என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 3 அக்டோபர், 2013

59] மந்திர சடங்குகளில் பிடிப்பு ஏற்பட ..... !

2
ஸ்ரீராமஜயம்நாம் ஒரு விவாஹம் செய்கிறோம். உபநயனம் செய்கிறோம், ஸீமந்தம் செய்கிறோம் என்றால், அதற்கு இரண்டு நாட்கள் முந்தி பாஷ்யக்ஞான வேத பண்டிதரை வரவழைத்து, அதிலே பிரயோகமாகிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்? சடங்குகளுக்கு என்ன தாத்பரியம்? என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.  

கர்மாவைப் பண்ணுகிறபோதே கேட்டுக்கொள்வது என்றால் அதற்கு ’டயம்’ [பொழுது] இருக்காது.

முன்னாடியே தெரிந்து கொண்டால் தான், மனசிலும் ஊறும். 

அப்போதுதான் கர்மா பண்ணுகிறபோது அதில் மனசார நமக்கு ஓர் பிடிப்பும் இருக்கும்.


oooooOooooo


அரை மணி நேர லெக்சர்

பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம்.  தடிமனான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது.  

பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கைத் தொடர்ந்து மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போடச் சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! 

ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு மேலே ஏறிச் சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தைக் கூட தொடவில்லை!

பெரியவாள் சொன்னார்கள்:

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்குக் கூட ஒரு discipline இருக்கு!  லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.  

காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும். 

ஒரு கட்டெறும்பு செத்துப்போனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

ஒரு காக்கை இறந்துபோனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்து கொண்டு துக்கமாய் கதறும்.

ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. 

என்னைப் பார்த்து நீங்கள் எல்லாம் ஆச்சார்யாள், பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள்.  ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்யமுடிகிறதில்லை!”

கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, “பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்” என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

“சரி.  காலையில் இரண்டு நிமிஷமும், சாயங்காலம் இரண்டு நிமிஷமும் எனக்காக ஒதுக்குங்கள். 

இருபத்து நாலு மணி நேரத்தில், நாலு நிமிஷம்தான் கேட்கிறேன்.  

காலையில், இரண்டு நிமிஷம் ‘ராம, ராம’ என்று சொல்லுங்கோ; சாயங்காலம், ‘சிவ, சிவ’ ன்னு சொல்லுங்கோ…”

“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், “பத்துப் பன்னிரண்டு பேர்களாவது, சொன்ன சொல்லைக் காப்பாத்துவா” என்றார்கள்.

அந்த, யாரோ பத்துப் பன்னிரண்டு புண்யாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன், அரைமணி லெக்சர் கொடுத்துள்ளார்கள், மஹாபெரியவா !

குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு , காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; 

‘ஆச்சார்யார்கள்’ அவர்களை (அவைகளை) யாவது நாமும் follow  பண்ணலாம் தானே?

[ Thanks to Sage of Kanchi 18.06.2013]
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியிடப்படும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

53 கருத்துகள்:

 1. இரண்டு கருத்துக்கள் சொல்ல ஆசை.

  ஒன்று. திருமணம் நடப்பதற்கு 2 அல்லது 3 நாட்கள் முன்னதாக வேத ஞான பண்டிதர்கள் இந்த திருமண மந்திரங்கள் வார்த்தைக்கு வார்த்தை இல்லாவிட்டாலும் மொத்தமா ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு பொருள் சொல்லக்கூடிய தேடிப்போனாலும் கிடைக்காது.

  விவாஹ மந்த்ரங்கள் பூரணமாக அர்த்தத்துடன் கிடைக்கின்றன. அவற்றை அவர்கள் படிக்கலாம்.

  இன்னொரு விஷயம். சில சமாசாரங்கள் கூடமாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு நேரடி பொருள் ஒன்று. அந்த மந்த்ராதிகளின் உள்ளர்த்தம் வேறு ஒன்று இருக்கும்.

  ஒரு உதாரணமாக சேஷ ஹோமம். பிறகு சாந்தி முகூரத்தத்திற்கு முன்பு சொல்லப்படுகின்ற மந்த்ரங்கள்.

  இரண்டாவது சொல்லப்படும் மந்திரங்களை அவற்றிற்கு என்ன பொருள்
  என்று ......

  1968 லே சாஸ்திரிகள் சொன்னபொழுது நான் சொல்லவில்லை. அவற்றின் மேல்வாரியான பொருளுக்கு என் மனசு சரி அப்படின்னு சொல்லவில்லை.


  பிற்காலத்துலே அதற்கான தாத்பரியம் தெரிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டதும் வாஸ்தவம்.

  எனைப்பொருத்த அளவில். அவை சொல்லப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை.

  இப்பொழுதெல்லாம், சாஸ்திரிகள் ஆகப்பட்டவர் தாலி கட்டி, சப்தபதி ஆனா உடனேயே கிளம்பி போய்விடுகின்றனர்.
  unless they are very close to the marriage party.
  சுப்பு தாத்தா.
  It is your discretion to publish this or not.

  பதிலளிநீக்கு
 2. // கர்மா பண்ணுகிறபோது //

  உண்மை தான் ஐயா...

  // சொன்ன சொல்லைக் காப்பாத்துவா.. //

  இன்று 0 or 1 or 2....?

  பதிலளிநீக்கு
 3. அந்த, யாரோ பத்துப் பன்னிரண்டு புண்யாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன், அரைமணி லெக்சர் கொடுத்துள்ளார்கள், மஹாபெரியவா !//
  எளிய முறையில் பெரிய உபதேசம்! நல்லதொரு பதிவு! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 4. கர்மாவைப் பண்ணுகிறபோதே கேட்டுக்கொள்வது என்றால் அதற்கு ’டயம்’ [பொழுது] இருக்காது.

  முன்னாடியே தெரிந்து கொண்டால் தான், மனசிலும் ஊறும்.

  அப்போதுதான் கர்மா பண்ணுகிறபோது அதில் மனசார நமக்கு ஓர் பிடிப்பும் இருக்கும்.

  பொருளுணர்ந்து செய்யப்படும் போது பலனும் அதிகமல்லவா..!

  பதிலளிநீக்கு
 5. ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை.

  உண்மைதான்..!

  பதிலளிநீக்கு
 6. ‘ஆச்சார்யார்கள்’ அவர்களை (அவைகளை) யாவது நாமும் follow பண்ணலாம் தானே?

  அருமையான முன்னோடிகளை பின்பற்றலாம்..!

  பதிலளிநீக்கு
 7. அந்த, யாரோ பத்துப் பன்னிரண்டு புண்யாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன், அரைமணி லெக்சர் கொடுத்துள்ளார்கள், மஹாபெரியவா !

  ஏதோ கொஞ்சம் பேர்களாவது மிஞ்சுகிறார்களே ...
  தர்மம் தழைக்கட்டும் ..!

  பதிலளிநீக்கு
 8. காலையில், இரண்டு நிமிஷம் ‘ராம, ராம’ என்று சொல்லுங்கோ; சாயங்காலம், ‘சிவ, சிவ’ ன்னு சொல்லுங்கோ…”

  அற்புத மந்திரங்களை அருளிய நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 9. பத்ராசலம் ராமர் கோவிலில் சுதர்சன சக்கரத்திற்கு ஆராதனை செய்யும் படம் மனம் நிறைத்தது ..நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 10. இதைப் படித்தவர்களில் ஒரு பத்து பன்னிரண்டு பேராவது காலையில் இரண்டு நிமிடம் ராம ராம, இரவு இரண்டு மணிநேரம் சிவ சிவ நிச்சயம் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. காலையில், இரண்டு நிமிஷம் ‘ராம, ராம’ என்று சொல்லுங்கோ; சாயங்காலம், ‘சிவ, சிவ’ ன்னு சொல்லுங்கோ…”//

  மஹாபெரியவா அவர்கள் சொன்னதை கடை பிடித்தால் வாழவில் நலம் பெறலாம்.
  அருமையான பகிர்வுக்கு நன்றி.

  குரு தந்த நல்ல விஷயங்களை தகுந்த சமயத்தில் தருகிற உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
  படக் காட்சி அற்புதம்.

  பதிலளிநீக்கு
 12. அந்தப் பத்து பன்னிரெண்டு பேர்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்கிறேன்.
  நானும் பகவான் நாமத்திற்காக ஒரு நாலு நிமிடம் எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. MIGHT IS RIGHT என்று பெரியவருக்குத் தெரியாதா.?மனிதர்களிலும் லீடர் சொல் கேட்டு நடப்பவர்கள் உண்டே.. லீடரா குருவா என்பதே கேள்வி. தற்காலத்தில் லீடர்களும் “ நான் சொல்வதைச் செய். செய்வதைத் தொடராதே”என்றுதான் சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
 14. இரண்டெழுத்துத் தாரக மந்திரமாகத்தான் சொல்லச் சொல்லியிருக்கிரார். ஐயோ ராமாவும், சிவசிவா என்ன இப்படி சொல்றெங்கோவும் இல்லை. வெறும் ராமராமவும்,சிவசிவாவும்
  அடைமொழி இல்லாது வாயில் வந்தால் கூட புண்ணியம். வெறெதுவும் இல்லாவிட்டாலும் வாயில் நல்ல வார்த்தைகள்
  வந்தாலே போதும் என்றுத் தோன்றுகிறது.
  நல்ல புண்ணியம் கிடைக்கும்டியான பதிவு. மனதில் படும்படியாக இருக்கிறது. அன்புடன்

  பதிலளிநீக்கு
 15. இரண்டெழுத்துத் தாரக மந்ரம் சொல்ல அவருக்காக நான்கு நிமிடங்கள் நாம் ஒதுக்கினால் நமக்குக் கிடைப்பது அளப்பரிய புண்ணியம்.. இப்போது இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதே
  யாவரும் நினைக்க ராமநாமத்தை ஜெபிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
  டிஸிப்ளினுக்குக் குரங்குக் கதை பிரத்யக்ஷமாக அமைந்து விட்டது கூட சிந்திக்கும்டியான ஸமாசாரம்.
  வியக்க வைக்கும்படியான அருளுரைகள். நல்ல செய்தி ராமராமா,சிவசிவா என்று சொல்லுவோம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் அண்ணா,

  தங்கள் மூலம் அசீரீரியின் வாக்கு, ராம ராம என்று காலையிலும் சிவ சிவ என்று சாயங்காலமும் சொல்லுமாறு. உடனே ஆரம்பிக்கப் பட்டு விட்டது. மிக்க நன்றி. இதை மகாபெரியவா ஒரு சிறிய கதை மூலம், குரு சொன்னதை உடனே கேட்க வேண்டும் என்று சொன்னது மிக அருமை.

  பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன்

  பதிலளிநீக்கு
 17. உண்மைதான் நூறு பேரில் பத்து பேராவது சொல்வார்கள்! அதனால் உலகம் கொஞ்சம் சுபிட்சம் அடையும் அல்லவா? பெரியவாளின் பார்வை மிகச் சிறப்பு!

  பதிலளிநீக்கு
 18. சிறப்பான பகிர்வைப் பகிர்ந்தமைக்கு அய்யாவிற்கு முதலில் நன்றி. பெரியவாளின் கருத்தைக் கேட்கும் போது வியப்பாகவும், பின்பற்றவும் மனம் உந்துகிறது.. ராமராமா,சிவசிவா என்று சொல்லுவோம். வாழ்க்கையின் புனிதத்தைக் காப்போம்.

  பதிலளிநீக்கு
 19. அன்பின் வை.கோ

  மந்திர சடங்குகளீல் பிடிப்பு ஏற்பட ...... அருமையான பதிவு

  கர்மா செய்யும் போது அதைல் நமக்கொரு பிடிப்பு ஏறபட வேண்டுமெனில் - ஓரிரு நாட்களுக்கு முன்னரே பண்டிதரை வரவழைத்து - மந்திரத்தின் பொருள் - சடங்குகளின் பலன்கள் - ஆகியவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல சிந்தனை - கர்மா பண்ணுகிறபோது அதில் மனசார நமக்கு ஓர் பிடிப்பும் இருக்கும். உண்மை உண்மை - கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல்.

  பெரியவாளின் அரை மணி நேர லெக்சர் பயனுள்ள தகவல்களை த் தந்தது. பெரியவா கூறியபடி - காலையில் இரு நிமிடங்கள் ராம ராம என்றும் மாலையில் இரு நிமிடங்கள் சிவ சிவ என்றும் கூறி வந்தால் அவர்கள் புண்ணியாத்மாக்கள் ஆவார்கள் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளீன் அறிவுரை .

  விலங்குகளீடமும் பறவைகளிடமும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

  பதிவு அருமை - பயனுள்ள தகவல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 20. நல்ல கருத்துக்களை நவின்றமைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 21. //ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை.
  /// அட விடுங்கோ .. அதிரா சொன்னாலே ஆரும் கேட்பதில்லை இக்காலத்தில :)... ஹையோ என் வாய் அடங்காதாமே... :)

  பதிலளிநீக்கு
 22. உண்மையேதான்.. ஐந்தறிவுள்ளவைக்கு முன்னாலே நாமெல்லாம் தோத்திடுவோம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 23. ஆறறிவு படைத்த மனிதர்கள் குரு சொல்வது போல் நடப்பதில்லை என்பது உண்மைதான்....

  பதிலளிநீக்கு
 24. ''..குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு , காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; ..''
  மிக நல்லபதிவு.
  இறைபக்தி அவசியம் மன அமைதிக்கு என்பதை
  நானும் ஒத்துக் கொண்டு வணங்குகிறேன் நினைவு தெரிந்த நாளிலிருந்து.
  நன்றி ஐயா.
  வேதா. இலங்காதிலகம்..

  பதிலளிநீக்கு
 25. நாம ஜெபம், நம்மைப் பாதுகாக்கும் என்பதை ஸ்ரீ மஹாபெரியவர் தம் அமுத மொழிகளால் அருளியிருக்கிறார். சமீபத்தில் 'அன்னை ஸ்ரீ சாரதா தேவி வாழ்க்கை வரலாறு' புத்தகம் படித்தேன். அதில் அன்னை கூறுகிறார். 'நான் தக்ஷிணேஸ்வரத்தில் வாழ்ந்த காலங்களில் அத்தனை வேலைக்கிடையிலும், தினமும் கொஞ்ச நேரம், ஒரு லக்ஷம் தடவை ராம நாமம் சொல்ல ஒதுக்குவேன்' என்று. வேலையை எளிதாக்கும் எந்த வசதிகளும் இல்லாத அக்கால கட்டத்தை நினைத்துப் பார்க்கிறேன். மனமிருந்தால் மார்க்கம் நிச்சயம் உண்டு.

  உன்னதமான பதிவு. மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 26. learning the meaning will make one do the rituals with even more dedication. Only few pandits explains them with patience on their own. Some explains when one asked. There are lot of things that has to be learnt from the nature. Early human beings did that but it was forgotten as the goal & attention changed towards something..... enjoyed the post Gopu Sir

  பதிலளிநீக்கு
 27. // அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், “பத்துப் பன்னிரண்டு பேர்களாவது, சொன்ன சொல்லைக் காப்பாத்துவா” என்றார்கள். //

  இந்த மக்களை சரியாக எடை போட்டுச் சொன்னார் பெரியவர்.

  பதிலளிநீக்கு
 28. எளிய முறையில் பெரிய கருத்துக்கள் ஐயா. நன்றி

  பதிலளிநீக்கு
 29. நல்ல பகிர்வு.

  ஐந்தறிவு மிருகங்களிடம் இருக்கும் நல்ல குணங்கள் மனிதனிடத்தில் இருப்பதில்லை..... :(

  பதிலளிநீக்கு
 30. சிறப்பான பகிர்வு. மிருகங்களிடத்தில் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய....

  பதிலளிநீக்கு
 31. சப்தபதி மந்திரங்கள் குறித்த என்னோட பதிவின் பின்னூட்டத்தில் ஜிஎம்பி கேட்டிருந்த கேள்விக்கு இங்கே பதில் கிடைச்சது. :)))) இப்போதெல்லாம் புரோகிதம் செய்பவர்கள் இளைஞர்களாகப் பெரும்பாலும் இருக்கிறபடியால் சிரத்தையுடன் அவர்கள் மந்திரங்களைச் சரியான உச்சரிப்புடன் கூறிப் பொருளும் சொல்லுகின்றனர். இதைச் செய்யலாம், செய்யக் கூடாது என்பதையும் காரண, காரியத்தோடு விளக்குகின்றனர். ஆகவே வருங்காலம் இவர்கள் கைகளில் என்பது ஓரளவு நம்பிக்கையைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 32. குரங்கு சம்பவம் படிச்சிருக்கேன். :)))

  பதிலளிநீக்கு
 33. நடமாடிய தெய்வம் குறித்து
  தங்கள் பதிவினை குடும்பத்தில்
  அனைவரும் படித்து பெரும்
  புளங்காகிதம் கொண்டோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  சேட்டைக்காரன் அவர்களுடன்
  சிறிது நேரம் பேசினால கூட
  அவர் எதிர்பாராது சூழ் நிலைக்குத் தகுந்தாற்ப்போல
  உதிர்க்கிற ஹாஸ்ய மொழிகள்
  நம்மை மகிழ்வின் உச்சத்திற்கே கொண்டு
  சென்று விடும்.
  நான் பல சமயம் ரசித்து மகிழ்ந்திருக்கிறேன்
  அதை நீங்கள் பதிவு செய்த விதம் அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 34. உங்கள் பதிவுகள் மட்டுமன்றி கருத்துக்களும் சுவாரஸ்யமாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 35. காலையில், இரண்டு நிமிஷம் ‘ராம, ராம’ என்று சொல்லுங்கோ; சாயங்காலம், ‘சிவ, சிவ’ ன்னு சொல்லுங்கோ
  aha aha.
  Sure. I will follow it. Thanks Sir.Worth post. Enjoyed reading.
  viji

  பதிலளிநீக்கு
 36. Very very nice and wonderful post sir, will follow saying raam raam and shiva shiva. I have the habit of saying krishna krishna and sairam...

  பதிலளிநீக்கு
 37. அற்புதமான மந்திரங்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. காலையில், இரண்டு நிமிஷம் ‘ராம, ராம’ என்று சொல்லுங்கோ;

  அவருக்கென்ன சொல்லிவிட்டார்.
  கடைபிடிப்பவர் யாரோ?

  ராம நாம சொல்வதற்கு எளிய வழி ஒன்றுள்ளது.
  அதாவது பேசும்போது அவர் வருகின்றா ராம் போகின்றாராம், இருக்கின்றாராம், பேசினாராம் என்று பேசினால் அதில் வரும் ராம சப்தம் கூட புண்ணியத்தை கொடுக்கும் என்று சொல்கிறார்கள்.

  அப்படியும்சொல்ல மறுக்கும் பொல்லாத மனிதர்களுக்கு காசியில் காசி விஸ்வநாதபெருமான். மரிக்கும் நேரத்தில் ராம நாமத்தை ஸ்மரிக்க வைக்கின்றார்.

  அந்த வாய்ப்பு இல்லாத மற்றவர்களை ராம நாமம் சொல்ல பாடாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் இவனின் ராமரசம் பதிவை பார்த்தாவது அல்லது படித்தாவது ராம நாமம் சொல்லி உய்யவேண்டியது.

  பதிலளிநீக்கு
 39. காலையில், இரண்டு நிமிஷம் ‘ராம, ராம’ என்று சொல்லுங்கோ;

  அவருக்கென்ன சொல்லிவிட்டார்.
  கடைபிடிப்பவர் யாரோ?

  ராம நாம சொல்வதற்கு எளிய வழி ஒன்றுள்ளது.
  அதாவது பேசும்போது அவர் வருகின்றா ராம் போகின்றாராம், இருக்கின்றாராம், பேசினாராம் என்று பேசினால் அதில் வரும் ராம சப்தம் கூட புண்ணியத்தை கொடுக்கும் என்று சொல்கிறார்கள்.

  அப்படியும்சொல்ல மறுக்கும் பொல்லாத மனிதர்களுக்கு காசியில் காசி விஸ்வநாதபெருமான். மரிக்கும் நேரத்தில் ராம நாமத்தை ஸ்மரிக்க வைக்கின்றார்.

  அந்த வாய்ப்பு இல்லாத மற்றவர்களை ராம நாமம் சொல்ல பாடாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் இவனின் ராமரசம் பதிவை பார்த்தாவது அல்லது படித்தாவது ராம நாமம் சொல்லி உய்யவேண்டியது.

  பதிலளிநீக்கு
 40. சில மாதங்களுக்கு முன் இங்கே ஆஸ்திரேலியாவில் ஒரு தமிழ்க்குடும்பத்தின் கிரகப்பிரவேசத்துக்கு சென்றிருந்தோம். அவர்கள் ஒரு வட இந்தியப் பண்டிதரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் சுலோகங்களைச் சொல்லி ஒவ்வொரு சுலோகத்துக்கும் தெளிவான ஆங்கிலத்தில் விளக்கமும் சொல்லி மிகவும் நிதானமாகவும் நிறைவாகவும் பூஜையை முடித்துவைத்தார். இதுவரை அறிந்திராத பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.

  இயற்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டியதன் அவசியம் உணர்த்திய பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 41. ராம நாமம் சொல்வதே கலியில் கதியாம் அதையும் மறந்தால் அதோ கதியாம் சிவனும் பார்வதியும் சொல்லும் நாமமாம் கவலையை போககி சாந்தி நல்குமாம் ராமநாமம் சொல்லி அனுமன் கட்லை தாண்டினான் மலையை தூக்கினான் மலை போன்ற துன்பமும் பனி போல் விலகுமாம் ராம நாமம் சொல்லி சபரி முக்தி அடைந்தாள் நாமமும் நாமியும் வேறு வேறு இல்லவே இல்லையாம் ராம நாமம் சொல்வதற்க்கு தடைகள் ஏதும் இல்லையாம் சொல்ல சொல்ல தடைகள் எல்லாம் தாமே விலகுமாம் எனவே ராம நாமம் சொல்லிக்கொண்டே இருப்போம் ராம் ராம் நல்ல பகிர்வு நனறி

  பதிலளிநீக்கு
 42. மந்திரங்களின் பொருள் மனதில் பதிந்தால்தான் அவைகளின் பலன் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 43. கர்மாவைப் பண்ணுகிறபோதே கேட்டுக்கொள்வது என்றால் அதற்கு ’டயம்’ [பொழுது] இருக்காது.

  முன்னாடியே தெரிந்து கொண்டால் தான், மனசிலும் ஊறும்.

  அப்போதுதான் கர்மா பண்ணுகிறபோது அதில் மனசார நமக்கு ஓர் பிடிப்பும் இருக்கும்.

  பொருளுணர்ந்து செய்யப்படும் போது பலனும் அதிகமல்லவா..!

  பதிலளிநீக்கு
 44. மந்திரங்களின் பொருள் அறிந்து படித்தால்தான் அதன் அருமையும் நமக்கு புரியும்.

  இரண்டெழுத்து மந்திரங்களை சொல்ல வைக்க எவ்வளவு அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

  //காலையில், இரண்டு நிமிஷம் ‘ராம, ராம’ என்று சொல்லுங்கோ; சாயங்காலம், ‘சிவ, சிவ’ ன்னு சொல்லுங்கோ…”//

  நாளையில் இருந்து, இல்லை இல்லை இன்றே சொல்ல ஆரம்பித்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ஜெயா, வணக்கம்.

   காலையில், இரண்டு நிமிஷம் ‘ராம, ராம’ என்று சொல்லுங்கோ; சாயங்காலம், ‘சிவ, சிவ’ ன்னு சொல்லுங்கோ…”

   //நாளையில் இருந்து, இல்லை இல்லை இன்றே சொல்ல ஆரம்பித்து விடுகிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி ஜெயா. எனக்கும் சேர்த்து சொல்லுங்கோ. :)

   நீக்கு
 45. ஒரு சிலராவது குருசாமி சொல்லினத கேட்டு நடந்தா நல்லதுதானே.

  பதிலளிநீக்கு
 46. அவர் வருகிறாராம் போகிறா ராம் இருக்கிறா ராம் என்று சொல்லும் போதுகூட நம்மை அறியாமலே எவ்வளவு ராம நாமாவை சொல்கிறோம் தெளிவான விளக்கம்.

  பதிலளிநீக்கு
 47. குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு , காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; ///ஒவ்வொரு உயிரும் ஒரு படிப்பினைத்தரும்..

  பதிலளிநீக்கு
 48. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’, மிக முக்கியமான நாளான இன்று (03.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/431894840646549/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு