என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 24 மார்ச், 2014

VGK 08 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - " அமுதைப் பொழியும் நிலவே "




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 08 -  

” அமுதைப்பொழியும் நிலவே ”




மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து













இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 






    


முதல் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்: 



அதில் ஒருவர்



   





 


திருமதி. 


இராஜராஜேஸ்வரி 


அவர்கள்




http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/

"krishna"




  











முதல் பரிசினை வென்றுள்ள 

திருமதி. 


இராஜராஜேஸ்வரி


 அவர்களின் விமர்சனம்:



 







ஒரு கதையின் ஆசிரியர் தன் கதையிலேயே தன்னை 

ஒரு பாத்திரமாக்குவது நுட்பம், அதில் தன்னைத் தானே கேலி 

செய்துகொண்டு, அதன்மூலம் தன்னுடைய கதாபாத்திரங்களை நம் 

மனதில் படம்பிடித்தாற்போல நிறுத்துவது, இன்னும் அதிநுட்பம்.. 


அந்த திறமையில் மிகவும் கைதேர்ந்தவராக இந்த கதையில் தம்மை 

நிலை நிறுத்துகிறார் கதை ஆசிரியர்..

கதையைச் சுவாரஸ்யமாக அவர் சொல்லியிருக்கும் விதம், ‘அபாரம்’கூட இல்லை, ’அற்புதம்’தான் சரியான வார்த்தை

நுணுக்கமான அலசல்களும்,  கண்முன் விரிகிற காட்சிகளுமாய் 

தொடர் பேருந்துக்குள் உட்கார்ந்திருப்பதாக உணரவைக்கின்றன 

வர்ணனைகள்..!

அதோடு அவரது சொல்தேர்வுக்கும் சான்று பகர்கின்றன..!

அலுவலக விடுமுறை தினத்தில் மூன்று மணிநேர மின் வெட்டை 

சமாளிக்க புதிதாக விடப்பட்ட தொடர் பேருந்தில் பயணித்து காற்று 

வாங்கப்போய் கனவு கண்டு சுவையான கதையாக நமக்கு அளித்தது 

ரசிக்கவைக்கிறது..

மரவட்டை உதாரணம் எல்லாம் சரிதான்..

நாய்படாத பாடுபடும் அந்த சாமானியன் நினைவில் எழுந்த பைரவர் உதாரணம் தான் முகம் சுளிக்கவைக்கிறது.. தவிர்த்திருக்கலாம். 

பல பெண்கள் பஸ்ஸில் ஏறியதால் கமழ்ந்த மல்லிகை மணம் கதாநாயகனை  அழைத்துச்செல்லும் கற்பனை உலகம் ரசிக்கவைக்கிறது..

பாலக்காட்டுப்பெண்ணை தனக்கு இசைவாக கற்பனையில் கண்டு மகிழ்வதிலாகட்டும், அவளுடன் வெல்டிங், வெட்டிங் என்று கனவு கண்ட மாத்திரத்திலேயே கற்பனையில் மிதப்பதிலாகட்டும், அவளுக்காக ஆட்டோ பயணத்தையும் தன் செலவில் வலிந்து ஏற்பதற்குத் தயாராகும் நிலையிலாகட்டும், நவரசங்களுடன் நகைச்சுவையை  இணைக்கும் கதை ஆசிரியரின் அசாதாரண தனித்திறமை  வியப்பளிக்கிறது ..

அந்ததொடர் பேருந்தில் தொடர்ச்சியாக  சேரநன்னாட்டிளம் மலையாள பெண் குட்டியின் பயோ டேட்டாவைக்கூட  அவளையே மடியில் வைத்துக்கொஞ்சும் பாங்கில் அறிமுகப்படுத்தும் வரிகள் கூட  கலகலப்பாக   காதல் கலந்து மிளிர்கிறதே..!

மிகுந்த வரப்பிரசாதியான கல்லுக்குழி ஆஞ்சநேயர்  கொலுவிருக்கும் 

ஊரிலேயே கற்பனைப்பெண்ணுக்கு ஒரு சிநேகிதியை கற்பித்த விதம் 

ஆஹா என்று சபாஷ் போட வைக்கிறது..! 

தானே அவள் கைப்பையில் ஐக்கியமாகிக்கொள்வதான கற்பனை பேஷ் 

..பேஷ் என்று சிலாகிக்க வைக்கிறது ..!


ஒரு சின்ன கனவை  விஸ்தாரமாக்கி ஈறைப்பேனாக்கி பேனைப்பெருமாளாக்கும் கலையில் விற்பன்னர் பட்டமும் பெற்றவர் போல் துக்கிணியூண்டு சாதார  கதைக்கருவை எடுத்து வைத்துக்கொண்டு தொடர் பேருந்து ...... அளவிற்கு அசாதாரணமாக வளர்த்துதல் என்பது லேசுப்பட்ட காரியமா என்ன ..!

கட்டி அணைக்காத குறையாக வெற்றிலை சாறை உமிழ்ந்து ஒரு பார்வையும் -லுக்கும் கொடுத்து - கிக் கொடுத்தது போல அலறவைக்கும் பாட்டி விழுந்து விழுந்து சிரிக்கவைத்து கதையையும் நிறைவுக்குக் கொண்டு வந்து கனவையும் கலைத்து நினைவுக்கு அழைத்துவரும் பாங்கு  பாவம் ... ! என்று பரிதாப்பட வைக்கிறது..


கிளவுட நைன்  ன்னும் ஒன்பதாவது சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருப்பவரை தலைகுப்புற பூமிக்கு விழவைத்த  மாதிரியான அதிர்ச்சியையும் உணர வைக்கிறார் ஆசிரியர்..!

போதாக்குறைக்கு பொன்னம்மா என்பது மாதிரி அமுதாவை டிக்கெட் எடுக்கவும் சொல்லும் கர்ணகடூரகுரலில் மொழிவது நனவுலகின் நிதர்சனத்தை   வலியுடன் உணர்த்தவும் தவறவில்லையே..!



 


மனம் நிறைந்த  பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்


    


மேற்படி கொங்கு நாட்டுக் 


கோவைத் தங்கத்துடன் 



முதல் பரிசினை வென்று 


பகிர்ந்து கொண்டுள்ள 


மற்றொரு


சிங்கம் யார் ?






எங்கள் ஊராம் 


திருச்சி மலைக்கோட்டை 


மாநகரைச் சேர்ந்த


மஹாராணி



திருமதி



ராதா பாலு 


அவர்கள்


வலைத்தளங்கள்: 

” எண்ணத்தின் வண்ணங்கள் ”

http://radhabaloo.blogspot.com/


“அறுசுவைக் களஞ்சியம் ”

http://arusuvaikkalanjiyam.blogspot.com/


“ என் மன ஊஞ்சலில் “

http://enmanaoonjalil.blogspot.com/







 




முதல் பரிசினை 

முதன் முதலாக வென்றுள்ள


திருமதி


ராதா பாலு 


அவர்களின் விமர்சனம் இதோ :




அலுவலக விடுமுறையை ஒரு அருமையான தொடர் பேருந்தில் அமர்ந்து பகல்  கனவுடன் அனுபவிக்கும் ஒரு சராசரி மனிதரின் நிலையை அழகாக, ரசனையோடு கதாசிரியர் விளக்கியவிதம் அருமை. 





ஒரு ஆண்  அலுவலகம் விடுமுறை என்றதும்  வீட்டில் மின்சாரமும் இருக்காது என்பதால் ஜாலியாக பஸ் சவாரி செய்யமுடிகிறது. அதே ஒரு பெண் இப்படி சொல்ல முடியுமா? அல்லது செல்ல முடியுமா?




எத்தனை வயதானாலும் சில சின்னச்சின்ன  ஆசைகள் அனைவருக்குமே இருக்கும் என்பதை ஹீரோவின் தொடர் பேருந்து பயண ஆசையாகக் கூறுகிறார் ஆசிரியர்.





தொடர் பேருந்துக்கு ஆசிரியர் கொடுத்த விளக்கங்கள் சற்றே முகச் சுளிப்பை ஏற்படுத்தினாலும், ரசிக்க வைத்தது. 



கதாநாயகனின் நீண்டகால  ஆசையை நிறைவேற்ற, அழகாக பேருந்து வந்து பக்கத்தில் நின்றால் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதைதானே! சட்டென்று ஏறி பட்டென்று ஒரு இருக்கையைப் பிடித்து விட்ட  நாயகன் காற்று வாங்க ஏறிக் கண்ணயர்ந்து ஒரு கவிதை நடையில் கனவும் கண்டு... அதை நமக்கு கச்சிதமாகச் சொல்லிவிட்டார் கதாசிரியர்!



பேருந்து பயணம் ஒரு இனிமையான அனுபவம்தான்  கூட்டமோ, தள்ளுமுள்ளோ இல்லாவிட்டால். அந்தப் பயண நேரத்தில் நாம் பலரின் பேச்சு, செய்கைகள் இவை காணவும்,கேட்கவும் சுவையானவை. அதிலும் மொபைலில் சிலர் சத்தமாகப் பேசும்போது அவர்கள் வீட்டு விஷயம், வியாபார விஷயம், அலுவலக விஷயம் என்று அத்தனையும் தெரிந்து கொள்ளலாம்.



பேருந்தில் ஏறும் சில காதல், புது கல்யாண ஜோடிகளின் நெருக்கங்கள் நம்மை  நெளிய வைக்கும்! அதிலும் மல்லிகை மணக்க ஏறிய மயக்கம் தரும் சின்னப் பெண்களைக் கண்ட நம் கதாநாயகரும் பாவம்... அந்த நினைவிலேயே உறங்கிவிட்டார்! மனித மனத்தின் எண்ணங்கள்தான் கனவாக வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் நம் கதாநாயகனும்  ஒரு பெண் நம் பக்கத்தில் உட்கார்ந்து நம்முடன் பேசிக் கொண்டே வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியிருப்பார் போலும்! 


குளிர்ந்த அமுதைப் பொழியும் வான்மதியாக ஒரு பெண் அருகில் வந்து உட்கார்ந்து இரண்டு வார்த்தைகள் பேசினாலே போதுமே, ஆண்களின் ஆசை மனம் அவளைத் திருமணம் செய்துகொண்டு ஹனிமூனுக்கே சென்றுவிடுவார்கள்! இது சராசரி  ஆண்களின் உள்மனம்.



அழைப்புக் கடிதத்தில் அவள் பெயரையும், வயதையும் பார்த்து அவளுக்கு கனிந்த பருவம், அழகிய உருவம், அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை.... மனத்துக்குள் அவளை வர்ணித்து அப்படியே பதிந்து கொண்டுவிட்டான் நம் ஹீரோ! கனவில் தோன்றும் கற்பனை எண்ணங்கள் இந்தக் கதைக்கு களமாக இருந்து கணம் சேர்க்கின்றன.


'காதல் பெண்ணின் கடைக்கண் பார்வையில் காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்' என்று மகாகவியே கூறியிருக்க, சாதாரண ஆண்மகன் எம்மாத்திரம்? 

எழிலான பெண் ஒருத்தி அழகு தேவதையாக அருகில் அமர்ந்து வளைந்து, குழைந்து பேசினால் அந்த ஆண் கற்பனைக் குதிரையில் ஏறி ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விடுவானே! அதைத்தான் நம் கதாநாயகனும் செய்கிறான்! 

அமுதா போக வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் என்ன, அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போகக் கூட தயார் நம் கதாநாயகன்! 


ஒரு ஆண்  ஒரு அழகிய இளம் பெண்ணைக் கனவில் கண்டாலும் எப்படியெல்லாம் கற்பனை செய்து அவளைக்  கண  நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்து கொள்வதுவரை யோசித்து விடுகிறான் என்பதை ஆசிரியர் அருமையாகக் கூறியுள்ளார். 

தன்னுடைய வீட்டு விலாசம், செல் நம்பரோடு தானும் அவளுடைய கைப்பையில் புகுந்து கொண்டான் என்பதைக்  கூறிய ஆசிரியர், பாடல் வரிகளைக் கூட அவன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டதாகக் கூறுவது சுவாரசியமான கற்பனை!




இதுவரை முன்பின் தெரியாத ஒரு பெண்,வெல்டிங் பற்றி ட்ரைனிங் எடுக்க வந்திருப்பவளை வெட்டிங் பண்ணிக் கொள்ளலாமா  என்று ஆசைப்படும் ஆண்மனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்!


ஒரு அழகு தேவதையை அருகில் அமர்த்தி இத்தனை நேரம் ஆராதித்த நம் கதாநாயகனின் அருகில் 'இதோ வந்திட்டேன்யா' என்று சொல்லாமல் சொல்லி அமர்ந்தவளோ வாழ்ந்து முடித்து இன்று அங்கம் தளர்ந்த ஆச்சி அமுதா!  


பளபள அமுதாவை பகல் கனவில் கண்ட கதாநாயகனுக்கு அருகில் பல்லெல்லாம் போன அமுதாபாட்டி உட்கார்ந்தால் எப்படி ரசிக்க முடியும்? 

இந்த அமுதாவும் ஒருகாலத்தில் அழகாகத்தானே இருந்திருப்பாள்? இவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள எத்தனை பேர் வரிசையில் இருந்தார்களோ? யாருக்குத் தெரியும்?


'அமுதும்,தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு?' என்று அழகி அமுதா பக்கத்தில் இருந்த போது 'லாலாலா' பாடிய  மனது, அவளுக்காக எதையும் செய்யத் தயாராயிருந்த கதாநாயகனின் காதல் மனம், கிழவி அமுதா கட்டி அணைக்காத குறையாக மேலே இடித்தபோதும், லுக் விட்டபோதும், பாவம் வெறுத்து போயிருக்கும்!  


இளமை சாசுவதமல்ல ... ஒரு நாள் முதுமை வந்தே தீரும். இளமையின் அழகை ரசிக்கும் நம்மால் முதுமையை ரசிக்க என்ன, சகித்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஏன் அவள் பெயரை அமுதா என்று கூவிய பெண்ணின் குரல் கூட நம் கதாநாயகனுக்கு கர்ண கடூரமாக கேட்கிறதே! இதுதான் மனித மனத்தின் விகாரம்.


கற்பனையிலும், கனவிலும் நமக்குப் பிடித்தது கிட்டும்; ஆனால் நடைமுறை யதார்த்தம்தான் உண்மையானது;  மாறாதது. 


அமுதா என்ற ஒரு சின்னப் புள்ளியை வைத்து விட்டு அதைச் சுற்றி இம்மி பிசகாமல், வளையாமல்,கோணலில்லாமல் ஒரு அழகிய நிலவு போன்ற வட்டமான வண்ணக் கோலத்தை வடிவமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!


கதையுடன் சேர்ந்த ஒளிப்படக் காட்சிகள் கதைக்கு மேலும் சுவாரசியம் சேர்க்கின்றன. இரண்டு ஸ்மைலிகள்  காதலித்துக் கொண்டிருப்பது அழகான காட்சி !

- ராதாபாலு




 






மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.






     





மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

[தங்கத்திற்கும் .... சிங்கத்திற்கும்]

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.






இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் ஏற்கனவே 

வெளியிடப்பட்டுள்ளன.



இணைப்புகள் இதோ:






காணத்தவறாதீர்கள் !








அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இதுவரை முதல் எட்டு கதைகளுக்கான 

விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 


முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.




  


இதுவரை ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் 

பட்டியலில் உள்ளோர் :




1] திரு. ரமணி அவர்கள் 

[VGK-01 to VGK-04]






மற்றும்


2] திருமதி. 


இராஜராஜேஸ்வரி 

அவர்கள் 

[VGK-04 to VGK-06] 



மட்டுமே !





இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?


இதைப்படித்துக்கொண்டிருக்கும்


நீங்களாகவும் இருக்கலாம் !




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


கதையின் தலைப்பு:



” மறக்க மனம் 


கூடுதில்லையே 





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


27.03.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.




 



உடனே எழுதி அனுப்புங்கோ !












என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

26 கருத்துகள்:

  1. இரு விமர்சனங்களும் ஒன்றை ஒன்று போட்டி போடும் வகையில் ரசிக்கத் தக்கவை...

    திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், திருமதி ராதா பாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. என்னோட பின்னூட்டத்தில் திரு வைகோ அழைப்பு விடுத்திருக்கும் வல்லி சிம்ஹன், திரு ஜீவி சார், திரு ஶ்ரீராம், வெங்கட் நாகராஜ், திருமதி கோமதி அரசு ஆகியோரும் இந்த விமரிசனப் போட்டியில் பங்கு பெற்றுப் பரிசுகளை வெல்ல முன் கூட்டிய வாழ்த்துகள்.

    ஜீவி சாரும், ஶ்ரீராமும் விமரிசனம் எழுத ஆரம்பித்தால் நானெல்லாம் பேசாமல் இருக்க வேண்டியது தான். அதான் அவங்க விட்டுக் கொடுத்திருக்காங்களோனு தோணும். மத்தவங்க திறமையை இனிமேல் தான் பார்க்கணும். :))) அவங்களும் சளைத்தவர்கள் அல்ல தான்.

    பதிலளிநீக்கு
  3. திருமதி ராஜராஜேஸ்வரிக்கும், திருமதி ராதாபாலுவுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் கொடுத்த பின்னூட்டம் போனதாகத் தெரியவில்லை. ஆகவே மறுமுறையும் கொடுக்கிறேன். இருவரும் தொடர்ந்து பரிசுகளை வெல்லவும் பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. எமது விமர்சனத்தை முதல் பரிசுக்குததெஎர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் , சிறுகதைப்போட்டியை சிறப்பாக நடத்தும் ஆசிரியர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  5. முதல் பரிசினை முதன் முதலாக வென்றுள்ள
    திருமதி ராதா பாலு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

    அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் கவிதைகள் பக்கம் போயிருக்கிறார்! இந்த வார 'கல்கி'யில் அவர் கவிதை பாருங்கள், கீதாம்மா.

    பதிலளிநீக்கு
  7. பல பதிவுலக திறமைசாலிகள் பலர் இருக்க எனக்கு முதல் பரிசு என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும், திரு கோபு சார் அவர்களுக்கும் நன்றிகள் பல.

    என்னுடன் பரிசைப் பகிர்ந்து கொண்ட திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. ஜீவி சார், ஶ்ரீராம் இப்போப் புதுசாக் கவிதைப்பக்கம் போகலை. முகநூலில் போட்டுட்டுத் தான் இருக்கார். கல்கியிலே இப்போத் தான் வந்திருக்குனு நினைக்கிறேன். அந்தக் கவிதையை முகநூலில் படித்தேன். :))))

    பதிலளிநீக்கு
  9. அருமையான் அற்புதமான விமர்சனம்
    முதல் பரிசு பெறும் திருமதி ராஜேஸ்வரி அவர்களுக்கும்
    திருமதி ராதா பாலு அவர்களுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! அருமையான போட்டி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. முதல் பரிசு பெற்ற இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  12. இரண்டும் மிகச் சிறப்பான விமர்சனங்கள்!
    பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்
    திருமதி இராதா பாலு அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  13. முதல் பரிசினை வென்ற, சகோதரி ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் சகோதரி திருச்சியைச் சேர்ந்த இராதா பாலு அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. இணைய இணைப்பில் பிரச்சனை காரணமாக இப்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. அருமையாக விமர்சனங்கள் எழுதி முதல் பரிசு பெற்ற இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் திருமதி ராதாபாலு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பல. கோபுசாரின் அறிமுகம் அசத்தல். ஒவ்வொரு வாரமும் முறைப்படுத்தி சிறப்பாகவும் நேர்த்தியாகவும் விமர்சன முடிவுகளை வெளியிடும் தங்கள் திறனுக்குப் பெரும் பாராட்டுகள் சார்.

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான விமர்சனம் எழுதி முதல் பரிசு பெறும் ராஜராஜேஸ்வரி அவர்களுக்குப் பாராட்டுக்கள்! அவருடன் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் ராதாபாலு அவர்களுக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்! இவ்விமர்சனப் போட்டியை் சிறப்பாக நடத்தி அனைவரையும் எழுத ஊக்குவித்துப் பரிசும் கொடுக்கும் கோபு சாருக்குப் பாராட்டும் நன்றியும்!

    பதிலளிநீக்கு
  16. பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://enmanaoonjalil.blogspot.com/2014/03/blog-post_23.html
    ’என் மன ஊஞ்சலில்’ - திருமதி ராதா பாலு அவர்கள்

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  18. திருமதி ராஜேஸ்வரி மற்றும் ராதா பாலு அவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  19. பரிசுவென்றவர்களுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  20. பரிசைப் பொழியும் நிலவு கோபு அண்ணாவிடமிருந்து பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திருமதி ராதா பாலு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 28, 2015 at 9:00 AM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //பரிசைப் பொழியும் நிலவு கோபு அண்ணாவிடமிருந்து//

      ஆஹா, பெளர்ணமி நிலவெனப் பளிச்சிடும் கருத்தாக இது உள்ளதே ! :)

      //பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திருமதி ராதா பாலு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  21. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி
    அம்மா திருமதி ராதாபாலு அவங்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. திருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திருமதி ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துகள். ராஜராஜஸ்வரிம்மா எழுத்தாளரின் திறமை நுடபம் அதிநுட்பம் என்று வியக்கிறார். ராதாபாலு அவர்கள் எழுத்தாளரின் ஞாபக சக்தியை வியக்கிறார்.

    பதிலளிநீக்கு
  23. கிளவுட நைன் என்னும் ஒன்பதாவது சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருப்பவரை தலைகுப்புற பூமிக்கு விழவைத்த மாதிரியான அதிர்ச்சியையும் உணர வைக்கிறார் ஆசிரியர்..!

    போதாக்குறைக்கு பொன்னம்மா என்பது மாதிரி அமுதாவை டிக்கெட் எடுக்கவும் சொல்லும் கர்ணகடூரகுரலில் மொழிவது நனவுலகின் நிதர்சனத்தை வலியுடன் உணர்த்தவும் தவறவில்லையே..!//

    // கிளவுட நைன் என்னும் ஒன்பதாவது சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருப்பவரை தலைகுப்புற பூமிக்கு விழவைத்த மாதிரியான அதிர்ச்சியையும் உணர வைக்கிறார் ஆசிரியர்..!

    போதாக்குறைக்கு பொன்னம்மா என்பது மாதிரி அமுதாவை டிக்கெட் எடுக்கவும் சொல்லும் கர்ணகடூரகுரலில் மொழிவது நனவுலகின் நிதர்சனத்தை வலியுடன் உணர்த்தவும் தவறவில்லையே..!// ரசிக்க வைத்த விமர்சன வரிகள். வாழ்த்துகள்.




    பதிலளிநீக்கு
  24. அமுதா என்ற ஒரு சின்னப் புள்ளியை வைத்து விட்டு அதைச் சுற்றி இம்மி பிசகாமல், வளையாமல்,கோணலில்லாமல் ஒரு அழகிய நிலவு போன்ற வட்டமான வண்ணக் கோலத்தை வடிவமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!// எனது பாராட்டுகளும்..உங்களுக்கு எனது வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  25. முதல் பரிசு பெற்ற இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு