என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 6 மார்ச், 2011

'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 7 / 8 ]

பரந்தாமனுக்கு தரவேண்டிய எலிக்கூட்டுக் கடனை ஒருவழியாக அடைத்து விட்டோம் என்ற திருப்தியுடன், புத்தம் புதிய மற்றொரு எலிக்கூட்டுடன் பரந்தாமன் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தன் வீட்டுக்குச் செல்லும் வழியில், இரண்டு டஜன் மசால் வடைகள் மறக்காமல் வாங்கிக்கொண்டார், ராமசுப்பு. 

சூடாக பஜ்ஜி போட்டுத்தா அக்கா என்று தொடர்ந்து படுத்தி வரும் கோவிந்தனுக்கும் தின்னக் கொடுக்கலாம் என்ற நல்லெண்ணத்தில். 

வழியில் ட்யூஷன் முடிந்து இப்போது தான் வருவதாகச் சொல்லி, ராஜூவும் தன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டான். தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டும்,  எலிப் பிரச்சனை விஷயமாக அப்பாவுடன் பேசிக்கொண்டும் வந்த ராஜுவுடன், ராமசுப்பு தன் வீட்டை அடையும் போது இரவு மணி ஏழாகி விட்டது.


“வாங்கோ அத்திம்பேர், வீட்டிலே எலி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் நன்றாக அலசிப் பார்த்து விட்டேன். கவலைப்படாமல் சாப்பிட்டுப் படுங்கோ. நாளைக்குக் காலையிலே அக்காவையும் ராஜூவையும் கூட்டிண்டு மணச்சநல்லூர் போகலாம்னு இருக்கிறேன்” என்றான் கோவிந்தன்.

மோப்ப நாய்கள் சகிதம் வெடி குண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்து விட்டு, வெடி குண்டு எதுவும் இல்லை, வீண் புரளியைத் தான் யாரோ கிளப்பி விட்டுள்ளனர் எனச் சொன்னால் ஏற்படும் மன நிம்மதியைப் போல ஒரு  நிம்மதியை அடைந்தார் ராமசுப்பு.

எதற்கும் இருக்கட்டும் என்று புதிய எலிக்கூட்டை மசால் வடையுடன் தயார் நிலையில் சமையல் அறையின் ஒரு ஓரமாக, கோவிந்தனை விட்டே வைக்கச் சொன்னார்.  அவன் சாப்பிடவும் ஒரு அரை டஜனுக்கு மேல் வடைகள் கொடுத்தார்.

தம்பி கோவிந்தனை பூனைப் படைத் தளபதி போல தன்னருகிலேயே பாதுகாப்புக்காக நிற்க வைத்துக்கொண்டு, எலி பயம் ஏதுமின்றி, இரவு சமையலை ஒரு வழியாக முடித்திருந்தாள், அம்புஜம். 

அனைவரும் சாப்பிட்டு அலுப்புடன் படுத்தனர். ராமசுப்புவுக்கு மட்டும் சரியாகவே தூக்கம் வரவில்லை. ஏதேதோ சொப்பனங்கள் வேறு வந்தன.

முதன் முறையாக தன் உள்ளங்காலில் யாரோ சொரிவது போலத் தோன்றி திடுக்கிட்டு எழுந்தார். பிறகு சீப்பை எடுத்து தானே தன் கையால் நன்றாகவே சொரிந்து கொண்டு படுத்துக்கொண்டார்.

இரண்டாவது முறை தன் தலையணிக்கும், தலையணி உறைக்கும் இடையில் ஏதோ ஊடுருவிச் சென்றது போல ஒரு உணர்வு.  மீண்டும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். 

ராமசுப்புவின் தலை மட்டும் தரையில் இருந்தது, தலையணியைக் காணோம்.  தன் தலையணியை தரதரவென்று எலி இழுத்துப்போய் இருக்குமோ என்று ஒரு திடீர் சந்தேகம் வந்தது அவருக்கு. 

எப்படியோ தலைக்கு வந்தது தலையணியோட போச்சு, தன் தலையாவது தப்பியதே என்று நினைத்து, வலது கையை மடித்து தலைக்கு வைத்துக்கொண்டு ஒருக்களித்துப் படுத்து விட்டார். 

அவர் வைத்திருந்த தலையணியை உருவி கோவிந்தன் தன் தொடைக் கிடுக்குகளுக்கு அண்டக் கொடுத்திருந்ததை, இருட்டில் அவரால், சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை.

மூன்றாம் முறை, சுவற்றில் ஆணியில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஏதோவொரு மாதக் காலண்டர் ஃபேன் காற்றில் விசிறியடித்து கீழே விழுந்ததில், திடுக்கிட்டு எழுந்தார். 

”அம்புஜம், அம்புஜம் ஏதோ சப்தம் கேட்டதே கவனித்தாயா?” என்றார்.

அசந்து தூங்கிக்கொண்டிருந்த அம்புஜம், இவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. தூக்கத்தில் அவளை எழுப்பினால் என்ன நடக்கும் என்பது அவர் நன்றாகவே அறிந்திருந்ததால் கப் சிப் என்று தானும் சற்று கண்ணை மூடித் தூங்கலானார்.

நான்காவது முறையும் திடுக்கிட்டு எழுந்தார். இப்போது ஏதோவொரு விசித்திர சப்தம் தொடர்ந்து கேட்கலானது.  

நிச்சயமாக எலி தான் எதையோ கடித்துக் குதறிக்கொண்டு இருக்கிறது என்று உறுதியாக நம்பி, எழுந்து, பயந்து கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தார்.   அது தன் மச்சினன் கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது.

மறுநாள் சனிக்கிழமையன்று காலை 7 மணிக்கு ராமசுப்பு ஆபீஸுக்குக் கிளம்பும் போதே, மற்ற மூவரும் மணச்சநல்லூருக்குக் கிளம்பினர். அம்புஜமும் ராஜூவும் திரும்பி வர எப்படியும் ஞாயிறு இரவு ஆகிவிடும் என்பது அவருக்கும் தெரியும்.

ராமசுப்புவுக்கு ஆபீஸிலும் வேலை ஓடவில்லை. வீட்டில் எலி ஓடுமோ என்ற கவலை. தன்னை இப்படி தனியாக விட்டுவிட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு கோவிந்தனும் போய் விட்டானே என்ற பயம் வேறு.

பக்கத்து சீட்டுக்காரரிடம் செய்தித்தாள் வாங்கி ராசி பலன் பகுதியை நோட்டம் விட்டார். அவர் ராசிக்கு “சனி வக்ரமாகவும் உக்கிரமாகவும் இருப்பதால் எந்த ரூபத்திலாவது வந்து தொல்லை கொடுப்பார்; (எலி ரூபத்திலோ என்று நினைத்து பயந்து போனார்) இந்த ராசிக்காரர்கள் பலருக்கும் பண விரயம் ஏற்படும். சிலருக்கு மட்டும் எதிர்பாராத வகையில் அண்டை அயலாரின் பாராட்டு மழை பொழியும்” என சம்பந்தா சம்பந்தம் ஏதுமில்லாமல் ஏதேதோ போட்டிருந்தது.

ஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ்ஸைப் பிடித்தார். வழியில் மாம்பழச்சாலை அருகே பஸ் நின்றதும், ராமசுப்புவின் கண்களில் பட்டது அந்தக் காட்சி. ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் வரை பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டிய அவரை, அங்கேயே மாம்பழச் சாலையிலேயே இறங்கிக்கொள்ளும் படிச்செய்தது,  அவர் கண்ட அந்த அபூர்வமான அதிஸயக் காட்சி.

தன் மச்சினன் கோவிந்தனைப் போலவே ஒருவன். அவன் பெயர் ரங்கனாம். பெரிய எலி ஒன்றைத் தலைகீழாகத் தொங்க விட்டபடி, தன் கை விரல்களாலேயே அதன் வாலைப் பிடித்தபடி, சிறுவர்கள் பலர் அவனைப் புடை சூழ, குப்பைத்தொட்டியில் போடச்செல்வதைப்பார்த்து, அப்படியே பிரமித்துப் போய், அவனைப் பின் தொடர்ந்து ராமசுப்புவையும் செல்ல வைத்தது.

அந்த ரங்கனுடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒரு அட்வான்ஸ் தொகையையும் அவனுக்கு அளித்து விட்டு, தன் வீட்டு விலாசத்தையும் அவனிடம் குறித்துக் கொடுத்து விட்டு, வீடு திரும்ப எண்ணியவருக்கு ஒரு சிறு சபலம் ஏற்பட்டது.

அம்புஜம் ராஜூ யாரும் இல்லாத இன்றைய இரவு தனிமையில் இனிமை காண வேண்டி, உற்சாக பானம் ஒரு குவார்ட்டர் வாங்கி அடித்து விட்டு, ஹோட்டலில் திருப்தியாக ஸ்பெஷல் ரவாதோசை, ஆனியன் ஊத்தப்பம் என்று டிபனும் வாங்கி சாப்பிட்டு விட்டு, மசாலாப்பால் ஒன்றும் சூடாக அருந்தி விட்டு, ஒரு வழியாக ஒரு ஆட்டோவில் ஏறி வீடு திரும்பினார். 

உண்மையிலேயே அந்த உற்சாக பானம் அன்றிரவு, அவருக்கு பயத்தை நீக்கி தன்னம்பிக்கை அளித்ததுடன், நல்ல நிம்மதியான உறக்கத்தையும் அளித்தது.


தொடரும்

45 கருத்துகள்:

  1. இது கூட பண்ணுவாரா ?? எலி இருக்கா இல்லையா?

    பதிலளிநீக்கு
  2. எலிப் பயத்தை அணுகுண்டு பயத்துடன் இணைத்து
    சொல்லிப் போவது மிக அருமை
    மொழி லாவகவமும் நகைச் சுவை உணர்வுகளும்
    மிக இயல்பாக கலந்து கொள்வதால்
    தொடருடன் இயைந்து செல்ல ஏதுவாகிறது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. எலியை வைத்து கனணியை இயக்குகிறோம்,எலியை வைத்து கதை,நன்றாக இருக்கிறது,தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்! தொடரட்டும்! :-))

    பதிலளிநீக்கு
  5. பிழைகள்:
    //குப்பைத் தொட்டியில் போடச் செல்வதைப். பார்த்து//
    குப்பைத்தொட்டியில் போடச்செல்வதைப்பார்த்து

    //மஸாலாப்பால்//
    மசாலாப்பால்

    பிழை இன்றி எழுதவும் சகோ.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் ப்ரோபைலில் இருந்த பிழை:

    //ஓவிய்ங்கள்//
    ஓவியங்கள்

    பதிலளிநீக்கு
  7. //இது கூட பண்ணுவாரா ?? எலி இருக்கா இல்லையா?// Repeat!!

    பதிலளிநீக்கு
  8. கதை முழுசும் ஹீரோவா(ஹீரோயின்?)
    இருந்த எலி கடைசில ராமசுப்பு வீட்டில இல்லை போலருக்கே.

    உற்சாக பானம்?ராமசுப்பு? டூ பேட்
    (மனைவி மகன் இல்லாத சமயத்துல ஏமாத்து வேலையா?)

    பதிலளிநீக்கு
  9. கதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. எலி மாட்டிகிட்டா சுவாரசியம் போயிரும் போல இருக்கே..

    பதிலளிநீக்கு
  11. எலி பிடிக்கப் போய் க்வாட்டர் வாங்கிட்டாரா! டூ பேட்!!

    பதிலளிநீக்கு
  12. சுவாரஸியமாக எழுதுகிறீர்கள்..

    அய்யா (வயதில் மூத்தவர் என்பதால்)... உங்களுக்கு எம் வாழ்த்துக்கள் (மனதில் இளையவர் என்பதால்)...

    பதிலளிநீக்கு
  13. எலியை வைத்து சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. எல் கே said... middleclassmadhavi said...
    //இது கூட பண்ணுவாரா??எலி இருக்கா இல்லையா?//

    கவலைகளால் கலங்கிப்போன மனிதன் இது கூட என்ன எது வேண்டுமானாலும் பண்ணுவார் என நினைக்கிறேன். [ஒரு சில பெருங்’குடி’மகன்கள் என்னிடம் அவ்வப்போது சொன்ன தகவல் மட்டுமே இதற்கு ஆதாரம்]

    எலி இருக்கா இல்லையா ? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ”கோவிந்தன் விசாரணை கமிஷன்” அறிக்கைப்படி, இல்லை என்று கூறப்பட்டுள்ளது. உண்மை நிலவரம் எப்படியும் நாளைய இறுதிப் பகுதியில் தான் தெரிந்து விடுமே! அதுவரை அவசரப்படேல்.

    பதிலளிநீக்கு
  15. Ramani said...
    //எலிப் பயத்தை அணுகுண்டு பயத்துடன் இணைத்து
    சொல்லிப் போவது மிக அருமை. மொழி லாவகவமும் நகைச் சுவை உணர்வுகளும் மிக இயல்பாக கலந்து கொள்வதால் தொடருடன் இயைந்து செல்ல ஏதுவாகிறது. நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

    அணுஅணுவாய் (அணுகுண்டு பற்றி) ரசித்துப் படித்து
    அருமையாய்ச் சொல்லியுள்ள தங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்வளிக்கிறது. நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  16. உருத்திரா said...
    //எலியை வைத்து கனணியை இயக்குகிறோம்,எலியை வைத்து கதை, நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.//

    தங்களின் முதல் வருகையும், கனணியுடன் எலியை இணைத்து தந்துள்ள பாராட்டும் நன்றாகவே உள்ளன. நன்றிகள் நண்பரே!

    [அவ்விடம் நம் இலங்கையில் புலிகள் போல எலிகளும் உண்டா?]

    பதிலளிநீக்கு
  17. வேடந்தாங்கல் - கருன் said...
    //கதை புதுமையாக இருக்கிறது.//

    ஏதோ எனக்கொரு காலத்தில் ஏற்பட்ட எலித் தொல்லைகள் பற்றிய பழமையான நினைவுகளுடன் தான் எழுதினேன். புதுமையாக இருப்பதாகச் தாங்கள் சொல்லுவது எனக்கும் புதுமையாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது. நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  18. சேட்டைக்காரன் said...
    //சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்! தொடரட்டும்! :-))

    நேற்று இரவு நீங்கள் எனக்கு ரயிலில் ஊற்றிக் கொடுத்த ’கிங்ஃபிஷர்’ கொடுத்த கிக் அல்லவா எனக்கு அவ்வப்போது போதை ஏற்றி, இது போல ஓரளவாவது தங்கள் பாணியில் எழுத முயற்சித்து, உட்கார ஒரு இடமில்லாவிட்டாலும், தங்களுடன் ஒட்டிக்கொண்டாவது, (கூட்டணி வைத்தாவது) அதே நகைச்சுவை எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னையும் பயணிக்க வைக்கிறது!

    நன்றிகள் பல தங்களின் வழிகாட்டுதலுக்கு.

    பதிலளிநீக்கு
  19. தமிழ் ஈட்டி! said...
    // பிழைகள்:
    //குப்பைத் தொட்டியில் போடச் செல்வதைப். பார்த்து//
    குப்பைத்தொட்டியில் போடச்செல்வதைப்பார்த்து
    //மஸாலாப்பால்// மசாலாப்பால்
    பிழை இன்றி எழுதவும் சகோ.
    தங்கள் ப்ரோபைலில் இருந்த பிழை:
    //ஓவிய்ங்கள்// ஓவியங்கள்

    நன்றி நக்கீரரே. தமிழ் ஈட்டியால் தவறு திருத்தும் தங்களின் தமிழ்பணிக்குத் தலைவணங்குகிறேன்.

    எனக்கும் யாராவது தவறாக எழுதினால் பிடிக்காது. 100% Perfection வேண்டும் என்றே விரும்புவேன்.

    இருப்பினும் என்னையறியாமல், என் கண்களுக்கே புலப்படாமல் (கதையில் வரும் எலி போல) தவறுகள் சில தப்பித்துச் செல்வதும் உண்டு.

    தமிழில் தங்கள் அளவுக்குப் புலமையும் இல்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். முடிந்த அளவு தவறில்லாமல் எழுத தவறாமல் முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. raji said...
    // கதை முழுசும் ஹீரோவா(ஹீரோயின்?) இருந்த எலி கடைசில ராமசுப்பு வீட்டில இல்லை போலருக்கே.//

    அட ஆமாம் (போலிருக்கே) ! எதற்கும் ஹீரோவா, ஹீரோயினா, இருக்கா, இல்லையா என்ற உங்கள் சந்தேகத்தை நாளைக்குத் தீர்த்துவிடலாம்னு இருக்கேன். அது வரை வெயிட் ப்ளீஸ்.

    // உற்சாக பானம்? ராமசுப்பு? டூ பேட் //

    தங்களுக்குப் பிடிக்கவில்லை - டூ பேட், என்று நான் போய் வேலைமெனக்கட்டு அவரிடம் சொன்னதற்கு, ’எனக்குப் பிடித்திருக்கிறது, சாப்பிடுகிறேன்; அந்தம்மாவுக்குப் பிடிக்கலை என்றால் சாப்பிட வேண்டாம்’ என்கிறார் அந்த ராமசுப்பு, படவா ராஸ்கோல். இது போன்ற ஆட்களையெல்லாம் என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்கள்.

    //(மனைவி மகன் இல்லாத சமயத்துல ஏமாத்து வேலையா?)//

    இது பற்றியும் அவரிடம் கேட்டேனே! ஏமாத்து வேலையெல்லாம் இல்லை. சிக்கன நடவடிக்கை என்றார். குடிகாரர் பேச்சு எனக்கு ஒன்றும் புரியவில்லை.

    [ஒருவேளை மனைவியும், மகனுமே தங்களுக்கும் ஒரு குவார்ட்டரோ ஹாஃபோ வாங்கிவரச் சொல்லி கேட்பார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லுகிறாரோ என்ன எழவோ.]

    விட்டுத் தள்ளுங்கள், நாம் வேறு வேலைகளைப் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  21. கோவை2தில்லி said...
    //கதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.//
    அப்படியா, மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்.

    பதிலளிநீக்கு
  22. ரிஷபன் said...
    // எலி மாட்டிகிட்டா சுவாரசியம் போயிரும் போல இருக்கே. //

    ஆமாம் சார், அதை மாட்டவிடாம 7 பகுதிகளை ஓட்டி விட்டேன். நாளைக்கு 8 வது இறுதிப் பகுதி. எலியுடன் நானும் மாட்டப்போறேன், உங்கள் எல்லோரிடமும். ஒரே கவலையா இருக்கு, சார்.

    பதிலளிநீக்கு
  23. வெங்கட் நாகராஜ் said...
    // எலி பிடிக்கப் போய் க்வாட்டர் வாங்கிட்டாரா! டூ பேட்!! //

    அட நீங்களும் நம்ம ராஜியோட (டூ பேட்) கட்சியா ?
    அப்போ அவங்களுக்கு அளித்த பதில் தான் தங்களுக்கும். தப்பிச்சேன்.

    பதிலளிநீக்கு
  24. பாரத்... பாரதி... said...
    // சுவாரஸியமாக எழுதுகிறீர்கள்..
    அய்யா (வயதில் மூத்தவர் என்பதால்)... உங்களுக்கு எம் வாழ்த்துக்கள் (மனதில் இளையவர் என்பதால்)...//

    என் வயதின் முதுமையைப்பார்த்து அய்யா என்று அழைத்து என் மகனானீர் !
    அடுத்த நிமிடமே
    என் மனதின் இளமையைப்பார்த்து என்னை வாழ்த்தி என் தந்தையுமானீர்

    மொத்தத்தில் உம் எழுத்து எனக்கு ஒரு ’ரோஜாப் பூந்தோட்டம்’ போல மகிழ்விக்கிறது.

    அதுவும் தான் எனக்கு சுவாரஸியமாக உள்ளது.

    உமது படம் தான் என்னை சற்று பயமுறுத்துவதாக இருந்தது ஆரம்பத்தில். ஆனால் இப்போது பழகிவிட்டது. நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  25. ஆயிஷா said...
    // எலியை வைத்து சுவாரசியமாக
    எழுதியிருக்கிறீர்கள்.//
    தங்களின் இந்தப் பாராட்டு ‘புதிய வசந்தம்’ போல மகிழ்வூட்டுகிறது. நன்றிகள்.

    // தொடருங்கள். //
    நீங்களும் எலியைத் தொடர்ந்து வாருங்கள், படிப்பதற்கு.

    பதிலளிநீக்கு
  26. எப்படியோ தலைக்கு வந்தது தலையணியோட போச்சு,
    எலிஸபெத் டவருக்கு வந்தது எலியோடப் போனாச் சரி
    தான். மூட்டைப்பூச்சிக்கு அஞ்சியோ வீட்டைக் கொளுத்துவர்??உற்சாக பானமெல்லாம் வேண்டாம் என்று மீண்டும் சொல்லிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  27. இராஜராஜேஸ்வரி said...
    //எப்படியோ தலைக்கு வந்தது தலையணியோட போச்சு, எலிஸபெத் டவருக்கு வந்தது எலியோடப் போனாச் சரி தான். //

    தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் மேடம்.

    எலி ஒருவேளைத் தன் தலையணியை தரதரவென்று இழுத்துச் சென்றிருக்குமோ என்று ராமசுப்பு நினைத்ததை, வெகுவாக ரசித்து எழுதியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    எனக்கும் அந்த வரிகளை கடைசியாக கற்பனை செய்து சேர்த்த போது சிரிப்புத்தான் வந்தது.

    //மூட்டைப்பூச்சிக்கு அஞ்சியோ வீட்டைக் கொளுத்துவர்?? உற்சாக பானமெல்லாம் வேண்டாம் என்று மீண்டும் சொல்லிவிடுங்கள்.//

    ராமசுப்பு இப்போது முழு போதையில் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்.

    வெங்கட்காகவும், ராஜிக்காகவும் ஒருமுறை முயற்சி செய்து அவரிடம் நான் பேச்சு வார்த்தை நடத்தியது (இன்றைய காங்கிரஸ்-தி.மு.க பேச்சு வார்த்தை போல) தோல்வியில் முடிந்து விட்டது. தொடர்ந்து நடைபெறும் அரசியல் கூட்டணி முயற்சிகள் போலவே, நாளைக்கு உங்களுக்காக ஒருமுறை ராமசுப்புவிடம் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நடத்துகிறேன். கவலையை விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  28. சரியான எலிதான். அதை மாட்டவிட்டுடாதீங்க சார்!

    பதிலளிநீக்கு
  29. மோகன்ஜி said...
    //சரியான எலிதான். அதை மாட்டவிட்டுடாதீங்க சார்!//

    சரியான எலி தான்னு, நீங்க யாரைச் சொல்லுறீங்க? இந்தக் கதையில் வரப்பார்க்கும் எலியைப் பற்றித் தானே? நல்ல வேளை.

    நானாக அதை மாட்டிவிடுவதாக இல்லை. அதுவாகவே வந்து மாட்டினால் தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  30. அதுவாகவே வந்து மாட்டினால் தான் உண்டு.
    தொடர்ந்து நடைபெறும் அரசியல் கூட்டணி முயற்சிகள் போலவே, Get Great success.

    பதிலளிநீக்கு
  31. இராஜராஜேஸ்வரி said...
    அதுவாகவே வந்து மாட்டினால் தான் உண்டு.
    தொடர்ந்து நடைபெறும் அரசியல் கூட்டணி முயற்சிகள்
    போலவே, Get Great success.

    Thanks for your re-entry.
    Thanks for your enjoyed lines of some comments.
    Expecting your LOTUS in my permanent followers list.
    WELCOME, Bye now. vgk

    பதிலளிநீக்கு
  32. ஆஹா... இரவில் அவர் கற்பனையில் எதிர்கொள்ளும் விஷயங்கள்... அற்புதம்! கடைசியில அந்த எலி பிடிபட்டதா, இல்லையா..? உடனே தெரிஞ்சாகணும் எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிரஞ்சனா April 21, 2012 6:46 PM
      //ஆஹா... இரவில் அவர் கற்பனையில் எதிர்கொள்ளும் விஷயங்கள்... அற்புதம்! //

      தங்களின் அன்பான வருகைக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //கடைசியில அந்த எலி பிடிபட்டதா, இல்லையா..? உடனே தெரிஞ்சாகணும் எனக்கு!//

      எலி பிடிபட்டால் கதை நின்றுவிடுமே! அதனால் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. அவசரப்படாமல் பொறுமையாக நிதானமாக பூனைபோல எலியைத் துரத்தி பிடியுங்கள் [படியுங்கள்] ;)))))

      நீக்கு
  33. அது தன் மச்சினன் கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது.//

    எலிதொல்லையே மேல் ஆச்சே :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin October 3, 2012 3:08 AM
      ****அது தன் மச்சினன் கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது.****

      //எலிதொல்லையே மேல் ஆச்சே :))//

      அழகாகச் சொல்லிவிட்டீர்கள், நிர்மலா. ;))))) மகிழ்ச்சி.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  34. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வார்கள். ராமசுப்புவிற்கு எலிப் பிராந்தி பிடித்ததினால் நிஜப்பிராந்தி குடித்தாராக்கும்?

    பதிலளிநீக்கு
  35. பாவம் ராமசுப்பு,
    4 கால் எலிதான் படுத்தறதுன்னா, ரெண்டு கால் எலிகளுமா?

    எலி பிடிக்க ஆளையும் ஒப்பந்தம் செய்து விட்டு, பயத்துல மனசு தள்ளாடாம இருக்க சரக்கையும் போட்டு விட்டு வந்த குஷியில ராமசுப்பு நன்னா தூங்கினாரா இல்லையா?

    பதிலளிநீக்கு
  36. எப்படெயோ ஒரு எலியை கதாநாயகனாக்கி எங்களை எல்லாம் சிரிக்க வச்சுகிட்டு இருக்கிஙுக. கதா நாயகருக்கு என்ன சம்பளம் கொடுத்தீங்க?

    பதிலளிநீக்கு
  37. எங்கூட்டு பக்கத்தால எலிசபத் துனு ஒரு மிசினரி சோட்டு இருக்காவ. இனிமேக்கொள்ள அவள பாத்தாங்காட்டியும் இந்த கத நெனப்புல வருங்காட்டியும்

    பதிலளிநீக்கு
  38. ஓ..ஓ... தலைகாணியை எலி இழுத்துண்டு போலையா. படுத்தாலும் கூட எலி நெனப்பா. எலிதான் இந்தகதையின் ரியல் ஹீரோ. அத்தனை பேரையும் இந்தப் பாடு படுத்தறதே.

    பதிலளிநீக்கு
  39. // மோப்ப நாய்கள் சகிதம் வெடி குண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்து விட்டு, வெடி குண்டு எதுவும் இல்லை, வீண் புரளியைத் தான் யாரோ கிளப்பி விட்டுள்ளனர் எனச் சொன்னால் ஏற்படும் மன நிம்மதியைப் போல ஒரு நிம்மதியை அடைந்தார் ராமசுப்பு.// மிகச்சரியான உணர்வுதான்...வார்த்தைச்சரம்...வண்ணக் கதம்பம்...

    பதிலளிநீக்கு
  40. /நிச்சயமாக எலி தான் எதையோ கடித்துக் குதறிக்கொண்டு இருக்கிறது என்று உறுதியாக நம்பி, எழுந்து, பயந்து கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தார். அது தன் மச்சினன் கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது//
    எப்படி சார் இப்படி நகைச்சுவை?

    பதிலளிநீக்கு
  41. எலிக்காகவும் கோவிந்தனுக்காகவும்... ஒருடஜன் மசால் வடை வாங்கியும்கூட கோவிந்தன் மசால் வடைகளை திருப்தியாக சாப்பிட்டு அக்காவையும் பையனையும் கூட்டிட்டு மண்ணச்சநல்லூர் போயிட்டார். ஆனா இந்த எலி... மாட்டுவேனான்னு விளையாட்டு காட்டுதே. அதுவே மாட்டினாலும் நீங்க கூடை திறந்தீ தப்ப விட்டுடுவீங்க.. அப்பதானே கதையை இன்னமும் சுவாரசியமாக நீட்டிகிட்டே போக முடியும்.. கில்லாடி எலிதான்... ராமசுப்புவை உற்சாகபானம்லாம் குடிக்கற அளவுக்கு தூண்டிவிட்டிருக்கே
    மௌஸுக்கும்... எலிக்கும் என்னவித்தியாசம் தெரியுமா????? ரெண்டு பொடி பசங்க பேசிகிட்ட ஜோக்குனு எங்கியோ படிச்சேன். நம்ம வீட்டுல ஓடிவிளையாட்டு காட்டுற எலிக்கு... பின்பக்கம்வாலு... நம் கையில் விளையாடும் கம்ப்யூட்டர் மௌஸுக்கு மன்பக்கம் வாலு.....))))) இது எப்படி இருக்கு????))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... April 28, 2016 at 1:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //எலிக்காகவும் கோவிந்தனுக்காகவும்... ஒருடஜன் மசால் வடை வாங்கியும்கூட கோவிந்தன் மசால் வடைகளை திருப்தியாக சாப்பிட்டு அக்காவையும் பையனையும் கூட்டிட்டு மண்ணச்சநல்லூர் போயிட்டார். ஆனா இந்த எலி... மாட்டுவேனான்னு விளையாட்டு காட்டுதே. அதுவே மாட்டினாலும் நீங்க கூடை திறந்தீ தப்ப விட்டுடுவீங்க.. அப்பதானே கதையை இன்னமும் சுவாரசியமாக நீட்டிகிட்டே போக முடியும்.. கில்லாடி எலிதான்... ராமசுப்புவை உற்சாகபானம்லாம் குடிக்கற அளவுக்கு தூண்டிவிட்டிருக்கே//

      :) அதானே ... தங்களின் விரிவான ரசனைக்கு என் நன்றிகள்.

      //மௌஸுக்கும்... எலிக்கும் என்னவித்தியாசம் தெரியுமா????? ரெண்டு பொடி பசங்க பேசிகிட்ட ஜோக்குனு எங்கியோ படிச்சேன். நம்ம வீட்டுல ஓடிவிளையாட்டு காட்டுற எலிக்கு... பின்பக்கம்வாலு... நம் கையில் விளையாடும் கம்ப்யூட்டர் மௌஸுக்கு மன்பக்கம் வாலு.....))))) இது எப்படி இருக்கு????))))))//

      நானும் இந்த ஜோக் படித்துள்ளேன். கரெக்ட்தான்.

      தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள்.

      நீக்கு