About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, September 23, 2013

54] சும்மா இருத்தல்

2
ஸ்ரீராமஜயம்




தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவனுக்குள் ஒன்று இருந்து கொண்டிருக்கிறதே அதுதான் ஆத்மா. அதற்கு சாவே கிடையாது; மாறுதலும் கிடையாது.

கவலை, குறை மட்டும்தான் பாரம் என்றில்லை. தன்னைப்பற்றிய பெருமை கூடப் பெரிய பாரம்தான். சொல்லப்போனால் இதுதான் மிகப்பெரிய பாரம்.

சும்மாயிருப்பதுதான் லட்சியம் என்றாலும் அதிலே நாமே போய் உட்கார முடியாது. 

நாம் சரியாக அடிப்படையிலிருந்து ஆரம்பித்து மேலேறிப்போனால் அதுவே ஒரு கட்டத்தில் நம்மை சும்மாயிருக்க வைத்துவிடும். 

மற்றபடி நாம் சொல்லும் ’சும்மா’ எல்லாம் சும்மா சொல்லும் ’சும்மா’ தான்.


oooooOooooo

ஓர் அதிசய நிகழ்வு



இந்தச் சம்பவம் காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சி.

மஹாபெரியவர் காலையில் எழுந்தவுடன் 

பசுவை தரிசிப்பது வழக்கம். 


பசுமாடுகள் கட்டியிருக்கும் கொட்டகை ஒன்றில் மஹான் அமர்ந்து மாலை வேளைகளில் உரையாடுவது வழக்கம்.

சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். 

மஹான் மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல  வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்.


அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு 

நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. 

பேறுகாலம். அதனால் பசு  வேதனைப்பட்டுக் கொண்டே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.

வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள். ஒருவர் மட்டும் அல்ல. காஞ்சி மஹானின் மடம் என்பதால் ஆறு மருத்துவர் வந்திருந்தனர்.

பசுவை நன்றாகப் பரிசோதித்துப்பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னும் பிரஸவிக்கவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர்.

கன்றுக்குட்டி பசுவின் வயிற்றுக்குள் இறந்து போய் இருந்தது. 



அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும்.


அந்த ஆறு கால்நடை மருத்துவர்களும் ஏகோபித்துச் 

சொன்ன முடிவு அது.


இதைக்கேட்ட, ஸ்ரீ மடத்து நிர்வாகிகள், நேராக 

மஹானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் 

சொன்னார்கள்.

தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு 

இருந்த கொட்டகைக்கு வந்தார்.

பசுவின் எதிரே அமர்ந்தார்.

அவரது பார்வை வேறு எந்தப்பக்கமும் திரும்பவே 

இல்லை.


கன்று பசுவின் வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று 

ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒரு பக்கமாக 

நின்றுகொண்டு, மஹானையும் பசுவையும் மாறிமாறிப் 

பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.

இப்படியும் அப்படியுமாக நிலை கொள்ளாமல் தடுமாறிக் 

கொண்டிருந்த பசு .... ஓர் இடத்தில் நின்றது.

சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி 

வெளியே வந்தது. 

கன்றுக்குட்டி துள்ளிக்குதித்து நின்றது.

இறந்து போனது என்று ஆறு டாக்டர்கள் சொன்ன அதே 

கன்றுதான் இப்போது உயிரோடு வெளியே வந்தது.

அந்த ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான 

நிகழ்ச்சிதான். 

அவர்களும் அப்போதுதான் மஹானின் அருட்பார்வை 

எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து 

கொண்டனர்.

பசுமாட்டை நன்றாகத் தடவிக்கொடுத்தபின் மஹான் 

உள்ளே போனார். 







\
[Thanks to Amirtha Vahini 29 08 2013]




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுதினம் வெளியாகும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

47 comments:

  1. My God
    My God
    I felt very emotional...
    viji

    ReplyDelete
  2. அமுத மழையில் இன்று மஹாபெரியவாளின் அதிசய மழை. தொடர்ந்து பொழியட்டும். நன்றி ஐயா!

    ReplyDelete
  3. கவலை, குறை மட்டும்தான் பாரம் என்றில்லை. தன்னைப்பற்றிய பெருமை கூடப் பெரிய பாரம்தான். சொல்லப்போனால் இதுதான் மிகப்பெரிய பாரம்.

    தற்பெருமை தற்கொலைக்குச் சமம் அல்லவா!!

    ReplyDelete
  4. மஹானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிவித்த அருமையான நிகழ்ச்சிகள்..பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
  5. ஆத்மா. அதற்கு சாவே கிடையாது; மாறுதலும் கிடையாது.

    ஆத்மா அழிவற்றது.. நிலையானது ..!

    ReplyDelete
  6. மஹாபெரியவர் காலையில் எழுந்தவுடன்
    பசுவை தரிசிப்பது வழக்கம்.

    கோ தரிசனம் சிறப்பானது..!

    ReplyDelete
  7. சும்மா எங்கே இருக்கிறோம். மனகுரங்குதான் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டிருக்கிரதே! தற்பெருமை கூட ஒரு வியாதியைப்போலதான். யாரைப்பற்றி பேசினாலும், இடையே
    தன்னைப்பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. பெரியவர் மௌனமாக சாதித்த காரியம் அவரின் மஹிமையை நமக்குச் சொல்லாமல்ச் சொல்லுகிரது.அன்புடன்

    ReplyDelete
  8. //கவலை, குறை மட்டும்தான் பாரம் என்றில்லை. தன்னைப்பற்றிய பெருமை கூடப் பெரிய பாரம்தான். சொல்லப்போனால் இதுதான் மிகப்பெரிய பாரம்.// எவ்வளவு நிஜம்!
    சும்மா எல்லாம் சும்மா - மஹா பெரியவா சொல்றாமாதிரி கற்பனை பண்ணிண்டேன். என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன்.

    பசுவையும், கன்றையும் சேர்த்துப் பிழைக்க வைத்த மஹானை கருணைத் தெய்வம் என்று சொல்லாமல் வேறு எந்த பெயாரல் அழைக்க முடியும்?

    ReplyDelete
  9. மஹானின் அருளை சொல்லும் அத்தனை நிகழ்வுகளும், வியப்பாக உள்ளது. நன்றி!

    ReplyDelete
  10. எல்லாவுயிர்க்கும் இறைவன் ஒன்றுதான்
    எல்லாவுயிர்க்குள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றுதான்.

    வடிவங்களில் வேறுபாடே அன்றி வேறு வேறுபாடுகள் இல்லை.

    வலியும் துன்பமும், இன்பமும் அனைத்து உயிர்க்கும் ஒன்றுதான்.

    இதை உணர்ந்த பெரியவா போன்ற ஞானிகள் மனிதர்கள் மீது காட்டும் அதே கருணையை மற்ற உயிர்கள் மீதும் காட்டுவதை படம் பிடித்து காட்டிய VGK
    அவர்களுக்கு நன்றி.

    சும்மா இருப்பதைப் பற்றி ஏற்கெனவே ஒரு பதிவே போட்டுள்ளேன் படித்திருப்பீர்கள். http://tamilbloggersunit.blogspot.in/2013/07/32.html
    விருப்பம் இருந்தால் படிக்க

    ReplyDelete
  11. கவலை, குறை மட்டும்தான் பாரம் என்றில்லை. தன்னைப்பற்றிய பெருமை கூடப் பெரிய பாரம்தான். சொல்லப்போனால் இதுதான் மிகப்பெரிய பாரம்.//
    உண்மைதான்.

    மஹானின் அருட்பார்வை அம்பாளின் அருட்பார்வை அல்லவா!
    தாய் இருக்கும் போது சேயை இழந்து தாய் வாடுமோ!
    மஹானின் அற்புதங்கள் படிக்க படிக்க மெய்சிலிர்க்கிறது.
    படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. மஹா பெரியவர் தம் அருள் நோக்கினை எண்ணி மெய் சிலிர்க்கின்றது!..ஹர ஹர சங்கர!.. ஜய ஜய சங்கர!..

    ReplyDelete
  13. மஹாலட்சுமிக்கும் மஹானின் கருணை கிடைத்தது போலும்! அருமையான நிகழ்வு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  14. கவலை, குறை மட்டும்தான் பாரம் என்றில்லை. தன்னைப்பற்றிய பெருமை கூடப் பெரிய பாரம்தான். சொல்லப்போனால் இதுதான் மிகப்பெரிய பாரம்.//

    அபாரம்! மஹானின் அருட்பார்வை சம்பவம் சிலிர்க்க வைத்தது! நன்றி ஐயா!

    ReplyDelete
  15. கீர்த்தி வினாயகா... இந்த அற்புதத்தை படித்தபோதே மனம் சிலிர்க்கிறது.. அத்தனை பேரை கடித்த கொசுக்கள் பெரியவாளை மாத்திரம் விட்டு வெச்சிருக்குமா என்ன? கடிச்சிருக்கும் தான். ஆனால் தன்னையே சந்தோஷமாக தரும் அக்‌ஷயமாச்சே மஹாப்பெரியவா.... பசுவின் வயிற்றுக்குள் கன்று இறந்திருக்குன்னு டாக்டர் சொன்னதை படிச்சதும் திக்கென்று ஆனது. ஆனால் பெரியவா வந்து பசுவின் பார்வையோடு சங்கமித்து....கன்றை உயிர்ப்பிழைக்க வைத்தது மட்டுமில்லாம பிறக்கவும் வைத்து கன்றுக்குட்டி துள்ளி குதித்தும் ஓடியதே.. எத்தனை அற்புதம்....


    சும்மா இருத்தல் என்பது எளிதில்லை... சும்மா இருப்பது என்பது உடலுக்கு மட்டுமல்ல ஆன்மாவுக்கும் சேர்த்து தான்... என்பதை எத்தனை அழகா சொல்லிட்டீங்க....

    அன்பு நன்றிகள் அண்ணா அற்புதமான தெய்வீக பகிர்வுக்கு...

    ReplyDelete
  16. அய்யாவிற்கு வணக்கம். அற்புதமான அதிசய நிகழ்வைப் பகிர்ந்தமைக்கு முதலில் தங்களுக்கு நன்றிகள். .//தூக்கம், மூர்ச்சை, சமாதி ஆகிய நிலைகளில் ஒருவன் செத்துப்போய் விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறான். அப்போதும் அவனுக்குள் ஒன்று இருந்து கொண்டிருக்கிறதே அதுதான் ஆத்மா. அதற்கு சாவே கிடையாது; மாறுதலும் கிடையாது.// ஆன்மா அழிவற்றது, நிரந்தரமானது என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள். பெரியவாளின் அற்புதங்களைத் தங்களின் மூலமே தெரிந்து கொள்கிறேன். பதிவின் அனைத்தும் ரசித்து சிந்திக்க வைக்கிறது. நன்றி அய்யா.

    ReplyDelete
  17. வியக்க வைக்கும் நிகழ்வு... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. Rumaiyaana sambavam, nive that the cow and the calf got the blessings of periyavar...Thanks a lot for sharing sir....

    ReplyDelete

  19. ஞாயிறு , தி ஹிந்துவில் ஒரு கட்டுரை படித்தேன்.LET'S AIM FOR A POST-THEISTIC SOCIETY என்று தலைப்பு, அதில் கூறப் பட்டிருந்த ஒரு விஷயம் “Let us first realize, that there is no supernatural MIRACLE that has withstood the scrutiny of science" இது என் கருத்து அல்ல. இதை எழுதியவர் IIS பெங்க்ளூரில் ஒரு பெரிய பதவியில் இருப்பவர்.

    ReplyDelete
  20. மற்றபடி நாம் சொல்லும் ’சும்மா’ எல்லாம் சும்மா சொல்லும் ’சும்மா’ தான்.//

    ஹா..ஹா..ஹா... ஒரு உண்மைக் கதை நினைவுக்கு வருது...

    வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய மகனை, தாய் கேட்டாவாம் தம்பி அங்கு என்ன வேலை பார்க்கிறாய் என... மகன் சொன்னாராம் "SI" ஆக இருக்கிறேன் அம்மா என்று.

    உடனே தாய் சந்தோசப்பட்டு என் மகன் அங்கு எஸ் ஐ யாக இருக்கிறான் என எல்லோருக்கும் சொல்லத் தொடங்கிட்டாவாம்ம்ம் சனம் நினைத்தினமாம் சப் இன்ஸ்பெக்டர் என. அப்போ ஒருவர் வந்து கேட்டாராம் உண்மையாவோ தம்பி அப்போ வெளிநாட்டில் அது நல்ல தொழிலோ என... இவர் சிரிச்சுக்கொண்டே சொல்லியிருக்கிறார்ர்.. இல்லை அங்கிள்.. அது Summaa Irukkiren என்பதை சுருக்கி சொன்னேன் இப்படி ஆச்சென:)

    ReplyDelete
  21. தன்னைப்பற்றிய பெருமை கூடப் பெரிய பாரம்தான். சொல்லப்போனால் இதுதான் மிகப்பெரிய பாரம்.
    எளிமையான வார்த்தைகளில் எவ்வளவு பெரிய உண்மை ஐயா. நன்றி

    ReplyDelete
  22. அதிசயமான நிகழ்வு தான்.....

    அருள் மொழிகளும் அசத்தல் மொழிகள் தான்....

    ReplyDelete
  23. Really you have a wonderful blog.. மஹா பெரியவா பற்றி கேக்க படிக்க கொடுத்து வைத்து இருக்கணும் .நன்றிகள் .

    ReplyDelete
  24. மஹா பெரியவாளின் அருள் மழையில் நனைந்து மெய்யிர்சிலிர்த்து நின்றேன்.

    விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞானம். இவர் கருணைக் கடல் அல்லவா! அந்த கருணைக் கடல் முன் பவ்வியமாக இருந்தால் வேண்டியது கிட்டும்.

    மெய்ஞ்ஞானத்தை அடைய வழிகளை இரத்தின சுருக்கமாக சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன்

    ReplyDelete
    Replies
    1. Ram Ram Lakshmi Narasimhan V September 23, 2013 at 6:21 PM

      வாருங்கள் ஐயா. வணக்கம்.

      //மஹா பெரியவாளின் அருள் மழையில் நனைந்து மெய்சிலிர்த்து நின்றேன்.

      விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞானம். இவர் கருணைக் கடல் அல்லவா! அந்த கருணைக் கடல் முன் பவ்வியமாக இருந்தால் வேண்டியது கிட்டும்.

      மெய்ஞ்ஞானத்தை அடைய வழிகளை இரத்தின சுருக்கமாக சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

      பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன்//

      என் இந்தத்தளத்திற்கு, இன்று முதன்முதலாக தங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      தங்களின் பேரன்புடன் கூடிய வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  25. The greatness of Periyava is beyond words.I am eagerly waiting to read your posts about him everyday

    ReplyDelete
  26. தங்கள் பதிவைப் படித்து முடித்ததும் நினைவுக்கு வந்த தாயுமானவர் பாடல் வரிகள்

    சிந்தையை யடக்கியே
    சும்மா விருக்கிற
    திறமரிது சத்தாகி யென்
    சித்தமிசை குடி கொண்ட
    அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
    – தாயுமானவர்

    ReplyDelete
  27. சும்மா இருத்தல் குறித்துப் பலரும் சொல்லி இருக்காங்க. சும்மா இருத்தலே சுகம்னாலும் அந்தச் சும்மா இருத்தல் என்பது லேசில் வராது.

    பசுவும், கன்றும் படம் அழகாக இருக்கிறது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  28. ஆன்மாவுக்கு அழிவில்லை. //

    இதனால் தான் ஒருத்தருக்கு மரணம் சம்பவித்ததும் அவங்க குடும்பத்துக்குச் சொல்லும் துக்கப்பகிர்வுச் செய்தியில் "ஆன்மா சாந்தியடையட்டும்!" என்று சொல்லக் கூடாது என்பார்கள். ஆன்மா அழிவற்றது என்பதால் அதற்கு சாந்தியோ, துக்கமோ, மகிழ்வோ, கவலையோ எப்படி ஏற்படும்! :))))

    ReplyDelete
  29. அதிசயம்! அதிசயம்!....அருமை!...என்ன ஓரு பதிவு...ஐயா.
    சிறிது தாமதமாகிவிட்டது. மகள் குடும்பம் இரண்டனால் வந்து நின்றதால் அசையக் கூட நேரமில்லை.
    இப்போது தான் ஓய்வு வந்தது. மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  30. அருட்பார்வை படித்து மெய்சிலிர்த்தது.

    ReplyDelete
  31. மகானின் அருட்பார்வை பட்டால் எல்லா ஜீவன்களுக்கும் நற்கதிதான்

    ReplyDelete
  32. தாயையும் சேயையும் பிழைக்க வைத்த அவர் கருணையை என்னவென்று சொல்வது. கண்ணில் நீர் வரவழைத்த பதிவு.
    அருமை!அருமை!

    ReplyDelete
  33. நெகிழவைத்த நிகழ்வு. கண்ணின் கருணை கலங்கி நிற்கும் ஜீவனின் உள்ளூடுவி கன்றை ஈனவைத்த மகிமையை நினைக்கையிலேயே சிலிர்க்கிறது. பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  34. பெரியவாளின் அருளால் கன்றுக்குட்டி துள்ளிக் குதித்து இறங்கியது சிலிர்க்க வைத்தது.

    அமுத மொழிகளும் அருமை.

    ReplyDelete
  35. அன்பின் வை.கோ

    சும்மா இருத்தல் - பதிவு அருமை - தூக்கம் மூர்ச்சை சமாதி ஆகிய நிலைகளில் ஒருவனது ஆத்மா அவனை விட்டு விலகுவதில்லை.

    கவலை குறை - இவைகளோடு பெருமை என்பது பாரத்தில் சேர்கின்றது. பெருமையும் ஒரு வகையில் பாரம் தான்.

    இறந்த கன்றினை உய்ப்பித்த்வர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவா தான் - இதில் ஒன்றும் ஐயமில்லை.

    பதிவு அருமை அருமை - நனரு நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  36. இரந்த கன்றுவை உயிர்த்த பெரியவரின் அருளை நினைத்து மெய்சிலிர்க்கிறது...

    ReplyDelete
  37. ஆன்மாவுக்கு சாவு கிடையாது பசுவிடம் கருணை கொண்ட தாயுள்ளம் அந்த பசுவிற்க்கு பிராப்தம் இருந்திருக்கிறது மஹாபெரியவாளின் திருவடி சரணம் நன்றி

    ReplyDelete
  38. பரீட்சித்துவை உயிர்ப்பித்த கிருஷ்ணன் நினைவு வருகிறது.

    ReplyDelete
  39. பசுமாட்டுக்கும்கூட கருணை காட்டி இறந்த கன்றுக்கு உயிர் கொடுத்திருக்காரே.

    ReplyDelete
  40. ஆன்மாவிற்கு அழிவே இல்லை.

    மகா பெரியவரின் பார்வையின் தீட்சண்யம் தாங்காமல் எமனே கன்றின் உயிரை எடுத்துச் செல்லாமல் கிளம்பி இருப்பானோ. மகா பெரியவரின் கருணையே கருணை.

    ReplyDelete
  41. மவுத்தான கன்னுகுட்டி பொளக்க வச்சுட்டாங்களே.

    ReplyDelete
  42. பெரியவாளின் அருட்பாருவை அந்த வாயில்லா ஜீவன் மேலும் பட்டிருக்கே.

    ReplyDelete
  43. மகான்களுக்கு உயிர்களிடத்தே பேதம் இல்லை.

    ReplyDelete
  44. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (29.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=427928974376469

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete