About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, December 21, 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 4 of 5]தேடி வந்த தேவதை

[சிறுகதை - பகுதி 4 of  5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
முன்கதை முடிந்த இடம்:“தயவுசெய்து தனிமையில் பிரித்துப்படிக்கவும்” என்று எழுதிய கவர் ஒன்றை சுமதி கையில் கொடுத்து விட்டு, அவளை ஆட்டோ ஒன்றில் ஏறச் செய்துவிட்டு, தன் வீடு நோக்கித் திரும்பி வந்தான்.


தன் வீட்டுக்கு வந்து அந்தக் கவரைப் பிரித்து முதல் பத்தியைப் [Paragraph] படித்ததும், சிறு குழந்தையின் கையில் மிகப்பெரிய பலூன் ஒன்றைக் கொடுத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, சுமதிக்கு. 


ஆனால் அடுத்தடுத்து எழுதப்பட்டிருந்த விஷயங்களைப் படித்ததும், அதே பலூன் பட்டென்று உடைந்து போனால், அந்தக் குழந்தைக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுமோ அதே வருத்தத்தையும் அளித்தது. 


மொத்தத்தில் அந்தக்கடிதம் தந்த அதிர்ச்சியால், அவள் மனம் மிகவும் வேதனை தான் அடைந்தது.


=================================


தொடர்ச்சி இப்போது இங்கே ............
என்னதான் இருந்தாலும், வரதட்சனை வாங்கக்கூடாது, தன் கல்யாண விஷயமாக பெண் வீட்டாருக்கு எந்த செலவுகளும் வைக்கக்கூடாது என்ற தன் பிடிவாதக் கொள்கைக்காக, தன் குடும்ப டாக்டரின் உதவியுடன், தன்னைப் பெற்றெடுத்த தாயிடமே. தனக்கு எயிட்ஸ் நோய் வந்திருப்பதாகப் பொய் சொல்லி நாடகமாடுவதா?


சுந்தரின் இந்தச்செயலை ஆதரிக்க மனமின்றி சுமதி தவித்தாள். இந்த சம்பவம் தொண்டையில் முள் ஒன்று தைத்தது போல, அவளால் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சங்கடப்பட வைத்தது.    


மறுநாள் காலை அவளிடம் தொலைபேசியில் சுந்தர் தொடர்பு கொண்டதும், தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.

“தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள், சுந்தர். முதலில் உங்கள் தாயாரிடம் உண்மையை உண்மையாகக் கூறி விடுங்கள். அவர்கள் அதன்பிறகும் என்னையே தன் மருமகளாக ஏற்றுக்கொள்ள விரும்பினால், நல்லபடியாக நம் திருமணம் நடக்கட்டும். இல்லையென்றால் பிராப்தம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்; 


தங்கள் தாயாரை நான் மிகவும் மதிக்கிறேன். நேசிக்கிறேன். அவர்களிடம் உண்மையை மறைக்க என்னால் முடியவே முடியாது” தீர்மானமாகத் தன் முடிவை எடுத்துக்கூறினாள், சுமதி.


“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தச் சொல்லியல்லவா சொல்லுவார்கள், சுமதி.  நாம் ஒரே ஒரு பொய் தானே சொல்லப்போகிறோம். அதுவும் என் தாயார் ஒருவரிடம் மட்டுமே தானே. திருமணத்திற்குப்பிறகு நாமே இந்த உண்மையைச் சொல்லிவிட்டால் போகிறது” என்றான் சுந்தர்.


“நோ .... மிஸ்டர் சுந்தர். எனக்குப் பொதுவாக யார், யாரிடம், எதற்காகப் பொய் சொன்னாலுமே பிடிக்காது. 


“சுமதி, ப்ளீஸ் ...... நான் எதற்காகச் சொல்றேன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோ; எங்க அம்மாவைப் பற்றியும், அவங்க எதிர்பார்ப்புகள் பற்றியும் உனக்கு எதுவுமே தெரியாது. நான் ஒரே பிள்ளை என்பதாலும், நாங்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் என்பதாலும், நிறைய வரதட்சணை, சீர்செனத்தியோட மருமகள் வரணும்னு ரொம்ப பேராசைப்பிடித்து அலைகிறார்கள். எனக்கோ அதிலெல்லாம் கொஞ்சம் கூட இஷ்டமே கிடையாது. 


அதனால் தான் இப்படியொரு வீண் பழியை நானே என் மீது சுமத்திக்கொண்டு நாடகம் ஆடினேன். எங்கள் குடும்ப டாக்டரும் எனக்காக, என் புரட்சிகரமான கொள்கைகளுக்காக, அவரும் எனக்கு ஆதரவாக இருந்து, எனக்கு அதுபோல எயிட்ஸ் நோய் வந்திருப்பதாக அம்மாவிடமும் சொல்லி, அவர்களை நம்பும்படியாக உதவி செய்துள்ளார்.


அப்போதாவது என் அம்மா தன்னைத் திருத்திக்கொள்ள மாட்டார்களா; தன் எதிர்பார்ப்புகளை கைவிட்டுவிட்டு எப்படியோ, தன் மகனுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆனால் போதும்; பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தால் போதும், என்று நினைத்து செயல்படமாட்டர்களா! என்று நினைத்துத்தான் நான் இதுபோல நாடகமே ஆடியுள்ளேன்.      


இப்படி எல்லாம் கூடி வரும் போது, வெண்ணெய் திரண்டு வரும் போது [வெண்ணெய்த்] தாழியை உடைத்த கதையாக நீ செய்துவிடாதே, சுமதி .....  ப்ளீஸ் .... என்று சுந்தர் கெஞ்சினான்.


“ஹலோ மிஸ்டர் சுந்தர்! வரதட்சணை வாங்குவதும் குற்றம்; கொடுப்பதும் குற்றம் என்ற சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தங்களின் புரட்சிகரமான கொள்கைக்காக நானும் உங்களைப் பாராட்டுகிறேன்; 


ஆனால் இதை தங்கள் விஷயத்தில் செயல் படுத்துவதற்கும், நடைமுறைப் படுத்துவதற்கும், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவேயில்லை; 


உண்மையைச் சொல்லி தாங்கள் விளம்பரம் கொடுத்திருந்தீர்கள் என்ற மகிழ்ச்சியால் தான், நான் உங்கள் வீட்டுக்கே வந்தேன். அதுவே சுத்தப்பொய் என்று ஆனதும், எனக்கு எதையுமே நம்ப முடியாமல் உள்ளது” என்றாள் சுமதி.


”சுமதி, ப்ளீஸ் ..... சுமதி, என்னைத் தயவுசெய்து நம்பு, நான் சொல்வதை தயவுசெய்து புரிஞ்சுக்கோ! எனக்கு உண்மையிலேயே எயிட்ஸ் எல்லாம் ஏதும் கிடையாது. நான் வேண்டுமானால் நீ வேலை பார்க்கும் மருத்துவ மனைக்கே நாளைக்கே, ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வந்து, இதை உன்னிடம் நிரூபித்துக்காட்டுகிறேன், ...... போதுமா?” என்றான்.


“தேவையே இல்லை. அது போலெல்லாம் எதுவும் நீங்கள் தயவுசெய்து செய்ய வேண்டாம்;


உங்களுக்கு எயிட்ஸ் எதுவும் இல்லை என்பதைக் கேட்க, எனக்கும் மிகவும் சந்தோஷமே; 


ஆனால் அதை நான் நம்பி, அது எனக்குத்தெரிந்து, அதை என்னிடம் நீங்கள் நிரூபித்து என்ன ஆகப்போகிறது? நீங்கள் முதலில் இந்த சந்தோஷமான விஷயத்தைத் தெரிவிக்க வேண்டியது உங்களைப் பெற்றெடுத்த தாயாரிடம் மட்டும் தான்” என்றாள் சுமதி.  


”அது மட்டும் என்னால் முடியவே முடியாது, சுமதி; எங்க அம்மாவைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது” என்றான் சுந்தர் மிகவும் ஏக்கத்துடன்.


“உங்களால் இது முடியாது என்றால், பேசாமல் விட்டு விடுங்கள்” என்றாள் சுமதி, மிகவும் அலட்சியமாக.   


”நான் உன்னை நேரில் பார்த்ததிலிருந்து, உன் அழகான, இனிமையான, பக்குவமான பேச்சுக்களைக் கேட்டதிலிருந்து, என் மனதை உன்னிடம் பறிகொடுத்து விட்டேன்!மணந்தால் உன்னைத்தான் மணப்பது என்று முடிவே செய்து விட்டேன், தெரியுமா!” என்றான் சுந்தர்.


”நீங்கள் முடிவெடுத்து விட்டால் மட்டும் போதுமா?” என்றாள், சுமதி.

”முடிவாக நீ என்ன தான் சொல்ல வருகிறாய், சுமதி?” அழாக்குறையாகக் கேட்டான் சுந்தர்.


”தங்கள் தாயாருக்கு தாங்கள் ஒரே பிள்ளை. நல்ல அழகானவர், நிறைய படித்தவர், நன்கு சம்பாதிப்பவர், வசதி வாய்ப்புக்களுக்கும் குறைவில்லை. உங்களை மணக்க வரும் பெண்ணும் அதுபோல வசதி வாய்ப்புக்கள் உள்ளவளாக, நிறைய சீர்செனத்தியுடன் வரவேண்டும் என்று தங்கள் தாயார் எதிர்பார்ப்பதையும், நான் குறை கூறவே மாட்டேன்; 


அவர்கள் போன தலைமுறை ஆசாமிகள்.  அவர்களுக்கென்று ஒரு சில ஆசைகள், கற்பனைகள், எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும்! அதில் தப்பு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை; 


அரசாங்கம் ஆயிரம் சட்ட திட்டங்கள் போட்டிருந்தாலும், பிறருக்குத் தெரியும் வண்ணம் ரொக்கப்பணமாக கொடுக்கல் வாங்கல் பரிமாற்றங்கள் வெளிப்படையாக நடைபெறாவிட்டாலும், நகைகள், தங்கம், வைரம், வெள்ளி, பிற சொத்துகள் என்று வேறு ஏதேதோ வகையில் வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும், நம் நாட்டின் எல்லா இடங்களிலும் வெகு சகஜமாக, இன்றும் நிகழ்ந்து வரும் மிகச் சாதாரண நிகழ்ச்சிகள் தானே; 


திருமணமாகி புதுப்பெண்ணாய் வருபவள் எல்லாச் செல்வங்களுடனும் வந்தால் தான், புகுந்த வீட்டில் அவளுக்கும் ஒரு கெளரவமாகவும், பெருமையாகவும், மரியாதையாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான்; 


எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே;  


அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்; 


ALL THE BEST ...... AND ..... GOOD BYE  ......." என்று சொல்லி போனை வைத்துவிட்டாள், சுமதி.       
சுந்தர் அடுத்த ஒரு வாரமும் சுமதியின் நினைவினில் தவியாய்த் தவித்து வந்தான். வேறு எந்த வேலையும் அவனுக்கு ஓடவில்லை. 


தன் தாயிடமும் இதுபற்றிப் பேசவும், உண்மையைச் சொல்லவும் மிகவும் தயங்கினான். 


இப்போது இந்த உண்மையை தன் வாயால் தன் தாயிடம் சொல்லப்போய், ஒருவேளை அதன் காரணமாகவே, தன் மனதுக்கு மிகவும் பிடித்தமான தேவதையாகிவிட்ட, சுமதியை தன் மனைவி ஆக்கிக்கொள்ள முடியாமல் போய் விடுமோ! என்ற கவலையும் அவனுக்கு ஏற்பட்டது.


அவன் தாயார் மரகதமும் அவனை அழைத்துக்கொண்டு, சுமதி வீட்டுக்குப் பெண் கேட்கப்போக, எந்தவொரு துரித நடவடிக்கைகளும் எடுக்காமலேயே காலம் கடத்தி வந்தாள்.


தொடரும் 


[ இந்தச்சிறுகதையின் அடுத்த
இறுதிப்பகுதி வரும் 24.12.2011
சனிக்கிழமையன்று வெளியிடப்படும் ]

59 comments:

 1. The boy's reasoning for cheating the mother doesn't sound credible, and is a little let down. On the other hand, the girl's rejoinder shows her true character.

  ReplyDelete
 2. என்னதான் நல்ல நோக்கமாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்ற சுமதியின் கூற்று எனக்கு மிகப் பிடித்தது. அம்மாவின் மனம் எப்படி மாறியது என்பதை அறிய ஆவலுடன் இறுதிப் பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. “தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள், சுந்தர். முதலில் உங்கள் தாயாரிடம் உண்மையை உண்மையாகக் கூறி விடுங்கள். அவர்கள் அதன்பிறகும் என்னையே தன் மருமகளாக ஏற்றுக்கொள்ள விரும்பினால், நல்லபடியாக நம் திருமணம் நடக்கட்டும். இல்லையென்றால் பிராப்தம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்;//

  சுமதி சொல்வது சரியே .

  சுமதி, சுந்தர் பெயர் பொருத்தம் நன்றாக இருக்கிறது நீங்கள் இருவரையும் இணைத்து விடுவீர்கள் என நம்புகிறேன்.
  அம்மாவுக்கு ஏற்கனவே சுமதியை பிடித்து இருக்கிறது.
  தன் பிடிவாதத்தை விட்டு நல்ல முடிவுக்கு வரட்டும்.

  ReplyDelete
 4. சுமதி, சுந்தரிடம் சொல்வது போல் தாயாரிடம் உண்மையை சொல்லி அவர்களும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்வதே சிறந்தது.

  த.ம - 3
  இண்ட்லி - 3

  ReplyDelete
 5. இப்ப நான் உங்க கதையபடிச்சேன்.
  நல்லாயிருக்கு .
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 6. சுமதியை ரொம்ப பிடிச்சுப் போச்சு.. இந்த ஒரு காரணத்திற்காகவே!

  ReplyDelete
 7. கதை வாசித்துக் கொண்டு போகின்ற போது சுந்தருக்கு இன் நோய் இருக்காது என்ருபுரிந்து கொண்டேன். ஆனால் அவர் தாய்க்கு இவ்விடயம் தெரியாது என்பதை இந்த அத்தியாயத்தில்த் தான் புரிந்துகொண்டேன் . வரதட்சனை கொடுப்பது சரியானது என்று நிறுவுவது போல் இருக்கின்றதே. இருப்பவர்கள் கொடுக்க வேண்டியது அவசியம் தான் ஆனால் இல்லாதவர்கள் கொடுக்க வேண்டும் என்பதுதான் சகிக்க முடியாது..சுமதியும் அதிகம் தான் அடம் பிடிக்கின்றார். இவ்வாறான நல்ல மனம் படைத்த ஒருவரை அவர் சரியான காரணம் சொல்லியும் அடம் பிடிப்பது அவ்வளவாகச் சரியில்லை. இருந்தாலும் இது உங்கள் கதாபாத்திரம் அதுதானே இங்கு பேசுகின்றது. அருமையான கதை தொடருங்கள்

  ReplyDelete
 8. ஒஹோ அம்மாவிற்காக இந்த பொய்யா!.இப்படியொரு பொய் சொன்னதற்கு ஆயிரம் பொய் சொல்லியிருக்கலாம்.உங்களின் கதாபாத்திரங்கள் என்றும் ரசனைக்கும்,சிந்திப்பிற்கும் உரியதே.சுமதியின் தற்போதைய முடிவு சரியானதே.அந்த உடைந்த இதயப் படம் பொருத்தம்.முடிவுப்பகுதியை ஆவலுடன் எதிர்பா்ர்க்கிறேன்.

  ReplyDelete
 9. அம்மாவின் மனமாற்றத்திற்கு என்ன காரண்மென யூகிக்க முடியவில்லை..அடுத்த பகுதியில் தெரிந்துகொள்ளலாமென நினைக்கிறேன்

  ReplyDelete
 10. அம்மாவின் முடிவு மாறும்
  சுபம்!
  கதையை முடித்து விட்டேன்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. அன்பின் வை.கோ - இன்னும் ஒரு பகுதியா - ம்ம்ம்ம் - மரகதம் மனது மாறுமா ? மாற வில்லை எனில் என்ன ஆகும் ..... எப்படி முடிக்கப் போகிறீர்கள் ? இன்னும் வேறு ஒன்றும் ட்விஸ்ட் இருக்காதல்லவா .... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 12. தொடருங்கள்.
  நன்றி.

  ReplyDelete
 13. ஓ... இப்படி போகுதா கதை....

  இருந்தாலும் எய்ட்ஸ் என்று பொய் சொல்வது அவசியமா என்றுதான் தோன்றுகிறது....

  கதை நாயகி சுமதி சொல்வது தான் சரி...

  அடுத்த பகுதியில் முடிவு எப்படி என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்....

  ReplyDelete
 14. சுய மரியாதையுள்ள பெண் சுமதி என் மனதில் உயர்ந்து கோபுரத்தில் வீற்றிருக்கிறார் .முடிவு என்னவாக இருக்கும் ????????
  பல கேள்விக்குறிகள் ..வருகிறேன் சனிக்கிழமை

  ReplyDelete
 15. நான் சுந்தருக்கு எயிட்ஸ் இருக்காது என்று நினைத்தேன் அதன் படியே கதை நகருகிறது.

  சுமதி பாத்திரம் மிக அற்புதமாக இருக்கு.
  மிகச்சிறப்பான கதை. முடிவுக்கு சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டுமா???

  ReplyDelete
 16. சுமதியின் வாதம் மிகச் சரி
  அதை நீங்கள் தர்க்க ரீதியாக விளக்கும் விதம் அருமை
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..

  ReplyDelete
 17. நான் நினைத்த யூகம் தான். ஆனால் நான் நினைத்த காரணம் வேறு.

  பொய் சொல்வதெல்லாம் தப்பு. அதுவும் எந்த மாதிரி விஷயத்தில்! ஒரு தாய் எப்படி துடித்திருப்பாள்... தன் மகனின் முடிவு நெருங்கிவிடுமோ என்ற பதைப்பு...மன உளைச்சல்.

  சுமதி ஹார்ட் உடைச்சது கரெக்ட். ஆனால் மறுபடி அடுத்த பதிவில் ஒட்டி விடுங்கள் :(

  ReplyDelete
 18. டாக்டரும் பொய்க்கு உடந்தை என்பதை ஏற்க முடியவில்லை.

  ReplyDelete
 19. //“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தச் சொல்லியல்லவா சொல்லுவார்கள், சுமதி. நாம் ஒரே ஒரு பொய் தானே சொல்லப்போகிறோம். அதுவும் என் தாயார் ஒருவரிடம் மட்டுமே தானே. திருமணத்திற்குப்பிறகு நாமே இந்த உண்மையைச் சொல்லிவிட்டால் போகிறது” //

  இது எப்பவுமே ரொம்ப டேஞ்சர் சார்...
  கல்யாணத்திலே நிறைய பேர் பண்ற தப்பு இதுதான்...
  எந்த சமயத்திலே இது வெடிக்கும் என்று சொல்ல முடியாது.
  தவிரவும்.. பொய் சொல்லி கல்யாணம் பண்ணா சட்டப்படி நிறைய சிக்கல்கள் வேறு வரும்...
  எனவே "பொய் சொல்லக் கூடாது" என்ற சுமதியின் சிந்தனை வரவேற்கத் தக்கது

  ReplyDelete
 20. சுமதியின் தரப்பு நியாயம் மிகவும் ஏற்கத்தக்கது. பாராட்டுக்குரியதுங்கூட. அதே சமயம் சுந்தரின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் அதை செயற்படுத்தும் விதம் சரியல்ல. நாளைய மாமியார் மருமகள் பிரச்சனைக்கு வித்திடுவதும் இது போன்ற தவறுகள்தாம்.

  சுமதி சுந்தர் இருவருக்கிடையிலான வாதங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் வை.கோ சார். இறுதிப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 21. கதையை சிறப்பாக கொண்டு செல்கின்றீர்கள் பாஸ் அருமை

  ReplyDelete
 22. மகனுக்கு நோய் எதுவும் இல்லை என்று தாய்க்குத் தெரியும். என்னதான் நடக்கும் என்று அவரும் பார்க்கிறார். பெண்ணை அவருக்குப் பிடித்து விட்டது. சற்று அலைக்கழித்துவிட்டு ஓகே சொல்லப் போகிறார். பின் என்ன. டும் டும் தானே
  வைகோ சார்.!

  ReplyDelete
 23. அவன் தாயார் மரகதமும் அவனை அழைத்துக்கொண்டு, சுமதி வீட்டுக்குப் பெண் கேட்கப்போக, எந்தவொரு துரித நடவடிக்கைகளும் எடுக்காமலேயே காலம் கடத்தி வந்தாள்.

  பைத்தியம் குணமானால் கல்யாணம்
  கல்யானம் நடந்தால் பைத்தியம் குண்மாகும்

  என்று ஒரு இக்கட்டான நிலையில் கதையின் போக்கு...

  ReplyDelete
 24. ALL THE BEST ...... AND ..... GOOD BYE ......." என்று சொல்லி போனை வைத்துவிட்டாள், சுமதி.


  சுமதியின் இயல்பு தெளிவாகிறது..

  ReplyDelete
 25. உண்மையைச் சொல்லி தாங்கள் விளம்பரம் கொடுத்திருந்தீர்கள் என்ற மகிழ்ச்சியால் தான், நான் உங்கள் வீட்டுக்கே வந்தேன். அதுவே சுத்தப்பொய் என்று ஆனதும், எனக்கு எதையுமே நம்ப முடியாமல் உள்ளது” என்றாள் சுமதி.

  அஸ்திவாரமே ஆட்டம் கண்டால் வாழ்க்கை ஸ்திரம் என்ன ஆவது??

  நம்பிக்கையே வாழ்க்கையின் அச்சாணி அல்லவா??

  ReplyDelete
 26. மகனுக்கு நோய் எதுவும் இல்லை என்று தாய்க்குத் தெரியும்.

  அப்படிதான் நினைக்கவைக்கிறது..
  "தேடி வந்த தேவதை

  ReplyDelete
 27. தங்கள் தாயாரை நான் மிகவும் மதிக்கிறேன். நேசிக்கிறேன். அவர்களிடம் உண்மையை மறைக்க என்னால் முடியவே முடியாது” தீர்மானமாகத் தன் முடிவை எடுத்துக்கூறினாள், சுமதி.


  அழுத்தமான முடிவு..

  அருமையான கதைக்குப் பாராட்டுக்கள் ஐயா..

  ReplyDelete
 28. ரொம்பவும் சென்சிட்டிவான பிரச்சினையை தொட்டு , அதற்கு விளக்கமளித்து பிறகு உணர்வுபூர்வமான சூழலை உருவாக்கி.... கதை மிக அழகான விளக்கங்களுடன் செல்கிறது. இறுதிப் பகுதிக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 29. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  //இப்ப நான் உங்க கதையபடிச்சேன்.
  நல்லாயிருக்கு .
  வாழ்த்துக்கள் .//

  Advocate P.R.Jayarajan said...
  ***“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தச் சொல்லியல்லவா சொல்லுவார்கள், சுமதி. நாம் ஒரே ஒரு பொய் தானே சொல்லப்போகிறோம். அதுவும் என் தாயார் ஒருவரிடம் மட்டுமே தானே. திருமணத்திற்குப்பிறகு நாமே இந்த உண்மையைச் சொல்லிவிட்டால் போகிறது”***

  //இது எப்பவுமே ரொம்ப டேஞ்சர் சார்...
  கல்யாணத்திலே நிறைய பேர் பண்ற தப்பு இதுதான்...
  எந்த சமயத்திலே இது வெடிக்கும் என்று சொல்ல முடியாது.
  தவிரவும்.. பொய் சொல்லி கல்யாணம் பண்ணா சட்டப்படி நிறைய சிக்கல்கள் வேறு வரும்...
  எனவே "பொய் சொல்லக் கூடாது" என்ற சுமதியின் சிந்தனை வரவேற்கத் தக்கது//

  இந்த என் பதிவுக்கு இன்று முதன்முதலாக புதிதாக வருகை தந்திருக்கும் வழக்குரைஞர்களாகிய தங்கள் இருவரையும்
  வருக! வருக!! வருக!!!
  என அன்புடன் வரவேற்கிறேன். WELCOME Sirs.

  தங்களின் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களும் எனக்கு பெரு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிப்பதாக உள்ளன.

  நேர அவகாசம் இருக்குமானால் நான் ஏற்கனவே வெளியிட்டுள்ள பதிவுகளையும், இனி வெளியிடும் பதிவுகளையும் படித்துப்பார்த்து, அவ்வப்போது தயவுசெய்து கருத்துகள் கூறுங்கள்.

  நன்றி, நன்றி, நன்றி.
  அன்புடன் தங்கள், vgk

  ReplyDelete
 30. சாகம்பரி said...
  //ரொம்பவும் சென்சிட்டிவான பிரச்சினையை தொட்டு , அதற்கு விளக்கமளித்து பிறகு உணர்வுபூர்வமான சூழலை உருவாக்கி.... கதை மிக அழகான விளக்கங்களுடன் செல்கிறது. இறுதிப் பகுதிக்காக காத்திருக்கிறேன்.//

  நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வருகை தந்திருக்கும் தங்களின் வருகையால், என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  நேற்று முன்தினம் தங்களை வலைச்சரத்தில், திருமதி ஷக்திபிரபா அவர்கள், குறிப்பிட்டு அழகாக எழுதியுள்ளார்கள். அதற்கு என் பாராட்டுக்கள்.

  தங்களின் மனநல ஆய்வுக் கட்டுரைகளுக்கு, தாங்கள் Case Study போல எடுத்துக்கொள்ளும் விதமாக
  ஒரு சில கதாபாத்திரங்களை, கடந்த ஓரிரு வாரங்களாக என் சிறுகதைகளில் கொண்டு வந்துள்ளேன்.

  உதாரணமாக
  “காதல் வங்கி” ஜானகி.
  “தாயுமானவள்” மரகதம்+முனியாண்டி
  ”என்னுயிர்த்தோழி” உஷாவின் பாட்டி
  இந்தக்கதையின்: சுமதி

  நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு கருத்துக்கள் கூறுங்கள்.

  மிக்க நன்றி, மேடம்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 31. cheena (சீனா) said...
  //அன்பின் வை.கோ - இன்னும் ஒரு பகுதியா - ம்ம்ம்ம் - மரகதம் மனது மாறுமா ? மாற வில்லை எனில் என்ன ஆகும் ..... எப்படி முடிக்கப் போகிறீர்கள் ? இன்னும் வேறு ஒன்றும் ட்விஸ்ட் இருக்காதல்லவா .... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  அன்புள்ள ஐயா, வாங்க, வணக்கம்.

  எல்லோருடைய எதிர்பார்ப்புக்களையும் முழுத்திருப்தி படுத்துவது என்பது இயலாமல் போகலாம் தானே, சார்.

  இருந்தாலும் பெரும்பாலானவர்களைத் ஒரு மாதிரியாகத் திருப்தி படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுள்ளது.

  பார்ப்போம் சார், இனிமேல் தான் யோசித்து ஏதாவது மாத்திமாத்தி அதை செதுக்கி மெருகூட்ட வேண்டும். நடுவில் நாளை ஒரே ஒரு நாள் தான் உள்ளது.

  எல்லாம் உங்கள் ஆசியால் ஏதாவது பார்த்து செய்துவிடுகிறேன், ஐயா!

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 32. Mr. D. Chandramouli Sir
  திரு. கணேஷ் அவர்கள்
  திருமதி கோமதி அரசு அவர்கள்
  திருமதி கோவை2தில்லை அவர்கள்
  திரு. ரிஷபன் அவர்கள்
  திருமதி சந்திரகெளரி அவர்கள்
  திருமதி B S ஸ்ரீதர் அவர்கள்
  திரு மதுமதி அவர்கள்
  புலவர் திரு சா.இராமாநுசம் அவர்கள்
  திரு. ரத்னவேல் ஐயா அவர்கள்
  திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்
  திரு. துரை டேனியல் அவர்கள்
  திருமதி ஏஞ்சலின் அவர்கள்
  திருமதி ரமாரவி [ராம்வி]அவர்கள்
  திரு. ரமணி சார் அவர்கள்
  திரு. மணக்கால் சார் அவர்கள்
  திருமதி கீதா அவர்கள்
  திரு. K s s Rajh அவர்கள்
  திரு. G M B Sir அவர்கள்

  ஆகிய அனைவரின் அன்பான வருகைக்கும், அரிய பெரிய கருத்துக்களுக்கும், யூகங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், நிறை குறைகளைச் சுட்டிக்காட்டியதற்கும், உற்சாகம் கொடுத்து பாராட்டியுள்ளதற்கும், அடியேனின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்களின் பொன்னான வாக்குகளை எனக்கு ஆதரவாக பதிவுசெய்துள்ள நல்ல உள்ளங்களுக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 33. Shakthiprabha said...
  //நான் நினைத்த யூகம் தான். ஆனால் நான் நினைத்த காரணம் வேறு.//

  தாங்கள் நினைத்த காரணம் தங்களைப்போலவே மிகவும் ஷக்தி மிக்கதாக இருக்கும், ஷக்தி! ;))))

  //பொய் சொல்வதெல்லாம் தப்பு. அதுவும் எந்த மாதிரி விஷயத்தில்! ஒரு தாய் எப்படி துடித்திருப்பாள்... தன் மகனின் முடிவு நெருங்கிவிடுமோ என்ற பதைப்பு...மன உளைச்சல்.//

  மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள், ஷக்தி. தாங்கள் ஒரு குழந்தையின் தாயல்லவா! அதனால் தான் ஒரு தாயின் மனநிலையை, துடிப்பை,பதைப்பை, மன உளைச்சலை நன்றாக கணிக்க முடிகிறது உங்களால்.
  [தாய்மை உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன்] பாராட்டுக்கள். ;)

  //சுமதி ஹார்ட் உடைச்சது கரெக்ட்.//

  அப்படியா, OK ! நன்றி.

  //ஆனால் மறுபடி அடுத்த பதிவில் ஒட்டி விடுங்கள் :( //

  அதற்கான ’ஷக்தி’ என்னிடம் இருந்தால் ஒட்டப் பார்க்கிறேன்.

  ஆனால் அந்த ஷக்தியை உங்கள் பெயரில் அல்லவா வைத்துக்கொண்டு ஷக்திமிக்கவராகத் திகழ்கிறீர்கள்!

  வலைச்சர ஆசிரியராக மிகச்சிறப்பாகப் பணியாற்றி வரும் இந்த வார ’ஷக்தி’மிக்க எங்கள் ராணிக்கு என் நன்றிகள்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 34. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  வணக்கம். தெய்வாம்சம் பொருந்திய தெய்வீகப்பதிவரான தங்களையும், தாங்கள் மலரச்செய்திடும் செந்தாமரைகளையும் காணாமல் என் மனம் சற்று நேரம் துடித்துப் போனதென்னமோ உண்மை தான்.

  ’தேடி வந்த தேவதை’ போலவே பிறகு ஒருவழியாக ஓடி வந்து, அழகிய ஐந்து செந்தாமரைகளை மலரச்செய்து, என் மனதையும் மகிழச்செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  //அருமையான கதைக்குப் பாராட்டுக்கள் ஐயா.//

  நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 35. உங்கள் கதை தொடரை இன்று வரை வந்த பகுதிகளை இப்போதுதான் படித்து முடித்தேன். இப்படியா சஸ்பென்ஸ் வைத்து என் மண்டையை காயவைப்பது. அதனால் நானே இதற்கு ஒரு முடிவை எடுத்து கதையை முடித்துள்ளேன். அந்த முடிவை உங்களின் இறுதிபகுதியோடு ஒப்பிட்டு கொள்கிறேன். இது என் மண்டைகாயாமல் இருப்பத்றகு நான் எடுத்த முடிவு.

  அம்மாவிடம் உண்மையை சொன்னால் அம்மா சுமதியை மணம்முடிக்க சம்மதிக்க மாட்டார். உண்மையை சொல்லாவிட்டால் சுமதி திருமணத்திற்கு ஒத்து கொள்ளமாட்டாள். அதனால் தனக்கு தானே இரத்ததின் மூலம் எய்ட்ஸ் கிருமியை உடம்பில் செலுத்தி உண்மையிலேயே நோயாளியாக மாறி விடுவான் இதை அறிந்த அந்த சுமதி அவனை தேடி வந்து மணம் முடித்து கொள்வாள். இதுதான் அந்த தேடிவந்த தேவதை இறுதிபாகம். இது எப்படி இருக்கு? தான் விரும்பிய பெண்ணை அடைய தமிழ் ஹீரோக்கள் இப்படிதான் செய்வார்கள் சரிதானே ஐயா...

  ReplyDelete
 36. Avargal Unmaigal said...
  //உங்கள் கதை தொடரை இன்று வரை வந்த பகுதிகளை இப்போதுதான் படித்து முடித்தேன்.//

  ஆஹா! துளித்துளியாக ரஸித்து ருசித்து அருந்த வேண்டிய பானத்தை, இப்படி ஒரேயடியாக டபக்குனு குடிச்சுட்டீங்களே! பரவாயில்லை. எப்படியோ சேர்த்தாவது குடித்து முடித்து [படித்து முடித்து] விட்டீர்களே .. சந்தோஷம்.

  //இப்படியா சஸ்பென்ஸ் வைத்து என் மண்டையை காயவைப்பது.//

  தொடர்கதையின் ருசியே, கடைசியில் ஒரு கொக்கி போட்டு சற்றே சஸ்பென்ஸ் வைத்து, எழுதுபவருக்கு மண்டை காய்வது போலவே, வாசிப்பவருக்கும் கொஞ்சம் மண்டை காய வைப்பது தானே, வழக்கம்.

  //அதனால் நானே இதற்கு ஒரு முடிவை எடுத்து கதையை முடித்துள்ளேன். அந்த முடிவை உங்களின் இறுதிபகுதியோடு ஒப்பிட்டு கொள்கிறேன். இது என் மண்டைகாயாமல் இருப்பத்றகு நான் எடுத்த முடிவு.//

  சபாஷ், நல்ல காரியம் தான் செய்துள்ளீர்கள், வாழ்த்துகள்.

  வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 37. Avargal Unmaigal said...
  //தான் விரும்பிய பெண்ணை அடைய தமிழ் ஹீரோக்கள் இப்படிதான் செய்வார்கள் சரிதானே ஐயா...//

  தான் விரும்பிய பெண்ணை அடைவதைவிட, தன்னை விரும்பும் பெண்ணை அடைபவனே உண்மையில் மிகவும் பாக்யசாலி என்பது என் அனுபவத்தில் மிகத்தாமதமாக எனக்கு ஏற்பட்டதோர் எண்ணம் [கணிப்பு].

  இதை “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற என் சிறுகதையில் கூட எழுதியிருப்பேன். 4 சிறிய பகுதிகள் மட்டும். ஏற்கனவே படிக்காமல் இருந்தால் தயவுசெய்து படித்து விட்டுக் கருத்துக்கள் எழுதவும். எனக்கு மிகவும் பிடித்த நான் எழுதிய ஒருசில கதைகளில் இதுவும் ஒன்று.

  இணைப்பு இதோ:
  http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html

  இப்போது வரும் திரைப்படங்களை அதிகம் நான் பார்க்க முடிவதில்லை.
  அதனால் அது பற்றி நான் ஏதும் கருத்தளிக்க விரும்பவில்லை.

  தாங்கள் எழுதியுள்ள முடிவும், என் முடிவும் ஒத்துப்போகிறதா என்பது நாளை காலை தெரிந்துவிடுமே!

  அதுவரை சற்றே பொறுமையாக இருங்கள்.

  நிழல் போல உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வருபவன் என்று ஏற்கனவே எனக்கு எழுதியிருந்த, வாடிக்கையாளரான தாங்கள், இந்தப்பதிவுக்கு மட்டும் ஏனோ வரவில்லையே என்று நினைத்து வருந்திக்கொண்டிருந்தேன். நல்ல வேளையாக வந்துவிட்டீர்கள்.

  நன்றி. நாளை சந்திப்போம், நண்பரே1
  அன்புடன் vgk

  ReplyDelete
 38. அருமை! கதையைப் படிக்க இன்று தான் நேரம் கிட்டியது. இப்போது உடல் நலமா சார்! தொடருங்கள்!
  பகிர்விற்கு நன்றி!
  சிந்திக்க :
  "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

  ReplyDelete
 39. திண்டுக்கல் தனபாலன் said...
  //அருமை! கதையைப் படிக்க இன்று தான் நேரம் கிட்டியது. தொடருங்கள்!
  பகிர்விற்கு நன்றி//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 40. கடைசியில் என்னதான் ஆகப் போகிறது!

  ReplyDelete
 41. இமா said...
  //கடைசியில் என்னதான் ஆகப் போகிறது!//

  [எங்கேயாவது போய் விட்டு எப்போதாவது வந்து எட்டிப்பார்த்து ஏதாவது இதுபோல் கேள்வி கேட்க வேண்டியதே வேலையாய்ப் போச்சு இமாவுக்கு. ;))))))))]

  தேடி வந்த தேவதையாய்
  உடனே ’இமா’ ஓடிப்போய்
  அடுத்த பகுதியைப் படித்தால்,
  தெரிந்திடுமே!!

  ReplyDelete
 42. //அரசாங்கம் ஆயிரம் சட்ட திட்டங்கள் போட்டிருந்தாலும், பிறருக்குத் தெரியும் வண்ணம் ரொக்கப்பணமாக கொடுக்கல் வாங்கல் பரிமாற்றங்கள் வெளிப்படையாக நடைபெறாவிட்டாலும், நகைகள், தங்கம், வைரம், வெள்ளி, பிற சொத்துகள் என்று வேறு ஏதேதோ வகையில் வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும், நம் நாட்டின் எல்லா இடங்களிலும் வெகு சகஜமாக, இன்றும் நிகழ்ந்து வரும் மிகச் சாதாரண நிகழ்ச்சிகள் தானே; //

  சரியாகச் சொன்னீர்கள். எல்லா இடத்திலும் ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி, அவ்வரவர் வசதிக்கு தகுந்தவாறு இவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

  ReplyDelete
 43. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

  ஆமாம் ஐயா. இந்த வரதட்சணை என்ற சமூக அவலம் ஆங்காங்கே இன்றும் பல ரூபங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது.

  இந்தப் பிரச்சனையை மையக்கருத்தாக வைத்து, திருச்சி திருவானைக்கோயில், அகிலாண்டேஸ்வரி மகளிர் நற்பணி மன்றத்திலிருந்து, ஓர் மேடை நாடகம் எழுதித்தருமாறு என்னை வேண்டினர்.

  நான் எழுதிக்கொடுத்த அந்த பிரபல நாடகம், திருச்சி அகில இந்திய வானொலி நிலயத்தின், பூவையர் பூங்கா நிகழ்ச்சியில் அக்டோபர் 2007 இல் ஒலிபரப்பப்பட்டது. மகளிர் மன்றத்தினரே அதில் குரல் கொடுத்து நடித்தனர்.

  இதில் வேடிக்கை என்னவென்றால், என்னை எந்தப் பெண்மணி முதன் முதலாகத் தொடர்பு கொண்டு, நாடகம் எழுதித் தருமாறு கேட்டார்களோ, அவர்களே அந்த நாடகத்தின் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்கள். அவர்களுக்கும், எனக்கும் இதில் மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது.

  அதைவிட சந்தோஷம் என்னவென்றால், அவர்களே பிறகு எனக்கு சம்பந்தியும் ஆனது தான். அவர்களின் ஒரே மகள் 01.07.2009 அன்று எனக்கு மருமகள் ஆனாள்.

  எழுத்துலக நட்பு என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்! ;)))))

  அக்டோபர் 2007 இல் அகில இந்திய வானொலி நிலயத்தாரால், அவர்களின் ”பூவையர் பூங்கா” நிகழ்ச்சியில், ஒலிபரப்பிய என் இந்த நாடகத்தை, என் வலைப்பதிவில் எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். அதற்குள் சற்றே ஓய்வில் இருக்கும்படியாகி விட்டது.

  பிராப்தம் இருந்தால், என்றாவது ஒரு நாள் அது நிச்சயம் என்னால் என் வலைத் தளத்தில் வெளியிடப்படலாம் என நம்புகிறேன்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 44. தேடி வந்த தேவதை சுமதி.... தேவதையே தான்.. நான் எதிர்ப்பார்க்காதபோது தானாக முன்வந்து நன்மைகளை செய்துவிட்டு சடுதியில் மறைந்து போவார்களே தேவதை என்று தானே சொல்வோம் அவர்களை?

  சுமதி இத்தனை நேர்மையுடன் இருந்து சுந்தரின் இந்த மாதிரியான போக்கை கண்டிப்பது மட்டுமில்லாது தான் அவனுக்கு உடன்படமாட்டேன் என்று சொன்னது கதைக்கு வலு சேர்க்கிறது....

  இதுபோன்ற பெண்ணை இழந்துவிடக்கூடாது என்பதற்காக சுந்தர் செய்யும் இந்த ஐடியா அம்மாவை திருத்த என்றாலும் தான் செய்வதே தவறு.. அம்மாவுக்கு புரியவைக்கும்படி எடுத்து சொல்லவேண்டும்....

  அதைவிட்டு தான் பார்த்த பெண்ணையும் பொய் சொல்லத்தூண்டுவது தவறு...


  சுமதி அதை நிர்தாட்சண்யமாக மறுத்தது சுமதி போன்ற பெண்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று மனம் சந்தோஷமாகிறது. பெருமைக்கொள்ள வைக்கிறது....

  சுந்தரின் அம்மாவும் திருந்த வேண்டும். சுந்தரும் தான் விரும்பிய பெண்ணை மணக்கவும் வேண்டும்.. சுமதி சொன்னது போல சுந்தர் உண்மையை தன் அம்மாவிடம் சொல்லி மணக்கவேண்டும்...

  சரியான சிக்கலில் சிக்க வைத்து விட்டார் அண்ணா சுந்தரை...

  அருமையான கதைக்களம்.... அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...
  அன்பு வாழ்த்துகள் அண்ணா...

  சுமதியின் ஒவ்வொரு பேச்சும் அதில் தெரியும் நேர்மையும் கண்டிப்பும் கதையாசிரியரான உங்களுக்கு தான் சல்யூட் அண்ணா....

  ReplyDelete
 45. //சரியான சிக்கலில் சிக்க வைத்து விட்டார் அண்ணா சுந்தரை...//

  வாங்கோ மஞ்சூஊஊஊ வாங்கோ. இரண்டாவது பகுதியிலிருந்து நான்காவது பகுதிக்கு ஒரே தாவாத்தாவி வந்து விட்டீர்களே, மஞ்சு.

  இடையிலே மூன்றாவது பகுதின்னு ஒன்று இருக்கே மஞ்சூஊஊஊ.

  படிக்கவே மறந்துட்டீங்களா, கருத்துச்சொல்ல மறந்துட்டீங்களா?

  கதையில் வரும் சுந்தரைப்போன்றே சிக்கலில் நானும் இப்போது.

  //அருமையான கதைக்களம்.... அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...//

  ரொம்ப சந்தோஷம் மஞ்சு.

  //அன்பு வாழ்த்துகள் அண்ணா...//

  அன்பான ஆசிகள் .... மஞ்சு.

  //சுமதியின் ஒவ்வொரு பேச்சும் அதில் தெரியும் நேர்மையும் கண்டிப்பும் கதையாசிரியரான உங்களுக்கு தான் சல்யூட் அண்ணா....//

  அன்புடன் வருகை தந்து அழகாக ரஸித்துப்படித்து கருத்துக்கள் கொடுத்துள்ள என் அன்புத்தங்கை மஞ்சுவுக்கு பாசமுள்ள அண்ணாவின் ”ரா ய ல் ச ல் யூ ட்”.

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  ReplyDelete
 46. கண்டிப்பாக உங்களால் NEGATIVE ஆக கதையை முடிக்க முடியாது என்பது என் எண்ணம். ஏன்னா நம்ப உள்ளத்தில் இருப்பதுதான் கதையில் வெளிப்படும்.

  இது போன்ற நடப்புகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நடக்காது என்று சொல்ல முடியாது. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணுன்னு பெரியவங்க சொன்னாங்கன்னு தப்பா புரிஞ்சுண்டு (உண்மையில் ஆயிரம் போய் சொல்லி - அதாவது ஆயிரம் முறையாக இருந்தாலும் நடையா நடந்து)பொய் சொல்லி கல்யாணம் பண்ணறா. பின்னாடி மாட்டிக்குவாங்க.

  சரி அடுத்த பகுதிக்குப் போறேன்.

  ReplyDelete
 47. JAYANTHI RAMANI January 4, 2013 2:06 AM

  வாங்கோ வாங்கோ, வணக்கம்.

  //கண்டிப்பாக உங்களால் NEGATIVE ஆக கதையை முடிக்க முடியாது என்பது என் எண்ணம். ஏன்னா நம்ப உள்ளத்தில் இருப்பதுதான் கதையில் வெளிப்படும்.//

  அப்போ, என் உள்ளத்தில் உள்ளது பாஸிடிவ் எண்ணங்கள் மட்டுமே என்று கண்டுபிடித்துள்ள மனோ தத்துவ நிபுணர் டாக்டர் ஜயந்தி ரமணி அவர்கள் வாழ்க வாழ்கவே, என நான் சொல்லலாமா?

  //இது போன்ற நடப்புகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நடக்காது என்று சொல்ல முடியாது.//

  ஒரே போடாப் போட்டு சரி பாதியாகத் தேங்காயைப் பளிச்சினு உடைச்சது போலச் சொல்லிட்டீங்க.

  >>>>>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. கோபு >>>> திருமதி ஜயந்தி [2]

   //ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணுன்னு பெரியவங்க சொன்னாங்கன்னு தப்பா புரிஞ்சுண்டு (உண்மையில் ஆயிரம் போய் சொல்லி - அதாவது ஆயிரம் முறையாக இருந்தாலும் நடையா நடந்து)பொய் சொல்லி கல்யாணம் பண்ணறவா ... பின்னாடி மாட்டிக்குவாங்க.//

   ஆயிரம் தடவை நடையாய் நடந்து ’போய்’ என்று சொன்னது தான், நாளடைவில் ஆயிரம் ’பொய்’யின்னு ஆகிவிட்டதா? நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
   நன்றியோ நன்றிகள்.

   //சரி அடுத்த பகுதிக்குப் போறேன்.//

   அடுத்த பகுதிக்குப்போகும் முன்போ பின்போ இங்கு கொஞ்சம் போங்கோ. “உண்மை சற்றே வெண்மை”
   என்ற உருக்கமான கதை.

   இதிலும் இந்த ”ஆயிரம் பொய் சொல்லி ......” என்ற பழமொழி வருகிறது.

   ஆனால் அங்கு இன்னும் கல்யாணம் நடந்தபாடில்லை.

   இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_13.html

   நீங்கள் வருகை தரும் ராசியாவது அந்தப்பெண் குழந்தைக்கு நல்லதொரு வரனாகக் கிடைக்கட்டும். ;).

   பிரியமுள்ள
   கோபு

   Delete
 48. என்னதான் இருந்தாலும், வரதட்சனை வாங்கக்கூடாது, தன் கல்யாண விஷயமாக பெண் வீட்டாருக்கு எந்த செலவுகளும் வைக்கக்கூடாது என்ற தன் பிடிவாதக் கொள்கைக்காக, தன் குடும்ப டாக்டரின் உதவியுடன், தன்னைப் பெற்றெடுத்த தாயிடமே. தனக்கு எயிட்ஸ் நோய் வந்திருப்பதாகப் பொய் சொல்லி நாடகமாடுவதா?

  ஓ அதான் விஷயமா?

  அவர்கள் போன தலைமுறை ஆசாமிகள். அவர்களுக்கென்று ஒரு சில ஆசைகள், கற்பனைகள், எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும்! அதில் தப்பு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை;

  அந்தப்பொண்ணு ரொம்ப தெளிவாத்தான் இருக்கா. குட் குட்.

  கதை ரொம்ப எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுடிச்சி.

  ReplyDelete
 49. பூந்தளிர் January 18, 2013 at 6:57 AM

  **என்னதான் இருந்தாலும், வரதட்சனை வாங்கக்கூடாது, தன் கல்யாண விஷயமாக பெண் வீட்டாருக்கு எந்த செலவுகளும் வைக்கக்கூடாது என்ற தன் பிடிவாதக் கொள்கைக்காக, தன் குடும்ப டாக்டரின் உதவியுடன், தன்னைப் பெற்றெடுத்த தாயிடமே. தனக்கு எயிட்ஸ் நோய் வந்திருப்பதாகப் பொய் சொல்லி நாடகமாடுவதா?**

  //ஓ அதான் விஷயமா?//

  விஷயம் அப்படித்தான் இருக்கும் போலிருக்கு, பூந்தளிரே !

  **அவர்கள் போன தலைமுறை ஆசாமிகள். அவர்களுக்கென்று ஒரு சில ஆசைகள், கற்பனைகள், எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும்! அதில் தப்பு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை;**

  //அந்தப்பொண்ணு ரொம்ப தெளிவாத்தான் இருக்கா. குட் குட்.//

  தெளிவென்றால் எப்பூடீஈஈஈஈஈ ? பூந்தளிர் போலவேவா ? குட் குட்.

  //கதை ரொம்ப எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுடிச்சி.//

  அடேடே, அப்படியா சொல்றீங்கோ நீங்க ? அப்போ நன்றி.

  பிரியமுள்ள
  கோபு

  ReplyDelete
 50. கதையின் திருப்பம் பல குழப்பங்களை எங்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. கவலையாக உள்ளோம். எங்கள் கவலைகளைச் சீக்கிரம் தீருங்கள்.

  ReplyDelete
 51. நான் இதை எதிர்பாத்தேன், சுமதியின் முடிவு இதுவாக இருக்கும் என்பது, ஆனாலும் சுமதி சொல்வது சரி தானே,
  சுந்தர் செய்வது சரி என்றாலும், சுமதி முடிவு 100 சரி. வரதட்சனைக்கு சுமதி சொல்வது முற்றிலும் சரியே, தொரிந்தும் தரியாமலும் எவ்வளவோ
  அடுத்து வருகிறேன்.

  ReplyDelete
 52. கரீட்டுதா.இன்னாதா சீரு செனத்தி தஹேஜ் வாங்க கூடாதுன்னுபிட்டு நல்ல நெனப்பிருந்தாகாட்டியும் பொய்யி சொல்லுரது சரில்லதா.

  ReplyDelete
 53. சுந்தர் அவ அம்மாவிடம் வரதட்சிணை சீர் செனத்தி எதுவும் வாங்காம தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பேசி புரிய வச்சிருக்கணும். அதைவிட்டு எயிட்ஸ் அது இதுன்னு பொய் சோல்லி இருக்க கூடாது. இதுக்கு அந்த டாக்டரும் உடந்தையா. சுமதி மனநிலை எப்படி இருக்கும். மனுஷன்கிட்ட பொய் ஒன்னு இருந்தாலே போறும் மத்த கெட்ட விஷயங்கள் ஒவ்வொன்றாக கூட்டு சேர்ந்திடும்

  ReplyDelete
 54. எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே;


  அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்;


  ALL THE BEST ...... AND ..... GOOD BYE ......." என்று சொல்லி போனை வைத்துவிட்டாள், சுமதி./// கதையின் போக்கு எங்கே போகுதுன்னு கொஞ்சம் புரியுறாப்பல இருக்கு...

  ReplyDelete
 55. சுமதியின் வாதம் சரிதான்! தொடர்கிறேன்!

  ReplyDelete