என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 1 செப்டம்பர், 2014

’முதிர்ந்த பார்வை’யுடன் ...................... நடுவர் பேசுகிறார் !


 


VGK-31 'முதிர்ந்த பார்வை’
கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31.html


 நடுவர் பேசுகிறார் ...  


எந்தக் கதையிலும் ஏதாவது ஒரு கருத்து ஊடாடித் தான் இருக்கும்.  அந்த கருத்தை வலியுறுத்துவதற்காக, அந்தக் கருத்தைச் சொல்வதற்காகத் தான் அந்தக் கதையை எழுதிய மாதிரி கதையின் நிகழ்வுகளில் அந்தக் கருத்தை focus பண்ணி கதாசிரியர் தன் கதையை எழுதுவதுண்டு. அப்படிப்பட்ட கதைகளை விமரிசிக்கும் பொழுது கதாசிரியரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து விமர்சிப்பவருக்கு இருந்தால் அந்த கருத்தையே விவாதப் பொருளாக்கி அதை விவாதிக்கலாம். ஏனென்றால் அந்த கருத்தை வலியுறுத்துவதைத் தவிர வேறெந்த செய்தியும் கதையில் இல்லாததால்.

வை.கோ.வின் பெரும் பாலான கதைகள் அப்படியில்லை. எளிமையான வாழ்க்கை நிகழ்வு ஏதோ ஒன்றைத் தொட்டு அவ்வளவு ஆழமாக நாம் கவனிக்காத ஒரு செய்தியை அந்தக் கதையில் தொடுத்து அழகான கதைமாலையாகக் காட்டுகிறார்.  இதான் இவர் கதைகளின் விசேஷம். பெரும்பாலான விமரிசகர்கள் இதை கவனித்துச் சொல்லாதது தான் என் வருத்தமும் கூட.

இந்த முதிர்ந்த பார்வை கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்தக் கதையில் எல்லோரும் நல்லவர்கள்.  மாமனார்-மாமியார் மீது மருமகளுக்கு அன்பு. மருமகள் மீது அதே அன்பு அந்த பெரியவர்களுக்கும். பெற்றோர் மீது மகனுக்கு அதீத அன்பு.  மகளை கண்கலங்காமல் வைத்திருக்கும் சம்பந்திகள் மீது மகளைப் பெற்றோருக்கும் அன்பு.  சுவரில் அடித்த பந்து மாதிரி வாழ்க்கையில் உடனே திருப்பிக் கிடைப்பது இந்த அன்பு ஒன்று தான் என்பதால் ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் அன்பு என்பது அவர்களின் சுபாவமாகவே அந்தக் குடும்பத்தில் இருக்கிறது.   ஒவ்வொன்றிற்கும் தன்னை முன்னிலைப்படுத்தி தன் நலனை மட்டும் பிரித்துப் பார்க்கத் தெரியாத சுபாவத்தில் இருப்பதால் தான் ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு நல்லதானதையே நினைக்கிறார்கள். இப்படியான நல்லவர்களிடையே அவர்கள் செயல்படுவது எதுவும் இன்னொருவருக்கான நன்மையே என்கிற நினைப்பில் தன்னைச் சுருக்கிக் கொள்கிற அளவில் சூது வாதற்று நடக்கும்..  

பெற்றோர் முதியோர் இல்லம்  ஏகிய பொழுது அவர்களிடத்து மகனுக்கு இருக்கும் அதீத அன்பு அவன் கண்களை மறைத்து மனைவி தான் இதற்குக் காரணமோ என்று சின்ன சந்தேகம்.  இந்த சின்ன ஒன்றுதான் ஊதிப் பெரிதாகி அவன் மனைவியைப் பெற்றவர் வரை பற்றிக் கொள்கிறது.  ஒரு கதை என்றால் ஏதாவது முடிச்சு வேண்டாமா-- அதற்காகத் தான் வை.கோ. இந்த 'நாட்'டைப் போட்டிருக்கிறார்.  அந்த முடிச்சு ஒன்றும் வலுவான ஒன்றல்ல. லேசான சுருக்கு. இழுத்தால் அவிழ்ந்து விடும்.  அவிழ்ந்து விட்ட பிறகு அத்தனை பேருக்கும் இன்னும் வலுவாக அன்பு முடிச்சு அவிழ்க்கவே முடியாமல் போடப்படும்  இது கதை படிக்கும் அனைவரும் உணர்வது தான்.  இருந்தாலும் இராமயண சீதை அக்னிப் பிரவேசம் செய்ய வில்லையா?..  அந்த மாதிரி பிள்ளையை பெற்றவர்களை....

இழுத்துப் பிடித்துச் சுண்டும் பிரசவ வலி என்பது பிள்ளை பிறக்கும் முன் தான்;  பிறந்த பின் நானா அப்படித் துடித்தேன் என்று அத்தனையும் ஆனந்த கண்ணீரில் மறந்து மறைந்து போகும்.  அதே மாதிரி தான் இந்தக் கதையின் மருமகள் கதையும்.  சுலப முடிச்சு;  சுலப அவிழ்ப்பு.

இந்த இத்துனூண்டு கதையில் என்ன கருத்துப் பெட்டகத்தைத் தோண்டி தோண்டி எடுத்து மாய்ந்து போக வேண்டியிருக்கிறது?..  ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சுகமும், சொந்தமும் திளைக்கத் திளைக்க கிடைத்த அந்த மருமகள் கூட அவள் நிலை குலைந்து போனதாக ஒரு குற்றச்சாட்டுக் கதையைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பாள்!..

சின்னச் சின்ன கதைகளில் பெரிய பெரிய கருத்தாடல்களை பூதக்கண்ணாடி கொண்டு தேட வேண்டாம் என்பதற்காகத் தான் இல்லாத எந்த கருத்தையும் தேட வேண்டாம் என்று சொன்னேன்.  

கதைகளைக் கதைகளாகப் படிப்பதே ஒரு கலை;  அந்த கலைத்தன்மை இப்பொழுதெல்லாம் அருகி வருகிறதோ என்று அஞ்சுகிறேன்.

'ஊஞ்சல் முடிந்தது;  அடுத்து மணமேடைக்கு மணமகன் வரும் பொழுது'.. என்று திருமண சடங்கில் ஒரு கதை நிகழ்வதாக இருந்தால், காசி யாத்திரையை சொல்லாமல் விட்டு விட்டீர்களே' என்று ஒரு விமரிசகர் முணுமுணுக்கக் கூடாது..  கதைகள், அதுவும் சிறுகதை என்பது ஒவ்வொன்றையும் அப்படி அப்படியே சொல்வதற்கு விவரக் குறிப்புகள் அல்ல. உங்களுக்கு திருமண நிகழ்வு ஒன்றை உணர்வதற்கான ஒரு காட்சி நிலை என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.  (இப்பொழுது 'சகுனம்' கதை விமர்சனங்களைப் படித்து வருவதால் இந்த 'திருமண' நினைப்பு)

தொடர்கதை எழுதுவதெல்லாம் ரொம்ப  ஈஸியான காரியம்.  சிறுகதை எழுதுவது தான் வெகு சிரமமான ஒன்று.  அதுவும் நான்கு வரியில் சொல்லிவிடக் கூடிய  ஒரு செய்தியை நான்கு பக்கங்களுக்கு நீட்டுவதற்கு, அதுவும் இன்னொருத்தர் அதைப் படித்து ஏதோ ஒன்றை அதில் கண்டு மகிழ்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல;  அந்தத் திறமையைப் பாராட்டுங்கள்.  அல்லது இந்த விதத்தில் இன்னும் சிறப்பாக இதைச் செய்திருக்கலாமே என்று சுட்டிக் காட்டுங்கள். நீங்கள் விரும்பாவிட்டாலும் அதுவே சிறப்பான விமரிசனமாய் அமைந்து விடுகிற ரஸவாத வித்தையைக் காண்பீர்கள்.

சிறந்த விமரிசனங்களைத் தேர்ந்தெடுத்து மகிழ்வதற்காக, காத்திருத்தலுக்கு உதாரணமான, சாதக பட்சி போல காத்திருக்கிறேன் என்பதை மட்டும் மறவாதீர்கள்.

-- நடுவர்



  

 





46 கருத்துகள்:

  1. நடுவரின் எழுத்து நடையை வைத்து , யாரென்று கண்டு பிடிக்க முடிகிறதா பார்க்கிறேன்.
    நடுவரின் கதை விமரிசனம் மிக மிக அலாதி. இவர் நடுவ்ராயில்லாமல் இருந்தால் வேறு யாருக்கும் பரிசு கிடைக்காது போலிருக்கிறதே. நல்ல வேலை செய்தீர்கள் கோபு சார். இவரை நடுவராக்கி விட்டதைத் தான் சொல்கிறேன்.
    அருமையான அறிவுரை செய்தவது தெரியாமல் செய்திருக்கிறார்.
    நன்றி கோபு சார் கோடு போட்டதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam September 1, 2014 at 11:45 AM

      வாங்கோ வணக்கம். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      அதைவிட மகிழ்ச்சி என்னவென்றால் தாங்கள் நம் உயர்திரு நடுவர் அவர்களைப்பற்றி எழுதியுள்ள மிக உயர்வான கருத்துகள்.

      //நடுவரின் எழுத்து நடையை வைத்து , யாரென்று கண்டு பிடிக்க முடிகிறதா பார்க்கிறேன்//

      கட்டாயமாக முயற்சி செய்யுங்கோ. VGK-33 and VGK-34 ஆகிய இரண்டு வாய்ப்புகள் மட்டுமே தங்களுக்கு உள்ளது. வரும் வியாழக்கிழமை 04.09.2014 மற்றும் 11.09.2014 ஆகியவை முறையே கெடுத் தேதிகளாக உள்ளன. இரண்டுக்கும் விமர்சனம் எழுதி அனுப்புங்கோ. ஏதாவது ஒன்றில் நடுவர் பற்றிய தங்களின் யூகத்தினையும் எழுதி அனுப்புங்கோ.

      13.09.2014 அன்றே இதன் முடிவுகள் தெரிந்துவிடும்.

      //நடுவரின் கதை விமரிசனம் மிக மிக அலாதி. //

      எனக்கு மிகவும் பிடித்தமான அவரின் முதிர்ந்த எழுத்துக்கள் எப்போதுமே மிக மிக அலாதியாகத்தான் இருக்கும்.

      //இவர் நடுவராயில்லாமல் இருந்தால் வேறு யாருக்கும் பரிசு கிடைக்காது போலிருக்கிறதே. //

      மிகவும் நியாயமான இதை இங்கு மிகச்சரியாக எடைபோட்டுச் சொல்லியுள்ள தங்களின் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். என் சார்பில் தாங்களே கிட்சனுக்குப்போய் கொஞ்சம் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

      //நல்ல வேலை செய்தீர்கள் கோபு சார். இவரை நடுவராக்கி விட்டதைத் தான் சொல்கிறேன். //

      இவர் இந்தப்பொறுப்பினை என் மீது கொண்ட அன்புக்காக மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அது நான் செய்த மிகப்பெரிய பாக்யமாகும்.

      இவர் மட்டும் இந்தப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாமல் போனால் நான் இந்தப்போட்டியை வேறு யாரையும் நடுவராக நியமித்து நடத்த விரும்பவில்லை என்பதை அவரிடமே ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்.

      அந்த அளவுக்கு இந்த விஷயத்தில் அவர் திறமையானவராவார் என்பது என் தனிப்பட்ட நம்பிக்கையாக்கும்.

      THE RIGHT MAN FOR THE RIGHT JOB ! :)

      //அருமையான அறிவுரை செய்தது தெரியாமல் செய்திருக்கிறார்.//

      இவரின் மென்மையான மேன்மையான உண்மையான ஒவ்வொருசொல்லையும் ரஸித்துப் படித்துப் புரிந்துகொள்ளவே நமக்கு தனித்திறமையும், பொறுமையும் வேண்டும் என்பதை இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

      //நன்றி கோபு சார் கோடு போட்டதற்கு.//

      கோடு போட்டுவிட்டேன் ..... இனி ரோடு போட வேண்டியது தங்களின் வேலையே !

      அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  2. நடுவரின் விவாதம் பிரமாதம் !குற்றங்களைக் குறைகளைத் தேடிக் கிட்டாத போதும் எழுந்த மானத்தில் ஏதோ ஒன்று சொல்லத் தோணும் சின்னப்புள்ளத் தனமாக :)) அதைத் தவிர்த்தேதான் ஆகவேண்டும் .எடுங்க அருவாள !எதுக்கு ?..
    இழனி வெட்டதான் :))))))

    அம்பாளடியாளின் அன்பைப் புரிந்து கொண்ட இந்த வீடு தான் என் வலைத்தள வாழ்வின் முதன்மையான சொந்த வீடு ! ஐயா நான் நலமே உள்ளேன் தங்களைக் கலாயிக்கவே அன்று அவாறு கருதிட்டேன் :))தங்களின் கண் பார்வை இப்போது எப்படி உள்ளது ?..உடல் நலத்திலும் ஊக்கம் எடுத்துக்கொள்ளுங்கள் எனக்குக்
    கிடைக்கவேண்டிய மாங்கோ யூஸ் எங்கே ?..அறுவைச் சிகிச்சைகளில் இருந்து வெற்றிகரமாகத் திரும்பியுள்ளேன் எடுங்கோ எடுங்கோ கொடுங்கோ கொடுங்கோ இது சாதாரண யூஸ் அல்ல சாட்சாத் அந்தப் பரமசிவனுக்கே சோதனையைக் கொடுத்த யூஸ் அங்க பழம் இங்க யூஸ் என்னை ஏமாற்ற முடியாது :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பாளடியாள் வலைத்தளம் September 1, 2014 at 11:51 AM

      வாங்கோம்மா, வணக்கம்.

      //நடுவரின் விவாதம் பிரமாதம் !//

      சந்தோஷம்.

      //குற்றங்களைக் குறைகளைத் தேடிக் கிட்டாத போதும் எழுந்த மானத்தில் ஏதோ ஒன்று சொல்லத் தோணும் சின்னப்புள்ளத் தனமாக :)) அதைத் தவிர்த்தேதான் ஆகவேண்டும் .//

      அப்படியா, ஓக்கே !

      //எடுங்க அருவாள ! எதுக்கு ?.. இழனி வெட்டதான் :))))))//

      நான் ஒரு நிமிஷம் .... பயந்தே பூட்டேன்.

      இழனி என்றால் இளநீரா ? [Tender Coconut]

      //அம்பாளடியாளின் அன்பைப் புரிந்து கொண்ட இந்த வீடு தான் என் வலைத்தள வாழ்வின் முதன்மையான சொந்த வீடு !//

      ஆஹா, இதைக்கேட்கவே எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

      // ஐயா நான் நலமே உள்ளேன்.//

      இதைக்கேட்க அதைவிட மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷம்.

      நலமுடன் நீடூழி வாழ்க !

      // தங்களைக் கலாயிக்கவே அன்று அவாறு கருத்திட்டேன் :))//

      அது நன்றாகவே எனக்கும் தெரியும்.

      என்னை உரிமையுடன் மிகவும் கலாய்ப்பவர்கள் ஏற்கனவே மூவர். இப்போது தாங்கள் நான்காவது நபர். நால்வருமே என் அன்புச் சகோதரிகள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

      //தங்களின் கண் பார்வை இப்போது எப்படி உள்ளது ?..உடல் நலத்திலும் ஊக்கம் எடுத்துக்கொள்ளுங்கள்.//

      ஜனவரி மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ள இடது கண் மிகத்தெளிவான புதிய பார்வையைக் கொடுத்துள்ளது. கண்ணாடி ஏதும் போடாமலேயே இடது கண்ணால் எதையும் நன்கு பார்க்க முடிகிறது.

      இந்த போட்டியின் ஆரம்பத்தில் தான், இடது கண் சிகிச்சைக்குச் சென்றேன். இந்தப்போட்டிகள் முடிந்ததும், நவம்பர் மாதம் வலது கண்ணுக்கும் அதே போல சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என நினைத்துள்ளேன்.

      தங்களைப்போன்ற அன்பு உள்ளங்களின் பிரார்த்தனைகளால் எல்லாம் நல்லபடியாக ஆகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

      //எனக்குக் கிடைக்கவேண்டிய மாங்கோ யூஸ் எங்கே ?..//

      தங்களின் பிறந்தகம் ஆகிய என்னிடம் தங்களுக்கு அது எப்போதுமே எதேஷ்டமாகக் கிடைக்கும். கவலைப்பட வேண்டாம்.

      //அறுவைச் சிகிச்சைகளில் இருந்து வெற்றிகரமாகத் திரும்பியுள்ளேன்//

      இதைக்கேட்க என் மனதுக்கு மிகவும் நிம்மதியாகவும், ஆறுதலாகவும் உள்ளதும்மா.

      // எடுங்கோ எடுங்கோ கொடுங்கோ கொடுங்கோ இது சாதாரண யூஸ் அல்ல சாட்சாத் அந்தப் பரமசிவனுக்கே சோதனையைக் கொடுத்த யூஸ் அங்க பழம் இங்க யூஸ் என்னை ஏமாற்ற முடியாது :))) //

      தங்களின் அன்பு வருகைக்கும், உரிமையுடன் கூடிய கொஞ்சும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      செளக்யமாக சந்தோஷமாக மன நிம்மதியுடன் நீடூழி வாழ்க என ஆசீர்வதிக்கிறேன்.

      அன்புடன் VGK

      நீக்கு
  3. முதலில் அளித்த கருத்துரையைக்காணோம்..

    சிறப்பான விமரிசனமாய் அமைந்து விடுகிற ரஸவாத வித்தையை ரஸமாகத்தந்திருக்கும் திறமைக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரிSeptember 1, 2014 at 12:02 PM

      வாங்கோ, வணக்கம்.

      //முதலில் அளித்த கருத்துரையைக்காணோம்..//

      அது என்னவோ கொஞ்ச நாட்களாகவே காணாமல்தான் போய் விடுகிறது. நானும் தேடித் தேடிப் பார்த்துக் களைத்துத்தான் போகிறேன்.

      நடப்பதெல்லாம் நமக்கு அப்பாற்பட்ட சதி வேலைகளாக உள்ளன.. மனதார வருத்தப்படுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாமல் உள்ளதே ! வேறு என்னதான் செய்ய? தயவுசெய்து சொல்லுங்கோ !

      //சிறப்பான விமரிசனமாய் அமைந்து விடுகிற ரஸவாத வித்தையை ரஸமாகத்தந்திருக்கும் திறமைக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.//

      மிகவும் டேஸ்டான தெளிவான [எங்காத்து] ரஸத்தினை விரும்பி நிறைய நான் கேட்டுவாங்கி அருந்தியது போல இருக்குது இந்தத் தங்களின் கருத்துக்களும்.

      மிக்க நன்றிங்க. VGK

      நீக்கு
  4. போட்டிக்காக எழுதாமல் பொருமலுக்காக எழுதி இருக்கிறார் நடுவர். நடுவராயிருப்பதால் தான் விமர்சனம் செய்யும் வாய்ப்பை இழப்பதால் வரும் 'இந்த விஷயத்தை யாரும் எழுதவில்லையே, கவனிக்கவில்லையே, சொல்ல வேண்டுமே' என்ற தாபம் எழுத்தில் வெளிப்படுகிறது.

    மிக அழகாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார் நடுவர்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். September 1, 2014 at 12:11 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      என் அன்பு வணக்கங்கள்.

      //போட்டிக்காக எழுதாமல் பொருமலுக்காக எழுதி இருக்கிறார் நடுவர்.//

      அழகாக வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள். திருஷ்டிப்பூசணிக்காயை உடைத்தது போல பளிச்சென்று உள்ளது, தங்களின் வெள்ளை வெளேரென்ற இந்த வரிகள்.
      அது என்னவோ உண்மை தான். :)

      // நடுவராயிருப்பதால் தான் விமர்சனம் செய்யும் வாய்ப்பை இழப்பதால் வரும் 'இந்த விஷயத்தை யாரும் எழுதவில்லையே, கவனிக்கவில்லையே, சொல்ல வேண்டுமே' என்ற தாபம் எழுத்தில் வெளிப்படுகிறது.//

      நடுவரைப்பற்றி என்னைவிட தங்களுக்கு மேலும்
      பல்லாண்டுகளாகப் பழக்கம் உள்ளது. அவர் யார் என்று
      தங்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்துள்ளது.

      ’யானை தன்னை மறைத்துக்கொண்டாலும் அதன்
      தும்பிக்கையே அதைக் காட்டி கொடுத்து விடும்’ என்றல்லவா சொன்னீர்கள். அதை நினைத்து நினைத்துச் சிரித்துத் சிரித்து மகிழ்ந்தேன், நான். :)))))

      //மிக அழகாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார் நடுவர்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் ஸ்ரீராம்.

      தாங்கள் இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில் கலந்து கொள்வது இல்லையே என்ற குறை எனக்கு மட்டுமல்ல, நம் உயர்திரு நடுவர் அவர்களுக்கும் நிறையவே உண்டு.

      இருப்பினும் நாம் இதைப்பற்றியெல்லாம் நம் இதர தொடர்புகள் மூலம் ஏற்கனவே பேசிக்கொண்டு விட்டோம்.

      ’நடுவர் யார் என்று யூகியுங்கள்’ போட்டியில் பங்குகொள்ள நிர்ணயிக்கப்பட்டுள்ள இறுதி நாளான 11.09.2014 வரை, நடுவர் யார் என்பது தங்களுக்கு ஒருவேளை உறுதியாகத் தெரிந்திருப்பினும், அதை இரகசியமாகவே தாங்கள் கட்டிக் காக்க வேண்டுமாய் அன்புடன் தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

      ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      அன்புடன் கோபு [VGK]


      நீக்கு
  5. பதில்கள்
    1. ரிஷபன் September 1, 2014 at 12:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களின்
      வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //நடுவர் உரை சுவாரசியம் !//

      ’நடுவர் யார் கண்டுபிடியுங்கள்’ போட்டியில் ஏற்கனவே
      கலந்துகொண்டு விட்ட சிலருக்கு இந்தத்தங்களின்
      பின்னூட்டம் சுவாரசியம் அளிக்காமல் இருக்கலாம்.

      இனி கலந்துகொள்ளப்போகும் பலருக்கு இது மிகப்பெரிய
      குழப்பத்தினையும் ஏற்படுத்தலாம்.

      எனினும் எனக்கு இது எல்லாமே மிகவும் சுவாரஸ்யமாகவே தான் உள்ளது.

      மிக்க நன்றி, ஸார்.

      பிரியமுள்ள
      வீ................ஜீ

      நீக்கு
  6. //இந்த இத்துனூண்டு கதையில் என்ன கருத்துப் பெட்டகத்தைத் தோண்டி தோண்டி எடுத்து மாய்ந்து போக வேண்டியிருக்கிறது?.. ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சுகமும், சொந்தமும் திளைக்கத் திளைக்க கிடைத்த அந்த மருமகள் கூட அவள் நிலை குலைந்து போனதாக ஒரு குற்றச்சாட்டுக் கதையைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பாள்!..//

    எனக்கு என்னமோ இந்த இடம் புரியலை. யாருமே கருத்துப் பெட்டகத்தைத் தேடியதாகத் தெரியவில்லை. அத்தனை நாட்கள் வெறும் அன்பை மட்டுமே திளைக்கத் திளைக்க அனுபவித்தவளுக்கு திடீரெனத் தன் மேல் விழுந்த பழியில் மனம் கசந்து போகாதோ? இது என் பார்வையின் கோணம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam September 1, 2014 at 1:15 PM

      வாங்கோ, வணக்கம்.

      *****இந்த இத்துனூண்டு கதையில் என்ன கருத்துப் பெட்டகத்தைத் தோண்டி தோண்டி எடுத்து மாய்ந்து போக வேண்டியிருக்கிறது?.. ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சுகமும், சொந்தமும் திளைக்கத் திளைக்க கிடைத்த அந்த மருமகள் கூட அவள் நிலை குலைந்து போனதாக ஒரு குற்றச்சாட்டுக் கதையைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பாள்!..***** - நடுவர்

      //எனக்கு என்னமோ இந்த இடம் புரியலை. யாருமே கருத்துப் பெட்டகத்தைத் தேடியதாகத் தெரியவில்லை. அத்தனை நாட்கள் வெறும் அன்பை மட்டுமே திளைக்கத் திளைக்க அனுபவித்தவளுக்கு திடீரெனத் தன் மேல் விழுந்த பழியில் மனம் கசந்து போகாதோ? இது என் பார்வையின் கோணம். :)//

      தங்களின் பார்வையின் கோணத்தில் கோணல் ஏதும் இல்லைதான்.

      உங்களுக்காச்சு ..... நடுவருக்காச்சு ..... ;)))))

      நான் எஸ்கேப் !

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
    2. Geetha Sambasivam September 1, 2014 at 1:15 PM

      //அத்தனை நாட்கள் வெறும் அன்பை மட்டுமே திளைக்கத் திளைக்க அனுபவித்தவளுக்கு திடீரெனத் தன் மேல் விழுந்த பழியில் மனம் கசந்து போகாதோ?//

      ”ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான், நான் அழுததில் என் கண்ணிலிருந்த பூளையெல்லாம் போச்சு .... என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாளாம் ஒருத்தி”ன்னு ஒரு பழமொழி சொல்லுவா !

      அதுபோல

      அத்தனை நாட்கள் வெறும் அன்பை மட்டுமே திளைக்கத் திளைக்க அனுபவித்தவளுக்கு திடீரெனத் தன் மேல் விழுந்த பழியில் மனம் கசந்து போகாது ...... ஏனெனில் இரட்டைக் குழந்தையாகப்பிறந்து மேலும் மேலும் தாங்க முடியாத சந்தோஷங்களை மட்டுமே அவளுக்குத் தரப்போகின்றன ... இந்தக் கதையினில் வரும் முதியவர்களின் இந்தச்செயலால்.

      இதுவரை அவளுக்குக் குழந்தை பிறக்கவே இல்லை என்று எவ்வளவு பேர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவள் ஆளாகி இருப்பாளோ !

      இது கதாசிரியரான என் பார்வையின் கோணமாக்கும் !

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
    3. குழந்தை பிறப்புக்கு அவர்கள் காரணம் என்றால் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏச்சு பேச்சுக்கும் பெற்றோர்கள் தானே காரணம்? எந்தக் கோணத்திலும் இந்த கதாபாத்திரங்கள் நாகரீகத்தின் எதிரிகள் தான்.

      அதனால் என்ன? எல்லா கதாபாத்திரங்களையும் நேர்மையாகப் படைக்க வேண்டும் என்ற விதி எதுவும் இல்லையே வை கோ சார்?

      நீக்கு
  7. நடுவர் உரை பிரமாதம் என்று சொல்வதை விட சர்வ ஜாக்கிரதை என்பதே பொருந்தும். எல்லோரும் நடுவர் யார்? என்று மணடையைப் போட்டு பிய்த்துக் கொள்கிறார்கள். என்னைப் பொருத்தவரை, தங்களது மானசீக குருநாதர், எழுத்தாளர் ரிஷபன் அவர்கள்தான் இந்த நடுவர் என்று பட்சி சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ September 1, 2014 at 2:49 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //நடுவர் உரை பிரமாதம் என்று சொல்வதை விட சர்வ ஜாக்கிரதை என்பதே பொருந்தும்.//

      அவர்கள் யார் என்று தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் தற்சமயம் இருக்க வேண்டியிருப்பதால் வழக்கமாகப் பிரமாதமாகவே எழுதக்கூடிய அவர் சர்வ ஜாக்கிரதையாகவும் எழுதியிருக்கக்கூடும்தான்.

      // எல்லோரும் நடுவர் யார்? என்று மண்டையைப் போட்டு பிய்த்துக் கொள்கிறார்கள்.//

      அப்படியா ! அடடா ..........

      இன்னும் பத்து நாட்கள் கழித்து அதாவது 11th Night எட்டு மணிக்குப்பிறகு, உயர்திரு நடுவர் அவர்களின் புகைப்படமும் இதர சில விபரங்களும் மட்டும் வெளியாக உள்ளன.

      13th Early Morning அவரின் படத்துடன் அவர்களின் பெயரும் அவரின் வலைத்தளத்தின் பெயரும் பகிரங்கமாக வெளியாக உள்ளன.

      //என்னைப் பொருத்தவரை, தங்களது மானசீக குருநாதர், எழுத்தாளர் ரிஷபன் அவர்கள்தான் இந்த நடுவர் என்று பட்சி சொல்கிறது.//

      பட்சி சொல்வது, பட்சி சாஸ்திரப்படி சரியாகவே இருந்தாலும் இருக்கும் ! :)

      நீங்கள் மட்டுமல்ல, மிகப்பெரும்பாலான பலரும், அதுபோலத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

      11th Night after 8 PM [IST] & 13th Early morning எல்லாமே தெரிந்து விடும். பார்ப்போம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், தாங்கள் மேலும் குட்டையைக் குழப்பியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK






      நீக்கு
  8. .//.. ஏனெனில் இரட்டைக் குழந்தையாகப்பிறந்து மேலும் மேலும் தாங்க முடியாத சந்தோஷங்களை மட்டுமே தரப்போகின்றன ... இந்தக் கதையினில் வரும் முதியவர்களின் செயலால்.//

    அவங்க அந்தண்டை போன உடனே இவளுக்கு உடனே இரட்டைக் குழந்தை உருவாகிறதா என்ன? இல்லையே? மேலும் குழந்தை பிறக்காததன் காரணம் மாமியார், மாமனார், கணவன், அவள் பெற்றோர் ஆகியோருக்கும் தெரியும் இல்லையா? ஆனால் இது அப்படி இல்லை. மாமியார், மாமனாரை வீட்டை விட்டுத்துரத்திட்டு இவள் சந்தோஷமா இருக்கானு தானே சொல்வாங்க? சொன்னாங்க? இதான் சரியில்லை.

    பதிலளிநீக்கு
  9. இப்போ அவசரமா வெளியே போறேன், வந்து மிச்சம்! :)))))

    பதிலளிநீக்கு
  10. அடடா. கதையைவிட நடுவரைத் தெரியும் ஆவல் அதிகமாகி இருக்கிறதே. கீதாவின் விமரிசனமும் படித்தேன்.பதிவர் சரித்திரத்திலயே நீங்கள் தான் இத்தனை அழகாகப் போட்டிகள் நடத்திப் பரிசும் கொடுத்து,சாலஞ்சிங்காகக் கதையும் எழுதி வரலாறு படைத்துவருகிறீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.13 ஆம் தேதிக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் September 1, 2014 at 4:29 PM

      வாங்கோ, நமஸ்காரம், வணக்கம்.

      //அடடா. கதையைவிட நடுவரைத் தெரியும் ஆவல் அதிகமாகி இருக்கிறதே. கீதாவின் விமரிசனமும்
      படித்தேன்.//

      மிகவும் சந்தோஷம். முடிந்தால் நீங்களும் போட்டியில்
      கலந்துகொண்டால் எனக்கு மேலும் சந்தோஷமாக
      இருக்கும்.

      //பதிவர் சரித்திரத்திலேயே நீங்கள் தான் இத்தனை
      அழகாகப் போட்டிகள் நடத்திப் பரிசும் கொடுத்து, சாலஞ்சிங்காகக் கதையும் எழுதி வரலாறு
      படைத்துவருகிறீர்கள்.//

      நான் மிகச்’சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது
      சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்’ மட்டுமே.

      இவையெல்லாம் என்னையும் மீறி, ஏதோ தெய்வ
      சங்கல்பத்தால் மட்டுமே இதுவரை வெற்றிகரமாக
      நடைபெற்று வருகின்றன.

      ஏதோ எத்கிஞ்சுது நம்மால் ஆன சிறுகதை இலக்கியச் சேவை மட்டுமே.

      //மனம் நிறைந்த வாழ்த்துகள்.13 ஆம் தேதிக்குக்
      காத்திருக்கிறேன்.//

      மிகவும் சந்தோஷம். 11.09.2013 இந்திய நேரம் இரவு 8
      மணிக்கு மேல் உயர்திரு நடுவர் அவர்களைப்பற்றிய 99%
      அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

      மீதி அந்த 1% மட்டுமே 13.09.2014 விடியற்காலம்
      அறிவிக்கப்பட உள்ளது.

      http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html இந்தப்பதிவினையும் முடிந்தால் பாருங்கோ, ப்ளீஸ்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      நீக்கு
  11. அன்பின் வை.கோ - நடுவரின் முதிர்ந்த பார்வை நன்று - அவர் விமர்சனம் எழுதுகிறாரா - அல்லது விமர்சனம் எழுதுவதை வகிக்கும் பதவி தடுத்து விட்டதால் முதிர்ந்த பார்வையுடன் பேசி விட்டாரா ?

    எனக்கென்னவோ ஏதேதோ தோன்றுகின்றது. பொறுத்திருக்கிறேன்

    வருகிற 11 இரவு முதல் 13 காலை வரை கணினியுடன் இருப்பதென முடிவு செய்து விட்டேன். - கணினி விட்ட வழி. பொறுத்திருந்து பார்ப்போம்,

    நடுவர் உள்ளிட்ட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு சீனா ஐயா அவர்களே,

      வாருங்கள் ஐயா. வணக்கம் ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும், வழிமேல் விழி வைத்து 11/9/14 முதல் 13/9/14 வரை கணினியுடன் இருப்பதாகச் சொல்வதற்கும் மகிழ்ச்சிகள் + நன்றிகள் ஐயா.

      11.09.2014 இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் ஓர் ஐந்து நிமிடங்கள் மட்டும் வாருங்கள் ஐயா .... போதும்.

      அதுபோல 12/9/14 க்கும் 13/9/14 க்கும் இடைப்பட்ட நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஓர் ஐந்து நிமிடங்கள் மட்டும் வாருங்கள் ஐயா .... போதும்.

      உங்களுக்கு உள்ள பலவேலைகளில் கணினியே கதியென்று தொடர்ச்சியாக பலமணி நேரங்கள் அமர வேண்டாமே என்பதற்காக மட்டுமே சொல்லியுள்ளேன், ஐயா. ஏதேனும் தவறுகள் இருப்பின் மன்னித்தருங்கள், ஐயா.

      என்னுடைய சமீபத்திய பல பதிவுகளில் தங்களின் கருத்துக்கள் இடம்பெறாமல் உள்ளது, ஐயா.

      இதனால் கஷ்டப்பட்டுப் பரிசுகள் பெற்ற பல பதிவர்கள் மனதளவில் வாட்டம் அடைந்துள்ளார்கள், ஐயா.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  12. எந்தக் கதைக்குமே விமரிசனம் எழுதாத நான் என் கருத்தை சொல்லலாமா என்றே சந்தேகம். இருந்தாலும் பொதுவாக விமரிசனம் என்று வந்து விட்டால் விமரிசிப்பவர் ஆசிரியர் நினைத்துப் பார்க்காததையே எழுதுவர். எழுதிய ஆசிரியருக்கே இப்படியெல்லாம் எழுதக் கூடியதா என் கதை என்று தோன்றலாம். நடுவர் சொல்வதுபோல் பளிச் என்று எழுதியது காணாமல் போய்விடும். இதெல்லாம் என் பொதுவான கருத்துக்களே. நடுவர் பற்றிய என் அனுமானம் சரியா என்று சீக்கிரமே தெரியத்தான் போகிறதே. வாழ்த்துக்கள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M BalasubramaniamSeptember 1, 2014 at 5:12 PM

      வாருங்கள் திரு. GMB ஐயா, வணக்கம் ஐயா.

      //எந்தக் கதைக்குமே விமரிசனம் எழுதாத நான் என் கருத்தை சொல்லலாமா என்றே சந்தேகம். //

      பலமுறை விமர்சனங்கள் எழுதி, பரிசுகளையும் வென்றவர்களேகூட, இங்கு வந்து கருத்தளிக்காமல் உள்ளனர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      மேலும் இங்கு கருத்தளிப்பவர்கள் எல்லோருமே போட்டியில் கலந்து கொள்பவர்களோ எனவும் தாங்கள் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      தங்களுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கவே வேண்டாம். பரவாயில்லை. தாங்கள் தாராளமாக தங்களின் கருத்துக்களை இங்கு வந்து சொல்லலாம். அதை நான் மிகவும் வரவேற்கிறேன்.

      //இருந்தாலும் பொதுவாக விமரிசனம் என்று வந்து விட்டால் விமரிசிப்பவர் ஆசிரியர் நினைத்துப் பார்க்காததையே எழுதுவர். எழுதிய ஆசிரியருக்கே இப்படியெல்லாம் எழுதக் கூடியதா என் கதை என்று தோன்றலாம்.//

      ஆமாம். இதில் பல்வேறு அனுபவங்கள் கிட்டுகின்றன. நம் எழுத்துக்கள் பற்றிய குறை நிறை ஆகிய இரண்டையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதைவிடவும் பல்வேறு புதிய விஷயங்களையும் என்னால் அறிய முடிகிறது.

      புதிய பதிவர்கள் பலரைப்பற்றியும், பலரின் அற்புதமான எழுத்துத் திறமைகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது.

      அதற்குத் தானே இப்படியொரு புதுமையான போட்டியை அறிவித்து நானும் இதுவரை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வருகிறேன் !

      //நடுவர் சொல்வதுபோல் பளிச் என்று எழுதியது காணாமல் போய்விடும். இதெல்லாம் என் பொதுவான கருத்துக்களே. நடுவர் பற்றிய என் அனுமானம் சரியா என்று சீக்கிரமே தெரியத்தான் போகிறதே. வாழ்த்துக்கள் கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் கோபு [VGK ]

      நீக்கு
  13. நடுவரின் பார்வை அருமை! பயனுள்ள பார்வை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. September 1, 2014 at 10:08 PM

      //நடுவரின் பார்வை அருமை! பயனுள்ள பார்வை! பகிர்விற்கு நன்றி ஐயா!//

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. - VGK

      நீக்கு
  14. ஓஹோ.. நடுவர் இவர் தானா?
    கீதாம்மா சொன்னது சரி - என் மூன்றினக் கணிப்பு தவறு.

    நடுவர் என் கருத்தை மேலும் வலியுறுத்தியிருக்கிறார்.
    கதாசிரியருக்கு வக்காலத்து போதாதென்று கதாபாத்திரங்களை கௌரவப்படுத்தியிருக்கிறார். மருமகள் பாடு கொண்டாட்டம் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது.

    போகட்டும், இது நடுவரின் கருத்துரிமை.

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் September 2, 2014 at 5:51 AM
      நடுவர் பார்வை அருமை ஐயா//

      மிக்க நன்றி.

      நீக்கு
  16. சுவரில் அடித்த பந்து மாதிரி வாழ்க்கையில் உடனே திருப்பிக் கிடைப்பது இந்த அன்பு ஒன்று தான் என்பதால் ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் அன்பு என்பது அவர்களின் சுபாவமாகவே அந்தக் குடும்பத்தில் இருக்கிறது.//
    நடுவர் அவர்கள் சொல்வது சரிதான். அனபை கொடுத்தால் அனபை பெறலாம்.
    நடுவரின் கருத்துக்கள் அனைத்தும் அருமை. ந்டுவரும் தன் பங்கிற்கு உங்களின் கதையை அழகாய் விமர்சனம் செய்து விட்டார்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. கோமதி அரசு September 2, 2014 at 5:27 PM

    வாங்கோ, வணக்கம்.

    *****சுவரில் அடித்த பந்து மாதிரி வாழ்க்கையில் உடனே திருப்பிக் கிடைப்பது இந்த அன்பு ஒன்று தான் என்பதால் ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் அன்பு என்பது அவர்களின் சுபாவமாகவே அந்தக் குடும்பத்தில் இருக்கிறது.*****
    - நடுவரின் வரிகள்.

    //நடுவர் அவர்கள் சொல்வது சரிதான். அனபை கொடுத்தால் அனபை பெறலாம். நடுவரின் கருத்துக்கள் அனைத்தும் அருமை.//

    நடுவர் அவர்களுக்குத் தங்கள் மீதும், தங்களுக்கு நடுவர் அவர்கள் மீதும் ஓர் அன்பு உள்ளது என்பதை நான் அறிந்து கொண்டுள்ளேன். நடுவர் அவர்கள் தங்கள் பதிவுகள் சிலவற்றில் பின்னூட்டங்கள் அளித்துள்ளதால் இதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.

    அதனால் நடுவர் அவர்கள் ’அன்பைப் பற்றி கூறியுள்ள பொதுவான கருத்துக்கள்’ தங்களுக்கு அருமையாகத் தெரிவதில் எனக்கு ஏதும் வியப்பில்லை.

    //நடுவரும் தன் பங்கிற்கு உங்களின் கதையை அழகாய் விமர்சனம் செய்து விட்டார்.//

    அது ஏதோ நான் செய்த பாக்யமாக நினைக்கிறேன்.

    //வாழ்த்துக்கள்.//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு

  18. //’யானை தன்னை மறைத்துக்கொண்டாலும் அதன்
    தும்பிக்கையே அதைக் காட்டி கொடுத்து விடும்’ என்றல்லவா சொன்னீர்கள். அதை நினைத்து நினைத்துச் சிரித்துத் சிரித்து மகிழ்ந்தேன், நான். :)))))//

    ஶ்ரீராமின் இந்தப்பின்னூட்டத்தை இங்கே காணமுடியவில்லையே? யானையைக் குறித்து அவர் சொல்லி இருப்பதை இங்கே கானோமே! ??????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam September 3, 2014 at 2:26 PM

      வாங்கோ, வணக்கம்.

      *****’யானை தன்னை மறைத்துக்கொண்டாலும் அதன்
      தும்பிக்கையே அதைக் காட்டி கொடுத்து விடும்’ என்றல்லவா சொன்னீர்கள். அதை நினைத்து நினைத்துச் சிரித்துத் சிரித்து மகிழ்ந்தேன், நான். :)))))*****

      //ஶ்ரீராமின் இந்தப்பின்னூட்டத்தை இங்கே காணமுடியவில்லையே? யானையைக் குறித்து அவர் சொல்லி இருப்பதை இங்கே கானோமே! ??????//

      யானையையும் தும்பிக்கையையும் பற்றி இங்கு அவர் ஏதும் சொல்லவில்லை. வேறொரு இடத்தில் சொல்லியுள்ளார். தற்சமயம், என்னால் அதை எந்த இடத்தில் என தங்களுக்குச் சுட்டிக்காட்டிச் சொல்ல இயலாமல் உள்ளது.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர், பரவாயில்லை சார், எப்படியும் நான் ஊகித்தவர் தான் நடுவர் என்பதை உறுதியாக நம்புகிறேன். :))))

      நீக்கு
    3. Geetha Sambasivam September 3, 2014 at 2:53 PM

      //க்ர்ர்ர்ர்ர்ர்ர், பரவாயில்லை சார், எப்படியும் நான் ஊகித்தவர் தான் நடுவர் என்பதை உறுதியாக நம்புகிறேன். :))))//

      அந்த நம்பிக்கைதான் நமக்கு வேண்டும். அதுவே யானையின் தும்பிக்கைபோல நமக்கு பலம் தரக்கூடும். தங்கள் நம்பிக்கை பலிக்கட்டும். நல்வாழ்த்துகள். - VGK

      நீக்கு
  19. நடுவர் அவர்களின் உரை மூலம் வாசக விமர்சகர்களிடம் அவர்க்கிருக்கும் எதிர்பார்ப்பினையும் அது நிறைவேறாமல் போகும் சூழலில் ஏற்படும் ஆதங்கத்தையும் மிகத் தெளிவுற புரிந்துகொள்ள இயல்கிறது. கதையை எப்படி வாசிக்கவேண்டும், அதன் உள்ளிருக்கும் சாரத்தை எப்படி விமர்சிக்க வேண்டும் என்று அழகாக கற்றுக்கொடுக்கிறார். கொடுத்துவைத்தவர்கள் நாங்கள். நடுவர் அவர்களுக்கும் நடுவராக அவரைத் தேர்ந்தெடுத்து வாசகர்களுக்கு புதியதோர் வாசிப்பனுபவம் அளிக்கும் கோபு சார் அவர்களுக்கும் அன்பான நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரிSeptember 10, 2014 at 6:32 PM

      வாங்கோ, வணக்கம். நலம் தானே ?

      தங்களை என் பதிவுகளின் பின்னூட்டப்பகுதிகளில் பார்த்தே ரொம்பநாள் ஆச்சு. மிகப்பெரிய வெறுமையாக அதை நான் உணர்ந்தேன். நல்லவேளையாக இன்று வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. :)

      //நடுவர் அவர்களின் உரை மூலம் வாசக விமர்சகர்களிடம் அவர்க்கிருக்கும் எதிர்பார்ப்பினையும் அது நிறைவேறாமல் போகும் சூழலில் ஏற்படும் ஆதங்கத்தையும் மிகத் தெளிவுற புரிந்துகொள்ள இயல்கிறது. கதையை எப்படி வாசிக்கவேண்டும், அதன் உள்ளிருக்கும் சாரத்தை எப்படி விமர்சிக்க வேண்டும் என்று அழகாக கற்றுக்கொடுக்கிறார். கொடுத்துவைத்தவர்கள் நாங்கள். //

      ஆத்மார்த்தமான தங்களின் இந்தக்கருத்துக்கள் என்னை
      மிகவும் மகிழ்விக்கின்றன. சொன்னாலும்
      சொல்லாவிட்டாலும் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்களே தான் :)

      //நடுவர் அவர்களுக்கும் நடுவராக அவரைத் தேர்ந்தெடுத்து வாசகர்களுக்கு புதியதோர் வாசிப்பனுபவம் அளிக்கும் கோபு சார் அவர்களுக்கும் அன்பான நன்றி.//

      விமர்சனங்களைப்பரிசுக்குத் தேர்ந்தெடுப்பவர் உயர்திரு. நடுவர் அவர்கள்.

      உயர்திரு நடுவர் அவர்களையே தேர்ந்தெடுத்தவன் அடியேன் எனப் பெருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.

      இது நிகழ்ந்தது ஏதோ தெய்வ சங்கல்பம் மட்டுமே.

      அவர் என் மீது கொண்டுள்ள அளவில்லாத பிரியத்தினால் மட்டுமே என் வேண்டுகோளை ஏற்று நடுவராக இருக்க சம்மதித்தது .... அடியேன் செய்த மிகப்பெரிய பாக்யம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான தெளிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. கதை எப்படி படிக்கணும் எப்படி விமரிசனம் பண்ணனும் என்று நன்கு கற்றுக்கொள்ள முடிகிறது. மேலோட்டமா படிச்சுண்டே போனா எப்படி தெளிவா விமரிசனம் பண்ண முடியும்.?

      நீக்கு
  20. நடுவரின் கருத்துகள் அருமையானவை.

    பதிலளிநீக்கு
  21. //// நடுவராயிருப்பதால் தான் விமர்சனம் செய்யும் வாய்ப்பை இழப்பதால் வரும் 'இந்த விஷயத்தை யாரும் எழுதவில்லையே, கவனிக்கவில்லையே, சொல்ல வேண்டுமே' என்ற தாபம் எழுத்தில் வெளிப்படுகிறது.////

    இதுக்குத்தான் என்னை மாதிரி அறிவாளி கிட்ட யோசனை கேட்டிருக்கணும்.

    கேட்டிருந்தா?................. ஹி, ஹி, ஹி, ஹி, நான் சில சிறுகதைகளுக்கு நடுவரா இருந்திருப்பேன் இல்ல.

    அந்தக் கதைகளுக்கு நடுவரும் விமர்சனம் எழுதி இருப்பார் இல்ல.

    எங்க ரெண்டு பேருக்குமே ‘வடை போச்சே’.

    பதிலளிநீக்கு
  22. கதய படிச்சமா ரசிச்சமா கமண்டு தட்டிவுட்டமோன்னு போயிகிட்டே இருந்துகிட்டேன். விமரிசனம் எப்பூடி இருக்கோணும் எப்பூடி எளுதோணும்னுலாம் இன்னா வெவரமா யாரு சொன்னாகாட்டியும் மண்டயில ஏறுதில்ல. மண்டக்குள்ளாற மசாலாவேல்ல.

    பதிலளிநீக்கு
  23. நடுவரின் கருத்தை சிறப்பாக சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  24. //இழுத்துப் பிடித்துச் சுண்டும் பிரசவ வலி என்பது பிள்ளை பிறக்கும் முன் தான்; பிறந்த பின் நானா அப்படித் துடித்தேன் என்று அத்தனையும் ஆனந்த கண்ணீரில் மறந்து மறைந்து போகும். அதே மாதிரி தான் இந்தக் கதையின் மருமகள் கதையும். சுலப முடிச்சு; சுலப அவிழ்ப்பு./அருமை..அதானாலதான் அவரு ஜட்ஜ். நாங்க விமர்சகர்.

    பதிலளிநீக்கு