ஃபாலோவர் பத்தி பாத்துபிட்டேன் எப்பூடி ஃபாலோவரு ஆகிபோடோணும்லா வெளங்கி கிட ஏலலே. எத்தயோ கிளிக் பண்ணி போட்டன்லா

   Delete
  2. mru December 23, 2015 at 10:18 AM

   வாம்மா மின்னலு,

   //ஹை...... அதயும் பாத்த்தகிட்டீகளா.//

   முடிந்தவரை, சான்ஸ் கிடைத்தால், கண்ணில் படும் எல்லாவற்றையும் அவ்வப்போது பார்த்திடுவோமே.:)

   //அப்பூடிலா பாத்துகிட ஏலுமா குருஜி.//

   பெரிய கம்ப்யூட்டரில் நம் வலைப்பக்கத்தைத் திறந்தால் இவை எல்லாமே பிரும்மாண்டமாகக் காட்சியளிக்கும் தானே!

   அதனால் என்னால் சுலபமாகப் பார்த்துகிட ஏலும் :)

   //நேத்து பெரிய வாப்பா வூடு கம்ப்யூட்டர்ல கொறச்ச நேரம் ஒங்கட பதிவுக அல்லா கண்டு கிட்டேனா அங்கிட்டுதா ஃபாலோவர் பத்தி பாத்துபிட்டேன் எப்பூடி ஃபாலோவரு ஆகிபோடோணும்லா வெளங்கி கிட ஏலலே. எத்தயோ கிளிக் பண்ணி போட்டன்லா//

   நீங்க ரொம்பச் சமத்தூஊஊஊஊ. மிகவும் கெட்டிக்காரி.

   ‘மின்னலு’ என்ற பெயர் மிகவும் பொருத்தமாகத்தான் கொடுத்திருக்காங்க அந்த என் சினேகிதி ’பூந்தளிர்’.

   எல்லாவற்றையும் மின்னல் வேகத்தில் நோண்டி நோண்டித் தெரிஞ்சுக்கிறீங்க .... எத்தயோ கிளிக் பண்ணி வெளங்கி கிட ஏலாததையெல்லாம் எப்படியோ விளங்கிக்கிட்டீங்க.

   மிக்க மகிழ்ச்சிம்மா. மீண்டும் பாராட்டுகள். வாழ்த்துகள்.

   முருகுவுக்கு ’மின்னலு’ என்று பொருத்தமான புதுப்பெயர் சூட்டிய ‘பூந்தளிர்’ சிவகாமிக்கும் மீண்டும் என் நன்றிகள்!

   அன்புடன் குருஜி

   Delete
  3. சந்தடி சாக்குல எனக்கும் ஒரு நன்றியா அந்த முருகுவுக்கு தெரிந்திருக்கும் (கம்ப்யூட்டரில்) விஷயங்கள் கூட எனக்கு தெரிஞ்சுக்க முடியலியே. மின்னலுன்னு பேரு சூட்டினது மட்டும் ஒர்க்அவுட் ஆயிடுத்தே.

   Delete
  4. பூந்தளிர் December 23, 2015 at 11:57 AM

   பூங்கதவே ........ தாழ் திறவாய்!

   வாங்கோ பூந்தளிர் !

   //சந்தடி சாக்குல எனக்கும் ஒரு நன்றியா//

   சந்தடி சாக்குல இல்லேம்மா.

   ‘வாம்மா மின்னலு’ என ஆரம்பித்து நீங்க இந்தப்பதிவுக்கு எழுதின முதல் பின்னூட்டம் பார்த்துப் படித்ததும் அப்படியே நான் சொக்கிப்போய் விட்டேன்.

   மொத்தத்தில் அப்படியே என்னைச் சொக்க வைக்கும்
   எழுத்துக்குச் சொந்தக்காரி ஆகிட்டீங்கோ :)

   >>>>>

   Delete
  5. கோபு >>>>> பூந்தளிர் (2)

   //அந்த முருகுவுக்கு தெரிந்திருக்கும் (கம்ப்யூட்டரில்)
   விஷயங்கள் கூட எனக்கு தெரிஞ்சுக்க முடியலியே.//

   அதனால் பரவாயில்லை. நானும் உங்களை மாதிரியேதான்.

   எனக்கும் இந்தக் கம்ப்யூட்டரில் இன்றுவரை ஒரு எழவும் சரியாகத் தெரியாது. பக்கத்தில் உட்கார்ந்து பொறுமையாகச் சொல்லித்தர பக்காவான ஆள் வேண்டும். :)

   இருப்பினும் இதுவரை எனக்குத் தெரிந்தவற்றை மறக்காமல் இருக்க அவ்வப்போது பதிவு இட்டுக்கொண்டு வந்துள்ளேன். அதுவே 800ஐத் தாண்டி விட்டது. அதுபோதும் எனக்குன்னு தோன்றிப்போய் விட்டது.

   >>>>>

   Delete
  6. கோபு >>>>> பூந்தளிர் (3)

   //மின்னலுன்னு பேரு சூட்டினது மட்டும் ஒர்க்அவுட்
   ஆயிடுத்தே.//

   ஆமாம். இதுபோலவே ஒவ்வொன்றும் நாம் நம் மனதில் நினைப்பதுபோலவே வெற்றிகரமாக ஒர்க்-அவுட் ஆனால் .... அதுவே மகிழ்ச்சிதான்! :)

   >>>>>

   Delete
  7. கோபு >>>>> பூந்தளிர் (4)

   உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, சிவகாமி?

   பூந்தளிருக்கு நான் கொடுக்கும் இந்த பதில் இந்தப்பதிவின் நூறாவது பின்னூட்டம் என்ற பெருமையைப்பெறுகிறது.

   இந்தப்போட்டியின் முதல் சாதனை நாயகியான
   பூந்தளிருடன் கூடிய என் பதிவு, 2015ம் ஆண்டிற்கான என் 100வது பதிவாக அமைந்திருந்தது. :)))))

   அதுபோலவே இதுவும் அகஸ்மாத்தாக அமைந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே. :)

   பிரியமுள்ள கோபு
   oooooooooooooooooo

   Delete
  8. குருஜி............. 100-- கமண்டு வந்துபோட்டுது. ஹையோ இந்த மின்னுக்கு வந்த சந்தோசத்த வார்த்தேல சொல்லிகின ஏலலியே.
   பெரிய கம்ப்யூட்டருல வாரதெல்லா மொபைலுல வாரதேல்ல.ஸைடு பார் ஏதும் வாரதுல்ல. என்னய போயி சமத்தூஊஊஊஊ ன்னு சொல்லி போட்டீக. எங்கட அம்மி மட்டும் இத பாத்திச்சி கையில கட்டய தூக்கிகிட்டு ஓடியாந்துகிடும். வாய்க்கு வாயி மக்கு மக்குனே சொல்லிகிடும்.

   Delete
  9. mru December 23, 2015 at 12:48 PM

   //குருஜி............. 100-- கமண்டு வந்துபோட்டுது. ஹையோ இந்த மின்னுக்கு வந்த சந்தோசத்த வார்த்தேல சொல்லிகின ஏலலியே.//

   இதுக்கெல்லாம் என் பேரன்புக்குரிய சிநேகிதி பூந்தளிர் சிவகாமியே காரணமாக்கும். அவங்க ’மின்னலு’வுக்கு உதவிசெய்ய, சேலையை வரிஞ்சுக்கட்டிக்கிட்டு 96-இல் கொண்டுவந்து நிறுத்தினாங்க. நான் அதை கெட்டியாப் புடிச்சுக்கிட்டு 100 ஆக்கிப்போட்டேன்.

   //பெரிய கம்ப்யூட்டருல வாரதெல்லா மொபைலுல வாரதேல்ல. ஸைடு பார் ஏதும் வாரதுல்ல.//

   ஆமாம், எப்போதுமே பெருசு பெருசுதான்....... பொடிசு பொடிசுதான் .......

   மொபைல் என்பது நம் ’மின்னலு’வைப்போலவே ..... குட்டியூண்டு வெள்ளரிசிப்பிஞ்சு போலவே :)

   //என்னய போயி சமத்தூஊஊஊஊ ன்னு சொல்லி போட்டீக. எங்கட அம்மி மட்டும் இத பாத்திச்சி கையில கட்டய தூக்கிகிட்டு ஓடியாந்துகிடும். வாய்க்கு வாயி மக்கு மக்குனே சொல்லிகிடும்.//

   இங்கு நம் அதிரடி அதிரா ஸ்டைல் ஆரம்பிச்சுடுச்சு :)
   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மின்னலு.

   அன்புடன் குருஜி

   Delete
 27. வாழ்த்துகள் மெஹருன்னிஸாவுக்கு;பரிசளித்த உங்களுக்கு சலாம்!

  ReplyDelete
  Replies
  1. சென்னை பித்தன் December 22, 2015 at 7:54 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //வாழ்த்துகள் மெஹருன்னிஸாவுக்கு; பரிசளித்த உங்களுக்கு சலாம்!//

   மாலே கும் சலாம் சார் ! :)

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி சார்.

   Delete
  2. நன்றிங்க சார்.

   Delete
 28. 100-- பின்னூட்டங்கள் பெற்ற சாதனையாளர் வாழ்க வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... December 23, 2015 at 2:34 PM

   //100-- பின்னூட்டங்கள் பெற்ற சாதனையாளர் வாழ்க வாழ்க.//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி !

   இதெல்லாம் சர்வ சாதாரண விஷயங்கள் என்பதைக் கீழ்க்கண்ட என் பதிவுகளின் இறுதியில் காட்டப்பட்டுள்ள புள்ளிவிபரங்களைப் போய்ப்பார்க்கவும்.

   http://gopu1949.blogspot.in/2015/03/4.html
   http://gopu1949.blogspot.in/2015/03/5.html
   http://gopu1949.blogspot.in/2015/03/6.html
   http://gopu1949.blogspot.in/2015/03/7.html
   http://gopu1949.blogspot.in/2015/03/8.html
   http://gopu1949.blogspot.in/2015/03/8.html
   http://gopu1949.blogspot.in/2015/03/10_26.html
   http://gopu1949.blogspot.in/2015/03/11_27.html
   http://gopu1949.blogspot.in/2015/03/120104.html
   http://gopu1949.blogspot.in/2015/03/120204.html
   http://gopu1949.blogspot.in/2015/03/120304.html
   http://gopu1949.blogspot.in/2015/03/120404.html

   அன்புடன் VGK

   Delete
  2. ஸார் நான் 100--பின்னூட்டம்பெற்றவர் என்று குறிப்பிட்டது செல்வி முருகுவை நினைத்துதான். இதுவரை 6-- சாதனையாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க. இவங்க பதிவுக்கு தானே இவ்வளவு பின்னூட்டம் வந்திருக்கிறது. அதான் அவங்கள நெனச்சு தான் சொல்லி இருந்தேன். உங்களுக்கு 100-----200--- பின்னூட்டங்கள் கிடைப்பது சர்வ சாதாரண விஷயமாக இருக்கலாம். இந்த பதிவும் நீங்க போட்டதுதான் அந்த பெண்ணுக்கு இது ஒரு பெரிய பெருமையில்லையா. அதைத்தான் சொல்லி இருந்தேன் நீங்க இங்க அனுப்பி இருக்கும் லிங்க இங்க க்ளிக் பண்ணினா ஓபன் ஆறதில்லயே.

   Delete
  3. VGK >>>>> ஸ்ரத்தா, ஸபுரி... (2)

   நான் இதுவரை வெளியிட்டுள்ள என் 800 பதிவுகளில், பின்னூட்டங்களில் இதுவரை செஞ்சுரி போட்ட பதிவுகளின் எண்ணிக்கையே ஐம்பது (50) உள்ளன என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   99 Comments க்குள் உள்ளவை = 700 பதிவுகள்

   100 Comments to 200 Comments = 46 பதிவுகள்

   201 Comments to 289 Comments = 04 பதிவுகள்

   கமெண்ட்ஸ் ஏதும் கிடைக்காத பதிவுகள் பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு பார்த்தாலும் ஏதும் கிடைக்கவே இல்லை. :)

   இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் VGK

   Delete
  4. ஸ்ரத்தா, ஸபுரி... December 23, 2015 at 3:39 PM

   வாங்கோ .... மீண்டும் வருவீர்கள், அதனால் தங்களின் பின்னூட்ட எண்: 108 என்ற சிறப்பினைப் பெறும் என நான் எதிர்பார்த்துத்தான் அவ்வாறு எழுதி தங்களை உசிப்பி விட்டிருந்தேன்.

   தங்களின் 108வது அதிர்ஷ்டம் வாய்ந்த பின்னூட்ட எண்ணுக்கு என் மகிழ்ச்சிகளும் நன்றிகளும் :)

   //ஸார் நான் 100--பின்னூட்டம்பெற்றவர் என்று குறிப்பிட்டது செல்வி முருகுவை நினைத்துதான். இதுவரை 6-- சாதனையாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க. இவங்க பதிவுக்கு தானே இவ்வளவு பின்னூட்டம் வந்திருக்கிறது. அதான் அவங்கள நெனச்சு தான் சொல்லி இருந்தேன்.//

   புரிகிறது. நன்றாகவே புரிகிறது. ஏற்கனவே இவர்களின் உருக்கமான நேயர் கடிதத்திற்கும்கூட இதுவரை 133 பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன.

   நம் ‘முருகு’ என்னும் ’மின்னலு’ இந்த விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டக்காரிதான். :)

   //உங்களுக்கு 100-----200--- பின்னூட்டங்கள் கிடைப்பது சர்வ சாதாரண விஷயமாக இருக்கலாம். இந்த பதிவும் நீங்க போட்டதுதான் அந்த பெண்ணுக்கு இது ஒரு பெரிய பெருமையில்லையா. அதைத்தான் சொல்லி இருந்தேன்.//

   நிச்சயமாக இது அந்தப்பெண்ணுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமைதான். அந்தப்பெருமையைத் தங்கள் வாயால் சொல்லி அனைவரும் இங்கு கேட்க வேண்டும் என விரும்பி நாம் நடத்திய நாடகமே இது. :)))))

   //நீங்க இங்க அனுப்பி இருக்கும் லிங்க இங்க க்ளிக் பண்ணினா ஓபன் ஆறதில்லயே.//

   சில சமயம் அப்படியே க்ளிக்கினால் ஓபன் ஆகாது. தனியே Copy & Paste போட்டோ, அல்லது தவறு இல்லாமல் புதிதாக டைப் செய்தோ பார்த்தால் நிச்சயமாக அந்த இணைப்புக்குச் செல்ல முடியும்.

   மீண்டும் தங்களுக்கு என் நன்றிகள். - VGK

   Delete
 29. இவரைக் குறித்து ஏற்கெனவே படித்துப் பின்னூட்டமும் இட்ட நினைவு. இவர் வாழ்வில் சாதிக்க நினைத்தவை அனைத்தையும் அடைய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கம்மா எங்கட நேயர் கடதாசிலயும் வாழ்த்து சொல்லினிங்க இங்கிட்டும் வந்துபிட்டு வாழ்த்துசொல்லினிங்க நன்றிகள்.

   Delete
  2. வாங்கம்மா எங்கட நேயர் கடதாசிலயும் வாழ்த்து சொல்லினிங்க இங்கிட்டும் வந்துபிட்டு வாழ்த்துசொல்லினிங்க நன்றிகள்.

   Delete
 30. Geetha Sambasivam December 23, 2015 at 2:42 PM

  வாங்கோ மேடம், வணக்கம்.

  //இவரைக் குறித்து ஏற்கெனவே படித்துப் பின்னூட்டமும் இட்ட நினைவு. இவர் வாழ்வில் சாதிக்க நினைத்தவை அனைத்தையும் அடைய வாழ்த்துகள்.//

  ஆமாம், இவர் எழுதியிருந்த உருக்கமான நேயர் கடிதம் ஒன்றைப் படிச்சுட்டு நீங்க பின்னூட்டமிட்டிருந்தீர்கள். இதோ அதனைக் கீழே அப்படியே காட்டியுள்ளேன்:

  -=-=-=-=-=-

  Ref: http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

  Geetha Sambasivam November 12, 2015 at 2:10 PM
  செல்வி மெஹருன்னிசாவின் கடிதம் மனதை நெகிழ வைத்தது. அவர் சி.ஏ. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி அடைந்துப் பொருளாதார நிலையிலும் உயர்வு அடைய மனமார்ந்த வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அவர் அண்ணாவின் நிலையும் உயர வேண்டும். அவர் அம்மாவுக்குத் தட்டாமல் குட் டே பிஸ்கட்டுகள் கிடைக்க வேண்டும். அவருக்காகத் தேடி அலைந்து பார்க்கர் பேனா வாங்கிக் கொடுத்த உங்கள் மேன்மை சிலிர்க்க வைக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  -=-=-=-=-=-

  இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் என் அன்பு நன்றிகள், மேடம்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 31. எண்ணூறாம் பதிவுக்கு வாழ்த்துகள் வாத்யாரே!! முருகு பொண்ணுக்கும் நல்வாழ்த்துகள்!!! வாத்யாரோட 800ம் பதிவு உங்களுக்கு அமஞ்சது அதிர்ஷ்டம்தான்!!! அப்புடியே வாத்யாரோட கனவும் சீக்கிரமே பலிக்கட்டும்!!!

  ReplyDelete
  Replies
  1. RAVIJI RAVI December 23, 2015 at 8:38 PM

   வாங்கோ வாத்யாரே, வணக்கம்.

   //எண்ணூறாம் பதிவுக்கு வாழ்த்துகள் வாத்யாரே!! //

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //முருகு பொண்ணுக்கும் நல்வாழ்த்துகள்!!! வாத்யாரோட 800ம் பதிவு உங்களுக்கு அமஞ்சது அதிர்ஷ்டம்தான்!!! அப்புடியே வாத்யாரோட கனவும் சீக்கிரமே பலிக்கட்டும்!!!//

   :) நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி. :)

   :) கனவெல்லாம் கரெக்டா பலிச்சுடும் ! :)

   அன்புடன் VGK

   Delete
  2. வாங்க ரவிஜி சார் வாழ்த்துக்கு நன்றி டவுட்டே இல்லீங்கோ. எங்கட குருஜி என்னய அதிஸ்டகாரி ஆக்கி போட்டாக. குருஜி நன்றிங்க.

   Delete
 32. முதலில் 800ஆவது பதிவுக்கு என் வாழ்த்துகள்!
  //கல்லூரியில் படிக்கும் மாணவியான இவர்
  மிகவும் தயக்கத்துடனும், மிகவும் தாமதமாகவும்
  இந்தப்போட்டியில் கலந்துகொண்டார்.//

  எண்ணித் துணிக என்பதற்கேற்ப தங்களின் ஊக்கமும் துணையிருக்க எண்ணியாங்கு எய்திவிட்டார் செல்வி முருகு அவர்கள்!
  //திடீரென்று அதிர்ஷ்டவசமாக
  செல்வி. முருகு .... திருமதி. முருகு ஆகிவிடும்
  இனிய சூழ்நிலை ஏற்படுகிறது.

  பெரிய இடத்து மாப்பிள்ளை ....
  இதுவரை மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்த
  நம் முருகுவுக்கு
  வெளிநாட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழும்
  சந்தர்ப்பம் சாதகமாக அமைகிறது.//மகிழ்ச்சியான செய்தி!
  தங்களின் ஆசிகளுடனும், எல்லோருடைய வாழ்த்துகளுடன் இன்புற்றுவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ, வணக்கம்.

   //முதலில் 800ஆவது பதிவுக்கு என் வாழ்த்துகள்!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   **கல்லூரியில் படிக்கும் மாணவியான இவர்
   மிகவும் தயக்கத்துடனும், மிகவும் தாமதமாகவும்
   இந்தப்போட்டியில் கலந்துகொண்டார்.**

   //எண்ணித் துணிக என்பதற்கேற்ப தங்களின் ஊக்கமும் துணையிருக்க எண்ணியாங்கு எய்திவிட்டார் செல்வி முருகு அவர்கள்!//

   ஆம். உண்மைதான். தங்களின் இந்தக் கருத்துக்கள் மகிழ்வளிக்கின்றன.

   **திடீரென்று அதிர்ஷ்டவசமாக செல்வி. முருகு .... திருமதி. முருகு ஆகிவிடும் இனிய சூழ்நிலை ஏற்படுகிறது. பெரிய இடத்து மாப்பிள்ளை .... இதுவரை மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்த நம் முருகுவுக்கு வெளிநாட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழும் சந்தர்ப்பம் சாதகமாக அமைகிறது**

   //மகிழ்ச்சியான செய்தி! தங்களின் ஆசிகளுடனும், எல்லோருடைய வாழ்த்துகளுடன் இன்புற்றுவாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!//

   மிகவும் வெள்ளந்தியான நல்ல பொண்ணு. நிச்சயமாக அவள் இன்புற்று இனிதே வாழ வேண்டும். தங்களின் பிரார்த்தனைகளுக்கு என் கூடுதல் நன்றிகள். - VGK

   Delete
  2. சேஷாத்ரி சாரு வாழ்த்துக்கு நன்றி

   Delete
 33. சாதனையாளர் முருகு அவர்களுக்கு வாழ்த்துகள். 100-- பின்னூட்டங்கள் மேல வந்திருக்கே யாரு என்ன சொல்லி இருக்காங்கன்னு எல்லா பின்னுட்டமும் பொறுமையா படிச்சேன். உங்கட குருஜி நீங்க பூந்தளிர் மேடம்லாம் செம கலக்கல் பண்ணி இருக்கீங்க. ஒங்க பின்னூட்டம் வெகு சுவாரசியம். வாழ்த்துகள் முருகு. ஆமா எப்ப கல்யாண விருந்து தருவீங்க.

  ReplyDelete
 34. சரணாகதி சார் வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சரணாகதி ஸ்ரீவத்ஸன் சார், வணக்கம்.

   //உங்கட குருஜி, நீங்க, பூந்தளிர் மேடம்லாம் செம கலக்கல் பண்ணி இருக்கீங்க.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பூந்தளிரும், முருகுவும் சரியான ஆசாமிகள். அதனால்தான் எங்களால் இப்படிக்கூட்டணியாக செம கலக்கல் செய்ய முடிகிறது. :)

   //ஆமா எப்ப கல்யாண விருந்து தருவீங்க.//

   நமக்கெல்லாம் விருந்து உண்டோ இல்லையோ ..... விரைவில் முருகுவுக்குக் கல்யாணம் நடக்கப்போவது சர்வ நிச்சயம் :) எப்படியோ முருகு சந்தோஷமாக செளக்யமாக, கலகலப்பாக இருந்தால் நமக்கு OK தான்.

   அன்புடன் VGK

   Delete
 35. சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹருன்நிஸா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. சிவ சிவ வாழ்த்துக்கு நன்றிங்க.

   Delete
  2. siva siva December 26, 2015 at 11:09 AM

   //சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹருன்நிஸா அவர்களுக்கு வாழ்த்துகள்.//

   சிவ சிவா ! மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

   Delete
 36. இப்போட்டியில் கலந்துகொண்டு பரிசுபெற்ற அதிர்ஷ்டம், அவருக்கு வாழ்க்கையிலும் அற்புதமானதொரு பரிசை வழங்கியுள்ளது. செல்வி மெஹ்ருன்னிசா அவர்களுக்கு நல்லதொரு மணவாழ்க்கை அமைய இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கீதமஞ்சரி மேடம் வாழ்த்துக்கு நன்றிங்க. ஆமுங்கோ குருஜி என்னிய அதிஸ்டகாரி ஆக்கிபோட்டாக. நன்றி குருஜி.

   Delete
  2. கீத மஞ்சரி December 27, 2015 at 9:35 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இப்போட்டியில் கலந்துகொண்டு பரிசுபெற்ற அதிர்ஷ்டம், அவருக்கு வாழ்க்கையிலும் அற்புதமானதொரு பரிசை வழங்கியுள்ளது. செல்வி மெஹ்ருன்னிசா அவர்களுக்கு நல்லதொரு மணவாழ்க்கை அமைய இனிய வாழ்த்துகள்.//

   மிகவும் சந்தோஷம், மகிழ்ச்சி. அன்பான வருகைக்கும் அழகான நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம். !

   பிரியமுள்ள கோபு

   Delete
 37. சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹ்ருன்னிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். எவ்வளவு அழகான கொச்சை தமிழில் நேயர் கடிதம் சூப்பரா எழுதி இருக்காங்க.

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco December 27, 2015 at 10:23 AM

   வாங்கோ, வணக்கம்.

   //சாதனையாளர் விருது வென்ற செல்வி மெஹ்ருன்னிஸா அவர்களுக்கு வாழ்த்துகள். எவ்வளவு அழகான கொச்சை தமிழில் நேயர் கடிதம் சூப்பரா எழுதி இருக்காங்க.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 38. ஒங்கட பேரு எப்பூடி சொல்லிகிடோணும்னுபிட்டு வெளங்கி கிட ஏலலியே. வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 39. ஸார்........ என்னாது இது..... ஹப்பா...... எவ்வளவு பின்னூட்டங்கள் அதுவும் உங்க ரெண்டு சண்டி குதிரைகளும் தூள் கெளப்பி இருக்காங்க
  வெரி இன்ட்ரஸ்டிங். பூந்தளிர் மேடம் சொல்லி இருப்பது போல மின்னலுவின் தமிழ் ரொம்பவே இம்சை படுத்துது...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. March 29, 2016 at 12:59 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஸார்........ என்னாது இது..... ஹப்பா...... எவ்வளவு பின்னூட்டங்கள் அதுவும் உங்க ரெண்டு சண்டி குதிரைகளும் தூள் கெளப்பி இருக்காங்க
   வெரி இன்ட்ரஸ்டிங்.//

   இதைவிட, மற்றொரு பதிவில் இருவரும், சண்டைக்கோழிகளாக மாறி, சேலையை வரிஞ்சுக் கட்டிக்கிட்டு, குழாயடி சண்டையே போட்டுக்கொண்டிருப்பார்கள்.

   அதன் இணைப்பினைத் தேடி பிறகு உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

   //பூந்தளிர் மேடம் சொல்லி இருப்பது போல மின்னலுவின் தமிழ் ரொம்பவே இம்சை படுத்துது...//

   அது கொச்சைத்தமிழ். குழந்தை பேசும் மழலைபோல. நாமதான் கஷ்டப்பட்டுப் புரிந்துகொள்ளணும். உதாரணமாக ’வாய்விட்டு பலக்கச் சிரித்தேன்’ என்பதை ’சிரிப்பாணி பொத்துக்கிச்சு’ என்பார்கள்.

   இதைப்படிக்கும் எனக்கும், நம்மாளு பூந்தளிருக்கும்கூட உடனே சிரிப்பாணி பொத்துக்கொள்ளும்.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றீங்கோ. அன்புடன் VGK

   Delete
  2. VGK >>>>> சிப்பிக்குள் முத்து (2)

   http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_27.html
   இந்த மேற்படி பதிவையும் இதிலுள்ள 59 கமெண்ட்ஸ்களையும் தயவுசெய்து படியுங்கோ. இதில் தான் இவர்களின் குழாயடிச் சண்டையே உள்ளது. அதுபற்றியே வேடிக்கையாக வேறு ஒருவர் கமெண்ட் போட்டு இருக்கிறார். அதையும் படியுங்கோ. :) - VGK

   Delete
 40. //விடியற்காலம் நான் ’வசந்தம்’ வீசிடும் ஓர் கனவு கண்டேன்.

  திடீரென்று அதிர்ஷ்டவசமாக செல்வி. முருகு .... திருமதி. முருகு ஆகிவிடும் இனிய சூழ்நிலை ஏற்படுகிறது.

  பெரிய இடத்து மாப்பிள்ளை .... இதுவரை மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்த நம் முருகுவுக்கு வெளிநாட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழும் சந்தர்ப்பம் சாதகமாக அமைகிறது.

  அவருக்கான இந்தப் பரிசுத் தொகையை, புதுமண ஜோடியாக வருகை தந்து, நேரிலேயே என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு
  என் ஆசியுடன் விமானத்தில் ஏறிச் செல்கிறார்கள்.

  மொத்தத்தில் இந்தப்பொண்ணு தன் ஸீ.யே படிப்பில் சேரும் முன்பே தாயே ஆகிவிடும் வாய்ப்பு அமைந்து விடும் என்பதை நினைக்க எனக்கு மிகவும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

  வாழ்க்கையில், பருவ வயதில் உள்ள ஒரு பொண்ணுக்கு
  இதுவும் (நிக்காஹ்) மிக மிக முக்கியம் தானே!

  நான் கண்ட இந்தக்கனவு, நனவாகி முருகு மகிழ்ச்சியுடனும்
  மலர்ச்சியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன் !//

  என் கனவு ஆறே மாதத்தில் நனவாகியுள்ளது. :)

  நம் முருகுவின் நிக்காஹ் வரும் 03.07.2016 ஞாயிறு அன்று சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  மின்னலு முருகுவுக்கு நம் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 41. இந்த வெற்றியாளர் முருகுவுக்கான பரிசுத்தொகை, சாதனையாளர் விருது பத்திரம், பேனாக்கள் போன்ற அனைத்தும், தற்சமயம் மஸ்கட்டில் இருக்கும் நம் முருகுவின் கைகளுக்கு 06.05.2017 அன்று கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டன.

  இவைகள் யாவும் தனக்குக் கிடைக்கப்பெற்ற முருகு மகிழ்ச்சியுடன் இன்று தன் ’வசந்தம்’ வலைத்தளத்தினில், நான்கு புதிய பதிவுகள் வெளியிட்டு இருக்கிறாள்.

  அதில் ஒன்று மட்டுமே பதிவாக எழுத்தில் (கொச்சைத்தமிழில்) உள்ளது. மீதி மூன்றும் வெறும் படங்கள் மட்டுமே.

  அவளின் இன்றைய பதிவுக்கான இணைப்புகள்:

  1) http://httpvasantham.blogspot.in/2017/05/blog-post_7.html

  2) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_5.html

  3) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_7.html

  4) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji.html

  இது அனைவரின் தகவல்களுக்காக மட்டுமே.

  ReplyDelete