About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, March 26, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 7



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் நம் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  




11) ’வேள்வித்தீ’ 
எம்.வி.வெங்கட்ராம்
[பக்கம் 68 முதல் 76 வரை]


எம்.வி.வி.  இவரும் கும்பகோணத்துக்காரர் தான். தி.ஜா.வுடன் நெருங்கிப் பழகியவர்.   இவர் எழுதிய ’காதுகள்’ என்ற நாவலைப் பற்றி ஜீவி விவரிக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. மஹாபாரத்தில் மாதவி என்பவரைப் பற்றி  ஒரு துணைக்கதை வருகிறதாம். நான் படித்ததில்லை.  அந்த மாதவி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு எம்.வி.வி. அவர்கள் எழுதிய 'நித்ய கன்னி' நாவலைப் பற்றி ஜீவி பிரமாதப்படுத்துகிறார்.  இவர் எழுதி இருப்பதைப் படித்து விட்டு அந்த ’நித்ய கன்னி'  நாவலை வாங்கிப் படித்தே ஆக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கு. பார்க்கலாம்.

ஒரு நாவல் மாதிரி மற்றொன்று இருக்கக்கூடாது என்பதில் கவனம் கொண்டவர் எம்.வி.வி. ‘நித்தியகன்னி’ போலவே சாகித்ய அகாதமி விருது பெற்ற ‘வேள்வித்தீ’, அவர் கொண்டிருந்த எண்ணத்தையே பிரதிபலிக்கிறது.


’வேள்வித்தீ’யில் ஓர் இடம்

கண்ணனின் மனைவி கெளசலையின் தோழி ஹேமா, இளம் விதவை. வசதியான குடும்பம். ஹேமா தன் சகோதரர்களுடன் வாழ்ந்து வருபவள். கெளசலையின் வீட்டுக்கு ஹேமா அடிக்கடி வரப்போக, சிலந்தி வலையில் சிக்கிய ஈயாகிறான் கண்ணன். ஒருநாள், கண்ணனின் மீதான அவளின் மோகத்தினால் அந்தக் கூத்தும், கண்ணன் வீட்டிலேயே நிறைவேறி நிகழ்ந்தும் விடுகிறது. 

வெளியே போயிருந்த கெளசலை அகஸ்மாத்தாக அந்த நேரத்தில் வீட்டினுள் நுழைய, கலைந்த ஆடையுடன் வெளியேறும் ஹேமாவைப் பார்த்து துணுக்குறுகிறாள்.  

பிறகு என்ன ஆச்சு ? 
ஜீவியின் நூலைப் படித்தாப் போச்சு! 





12) மனித நேயர் 
தி. ஜானகிராமன்
[பக்கம் 77 முதல் 85 வரை]



தி.ஜா. என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் தமிழுக்குக் கிடைத்த அற்புத எழுத்தாளர் என்று ஜீவி அவரை தம் எழுத்துக்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். சினிமாவாக வந்த ’மோகமுள்’ பலருக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.  பாபு, யமுனா, ரங்கண்ணா என்று இந்த ’மோகமுள்’ கதையில் வரும் பாத்திரங்களை ஜீவி நமக்கு தெளிவாக அறிமுகப்படுத்துகிறார்.

தி.ஜா.வின்  பாயசம் என்ற சிறுகதையைப் பற்றி ஜீவி எழுதியிருப்பதைப் படித்த பொழுது கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படமும் 'சுந்தரி நீயும்..' பாட்டும் என் நினைவுக்கு வந்தது. இந்த பாயசம் சிறுகதையில் விவரிக்கும் மாதிரி அந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. சினிமாவில் கல்யாண சாம்பாரில் மீன் துள்ளி விழுந்து விடுவதாகக் காட்டப்படுகிறது. தி.ஜா.வின் கதையில் கல்யாண பாயசத்தில் எலி விழுந்து விடுவதாக ஒரு ஜோடுத்தவலை (ஜோடுத்தவலை = மிகப்பெரிய அடுக்கு போன்றதோர் பாத்திரம்) பாயசத்தைக் கவிழ்த்து விடுகிறார் பொறாமை பிடித்த ஒருவர். ஜீவி இந்தக் கதையை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கும் விதமும் அனுபவித்துப் படிக்கிற மாதிரி நன்றாக இருக்கிறது.

’சிவப்பு ரிக்‌ஷா’வும், சாகித்ய அகாதமி பரிசுபெற்ற ‘சக்திவைத்ய’மும் இவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். இயற்கையின் கொடையை சலிக்காமல் வர்ணிப்ப்பதில் மனிதர் மன்னன். இயற்கையை நேசித்த மஹாகலைஞனான தி.ஜா. தஞ்சைத்தரணியைச் சேர்ந்தவர். அவர் கதைக்களம் கேட்க வேண்டுமா? அதுபோல ஆட்களை வர்ணிப்பதோ அட்டகாசம். அவருக்கே கை வந்த கலை என்கிறார், ஜீவி. 

இந்த புத்தகத்தை நான் வாங்கியதிலிருந்து கீழே வைக்க மனமில்லை. எத்தனை எழுத்தாளர்கள்! எத்தனை கதைகள்!!  இந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து என் ஓய்வு நேரம் பயனுள்ளதாகக் கழிவதாக அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.





இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்

  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 
  
   வெளியீடு: 28.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

42 comments:

  1. நித்ய கன்னி நாவல் பற்றி படிக்க எனக்கும் ஆவல் உண்டு. எம் வி வி சிறுகதைத் தொகுப்பு வாங்கி வைத்திருக்கிறேன். படிக்க வேண்டும். மனம் மரத்துப் போனது மாதிரி மூன்று நான்கு மாதங்களாய் எதுவும் படிக்கவே ஓடவில்லை.தி,ஜா புத்தகங்களும் அப்படியே. காலம் செல்வதற்குள் படித்து முடிக்க நிறையக் கடன் வைத்திருக்கிறேன். சீக்கிரம் முடிக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். March 26, 2016 at 3:22 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

      //நித்ய கன்னி நாவல் பற்றி படிக்க எனக்கும் ஆவல் உண்டு. எம் வி வி சிறுகதைத் தொகுப்பு வாங்கி வைத்திருக்கிறேன். படிக்க வேண்டும். மனம் மரத்துப் போனது மாதிரி மூன்று நான்கு மாதங்களாய் எதுவும் படிக்கவே ஓடவில்லை.தி,ஜா புத்தகங்களும் அப்படியே.//

      நீங்களாவது காசு கொடுத்து இவைகளை வாங்கிக் குவித்துள்ளீர்கள், நம் திருச்சி பதிவர் தி. தமிழ் இளங்கோ அவர்கள் போலவும், ஊஞ்சல் பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் போலவும்.

      என்னிடம் அந்தக் கெட்டப்பழக்கமே என்றுமே இல்லையென்றாலும், என்னிடமே இப்போது நிறைய நூல்கள் சேர்ந்துபோய் விட்டன, வைக்கவே இடம் இல்லாமல். எல்லாமே யார் யாரோ எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்துச் சென்றவை. அவற்றில் பல இன்னும் என்னால் பிரித்துப் பார்க்கப்படாமலேயே உள்ளன, தங்கள் ’எங்கள் ப்ளாக்’ க்ரூப் என்னிடம் 30.01.2015 அன்று கொடுத்துச்சென்ற ’பணம் - பண்டைய ரகசியங்கள்’ என்ற நூல் உள்பட. http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html

      //காலம் செல்வதற்குள் படித்து முடிக்க நிறையக் கடன் வைத்திருக்கிறேன். சீக்கிரம் முடிக்க வேண்டும்!//

      புரிகிறது தங்களின் இந்த ஆதங்கம்.

      பழங்களிலேயேகூட புளிப்பில்லாத ஸ்வீட்டான கொடாரஞ்சு எனப்படும் கமலாரஞ்சு பழம் + பச்சை மோரீஸ் வாழைப்பழம் போன்றவை சாப்பிடவே எப்போதும் எனக்குப்பிடிக்கும். அவற்றை டக்டக்கென்று உரிக்கவும், உரித்ததும் உடனே லபக் லபக்கென்று ருசித்துச் சாப்பிடுவதும் சுலபம் என்பதால். பிடித்தம்தான் என்றாலும் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை போன்றவற்றை உரிக்க சோம்பல் பட்டுக்கொண்டு அப்படியே நான் வைத்திருப்பேன். நூல்களும்கூட அதுபோலத்தான். முதல் பக்கத்தைப் படித்ததும் அடுத்தடுத்து படிக்க சுவாரஸ்யம் + ஆர்வம் ஏற்படுமாறு அவை சுலபமாகவும், சுவையாகவும் எழுதப்பட்டிருக்க வேண்டும், என நினைப்பவன் நான். :)

      பொதுவாகப் படுத்தால் உடனே தூக்கம் வராத நான், தூக்கத்தை சுலபமாக வரவழைப்பதற்காக மட்டுமே சில நூல்களைக் கையில் எடுத்துக்கொள்வதும் உண்டு. :)

      தங்களின் அன்பு வருகைக்கும், மனம் திறந்து சொல்லும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + நன்றி, ஸ்ரீராம். - அன்புடன் VGK

      Delete
  2. எம்.வி.வி அவர்களுடைய படைப்புகளை இதுவரை வாசித்த்தில்லை.. இங்கு தாங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே எனக்கும் அவருடைய எழுத்துகளை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் எழுந்துவிட்டது. தி.ஜா. அவர்களின் பல கதைகளை வாசித்துள்ளேன். அந்த பாயசம் கதை உட்பட.. அவருடைய கதைகளில் இழையோடும் உள்ளார்ந்த உணர்வுகள் வெகு அழகாக வாசகருக்குள்ளும் கடத்தப்பட்டுவிடும்.

    \இந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து என் ஓய்வு நேரம் பயனுள்ளதாகக் கழிவதாக அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.\ உண்மை கோபு சார். அதை எங்களாலும் உணரமுடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி March 26, 2016 at 4:54 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //எம்.வி.வி அவர்களுடைய படைப்புகளை இதுவரை வாசித்ததில்லை.. இங்கு தாங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே எனக்கும் அவருடைய எழுத்துகளை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் எழுந்துவிட்டது.//

      ஆஹா, தங்களின் இந்த ஆர்வம் கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //தி.ஜா. அவர்களின் பல கதைகளை வாசித்துள்ளேன். அந்த பாயசம் கதை உட்பட.. அவருடைய கதைகளில் இழையோடும் உள்ளார்ந்த உணர்வுகள் வெகு அழகாக வாசகருக்குள்ளும் கடத்தப்பட்டுவிடும்.//

      மிக்க மகிழ்ச்சி மேடம் (பாயஸம் சாப்பிட்டுள்ளது உள்பட அனைத்துக்குமே).

      **\இந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து என் ஓய்வு நேரம் பயனுள்ளதாகக் கழிவதாக அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.\** உண்மை கோபு சார். அதை எங்களாலும் உணரமுடிகிறது.//

      :) மிகவும் சந்தோஷம் மேடம். தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  3. இன்று அறிமுகம் செய்திருக்கும் எழுத்தாளர்களில் திரு.ஜானகிராமன் அவர்களை கேள்வி பட்டிருக்கேன்னு நினைக்கிறேன். மோகமுள் சினிமாவாக
    வந்ததால் சிலபேருக்கு நினைவில் இருக்கு. மரப்பசு, அம்மாவந்தாச்சு என்று சிலகதைகளும் இவர் எழுதியதுதான் என்று நினைக்கிறேன். ஜி.வி. ஸார் அழகாக சொல்லி வருகிறார்கள்.இன்னொருவரைப்பற்றி தெரியலை. இன்னும் நிறயபேர்களைத் தெரிந்து கொள்ளத்தானே போகிறோம். வெயிட&அண்ட் ஸீ...தான்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 26, 2016 at 5:07 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்று அறிமுகம் செய்திருக்கும் எழுத்தாளர்களில் திரு.ஜானகிராமன் அவர்களை கேள்வி பட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.//

      கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டுள்ளதாக நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? :)

      //மோகமுள் சினிமாவாக வந்ததால் சிலபேருக்கு நினைவில் இருக்கு.//

      ’மோகமுள்’ சினிமாவாக வந்ததால் சிலபேருக்கு நினைவில் இருக்கும் / இருக்கலாம் >>>>> OK.

      //மரப்பசு, அம்மாவந்தாச்சு என்று சிலகதைகளும் இவர் எழுதியதுதான் என்று நினைக்கிறேன்.//

      இருக்கலாம்.

      //ஜீ.வி. ஸார் அழகாக சொல்லி வருகிறார்கள்.//

      சந்தோஷம்.

      //இன்னொருவரைப்பற்றி தெரியலை.//

      அதனால் பரவாயில்லை.

      //இன்னும் நிறயபேர்களைத் தெரிந்து கொள்ளத்தானே போகிறோம். வெயிட் & அண்ட் ஸீ...தான்...//

      யெஸ் யெஸ் .... ஓக்கே ஓக்கே ....

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  4. இன்றும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத்தெரிந்துகொள்ள முடிந்தது.இவர்கள் எழுதியவை எல்லாம் தேடித்தேடிப் படிக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் March 26, 2016 at 5:12 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இவர்கள் எழுதியவை எல்லாம் தேடித்தேடிப் படிக்கணும்.//

      மிக்க மகிழ்ச்சி+மிக்க நன்றி. தேடித்தேடி படியுங்கோ:)

      Delete
  5. இன்றயபிரபலங்களுக்கு வாழ்த்துகள்.இவர்களுடைய எழுத்துக்கள் எதுவும் படிக்க வாய்ப்பு இதுவரையில் கிடைக்கலை. வாய்ப்பு நம்மைத்தேடி வருமா என்றிராமல் நாம்தான் ஏற்படுத்திக்கொள்ளணும்....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. March 26, 2016 at 5:27 PM

      அடேடே, வாங்கோம்மா, வணக்கம்.

      //இன்றைய பிரபலங்களுக்கு வாழ்த்துகள்.//

      சந்தோஷம்.

      //இவர்களுடைய எழுத்துக்கள் எதுவும் படிக்க வாய்ப்பு இதுவரையில் கிடைக்கலை.//

      அதனால் என்ன? பரவாயில்லீங்க.

      //வாய்ப்பு நம்மைத்தேடி வருமா என்றிராமல் நாம்தான் ஏற்படுத்திக்கொள்ளணும்....//

      அதுவும் சரிதான். தங்களைத் தேடியே வரும் என நான் நினைக்கிறேன். இல்லாட்டி நீங்க சொல்வதுபோல நீங்களே ஏற்படுத்திக்கொள்ளுங்கோ. :)

      தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்கோ.

      Delete
  6. நல்ல அறிமுகங்கள்.மஹாபாரதத்தில் நமக்கு தெரியாத கிளைக்கதைகளநிறைய இருக்குபோல இருக்கே.கற்றது கையளவுதான்.கல்லாததூ உலகளவு.

    ReplyDelete
    Replies
    1. srini vasan March 26, 2016 at 5:49 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்ல அறிமுகங்கள்.//

      சந்தோஷம்.

      //மஹாபாரதத்தில் நமக்கு தெரியாத கிளைக்கதைகள் நிறைய இருக்குபோல இருக்கே.//

      எக்கச்சக்கமாகவே உள்ளன. அதனால் தான் அதன் பெயர்:

      ம ஹா பா ர த ம்.

      //கற்றது கையளவுதான். கல்லாதது உலகளவு.//

      ஆமாம். கரெக்ட்.

      தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete

  7. இன்றைக்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் திரு எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் கதைகளைப் படித்ததில்லை.மகாபாரதத்தில் வரும் துணைக் கதையில் வரும் மாதவி என்ற ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவர் எழுதியுள்ள ‘நித்யகன்னி’ என்ற நாவலை திரு ஜீ.வி அவர்கள் பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லி அதை படிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளீர்கள். அதோடு ‘வேள்வித்தீ’ யின் கதையை படிக்கும் ஆவலையும் தூண்டியுள்ளீர்கள். அவசியம் அந்த நாவல்களைப் படிப்பேன்.

    திரு தி ஜானகிராமன் அவர்களின் படைப்புகள் என் அண்ணனால் முன்பே எனக்கு அறிமுகமானவை அவரது ‘அம்மா வந்தாள்’ மற்றும் ‘மோக முள்’ நாவல்களையும் அவரது ‘சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை தொகுப்பையும் முன்பே படித்திருக்கிறேன்.எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.என் அண்ணனிடம் இவரது எல்லா படைப்புகளும் இருக்கும்.

    கல்கி அவர்கள் தேவன் அவர்கள் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்களைத் தந்த தஞ்சை மண் இவரையும் தந்ததில் வியப்பென்ன?

    திரு ஜீ வி அவர்களின் நூல் அறிமுகத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி March 26, 2016 at 5:57 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //இன்றைக்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் திரு எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் கதைகளைப் படித்ததில்லை. மகாபாரதத்தில் வரும் துணைக் கதையில் வரும் மாதவி என்ற ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவர் எழுதியுள்ள ‘நித்யகன்னி’ என்ற நாவலை திரு ஜீ.வி அவர்கள் பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லி அதை படிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளீர்கள். அதோடு ‘வேள்வித்தீ’ யின் கதையை படிக்கும் ஆவலையும் தூண்டியுள்ளீர்கள். அவசியம் அந்த நாவல்களைப் படிப்பேன்.//

      தங்களின் இந்த ஆவலுக்கு மிக்க மகிழ்ச்சி, சார்.

      //திரு தி ஜானகிராமன் அவர்களின் படைப்புகள் என் அண்ணனால் முன்பே எனக்கு அறிமுகமானவை அவரது ‘அம்மா வந்தாள்’ மற்றும் ‘மோக முள்’ நாவல்களையும் அவரது ‘சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை தொகுப்பையும் முன்பே படித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். என் அண்ணனிடம் இவரது எல்லா படைப்புகளும் இருக்கும். //

      இவற்றையெல்லாம் தங்கள் மூலம் இங்கு கேட்டு அறியவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //கல்கி அவர்கள் தேவன் அவர்கள் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்களைத் தந்த தஞ்சை மண் இவரையும் தந்ததில் வியப்பென்ன? //

      தஞ்சையும், தஞ்சை மண்ணும் காவிரிக்கரை ஓரமே. வியப்பேதும் இல்லைதான், சார்.

      //திரு ஜீ வி அவர்களின் நூல் அறிமுகத்தை பகிர்ந்தமைக்கு நன்றி! //

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      Delete
  8. எம்.வி.வி படித்ததில்லை.
    தி.ஜா பற்றிய ஜீவியின் கணிப்பு சரியே. பிரமிக்க வைத்த எழுத்து - சமீபத்தில் தான் படிக்கத் தொடங்கினேன்.

    இவர்களின் கதைகளையும் ஜீவி தன் புத்தகத்தில் தொகுத்திருக்கிறாரா அல்லது கதைகளைப் பற்றிய அவருடைய அலசலா?

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை March 26, 2016 at 10:54 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //எம்.வி.வி படித்ததில்லை.//

      அப்படியா! நானும் படித்ததில்லை, சார்.

      //தி.ஜா பற்றிய ஜீவியின் கணிப்பு சரியே. பிரமிக்க வைத்த எழுத்து - சமீபத்தில் தான் படிக்கத் தொடங்கினேன்.//

      சந்தோஷம்.

      //இவர்களின் கதைகளையும் ஜீவி தன் புத்தகத்தில் தொகுத்திருக்கிறாரா அல்லது கதைகளைப் பற்றிய அவருடைய அலசலா?//

      சிலவற்றை மேலாகவும், சிலவற்றை நன்கு ஆழமாக அலசியும் நமக்குச் சொல்லியுள்ளார்.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். - VGK

      Delete
  9. எழுத்தாளப் பெருந்தகை திரு. எம். வி. வெங்கட்ராம் மற்றும்
    எழுத்தாளப் பெருந்தகை திரு. தி. ஜானகிராமன் ஆகிய இருவர்
    பற்றியும் பல புதிய தகவல்கள்..

    நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 26, 2016 at 11:00 PM

      வாங்கோ நண்பரே, வணக்கம்.

      //எழுத்தாளப் பெருந்தகை திரு. எம். வி. வெங்கட்ராம் மற்றும் எழுத்தாளப் பெருந்தகை திரு. தி. ஜானகிராமன் ஆகிய இருவர் பற்றியும் பல புதிய தகவல்கள்..

      நன்றி ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள். அன்புடன் VGK

      Delete
  10. அறிமுகம் தொடரட்டும் நண்பரே ....

    ReplyDelete
    Replies
    1. Ajai Sunilkar Joseph March 27, 2016 at 10:10 AM

      //அறிமுகம் தொடரட்டும் நண்பரே ....//

      வாங்கோ, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
  11. எம்.வி.வி அவர்களின் பல நாவல்களை
    படித்து இருக்கிறேன்.குறிப்பாக
    சௌராஸ்டிர இன மக்கள் குறித்த
    ஒரு நாவல் இன்னும் மனதில் இருக்கிறது
    சட்டென பெயர் நினைவில்லை.
    (அனேகமாக வேள்வித் தீ என நினைக்கிறேன் )
    இயல்பான நடைக்குச் சொந்தக்காராரின்
    கதைகளை மீண்டும் தேடிப்படிக்கவேண்டும்

    தமிழில் மிகப் படித்த எழுத்தாளர்
    என்றால் அவர் தி.ஜா அவர்கள்தான்
    பிடித்த நாவல் எனில் அம்மா வந்தாள்தான்
    அந்த அப்பு கதாபாத்திரம் போல்
    ஒரு கதாபாத்திரத்தை வேறு யாரும்
    இனி சிருஷ்டிக்கச் சாத்தியமே இல்லை

    அவர் சிறுகதைகளும் மிக நேர்த்தியாய்
    அற்புதமாய் இருக்கும்
    ( எங்கும் கோவில் மணிச் சப்தம் கேட்டால்
    அந்தக் காண்டாமணிக் கதை ஞாபகம்
    இன்று வரை வந்து போகிறது )

    அற்புதமான அறிமுகம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani S March 27, 2016 at 7:23 PM

      வாங்கோ Mr. S RAMANI Sir, வணக்கம்.

      //எம்.வி.வி அவர்களின் பல நாவல்களை
      படித்து இருக்கிறேன்.குறிப்பாக
      சௌராஸ்டிர இன மக்கள் குறித்த
      ஒரு நாவல் இன்னும் மனதில் இருக்கிறது
      சட்டென பெயர் நினைவில்லை.
      (அனேகமாக வேள்வித் தீ என நினைக்கிறேன் )
      இயல்பான நடைக்குச் சொந்தக்காராரின்
      கதைகளை மீண்டும் தேடிப்படிக்கவேண்டும்//

      தங்களின் ஞாபகசக்தி மிகவும் அருமை / அபாரம். கும்பகோணத்தைச் சார்ந்த செளராஷ்ட்ர இன தறி நெசவாளர்கள் பற்றி பேசும் கதையேதான் ... வேள்வித்தீ என்பது .... ஜீவி சாரின் நூலின் மூலம்தான் இதை நானும் அறிந்துள்ளேன்.

      >>>>>

      Delete
    2. VGK >>>>> Mr. RAMANI Sir (2)

      தமிழில் மிகப் படித்த எழுத்தாளர் என்றால் அவர் தி.ஜா அவர்கள்தான். பிடித்த நாவல் எனில் அம்மா வந்தாள்தான். அந்த அப்பு கதாபாத்திரம் போல்
      ஒரு கதாபாத்திரத்தை வேறு யாரும் இனி சிருஷ்டிக்கச் சாத்தியமே இல்லை.//

      தாங்கள் சொல்வது மிகச்சரியாகவே உள்ளது.

      ”ஒரே மாதத்தில், வேறு வேலையே இல்லாமல், எழுதுவது என்பதையே வேலையாகக் கொண்டு எழுதினேன்” என்று தி.ஜா. வே குறிப்பிட்ட நாவல் அவரின் ‘அம்மா வந்தாள்’ எனச்சொல்லியுள்ள நம் ஜீவி சார், பாத்திரப் படைப்புக்களை மிகுந்த பொறுப்புடன், ஜாக்கிரதை உணர்வுடன் படைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று மேலும் சொல்கிறார்.

      >>>>>

      Delete
    3. VGK >>>>> Mr. RAMANI Sir (3)

      //அவர் சிறுகதைகளும் மிக நேர்த்தியாய் அற்புதமாய் இருக்கும் (எங்கும் கோவில் மணிச் சப்தம் கேட்டால்
      அந்தக் காண்டாமணிக் கதை ஞாபகம் இன்று வரை வந்து போகிறது.)

      தி.ஜா. அவர்கள் பற்றியும், அவரின் இதுபோன்ற பல மிகச்சிறப்பான படைப்புகள் பற்றியும் 9 பக்கங்களுக்கு இந்த நூலில் பாராட்டிப்பேசப்பட்டுள்ளன.

      //அற்புதமான அறிமுகம். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான பல்வேறு சுவையான தகவல்களுடன் கூடிய கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

      Delete
  12. நாங்களெல்லாம் படித்து அறிந்து கொள்ளவேண்டிய பழம் பெறும் எழுத்தாளர்கள் பற்றி அறிந்தோம். நிச்சயம் இவர்களின் படைப்புகளை படிப்பேன்

    ReplyDelete
    Replies
    1. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று
      March 27, 2016 at 8:10 PM

      //நாங்களெல்லாம் படித்து அறிந்து கொள்ளவேண்டிய பழம் பெறும் எழுத்தாளர்கள் பற்றி அறிந்தோம். நிச்சயம் இவர்களின் படைப்புகளை படிப்பேன்//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  13. வழக்கம் போல லேட் வருகை. இதிலும் ஒரு வசதிதான். பின்னூட்டங்களில் நிறயவிஷயங்களைத்தெரிந்து கொள்ளமுடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... March 28, 2016 at 11:25 AM

      வாங்கோ, வணக்கம்.

      //வழக்கம் போல லேட் வருகை. இதிலும் ஒரு வசதிதான். பின்னூட்டங்களில் நிறைய விஷயங்களைத்தெரிந்து கொள்ளமுடிகிறது.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர்வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK

      Delete
  14. Position as on 27th March 2016 - 11.45 PM

    என் இந்தத்தொடரின் முதல் ஐந்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள

    திருமதிகள்:

    01) ஞா. கலையரசி அவர்கள்
    02) கோமதி அரசு அவர்கள்
    03) கீதா சாம்பசிவம் அவர்கள்
    04) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்

    செல்விகள்:

    05) சிப்பிக்குள் முத்து அவர்கள்
    06) ப்ராப்தம் அவர்கள்

    திருவாளர்கள்:

    07) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்
    08) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
    09) S. ரமணி அவர்கள்
    10) வே. நடன சபாபதி அவர்கள்
    11) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்
    12) ஆல் இஸ் வெல் அவர்கள்
    13) ஸ்ரீனிவாஸன் அவர்கள்
    14) அப்பாதுரை அவர்கள்
    15) தி. தமிழ் இளங்கோ அவர்கள்

    ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதே போன்ற புள்ளி விபரங்கள் முதல் 10 பகுதிகள் முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. இங்கூட்டு எங்கட பேர காங்கலியே... காக்கா கொண்டு போயிடிச்சோ??????

      Delete
  15. எம்.வி.வியின் 'காதுகள்' நாவல் வெளிவந்த போது மிகவும் பிரபலமாயிருந்தது. கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். தி.ஜாவின் மோகமுள், அம்மா வந்தாள் படித்திருக்கிறேன். ஜீவி சாரின் நூலை வாசித்த பிறகு, படிக்க வேண்டிய லிஸ்ட் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. நல்ல படைப்புகளை அறிமுகம் செய்த ஜீவி சாருக்கும், தங்களுக்கும் என் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஞா. கலையரசி March 28, 2016 at 7:48 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //எம்.வி.வியின் 'காதுகள்' நாவல் வெளிவந்த போது மிகவும் பிரபலமாயிருந்தது. கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.//

      தாங்கள் சொல்லும் இதனை என் ’காதுகள்’ஆல் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      -=-=-=-=-

      இந்த இடத்தில் நான் எப்போதோ படித்ததோர் ஜோக் நினைவுக்கு வருகிறது:

      அவன்:
      என் மனைவியிடம் எது சொன்னாலும் அவள் தன் காதுகளில் போட்டுக்கொள்வதே இல்லை :(

      இவன்:
      வைரத்தோடுகள் வாங்கிக் கொடுத்துப்பாரேன். நிச்சயமாக அவற்றைத் தன் காதுகளில் அவள் போட்டுக்கொள்வாள் !!

      -=-=-=-=-

      //தி.ஜாவின் மோகமுள், அம்மா வந்தாள் படித்திருக்கிறேன்.//

      சந்தோஷம்.

      //ஜீவி சாரின் நூலை வாசித்த பிறகு, படிக்க வேண்டிய லிஸ்ட் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.//

      கொஞ்சம் கஷ்டம்தான் புத்தகப்புழுவாகிய உங்களுக்கு. இருப்பினும் இதைக்கேட்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.

      //நல்ல படைப்புகளை அறிமுகம் செய்த ஜீவி சாருக்கும், தங்களுக்கும் என் நன்றி!//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான பல கருத்துப்பகிர்வுகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      Delete
  16. இந்த புத்தகத்தை நான் வாங்கியதிலிருந்து கீழே வைக்க மனமில்லை. எத்தனை எழுத்தாளர்கள்! எத்தனை கதைகள்!! இந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து என் ஓய்வு நேரம் பயனுள்ளதாகக் கழிவதாக அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.//

    படிக்க ஆவலை தூண்டும் விமர்சனம் நிச்சயம் வாங்கி படிக்க வேண்டும். இரு ஆசிரியர்களின் சில கதைகள் படித்து இருக்கிறேன்.
    புத்தக வாசிப்பு கொஞ்சம் குறைந்து இருக்கிறது. மீண்டும் படிக்கும் நினைப்பை தந்த ஜீவி சாருக்கும், உங்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு March 29, 2016 at 7:05 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      **இந்த புத்தகத்தை நான் வாங்கியதிலிருந்து கீழே வைக்க மனமில்லை. எத்தனை எழுத்தாளர்கள்! எத்தனை கதைகள்!! இந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து என் ஓய்வு நேரம் பயனுள்ளதாகக் கழிவதாக அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.**-vgk

      //படிக்க ஆவலை தூண்டும் விமர்சனம் நிச்சயம் வாங்கி படிக்க வேண்டும்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //இரு ஆசிரியர்களின் சில கதைகள் படித்து இருக்கிறேன்.//

      ஆஹா, சந்தோஷம்.

      //புத்தக வாசிப்பு கொஞ்சம் குறைந்து இருக்கிறது.//

      எனக்கும்தான். வாஸ்தவம்தான். வயசாக வயசாக எவ்வளவோ குடும்ப பாரங்களையும், பொறுப்புக்களையும் கவனிக்க வேண்டியுள்ளதே. புத்தக வாசிப்புக்கு பொறுமையும் நேரமும் ஏது?

      //மீண்டும் படிக்கும் நினைப்பை தந்த ஜீவி சாருக்கும், உங்களுக்கும் என் நன்றிகள்.//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், சிறப்பான பல கருத்துப்பகிர்வுகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK

      Delete
  17. இருவருமே அபிமான எழுத்தாளர்கள். அநேகமாய் எல்லாவற்றையும் படித்திருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam March 29, 2016 at 4:46 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இருவருமே அபிமான எழுத்தாளர்கள். அநேகமாய் எல்லாவற்றையும் படித்திருப்பேன்.//

      வெரிகுட். தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  18. ஆகாசத்த நா பாக்குறேன் அப்பூடின்னு சொல்லுதோ பூவு தொட்டிக. ஆரு மண்டலவாவது வுளுந்துடப்போவுதே....வேள்வித்தீ னு கத சொல்லினா முளுக்காச்சும் சொல்லி போடோணும்... நாலு வரில சொல்லிகினா எப்பூடி????

    ReplyDelete
    Replies
    1. mru March 30, 2016 at 10:24 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //ஆகாசத்த நா பாக்குறேன் அப்பூடின்னு சொல்லுதோ பூவு தொட்டிக. ஆரு மண்டலவாவது வுளுந்துடப்போவுதே....//

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. தங்கள் ரசனையும் கவலையும் எப்போதுமே அலாதிதான். :)

      //வேள்வித்தீ னு கத சொல்லினா முளுக்காச்சும் சொல்லி போடோணும்... நாலு வரில சொல்லிகினா எப்பூடி????//

      அப்போதுதான் அதில் ஒரு விறுவிறுப்பும் சஸ்பென்ஸும் இருக்கும். அந்த நூலை வாங்கிப்படித்து மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.

      தங்களின் அன்பான வருகைக்கு நன்றி, முருகு.

      அன்புடன் குருஜி கோபு

      Delete
  19. திஜாவின் மோகமுள், அம்மா வந்தாள் முன்பு வாசித்திருக்கிறேன்....வெங்கட்ராம் வாசித்ததில்லை...எத்தனைபேர் பட்டியலில் இருக்கிறார்கள்...காலத்திற்குள் முடியுமா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. Thulasidharan V Thillaiakathu April 3, 2016 at 4:05 PM

      //தி.ஜா.வின் மோகமுள், அம்மா வந்தாள் முன்பு வாசித்திருக்கிறேன்....வெங்கட்ராம் வாசித்ததில்லை...

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //எத்தனைபேர் பட்டியலில் இருக்கிறார்கள்... காலத்திற்குள் முடியுமா... - கீதா//

      இந்த என் நூல் அறிமுகம் மட்டும் எப்படியும் காலத்திற்குள் (21.04.2016 க்குள்) முடிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. :)

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  20. அன்புள்ள V.G.K. அவர்களுக்கு வணக்கம்! தொடர்ந்து பின்னூட்டம் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டது. எம்விவி எனப்படும் எம்.வி.வெங்கட்ராம் எழுத்துக்களை வாசித்ததில்லை. எனக்குப் பிடித்த மானசீக எழுத்தாளர்களில் தி.ஜானகிராமனும் ஒருவர். அவர் எழுதிய மோகமுள், செம்பருத்தி, அம்மா வந்தாள், மரப்பசு, ரிக்ஷாக்காரன் ஆகிய நூல்களைப் படித்துள்ளேன். (இன்னும் சில கதைகள் நினைவுக்கு வரவில்லை. இந்த கதை மாந்தர்களை அவர் வேறு எங்கிருந்தும் உண்டாக்கவில்லை; நம்முடனேயே இருப்பவர்கள்தான்.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ April 3, 2016 at 10:01 PM

      //அன்புள்ள V.G.K. அவர்களுக்கு வணக்கம்!//

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //தொடர்ந்து பின்னூட்டம் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டது.//

      அதனால் என்ன சார், பரவாயில்லை.

      //எம்விவி எனப்படும் எம்.வி.வெங்கட்ராம் எழுத்துக்களை வாசித்ததில்லை.//

      ஓஹோ. என்னைப்போலவேதான் தாங்களும் போலிருக்கு.

      //எனக்குப் பிடித்த மானசீக எழுத்தாளர்களில் தி.ஜானகிராமனும் ஒருவர். அவர் எழுதிய மோகமுள், செம்பருத்தி, அம்மா வந்தாள், மரப்பசு, ரிக்ஷாக்காரன் ஆகிய நூல்களைப் படித்துள்ளேன். (இன்னும் சில கதைகள் நினைவுக்கு வரவில்லை.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. நிறையவே வாசித்துள்ளீர்கள்.

      //இந்த கதை மாந்தர்களை அவர் வேறு எங்கிருந்தும் உண்டாக்கவில்லை; நம்முடனேயே இருப்பவர்கள்தான்.//

      :) மிகவும் சந்தோஷம். அதனாலேயே மிகச்சுலபமாக வெற்றி பெற்றுள்ளர் :)

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

      Delete