About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, January 24, 2014

VGK 02 ] தை வெள்ளிக்கிழமை


இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 30.01.2014 

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 
[ V A L A M B A L @ G M A I L . C O M ] 

REFERENCE NUMBER:  VGK 02

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:'தை வெள்ளிக்கிழமை'

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
                                    
                                  
                                   
                                               ருக்குவுக்கு இடுப்புவலி எடுத்து விட்டது. 

ஸ்பெஷல் வார்டிலிருந்து தியேட்டருக்கு அழைத்துச் செல்கிறார்கள். 

பெற்ற தாய் போல பார்த்துக் கொள்ள டாக்டர் மரகதம் இருக்கிறார்கள். 

சுகப் பிரஸவமாகி சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை மட்டும் தான் ருக்குவுக்கு.

ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தாயான ருக்கு, இந்த ஐந்தாவது குழந்தை தேவையில்லை என்று சொல்லி டாக்டர் மரகதத்திடம் வந்தவள் தான், ஒரு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு.

“ஏம்மா .... சற்று முன்ஜாக்கிரதையாக இருந்திருக்கக் கூடாதா? இப்போது தான் எவ்வளவோ தடுப்பு முறைகள் இருக்கே! கருக்கலைப்பு செய்து உடம்பைக் கெடுத்துக்கணுமா?” என்றார்கள் அந்த லேடி டாக்டர்.

ருக்கு கடந்த இரண்டு வருடங்களாக, டாக்டர் மரகதம் வீட்டில் சமையல் வேலை செய்து வருபவள். அவள் கணவன் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்ப்பவர். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குள் இரண்டு பெண், இரண்டு பிள்ளையென நான்கு குழந்தைகள். இது ஐந்தாவது பிரஸவம்.

ஒரே ஒரு முறை ருக்குவின், தங்கவிக்ரஹம் போன்ற நான்கு குழந்தைகளையும் டாக்டர் மரகதம் பார்க்க நேர்ந்த போது, அவர்களின் அழகு, அடக்கம், அறிவு, ஆரோக்கியம் அனைத்தையும் கவனித்து தனக்குள் வியந்து போய் இருந்தார்கள்.

ஐந்தாவதாக இருப்பினும் நல்ல நிலையில் உருவாகியுள்ள இந்தக் குழந்தையை கருக்கலைப்பு செய்ய மனம் ஒப்பவில்லை, டாக்டர் மரகதத்திற்கு.

மேலும் டாக்டருக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டு, டாக்டரிடம் ஏதாவது நல்ல குழந்தையாக ஏற்பாடு செய்யச் சொல்லிக் கூறியிருந்தனர், அந்த தம்பதியினர்.

ருக்குவிடம், டாக்டர் மரகதம் இந்த விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொன்னார்கள்.

“உனக்கு வேண்டாத இந்தக் குழந்தையை, இப்போது எதுவும் செய்யாமல், நீ பெற்றெடுத்த பிறகு என்னிடம் கொடுத்து விடேன். பிரஸவம் நல்லபடியாக நடக்கும் வரை, நானே உன்னையும் உனக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும், போஷாக்காக கவனித்துக்கொள்கிறேன்” என்று கூறி ஒருவாறு ருக்குவையும், அவள் மூலமே அவள் கணவனையும், சம்மதிக்க வைத்து விட்டார், அந்த டாக்டர்.

மேற்கொண்டு குழந்தை பிறக்காமல் இருக்க பிரஸவத்திற்குப் பின், கருத்தடை ஆபரேஷன் செய்வதாகவும், பேசித் தீர்மானித்து வைத்தனர்.

அன்று ருக்கு வேண்டாமென்று தீர்மானித்த குழந்தை பிறக்கும் நேரம், இப்போது நெருங்கி விட்டது.

ருக்கு பிரஸவ வலியின் உச்சக்கட்டத்தில் துள்ளித் துடிக்கிறாள். மிகப்பெரிய அலறல் சப்தம் கேட்கிறது.  
பட்டு ரோஜாக்குவியல் போல பெண் குழந்தை பிறந்து விட்டது. நல்லவேளையாக இதுவும் நார்மல் டெலிவெரி தான். தாயும் சேயும் நலம். 


டாக்டர் மரகதம் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் தன் கடமையைக் கச்சிதமாக முடித்ததும், கை கழுவச் செல்கிறார்கள்.

குழந்தையைக் குளிப்பாட்ட எடுத்துச் செல்கின்றனர். வாசலில் கவலையுடன் ருக்குவின் கணவர். 

டாக்டருக்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது.

“உங்கள் விருப்பப்படியே பெண் குழந்தை தான். யெஸ்...யெஸ், ஜோராயிருக்கு. ஷ்யூர், ஐ வில் டூ இட். ... இப்போதே கூட குழந்தையைப் பார்க்க வரலாம். வக்கீலுடன் பேசி லீகல் டாகுமெண்ட்ஸ் ரெடி செய்து வைச்சுடுங்கோ. நான் போன் செய்த பிறகு புறப்பட்டு வாங்கோ” என்றார் டாக்டர்.

ருக்குவை தியேட்டரிலிருந்து ஸ்பெஷல் ரூமுக்கு கூட்டி வந்து படுக்க வைத்து, அருகே தொட்டிலில் குழந்தையைப் போடுகிறார்கள்.

ருக்குவின் கணவரும் உள்ளே போகிறார். பெற்றோர்கள், பிறந்த குழந்தையுடன் கொஞ்ச நேரமாவது கொஞ்சட்டும். மனம் விட்டுப்பேசி, மனப்பூர்வமாக குழந்தையைத் தத்து கொடுக்கட்டும் என்று ஒரு மணி நேரம் வரை டாக்டர் அவகாசம் தந்திருந்தார்.

பிறகு டாக்டர் ருக்குவை நெருங்கி ஆறுதலாக அவள் தலையைக் கோதி விட்டார்.

“என்னம்மா, பரிபூரண சம்மதம் தானே. அவங்களை வரச் சொல்லவா? உன் வீட்டுக்காரர் என்ன சொல்கிறார்? உன் வீட்டுக்காரர் தனியே ஒரு ஹோட்டல் வைத்து, முதலாளி போல வாழவேண்டி, நியாயமாக எவ்வளவு தொகை கேட்கிறீர்களோ, அவர்கள் அதைத் தந்து விட நிச்சயம் சம்மதிப்பார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

மேலும் உனக்குப் பிறந்த இந்தக் குழந்தையை மிகவும் நன்றாக, வசதியாக வளர்த்து, படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.

இன்றைக்கே இப்போதே உடனடியாக முடிவெடுத்து விட்டால் தான் உங்களுக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது ” என்றார் டாக்டர்.

கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.

“எங்களை  தயவுசெய்து மன்னிச்சுடுங்க டாக்டர். நாங்க இந்தக் குழந்தையை மட்டும் கொடுக்க விரும்பலை” என்றனர்.

சிரித்துக்கொண்ட டாக்டர், ”அதனால் பரவாயில்லை. ஏற்கனவே நீங்க இரண்டு பேரும் ஒத்துக்கொண்ட விஷயம் தானே என்று தான் கேட்டேன். திடீரென்று ஏன் இப்படி மனசு மாறினீங்க? அதை மட்டும் தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்” என்றார் டாக்டர்.

ருக்கு வெட்கத்துடன் மெளனமாகத் தலையைக் குனிந்து கொள்ள, அவள் கணவன் பேச ஆரம்பித்தான்:

“இன்று ‘தை வெள்ளிக்கிழமை’ டாக்டர். 

அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. 

மேலும் ‘அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; 

தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்களது அஞ்சாம் பெண்ணை கொடுக்க மனசு வரலை, டாக்டர்” என்றார்.

இது போலவும் ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்த்த டாக்டர் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே போனார், தன் குடும்ப நண்பருக்குப் போன் செய்து, அவர்களை புறப்பட்டு வராமல் தடுக்க.


oooooOooooo
49 comments:

 1. நியாயமான ஆசை.
  யாரைக் குறை கூற முடியும்.
  ஐந்தாவது பெண்கெஞ்சினாலும் கிடையாது என்பார்கள்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 2. நல்ல கதை...
  விமர்சனம்... அப்புறம்...

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா !
  காலையில் அறுவைச் சிகிச்சைக்குச் செல்லவிருப்பதால் மனதில் கொஞ்சம் பட படப்பும் மிகுந்த ஏற்பாடுகளும் இங்கே தங்களின் சிறந்த படைப்புக்களுக்கு வருகை தர முடியாமல் உள்ளது மன்னிக்கவும் ஐயா .பரிசுப் பொருளுக்கும் நன்றி சொல்லிக் கொண்டே தங்களின் ஆசியுடன் சென்று வருகின்றேன் .

  ReplyDelete
 4. அருமை ஐயா.
  தை வெள்ளியின் பெருமை அறிந்தேன்

  ReplyDelete
 5. இதுதான் தாய்மை
  அற்புதமான கதை
  மீண்டும் படிப்பது போலவே இல்லை
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 6. அன்பின் வை.கோ - அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது - கதை அருமை . ஒரு பழமொழி எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்துகிறது - மீண்டும் சில முறை படித்து விமர்சனம் எழுதி அனுப்புகிறேன். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 7. இந்த முறை விரைவில் விமர்சனம் அனுப்புகிறேன் ஐயா... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. இன்று விமர்சனம் அனுப்பி விட்டேன் ஐயா...
   26.01.2014 8.35am

   Delete
 8. என்னைப் போல் ஐந்தாம் பேற்று பெண்கள் மறுபடியும் பெருமிதப் பட ஒரு கதை:)

  ReplyDelete
 9. எத்தனை பிள்ளைகள் பெற்றாலும் தன் குழந்தையை கொடுக்க எந்த தாய்க்கும் மனசு வராது.அம்பாளே காப்பாற்றிவிடுவாள் ஆன்ன்லும் வாடகைத்தாய்களும் உண்டு நல்ல பதிவு நன்றி

  ReplyDelete
 10. குழந்தையைக் கண்ணால் பார்த்த பிரகு கொடுக்க மனம் எப்படி வரும். அதுவும் 5 குழந்தைகளெல்லாம் பெற்றுக்கொள்ளும் நாளில். கண்ணை மூக்கை காட்டாதவரைஸரி. அப்புறம் இப்படிதான். வசனமே உண்டு. தைவெள்ளிக் கிழமைக்கு ஏற்ற தலைப்பு. மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான் அந்த நாட்களில். அன்புடன்

  ReplyDelete
 11. ஏழைகள் என்றாலும் பெற்றவர்கள் அல்லவா. சிறு கருஒன்று அழகு கதையானது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. நல்ல கதை. விமரிசனம் தனியே......

  ReplyDelete
 13. Nice story,Just depicts the human nature

  ReplyDelete
 14. “இன்று ‘தை வெள்ளிக்கிழமை’ -
  பொருத்தமான அதே தை வெள்ளிக்கிழமை நாளில் மிகப்பொருத்தமான கதைக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 15. மிகச் சிறப்பான கதை. இந்த காலத்தில் வாடகைத் தாய் என்று வழக்கம் வந்தாலும் அந்த தாயின் மனதில் எவ்வளவு கஷ்டம் இருக்கும்.....

  நல்ல கதை பகிர்வுக்கு நன்றி. மீண்டும் படித்தாலும் விரும்பிப் படித்தது...

  ReplyDelete
 16. எவ்வவளவு குழந்தைகள் இருந்தாலும் தனக்கு பிறந்த குழந்தையை மற்றவர்களுக்கு முழுமனசோட கொடுக்க யாருக்குதான் தோன்றும்.

  ReplyDelete
 17. மீண்டும் படித்தாலும் சுவாரசியம் தந்தது...

  அந்த அம்மாவுக்கு மனம் என்ன பாடுபட்டிருக்கும்... நல்லதோர் கதை..

  ReplyDelete
 18. சிறப்பான கதை! அருமை! நன்றி!

  ReplyDelete
 19. கதை ம்னதை தொட்டது என்பதே உண்மை.

  ReplyDelete
 20. azhagana sirukathai. best wishes Gopu sir.

  ReplyDelete
 21. தாய்மையின் மகத்துவத்தை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 22. அருமையான கதை! விமர்சனம் அனுப்ப முயற்சிசெய்கிறேன் ஐயா! நன்றி!

  ReplyDelete
 23. நல்ல கதை. மனதைதொட்டது.

  ReplyDelete
 24. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகாகக் கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ள அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 25. நல்ல கதை. பிறந்தது எத்தனையாவது குழந்தையாக இருந்தாலும் ஒரு பெண் தான் பெற்ற குழந்தையை அடுத்தவருக்கு தத்துக் கொடுக்க விரும்புவாளா?

  ReplyDelete
  Replies
  1. //Radha Balu May 23, 2014 at 1:24 PM//

   வாங்கோ, வணக்கம்.

   //நல்ல கதை. பிறந்தது எத்தனையாவது குழந்தையாக இருந்தாலும் ஒரு பெண் தான் பெற்ற குழந்தையை அடுத்தவருக்கு தத்துக் கொடுக்க விரும்புவாளா? //

   மாட்டாள், விரும்ப மாட்டாள், விரும்பவே மாட்டாள். விரும்பவும் கூடாதுதான்.

   இருப்பினும் இது ஒழுக்கமுள்ள சமுதாயம் என்ற நாணயத்தின் ஒருபுறம்.

   அதன் மறுபுறம்

   ‘குப்பைத்தொட்டியில் ஓர் குழந்தை’
   ‘கல்லூரி பாத் ரூம் கழிவறையில் ஒர் குழந்தை’
   ‘கோயில் உண்டியல் அருகே அழுதுகொண்டே ஒரு பச்சிளம் குழந்தை’
   அரசுத்தொட்டிலில் சேரும் ஆதரவற்ற குழந்தைகள்

   என செய்திகள் படிக்கும் போது நம் மனது ரணமாகிறது.

   இந்தக்கொடும் செயல்களால். சமூகத்தால் அந்த வஞ்சிக்கப்பட்ட, ஏமாறிய, ஏமாற்றப்பட்ட, ஆதரவு அற்ற, அபலைப்பெண்ணான பெற்ற தாயின் மனம் என்ன பாடு படக்கூடும் !!

   இவைகளும் கூட மறைமுகமாக தத்துக்கொடுப்பதற்கான வழிகளாக ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டே வருகிறது அல்லவா !

   அதே நேரம் ‘இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர்’ பலரும் உள்ளனரே !

   அதற்கான கதைகளும் இந்தப்போட்டியில் இதுவரை இரண்டு வெளியாகி உள்ளனவே.

   VGK-09 ’அஞ்சலை’
   http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.html

   VGK-11 தாங்கள் விமர்சனத்திற்காகப் பரிசு பெற்ற கதை

   -=-=-=-

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்புடன் கோபு

   Delete
 26. தை வெள்ளிக்கிழமை ஐந்தாவதாகப் பெண் குழந்தை, யாருக்குத்தான் விட மனசு வரும்?

  ReplyDelete
 27. யாருக்குதான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை தத்து கொடுக்க மனசு வரும் யதார்த்தமான நல்ல கதை.

  ReplyDelete
 28. ஐந்தாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது என்பார்கள்.

  யாருக்குத்தான் கொடுக்க மனசு வரும். நல்லதொரு சிறுகதை.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 26, 2015 at 4:10 PM

   //ஐந்தாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது என்பார்கள்.

   யாருக்குத்தான் கொடுக்க மனசு வரும். நல்லதொரு சிறுகதை.//

   மிக்க நன்றி, ஜெ.

   Delete
 29. இதுகூட மொதகவே படிச்சிபிட்டனே

  ReplyDelete
 30. பொண்ணோ பிள்ளையோ யாருக்குமே கொடுக்க மனது வராதுதான். அதை சொல்லி இருந்த விதம் ரொம்ப அழகு.

  ReplyDelete
 31. பொண்(ன்)ண குடுக்க மனசுவருமா???

  ReplyDelete
 32. வேண்டாம் என்று ஒதுக்கப்படுகின்ற கல்லே கருவரையின் கடவுள் சிலையாக ஆவதுபோல, கருவைக் கலைக்க நினைத்த உள்ளம், பிறந்த பெண்குழந்தையை, தங்க விக்ரஹம், கெஞ்சினாலும் கிடைக்காது 5ஆம் பெண், தை வெள்ளியில் தோன்றிய மஹாலக்‌ஷ்மி, இவள் எங்களுக்கு வேண்டும்- எங்களுக்கே வேண்டும் என்ற மனமாற்றம் அவர்கள் வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம்.

  ReplyDelete
  Replies
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 33. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 32 + 32

  அதற்கான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_11.html

  http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_282.html

  ReplyDelete
 34. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  https://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-01-03.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  https://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-02-03.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  https://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-03-03.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  ReplyDelete
 35. COMMENTS GIVEN BY Mr. V. NATANA SABAPATHI Sir in my WhatsApp Page on 21.08.2018 :-

  -=-=-=-=-=-

  வணக்கம் ஐயா! தங்களின் இன்றைய ‘தை வெள்ளிக்கிழமை’ கதையை படித்தேன். என்னதான் ஏழையாக இருந்தாலும் பெற்ற குழந்தையை அதுவும் அதிர்ஷ்ட தேவதை போல், தை வெள்ளியன்று ஐந்தாவதாக பிறந்த பெண் குழந்தையை விற்க அந்த தாய்க்கு மனமில்லை என்பதை அருமையாய் முடித்திருக்கிறீர்கள. பாராட்டுகள்!

  இந்தக் கதை வந்தபோது நான் படித்திருந்தால் நானும் விமரிசன போட்டியில் கலந்துக்கொண்டு இருந்திருப்பேன்.

  -=-=-=-=-=-

  திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  ReplyDelete
  Replies
  1. எனது கருத்தை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா!

   Delete
 36. WHATS APP COMMENTS RECEIVED ON 22.08.2018 FROM 'LIBYA VASUDEVAN' RETIRED PERSON FROM BHEL, TIRUCHI NOW AT MELBOURNE

  -=-=-=-=-=-

  [20/08 17:07] Libya Vasudevan Bhel: Super Gopi. அருமையான சிறுகதை உணர்வு பூர்வமான எழுத்துக்கள். தினம் ஒன்று பதிந்தால் நல்லது.

  இப்படிக்கு
  *லிபியா வாசுதேவன்.*
  (உங்களுக்கு உடனே புரிந்து கொள்வதற்காக)

  [20/08 17:10] Libya Vasudevan Bhel: I am now in Melbourne with my second son to take care of our grand daughter. Will stay here upto Dec 20. Hope you and your family are fine.

  How is Trichy after floods in Cauvery? Take care on safety.

  Regards

  [22/08 14:57] Libya Vasudevan Bhel: VGK தூள் கெளப்புறார்👏🏻👏🏻👏🏻👍🏽👍🏽👍🏽

  >>>>>

  ReplyDelete

 37. [22/08 14:58] Libya Vasudevan Bhel:
  Commented by Chandramohan ex Manager OP&C RM👆👆

  -=-=-=-

  [22/08 14:59] Libya Vasudevan Bhel: [22/08, 18:45] Revathi Narayanasamy: Arumaiyana nadai

  [22/08, 18:46] Revathi Narayanasamy: Varnanaigal pramadham

  [22/08, 18:46] Revathi Narayanasamy: VGK kalakkaraar

  My cousin sister from Chennai
  [22/08 15:02] Libya Vasudevan Bhel: Comment rec'd from my Sister Anu Swaminathan just now from Chennai after reading Chudidar Vaangapporeyn ...
  Super vasu.👌👌

  -=-=-=-

  [22/08 15:05] Libya Vasudevan Bhel: I shared to few groups in which my relatives and friends of BHEL are there. Hope you will approve for me to forward your link.

  -=-=-=-

  Sooooper nadai, hope this story reveals your personal life experience...

  -=-=-=-

  மிக்க நன்றி ’லிப்யா வாசுதேவன்’ ஸார். வாட்ஸ்-அப்பில் - STATUS பகுதியில் 20.08.2018 முதல் தினமும் வெளிவர இருக்கும் என் கதைகளின் லிங்க்ஸ்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து கொள்வதிலும், அவர்களின் கருத்துக்களை வாங்கி எனக்குத் தாங்கள் FORWARD செய்வதிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

  பிரியமுள்ள VGK
  (Retired Accounts Officer/Cash - BHEL -Tiruchi-14)

  ReplyDelete
 38. Mr. G. MURALI of M/s. High Energy Batteries Limited, Tiruchi
  appreciated this story through Whats App message on 21.08.2018

  -=-=-=-=-

  [21/08 19:34] Murali G. HEB: 🤓தை வெள்ளிக்கிழமை - சிறுகதை - இன்றும் படித்தேன்🤷‍♂👍✍👏🤓👌🏼

  -=-=-=-=-

  Thanks a Lot ..... My Dear Murali.

  அன்புடன் கோபு மாமா

  ReplyDelete
 39. திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.

  விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு
  22.09.2018

  ReplyDelete
 40. வை.கோ.உங்களின் எளிய நடை ரசிக்க வைக்கிறது, சிறுகதை வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிய வைக்கிறது, எனது நெருங்கிய சொந்தத்தில் இதே மாதிரியான சம்பவத்தை கண்டேன்.மீண்டும் அதை கண்முன்னே காட்டியுள்ளீர்கள்.

  ReplyDelete