About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, June 11, 2013

8] உண்டியல் துவாரம் !

2
ஸ்ரீராமஜயம்




உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர, சுய முயற்சிக்காக சாதனை என்று எதையும் பண்ணமாட்டான். பண்ணவும் முடியாது. பண்ண வேண்டிய அவசியமும் இல்லை.



நம் கை நிறைய பை நிறைய காசு இருந்தாலும் உண்டியலில் அப்படியே கொட்டி விடமுடியுமா? 


 


துவாரத்தின் வழியே ஒவ்வொரு காசாக, சிக்கிக்கொள்ளாமல், உண்டியைக் குலுக்கித்தானே போட வேண்டும்?

அப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தின், ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொன்றாக, மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி, அவர்களுக்குள்ளே போய் விட்டதா என்பதை, கேள்வி கேட்டு, நிச்சயப்படுத்திக்கொண்டு, அப்புறம்தான் அடுத்த அம்சத்திற்கு போக வேண்டும்.

oooooOooooo

ஒரு சிறிய சம்பவம்


ஸ்ரீ மஹா பெரியவாளைபற்றி இன்னொரு சம்பவம், என் மன்னி மூலம் கிடைத்தது . அவரின் பக்தையை பற்றியது.

கல்கத்தாவில்,  அந்த பக்தை தன் கணவருடன், அப்போது அவரது  வேலை நிமித்தமாக  இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.

அன்று கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும், கதவை திறந்தார், அந்த பெண்மணி .

நக்ஸலைட்டுகள் 3 to 4 பேர்கள், திமுதிமு என்று உள்ளே நுழைந்ததும் என்ன செய்வது என்றே தெரியாத அவர், தன்னை கொல்ல  அவர்கள் தயாராக  இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.

பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது, அவர்கள் கேட்டபடி சாய் [TEA] போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.

சென்னையில் விடுதியில் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார்.

”நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துக்கொள்ள  வேண்டும்” என்றார் .

வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர், ஸ்ரீ மஹா பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கும் காளி  மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தியோடு நமஸ்கரித்தார்.

’இன்னிக்கு ஏகாதசி. இன்று இந்த சோதனைக்கு உள்ளாகி இருக்கேனே’  என்று வருத்தப்பட்டார். 

அவர்களை பார்த்து ”ஓரே போடாக போட்டு விடுங்கள். வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள்” என்று மனமுருகச் சொன்னார்.

பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டிக்கொண்டே படுத்தார் 

அப்ப அந்த அதிசயம் நடந்தது. 

நக்ஸ்லைட்ஸ் மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு, பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு ”பவதாரிணி” காட்சி கொடுத்தாள். காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் .

ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ரகாளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள்.

காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர் .

"எங்களை மன்னித்து விடுங்கள் தாயே" என்று கூறிக்கொண்டே ஓட்டம் எடுத்தனர்.

கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது, உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார் 

மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு ஸ்ரீ மஹா பெரியவாளை நமஸ்கரிக்க, "காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.

உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .


[Thanks to Mr. Nagarajan Ramaswami and  ”AMRITHA VARSHINI”]

oooooOooooo

மகிழ்ச்சியான செய்தி

இன்று 11.06.2013 என் இல்லத்திற்கு, 
திடீர் விஜயம் செய்த 
என் அன்புத்தங்கை
மஞ்சு’வின் வருகை 
மிகவும் மகிழ்வளித்தது.


”கதம்ப உணர்வுகள்” கொண்ட 
பிரபல எழுத்தாளர் மஞ்சுவுக்கு 
பொன்னாடை போர்த்தி 
வரவேற்பு அளிக்கப்படும் காட்சி.

 


அன்புடன் வருகை தந்து மகிழ்வித்த 
செளபாக்யவதி ’மஞ்சுபாஷிணி’ அவர்களுக்கு 
என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

’அன்பு மஞ்சு’வுடன் என் இல்லத்துக்கு 
அன்புடன் வருகை தந்து சிறப்பித்த 
என் எழுத்துலக மானஸீக குருநாதர்
திரு ரிஷபன் அவர்களுக்கு 
என் மனமார்ந்த இனிய நன்றிகள் 



-oOo-




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 13.06.2013 வியாழக்கிழமை வெளியாகும்]



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

56 comments:

  1. வணக்கம் கோபால் சார்!

    உண்டியல் தத்துவம் அருமை! அந்த கல்கத்தா பெண்ணின் கதை குருவின் மகிமையைப் புரிய வைத்தது!!

    ReplyDelete
  2. மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு ஸ்ரீ மஹா பெரியவாளை நமஸ்கரிக்க, "காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.//

    சித்து வேலைகள் தெரிந்தும் அதை பயன்படுத்தாதவர் மகா பெரியவாள்.

    ReplyDelete
  3. I dont find words...
    Just very emotional.....
    Waiting to read further more amd more pl.

    ReplyDelete
  4. நம்பினார் கெடுவதில்லை
    நன்றி VGK

    ReplyDelete
  5. உண்டியல் தத்துவம் அருமை.

    இனிய சந்திப்பு. மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. இனிய சந்திப்பும், சிறப்பான தத்துவமும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  7. மனதில் ஆழமாக பதியும் படியாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் எடுத்துப் போடுகிறீர்கள். கொலைகாரன்களுக்குக் கூட பக்தி என்று ஒன்று ஒரு பக்கத்தில் இருக்கிரது.ஆச்சரியமாகயிருக்கிரது.. பயனடையும்படி இருக்கிரது. போட்டோ அழகாக இருக்கிரது. அன்புடன்

    ReplyDelete
  8. உண்டியல் தத்துவம் அருமை அய்யா. இனிய சந்திப்புகள் தொடரட்டும் அய்யா

    ReplyDelete
  9. காளிவடிவில் காமாட்சி வந்தது அதிசயமா.
    கைகூப்பின உடனே உதவி அருளின வேஎகத்தை என்னவென்று சொல்வது. மஹா பெரியா பாதங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
    நன்றி.

    ReplyDelete
  10. "காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.

    அமுதமழை....

    ReplyDelete
  11. அன்புடன் வருகை தந்து மகிழ்வித்த
    செளபாக்யவதி ’மஞ்சுபாஷிணி’ அவர்களுக்கு
    மகிழ்ச்சியான வாழ்த்துகள்...!

    ReplyDelete
  12. படித்ததும் மனம் புல்லரித்துப்போனது
    கண்கண்ட தெய்வம் மகாபெரியவர்
    என்பதற்கு இதைபோலத்தான் எத்தனை
    அரிய நிகழ்வுகள்
    மனம் நிறைவு தந்தபதிவு
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  13. I like the hundiyal story! Periyavaalukku theriyaathadu ondrumilli!

    Thank you!

    ReplyDelete
  14. Very emotional and lovely incident, happy moments with your sis, nice clicks...Miga arumaiynaana undiyal thathuvam, pagirvukku nandri Iyaah...

    ReplyDelete
  15. மகத்தான நிகழ்வுகள் மனதை உருகச் செய்கிறது. சகோதரி மஞ்சு அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்!

    ReplyDelete
  16. அட.. சுடச் சுட படங்களுடன் செய்தி ஆஹா பேஷ்..

    ReplyDelete
  17. உண்டியல் மூலம் எத்தனை பெரிய தத்துவம்! எல்லா வஸ்த்துக்களிலும் ஒரு தத்துவத்தை உணர்த்த மஹா ஸ்வாமி ஒருவரால் மட்டுமே முடியும்.
    அடைக்கலம் என்று ஆகிவிட்டால் தெய்வம் நிச்சயம் காப்பாற்றும். கொள்ளைக்காரர்கள் இடமும் கருணை! காமாட்சி இல்லாமல் வேறு யாரால் இதைச் செய்ய முடியும்?

    ReplyDelete
  18. //துவாரத்தின் வழியே ஒவ்வொரு காசாக, சிக்கிக்கொள்ளாமல், உண்டியைக் குலுக்கித்தானே போட வேண்டும்?/// றீச்சர் ஓடியாங்கோ.. ஸ்பெல்லிங் மிசுரேக்க்க்க்க்க்க்:)).. விடமாட்டமில்ல:).

    ReplyDelete
  19. அழகிய கதை சொல்லியிருக்கிறீங்க.

    //உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .// உண்மைதான்ன்..

    ReplyDelete
  20. உண்மை பக்தி எப்பொழுதுமே காப்பாற்றும் என்பதை அழகாக உணர்த்தி விட்டீர்கள் வைகோ சார்.
    உண்டியல் தத்துவம் அருமையாக இருக்கிறது.
    நன்றி பகிர்விற்கு.
    தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  21. மஞ்சு திருச்சியிலிருந்து -சென்னைக்கு வரும் முன்னே செய்தி வந்துவிட்டது.வாழ்துக்குரியவருக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. நேற்று ரைப் பண்ணிக்கொண்டிருக்கும்போதே பாதியில் விட்டுவிட்டு ஓடிவிட்டேன்ன்ன்.

    ///ஸ்ரீ மஹா பெரியவாளைபற்றி இன்னொரு சம்பவம், //

    மனதில் நம்பிக்கை வைத்தால் அது நம்பிக்கைதான். எனக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு சீரடிசாய்பாபா வின் புத்தகம், எங்கள் மாமி ஒருவர் தந்து சொன்னார்.. இதை 7 நாட்களுக்குள் படித்து முடித்தாயானால்ல்.. ஏதும் அதிசயம் நடக்கும்.. அத்தோடு 2 ரூபா காணிக்கையாகவும் கொடுக்க வேண்டும் என ஏதோ. எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. ஆனா மாமி குடும்பம்... சாய்பாபாவோடே தம்மை அர்ப்பணிப்பவர்கள்.

    அப்போ நானும் ஒழுங்காக 7 நாட்கள் படித்து முடித்தேன், ஆனா காணிக்கையை மறந்திட்டேன். அன்று கீரை கொண்டு வருபவர் வந்தார், என்னை வாங்கி வைக்கச் சொன்னார் அம்மா.

    என்ன விலை எனக் கேட்டேன் 2 ரூபா என்றார். எனக்கு என்னமோ இப்படியானவர்களைப் பார்க்க கஸ்டமாக இருக்கும், பார்த்துப் பாராமல் கொடுத்துவிடுவேன் பணம்... அப்போ அவவுக்கு கூடக் கொடுத்தேன் இந்தாங்க என..

    ஆனா அவவோ ஒரே பிடியாக இல்ல எனக்கு 2 ரூபாதான் வேணும் என அடம்பிடித்து 2 ரூபா மட்டும் வாங்கிப் போனார்ர்...

    பின்பு இருந்து யோசித்த இடத்து அது அந்த காணிக்கையின் அளவை நினைவு படுத்தவோ இந்த வித்தை என தோணிச்சு... ஏதோ முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போட்டதுபோல, நானே பொருத்தி எடுத்து அப்படி நினைத்துக் கொண்டேன். வேறேதும் நிகழவில்லை.

    ReplyDelete
  23. //இன்று 11.06.2013 என் இல்லத்திற்கு,
    திடீர் விஜயம் செய்த
    என் அன்புத்தங்கை
    ’மஞ்சு’வின் வருகை
    மிகவும் மகிழ்வளித்தது.//

    நீங்க இப்படிச் சொல்லியிருக்கிறீங்க... ஆனா பின்னூட்டத்தில்..இப்படி இருக்கே:)).. எங்கிட்டயேவா?:) விடமாட்டமில்ல:))

    //மஞ்சு திருச்சியிலிருந்து -சென்னைக்கு வரும் முன்னே செய்தி வந்துவிட்டது///

    ReplyDelete
  24. சகோதரி மஞ்சுபாஷினியையும் பார்த்ததில் மகிழ்ச்சி.. அவருக்கு பொன்னாடை போர்த்துவது.. கோபுஅண்ணனின் ஆன்ரியோ? இங்கு படம் பப்ளிக்கில் போட்டிருப்பது ஆண்ரிக்குத் தெரியுமோ?:))..

    அதுசரி நான் வந்தாலும், இப்படி ஆன்ரி பொன்னாடை போர்த்துவாவோ?:).. ஆனா எனக்கு ஆடையில் பொன்னிருக்கோணும்:)) ச்ச்ச்ச்ச்சும்மா பெயரளாவில் மட்டும் பொன் இருக்கப்பூடா சொல்லிட்டேன்ன்ன்:)).

    நீங்க உங்கட பெட்டில, கட்டித் தொங்கவிட்டிருக்கும் நொறுக்குத் தீனிகள் கொடுத்தீங்களோ?:).

    ReplyDelete
    Replies
    1. கட்டித் தொங்கவிட்டிருக்கும் நொறுக்குத் தீனிகள் கொடுத்தீங்களோ?:).//

      அதெல்லாம் எனக்கு மட்டுமே

      Delete
  25. பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  26. அன்புள்ள..

    மனமே உண்டியல்தான். அருமை. உங்களின் பதிவு மன நிம்மதியைத் தருகிறது. பாரத்தை இறக்கி வைப்பதுபோல. அவவ்ப்போது வருவேன் ஆனால் அவசியம் வந்துகொண்டேயிருப்பேன். கருத்துரைகள் இட இயலவில்லையென்றாலும் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறேன்.

    ReplyDelete
  27. அன்புள்ள

    வணக்கம். முன்பிட்ட பதிவு என்னவாயிற்று?

    இந்தப் பதிவு மனநிறைவைத் தருகிறது. கருத்துக்கள் இடமுடியாத சூழலிலும் தொடர்ந்து வாசிப்பது தொடர்கிறது. எனவே அடிக்கடி வரவியலவில்லையென்றாலும் அவசியம் தொடர்வேன்.

    ReplyDelete
  28. அன்புள்ள..

    மனமே உண்டியல்தான். அருமை. உங்களின் பதிவு மன நிம்மதியைத் தருகிறது. பாரத்தை இறக்கி வைப்பதுபோல. அவவ்ப்போது வருவேன் ஆனால் அவசியம் வந்துகொண்டேயிருப்பேன். கருத்துரைகள் இட இயலவில்லையென்றாலும் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறேன்.

    ReplyDelete
  29. //இன்னிக்கு ஏகாதசி. இன்று இந்த சோதனைக்கு உள்ளாகி இருக்கேனே//
    சோதனைக்கு உள்ளாக்கினாலும் கடைசியில் கைவிடவில்லை.
    //உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது// 100% உண்மையான வரி.
    உண்டியல் தத்துவம் அருமை.சிந்திக்க வேண்டியதொன்று.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. உண்டியல் தத்துவம் மிக அருமை ஐயா!!

    உண்மையான பக்தையின் பக்தியை படித்ததும் மனம் நிறைவாக இருக்கு.

    மஞ்சுவின் இனிய சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கு.

    ReplyDelete
  31. padangalum pagirvum gopu annavin manadhai polavea.. annavin varaverpu solla mudiyavillai.... ennai vaazhthiya anaivarukkum panivaana anbu nandrigal.. nidhaanamaaga kuwait poyittu podugirean.... ingea thamizh thadumaatram enakku...

    vaazhthiya anaivarukkum, pagirndha annavukkum manam niraindha anbu nandrigal... :)

    ReplyDelete
  32. அருமையான பகிர்வு. மிக்க நன்றி. காமாக்ஷி எந்த உருவிலும் வந்து காப்பாற்றுவாள் என்பதை நிரூபித்த சம்பவப் பகிர்வுக்கு நன்றி. படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி. மஞ்சுபாஷிணியின் வரவுக்கும், உங்கள் அன்புக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. உண்மையான குரு பக்தியும் உண்டியல் தத்துவமும் மிகவும் அருமை! நல்ல தொகுப்பு ஐயா!

    ReplyDelete
  34. மனமே உண்டியல்....

    சிறப்பான பகிர்வு. காமாக்ஷி காளி ரூபத்தில்....

    மஞ்சுபாஷிணி அவர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்து சென்றது குறித்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  35. நெகிழ்ச்சியான செய்தி!
    மஞ்சுபாஷினிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்.
    // அற்புதம்!// உண்டியல் தத்துவம் அருமை! தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை அனைவரும் அறிய ஒவ்வொன்றாய் சொல்லிச்செல்லும் விதமும் அழகு! நன்றி ஐயா!

    ReplyDelete
  37. மனதை உருக்கிய அற்புதம் படித்து இன்புற்றோம்.

    இனிய சந்திப்பு காணக்கிடைத்தது நன்றி. மஞ்சுபாஷினிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. உண்டியல் தத்துவம் மனம் கொள்ளை கொண்டது. எவ்வளவு எளிமையான உதாரணம். கல்கத்தா சம்பவத்தை காஞ்சியில் அறியச் செய்த அற்புதம் வியக்கவைத்தது. பின்னூட்ட நாயகி மஞ்சுபாஷிணியை சந்தித்தோம் நாங்களும் உங்கள் தயவால். நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
    Replies
    1. //கீத மஞ்சரி June 18, 2013 at 7:33 AM

      வாங்கோ வணக்கம்.

      // பின்னூட்ட நாயகி மஞ்சுபாஷிணியை சந்தித்தோம் நாங்களும் உங்கள் தயவால். நன்றி வை.கோ.சார்.//

      'பின்னூட்ட நாயகி' பற்றிய
      'விமர்சன வித்தகி'யின்
      கருத்துக்கள் மகிழ்வளித்தன.

      மிக்க நன்றி.

      அன்புடன் கோபு
      From DUBAI 02.12.2014

      Delete
  39. உண்டியல் தத்துவம் மிகவும் அருமை.

    ReplyDelete
  40. துவாரத்தின் வழியே ஒவ்வொரு காசாக, சிக்கிக்கொள்ளாமல், உண்டியைக் குலுக்கித்தானே போட வேண்டும்?

    அப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தின், ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொன்றாக, மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி, அவர்களுக்குள்ளே போய் விட்டதா என்பதை, கேள்வி கேட்டு, நிச்சயப்படுத்திக்கொண்டு, அப்புறம்தான் அடுத்த அம்சத்திற்கு போக வேண்டும்.//

    ஆம், உண்மை. உண்டியல் தத்துவம் நல்ல உதாரணம்.
    பவதாரணி காப்பாற்றிய செய்தி அருமை. உண்மையான குரு பக்திக்கு எடுத்துக்காட்டு.

    மஞ்சுபாஷிணியின் வருகை படம் சிறப்பு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. உண்டியல் கதை+உதாரணம் சிறப்பு. அடுத்து வந்த கதையும் ஆச்சர்யம்.

    மஞ்சு சகோவை மாமியுடன் பார்த்ததில் மகிழ்ச்சி.அதென்ன ஓரவஞ்சம் சகோவை அழைத்து வந்தவரின் படத்தை காணும்.

    ReplyDelete
  42. கல்கத்தா பெண்மணியை காமாட்சி காப்பாற்றியது பற்றி படித்து மெய் சிலிர்த்தேன்..

    ReplyDelete
  43. அன்பின் வை.கோ - அருமையான பதிவு - உண்டியல் தத்துவம் ஒரு பாடம் - நாம் தெரிந்து கொண்ட்டொம் - காமாஷி காப்பாதினாளா - அவருத்துத் தெரியாதது ஒன்றுமில்லை- பதிவு அருமை - மஞ்சுவின் விஜயம் வேறு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  44. அட..மஞு வந்திருந்தாரா?பகிர்வுக்கும் படங்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

    ReplyDelete
  45. மனதை உருக்கும் சம்பவம்தான். மகாப் பெரியவாளின் கருணையே கருணை.

    ReplyDelete
  46. உண்டியல் தத்துவம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் தான் கல்கத்தா பெண்மணியின் வீட்டில் நடந்த சம்பவம் ஆசார்யாளுக்கு எப்படி தெரிய வந்ததோ? அவர்தான் எங்கும் நிறைந்தவர் ஆயிற்றே.

    ReplyDelete
  47. உண்டியலு பத்தி சொல்லினது நல்லாருந்திச்சி கல்கத்தா அம்மாவுங்க வூட்டுல நடந்த வெசயம் இவுகளுக்கு எப்பூடி தெரிஞ்சிச்சி

    ReplyDelete
  48. உண்டியல் தத்துவம் ஒருபாடம் கல்கத்தாவில் நடந்தது இங்க எப்படிதெரிந்தது. அவரதான் சர்வ வியாபி ஆயிற்றே. தெரியாமல் போகுமா.

    ReplyDelete
  49. "காமாக்ஷி காப்பாத்தினாளா?" என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்குத் தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம்./// இதுக்கெல்லாம் கணக்கே இல்லைன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  50. பவதாரிணியாக காட்சி அளித்து கயவர்களை மனம் மாறச்செய்தது அற்புதம்.. உண்டியல் தத்துவம் நல்லா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. happy October 23, 2016 at 9:46 AM

      வாம்மா ... ஹாப்பி, வணக்கம்.

      //பவதாரிணியாக காட்சி அளித்து கயவர்களை மனம் மாறச்செய்தது அற்புதம்.. உண்டியல் தத்துவம் நல்லா இருக்கு...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிகள். தொடர்ந்து வரவும். :)

      Delete
  51. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (01.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/MAHAPERIYAVAA/permalink/1250386468429611/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  52. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (14.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=399418303894203

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete