என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

VGK 30 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - மடிசார் புடவை




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்



கதையின்  தலைப்பு :



 VGK-30  


 ’ மடிசார் புடவை ‘  

இணைப்பு:



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 




நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  



ஐந்து




  








இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    


முதல் பரிசினை முத்தாக


 வென்றுள்ளவர்கள் இருவர். 



அதில் ஒருவர்


இந்தப்போட்டியில் முதன் முதலாகக் 


கலந்து கொண்டிருக்கும்



செளபாக்யவதி:



 லக்ஷ்மி கங்காதரர்  



அவர்கள்



[ இவருக்கு வலைத்தளம் ஏதும் இல்லை ]


  







முதல் பரிசினை முத்தாக


 வென்றுள்ள


செளபாக்யவதி:



 லக்ஷ்மி கங்காதரர்  



அவர்களின் விமர்சனம் இதோ:






விஜி:


”ஹாய் ராஜி, கோபு சாரோட இந்த வார போட்டிக்கான கதையைப்படிச்சியா ?”

ராஜி: 

“படிச்சேண்டி ... படிச்சேன். விமர்சனப்போட்டியிலே கலந்துகொள்ளணும் தான் எனக்கும் ஆசையா இருக்கு. ஆனா ஒருத்தரப்பார்க்க ஒருத்தர் தங்கள் புடவையையும், வேட்டியையும் வரிஞ்சுக்கட்டிக்கிட்டு விமர்சனம் எழுதறதைப் பார்த்தாக்க, நமக்கெங்கே பரிசு கிடைக்கப்போவதுன்னு நினைச்சு, எழுதாமலே விட்டுடறேன், தெரியுமோ !”

விஜி: 

”நடுவர் யாருன்னு தெரிஞ்சாலாவது நாம அவரை ஏதாவது செட்-அப் பண்ணியாவது, நாமும் ஏதாவது ஒரு பரிசு வாங்கிடலாம், தான். ஆனாக்க அதுவும் தெரியாம மர்மமா இல்லே வெச்சுருக்கார், இந்த கோபு சார்.  

என்னவோ போடி, அதுகிடக்கட்டும், இந்த ‘மடிசார் புடவை’ கதையப்படிச்சயே ... அதைப்பத்தி கொஞ்சம் ஜாலியா விமர்சனம் மாதிரி எனக்கு எடுத்துச் சொல்லேன். நானும் தான் அதைப்படிச்சு ரசிச்சேன். எனக்கென்னவோ எடுத்துச் சொல்லி எழுதமுடியவே இல்லேடி. மனசுலே இருக்கு ..... ஆனாக்க எழுதணும்னாலே ஒரே சோம்பலாவும், தயக்கமாகவும்  இருக்குதுடி.”

ராஜி: 

”கதையெல்லாம் அன்றாடம் நம்ம ஒவ்வொருவர் குடும்பத்துலேயும் நடக்கிறது தான்னாலும், அதை அந்த கதாசிரியர் ஆங்காங்கே வர்ணித்து எழுதியிருக்கிற பாணி தாண்டி சூப்பரா இருக்கு.”

விஜி: 

“ஆமாம்.... ஆமாம். அந்தந்த கதாபாத்திரத்தைப் பேச வைக்கும் போதும் நம்ம கதாசிரியர் கோபு சாரே, அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி, ஜோராகத்தான் எழுதறார். அதுதான் அவரோட ஸ்பெஷாலிடியாக இருக்குது. ”

ராஜி: 

“ஆமாம்டி ..... பாரேன் அந்த ஜவுளிக்கடை விற்பனை ஆளை என்னமா பேச வெச்சுருக்கிறார் ..... நம்மைப்போன்ற பொம்மணாட்டிகளுக்கே இதுபோலெல்லாம் எடுத்துச்சொல்லத் தெரியாத பல விஷயங்களை குறும்பு மேலிட என்னமாத்தான் எடுத்துச் சொல்லியுள்ளார் ... பாரேன். 

ப்ளவுஸ் பிட்டுக்கான எக்ஸ்ட்ரா துணி புடவையின் வெளியே தலைப்பில் இருந்தால் எப்படி ...... அதுபோல இல்லாமல் உள்பக்கமாக அட்டாச்சிடு ஆக இருந்தால் என்னென்ன செளகர்யம்ன்னு .... சும்மா என்னமாப் புட்டுப்புட்டு வெச்சுருக்கார் பாரேன். ”

விஜி: 

”ஆமாம்டி ..... நானும் அந்த இடத்தில் குப்புன்னு சிரிச்சுட்டேன். ரொம்பவும் குறும்பு ஜாஸ்திதான், இந்தக்கதாசியருக்கு. நாம ஒல்லியா இருந்தாக்க வத்தக்காச்சி போல, ஒட்டடைக்குச்சிபோல, கிள்ளக்கூட சதையே இல்லைன்னு சொல்லுவாங்க. நாமளே கொஞ்சம் கொழுகொழுன்னு மொழுமொழுன்னு கொழுக்கட்டை போல இருந்துட்டாலோ போச்சு .... இவ எந்தக்கடையிலே அரிசி வாங்கறாளோன்னு கேலி பண்ணுவாங்க......  

’இப்படின்னா அப்படி ..... அப்படின்னா இப்படி ....’ 

இந்தக்கதையிலே வரும் அத்தை-கம்-மாமியார் போலவே”

ராஜி: 

“அதைவிட அந்தப்பொண்ணுக்கு புருஷனா வரப்போறவர் ‘ராஜாத்தி .... ராஜாத்தி’ ன்னு இப்போதெல்லாம் செல்லமாகக் கொஞ்சி வருவதாகவும், அப்போது அவள் உடம்பும் உணர்வுகளும் ஜில்லிட்டுப்போவதாகவும் எழுதியுள்ளது, என்னையுமே அப்படியே ஜில்லிட்டுப்போக வெச்சுடுச்சுடி. 

ஏன்னா என் பெயரும் ‘ராஜி’ தானே ! என்னையே என் லவ்வர் ‘ராஜாத்தி’ன்னு கொஞ்சுவதுபோல கற்பனை செய்து பார்த்தேன். அந்த இடம் எனக்கு ஆடோமேடிக்காகவே ரொம்பவும் பிடிச்சுப்போச்சுடி. இதைக் குறிப்பிட்டு எழுதியுள்ள கோபு சார் கைகளைப்பிடித்து கண்களில் ஒத்திக்கொள்ளணும் போல எனக்குத் தோணுது.”

விஜி: 

”கரெக்டுடி .... அந்த இடத்தில் நல்ல காதல் சிருங்கார ரஸத்தை மிகவும் அழகாகத்தான் மென்மையாகச் சொல்லியுள்ளார், கதாசிரியர்.  நானும் அந்த இடத்தை மிகவும் ரசித்துப் படித்து புன்னகைத்தேன்....டீ.”  

அதுலே இன்னொரு முக்கியமான விஷயத்தை நம் கதாசிரியர் நமக்கு சிம்பாலிக்காக சொல்லியிருக்காருடீ ... அதை கவனிச்சியோ நீ .... அந்த யாரோ ஒரு மாமி “அடி என் கண்ணு,  ’ராஜாத்தி’யாட்டமாக நீ நன்னா செளக்யமா இருப்பேடி”ன்னு ஆசீர்வாதம் செய்து கன்னத்தை வழித்துச் சொல்கிறார்கள். அதுபோலவே புகுந்த வீட்டிலே அவள் 'ராஜாத்தி'யாட்டமாத்தான் செளக்யமாக சந்தோஷமா இருக்கப்போகிறாள் என்பதை நம்ம கதாசிரியர் கோபு சார், சிம்பாலிக்காக முன்கூட்டியே சுபசகுனம் போலச் சொல்லியிருக்கிறார். அதற்காகவே அவருக்கு நாம் மிகப்பெரிய ஷொட்டுக் கொடுத்துப் பாராட்டணும்.”

ராஜி: 

“தன் சொந்த அக்காவுக்கே இன்றும் பயப்படும் பஞ்சாயத்துத்தலைவர் போன்ற ஒரு அப்பா, நாளைக்கு சம்பந்தியாகப்போகும் இன்றைய தன் நாத்தனாருக்கு நடுங்கும் அம்மா என ஒவ்வொரு கதாபாத்திரங்களைப் பற்றியும் அவர் அழகாக மென்மையாக டச்சிங்காகச் சொல்லியிருப்பது படிக்க ரொம்பவும் சுவையா இருக்குதுடி. ”

விஜி: 

“ஆமாண்டி, ஆனாக்க கடைசியிலே நாம பயந்த மாதிரி ஒன்னும், அந்த அத்தை-கம்-மாமியார் பொல்லாதவளாக டீ.வி. சீரியல் வில்லிபோல நடந்துகொள்ளவே இல்லை பார்த்தாயாடி.”

ராஜி: 

“பார்த்தேன், பார்த்தேன். ரொம்ப நல்லவங்களாகவே இருக்காங்க. அதுதானே கோபு சார் கதையில் வரும் வித்யாசமானதோர் ட்விஸ்டு. 

சும்மாவா பின்னே, சும்மா லட்டு மாதிரி என் பெயருள்ள ஒரு ’ராஜாத்தி’யே மருமகளா வரப்போகிறாள். சொந்த தம்பி பொண்ணு வேறு. ஒன்னுக்கு ரெண்டா காஸ்ட்லி புடவைகள் வேறு. கேட்கணுமா அவங்க சந்தோஷத்துக்கு. இதெல்லாம் பொல்லாதவாளையும் நல்லவாளா மாத்திப்புடும் தானே.”

விஜி: 

“எனக்கும் உனக்கும் எப்படியொரு மாமியார், நாத்தனார்கள் அமையப்போறாங்களோ ! நினைச்சுப்பார்த்தா, இப்பவே எனக்கு அடி வயத்தக்கலக்குதுடி.”

ராஜி: 

“எப்படி அமைந்தாலும், அதெல்லாம் நாமதாண்டி, சமத்தா, சாமர்த்தியமா, சமயோசிதமாச் சமாளிக்கணும். எல்லோரிடமும் அன்பைப் பொழிவதுபோல நடிச்சு நல்லபெயர் வாங்கிக்கணும். 

நமக்குத் தெரியாட்டாலும் நம்ம கதாசிரியர் கோபு சார் கிட்டேயே அவ்வப்போது கேட்டுக்கிட்டாப்போச்சு ! .......... கவலைய விடு.”

விஜி: 

“அந்த கதாநாயகியின் அம்மாவின் மனசு என்னமா ‘பக்பக்குன்னு’ அடிச்சுக்கிது பாரேன். மரத்திலிருந்து கீழே விழுந்த அணில் குட்டி போலன்னு என்னமா கரெக்டா உதாரணம் சொல்லியிருக்கார் பார்த்தாயோ .......”

ராஜி: 

“ஆமாம்டி, அதே கவலையிலே, ஐஸ் கிரீம் கூட வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களே அந்த அம்மா, பாவம்டி அவங்க. பொண்ணை நல்லபடியாக் கட்டிக்கொடுக்கணுமே, அங்கே நம்ம பொண்ணு கண்கலங்காம சந்தோஷமா ஜாலியா இருக்கணுமேன்னு, எவ்ளோ கவலைப்படறாங்கோ, அந்த அம்மா. 

இந்தக் கதையிலே எனக்கு மிகவும் பிடிச்ச சூப்பர் கேரக்டர்.... அவங்கதாண்டி விஜி.”

விஜி: 

“பொண் பார்க்கப் போகும் மாப்பிள்ளை வீட்டுக்காராளுக்குத்தான், பெண் வீட்டுக்காரங்க, கேசரி, பஜ்ஜி, காஃபின்னு கொடுப்பாங்க ...... அது அந்தக்காலம். 

இப்போ பாரு, பொண்ணு வீட்டுக்காரங்களுக்கே கேசரி, பஜ்ஜி, கெட்டிச் சட்னி, நுரையுடன் கூடிய கும்பகோணம் ஃபில்டர் டிகிரி காஃபி ன்னு கிடைக்குது பாரு .... இந்த நம் கோபு சாரின் கதையிலாவது. ”

ராஜி: 

“யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்ன்னு சும்மாவா சொன்னாங்க ...... இப்போ கல்யாண மார்க்கெட்டிலே கல்யாணத்துக்கு நல்ல பொண்ணு கிடைப்பதே குதிரைக் கொம்பா இருக்குதாக்கும். எல்லாப் பையன்களும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணே கிடைக்காம அலையோ அலைன்னு அலைஞ்சிண்டு இருக்காங்களாக்கும். ”

விஜி: 

“முதிர்க்கன்னிகள்  போய் முதிர்க்கண்ணன்களாக அலையும் காலமோ ..... இந்தக் கலிகாலம் !!!!! “

ராஜி: 

“ஆஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹாஹ்ஹா ! அதே ..... அதே !!”

விஜி: 

“கோபு சார் கதையெல்லாம் படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்குதுடி. சாதாரண ஒரு விஷயத்தை கதைக்கருவா எடுத்துண்டு, மிக அழகானதோர் கட்டடம் கட்டுவதுபோல ஜோராக நகாசு வேலைகளெல்லாம் செய்து மேலே எழுப்பிக் கொண்டுபோய் ஜோரா சந்தோஷமான முடிவாகக்கொடுத்து அசத்தி விடுகிறார். 

ஆங்காங்கே பொருத்தமான படங்களாப்போட்டு நம்மை வியக்க வைக்கிறார். வரிக்கு வரி ஓர் நகைச்சுவைப் பொடியையும் தூவி, மேலும் மேலும் கதையை நாம் ஆர்வமாகப் படிக்கும் படியாகச் செய்து விடுகிறார்.”

ராஜி: 

“ஆமாம், விஜி.  ’சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்’ என்று தன்னைப்பற்றி போட்டுக்கொண்டுள்ளார் பாரேன் .......... இந்த அசாதாரணமான மனுஷ்யர்.”


விஜி:

“சரிடீ .... ராஜி, எனக்கு நேரமாச்சு, நான் புறப்படுகிறேன். அடுத்தகதை 

வரும் வெள்ளிக்கிழமை என்னவாக இருக்குமோ ..... அதையும் படிச்சுட்டு 

வரேன். இதுபோலவே அதையும் நாம ஜாலியா மனம் விட்டுப் பேசி 

மகிழ்வோம்.”



ராஜி: 


ஓக்கேடீ .... பை .... பை !  ஸீ ........... யூ !! 


நமக்கு இதுபோல கேசரி, பஜ்ஜி, காஃபியெல்லாம் நம் மாமியார் கையால் 

செய்து ........ நாம் சாப்பிட எப்போது ப்ராப்தம் இருக்குமோ !!!!!



விஜி: :) 



[முகம் பூராவும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே விஜி கிளம்புகிறாள்.]



சுடச்சுட கேசரிபோல சுவையான கதையொன்றை எழுதிய 

கதாசிரியர் கோபு சாருக்கு என் பாராட்டுக்கள். 



என் இந்த விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும் 

இந்தக்கதைக்கு யார் யார் எப்படி எப்படி விமர்சனம் 

எழுதி அனுப்பப்போறாங்களோ .... அதையும் படிக்க நான்

மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். 



இதுபோன்ற ஓர் நல்ல சுவையான கதைக்கு விமர்சனம் எழுத 

எனக்கும் வாய்ப்புக் கிடைத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். 


  


 





 



 மனம் நிறைந்த பாராட்டுக்கள். 


 அன்பான இனிய நல்வாழ்த்துகள். 


 அநேக கோடி சாஷ்டாங்க  


 நமஸ்காரங்கள்.  


 அன்புடன் 


 கோபு  






’பொடி விஷயம்’ 

என்ற தலைப்பில் 

நகைச்சுவைக் கதையொன்று, இவர்கள் பெயரில்

பிரபல  ‘மங்கையர் மலர்’  நவம்பர் 2006 மாத இதழில் 

இவர்களின் புகைப்படத்துடன்

பக்கம் எண்: 120 முதல் பக்கம் எண்: 126 வரை வெளியாகியுள்ளது. 



அது  ’ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி’யில் 

ரூ. 1000 பரிசு பெற்ற கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.








    

முதல் பரிசினை 
முத்தாக வென்றுள்ள

மற்றொருவர் 
கீதமஞ்சரி


திருமதி. 

 கீதா மதிவாணன்  

அவர்கள்

 







முதல் பரிசினை 
முத்தாக வென்றுள்ள

திருமதி. 

 கீதா மதிவாணன்  

அவர்களின் விமர்சனம் இதோ:


பொதுவாகவே ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட்டுப் போகும் பெண்ணுக்கு புகுந்த வீட்டில் யார் யார் எப்படி இருப்பார்களோ, என்ன குணமோ என்று கொஞ்சம் கவலை இருக்கவே செய்யும். ஆனால் நம் கதையின் கதாநாயகிக்கோ தன் மாமியார் இப்படிதான் என்று தெரிந்துவிட்டதால் அவர்களின் போக்கிலேயே போய் அவர்களைத் தன்பக்கம் இழுக்கும் தந்திரம் தெரிந்திருக்கிறது.

ஒரு சர்வாதிகாரியாய் சாட்டையில்லாமலேயே தம்பியையும் தம்பி மனைவியையும் தன் இஷ்டத்துக்கு ஆடவைத்துக்கொண்டிருந்த அத்தையை, அன்பால் ஆட்டுவிக்கும் வித்தையைக் கற்றுவைத்திருக்கிறாள் மருமகள். அம்மாவைப் போல் பயந்தாங்கொள்ளியாக இல்லாமல் அப்பாவைப் போல் சாமர்த்தியமாகப் பேசவும் நடக்கவும் கற்றுத் தேர்ந்திருக்கிறாள்.

திருப்தி என்பது தனக்குத் தானே நிறையும் மனம் என்றும் திருப்தி கொள்ளவும் ஒரு மனப்பக்குவம் தேவை என்றும் குறிப்பிடும் கதாசிரியரின் கூற்று மறுப்பின்றி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிதர்சனம். அப்படி எளிதில் திருப்தியுறா மனத்தையும் தாஜா செய்தும் தார்மீக அக்கறையை வெளிப்படுத்தியும் திருப்திப்படுத்திவிட முடியும் என்பதை இக்கதையின் மூலம் காட்டியுள்ளார்.

உறவுகளுள் நீயா நானா என்ற ஈகோ பிரச்சனையால்தான் பல நேரங்களில் சின்ன சின்ன விஷயங்களும் விஸ்வரூபம் எடுக்கின்றன. நம் கதாநாயகி ராஜாத்திக்கோ (கதாநாயகிக்குப் பெயர் குறிப்பிடப் படாததால் நாமும் ’ராஜாத்தி’    என்றே குறிப்பிடுவோமே) ஈகோ துளியும் இல்லை. அம்மா அத்தையிடம் படும் சிரமங்களைக் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவள் என்பதால் அத்தையின் அத்தனைப் பரிமாணங்களும் அவளுக்கு அத்துப்படி. அத்தையின் மொழியில் இது என்றால் அதுஅது என்றால் இது என்பதை அறிந்தே வைத்திருக்கிறாள். அதனால்தான் பட்டுப்புடவை கூடவே ஒரு சில்க் காட்டன் புடவையும் எடுக்கிறாள்.

சில்க் காட்டன் புடவை எடுக்கும் இடத்தில் இருக்கும் மடிசார் புடவை மாமியின் அங்கலாய்ப்பு அப்படியே ராஜாத்திக்கு அவள் அத்தையை நினைவுபடுத்தியிருக்கவேண்டும். தன் பேச்சு சாதுர்யத்தால் அந்த மடிசார் மாமியைத் திருப்திப்படுத்தியவளுக்கு தன் சொந்த மாமியை திருப்திப்படுத்த சொல்லியா தரவேண்டும். என்ன அழகாக பேச்சோடு பேச்சாக தன் அத்தையிடம், தான் அவள் மேல் கொண்டிருக்கும் கனிவையும் கரிசனத்தையும் வெளிப்படுத்திக் கவர்கிறாள். இவை வெறும் வாய்வார்த்தையோ நடிப்போ அல்லஉள்ளன்போடு உரைப்பவை என்பதை கதையின் இறுதிவரிகள் மூலம் நமக்கு உணர்த்திவிடுகிறார் கதாசிரியர்.

எடுத்திருக்கும் புடவை அத்தைக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று அம்மாவைப் போல் கலவரம் கொண்டு ராஜாத்தி மனம் பதைக்கவில்லை. அத்தையை எப்படியும் திருப்திப்படுத்தி விடமுடியும் என்று உறுதியாக நம்புகிறாள். தன் திறமை மேலே அவளுக்கு அப்படியொரு அசாத்திய நம்பிக்கை. இதை கதாசிரியர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் ஒரு சிறு சம்பவத்தின் மூலம் நமக்குணர்த்துகிறார். 

புடவை எடுத்தபிறகு அப்பாவையும் அம்மாவையும் ஐஸ்கிரீம் சாப்பிட அழைக்கிறாள். அம்மாவுக்கோ பதைப்பு. ஐஸ்கிரீம் சாப்பிடும் மனநிலையில் இல்லை. அப்போது ராஜாத்தி சொல்கிறாள்அத்தை வீட்டுக்குப் போய்விட்டு நம் வீட்டுக்குப் போகும்போது ஐஸ்கிரீம் சாப்பிடுவோம் என்று. புடவை குறித்து அத்தையிடமிருந்து எந்த மோளாசையும் வராதபடி தன்னால் அவர்களை சமாளிக்க இயலும் என்று உறுதியாக நம்புவதன் வெளிப்பாடுதான் அந்த வார்த்தைகள்.

புகுந்த வீட்டில் வரப்போகும் பிரச்சனைகளை மகள் எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்தொட்டதற்கெல்லாம் குறை கூறும் மாமியாரை எப்படி சமாளிக்கப் போகிறாள் என்று கலங்கி நிற்கும் பெற்றோரின் கண்முன்னாலேயே வெற்றிகரமாக அத்தையை சமாளித்து அவள் அன்பைப் பெற்றுவிடுகிறாள் ராஜாத்தி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அவள் சந்திக்கவிருக்கும் எதிர்கால நிகழ்வுகளுக்கு இந்த மடிசார் புடவை நிகழ்வொன்றே கட்டியம் கூறி பெற்றவர்களின் கவலை தீர்க்கிறது. மகளுக்கு மகளாகவும் மருமகளுக்கு மருமகளாகவும் தன் பதவியைபொறுப்பை விட்டுக்கொடுக்காத ராஜாத்தியின் குணம் நம்மை மிகவும் கவர்கிறது.

திருமணமாகவிருக்கும் ஒரு இளம்பெண்ணின் மனநிலையில் இருந்து இந்தக் கதையை எழுதியிருக்கும் கதாசிரியரின் திறமைக்குப் பாராட்டுகள். ஒவ்வொரு மாமியாருக்கும் இப்படியொரு புரிதலுள்ள மருமகள் வாய்த்தால் போதும்வாழ்க்கையில் சிக்கல்கள் விழுந்தாலும் எளிதாக விடுபட்டுவிடும்.

இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்குப் பெயர் குறிப்பிடப்படாமைதான் கதையில் ஒரே குறை. அதனால் வாசிக்கையில் எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை. ஆனால் விமர்சிக்கையில் பாத்திரத்தின் பெயரைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. குறைந்தபட்சம் கதையைச் சொல்லும் கதாநாயகிக்காவது. இந்த ஒரு குறையைத் தவிர மற்ற யாவுமே நிறைதான். நிறைவான கதை! நிறைக்கிறது மனம்! 

 

Thanks a Lot, Madam.
 அன்புடன் கோபு




    

  

   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது

.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.



காணத்தவறாதீர்கள் !







அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


இணைப்பு: 





கதையின் தலைப்பு:



 VGK-32 


     ச கு ன ம்    



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


28.08.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.



















என்றும் அன்புடன் தங்கள்

        வை. கோபாலகிருஷ்ணன்    

21 கருத்துகள்:

  1. முதன் முறையாக முதல் பரிசு பெற்றுள்ள 'மடிசார் மாமி' திருமதி லக்ஷ்மி கங்காதரர்க்கும், பல முறைகளாக தொடர் பரிசுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் திருமதி கீதாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. முதல் முறை வெற்றிப் பெற்றிருக்கும் திருமதி லக்ஷ்மிகங்காதர் அவர்களுக்கும், தொடர் வெற்றிகளாகக் குவித்துக் கொண்டிருக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.......

    பதிலளிநீக்கு
  3. திருமதி லட்சுமி கங்காதரர் அவர்களுக்கும் சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்து நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்து முதல் பரிசை விடாமல் தக்க வைத்துக்கொண்டிருக்கும் கீதா மதிவாணன் அவர்களுக்கும் முதல்முறையாகப் போட்டியில் கலந்து கொண்டு எடுத்த எடுப்பிலேயே முதல் பரிசை வென்ற மடிசார் மாமிக்கும் என் வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. சிம்பாலிக்காக முன்கூட்டியே சுபசகுனம் போலச் சொல்லி வெற்றிக்கனி பறித்த சகோதரி
    திருமதி லக்ஷ்மிகங்காதர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.......

    பதிலளிநீக்கு
  6. ///நமக்கு இதுபோல கேசரி, பஜ்ஜி, காஃபியெல்லாம் நம் மாமியார் கையால் செய்து ........ நாம் சாப்பிட எப்போது ப்ராப்தம் இருக்குமோ !!!!!//

    அருமையான சிம்பாலிக்கான வரிகள்..
    ததாஸ்து .. ததாஸ்து..ததாஸ்து .. !!!!! சீக்கிரமேவ கிடைக்கும்..

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
    அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அவள் சந்திக்கவிருக்கும் எதிர்கால நிகழ்வுகளுக்கு இந்த மடிசார் புடவை நிகழ்வொன்றே கட்டியம் கூறு வெற்றிகனி பறித்திருக்கும்
    திருமதி கீத மஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  8. முதலில் கொடுத்த மூன்று கருத்துரைகள் காணவில்லை..

    எனவே இது நான்காவது..

    பரிசுபெற்ற சகோதரிக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. மடிசார் புடவைக்கு ஏற்ற வின்னர்....மடிசார் மாமி....வாழ்த்துக்கள் லஷ்மி கங்காதர் மாமிக்கு! சகோதரி கீதா மஞ்சரி அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! லஷ்மி மாமியின் விமர்சனம் வித்தியாசமாக அருமையான உரையாடலாக....பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  10. வெள்ளேந்தியா குழந்தை முகமாக காட்சியளிக்கும் லெஷ்மி மாமியின் விமர்சனத்தில் இளமையும் ஆர்வமும் தெரிகின்றது .மங்கையர் மலரில் மாமியின் படைப்பு வெளிவந்துள்ளதும் மகிழ்ச்சி .வாழ்த்துகளும் நமஸ்காரங்களும் மாமி .தொடர்ந்து பங்குபெறுங்கள் மாமி .

    தொடர்ந்து முதல் பரிசை வென்று வரும் கீதா அவர்களுக்கு கிரீடம் சூட்டுங்கள் சார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar August 31, 2014 at 6:36 AM

      வாங்கோ ஆச்சி. நீங்களும் வீட்டில் எல்லோரும் செளக்யமா ஆச்சி?

      அத்திப்பூத்தது போல இங்கே அபூர்வமா வந்திருக்கீங்க. எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்குது, ஆச்சி.

      //வெள்ளேந்தியா குழந்தை முகமாக காட்சியளிக்கும் லெஷ்மி மாமியின் விமர்சனத்தில் இளமையும் ஆர்வமும் தெரிகின்றது//

      அவங்க எப்போதுமே எதிலுமே இளமையும் ஆர்வமும் உள்ளவங்க தான், ஆச்சி.

      //மங்கையர் மலரில் மாமியின் படைப்பு வெளிவந்துள்ளதும் மகிழ்ச்சி. வாழ்த்துகளும் நமஸ்காரங்களும் மாமி. தொடர்ந்து பங்குபெறுங்கள் மாமி .//

      அந்த மாமியிடம் இதைப்படிக்கச் சொல்லி காட்டுகிறேன். மாமி சார்பாக தங்கள் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள். நமஸ்காரங்களுக்கு ஆசீர்வாதங்கள்.

      அவர்கள் தொடர்ந்து பங்கு பெறுவார்களோ மாட்டார்களோ, எனக்குத் தெரியவில்லை ஆச்சி.

      //தொடர்ந்து முதல் பரிசை வென்று வரும் கீதா அவர்களுக்கு கிரீடம் சூட்டுங்கள் சார் .//

      சூட்டிடுவோம்.

      தங்களிடம் கிரீடத்தைக்கொடுத்து, போகவர ஃப்ளைட் டிக்கெட்டும் வாங்கிக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு உங்களையே அனுப்பி வைக்கிறேன்.

      என் சார்பில் நீங்களே திருமதி. கீதா மதிவாணன் [கீத மஞ்சரி] அவர்களுக்குக் கிரீடம் சூட்டி விட்டு வாங்கோ, ஆச்சி. OK யா ? :)

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  11. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    மடிசார் புடவை....:

    உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் 'அவள்' எழுதிய சிறுகதை.. அதுதான் புடவைக் கடைக்குள்ளே அலசி, ஆராய்ந்து, அடடா......எத்தனை சூட்சுமம்...! கதை பிரமாதம்..

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  12. முதல் பரிசு பெற்றுள்ள 'மடிசார் மாமி' திருமதி லக்ஷ்மி கங்காதரர்க்கும், திருமதி கீதாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. பரிசு வென்ற திருமதி லஷ்மிகங்காதர் திருமதி கீதா அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. முதல் பரிசு பெற்றுள்ள திருமதி லக்ஷ்மி கங்காதரர் மாமிக்கும், திருமதி கீதாவுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. பரிசு வென்ற திருமதி லஷ்மி கங்காதரர் திருமதி கீதா அவங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. திருமதி லஷ்மி கங்காதர் திருமதி கீதா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. வெற்றி பெற்ற இருவர்க்கும் எனது நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  18. முதல் பரிசு பெற்றுள்ள இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  19. அக்கா அருமை & அழகு & பாந்தம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan November 5, 2016 at 3:08 AM

      //அக்கா அருமை & அழகு & பாந்தம் :)//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஹனி மேடம்.

      நீக்கு