2
ஸ்ரீராமஜயம்
அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தருவது லக்ஷ்மிகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது.
புனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு.
ஆசையும் காமமும் புனிதமில்லை.
அன்புதான் புனிதம்.
அதனால்தான் ’அன்பேசிவம்’ என்று சொல்வது.
இப்போது நம் ‘கை’ நாமாகத்தோன்றுகிறது.
நம் குரல் நாமாகத்தோன்றுகிறது.
நம் உடம்பு நாமாகத்தோன்றுகிறது.
இதுபோல உலகனைத்தும் நாமாகி விட வேண்டும்.
அப்படிப்பட்ட குணம் ஒருவனுக்கு அனுபவத்தில் வந்தால் அவன் சண்டாளனாக இருந்தாலும் அவன்தான் பண்டிதன்.
இந்த ஞானம் தான் மாறாத ஆனந்தமான மோட்சம்.
இந்த சரீரத்தில் இருக்கும்போதே அனுபவிக்கக்கூடிய மோட்சம்.
oooooOooooo
அதிசய நிகழ்வு
நெஞ்சை உருக்கும் சம்பவம்
மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா!
முன் கதை பகுதி- 5 of 10
முன் கதை பகுதி- 1 of 10
முன் கதை பகுதி- 2 of 10
முன் கதை பகுதி- 3 of 10
முன் கதை பகுதி- 4 of 10
முன் கதை பகுதி- 5 of 10
முன் கதை பகுதி- 6 of 10 ..... தங்கள் நினைவுக்காக
மிராசுதார் வாயப்பொத்தியபடியே, ”ஆமாம் ... பெரியவா ... பந்தியில் சர்க்கரைப்பொங்கல் மட்டும் என் கையால் நானே பரிமாறினேன்” என்று குழைந்தார்.
ஸ்வாமிகள் விடவில்லை. “சரி ... அப்படி சர்க்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?” என்று கேட்டார் கடுமையாக.
வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆச்சார்யாளே பேசினார்.
“நீ சொல்ல வேண்டாம், நானே சொல்றேன். நீ சர்க்கரைப்பொங்கல் போடறச்ச, அது பரம ருசியா இருந்ததாலே, வைதீகாளெல்லாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டா! நீயும் நிறைய போட்டே.
ஆனா தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் ’சர்க்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா ... ரொம்ப ருசியா இருக்குனு பலதடவை வாய்விட்டுக் கேட்டும்கூட, நீ காதிலே வாங்கிண்டு, அவருக்குப் போடாமலேயே போனியா இல்லியா?
அவரும் எத்தனை தடவ வாய் விட்டுக்கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்டியே .... இது தர்மமா? ஒரு மஹா ஸாதுவை இப்படி அவமானப் படுத்திப்டியே....” மிகுந்த துக்கத்துடன் மெளனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்.
மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது.
கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள். சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.
பதினைந்து நிமிடங்கள் மெளனம். பிறகு கண்களைத்திறந்து மெளனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. அச்சார்யாளே, நாராயணஸ்வாமி ஐயரைப்பார்த்து, தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார்.
[பகுதி 7 of 10]
”மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தோரு வயசாகிறது. தன்னோட பதினாறாவது வயசிலேந்து, எத்தனையோ சிவச் க்ஷேத்ரங்கள்ளே ஸ்ரீ ருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்போதுமே அவர் நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு, அப்பேர்ப்பட்ட மஹான் அவர். நீ நடந்துண்ட விதம் மஹா பாபமான காரியம் .... மஹா மஹா பாபமான காரியம்! .... மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். கண்மூடி கண்மூடி மீண்டும் மெளனமாகிவிட்டார். சற்றுப்பொறுத்து ஆச்சார்யாள் மீண்டும் தொடர்ந்தார்.
“நீ பந்தி பேதம் பண்ணின காரியம் இருக்கே .... அது கனபாடிகள் மனஸை ரொம்பவும் பாதித்திடுச்சு. அவர் என்ன காரியம் செஞ்சார் தெரியுமா நோக்கு? சொல்றேன் கேளு!
நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூருக்குப் போகலே.
திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ’அஸ்மேத’ [பெரிய பிரகாரப்] பிரதக்ஷணம் மூணு தடவைப் பண்ணினார்.
திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ’அஸ்மேத’ [பெரிய பிரகாரப்] பிரதக்ஷணம் மூணு தடவைப் பண்ணினார்.
நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால் போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்தித்தார் தெரியுமா? மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.
தொடரும்
ஸ்ரீருத்ரம் எப்போதுமே அவர் நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு, அப்பேர்ப்பட்ட மஹான் அவர்.
ReplyDeleteநினைத்தாலே ருத்ரம் மனதில் ஒலிக்கிறது ..
அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தருவது லக்ஷ்மிகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது.
ReplyDeleteபுனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு.
அழகான வரிகள்..!
திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ’அஸ்மேத’ [பெரிய பிரகாரப்] பிரதக்ஷணம் மூணு தடவைப் பண்ணினார்.
ReplyDeleteரொம்ப புண்ணியம்..!
உலகனைத்தும் நாமாகி விட வேண்டும்.
ReplyDeleteஅப்படிப்பட்ட குணம் ஒருவனுக்கு அனுபவத்தில் வந்தால் அவன் சண்டாளனாக இருந்தாலும் அவன்தான் பண்டிதன்.
இந்த ஞானம் தான் மாறாத ஆனந்தமான மோட்சம்.
இந்த சரீரத்தில் இருக்கும்போதே அனுபவிக்கக்கூடிய மோட்சம்.
அனுக்ரஹ அமுதம் பொழியும்
அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..!
அன்பு தான் புனிதம்... அருமை... உண்மை...
ReplyDeleteபெரியவா இன்னும் என்ன சொல்லப் போகிறாரோ...?
ஆவலுடன்...
மிராசுதாருக்கு நல்ல பாடம் தான் . இன்னும் என்ன சொல்லப் போகிறாரோ.
ReplyDeleteஅன்பே சிவம் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை.
தொடருங்கள்......
அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தருவது லக்ஷ்மிகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது.//
ReplyDeleteஉண்மை சார், அன்பு நிறைவான வாழ்க்கையை கொடுக்கும். தன்னை சுற்றிலும் மலர் போல் மணம் பரப்பும் உண்மை.
நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால் போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்தித்தார் தெரியுமா?//
என்ன பிரார்த்தித்து இருப்பார் மிராசு செய்த அபசாரத்தை மன்னிக்கும் படி கேட்டு இருப்பார்.
அவரை அன்பும் கருணை நிறைந்த மனிதராய் மாற்றக் கேட்டு இருப்பார்.
அன்பு நிறைந்த மனிதர் வேறு என்ன பிரார்த்திப்பார் இறைவனிடம்? இன்னாசெய்தாருக்கும் நன்மை செய்யும் படி தானே பிரார்த்திப்பார்.
பெரியவா அவர்கள் சொல்வதை கேட்க ஆவல்.
விறுவிறுப்பான வர்ணனை; சத்தியமான வார்த்தைகள் பெரியவாளின் கருணை கலந்த கோபம்; என்ன அற்புதமான பதிவு;
ReplyDeleteஅன்புடன், எம்.ஜே.ராமன்.
Muthalil mirasudhar Mel iruntha mathippu pogappoga kurainthu innum athala pathaaLaththukkE pOi vidum polE irukkE!
ReplyDeleteபெரியவாளுடைய கோபம் நல்லவர்களை, வேத வித்தை,மதிக்காத,
ReplyDeleteஅவரைப் பந்தியில் அவமரியாதை செய்தவரை, புத்திபுகட்ட வந்த கோபம். மற்றவர்களுக்கும் பாடமாக எடுத்துச் சொல்லும்படியான
கோபம். எவ்வளவு அர்த்தம் பொதிந்த கோபம்.
நாடி,நரம்பென்ன படிக்கும் நமக்கெல்லாம் கூட ருத்திரத்தின் மகிமையால் கனபாடிகள் மனக்கண்முன் வந்துவிட்டார்.
எவ்வளவு வித்வத்தன்மை இருந்திருக்கும் அவருக்கு.
தனக்கு மனக்கஷ்டம் ஏற்பட்டதற்கு மன்னிப்பும், மிராசுதாருக்கு
மன்னிப்பும் கேட்டு வேண்டியிருப்பார்.அன்பே சிவமும்,அன்பேதவமும். அன்புடன்
எத்தனை பெரிய அபசாரம் பண்ணியிருக்கிறார் மிராசு!படிக்கும்போதே மனசு பதைபதைக்கிறதே! பெரியவாளுக்கு எப்படி இருந்திருக்கும்? அவரது மனசு வேதனையை உங்கள் எழுத்துக்கள் கண்முன் சித்திரமாக கொண்டு வந்து நிறுத்துகிறது.
ReplyDeleteஇத்தனை அவமானத்திற்குப் பிறகும் கனபாடிகள் மிராசின் சார்பில் இறைவனிடம் மன்னிப்பைத்தான் வேண்டியிருப்பார், இல்லையா?
ஸ்ரீ ருத்ரம் சொல்லும் வாயால் யாரையும் சபிக்க முடியாது!
அன்புதான் எல்லாமே...
ReplyDeleteநல்ல விஷயங்களைத் தரும் உங்கள் பகிர்வுகள் தொடரட்டும்....
அன்பே பிரதானம்...
ReplyDeleteஅருமையான பகிர்வு.
தொடருங்கள் தொடர்கிறோம்...
பணம் குணத்தை கெடுத்துவிடும்
ReplyDeleteஅதற்க்கு அடிமையானால்
அன்பேசிவம்! என்பதை அருமையாக விளக்கியுள்ளீர்கள்! தொடர் சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி பரமாச்சார்யாளின் தெய்வீகத்தை அருமையாக உணர்த்துகிறது! நன்றி!
ReplyDeleteAha ha@@@@@@@@@@@@@
ReplyDeleteLike to read further immediatly.
viji
ReplyDeleteஇதில் இருந்து நமக்கும் சேர்த்துப் பெரியவர் சொல்லும் விஷயம் பசிக்குப் பேதமில்லை. உண்டியிடும்போது பேதம் பார்க்கலாகாது. பெரியவரின் போதனைகளை தொகுத்து வழங்கும் உமக்குப் பாராட்டுக்கள்.
அன்பு தான் அனைத்தும் என்று உணர்த்திய பெரியவாளை பற்றி எங்களுக்கு படிக்க தந்தமைக்கு நன்றி சார்...
ReplyDeleteபடிச்ச நினைவு வருது. ரமணி அண்ணா அவர்கள் எழுதி இருந்த நினைவு. படிக்கையிலேயே கண்ணீர் வருகிறது.
ReplyDeleteமிராசுதாரிடம் பட்ட அவமானம், கனபாடிகளுக்கு ஒரு புதிய ஞானத்தை அவருக்குள் உண்டுபண்ணி விட்டது போலிருக்கிறது. அதனால்தான் அவர் தனது மன பாரத்தை இறக்கி வைக்க, திருவிடைமருதூர் ஈசனை நாடிச் சென்று இருக்கிறார்.
ReplyDeleteஅனைவரிடத்தும் அன்பு கொள் அருமையான அமுதம்.
ReplyDeleteஎவ்வளவு பெரிய மனிதரை சிறுமைப்படுத்தியிருக்கிறது மிராசுதாரரின் செயல். கேட்கும் நமக்கே இவ்வளவு வேதனை தருகிறதே.. பெரியவருக்கு எப்படியிருந்திருக்கும்? அன்பின் மகத்துவத்தையும், பணிவையும் போதிக்கும் மகாபெரியவரின் சொல் மனத்தில் என்றென்றும் பதித்திருக்கவேண்டியது.
ReplyDeleteபுனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு. // அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?// நல்ல அமுதமொழி! நன்றீ ஐயா!
ReplyDeleteஎத்தனை அழகான,ஆழமான வார்த்தை. அன்பினால் அடையமுடியாதது ஒன்றுமேயில்லை.அன்பு அமுதமழை அருமை.
ReplyDeleteஇந்த அன்பினால்தான் மிராசுதரின் செய்கைக்கு பலன் கிடைக்கும்போல் உள்ளது.
நன்றி.
//அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தருவது லக்ஷ்மிகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது.
ReplyDeleteபுனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு.
ஆசையும் காமமும் புனிதமில்லை.
அன்புதான் புனிதம். // உண்மை,உண்மை அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை...
நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால் போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்தித்தார் தெரியுமா?//
ReplyDeleteஎன்ன பிரார்த்தித்திருப்பார். ‘மிராசுதார் தெரியாம செஞ்சுட்டார். எனக்காக அவரை மன்னிச்சுடுங்கோன்னு’ தான்.
அதனால்தான் ’அன்பேசிவம்’ என்று சொல்வது. //
அள்ள அள்ளக் குறையாதது அன்பு.
முழு நிகழ்வையும் ஒரே மூச்சில் படிக்க ஆவல் உண்டாகிறது.
ஆனா உங்க சஸ்பென்சில இருந்து தப்பிக்க முடியாதே.
அன்புதான் புனிதம்
ReplyDeleteஅன்பே சிவம்
இதனைப் புரிந்து கொண்டால் துன்பம் ஏது,
நன்றி அய்யா
"Anbe Sivam" explanation superb. Can't wait to read the next post. Especially your narration makes it more interesting. Thanks for sharing..
ReplyDeleteஅன்பு தான் உயர்ந்தது.ஆனா அதுவே எந்த கடையில் விக்கிதுனு கேக்ற காலம் வந்தாலும் வரும்,இந்த பதிவில் மிராசுதாரின் நிலை மோசமாகிட்டு போங்க,மிகவும் தெளிவு பெற்று அடுத்த ரயிலேறப் போகிறார்.
ReplyDeleteஅன்பின் வை.கோ - புனிதமான அன்பே சிவம் - பதிவு அருமை - விளக்கங்களும் அருமை.
ReplyDelete//மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். கண்மூடி கண்மூடி மீண்டும் மெளனமாகிவிட்டார். சற்றுப்பொறுத்து ஆச்சார்யாள் மீண்டும் தொடர்ந்தார். //
// மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். //
பெரியவா இவ்வளவு கோபப் படுவாரென இதுவரை அறிந்ததில்லை.
மிராசுதார் கனபாடிகளை வேண்டுமென்றே அத்தனை செயல்களிலும் அவமானப் படுத்தி விட்டார் - அதனால் கனபாடிகள் மன வருத்தம் அடைந்து திருவிடை மருதூர் மஹாலிங்க ஸ்வாமியிடம் அன்பே சிவம் என - தவறு செய்த மிராசுதாரருக்கு நல்ல புத்தி தர வேண்டும் - ஆணவம் குறைய வேண்டும் - பணக்காரர் என்ற அகந்தை அழிய வேண்டுமென வேண்டி இருப்பார்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//ஆசையும் காமமும் புனிதமில்லை.
ReplyDeleteஅன்புதான் புனிதம்.
அதனால்தான் ’அன்பேசிவம்’ என்று சொல்வது. //
நிஜமான வரிகள்... பூஸோ கொக்கோ.. போட்டியென்று வந்திட்டால் புலியாகிடுவமாக்கும்:)... அடுத்து 18 ஊஊஊஊஊ:) நான் பதிவைச் சொன்னேன்.
அனாதைகளுக்கு ஆண்டவனே ஆதரவு.
ReplyDeleteமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
Deleteஅன்புடையீர்,
வணக்கம்.
31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 ஜூன் வரையிலான 30 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)
என்றும் அன்புடன் VGK
அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
ReplyDeleteஅன்புள்ள ஜெயா,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஜூன் மாதம் வரை முதல் 30 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.
பிரியமுள்ள நட்புடன் கோபு
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைத்த பதிவு
ReplyDeleteபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
Deleteவணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஜூன் வரை முதல் 30 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
அந்த பணக்காரரு தன்னோட தப்ப ஒணறணும்லா
ReplyDeleteஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
ReplyDeleteஅன்புள்ள (mru) முருகு,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஜூன் மாதம் வரை, முதல் முப்பது (30) மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு
ஆச்சார்யாளிடம் யாரும் இந்த விபரங்கள் எல்லாம் சொல்லி இருக்க முடியாது ஞான திருஷ்ட்டி மூலமாகத்தான் தெரிந்து கொண்டிருப்பார்.
ReplyDeleteஅன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
ReplyDeleteதிரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஜூன் மாதம் முடிய, என்னால் முதல் 30 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
அற்புதமான நிகழ்வுகளைக்கூட சஸ்பென்ஸுடன் சொல்ல உங்களால்தான் முடியும்...
ReplyDelete-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
ReplyDeleteSo far your Completion Status:
356 out of 750 (47.46%) within
10 Days from 26th Nov. 2015.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஜூன் மாதம் வரை, என்னால் முதல் 30 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
:)
ReplyDeleteஅந்த கனபாடிகள் இடத்துல யாரு இருந்தாலும் ரொம்பவே வேதனைதான் பட்டிருப்பா..
ReplyDeletehappy November 1, 2016 at 11:17 AM
Delete//அந்த கனபாடிகள் இடத்துல யாரு இருந்தாலும் ரொம்பவே வேதனைதான் பட்டிருப்பா..//
ஆமாம்...டா ஹாப்பி, நீ சொல்றது கரெக்ட்டூஊஊஊ.
இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (24.05.2018) பகிரப்பட்டுள்ளது.
ReplyDeleteஅதற்கான இணைப்பு:
https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=403104676858899
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு