என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 16 ஆகஸ்ட், 2014

VGK 29 / 03 / 03 - THIRD PRIZE WINNER - அட்டெண்டர் ஆறுமுகம்





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-29  

 அட்டெண்டர் ஆறுமுகம்  


இணைப்பு:



 

 


 



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 




நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  



ஐந்து




  








இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    


முத்தான மூன்றாம் பரிசினை 


 வென்றுள்ளவர் 






 அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்  




 



முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள





 அன்பின் திரு. சீனா ஐயா   


அவர்களின் விமர்சனம் இதோ:





அட்டெண்டர் ஆறுமுகம் ஒரு நல்ல கதைப் பாத்திரம். அலுவலகப் பணியாளர் என்று சொல்லக் கூடிய அனைத்துத் தோற்றப் பொலிவுகளும் உடையவராய்த் திகழ்கிறார்.​ ஒல்லியான உடல் - கருத்த நிறம் - கருகரு மீசை - காக்கி உடை - நெடிய தோற்றம் - பார்வையில் ஒர் கனிவு  என அச்சு அசலாக அட்டெண்டர் கதா பாத்திரத்தை கதை ஆசிரியர் வெளிப்படுத்திய முறை நன்று. அதில் ஒரு ஏக்கப் பார்வை என்று குறிப்பிட்டு  இருப்பது கதை நெகிழ்வைக் காட்டுகிறது. 


ஐயா ! என் பெண்ணுக்குத் திருமணம்பேசி முடித்து விட்டேன் - ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வழக்கமாக மேனேஜரிடம் கேட்கும் பணியாளர்களைத்தான் நாம் நடைமுறையில் பார்த்திருக்கிறோம்.


ஆனால் என்ன கேட்கப் போகிறார் அட்டெண்டர் ஆறுமுகம் என்று கதை படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கும் தோரணையில் ஆறுமுகத்தின் வளைவு, குழைவு, பணிவு எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லும் ஆசிரியர் ஒரு நியாயமான சிந்தனையை வெளிப்படுத்தி இருப்பது மிகவும் நன்றாய் உள்ளது.


பெண்ணுக்கு நகை நட்டு பணம் காசு பண்டம் பாத்திரம் உடை என்று எதனையும் கேட்காமலே ஏதேனும் ஒரு உதவி கேட்பது போல தன் கருத்தினைக் கதாபாத்திரத்தின் மூலம் கதாசிரியர் வெளிப்படுத்துகிறார்.




அட்டெண்டர் ஆறுமுகம் நினைத்தது போல ஆஃபீஸ் கிளார்க் என்ற பதவி கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியோடு தன் மகளின் திருமணத்தை நத்தி முடிக்கிறார். ஆனால் ஆறுமுகம் ஐயா இருக்கிறாரா என்ற ஃபோன் காலினிற்கு மட்டும் இன்னும் அவர் தகுதி உடையவராய் ஆக வில்லை. ஓஓ அட்டெண்டர் ஆறுமுகமா - அப்படிப் பளிச்சென்று சொல்லுங்கள் - அப்பொழுது தான் அவரை அழைக்க முடியும் என்று சொல்லியதும் ஒரு மன நிலையை வெளிப்படுத்துகிறது. 


பெண்ணுக்கு மணம் பேசிய இடத்தில் இத்தனை எல்லாம் பேசி முடித்த பிறகு அப்பா என்ன செய்கிறார் என்று எல்லோரும் வழக்கமாகக் கேட்கும் கேள்விக்கு தான் ஒரு அட்டெண்டர் என்று சொல்வதை மற்றவர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்களே என்று மனம் வருந்திய ஆறுமுகத்திற்கு ....

பொய் சொல்லக் கூடாது - திருடக் கூடாது - நேர்மையாய் உழைத்து வாழ்வதில் எந்த இழிவும் இல்லை என்பது சம்பந்தி வாயிலாக விளக்கி இருப்பது கதைக்கு நல்ல முடிவு.


பாராட்டும் படியான சிந்தனை.



சீனா ~ சிதம்பரம் காசிவிஸ்வநாதன்

தள முகவரி  : cheenakay.blogspot.com


​தளத்தின் பெயர் : அசை போடுவது ​


  



அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு, வணக்கம்.


மிகவும் அபூர்வமாக மட்டுமே 

எப்போதாவது ஒருசில முறைகள் மட்டுமே 

இந்தப்போட்டிகளில் கலந்துகொண்டுவரும்

தங்களுக்கு இந்தமுறை [முதன்முதலாகப்] 

பரிசு கிடைத்துள்ளது 

மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.



மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



அன்புடன் VGK




     



 // என்று சொல்லியதும் ஒரு மன நிலையை வெளிப்படுத்துகிறது.  // 



விமர்சகர்கள் யாரும் சொல்லாத ஒரு விசேஷ பார்வை இது.  இந்தப் பார்வையைத் தொடர்ந்தால் இன்னொரு கதை கூட  கிடைக்கும். ஃபோனை எடுத்து ஆறுமுகத்தின் சம்பந்தியுடன்  பேசிய  அந்த அலுவலக ஊழியரைப் பற்றி எந்த விமர்சகரும் அவ்வளவாகப் பொருட்படுத்தாத பொழுது, அவரைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் மனநிலையைப் பற்றிச் சொன்ன ஒரே விமரிசகர் இவர் தான்  என்கிற பெருமை இவரைச் சேருகிறது. மேலும் நிறைய கருத்துக்களை தன் விமரிசனத்தில் சொல்ல வேண்டும் என்று இவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இராமாயணத்தில் கூனி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவளாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால்  கைகேயி மனசில் அவள் விஷ விதையை ஊன்றியதால்  தான் இராமன் காட்டுக்குச் செல்ல நேரிட்டது.

வெண்ணை திரண்ட பின்னும் தாழியை உடைத்தவர் ஃபோனில் 'ஆபீஸ் கிளார்க்' ஆறுமுகத்தின் சம்பந்தியுடன்  பேசிய அந்த அலுவலக ஊழியர்.

-------- என்ன தான் ஆறுமுகம் ஆபீஸ் கிளார்க் என்று அழைக்கப்பட்டாலும், இந்த ஊழியரைப் பொறுத்த மட்டில் அட்டெண்டர் தானா?..

-------- அந்த அலுவலகத்தில் புதுப் பதவிப் பெயர் மாற்றங்கள் புழக்கத்துக்கு  வர அந்த ஒரு மாத காலம் போதவில்லையா?..

------- அல்லது அந்த அலுவலகத்தில் ஆறுமுகத்தின் இத்தனை கால பவ்யமான அட்டெண்டர் சேவை அவரை அட்டெண்டராகவே பார்க்கும் மனநிலையை மற்றவர்களுக்கு ஏற்படுத்தியதா?..

ஓரளவு கடைசியில் சொன்னது தான் சரியாக இருக்கும் போலிருக்கு.

'நம்ம அட்டெண்டர் ஆறுமுகங்களா?..'  என்று ஒரு 'நம்ம' போட்டது ஃபோனை அட்டெண்ட் செய்த  அந்த ஊழியரின்  மனசில் கல்மிஷம் இல்லை என்பதைத் தெரிவிப்பதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

---- நடுவர்


      


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.







இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.





காணத்தவறாதீர்கள் !





அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-31 



  முதிர்ந்த பார்வை  


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


21.08.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

21 கருத்துகள்:

  1. முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள
    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின்
    தனிச்சிறப்பான விமர்சனத்திற்குப்பாராட்டுக்கள்..
    நல்வாழ்த்துகள்..

    முதலில் கொடுத்த கருத்துரை சென்று சேர்ந்ததா என்று தெரியவில்லை..எனவே இது இரண்டாவது ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி August 16, 2014 at 9:29 AM

      வாங்கோ, வணக்கம்.

      //முதலில் கொடுத்த கருத்துரை சென்று சேர்ந்ததா என்று தெரியவில்லை..எனவே இது இரண்டாவது ..!//

      இல்லை. அப்படி ஏதும் வந்துசேரவில்லை. நேற்று இரவு விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தேன். பிறகு 3.30க்கு தூங்கிப்போய் இப்போ 9.30க்கு எழுந்து இதை மட்டுமே என்னால் காண முடிகிறது.

      எனினும் இந்தப்பதிவுக்கு தங்களுடையதே முதல் பின்னூட்டமாக அமைந்துள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  2. முத்தான மூன்றாம் பரிசினை வென்ற சீனா ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

    புரட்சிகரமாக போட்டியை நடத்திக் கொண்டு இருக்கும் தங்களுக்கும் எவ்வளவு வாழ்த்து சொன்னாலும் தகும். வாழ்த்துக்கள் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. Thulasidharan V Thillaiakathu August 16, 2014 at 6:33 AM
    3 ஆம் பரிசு வென்ற திரு சீனா ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    [This comment is wrongly recorded in the previous post. Hence, it is now re-routed to this place]

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. thulasi srinivas August 16, 2014 at 3:48 PM

    மூன்றாம் பரிசை வென்ற சீனா ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. முதல் முறையாகப் பரிசுபெற்றுள்ள சீனா ஐயா அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள். நச்சென்ற அழகான விமர்சனம் எழுதியதோடு நடுவர் அவர்களின் பாராட்டையும் பெற்றுள்ள ஐயாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் பதிவர்களே ! அருமை நண்பர் VGK நடத்துகின்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் முறையாகமூன்றாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் மஉமொழிகளின் மூலமாக தெரிவித்தமைக்கு மிக்க நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. அன்பின் பதிவர்களே ! அருமை நண்பர் VGK நடத்துகின்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் முறையாகமூன்றாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் மறுமொழிகளின் மூலமாக தெரிவித்தமைக்கு மிக்க நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. என்ன கேட்கப் போகிறார் அட்டெண்டர் ஆறுமுகம் என்று கதை படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கும் தோரணையில் ஆறுமுகத்தின் வளைவு, குழைவு, பணிவு எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லும் ஆசிரியர் ஒரு நியாயமான சிந்தனையை வெளிப்படுத்தி இருப்பது மிகவும் நன்றாய் உள்ளது.
    // ரத்தினச் சுருக்கமாக அழகாக விமர்சனம் எழுதி முதல் முறையாகப் பரிசு பெற்றுள்ள சீனா ஐயாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  10. பாராட்டுக்களும் பரிசும் பெற்றுள்ள சீனா ஐயா அவர்களுக்கு எனது பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு
  11. அட? நம்ம சீனா சாருக்குப் பரிசா? மிகவும்மகிழ்ச்சி. முதல்முறையாகப் பரிசு பெற்றதிலும் மகிழ்ச்சி. தொடர்ந்து பரிசுகள் பெறவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் வை.கோ

    ஒரு சிறு கதைக்கு விமர்சனம் எழுதியதும் அதற்கு ஒரு பரிசு பெற்றதும் பற்றி இன்று மறும்படியும் நான் எழுதியதையே படித்து மகிழ்ந்தது மறுபடியும் மகிழ்ச்சியைத் தந்தது.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வை.கோ

    எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போல விமர்சனம் எழுதி - அதற்கு ஒரு பரிசும் பெறுவதென்பதும் அதற்குப் பல பாராட்டுகளூம் வாழ்த்துகளும் பெருவதென்பது மகிழ்ச்சியினைத் தருகிறது. இப்பரிசும் இன்னும் பலப் பல பரிசுக்ளைப் பெறத் தூண்டுவதும் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.

    முயல்கிறேன். - நல்வாழ்த்துகள் - வை.கோ

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. திரு சீனாவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. திரு சீனா சாருக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. திரு சீனா சாருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. பரிசு வென்ற சீனா ஐயா அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. சுருங்கச்சொல்லி விளங்க வைத்த விமரிசனம் எழுதிய திரு சீனா சாருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் ஐயா!!! இங்கேயும் அட்டென்டன்ஸ் போட்டதுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு