About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, May 26, 2011

மூ க் கு த் தி [ பகுதி 3 of 7 ]



முன்கதை முடிந்த இடம்:

லிஃப்டில் ஏறுவதற்கே ஒரு நீண்ட க்யூ வரிசை காத்திருந்தது.  பேசாமல் படி ஏறிச்சென்றுவிடலாமா என்று நான் நினைத்தபோதே, “அய்யா, பெரியவரே! சீக்கரம் நகர்ந்து போங்க, லிஃப்ட் வந்து விட்டது” என்று சொல்லி என்னை அந்த லிஃப்ட் ரூமுக்குள் தள்ளிக்கொண்டு போய்விட்டனர், அங்கு கூடியிருந்த ஜனங்கள்.

----------------------------------------

“செயின், சங்கிலி, கிஃப்ட் அயிட்டம் பார்க்கப்போகிறவர்கள் எல்லாம் வெளியே வாங்க” என்றார், லிஃப்ட் ஆபரேட்டர், முதல்மாடி வரும்போது. 

லிஃப்டில் இருந்த பெண்கள் அவரவர் கழுத்தில் இருந்த செயின் சங்கிலி பத்திரமாக உள்ளதா என்று தடவிப்பார்த்துக்கொண்டனர்.

“நெக்லஸ் பார்க்க யாராவது இருந்தா தயவுசெய்து வெளியே வாங்க”  என்றார் இரண்டாவதுமாடி வரும்போது.  

“தங்க வளையல், ப்ரேஸ்லெட்டுகள்” என்றார் மூன்றாவது மாடியில் லிஃப்ட் கதவைத்திறக்கும்போது. 

“தோடு முக்குத்தி” என்றார் நான்காவது மாடியில். ஒவ்வொரு மாடி வரும்போதும் லிஃப்டில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர்.  நான்காவது மாடியில் நான் லிஃப்டை விட்டு வெளியே வந்த பிறகும், சிலர் ஐந்தாவது மாடிக்குச்செல்ல லிஃப்டினுள் இருந்தனர். 

அவர்கள் அனைவரும் ஏதாவது வெள்ளிச்சாமான்கள் பார்க்கவோ அல்லது வாங்கவோ செல்பவர்களாக இருக்கலாம் என்று தோன்றியது, எனக்கு.

நாலாவது மாடியில் இருந்த விற்பனைப்பிரிவுக்குள் நுழைத்தேன், நான். அங்கும் ஒரே கூட்டம். ஒருபுறம் காதுத்தோடுகள். மறுபுறம் மூக்குத்தி வகையறாக்கள்.  

உட்கார இடமில்லாமல் ஒருவர் முதுகை ஒருவர் பார்த்த வண்ணம், உட்கார்ந்து சிலரும், நின்றுகொண்டே பலரும் ஏதேதோ நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

குறுக்கும் நெடுக்கும் ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களும், ஒருசில கைக்குழந்தைகளும் வேறு ஆங்காங்கே தென்பட்டனர்.

பொறுமையிழந்த நானும் முண்டியடித்தபடி மூக்குத்தி இருக்குமிடம் நெருங்கி, அப்போதுதான் காலியான ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றில், மஞ்சள் பையையும், மடக்கிய குடையையும் பத்திரமாகப்பிடித்தபடி, அமர்ந்து கொண்டேன்.

“பெருசுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு சீக்கரம் அனுப்புப்பா” சிறுசுகள் (வயதுப்பெண்கள்)  கூட்டத்திற்கு நெடுநேரமாக மூக்குத்திகளைக் காட்டிக்கொண்டிருந்த ஒருவன், மற்றொருவனிடம் சொன்னான்.

சுமார் ஐம்பது மூக்குத்திகள் பதித்த பலகையொன்று,  அந்த கண்ணாடி மேஜை மீது ஒரு துணிவிரிக்கப்பட்டு, அதன் மேல் வைக்கப்பட்டு, என் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.     

ஒத்தைக்கல்லு, மூணுகல்லு, அஞ்சுகல்லு, ஆறுகல்லு, எட்டுக்கல்லு, முழுவதும் வெள்ளைக்கல்லு, மேலே ஒன்று மட்டும் சிவப்புக்கல்லு, என பலவகைகள் இருந்தன. 

அவற்றில் ஒன்றிரண்டை கையில் எடுத்துப்பார்த்தேன். மிகவும் லேஸானதாக வெயிட் இல்லாமல், காற்றில் பறந்து விடும்போல இருந்தன.

“இரண்டு கிராமுக்கு மேல், நல்ல வெயிட் உள்ளதாக, உறுதியாக உள்ளதாகக் காண்பிப்பா” என்றேன்.

“இப்போதெல்லாம் யாருங்க வெயிட் உள்ள மூக்குத்தியாக விரும்புறாங்க? மூக்குக்கும் மூக்கோட்டைக்கும் சிரமம் இல்லாமல், மூக்குத்தி போட்டுள்ளோமா இல்லையா என்றே தெரியாதபடி, வெயிட் இல்லாமல் இருக்கணும்னு தான் சொல்றாங்க;  

சில நவநாகரீகப்பெண்மணிகள், மூக்கில் ஓட்டையே போடாமலும், மூக்குத்தியே அணியாமலும் இருந்து விடுகிறார்கள்; 

அப்படியே மூக்குத்தி போட்டாலும், ஒரே ஒரு சிறியகல் வைத்தது போதும் என்கிறார்கள்; 

’எட்டுக்கல்லு பேஸ்திரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்குன்னு’ சொன்னதெல்லாம் அந்தக்காலம் ஐயா” என்றான்.   


தொடரும்


[ இந்தக்கதையின் தொடர்ச்சி ( பகுதி 4 / 7 ) நாளை மறுநாள் சனிக்கிழமை 28.05.2011 அன்று வெளியிடப்படும் ] 

32 comments:

  1. மூக்குத்தியில் இத்தனை வகைகளா? nice. :-)

    ReplyDelete
  2. இயல்பான நடை என்பதால் சீக்கிரம் படித்து விடுகிறோம்
    இன்னும் கொஞ்சம் கூடுதலாக
    எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம்
    வருவதை தவிர்க்க இயலவில்லை
    கதை சிறப்பாக தொடர்கிறது
    அதிக எதிர்பார்ப்புடன் தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் நேக்கு” என்கிற பாடலை நடுவே நியாபகப் படுத்தியது நல்லது. ஒரு முறை கேட்க வேண்டும்.

    பெரும்பாலான பெண்கள் மூக்குத்தி அணிவது இல்லை இப்போதெல்லாம். அதுவும் வட இந்திய பெண்கள் இதைப் பற்றி யோசிப்பது கூட இல்லை…

    அடுத்த பகுதிக்கான ஆவலுடன்…

    ReplyDelete
  4. ஒத்தைக்கல்லு, மூணுகல்லு, அஞ்சுகல்லு, ஆறுகல்லு, எட்டுக்கல்லு, முழுவதும் வெள்ளைக்கல்லு, மேலே ஒன்று மட்டும் சிவப்புக்கல்லு, என பலவகைகள் இருந்தன. //
    மூக்குத்தியில் எத்தனை வகைகள்!!

    ReplyDelete
  5. ’எட்டுக்கல்லு பேஸ்திரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு!!//
    Nice song..’

    ReplyDelete
  6. @வெங்கட் இங்க மட்டும் என்னவாம். இங்கையும்தான். மூக்குத்தி வகைகள் பத்தி மனைவிக்கு மூக்குத்தி வாங்க போனப்ப தெரிஞ்சிகிட்டேன்

    ReplyDelete
  7. நகை வியாபாரம் , கத்திரிக்காய் வியாபாரமாகிவிட்டது. இரண்டு கிராம் என்றாலே பார்வை மாறிவிடுமே. அருமையான நடை கதாபாத்திரத்தை உணர வைக்கிறது.

    ReplyDelete
  8. Mookuthi muththalazzhu - inthap pssttum ninaivukku varuthu!

    ReplyDelete
  9. திரு. சுந்தர்ஜி அவர்களிடமிருந்து ஈ.மெயில் மூலம் வந்துள்ள பின்னூட்டம்:

    //உங்கள் தளத்தில் பின்னூட்டமிடமுடியவில்லை.

    நகைக்கடையை நன்கு உன்னிப்பாகக் கவனித்திருக்கிறீர்கள்.

    மூக்குத்தியின் டாலடிக்கும் பளபளப்பு ஒவ்வொரு குட்டிக் குட்டி இடுகையிலும்.

    கொஞ்சம் பெரிதாக இடுகையும் கொஞ்சம் சிறியதாக எழுத்தின் வடிவமும் இருக்கலாம். அல்லது பட்டைத் தன்மையை எடுத்து மெலிதான எழுத்துக்களில்
    இடுகையை யோசித்துப் பாருங்கள்//

    My Dear Sundarji, Sir,

    தங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.

    இந்த ஏற்கனவே திட்டமிடப்பட்ட மூக்குத்தியை (பாகம் 1 to 7) மட்டும் பொறுத்துக்கொள்ளவும்.

    அடுத்து வரப்போகும் பகுதிகளில் சற்றே கூடுதலான வரிகள் இருக்கும்.

    இதற்கு அடுத்த கதைகளில் எழுத்தின் வடிவத்தைக் குறைத்து விடுகிறேன்.

    அன்புடன்,
    vgk

    ReplyDelete
  10. மூக்குத்தி வாங்கப் போவது முதல் ஏகப்பட்ட ஸஸ்பென்ஸ்.கதை சிறியதாயிருந்தாலும் நல்ல விஸ்தீரணம். பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. உங்களின் அபார எழுத்து நடையில் மூக்குத்தியின் ஜொலிப்பு மின்னலாய் பின்னிஎடுக்கிறது , மூக்குத்தயின் பல வகைகளை அறிந்தேன் நன்றி ஐயா

    ReplyDelete
  12. மூக்குத்தி போலவே எழுத்தும் மெருகேறி ஜொலிக்கிறது..
    இரண்டு நாட்களாக பின்னூட்டம் போட முடியாமல் ஏதோ பிரச்னை..
    இன்றுதான் அதற்கு விடிவு வந்தது..

    ReplyDelete
  13. ரூ 4820/- க்கு மூக்குத்தியா? ஏதோ பெரிய விஷயம் இருக்கும் போலேயே. !!.

    Waiting waiting Venkat naan,
    How I wonder what is on !!

    ReplyDelete
  14. மூக்குத்தி மேட்டர்ல என் மூக்கும் இப்போ நமநமங்குது.

    உங்கப் பாட்டைக் கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்த பாடல்கள்...

    ஒத்தக் கல்லு மூக்குத்தி ஜோலிக்குதடி
    உன்னை முத்தமிடும்போது தடுக்குதடி

    .. மூக்குத்திபூமேல காத்து உட்கார்ந்து பேசுதம்மா ..

    ... மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாக்ஷிக்கு மதுரையிலே முகூர்த்தநாள் ..

    ReplyDelete
  15. மூக்குத்தி வகைகளை கேட்டுக் கொண்டே வருகிறேன். இரண்டு கிராமில் மூக்குத்தியா!!!!

    ReplyDelete
  16. இந்தப்பகுதிக்கு வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களை எடுத்துச்சொல்லி, என்னைப்பாராட்டி உற்சாகம் கொடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  17. “இப்போதெல்லாம் யாருங்க வெயிட் உள்ள மூக்குத்தியாக விரும்புறாங்க? மூக்குக்கும் மூக்கோட்டைக்கும் சிரமம் இல்லாமல், மூக்குத்தி போட்டுள்ளோமா இல்லையா என்றே தெரியாதபடி, வெயிட் இல்லாமல் இருக்கணும்னு தான் சொல்றாங்க;
    நாம் கேட்கும் நகை டிசைனை விட, அவர்கள் வைத்திருக்கும் டிசைன்களை நமது தலையில் கட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்

    ReplyDelete
  18. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

    தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    //நாம் கேட்கும் நகை டிசைனை விட, அவர்கள் வைத்திருக்கும் டிசைன்களை நமது தலையில் கட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்//

    மிகச்சரியாகவே சொல்லிவிட்டீர்கள். அது தான் நடைமுறையில் இப்போது எங்குமே நடக்கிறது. ;)


    அன்புடன்
    vgk

    ReplyDelete
  19. ஹா..ஹா..ஹா... சூப்பராப் போகுது மூக்குத்திக் கதை... ஆனாலும் 2ம் மாடியில இறங்கி, வைர நெக்லஸ் பார்க்காமல் விட்டது எனக்கு கொஞ்சம் கவலையைத் தருது.. நான் அந்தப் பெரியவருக்குச் சொன்னேன்:)....

    ReplyDelete
  20. //athira October 22, 2012 1:27 PM
    ஹா..ஹா..ஹா... சூப்பராப் போகுது மூக்குத்திக் கதை... ஆனாலும் 2ம் மாடியில இறங்கி, வைர நெக்லஸ் பார்க்காமல் விட்டது எனக்கு கொஞ்சம் கவலையைத் தருது.. //

    நவராத்திரி வெள்ளிக்கிழமையும் அதுவுமா, ஓர் சுமங்கலிப் பொண்ணு வாய் திறந்து கேட்டுட்டீங்களேன்னு, எவ்வளவு ஆசை ஆசையாக நான் வைர நெக்லஸ், வைர மூக்குத்தி, வைரத்தோடு மூன்றுமே உங்களுக்காக வாங்கித்தர எழுச்சியுடன் புறப்பட்டேன்.

    உங்க சைஸ் என்ன்வென்று ஒரே ஒரு கேள்வி கேட்டேன்.

    அதுவும் உங்க நெக் சைஸ் - வைர நெக்லஸ் ஆர்டர் கொடுக்க மட்டுமே.

    உடனே உஷார் ஆகி ஏதேதோ சொல்லி நான் வைர நகைகள் வாங்கச்செல்வதைத் தடுத்து, என்னை வழுவட்டையாக ஆக்கிட்டீங்களே.

    அதில் எனக்கு ரொம்பவும் வருத்தம் தான். ;(((((

    நீங்க சொன்னதை நீங்களே படியுங்கோ:

    -=-=-=-=-=-=-

    http://gopu1949.blogspot.in/2012/10/blog-post.html#comment-form

    *****athira October 20, 2012 4:12 AM
    ஹையோ ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)) தெரியாமல் ஒரு தூங்கும் புலியின் மீசையில:) .. டச்சு பண்ணிட்டேன்ன்ன்ன்ன்:)... எனக்கு வைரமும் வாணாம்ம்.. தங்கமும் வாணாம்ம்:)).. நான் திருப்பதியில பிச்சை எடுத்து என் நேர்த்தியை நிறைவேத்தப் போறேன்ன் ஜாமீஈஈஈஈஈ:)) பூஸ் ஒன்று புறப்படுதே:)) பிச்சை எடுக்கத்தேன்:))...

    //[அதாவது வைரமூக்குத்தி, வைரத்தோடு போடும்
    மூக்கு, காது துவாரங்களைத்தான் சொல்றேன்]

    தொடரும்......//

    வாணாம்ம்.. வணாம்ம்ம் ஜொல்லிட்டேன்ன்:)).. “முற்றும்” :) எனப் போட்டு முடிச்சிட்டு டக்குப் பக்கெனப் புதுத்தலைப்பு போட்டிடுங்கோ:).. போற வழியில மங்கோ ஊசாவது கிடைக்கும்:))..

    உஸ்ஸ்ஸ்ஸ் என் தலை தப்பியது அம்பிரான் புண்ணியம் ஜாமீ:)) கட்டிலடியை விட்டு வெளியில வர ஆசைச்ப்பட்டது டப்பாப்போச்சு:).. இனி முருங்கில ஏறி இருந்திட வாண்டியதுதான்:).

    குட்டி ஊசி இணைப்பு:
    உங்கள் “மூக்குத்தி” தலைப்பு ஓபின் ஆகுதில்லையே:( கோபு அண்ணன் கவனியுங்கோ. சீயா மீயா... *****

    -=-=-=-=-=-

    //நான் அந்தப் பெரியவருக்குச் சொன்னேன்:)....//

    அப்படியா? நீங்க என்னைத்தான் சொல்றீங்களோன்னு நினைச்சுப்புட்டேன்.

    சரி, எப்போ வேண்டுமென்றாலும் தயங்காமல் கேளுங்கோ.
    வைர நெக்லஸ், வைரத்தோடுகள், வைர மூக்குத்தி மூன்றும் தான் சொல்றேன்.

    அவனவன் சத்திரம் கட்டுகிறான், சாவடி கட்டுகிறான் ஏதேதோ தான தருமங்கள் வெட்டியாகச் செய்கிறான்.

    என் அன்புத்தங்கை , நகைச்சுவை ராணிக்கு, after all வைர நகைகள் செய்து போடுவது எனக்கு மிகப்பெரிய காரியமா என்ன?

    அதைவிட இந்த ஜன்மா எடுத்ததில் வேறு ஏதும் ஒரு உறுப்படியான ஜோலியும் தான் எனக்கு உண்டோ? NEVER ! ;)

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  21. Very beautiful, I used to wear nose stud from std 5 to std 12, In std 12 when I had chicken pox It was gone... After that I was also scared so did not try them furthuer.
    different nose studs and the crowd in the shops, I think is still the same....

    ReplyDelete
  22. Priya Anandakumar August 22, 2013 at 6:22 AM

    வாங்கோ, வணக்கம்.

    //Very beautiful,//

    சந்தோஷம்.

    //I used to wear nose stud from std 5 to std 12, In std 12 when I had chicken pox It was gone... After that I was also scared so did not try them furthuer.//

    அடடா, அப்படியா !

    //different nose studs and the crowd in the shops, I think is still the same....//

    ஆம், நகைக்கடைகளிலும், ஜவுளிக்கடைகளிலும் கும்பலுக்குக் கேட்கவே வேண்டாம், ஒரே தேர்த்திருவிழா போன்ற கும்பல்கள், தான், அதுவும் எங்கள் ஊர் திருச்சியில்.

    அன்பான தங்களின் தொடர் வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

    இதைவிட “சுடிதார் வாங்கப்போறேன்” என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள ஓர் சிறுகதை, மிகவும் ஜாலியாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

    இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html

    ReplyDelete
  23. பெரிசுக்கு என்ன வேணும்? வயசானா ஆடு மாடுகளுக்கு இணையாகத்தான் மதிக்கிறாங்க.

    ReplyDelete
  24. நீங்க அதாவது கதையின நாயகர் வைர மூக்குத்தி தானே வாங்க போரார்?

    ReplyDelete
  25. மூக்குத்தி தினுசுகளைப் பார்த்து மலைத்துப் போன நாங்க விலையைப் பார்த்து மயக்கமே போட்டுடப் போறோம்.

    இன்றைய காலகட்டத்தில் நடப்பதை அப்படியே புட்டுப் புட்டு வைக்கறீங்க.

    ReplyDelete
  26. Jayanthi Jaya June 2, 2015 at 10:29 PM

    //மூக்குத்தி தினுசுகளைப் பார்த்து மலைத்துப் போன நாங்க விலையைப் பார்த்து மயக்கமே போட்டுடப் போறோம்.

    இன்றைய காலகட்டத்தில் நடப்பதை அப்படியே புட்டுப் புட்டு வைக்கறீங்க.//

    மிகவும் சந்தோஷம் ஜெயா.

    ReplyDelete
  27. ஓ ஓ.. மூக்குல போடுர நகக்கு பேருதா மூக்குகுத்தியா வெளங்கி போச்சு.

    ReplyDelete
  28. மூக்குத்தியில் இவ்வளவு வெரைட்டி இருக்குனு தெரிஞ்சுண்டோம். பெரிசுக்கு என்னவேணும்னு ஏன் மரியாதைக்குறைவா பேசுறாங்க. இந்த சிறிசு களும் ஒருநாள் பெரிசா ஆகும் போதுதான் புரிஞ்சுப்பாங்க. மரியாதை கொடுத்து மரியாதயை வாங்கணும் என்று.

    ReplyDelete
  29. கார்ப்பரேட் கடைன்னாக்க கெட் அப்புக்குதான் ரெஸ்பெக்டு...மூக்குத்தி செலக்சன் என்னாகுதுன்னு பாப்போம்...

    ReplyDelete
  30. கடைக்குள் நாமும் சென்று கூடவே இருப்பது போன்று உணரவைக்கிறது!

    ReplyDelete
  31. மூக்குத்திகள் பற்றி நிறையவே விவரங்கள் சொல்லி இருக்கீங்க. இப்படிலாம் யாரு மூக்குத்தி போடுறாங்களே. ஒவ்வொரு நகைக்கு ஒவ்வொரு மாடியாபிரிச்சு வச்சிருக்காங்களே. நல்ல ஐடியாதான்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete