About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, March 11, 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! - புதிய கட்சி: ”மூ.பொ.போ.மு.க.” உதயம்!!
ஸ்ரீனிவாசன் என்ற ஒரே பெயரிலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் அந்த மிகப்பெரிய நிறுவனத்தில் ’வழுவட்டை ஸ்ரீனிவாசன்’  என்று சொன்னால் தெரியாதவர்களே கிடையாது. அவர் தலை வழுக்கையாக இருப்பதால் அப்படி ஒரு பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்த என் கணிப்பு முற்றிலும் தவறாகிப்போய்விட்டது.  

புதிதாக அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த நான் அவரிடம் போய் “சார், கேண்டீன் எங்கே இருக்கிறது, எப்படிப்போக வேண்டும்?” என்று கேட்டேன்.

“இதுகூடத் தெரியாமல் சுத்த வழுவட்டையாக இருக்கிறாயே!, எழுச்சியாக என்னுடன் புறப்பட்டு வா, நான் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்றார்.  

என் அப்பா வயதில் அவர் இருந்ததாலும், நான் வேலைக்குச்சேர்ந்த முதல் நாள் என்பதாலும், அவர் மீது கோபப்படாமல் அமைதி காக்கும்படி ஆகி விட்டது, என் அன்றைய நிலை.

கேண்டீனில் பலரிடம் அவர் பேசும்போதும் இந்த ’வழுவட்டை’ என்ற சொல்லை, அவர் மறக்காமல் அடிக்கடி பயன்படுத்தி வந்ததை நானும் கவனிக்கத்தவறவில்லை.

”காண்டீன் சாப்பாடு வரவர வழுவட்டையாக உள்ளது.  வீட்டுச் சாப்பாடுபோல எழுச்சியாக இல்லை.  புது மேனேஜர் எழுச்சியாக இருப்பார் என்று நினைத்தேன், ஆனால் அவரும் வழுவட்டையாகவே உள்ளார்” என்று ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார்.

மொத்தத்தில் அவருடன் பழகியதில், ஒருவித எழுச்சியில்லாத அனைத்தும் வழுவட்டையே எனப்புரிந்து கொண்டேன்.  அவருடைய அகராதிப்படி எழுச்சிக்கு எதிர்பதம் வழுவட்டை என்ற சொல் என்பது எழுச்சியுடன் எனக்குப்புரிய வந்தது.

வ.வ.ஸ்ரீ, க்கு அருகிலேயே சற்று எதிர்புறமாக என்னுடைய அலுவலக இருக்கையும் அமைந்திருந்ததால் அவருடைய அன்றாடப்பணிகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு வாய்த்திருந்தது.  எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாகப் பழகிவந்த அவரைச்சுற்றி எப்போதும் யாராவது வந்துபோய்க்கொண்டே இருப்பார்கள்.

அவர் மேஜைமீது எப்போதும் பளபளப்புடன் கூடிய எவர்சில்வர் மூக்குப்பொடி டப்பா ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.  அவரை நாடி வருவோரைவிட அந்தப் பொடிடப்பாவை நாடி வருவோர்களே அதிகம். 

பார்ப்பவர்களுக்கு அது ஒரு அல்பப்பொடி தர்மமாகத் தெரிந்தாலும், பொடி உபயோகிப்பாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய, அன்னதானத்திற்கும் மேலான ஒரு தர்மம் போலும்.   

வ.வ.ஸ்ரீ. தன்னிடம் வருபவர்களையெல்லாம் “வாங்க, வாங்க! இந்தாங்க, எழுச்சியோடு பொடிபோட்டுட்டுப்போங்க” என்று சொல்லிப் பொடி டின்னை திறந்து நீட்டும்போதெல்லாம், குங்குமச்சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல எனக்குத் தோன்றும்.   நாளடைவில் வ.வ.ஸ்ரீ. அவர்களுடனும், அவருடைய பொடிபோடும் நண்பர்களுடனும் எனக்கு நல்ல பரிச்சயம் ஆகிவிட்டது. 

ஒரு நாள் வ.வ.ஸ்ரீ. ஆபீஸுக்கு திடீரென லீவு போட்டு விட்டார். அவருடைய பொடி நண்பர்கள் பலரும் வந்து ஏமாந்து போனார்கள். ஒருசிலர் வ.வ.ஸ்ரீ. லீவு போடட்டும், பொடிட்டின்னுடன் லீவு போடலாமா? என்று மிகவும் சலித்துக்கொண்டனர்.   மாற்று ஏற்பாடு செய்யாததில் அவர்களுக்கு, அவர்களின் பொடி ஏறாத மூக்குக்குமேல் கோபம் கொப்பளித்து வந்ததைப் பார்த்தேன்.

இதைப்பார்த்த நான் சும்மா இல்லாமல், அதில் ஒருவரிடம், “ஏன் சார்,  நீங்களே தனியாக பொடி வாங்கி வைத்துக்கொள்ளலாமே” என்று தெரியாத்தனமாகக் கேட்டு விட்டேன்.

என்னை ஒரு முறை முறைத்துப்பார்த்த அவர், “தம்பி, நீ ஒரு பொடிப்பையன்.   பொடியைப்பற்றி உனக்குத்தெரிந்திருக்க நியாயம் இல்லை.   ஓஸியிலே பொடி வாங்கி நாசியிலே போட்டால் கிடைக்கும் இன்பமே இன்பம்;  அதெல்லாம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்” என்றார்.


தொடரும்   

64 comments:

  1. பேருக்கு விளக்கம் சொல்லவில்லையே ??? காமெடியாதான் ஸ்டார்ட் ஆகி இருக்கு

    ReplyDelete
  2. பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே, எங்க இருக்கார் சார் இவர்? :))
    ஒவ்வொரு அலுவலுகத்திலும் இப்படி பிரகிருதிகள்!

    ReplyDelete
  3. எனக்கு பொடி விஷயமாகத் தோணலை
    வழுவட்டையிடம் ஏதோ பெரிய விஷயம் இருக்கு
    ஆரம்பம் அற்புதம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //“வாங்க, வாங்க! இந்தாங்க, எழுச்சியோடு பொடிபோட்டுட்டுப்போங்க” என்று சொல்லிப் பொடி டின்னை திறந்து நீட்டும்போதெல்லாம், குங்குமச்சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல எனக்குத் தோன்றும்.//

    ஹாஸ்யம் மிகுந்த கற்பனை.தொடரட்டும்.
    மொத்தம் எத்தனை பகுதின்னு போடலையே.
    (1/?) அல்லது 2 பகுதிங்கறாதால போடலையா?

    ReplyDelete
  5. வழுவட்டையா இல்லாம எழுச்சியா வந்து கமென்ட் போடறேன் அடுத்த வாட்டி:-)

    ReplyDelete
  6. வழுவட்டையாக இல்லாமல் எழுச்சியாக தொடங்கி இருக்கிறது உங்கள் தொடர்! நகைச்சுவை உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. கழகம் பற்றிய தகவல்களுக்காக காத்திருப்புடன்…

    ReplyDelete
  7. படிக்கப் போகிறேன், முடித்தபின் கருத்து. ஓக்கேவா.தொடக்கம் முழுவதையும் படிக்கவைக்கும், என்பதற்கு உத்தரவாதம் தருகிறது.

    ReplyDelete
  8. kathai eluchchiyaaka ullathu...thotaravum.vaalththukkal

    ReplyDelete
  9. //வ.வ.ஸ்ரீ. தன்னிடம் வருபவர்களையெல்லாம் “வாங்க, வாங்க! இந்தாங்க, எழுச்சியோடு பொடிபோட்டுட்டுப்போங்க” என்று சொல்லிப் பொடி டின்னை திறந்து நீட்டும்போதெல்லாம், குங்குமச்சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல எனக்குத் தோன்றும்.//

    //மாற்று ஏற்பாடு செய்யாததில் அவர்களுக்கு, அவர்களின் பொடி ஏறாத மூக்குக்குமேல் கோபம் கொப்பளித்து வந்ததைப் பார்த்தேன்.//

    மிகவும் ரசித்தேன்! :-)

    //ஓஸியிலே பொடி வாங்கி நாசியிலே போட்டால் கிடைக்கும் இன்பமே இன்பம்;//

    ஹாஹா! திருட்டு மாங்காய் தான் ருசி அதிகம் என்பார்களே, அது போலவா? :-)

    இயல்பான நகைச்சுவை, கோர்வையான எழுத்து - இவையிரண்டும் சேர்ந்து இடுகையின் சுவாரசியத்தைப் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ என்று கேட்கிற அளவுக்கு...! :-)

    ReplyDelete
  10. ஆகா .. தொடர் எழுச்சியாக இருக்கிறது. என்னுடைய வழுவட்டை வலைப்பக்கம் கொஞ்சம் வாங்க சார். எனக்கும் கொஞ்சம் எழுச்சியாக இருக்குமல்லவா? .
    அருட்கவி ன்னும் பெயரில் புதிய வலைத்தளம் ஒன்று ஆரம்பித்துள்ளேன்.

    ReplyDelete
  11. ஆஹா!அதற்குள் தொடரும்னு சொல்லிவிட்டீர்களே வ.வ.ஸ்ரீ ஏன் லீவ்?


    எதிர்பார்ப்புடன்

    ReplyDelete
  12. "அவர்களின் பொடி ஏறாத மூக்குக்குமேல் கோபம் கொப்பளித்து வந்ததைப் பார்த்தேன்" --பிரமாதம்.

    ReplyDelete
  13. மாற்று ஏற்பாடு செய்யாததில் அவர்களுக்கு, அவர்களின் பொடி ஏறாத மூக்குக்குமேல் கோபம் கொப்பளித்து வந்ததைப் பார்த்தேன்//
    மாற்று ஏற்பாடு செய்யாத வ.வ.ஸ்ரீ,யை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
    வரியெங்கும் நகைச்சுவைப் பொடியை
    அநாயசமாகத்தூவி வெடிச்சிரிப்பை நொடியில் பரவவிட்ட தங்கள் எழுத்துத்திறமை பராட்டத்தக்கது.

    ReplyDelete
  14. சார்,நான் ஒன்று கண்டு பிடித்துள்ளேன்,சரியானு சொல்லுங்கள்
    மூ .பொ.போ.மு.க = மூக்கு பொடி போடும் முற்போக்கு கழகம்
    ஹா,ஹ்ஹா டேளியகுமா?

    ReplyDelete
  15. இதைப் படித்து முடித்ததும்,மூன்று முறை தும்மினேன்..கதை சூப்பர். மூக்கு, பொடி டப்பாவைத் தேடுவதைப் போல்,கண் அடுத்த இடுகை எப்போ?எப்போ? என்று தேடுகிறது..அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கிறது, கதையும், நடையும்!!

    ReplyDelete
  16. எல் கே said...
    //பேருக்கு விளக்கம் சொல்லவில்லையே ??? காமெடியாதான் ஸ்டார்ட் ஆகி இருக்கு//

    நீங்களே தான் யூகித்திருப்பீர்களே!; இருப்பினும் இறுதிப் பகுதியில் வ.வ.ஸ்ரீ. வாயாலேயே கேட்போம். அதில் நல்ல நகைச்சுவையும் இருக்கும், பெயருக்கான காரணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.

    அடுத்தடுத்த பகுதிகள் இன்னும் காமெடியாகவே இருக்கலாம்.

    முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
    அடுத்தடுத்த பகுதிகள் 13, 15, 17, 19, 21 போன்ற தேதிகளில் வெளிவிட முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  17. middleclassmadhavi said...
    //பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே, எங்க இருக்கார் சார் இவர்? :))
    ஒவ்வொரு அலுவலுகத்திலும் இப்படி பிரகிருதிகள்!//

    திருச்சி BHEL இல் 1975 to 1980 காலக்கட்டத்தில், அதுவும் ஒரு குறிப்பிட்ட துறையில், என்னோடு வேலை பார்த்த ஒருசிலருக்கு மட்டுமே, இவரைப் பற்றி, அதுவும் ஓரளவுக்கு மட்டுமே தெரியும். எனக்கு மட்டும் அவரை நல்ல பழக்கம் உண்டு. சமீபத்தில் ஒரு 10 வருடங்களாக இவர் என் கண்களிலேயே படக்காணோம். கண்டு பிடித்தால் அவரையும் இந்தக்கதையைப் படிக்கச்சொல்லி விட்டு, உங்களுக்கும் தகவல் தருகிறேன்.

    ReplyDelete
  18. வேடந்தாங்கல் - கருன் said...
    //Ha..ha..ha..//

    என்னாச்சு ? பார்த்து சார், இன்னும் நிறையவே Ha..ha..ha.. என்று தொடர்ந்து சிரிக்கும்படியாக இருக்கும்.

    ReplyDelete
  19. Ramani said...
    //எனக்கு பொடி விஷயமாகத் தோணலை
    வழுவட்டையிடம் ஏதோ பெரிய விஷயம் இருக்கு
    ஆரம்பம் அற்புதம் தொடர வாழ்த்துக்கள்//

    ஆமாம் சார், எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது.

    உண்மையிலேயே எழுச்சியானவரா, அல்லது வழுவட்டை தானா, என்று பார்ப்போம்.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, ஐயா.

    ReplyDelete
  20. raji said...
    //“வாங்க, வாங்க! இந்தாங்க, எழுச்சியோடு பொடிபோட்டுட்டுப்போங்க” என்று சொல்லிப் பொடி டின்னை திறந்து நீட்டும்போதெல்லாம், குங்குமச்சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல எனக்குத் தோன்றும்.//

    ஹாஸ்யம் மிகுந்த கற்பனை.தொடரட்டும்.
    மொத்தம் எத்தனை பகுதின்னு போடலையே.
    (1/?) அல்லது 2 பகுதிங்கறாதால போடலையா? //

    தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    மொத்தம் எவ்வளவு பகுதிகள் வரக்கூடும் என்று தற்சமயம் முடிவெடுக்க முடியாமல் உள்ளதுங்க.

    எப்படியும் ஒரு 6 அல்லது 8 பகுதிகள் எழுச்சியுடன் கொண்டுபோய்விடலாம் என்று தோன்றுகிறது.

    எல்லாம் உங்களைப் போன்றவர்கள், ஒவ்வொரு பகுதிக்கும் அளிக்கும் உற்சாக வரவேற்பைப் பொருத்தது தான் நான் தொடர்வதா முடிப்பதா என்பது.

    அனைவரும் தொடர்ந்து வாருங்கள், பின்னூட்டம் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  21. Gopi Ramamoorthy said...
    //வழுவட்டையா இல்லாம எழுச்சியா வந்து கமென்ட் போடறேன் அடுத்த வாட்டி:-)//

    இப்படி ஏதோ V V யாக ஏதோ சொல்லி நழுவிட்டீங்களே, நியாயமா?

    ReplyDelete
  22. வெங்கட் நாகராஜ் said...
    //வழுவட்டையாக இல்லாமல் எழுச்சியாக தொடங்கி இருக்கிறது உங்கள் தொடர்! நகைச்சுவை உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. கழகம் பற்றிய தகவல்களுக்காக காத்திருப்புடன்…//

    தங்கள் வ்ருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றிகள், வெங்கட்.

    [தாங்கள் தம்பதி ஸமேதராய் வந்து பின்னூட்டம் இடாவிட்டால், ஏதோ ஒரு மாதிரியான சோகம் ஏற்படுகிறது எனக்குள்.]

    ReplyDelete
  23. G.M Balasubramaniam said...
    //படிக்கப் போகிறேன், முடித்தபின் கருத்து. ஓக்கேவா.தொடக்கம் முழுவதையும் படிக்கவைக்கும், என்பதற்கு உத்தரவாதம் தருகிறது.//

    தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.

    தங்கள் விருப்பம் எதுவாயினும் ஓ.கே. தான்.

    தொடக்கம் உங்களுக்குத்தந்த உத்தரவாதம் பலிக்க தங்கள் ஆசிகள் எனக்கு வேண்டும், ஐயா.

    ReplyDelete
  24. மதுரை சரவணன் said...
    //kathai eluchchiyaaka ullathu...thotaravum.vaalththukkal//

    நீங்கள் சொன்னால் சரி, தொடர்கிறேன், வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  25. சேட்டைக்காரன் said...
    மிகவும் ரசித்தேன்! :-)

    //ஓஸியிலே பொடி வாங்கி நாசியிலே போட்டால் கிடைக்கும் இன்பமே இன்பம்;//

    ஹாஹா! திருட்டு மாங்காய் தான் ருசி அதிகம் என்பார்களே, அது போலவா? :-)

    இயல்பான நகைச்சுவை, கோர்வையான எழுத்து - இவையிரண்டும் சேர்ந்து இடுகையின் சுவாரசியத்தைப் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ என்று கேட்கிற அளவுக்கு...! :-)//

    நகைச்சுவை வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி;
    தண்யனானேன், சார்.
    மிக்க நன்றி, நன்றி, நன்றி !

    ReplyDelete
  26. சிவகுமாரன் said...
    //ஆகா .. தொடர் எழுச்சியாக இருக்கிறது. //

    நன்றி, சார்.

    //என்னுடைய வழுவட்டை வலைப்பக்கம் கொஞ்சம் வாங்க சார். எனக்கும் கொஞ்சம் எழுச்சியாக இருக்குமல்லவா?.//

    அருட்கவி வாயால் இது போல சொல்லக்கூடாது.

    //அருட்கவி ன்னும் பெயரில் புதிய வலைத்தளம் ஒன்று ஆரம்பித்துள்ளேன்.//

    நேற்றே வந்தேன், பார்த்தேன், படித்தேன், கேட்டேன், மகிழ்ந்தேன். பின்னூட்டமும் அளித்துள்ளேன். தாங்கள் அருட்கவி தான் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

    தங்களுடைய வலைப்பூவினுள் நுழைந்த புதியதோர் வண்டாக (follower) என்னை மாற்றிக்கொண்டும் விட்டேன். என் டேஷ் போர்டில் உங்கள் பூவினுள் தேன் சேர்ந்துள்ளது என்ற அறிவிப்பு வந்துவிடும். உடனே வண்டு தேன் பருக நீங்கள் அழைக்காமலேயே வந்து விடும்.

    ReplyDelete
  27. thirumathi bs sridhar said...
    //ஆஹா!அதற்குள் தொடரும்னு சொல்லிவிட்டீர்களே வ.வ.ஸ்ரீ ஏன் லீவ்? எதிர்பார்ப்புடன் //

    நாளை வரவுள்ள அடுத்த பகுதி-2 சற்று விரிவாகவும், இன்னும் சற்று நகைச்சுவையாகவும், வ.வ.ஸ்ரீ. யின் லீவு காரணத்தை விளக்குவதாகவும் அமையும், என் அன்பு சகோதரியே ! எதிர்பார்ப்புக்கு மிக்க நன்றி !!

    ReplyDelete
  28. கணேஷ் said...
    //"அவர்களின் பொடி ஏறாத மூக்குக்குமேல் கோபம் கொப்பளித்து வந்ததைப் பார்த்தேன்" --பிரமாதம்.//

    மிக்க நன்றி, கணேஷ். ஒரு நாள் விட்டு ஒருநாள் அடுத்தடுத்த பகுதிகளை வெளியிடலாம் என்று நினைத்துள்ளேன். தொடர்ந்து வரவும். Please, vgk

    ReplyDelete
  29. இராஜராஜேஸ்வரி said...
    //மாற்று ஏற்பாடு செய்யாததில் அவர்களுக்கு, அவர்களின் பொடி ஏறாத மூக்குக்குமேல் கோபம் கொப்பளித்து வந்ததைப் பார்த்தேன்//

    //மாற்று ஏற்பாடு செய்யாத வ.வ.ஸ்ரீ,யை வன்மையாகக் கண்டிக்கிறோம்.//

    OK OK கதாபாத்திரம் தானே,
    வன்மையாகக் கண்டிங்கோ !
    No prolem at all.

    வரியெங்கும் நகைச்சுவைப் பொடியை
    அநாயசமாகத்தூவி வெடிச்சிரிப்பை நொடியில் பரவவிட்ட தங்கள் எழுத்துத்திறமை பராட்டத்தக்கது.//

    மிகவும் வித்யாசமாக, அழகாக, அர்த்தபுஷ்டியுடன், உற்சாகம் ஊட்டக்கூடிய வகையில், பொடி(வைத்து)த் தூவி எழுதியிருக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  30. thirumathi bs sridhar said...
    சார்,நான் ஒன்று கண்டு பிடித்துள்ளேன்,சரியானு சொல்லுங்கள். மூ.பொ.போ.மு.க = மூக்கு பொடி போடும் முற்போக்கு கழகம்
    ஹா,ஹ்ஹா டாலியாகுமா ?

    உங்கள் யூகம் ஓரளவுக்கு நெருங்கி வருகிறது. ஆனால் நான் திரு. எல்.கே. அவர்களுக்கு கொடுத்துள்ள பதிலே உங்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  31. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //இதைப் படித்து முடித்ததும்,மூன்று முறை தும்மினேன்..கதை சூப்பர். மூக்கு, பொடி டப்பாவைத் தேடுவதைப் போல்,கண் அடுத்த இடுகை எப்போ?எப்போ? என்று தேடுகிறது..அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கிறது, கதையும், நடையும்!!//

    தும்மலைப்பற்றி அடுத்த பகுதி-2 இல் நிறைய விஷயங்கள் வருகின்றன. நாளை 13/03/11 வெளியிட உள்ளேன்.

    தங்களின் வித்யாசமான இந்தப்பின்னூட்டமும் எனக்கு படிக்க சுவாரஸ்யமாகவே உள்ளது. மிக்க நன்றி.

    தொடர்ந்து வாருங்கள், இராமமூர்த்தி Sir, please.

    ReplyDelete
  32. எழுச்சியான துவக்கம்....

    ReplyDelete
  33. கலாநேசன் said...
    //எழுச்சியான துவக்கம்....//

    தங்களின் புதிய வருகைக்கு மிக்க நன்றி.

    தங்களின் எழுச்சியான துவக்கம் என்ற பதிலிலும் ஒரு பேரெழுச்சி காணப்படுகிறது.

    சந்தோஷம் எனக்கும்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வருக! என அன்புடன் அழைக்கின்றேன்.

    ReplyDelete
  34. சிவகுமாரன் said...
    //நன்றி வை.கோ.சார்//

    தங்களின் நன்றிக்கு நன்றி,
    என் அன்புள்ள அருட்கவியே !

    ReplyDelete
  35. பொடி உபயோகிப்பாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய, அன்னதானத்திற்கும் மேலான ஒரு தர்மம் போலும்.
    என் தாத்தா பொடி மட்டை வாங்கி வரச் சொல்லி என்னை அனுப்பியிருக்கிறார். கடையை நெருங்கும்போதே நெடி தாக்கும். ஒரு முறை மாவு அரைக்கப் போனபோது தவறுதலாய் பொடியும் கலந்து விட தோசை பயங்கர நெடி.. மிளகாய்ப் பொடிக்கு பதிலாக மூக்குப் பொடி தோசை!
    எந்த சப்ஜெக்ட்டை தொட்டாலும் உங்கள் கை வண்ணம் மிளிர்கிறது.

    ReplyDelete
  36. ரிஷபன் said...
    //பொடி உபயோகிப்பாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய, அன்னதானத்திற்கும் மேலான ஒரு தர்மம் போலும்.//

    /என் தாத்தா பொடி மட்டை வாங்கி வரச் சொல்லி என்னை அனுப்பியிருக்கிறார். கடையை நெருங்கும்போதே நெடி தாக்கும்./

    ஆஹா, உங்களுக்கும் இதில் கொஞ்சம் அனுபவம் உண்டா? கடையை நெருங்கும் காட்சி விரைவில் விளக்கமாகவே வர உள்ளது.

    /ஒரு முறை மாவு அரைக்கப் போனபோது தவறுதலாய் பொடியும் கலந்து விட தோசை பயங்கர நெடி.. மிளகாய்ப் பொடிக்கு பதிலாக மூக்குப் பொடி தோசை!/

    இதுவும் நல்ல தமாஷ் ஆகத் தான் உள்ளது.

    /எந்த சப்ஜெக்ட்டை தொட்டாலும் உங்கள் கை வண்ணம் மிளிர்கிறது./

    எல்லாம் உங்களைப் போன்ற நலம் விரும்பிகள் அவ்வப்போது என்னை தட்டி எழுப்பியது தான் காரணம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான பாராட்டுக்கும் என் நன்றிகள், சார்.

    ReplyDelete
  37. அன்பின் வை.கோ = அருமையான நகைச்சுவைப்பதிவு. வ.வ.ஸ்ரீ. அருமையான நண்பராய் இருப்பார் போலிருக்கிறது. நகைச்சுவை கொடி கட்டிப் பறக்கிறது. வ.வ.ஸ்ரீயினைப் பார்க்க வரும் நண்பர்கள் அவரையும் அவரது எவர்சில்வர் பொடு டப்பாவினையும் மிக மிக இரசிப்பார்கள் போலும்.

    அவர் இருக்கையில் இல்லாவிட்டால் இப்பொடி நண்பர்க்ளுக்கு பொழுதும் போகாது - தூக்கமும் வராது. ஓசியில் கிடைக்கும் பொடியினை நாசியில் போடும் சிகம் இல்லையே என அவர்கள் வருந்துவர்.

    ந்கைச்சுவை மிக மிக இரசித்தேன். வழுவட்டையினையையும் எழுச்சியினையும் மறக்க இயலாது,

    ந்ஃல்வாழ்த்துகள் வை,கோ - நட்புடன் சீனா

    ReplyDelete
  38. முதல் அத்தியாயத்திலேயே வ.வ.ஸ்ரீ ம்னதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டு விட்டார்.

    ReplyDelete
  39. cheena (சீனா) said...
    //அன்பின் வை.கோ = அருமையான நகைச்சுவைப்பதிவு. வ.வ.ஸ்ரீ. அருமையான நண்பராய் இருப்பார் போலிருக்கிறது. நகைச்சுவை கொடி கட்டிப் பறக்கிறது. வ.வ.ஸ்ரீயினைப் பார்க்க வரும் நண்பர்கள் அவரையும் அவரது எவர்சில்வர் பொடு டப்பாவினையும் மிக மிக இரசிப்பார்கள் போலும்.

    அவர் இருக்கையில் இல்லாவிட்டால் இப்பொடி நண்பர்க்ளுக்கு பொழுதும் போகாது - தூக்கமும் வராது. ஓசியில் கிடைக்கும் பொடியினை நாசியில் போடும் சிகம் இல்லையே என அவர்கள் வருந்துவர்.

    ந்கைச்சுவை மிக மிக இரசித்தேன். வழுவட்டையினையையும் எழுச்சியினையும் மறக்க இயலாது,

    ந்ல்வாழ்த்துகள் வை,கோ - நட்புடன் சீனா//

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா. அன்புடன் vgk

    ReplyDelete
  40. ஸாதிகா said...
    //முதல் அத்தியாயத்திலேயே வ.வ.ஸ்ரீ ம்னதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டு விட்டார்.//

    மிக்க நன்றி, மேடம்.
    தொடர்ந்து 8 அத்யாயங்களையும் படியுங்கள். நகைச்சுவையாக இருக்கும்.

    ReplyDelete
  41. ஆரம்பமே அசத்தல் :)))
    எப்படியாவது சில நினைவுகளை கிளறி விடுவதுதான் சார் உங்கள் சாமர்த்தியம் .
    எனக்கு தெரிந்த ஒரு aunty எப்பவும் how sweet என்ற பதத்தை
    சொல்வார் உங்க ஹீரோ வழுவட்டை என்று கூறுவதைப்போல :)
    ஒரு முறை யாரோ விழுந்து சீரியசாக இருக்கும் விடயத்தை சொல்ல இவர் how sweet என்று சொல்லிவிட ...விவகாரமாகிடுச்சி ..

    ..அடுத்த பாகம் செல்கிறேன்

    ReplyDelete
  42. angelin said...
    //ஆரம்பமே அசத்தல் :)))
    எப்படியாவது சில நினைவுகளை கிளறி விடுவதுதான் சார் உங்கள் சாமர்த்தியம்.//

    மிகவும் சந்தோஷம், நிர்மலா.


    //எனக்கு தெரிந்த ஒரு aunty எப்பவும் how sweet என்ற பதத்தை
    சொல்வார் உங்க ஹீரோ வழுவட்டை என்று கூறுவதைப்போல :)
    ஒரு முறை யாரோ விழுந்து சீரியசாக இருக்கும் விடயத்தை சொல்ல இவர் how sweet என்று சொல்லிவிட ...விவகாரமாகிடுச்சி ..//

    ஆஹா, இதுவும் வழுவட்டையை விட சுவாரஸ்யமான நகைச்சுவையாகவே உள்ளது.
    How Sweet .... it is! ;)))))
    Very Nice Sharing.

    //..அடுத்த பாகம் செல்கிறேன்//

    ஹச்.. ஹச்.. ஹச்..
    செல்லுங்கோ ... செல்லுங்கோ
    தும்மல் இந்தக்கதைக்குச் செல்லும் போது நல்ல சகுனம் தான்.;)))))

    அன்புடன் vgk

    ReplyDelete
  43. அருமை! நகைச்சுவையான தொடக்கம் படிக்கத் தூண்டுகிறது!
    தொடர்கிறேன்!

    ReplyDelete
  44. Seshadri e.s. said...
    அருமை! நகைச்சுவையான தொடக்கம் படிக்கத் தூண்டுகிறது!
    தொடர்கிறேன்!//

    மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  45. அந்தப் பொடிக்குள்ளே என்னவோ மருந்து மாயம் வைத்திருக்கின்றார் போல் இருக்கின்றது

    ReplyDelete
  46. சந்திரகௌரி said...
    அந்தப் பொடிக்குள்ளே என்னவோ மருந்து மாயம் வைத்திருக்கின்றார் போல் இருக்கின்றது//

    வாங்க, வணக்கம் மேடம்.

    தொடர்ந்து இதன் மற்ற ஏழு பகுதிகளையும் படியுங்கள். மிகவும் நகைச்சுவையாகவே இருக்கும்.

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  47. நீங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க இங்கே வந்துள்ள்ளேன். இந்த பதிவி எப்படி என் கண்ணில் படாமல் தப்பி விட்டது என்று தெரியவில்லை..

    அனுபவ ஆரம்பம் நன்றாக இருக்கிறது. ஒரே ஒரு குறை என் கண்ணில்பட்டு இருக்கிறது அதை மற்ற பதிவுகளை படித்துவிட்டு சொல்ல்கிறேன். ஒகேவா சார்

    ReplyDelete
  48. வாங்க நண்பரே! குறை நிறை இரண்டையும் தாராளமாக எடுத்துச் சொல்லுங்கள். வரவேற்கிறேன். குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால், அவை மேலும் என்னை நன்கு செதுக்கிக்கொள்ள மிகவும் பயன்படும். தாராளமாக எதுவாக இருந்தாலும் விம்ர்சனம் செய்யுங்கள். நன்றி.

    ReplyDelete
  49. வழுவட்டை – இந்த வார்த்தையை நான் படித்த பள்ளியில் ஒரு வாத்தியார் அடிக்கடி சொன்னதாக நினைவு. நீங்கள் வரைந்த ஓவியமும், மூக்குப்பொடி டப்பி படமும் அருமை. கதையின் தொடக்கமும் சுவையாகவே ஆரம்பம்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கதையின் துவக்கம் போலவே தங்களின் விமர்சனமும் எழுச்சிமிக்கதாகவும் சுவையாகவும் உள்ளன. நன்றி, மிக்க நன்றி ஐயா.

      அன்புடன் vgk

      Delete
  50. திரு வழுவட்டை ஶ்ரீநிவாசனைக் குறித்து இப்போதே அறிந்தேன். தொடர்ந்து படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam July 23, 2013 at 12:12 AM

      வாங்கோ ... வணக்கம்.

      //திரு வழுவட்டை ஸ்ரீநிவாசனைக் குறித்து இப்போதே அறிந்தேன். தொடர்ந்து படிக்கிறேன்.//

      ஆஹா, படிக்க ஆரம்பிச்சுட்டேளா, சபாஷ்!

      பக்கத்தில் மாமாவையும் உட்கார வைத்துக்கொண்டு, அவ்ருக்கும் படிச்சுக் காண்பிச்சேளா?

      அது தான் இதில் மிகவும் முக்கியம். ;)))))

      அன்புடன் கோபு

      Delete
  51. பொடி போடாதவன் எப்படி பொடிப்பயல் ஆக முடியும்?

    ReplyDelete
  52. குங்குமச் சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல!!!!!!!!எப்படி சார் இப்படில்லாம உதாரணம் யோசிக்க முடியுது.

    ReplyDelete
  53. //“இதுகூடத் தெரியாமல் சுத்த வழுவட்டையாக இருக்கிறாயே!, எழுச்சியாக என்னுடன் புறப்பட்டு வா, நான் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்றார். //

    எங்கதான் புடிக்கறேளோ இந்த சொல்வடை எல்லாம். லயாக்குட்டி சிதம்பரம் போய் இருக்கா. அந்த தாத்தா, பாட்டியை பார்க்க. அதனால நானும் வழுவட்டையா இல்லாம, எழுச்சியா ஒரு 10, 15 பதிவுகளுக்காவது பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு நினைக்கறேன்.

    //வ.வ.ஸ்ரீ. தன்னிடம் வருபவர்களையெல்லாம் “வாங்க, வாங்க! இந்தாங்க, எழுச்சியோடு பொடிபோட்டுட்டுப்போங்க” என்று சொல்லிப் பொடி டின்னை திறந்து நீட்டும்போதெல்லாம், குங்குமச்சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல எனக்குத் தோன்றும். //

    என்ன ஒரு கற்பனை. பொதுவா இந்த மாதிரி நல்ல (!!!) பழக்கங்கள் உள்ளவங்க எல்லாம் அக்கம் பக்கத்துல இருப்பவங்கள வெத்தல, பாக்கு வெச்சு அழைப்பது வழக்கம் தானாமே.

    //“தம்பி, நீ ஒரு பொடிப்பையன். //

    அதானே! பொடி போடாதவன் பொடிப்பயல் தானே.
    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya May 16, 2015 at 6:50 PM

      வாங்கோ ஜயா ! வணக்கம்மா.

      **“இதுகூடத் தெரியாமல் சுத்த வழுவட்டையாக இருக்கிறாயே!, எழுச்சியாக என்னுடன் புறப்பட்டு வா, நான் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்றார்.**

      //எங்கதான் புடிக்கறேளோ இந்த சொல்வடை எல்லாம். லயாக்குட்டி சிதம்பரம் போய் இருக்கா. அந்த தாத்தா, பாட்டியை பார்க்க. அதனால நானும் வழுவட்டையா இல்லாம, எழுச்சியா ஒரு 10, 15 பதிவுகளுக்காவது பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு நினைக்கறேன்.//

      லயாக்குட்டிக்கும் ஜயாக்குட்டிக்கும் [பாட்டிக்கும் பேத்திக்கும்] ஒரு பெரிய கும்புடு போட்டுக்கறேன். :)

      மிக்க நன்றி, ஜயா.

      Delete
  54. மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

    அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

    அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

    'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

    மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

    முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

    இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    ReplyDelete
  55. ஓ ஓ இது பொடி போடுரவங்க பத்தின கதயோ. ஆரம்பம் நல்லாகீது.

    ReplyDelete
  56. டி. ஏ. எஸ். ரத்தினம் பொடிக்காராளுக்கு மட்டும் உங்களைப் பற்றி தெரிந்ததோ அவ்வளவுதான். கொத்திண்டு போயி வளம்பர பிரிவுக்கு மேனேஜரா போட்டு டுவா.

    ReplyDelete
  57. ஆஹா...வந்துட்டார் வ வ ஸ்ரீ...இனி ஒரே உல்லாசம்தான்...காமெடி-வெடி மீண்டும் துவக்கம்...

    ReplyDelete
  58. ஏதானும் ஒரு " பொடி" கம்பெனி உங்களுக்கு... ப்ராண்ட் அம்பாசிடரா பதவி கொடுத்துருக்காங்களோ???)))
    இதுகூட புரிஞ்சுக்க முடியாம சுத்த வழுவட்டையா இருக்கேனே..... இந்த பொடி டப்பா ஓல்ட் ஃபேஷனாச்சே... புது டப்பா ஏதும் கண்ல படலியா...ஆரம்பம் பொடி நெடியோட காரசாரமா இருக்கு... அச்சூஊஊஊ...அச்சூஊஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... May 5, 2016 at 10:08 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஏதானும் ஒரு " பொடி" கம்பெனி உங்களுக்கு... ப்ராண்ட் அம்பாசிடரா பதவி கொடுத்துருக்காங்களோ???))) //

      இதுகூட புரிஞ்சுக்க முடியாம சுத்த வழுவட்டையா இருக்கேனே.....//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      //இந்த பொடி டப்பா ஓல்ட் ஃபேஷனாச்சே... புது டப்பா ஏதும் கண்ல படலியா...//

      இது ஓல்டு பட் கோல்டு மேன் நம் வ.வ.ஸ்ரீ. அவர்கள் உபயோகித்ததாக்கும். :)

      //ஆரம்பம் பொடி நெடியோட காரசாரமா இருக்கு... அச்சூஊஊஊ...அச்சூஊஊஊஊஊ//

      அச்சா, பஹூத் அச்சா. தங்களின் அன்பு வருகைக்கும் அழகுக்கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete