About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, June 25, 2013

15] பணம் தான் பிரதானமா ?

2
ஸ்ரீராமஜயம்
‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்.  

பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடு தான் ஆச்சார நெறிமுறைகள், கல்வியறிவு எல்லாம் போய்விட்டன. 

நம் தேசத்தில் பணம் முக்கியமாய் இருந்ததே இல்லை. 

உலக வாழ்க்கையை, ஆத்ம அபிவிருத்திக்கு துணையாக மட்டும் வைத்துக் கொள்வதுதான், நமது தேச நெறிமுறை.

என்ன பண்ணுவது என்று சரியாகத் தெரியாமல், புரியாமல் நாமாகவே ஏதேதோ முயற்சி பண்ணி திண்டாடுவதாக இல்லாமல் இலட்சியத்தை அடைந்த பெரியவர்கள் வழிமுறையாக ”இப்படி இப்படி பண்ணுப்பா” என்று போட்டுக் கொடுத்திருக்கும் வழிமுறைப்படி பண்ணுவதற்குத்தான் ’சாதனை’ என்று பெயர்.

oooooOooooo


அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 


முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10    

முன் கதை பகுதி- 4 of 10  ..... தங்கள் நினைவுக்காக 

வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், “என்ன சொன்னே ...  என்ன சொன்னே .... நீ? பணம் இருந்தால் எது வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ?

”தேபெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகளோட  யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேத வித்தோட கால்தூசி பெறுவயா நீ? அவரப்பத்தி என்னமா நீ அப்படிச் சொல்லலாம்? 

நேத்திக்கு மஹாலிங்க ஸ்வாமி சந்நதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன்! நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு! 

நேத்திக்கு ஜப நேரத்திலே ...... கனபாடிகள் முடியாம கண் மூடி உட்கார்ந்திருந்த நேரத்திலே ........... நீ அவர்ட்ட போய் கடுமையாக “ஏங்காணும் ... காசு வாங்கல நீர்! இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கிறீரே”னு கத்தினது உண்டா இல்லியா?”  என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப்போனது.

கை-கால்கள் நடுங்க சாஷ்டாங்கமாக ஸ்ரீமஹாபெரியவா கால்களில் விழுந்தார், நாராயணஸ்வாமி ஐயர்.ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். 

வாயப்பொத்திக்கொண்டு நடுக்கத்துடன், “தப்புதான் பெரியவா! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பார்த்து, ஸ்வாமி சந்நதியிலே சொன்னதும் வாஸ்தவம் தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா!” என்று கெஞ்சினார். பெரியவா விடவில்லை. 

“இரு ... இரு ... நீ அந்த ஒரு தப்பை மாத்திரமா பண்ணினே? சொல்றேன் கேளு! எல்லோருக்கும் நீ தக்ஷிணை கொடுத்தியோள்யோ ... ஒவ்வொரு வைதீகாளுக்கும்  நீ எவ்வளவு தக்ஷிணை கொடுத்தே?” என்று கேட்டார். 

மிராசுதார், மென்று விழுங்கிய படியே, ”தலைக்குப்பத்து ரூபா கொடுத்தேன் பெரியவா” என்றார் ஈனஸ்வரத்தில்.   

ஸ்வாமிகள் நிறுத்தவில்லை. “எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப்பத்து ரூவாவா கொடுத்தே! எனக்கு எல்லாம் தெரியும்” என்று மடக்கினார். 

மிராசுதார் மெளனமாக நின்றார். ஆனால் ஆச்சார்யாள் விடவில்லை. 


[பகுதி 5 of 10]


”நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறதை நான் சொல்றேன், கேட்டுக்கோ .... நோக்கு சொல்ல வெட்கமாயிருக்குப்போல. 

வைதீகாளையெல்லாம் வரிசையா ஸ்வாமி சந்நதியிலே ஒக்காத்தி வெச்சு, தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்ட வந்தபோது, ’இவர்தான் சரியா ருத்ரம் சொல்லலியே .... இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்?’னு நெனச்சு ஏழு ரூவா ஸம்பாவனை பண்ணினே. ஏதோ அவரைப்பழி வாங்கிட்டதா எண்ணம் நோக்கு. 

கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணினாரா பாத்தியா? நீ கொடுத்ததை வாங்கிண்டு அப்படியே வேஷ்டித் தலைப்பிலே முடிஞ்சிண்டார்.  நா சொல்றதெல்லாம் சரிதானே சொல்லு” என்று உஷ்ணமானார் ஆச்சார்யாள்.

பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர். ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.  

”நேற்று திருவிடைமருதூர் கோயிலிலே நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’  என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

மிராசுதார் ஸ்ரீ பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, “தப்புத்தான் பெரியவா, ஏதோ அக்ஞானத்தில் அப்படியெல்லாம் நடந்துண்டேன். இனிமேல் அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிச்சுடுங்கோ” என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா “இரு... இரு...! இத்தோடு முடிஞ்சிட்டாத்தான் பரவாயில்லையே .... ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மஹாதானத்தெரு ராமச்சந்திர ஐயர் கிருஹத்திலே தானே  சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே?” என்று ஓர் கேள்வியைப் போட்டார்.     

“ஆமாம், பெரியவா” இது மிராசுதார்.

உடனே ஆசார்யாள், ”சாப்பாடெலாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே.  பந்தியிலே நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, திராக்ஷையெல்லாம் போட்டு சர்க்கரைப் பொங்கல் பண்ணச்சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே ... சரியா?” என்று கேட்டார். 

வெலவெலத்துப்போய் விட்டார் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். தொடரும்


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 27.06.2013 வியாழக்கிழமை வெளியாகும்]

என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்


40 comments:

 1. அதிசய நிகழ்வுக்கேற்ப ஆரம்ப கருத்துக்களும் அருமை ஐயா... ஆவலுடன் தொடர்கிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அருமை! தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 3. Waiting to read further.
  viji

  ReplyDelete

 4. //உலக வாழ்க்கையை, ஆத்ம அபிவிருத்திக்கு துணையாக மட்டும் வைத்துக் கொள்வதுதான், நமது தேச நெறிமுறை.// அமுதமொழிகள்!

  பாவம் மிராசுதார்! இன்னும் என்ன சம்பாவனை பாக்கியிருக்கோ?

  ReplyDelete
 5. கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணினாரா பாத்தியா? நீ கொடுத்ததை வாங்கிண்டு அப்படியே வேஷ்டித் தலைப்பிலே முடிஞ்சிண்டார். நா சொல்றதெல்லாம் சரிதானே சொல்லு” என்று உஷ்ணமானார் ஆச்சார்யாள்.

  பெரியவாளையே உஷ்ணமாக்கிய செயல் ...!

  ReplyDelete
 6. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ
  அமுதம் தொடர்கிறது ...!

  ReplyDelete
 7. இதுவரை அறியாத அற்புதத்
  தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 8. அடுத்த திருப்பத்தை எதிர்பார்த்து நிற்கும்படி , சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.

  ReplyDelete
 9. பணம் மட்டுமே பிரதானம் இல்லை என்பதை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்....

  நல்ல பகிர்வுக்கு நன்றி.....

  ReplyDelete
 10. பணம்தான் பிரதானமா நல்ல சிந்தனைத் தத்துவம் ஐயா!...

  ஆனால் உலகம் இதற்குப் பின்னால்தானே ஓடிக்கொண்டு இருக்கிறது...

  மிராசுதாரர் ஐயோ பாவமாய் இருக்கே.
  தொடர்ந்து...

  ReplyDelete
 11. //என்ன பண்ணுவது என்று சரியாகத் தெரியாமல், புரியாமல் நாமாகவே ஏதேதோ முயற்சி பண்ணி திண்டாடுவதாக இல்லாமல் இலட்சியத்தை அடைந்த பெரியவர்கள் வழிமுறையாக ”இப்படி இப்படி பண்ணுப்பா” என்று போட்டுக் கொடுத்திருக்கும் வழிமுறைப்படி பண்ணுவதற்குத்தான் ’சாதனை’ என்று பெயர்.//

  மிக அருமையான வரிகள்!!

  ReplyDelete
 12. ரசித்தேன். எழுத்துகள் பல வடிவங்களில் வருகின்றன. ஒரே மாதிரி இருந்தால் பதிவின் மெருகு கூடும்.

  ReplyDelete
 13. அற்புதத் தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு அய்யா. தொடர்கிறேன். நன்றி

  ReplyDelete
 14. ‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்.//

  உண்மைதான்.
  இதை அழகாய் மிராசுதார் மூலம் அழகாய் உணர்த்திவிட்டார்.
  மிராசுதார் மாதிரி இருப்பவர்கள் உணர்ந்து நடந்து கொண்டால் நல்லது.
  மனிதர்களை அவமதிக்காமல் மதிக்க கற்றுக் கொள்வது நல்லது என்பதை அழகாய் விளக்குகிறது தெய்வத்தின் குரல்.

  ReplyDelete
 15. எனக்கும் ஆச்சர்யமாய் இருக்கிறது. மஹா பெரியவருக்கு எப்படி அங்கே நடந்ததெல்லாம் சினிமாப் படம் போல் போட்டுத தாக்குகிறாரே.

  தொடருங்கள்.....

  ReplyDelete
 16. காசு ,பணம் ,பதவி,அழகு,கல்வி
  இவற்றின் மீது மோகம் கொண்டு
  கர்வம் பிடித்து மற்றவர்களை
  இழிவு செய்து அலைபவன்
  பேச தெரிந்த மிருகம்.

  அனைவரையும், அனைத்து உயிர்களையும்
  இறைவனின் வடிவங்களாக கண்டு
  தன்னலம் கருதாது அன்பு ,தயை,காட்டி
  குறைகாணாது பிறர் துன்பம்,துயர் போக்கி
  அதை விளம்பரப்படுத்தாது
  அமைதியாக இருப்பவனே
  உண்மையான
  துறவி.

  அவர்களை இந்த உலகம்
  உள்ளளவும் போற்றும்.

  அவர்களின் வாழ்வில்
  நடந்த சம்பவங்கள
  நம்மை உயர்த்தும்
  பாடமாக கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 17. //‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்.

  பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடு தான் ஆச்சார நெறிமுறைகள், கல்வியறிவு எல்லாம் போய்விட்டன. //

  ஆமாம், இதைப் படிக்காமலே போன பதிவில் பின்னூட்டமிட்டேன். ஆங்கிலேயன் வந்து முதலில் அழித்தது நம் குருகுலக் கல்வித்திட்டத்தைத் தான். அதன் மூலம் நாம் இழந்தது எத்தனை! அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி தான் சிறந்தது என்ற எண்ணமும் அதன் பிறகே ஏற்படவும் ஆரம்பித்தது. :((((

  ReplyDelete
 18. கொடுப்பதும்,கிடைப்பதை வாங்கிக் கொள்வதும், இல்லாதவர்களாக இருந்தால், வைதீகக் காரியங்கள் ஒத்தை ரூபாயையே திருப்பித் திருப்பி வைத்து நிறைவுறச்செய்வதுமாக இருந்த ஒருகாலத்தில், இம்மாதிரி பேத ஸ்வாபமுள்ளவர்களும்,இருந்திருக்கிறார்கள்.
  பணம் ப்ரமாதமில்லை. குணம் நல்லதாக அமைய வேண்டும். எவ்வளவு ஆழமான கருத்துகள். இன்னும் என்ன நிகழ்ச்சிகளோ? ஆர்வமுடன் காத்திருக்கிறேன், அறிந்து கொளவதற்கு. ஆசிகளுடனும், அன்புடனும்

  ReplyDelete
 19. பந்தியில் என்ன பிழை செய்தாரோ மிராசுதாரர்? வயதிலும் பக்குவத்திலும் வேதங்களைக் கற்றுணர்ந்த பெரியவரை பலர்முன் அவமதித்த செயலொன்றே அவர் செய்த யாகத்தின் மகிமையைக் குறைத்துவிடுகிறதே... மகாபெரியவரின் கிருபையால் அவர் அதை உணர்ந்தாரா?

  அறியும் ஆவலுடன் தொடர்கிறேன்.

  ReplyDelete
 20. வெகு அருமையாய் கருத்துக்களையும் அதிசய நிகழ்வையும் சொல்கிறீர்கள்... நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 21. //15] பணம் தான் பிரதானமா ?/// அதானே?:) அப்போ பின்னூட்டம் பிரதானம் இல்லயா?:)) இல்ல பின்னூட்டத்துக்கான பதில்தான் பிரதானமில்லையா?:))

  ReplyDelete
 22. //நம் தேசத்தில் பணம் முக்கியமாய் இருந்ததே இல்லை.
  ///

  ... அபச்சாரம் அபச்சாரம்:))

  ReplyDelete
 23. மிரசுதாரரை.. கண்டபடி மிரட்டி உருட்டுவதே பெரியவாளுக்கு பொழுதுபோக்குபோல இருக்கு... ஆனா மிரசுதாரரும் திருந்துறாரோ பாருங்க:).. சுவாமியார் கண்டு பிடிப்பார் என நன்கு தெரிந்தும்..:) தன் கொள்கையை கைவிடேல்லை, என்பது பகுதி 16 ஐயும் படிச்சேன் தெரியுதே:))).. கீப் இட் அப் மிரசுதாரரே:))

  ReplyDelete
 24. அருமை ஐயா,தொடர்கிறேன்!!

  ReplyDelete
 25. மகாபெரியவருக்கு தெரியாதது உண்டோ
  மிராசுதாரர் பட்டு தெரிந்துகொண்டிருப்பார்..... தொடர்கிறேன்

  ReplyDelete
 26. என்ன பண்ணுவது என்று சரியாகத் தெரியாமல், புரியாமல் நாமாகவே ஏதேதோ முயற்சி பண்ணி திண்டாடுவதாக இல்லாமல் இலட்சியத்தை அடைந்த பெரியவர்கள் வழிமுறையாக ”இப்படி இப்படி பண்ணுப்பா” என்று போட்டுக் கொடுத்திருக்கும் வழிமுறைப்படி பண்ணுவதற்குத்தான் ’சாதனை’ என்று பெயர்.//

  நல்லதொரு விளக்கம்! நன்றி ஐயா!

  ReplyDelete
 27. //பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்//. பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.அன்பு,பாசம் உட்பட.
  மிராசுதரின் கதையும்,அமுதமழையும் இம்முறை ஒன்றுகொன்று தொடர்புள்ளதாக இருக்கு. முக்கியமான இடத்தில் தொடரும். தொடர்கிறேன்.

  ReplyDelete
 28. ‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும்.

  பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடு தான் ஆச்சார நெறிமுறைகள், கல்வியறிவு எல்லாம் போய்விட்டன.

  நம் தேசத்தில் பணம் முக்கியமாய் இருந்ததே இல்லை. //

  இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

  கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும், பசி நேரத்தில் ஒரு நோட்டை சாப்பிட முடியுமா?

  ஒரு சின்ன தவறுக்குகூட பயந்த காலம் போய், பெரிய தவறுகளையும் சர்வ சாதாரணமாக செய்யும் காலகட்டத்தில் இருக்கிறோம்.

  இந்த நல்ல விஷயங்களைப் படித்து எங்கோ, யாரோ ஒருவர் திருந்தினாலும் வெற்றி தான்.

  ReplyDelete
 29. Thank you very much for sharing, Sir. It is always a pleasure to read and learn from the real life stories of divine people. I'll read the continuation as well.

  ReplyDelete
 30. எப்பா!!!எல்லா டீட்டயல்சும் சொல்கின்றாரே ஸ்வாமிகள்.பாடம் கற்க மிராசுதார் ரயிலேறி வந்திருக்கிறார்.

  ReplyDelete
 31. அமுத மொழிகளை படித்தேன். பணம் மட்டுமே என்றுமே பிரதானமில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

  பொங்கலும் தர மாட்டேன் என்றாரோ...

  ReplyDelete
 32. அன்பின் வை.கோ - பெரியவா இப்படிப் பொங்குவாரென்றோ - கடும் கோபத்துடன் பக்தரை உண்டு இலை என ஆக்கி விடுவாரென்றோ கேள்விப்பட்டதில்லை- மிராசுதாரர் செய்த செய்கைக்கு இதுவும் வேண்டும் - இன்னமும் வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 33. நாராயணஸ்வாமி அய்யர் நன்னா வகையா மாட்டிண்டுட்டார்.

  ReplyDelete
 34. பந்தியிலே பாரபட்சம் காட்டக்கூடாதே.

  ReplyDelete
 35. குருசாமி அல்லாத்தயும் நேரில பாக்காங்காட்டியும் புட்டு புட்டு வக்கிறாகளே

  ReplyDelete
 36. பெரியவாளுக்கே கோபம் வரதுன்னா மிராசுதார் பண்ணியது மன்னிக்க முடியாத குற்றமாகத்தான் இருக்கணும்.

  ReplyDelete
 37. ‘பணம் தான் பிரதானம்’ என்ற ஒரே அம்சத்தை மட்டும் நாம் மாற்றிக்கொண்டு விட்டால் போதும். /// பலருக்கும் இது பொருந்தும்...மஹானின் ஞான சிருஷ்டி அற்புதம்.

  ReplyDelete
 38. மிராசு தாருக்கு நல்ல பாடம் கற்பிக்கத்தான் பெரியவா இவ்வளவு கோவப்பட்டுருக்கா. என்ன பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்..

  ReplyDelete
  Replies
  1. happy November 1, 2016 at 11:12 AM

   வாம்மா ... ஹாப்பி, வணக்கம். 2-3 நாட்களாக தீபாவளிக்காக லீவா அல்லது மும்பை மாமாவுடன் ரொம்பவும் பிஸியா? :) எனினும் சந்தோஷமே.

   //மிராசு தாருக்கு நல்ல பாடம் கற்பிக்கத்தான் பெரியவா இவ்வளவு கோவப்பட்டுருக்கா. என்ன பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்..//

   அதானே ......

   Delete
 39. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (22.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/402270800275620/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete