About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, April 7, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 13



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி. 

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  




23) கிருஷ்ணன் நம்பி
காட்டும் உலகம்
[பக்கம் 136 முதல் 142 வரை]



குழந்தைகளுக்காக கிருஷ்ணன் நம்பி  நிறைய எழுதியிருக்கிறாராம். இவரது 'தங்க ஒரு', 'மருமகள் வாக்கு'  என்ற கதைகள் ஜீவியின் வர்ணிப்பில் சொல்லப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு கிருஷ்ணன் நம்பி எழுதிய கடிதங்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ஒரு கடிதத்தில் கிருஷ்ணன் நம்பி எழுதிய  ஒரு கவிதை பற்றியும் ஜீவி எழுதி அந்த கவிதையையும் எடுத்துப் போட்டிருக்கிறார். 

குழந்தைகளுக்கு என்று எழுத ஆரம்பித்தவர் தான் கிருஷ்ணன் நம்பி. அவர் பெரியவர்களுக்காக சில கதைகள் எழுதிய போதும் அவரது குழந்தை மனசு அந்தக் கதைகளில் படிந்திருப்பதாக ஜீவி தகுந்த உதாரணங்களுடன் விளக்குகிறார்.  அதற்காக அவர் கிருஷ்ணன்  நம்பியின் 'தங்க ஒரு' மற்றும் 'மருமகள் வாக்கு' என்ற சிறுகதைகளை எடுத்துக் கொள்கிறார்.

கிருஷ்ணன் நம்பி தனது ‘நீலக்கடல்’ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியுள்ள அழகான முகவுரையை ஜீவி அப்படியே எழுதிக்காட்டியுள்ளார். அதுவே அவரின் ‘குழந்தை மனசை’ நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 

பிரசுரம் கண்ட இவரின் முதல் சிறுகதையும் ‘சுதந்திர தினம்’ என்ற தலைப்பினில் குழந்தைகளைக்குறித்து இவர் எழுதியதே.

’மருமகள் வாக்கு’; ‘சட்டை’; ‘நாணயம்’; ‘கணக்கு வாத்யார்’; ‘சிங்கப்பூர் பணம்’; ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’ போன்ற அழகான சிறுகதைகளும், ‘ஆனை வேண்டுமென்று அழுத’ குழந்தையின் கவிதையும், அம்பிப் பாப்பாவுக்குக் கிடைக்கும் சலுகைகளை நினைத்துப் பார்க்கும் அங்கிச்சிப் பாப்பா கவிதையும் கிருஷ்ணன் நம்பியை நினைக்கும் போதெல்லாம் நம் நினைவில் நிற்கும் என்கிறார், ஜீவி.  

கிருஷ்ணன் நம்பி பிறந்த ஊர் நாஞ்சில் நாட்டு சிற்றூரான அழகிய பாண்டிபுரமாம். கிருஷ்ணன் நம்பிக்கு அவரது  பெற்றோர்கள் வைத்த பெயர், அழகிய நம்பியாம். கிருஷ்ணன் நம்பி பற்றி ஜீவி எழுதியிருப்பதும் அழகாகத் தான் இருக்கிறது.


-oOo-

’தங்க ஒரு’

கதையில், ஊரில் மனைவியை விட்டுவிட்டு, சென்னைக்கு வந்துள்ள கணவன், தான் தங்க ஒரு வாடகை வீடு பார்த்து அலைகிறான். அந்த அனுபவத்தைத் தன் மனைவிக்குக் கடிதமாக எழுதுகிறான்:

அன்புள்ள செல்லா ......

“..... தேனாம்பேட்டைப் பக்கம்தான் போய்க்கொண்டிருந்தேன். ஒரு சந்து, குப்பையும், சேறும், சாக்கடையும், பன்றிக்கூட்டமும் ஒரே அசுத்தக் களஞ்சியமாகத்தான் இருந்தது. மூக்கைக் கழற்றி எறிந்து விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணமிட்டபடி நடந்தேன். அந்தச் சந்தினுள் எப்படித்தான் நுழைந்தேனோ, கால்கள் நடக்கக் கூசின. 

ஆனால் மனிதன் அங்கும் சாப்பிட்டுக்கொண்டு, குழந்தைகுட்டிகளோடு கொஞ்சிக் குலவிக்கொண்டு உட்கார்ந்துதான் இருக்கிறான். என்னத்தைச் சொல்ல........”

நானும் மேற்கொண்டு இங்கு 
என்னத்தைச் சொல்ல ?
ஜீவியின் நூலிலேயே படியுங்கோ !




24) ’தீபம்’ 
நா. பார்த்தசாரதி
[பக்கம் 143 முதல் 146 வரை]





’தீபம்’ என்ற இலக்கிய இதழை தமது சொந்தப் பொறுப்பில் நடத்தியதால் ’தீபம் பார்த்தசாரதி’ என்று அழைக்கப்படலானார்.

ஜீவிக்கும் பார்த்தசாரதிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.  அதனால் தீபம் பார்த்தசாரதி பற்றி சில தனித்தகவல்கள் வேறு இந்த நூலில் கொடுத்திருக்கிறார்.   அந்தக் காலத்தில் தமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு  பூரணி, அரவிந்தன், சத்தியமூர்த்தி என்றெல்லாம் பெற்றோர்கள் பெயர் வைத்தார்களாம். இந்தப் பெயர்கள் எல்லாம் நா.பா. அவர்களின் நாவல் மாந்தர்கள். அந்த அளவுக்கு நா.பா. வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.

சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, விமர்சனம் என்று எழுத்தின் சகல பரிமாணங்களும் கைவரப்பெற்றவர் நா.பா.

‘சாயங்கால மேகங்கள்’ ‘ஆத்மாவின் ராகங்கள்’ ‘நிசப்த சங்கீதம்’ ’சமுதாய வீதி’ ’துளசி மாடம்’ சத்திய வெள்ளம்’ ’சுந்திரக் கனவுகள்’ போன்றவை அவரின் பெயர் சொல்லும் படைப்புகள்.

வரலாற்றுப்பக்கமும் விட்டு வைக்காமல், ‘மணி பல்லவம்’ ‘ராணி மங்கம்மாள்’ ‘பாண்டிமாதேவி’ போன்ற புதினங்களையும் எழுதியுள்ளார். 

இவரது ‘சமுதாய வீதி’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதும், ’துளசி மாடம்’ நூலுக்கு ராஜாசர் அண்ணாமலை பரிசும் வழங்கப்பட்டுள்ளன. 

நா.பா.வின் ’குறுஞ்சி மலர்’ மற்றும் ’பொன்விலங்கு’ ஆகிய நாவல்கள் பற்றியும், அவரது தீபம் பத்திரிகை பற்றியும் ஜீவி நிறைய தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.




இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்



  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:    

 

  
   வெளியீடு: 09.04.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

41 comments:


  1. இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திரு கிருஷ்ணன் நம்பி அவர்களைப்பற்றி இது வரை அறிந்திருக்ககவில்லை. திரு அழ. வள்ளியப்பா போல் இவரும் குழந்தைகளுக்காக எழுதியவர் என அறியும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இனிதான் இவரது படைப்புகளை படிக்கவேண்டும். .

    எழுத்தாளர் நா.பார்த்தசாரதியை அறியாதோர் உண்டோ? இன்னும் சொல்லப்போனால் இவரது குறிஞ்சி மலர் நாவல் தான் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு குறிஞ்சிமலரை அறிமுகப்படுத்தியது என்பது உண்மை. இவரது படைப்பான துளசி மாடத்தை படித்திருக்கிறேன். இவர் எழுத்தாளர் மட்டுமல்ல தலை சிறந்த பேச்சாளரும் கூட. பொள்ளாச்சியில் பணி புரிந்தபோது நான் உறுப்பினராக இருந்த விநாயகர் கலை மன்றத்தில் ‘பறவைகள் பல விதம் என்ற தலைப்பில் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள பறவைகள் பற்றி இவர் உரையாற்றியதை கேட்டு இரசித்திருக்கிறேன்.

    இரு பெரும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய திரு ஜீ,வி அவர்களுக்கும், தங்களுக்கும் பாராட்டுக்கள்!

    அடுத்து அறிமுகப்படுத்தப்பட உள்ள இருவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்

    ReplyDelete
    Replies
    1. //இரு பெரும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய..//

      இரு பெரும் எழுத்தாளர்களை நினைவில் கொண்ட என்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். உண்மையில் சொல்லப்போனால் இப்படியான இந்த எழ்த்தாளர்களின் எழுத்து கொடுத்த சுகத்தில் மையல் கொண்டது தான் இந்தப் புத்தகம் உருவாவதற்கே அடிப்படைக் காரணம் ஆயிற்று.

      Delete
    2. வே.நடனசபாபதி April 7, 2016 at 3:48 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திரு கிருஷ்ணன் நம்பி அவர்களைப்பற்றி இது வரை அறிந்திருக்கவில்லை.//

      ஓஹோ .... பெரும்பாலும் நம்மில் யாருமே அறிந்திருக்க இயலாதோ என்னவோ. இனியும் வருகை தருவோர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

      //திரு அழ. வள்ளியப்பா போல் இவரும் குழந்தைகளுக்காக எழுதியவர் என அறியும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.//

      ஆம். மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. திரு. அழ. வள்ளியப்பா அவர்களை இங்கு நீங்கள் நினைவூட்டியுள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. :)

      //இனிதான் இவரது படைப்புகளை படிக்கவேண்டும்.//

      நல்லது.

      //எழுத்தாளர் நா.பார்த்தசாரதியை அறியாதோர் உண்டோ? இன்னும் சொல்லப்போனால் இவரது குறிஞ்சி மலர் நாவல் தான் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு குறிஞ்சிமலரை அறிமுகப்படுத்தியது என்பது உண்மை. இவரது படைப்பான துளசி மாடத்தை படித்திருக்கிறேன். இவர் எழுத்தாளர் மட்டுமல்ல தலை சிறந்த பேச்சாளரும் கூட. பொள்ளாச்சியில் பணி புரிந்தபோது நான் உறுப்பினராக இருந்த விநாயகர் கலை மன்றத்தில் ‘பறவைகள் பல விதம் என்ற தலைப்பில் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள பறவைகள் பற்றி இவர் உரையாற்றியதை கேட்டு இரசித்திருக்கிறேன். //

      ஆஹா ..... மிக அருமையான, அற்புதமான பல்வேறு செய்திகளை விரிவாகச் சொல்லி வியப்பளித்துள்ளீர்கள்.

      //இரு பெரும் எழுத்தாளர்களை (அறிமுகப்படுத்திய) நினைவில் கொண்ட திரு ஜீ,வி அவர்களுக்கும், தங்களுக்கும் பாராட்டுக்கள்! //

      மிக்க மகிழ்ச்சி, சார்.

      //அடுத்து அறிமுகப்படுத்தப்பட உள்ள இருவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.//

      உங்களுக்கு மட்டுமா? பெரும்பாலும் தமிழ் வாசகர்கள் அனைவருக்குமே பிடித்தமான எழுத்தாளர்களாகவே இருக்கக்கூடும் என நானும் நினைக்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆச்சர்யமான விரிவான தகவல்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      Delete
    3. என் மட்டில் இவை அறிமுகங்களே.

      Delete
    4. அப்பாதுரை April 8, 2016 at 11:41 AM

      //என் மட்டில் இவை அறிமுகங்களே.//

      :) ஆஹா, கரெக்டாச் சொல்லிட்டேள் ! :)

      Delete
  2. இன்று அறிமுகப் படுத்தி இருப்பவர்களில். தீபம்.. ந.பார்த்தசாரதி அவர்களின் பொன்விலங்கு... குறிஞ்சி மலர் படிக்க வாய்ப்பு கிடைத்தது... என்ன எழுத்து....... இன்னொருவரை தெரிந்திருக்கவில்லை. இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது....

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... April 7, 2016 at 5:10 PM

      வாங்கோ வணக்கம்.

      //இன்று அறிமுகப் படுத்தி இருப்பவர்களில். தீபம்.. ந.பார்த்தசாரதி அவர்களின் பொன்விலங்கு... குறிஞ்சி மலர் படிக்க வாய்ப்பு கிடைத்தது... என்ன எழுத்து!!!!//

      மிக்க மகிழ்ச்சி.

      //இன்னொருவரை தெரிந்திருக்கவில்லை. இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது....//

      அப்படியா? அதனால் பரவாயில்லை. இப்போதாவது நாம் தெரிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சியே.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  3. முதலாவது எழுத்தாளரை நான் அறியேன். (படித்ததில்லை) நாபா எழுத்து படித்திருக்கிறேன். குறிப்பாக சமுதாயவீதி!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். April 7, 2016 at 7:15 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

      //முதலாவது எழுத்தாளரை நான் அறியேன். (படித்ததில்லை)//

      அப்போ நீங்களும் நானும் ஒரே கட்சி :)

      //நா.பா எழுத்து படித்திருக்கிறேன். குறிப்பாக சமுதாயவீதி!//

      இப்போ நீங்க எனக்கு எதிர்கட்சியாக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். - VGK

      Delete
  4. கிருஷ்ணன் நம்பி நூலகளைப் படித்ததே இல்லை
    எப்படித் தெரியாமல் போயிற்று எனத் தெரியவில்லை

    இலட்சியக் கதாபாத்திங்களை அப்படியே
    கண் முன் உலாவ விடுவதோடு
    அதுபோல வாழ வேண்டும் என்னும் உத்வேகத்தை
    வாசகர் மனதில் உண்டாக்கும்
    எழுத்துக்குச் சொந்தக்காரார். நா.பா அவர்கள்

    எழுத்தைப் போலவே அவருடைய மேடைப் பேச்சும்
    மிகச் சிறப்பாக இருக்கும்

    நான் தீபம் இதழில் தொடர் வாசகன்
    என் இளம் வயதில் கணையாழியும்
    தீபமும்தான் இலக்கியத்துக்கென
    முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவை
    என்கிற அபிப்பிராயம் இப்போதும் எனக்கு
    உண்டு. (கொஞ்சம் ஜன ரஞ்சகமாகவும் எனில்
    கலைமகள் )

    எனக்கு குறிஞ்சி மலரில் பூரணி சாலையில்
    மயங்கி விழுகையில் அது குறித்து
    டைரியில் எழுதிக் கொண்டிருந்த அரவிந்தனைப்
    பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம்
    வாதாடிய ஞாபகம் இருக்கிறது

    மீண்டும் அந்த நாவலை இப்போது
    படித்துப் பார்க்க்வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Ramani S April 7, 2016 at 8:05 PM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //கிருஷ்ணன் நம்பி நூல்களைப் படித்ததே இல்லை. எப்படித் தெரியாமல் போயிற்று எனத் தெரியவில்லை.//

      தங்களுக்கே இவர் பற்றி தெரியாமல் இருப்பதுதான் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது!!!!!

      //இலட்சியக் கதாபாத்திங்களை அப்படியே கண் முன் உலாவ விடுவதோடு, அதுபோல வாழ வேண்டும் என்னும் உத்வேகத்தை வாசகர் மனதில் உண்டாக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரார். நா.பா அவர்கள்.//

      ஆஹா, தங்கள் பாணியில் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். :)

      //எழுத்தைப் போலவே அவருடைய மேடைப் பேச்சும் மிகச் சிறப்பாக இருக்கும்.//

      சற்றுமுன் நானும் இதனைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். :)

      நான் தீபம் இதழில் தொடர் வாசகன். என் இளம் வயதில் கணையாழியும் தீபமும்தான் இலக்கியத்துக்கென முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவை என்கிற அபிப்பிராயம் இப்போதும் எனக்கு உண்டு. (கொஞ்சம் ஜன ரஞ்சகமாகவும் எனில் கலைமகள் )

      மிகவும் இனிமையான செய்திகளாகச் சொல்லியுள்ளீர்கள். இதனையெல்லாம் கேட்கவே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

      //எனக்கு குறிஞ்சி மலரில் பூரணி சாலையில் மயங்கி விழுகையில் அது குறித்து டைரியில் எழுதிக் கொண்டிருந்த அரவிந்தனைப் பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் வாதாடிய ஞாபகம் இருக்கிறது.//

      தங்களின் இந்த உணர்வினைப் புரிந்துகொள்ள முடிகிறது. மயங்கி விழுந்தவரை கவனிக்காமல் அது குறித்து டைரியில் எழுதிக்கொண்டிருந்தால் எப்படி?

      இந்தக்காலத்திலும்கூட விபத்து போன்ற எது நடந்தாலும் சிலர் அதனை தங்கள் ஸ்மார்ட் ஃபோனில் பதிவு செய்வதும், பிறருக்கு அதனை உடனடியாக வாட்ஸ்-அப்பில் அனுப்புவதிலுமே குறியாக உள்ளனர். அது போலவே உள்ளது, தாங்கள் சொல்லும் இதுவும்.

      oooooooooo

      சமீபத்தில் ஓர் வாட்ஸ்-அப் செய்தி படத்துடன் கண்டேன். ஒரு நாய் தன் தலையைத் ப்ளாஸ்டிக் தண்ணீர் குடத்துக்குள் நுழைத்துக்கொண்டு விட்டது. அதனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு இங்குமங்கும், பார்வை மறைக்கப்பட்ட அது தெருவில் அலைந்து திண்டாடுகிறது. யாராவது எப்படியாவது காப்பாற்ற மாட்டார்களா எனத் தவிக்கிறது. வாகனங்களில் அந்த நாய் அடிபடாமல் இருக்கணுமே என்ற கவலையும் ஒருபுறம் அதனைப்பார்க்கும் நமக்கு ஏற்படுகிறது. இவ்வாறு கஷ்டப்படும் அந்த நாயை நேரில் பார்க்க உடனே நானூறு பேர்கள் கூடிவிட்டனர். எல்லோருடைய கைகளிலும் செல்ஃபோன் கேமரா. வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். யாருமே அந்த நாயின் தலையை குடத்திலிருந்து வெளியே எடுத்துவிட்டுக் காப்பாற்ற முன் வரவில்லை.

      அரைமணி நேரத்திற்க்குப் பிறகு செல்ஃபோன் ஏதும் இல்லாத ஏழைக் கூலித்தொழிலாளிகள் இருவர் அங்கு வந்து, ஒருவர் நாயின் பின்னங்கால்கள் இரண்டையும் கெட்டியாகத் தூக்கிப்பிடித்துக்கொள்ள, மற்றொருவர் குடத்தைப்பிடித்து பலம் கொண்ட மட்டும் இழுத்து, டக்-ஆஃப்-வார் நடத்தி, ஒருவழியாக நாயையும் குடத்தையும் பிரித்து எடுத்துள்ளனர்.

      இந்த க்ளைமாக்ஸ் காட்சியினையும் அனைவரும் தங்களின் செல்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்வதிலேயே குறியாக உள்ளனர்.

      oooooooooo

      //மீண்டும் அந்த நாவலை இப்போது படித்துப் பார்க்க வேண்டும்//

      நல்லது, சார். செய்யுங்கோ.

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

      Delete
  5. நண்பரே நான் நூல்கள்
    படித்ததே இல்லை
    ஆனால் உங்கள் அறிமுக
    பதிவுகளைப் பார்த்து
    நூல்கள் படிக்க ஆர்வம்
    வந்துள்ளது ....
    நன்றி.நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. Ajai Sunilkar Joseph April 8, 2016 at 8:54 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நண்பரே நான் நூல்கள் படித்ததே இல்லை.//

      நானும் அதுபோலவே தான். நூல்களையெல்லாம் அதிகமாகப் படித்தவன் அல்ல.

      //ஆனால் உங்கள் அறிமுக பதிவுகளைப் பார்த்து நூல்கள் படிக்க ஆர்வம் வந்துள்ளது .... நன்றி. நண்பரே....//

      மிக்க மகிழ்ச்சி. நூல் அறிமுகங்களின் நோக்கமே, பிறருக்கு படிக்கும் ஆர்வத்தினைத் தூண்டிவிடுவது மட்டுமே. அந்த நோக்கம் நிறைவேறியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK

      Delete
  6. பின்னூட்டத்தில் நீங்க சொல்லி இருக்கும் நிகழ்ச்சி செல்போன் கலாசாரம் பற்றி வெட்கப்பட வைக்குது.. ஒருவரின் வலி வேதனை புரிந்து உதவி பண்ணாவிட்டாலும் இதுபோல வீடியோ எடுத்து பரப்புவதில் என்ன சந்தோஷமோ............ தீபம் நா. பார்த்தசாரதி கதைகள் படித்து ரசித்திருக்கேன்.... இன்னொருவர் பற்றி உங்க மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. srini vasan April 8, 2016 at 10:11 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பின்னூட்டத்தில் நீங்க சொல்லி இருக்கும் நிகழ்ச்சி செல்போன் கலாசாரம் பற்றி வெட்கப்பட வைக்குது.. ஒருவரின் வலி வேதனை புரிந்து உதவி பண்ணாவிட்டாலும் இதுபோல வீடியோ எடுத்து பரப்புவதில் என்ன சந்தோஷமோ............//

      இதுதான் இன்றைய கலாச்சாரமாகவே உள்ளது. நாளடைவில் ஒரு ஸ்டேஜில், மனிதநேயம் இல்லாத இவையெல்லாம் வெறுத்தே போய்விடும். என்னுடைய பின்னூட்ட பதிலைப்படித்துள்ளதற்கு மிக்க நன்றி.

      //தீபம் நா. பார்த்தசாரதி கதைகள் படித்து ரசித்திருக்கேன்.... இன்னொருவர் பற்றி உங்க மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது... நன்றி...//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

      Delete
  7. இன்றைய அறிமுகத்தில் கிருஷ்ணன் நம்பி அறியாதவர். தீபம் பார்த்தசாரதி நன்றாக தெரியும். இருவரையும் அறிமுகப்படுத்திய ஜீவி அவர்களுக்கும், தங்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. S.P.SENTHIL KUMAR April 8, 2016 at 7:05 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய அறிமுகத்தில் கிருஷ்ணன் நம்பி அறியாதவர். தீபம் பார்த்தசாரதி நன்றாக தெரியும். இருவரையும் அறிமுகப்படுத்திய ஜீவி அவர்களுக்கும், தங்களுக்கும் எனது நன்றிகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. VGK

      Delete
  8. எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பரிவை சே.குமார் April 9, 2016 at 12:20 AM

      //எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன் ஐயா...//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  9. கிருஷ்ணன் நம்பி குறித்து இப்பதிவு வாயிலாகத்தான் அறிகிறேன். நா.பா.வின் படைப்புகளுள் குறிஞ்சி மலர் உள்ளிட்ட சில படைப்புகளை வாசித்துள்ளேன். பெரும்பாலோனோர் குறிப்பிடுவது போல் இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திராத படைப்பாளிகளை ஜீவி சாரின் நூல் வாயிலாகவும் அந்நூல் பற்றிய தங்கள் அறிமுகப்பதிவுகள் வாயிலாகவுமே அறியமுடிகிறது. இம்மாதிரியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லையெனில் அற்புதமான பல படைப்பாளிகளைப்பற்றி அறியாமலேயே இருந்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி April 9, 2016 at 6:15 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கிருஷ்ணன் நம்பி குறித்து இப்பதிவு வாயிலாகத்தான் அறிகிறேன். நா.பா.வின் படைப்புகளுள் குறிஞ்சி மலர் உள்ளிட்ட சில படைப்புகளை வாசித்துள்ளேன்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //பெரும்பாலோனோர் குறிப்பிடுவது போல் இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திராத படைப்பாளிகளை ஜீவி சாரின் நூல் வாயிலாகவும் அந்நூல் பற்றிய தங்கள் அறிமுகப்பதிவுகள் வாயிலாகவுமே அறியமுடிகிறது. இம்மாதிரியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லையெனில் அற்புதமான பல படைப்பாளிகளைப்பற்றி அறியாமலேயே இருந்திருப்போம்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  10. திரு கிருஷ்ணன் நம்பி அவர்களின் படைப்பு எதையும் நான் வாசித்ததில்லை. நா.பாவின் குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகிய மூன்றையும் வாசித்திருக்கிறேன். குறிஞ்சி மலரைத் தவிர மற்ற கதைகள் எதுவும் நினைவில் இல்லை. இலக்கியத் தரத்துடன் எழுதக் கூடிய எழுத்தாளர். பின்னூட்டத்தில் நாய் பற்றிய செய்தி வேதனை அளிப்பதாய் உள்ளது. செல்போன் கேமராவில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்ற நோக்கம் தான் மக்களுக்கிருக்கிறதேயொழிய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாதது கவலையளிக்கும் விஷயம் தான். வேலை மிகுதியால் தாமதமாக வந்துவிட்டேன். நல்ல எழுத்தாளர்களின் அறிமுகத்துக்கு நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. ஞா. கலையரசி April 9, 2016 at 6:49 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //திரு கிருஷ்ணன் நம்பி அவர்களின் படைப்பு எதையும் நான் வாசித்ததில்லை.//

      ஜீவி சாரைத்தவிர யாருமே வாசித்ததாக இதுவரைத் தெரியவில்லை.

      //நா.பாவின் குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகிய மூன்றையும் வாசித்திருக்கிறேன்.//

      சந்தோஷம்.

      //குறிஞ்சி மலரைத் தவிர மற்ற கதைகள் எதுவும் நினைவில் இல்லை.//

      அதனால் பரவாயில்லை மேடம். அனைத்தும் எப்போதும் நம் நினைவினில் இருக்கும் எனச் சொல்லமுடியாதுதான்.

      //இலக்கியத் தரத்துடன் எழுதக் கூடிய எழுத்தாளர்.//

      ஆமாம்.

      //பின்னூட்டத்தில் நாய் பற்றிய செய்தி வேதனை அளிப்பதாய் உள்ளது. செல்போன் கேமராவில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்ற நோக்கம் தான் மக்களுக்கிருக்கிறதேயொழிய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாதது கவலையளிக்கும் விஷயம் தான்.//

      ஆமாம், மேடம். இது எனக்கு வாட்ஸ்-அப்பில் யாரோ அனுப்பி இருந்தார்கள். அதுபோல ஒரு சிறுத்தை நகரத்துக்குள் புகுந்து இங்குமங்கும் ஓடுவது, சீறுவது, சிலரை கடிப்பது, அடங்காத காளை மாடு ஒன்று நெடுக கடைவீதியில் புகுந்து பலரை முட்டித்தள்ளுவது, யானை ஒன்று நிறுத்தி வைத்துள்ள ஸ்கூட்டர்களை எல்லாம் துதிக்கையால் அலாக்காகத் தூக்கி விட்டெறிவது, 2-3 ஆட்டோக்களை தலைகுப்பற கவிழ்த்து நொறுக்குவது என என்னென்னவோ வாட்ஸ்-அப்கள் எனக்கு வந்துகொண்டே உள்ளன. எப்படித்தான் இவற்றை பயமில்லாமல் தத்ரூபமாக அருகே சென்று வீடியோ பதிவு செய்கிறார்களோ !

      //வேலை மிகுதியால் தாமதமாக வந்துவிட்டேன்.//

      அதனால் பரவாயில்லை மேடம். தாமதமானாலும் தாங்கள் என் பதிவுகளுக்கு தொடர்ச்சியாக வருகை தருவதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, மேடம்.

      //நல்ல எழுத்தாளர்களின் அறிமுகத்துக்கு நன்றி சார்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம்.

      நன்றியுடன் கோபு.

      Delete
  11. க்ரிஷ்ணன் அவர்களை வாசித்ததில்லை சார். இப்போதுதான் தெரிந்து கொண்டோம்...நா பா குறிஞ்சி மலர் வாசித்துள்ளோம். பொன்விலங்கும். என்றாலும் குறிஞ்சிமலர்தான் நினைவில் உள்ளது. இலக்கிய நடை....

    பகிர்விற்கு மிக்க நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. Thulasidharan V Thillaiakathu
      April 9, 2016 at 11:27 PM

      //க்ரிஷ்ணன் அவர்களை வாசித்ததில்லை சார். இப்போதுதான் தெரிந்து கொண்டோம்...நா பா குறிஞ்சி மலர் வாசித்துள்ளோம். பொன்விலங்கும். என்றாலும் குறிஞ்சிமலர்தான் நினைவில் உள்ளது. இலக்கிய நடை.... பகிர்விற்கு மிக்க நன்றி சார்...//

      வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - VGK

      Delete
  12. இன்றய பிரபல எழுத்தாளர்கள் அறிமுகத்துக்கு நன்றி. நா.பூ... பார்த்தசாரதி கதைகள் ஒன்றிரண்டு படத்திருக்கேன்... இன்னொருவர் தெரிந்திருக்கவில்லை....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் April 10, 2016 at 10:15 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய பிரபல எழுத்தாளர்கள் அறிமுகத்துக்கு நன்றி. நான் தீபம் நா. பார்த்தசாரதி கதைகள் ஒன்றிரண்டு படித்திருக்கேன்...//

      மிகவும் சந்தோஷம்.

      //இன்னொருவர் தெரிந்திருக்கவில்லை....//

      அதனால் பரவாயில்லை. இங்கு யாருமே அவரைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அந்த அளவுக்குப் பிரபலமாக அவர் இருந்திருப்பார் போலிருக்கு. மேலும் அவர் போய்ச்சேர்ந்து சுமார் 40 வருடங்களும் ஆகிவிட்டன.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  13. இன்று அறிமுகப்படுத்தி இருக்கும் இருவரில் ஒருவரை மட்டுமே தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... April 10, 2016 at 5:27 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்று அறிமுகப்படுத்தி இருக்கும் இருவரில் ஒருவரை மட்டுமே தெரியும்.//

      ஆஹா, 50% பாஸ் மார்க். அதுவே மிகப்பெரிய விஷயம்தான்.

      தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். VGK

      Delete
  14. எனக்கு இருவரையுமே தெரியலை இதைச்சொல்ல இங்க வரணுமான்னு நினச்சேன்.... அதான் லேட்......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. April 10, 2016 at 5:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      //எனக்கு இருவரையுமே தெரியலை.//

      அதனால் என்ன? நமக்குள் எவ்வளவு ஒற்றுமை பாருங்கோ. எனக்கும் இவர்களைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. :)

      இருப்பினும் இது விஷயம் நமக்குள் மட்டும் மிகவும் இரகசியமாக இருக்கட்டும். யாரிடமும் சொல்லிடாதீங்கோ. முக்கியமாக நம் முருகுவுக்குத் தெரிய வேண்டாம். நல்லவேளையா அது இன்னும் இங்கு வரக்காணோம். :)

      //இதைச்சொல்ல இங்க வரணுமான்னு நினச்சேன்.... அதான் லேட்......//

      அப்படியெல்லாம் ஒரு போதும் நினைக்காதீங்கோ. இந்தத்தொடரின் முதல் 12 பகுதிகளுக்கும் நம் முருகு தொடர்ச்சியாக வருகை தந்து என்னவெல்லாம் வித்யாசமா கமெண்ட்ஸ் கொடுத்திருக்குப் பாருங்கோ.

      அதுபோல நீங்களும் புகுந்து விளாசி ஏதேனும் புதுமையாச் சொல்லிவிட்டுப்போங்கோ. பதிவுக்கு சம்பந்தம் இருக்கணும் என்றோ, இதில் உள்ள எழுத்தாளர்களை ஏற்கனவே படித்திருக்கணும் என்றோ, இனி படிக்க வேண்டும் என்றோ எந்தவொரு கட்டாயமும் கிடையாதும்மா. புரிஞ்சுதா ? ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அன்புடன் கோபு

      Delete
  15. இன்றை அறிமுக எழுத்தாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.
    முதலாமவர் பற்றி இப்போது தான் அறிகிறேன்
    இரண்டாமவரின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri April 11, 2016 at 9:07 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இன்றைய அறிமுக எழுத்தாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //முதலாமவர் பற்றி இப்போது தான் அறிகிறேன்//

      எல்லோருக்குமே அப்படித்தான். இப்போதாவது நாம் இவரை அறிந்து கொண்டோமே. :)

      //இரண்டாமவரின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன் ஐயா. நன்றி//

      ’அவரை அங்கு காயப்போட்டுக்கொண்டு பிஸியாக இருந்தாலும்’ இங்கும் தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)

      - அன்புடன் கோபு

      Delete
  16. இங்கூட்டு நா வரமாட்டேனு எண்ணி போட்டிகளோ..... என்னய பத்தி இங்கன இன்னா..... துருசு நடக்குது... முன்னா.....நீயும் குருஜிகோட கூட்டு சேந்துகிட்டியா... உன்னய அங்கிட்டு கவனிச்சு போடுவேனுல்லாஆஆஆஆஆ.. குருஜி இது இன்னா பூவு... செவ்வந்தியோ...... காத்து வீசாலயோ.... ஆடாம அசங்காம அப்பூடியே நிக்குது... பின்னாடிலேந்து சுத்தி விட்டு போடுக.....

    ReplyDelete
    Replies
    1. mru April 11, 2016 at 10:13 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //இங்கூட்டு நா வரமாட்டேனு எண்ணி போட்டிகளோ.....//

      சேச்சே .... அப்படியெல்லாம் குருஜி நினைப்பேனா?
      நிக்காஹ் (கல்யாணம்) முடியும் வரைக்குமாவது கட்டாயமாக வருவீங்கன்னு எதிர்பார்த்துக் காத்திருந்தேனாக்கும். ஹூக்க்க்க்க்க்கும் !

      //என்னய பத்தி இங்கன இன்னா..... துருசு நடக்குது...//

      அது என்ன, துருசு ....? உங்களிடமிருந்து புதுசுபுதுசா வார்த்தைகள் கற்றுக்கொள்ள ஏலுது என்னால். மகிழ்ச்சியே :)

      //முன்னா..... நீயும் குருஜிகோட கூட்டு சேந்துகிட்டியா... உன்னய அங்கிட்டு கவனிச்சு போடுவேனுல்லாஆஆஆஆஆ..//

      அதானே .... கொஞ்ச நாள் பழகினாப்போதும் .... உடனே கூட்டு சேர்ந்து பசக்க்க்குன்னு ஒட்டிக்கொண்டு விடுகிறார்கள், எல்லோருமே. :) அங்கிட்டு நன்னாவே கவனிச்சுப் போடுங்க உங்க ’முன்னா’வை.

      //குருஜி இது இன்னா பூவு... செவ்வந்தியோ...... காத்து வீசாலயோ.... ஆடாம அசங்காம அப்பூடியே நிக்குது... பின்னாடிலேந்து சுத்தி விட்டு போடுக.....//

      சுத்திப்பார்த்தேன். ஒன்னும் ஒர்க்-அவுட் ஆகவில்லை, முருகு.

      ’சுத்திச்சுத்தி வந்ததினால் சொந்தமாகிப் போனாயே ...
      சித்தம் குளிர இப்போ சேர்த்த அணைக்கப் போறேண்டி’

      என்று ஒருசில பாடல் வரிகள் ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற படத்தில் வரும். அந்த ஞாபகம் வந்துடுச்சு. :)

      தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள்.

      பிரியமுள்ள குருஜி.

      Delete
  17. திரு . கிருஷ்ணன் நம்பி அவர்கள் கதை படித்தது இல்லை. அவர் மனைவிக்கு எழுதிய கடிதம் போல் புதுமைபித்தன் அவர்களும் எழுதிய கடிதங்கள் நினைவுக்கு வருது. கிருஷ்ணன் நம்பி கதைகள் கிடைத்தால் படித்துப் பார்க்க ஆவல் ஏற்பட்டுள்ளது.
    நா. பார்த்தசாரதி அவர்கள் கதைகள் படித்து இருக்கிறேன். அவர் படங்கள் திரைப்படம் ஆகி இருக்கிறது.
    அருமையான எழுத்தாளர்களை நினைவில் நிறுத்தி விட்டார் ஜீவிசார். அதை நீங்கள் கல்வெட்டில் செதுக்கி விட்டீர்கள் காலத்தால் அழிக்க முடியதபடி.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு April 12, 2016 at 7:14 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //திரு . கிருஷ்ணன் நம்பி அவர்கள் கதை படித்தது இல்லை. அவர் மனைவிக்கு எழுதிய கடிதம் போல் புதுமைபித்தன் அவர்களும் எழுதிய கடிதங்கள் நினைவுக்கு வருது. கிருஷ்ணன் நம்பி கதைகள் கிடைத்தால் படித்துப் பார்க்க ஆவல் ஏற்பட்டுள்ளது.//

      மிகவும் சந்தோஷம், மேடம்.

      //நா. பார்த்தசாரதி அவர்கள் கதைகள் படித்து இருக்கிறேன். அவர் படங்கள் திரைப்படம் ஆகி இருக்கிறது.//

      வெரி குட். :)

      //அருமையான எழுத்தாளர்களை நினைவில் நிறுத்தி விட்டார் ஜீவிசார். அதை நீங்கள் கல்வெட்டில் செதுக்கி விட்டீர்கள் காலத்தால் அழிக்க முடியாதபடி. இருவருக்கும் வாழ்த்துக்கள்.//

      ஆஹா! கல்வெட்டில் செதுக்கியதுபோல எப்படியெல்லாம் மகிழ்ச்சியுடன் கருத்துக்கள் சொல்லி வாழ்த்தியுள்ளீர்கள் !!!!! தங்களின் இந்த வாழ்த்துகளும் காலத்தால் அழிக்கவே முடியாதுதான்.

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - VGK

      Delete
  18. கிருஷ்ணன் நம்பியைப் படித்தது சொற்பமே. நா.பா. ஆதர்ச எழுத்தாளர். அவருடைய தொடர் கதைகளில் வரும் சில குறிப்பிட்ட வரிகளை ஹைலைட் செய்து கல்கி பத்திரிகையில் அத்தியாயங்களின் இடையே போட்டிருப்பார்கள். அதை எல்லாம் தனி நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்போது படித்து ரசிப்பது வழக்கம். குறிஞ்சி மலர் வெளிவந்தபோது அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அம்மா விழுந்து விழுந்து படித்துப் பார்த்திருக்கிறேன். பின்னர் பதின்ம வயதில் நா.பா.வின் பொன்விலங்கு கல்கி பத்திரிகையில் வந்தபோது இதற்காகவே பத்திரிகை வாங்கிச் சேர்த்துக் கொண்டும் வந்தேன். அந்த பைன்டிங்கெல்லாம் எங்கோ போய்விட்டன! :( இதன் பின்னரே அவரின் மற்றப்படைப்புக்களான பாண்டிமாதேவி, குறிஞ்சி மலர், மணிபல்லவம் போன்றவற்றைப் படித்தேன். அவரும் மதுரையின் மேல் தீராக்காதல் கொண்டவர்! அதோடு பாண்டிய நாடு குறித்து எழுதிய ஒரு சில எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இன்னொருவர் ஜெகசிற்பியன், ஆலவாய் அழகன் என்னும் பெயரில் எழுதினார். அரு.ராமநாதன், "வீரபாண்டியன் மனைவி" என்னும் நாவலை எழுதி இருக்கிறார். எல்லாமும் படித்திருக்கிறேன். ஆலவாய் அழகன் ஆனந்தவிகடனில் பரிசு பெற்ற நாவலாக வெளிவந்தது.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam April 12, 2016 at 2:08 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கிருஷ்ணன் நம்பியைப் படித்தது ................ ஆலவாய் அழகன் ஆனந்தவிகடனில் பரிசு பெற்ற நாவலாக வெளிவந்தது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஏராளமான, தாராளமான செய்திகளுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK

      Delete
  19. கிருஷ்ணன் நம்பி அறிமுகம் இல்லை. தீபம் நா.பார்த்தசாரதி படைப்புகளில் ’மணிபல்லவம்’ படித்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ April 12, 2016 at 10:07 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //கிருஷ்ணன் நம்பி அறிமுகம் இல்லை. தீபம் நா.பார்த்தசாரதி படைப்புகளில் ’மணிபல்லவம்’ படித்து இருக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - அன்புடன் VGK

      Delete