இந்தத்தொடரின் முதல் 40 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை புரிந்து, பின்னூட்டமிட்டு உற்சாகம் அளித்துள்ள பதிவர்களுக்கான ஸ்பெஷல் பாராட்டு + நன்றி அறிவிப்புப் பதிவின் தொடர்ச்சி
”புதுமுகம்” - 2
கோவை2தில்லி
சாப்பிட வாங்க
ரசித்த பாடல்
’ஆதி’ என்றும் ’புவனா’ என்றும்
’ரோஷ்ணியின் அம்மா’ என்றும் ’திருமதி வெங்கட் நாகராஜன்’ என்றும்
அன்புடன் அழைக்கப்படும் ’கோவை2தில்லி’ அவர்கள்
இப்போது கோவையிலும் இல்லை தில்லியிலும் இல்லை.
எங்கள் ஊராம் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில்தான் இருக்கிறார்கள்.
இவர்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ திருச்சிக்கு வந்து தங்கியுள்ள நல்லவேளை தான், வரண்டு போயிருந்த அகண்ட காவிரியில், இன்று தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது; மழையும் கணிசமான அளவில் பொழிந்து வருகிறது, என்று இங்கு எங்கள் ஊரெல்லாம் ஒரே பேச்சு ! ;).
இவர்கள் அடிக்கடி வழங்கிடும் ’கதம்பம்’ மணக்கத்தான் செய்கிறது.
ஓர் புதிய கதம்பத்தின் இணைப்பு இதோ:
http://kovai2delhi.blogspot.in/2013/08/17.html
ஓர் புதிய கதம்பத்தின் இணைப்பு இதோ:
http://kovai2delhi.blogspot.in/2013/08/17.html
ஸ்வீட் சிக்ஸ்டீனாக
முதல் 16 பகுதிகளுக்கும் ஒழுங்காக
வருகை தந்து கருத்தளித்துவிட்டு
அதன்பிறகு எங்கோ காணாமல் போய்,
பிறகு ஒருவழியாகத்
தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
”புதுமுகம்” - 3
அதிரா
[எல்லோரும் ஜோராக் கைத்தட்டுங்கோ]
”கண்டு” புடிச்சிட்டேஏஏஏஏன்ன்ன்ன்:)!!
அதிராவை நான் கண்டு பிடிச்சேன்.
http://gokisha.blogspot.in/2013/08/blog-post_19.html
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் என்னால் என் பகுதி-25 இல்
அறிவிக்கப்பட்டிருந்த என் வம்புத்தங்கை .... ஸாரி ..... என் அன்புத்தங்கை
அலம்பல், அலட்டல், அட்டகாச, அல்டாப், அதிரடி அதிரஸ அதிரா [ஸ்வீட்
சிக்ஸ்டீன்] இப்போது திரும்பக்கிடைத்து விட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.
அதிராவைத்தேடி நான் அலையாத இடம் இல்லை.
தேம்ஸ் நதிக்கரை பூராவும் வலைவீசித் தேடினேன்.
முருங்கை மரத்தில் ஏறியும் பார்த்து விட்டேன்.
கட்டிலுக்கு அடியில் வழக்கமாக ஒளியும் பதுங்குக்குழிகளிலும் பார்த்து
விட்டேன்.
பயனில்லை.
அடிக்கடி தீக்குளிப்பேன் என்று சபதம் செய்துள்ள அதிராவுக்காக, நான்
கவலைப்பட்டுப்போய், தீ அணைப்புத்துறையிலும் போய் புகார் கொடுத்து
விசாரித்து விட்டேன்.
அதிரா பெயரைச்சொன்னதுமே அங்கிருந்த அதிகாரிகளுன் கண்களில் கோபத்தீ ....
பற்றிக்கொண்டு வந்து காதினில் புகை வந்துவிட்டது. என்னைத் துரத்தி விட்டனர்.
ஏதோ ஆர்டிக்காவோ அண்டார்டிக்காவோ போய் ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளப்போவதாக எப்போதோ சொன்ன ஞாபகம் வந்தது. அதுவும்
அமெரிக்க அதிபர் ஒபாமா அங்கிளின் அன்புக்கட்டளை என்றும்
சொல்லியிருந்தாள்.
கடைசியில் தீர விசாரித்துப் பார்த்தால் எல்லாமே, அரசியல்வாதிகள் போல ஒரே
அல்டாப் ஸ்டேட்மெண்ட்ஸ் எனத்தெரிய வந்தது.
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் என்னால் என் பகுதி-25 இல்
அறிவிக்கப்பட்டிருந்த என் வம்புத்தங்கை .... ஸாரி ..... என் அன்புத்தங்கை
அலம்பல், அலட்டல், அட்டகாச, அல்டாப், அதிரடி அதிரஸ அதிரா [ஸ்வீட்
சிக்ஸ்டீன்] இப்போது திரும்பக்கிடைத்து விட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.
அதிராவைத்தேடி நான் அலையாத இடம் இல்லை.
தேம்ஸ் நதிக்கரை பூராவும் வலைவீசித் தேடினேன்.
முருங்கை மரத்தில் ஏறியும் பார்த்து விட்டேன்.
கட்டிலுக்கு அடியில் வழக்கமாக ஒளியும் பதுங்குக்குழிகளிலும் பார்த்து
விட்டேன்.
பயனில்லை.
அடிக்கடி தீக்குளிப்பேன் என்று சபதம் செய்துள்ள அதிராவுக்காக, நான்
கவலைப்பட்டுப்போய், தீ அணைப்புத்துறையிலும் போய் புகார் கொடுத்து
விசாரித்து விட்டேன்.
அதிரா பெயரைச்சொன்னதுமே அங்கிருந்த அதிகாரிகளுன் கண்களில் கோபத்தீ ....
பற்றிக்கொண்டு வந்து காதினில் புகை வந்துவிட்டது. என்னைத் துரத்தி விட்டனர்.
ஏதோ ஆர்டிக்காவோ அண்டார்டிக்காவோ போய் ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளப்போவதாக எப்போதோ சொன்ன ஞாபகம் வந்தது. அதுவும்
அமெரிக்க அதிபர் ஒபாமா அங்கிளின் அன்புக்கட்டளை என்றும்
சொல்லியிருந்தாள்.
கடைசியில் தீர விசாரித்துப் பார்த்தால் எல்லாமே, அரசியல்வாதிகள் போல ஒரே
அல்டாப் ஸ்டேட்மெண்ட்ஸ் எனத்தெரிய வந்தது.
கடைசியில் கஷ்டப்பட்டு கனடாவில் உள்ள கடைத்தெரு ஒன்றில்
அதிராவைக் கண்டுபிடித்தேன். கையும் களவுமாக அழைத்து வந்து விட்டேன்.
தன் திருமண நாளுக்காக, காதுக்கு சாதாரண கவரிங் கம்மல் வாங்க கனடாவரைப்
போயிருந்தாளாம்.
ஊசிக்குறிப்பு:
இதற்கிடையில் நம் அதிரடி அதிராவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதுவும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் ஜெர்மனியிலிருந்து கசிந்துள்ள மணிமணியான கிசுகிசுத்தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இரண்டும் ஆண் குழந்தைகளா அல்லது இரண்டும் பெண் குழந்தைகளா அல்லது ஒன்று ஆண் மற்றொன்று பெண்ணா என்பது பற்றிய விபரங்கள் ஏதும் அந்த கிசுகிசுப்புச் செய்தியில் இடம்பெறவில்லை.
அதிரா பிரித்தானிய மஹாராணியாரின் ஒரே பேத்தியாகவும், அரச பரம்பரையைச் சேர்ந்தவராகவும் இருப்பதால் இதுபற்றிய செய்திகள் இன்னும் அதிகாரபூர்வமாக அவர்கள் தரப்பிலும் அறிவிக்கப்படவில்லை.
இந்த கிசுகிசுப்புபற்றி, மறுப்பு அறிக்கை ஏதும் வெளிவராமல் இருப்பது மர்மங்களையும் அனைவரின் ஆவல்களையும் மேலும் அதிகரிப்பதாக உள்ளது.
’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ என தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் அதிரா, 16 வயதுக்குள் நான்கு குழந்தைகளுக்குத் தாய் என்றால், நம் ஆவல் அதிகரிப்பதில் வியப்பேதும் இல்லை தானே! ;)
எனினும் உலகம் பூராவும் பரவியுள்ள செய்தி சேகரிக்கும் அனைத்து மீடியா நிரூபர்களும், தேம்ஸ் நதிக்கரையில் கூடியுள்ளதாக மற்றொரு நம்பத்தகுந்த வட்டாரச்செய்தி இரகசியமாக அறிவிக்கின்றது.
இவை எல்லாவற்றிற்கும் அதிராவே இங்கு பதில் அளிப்பாள் என நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது, நம் அதிராவுக்கும் தெரியும்.
ஆனால் பாவம் .... நம் அதிரா மிகவும் ஷை டைப்பு ;)))))
அதிரா! ....... வாழ்க வாழ்கவே!
அதிரா! ....... வாழ்க வாழ்கவே!
மேலும் ....
“பத்து புள்ள தங்கச்சிக்குப் பொறக்கணும் ....... நான் பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும் ....... மாமான்னு அழைக்கணும் ......... மழலை எல்லாம் பேசணும் ....... ;)))))”
எனப்பாட்டுப்பாடி ஆசீர்வதிக்கிறோம்.
[ எங்கிட்டயே வா???? ;))))) ]
[ எங்கிட்டயே வா???? ;))))) ]
எப்படியோ நம் அதிரா இப்போது நம்மிடம் வந்து, இதுவரை விட்டுப்போன
பதிவுகள் எல்லாவற்றிற்கும் பேரெழுச்சியுடன் பின்னூட்டமிட்டு, இதுவரை
மற்றவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்துப் பரிசுகளையும் இன்று
ஒரேயடியாக அள்ளிச் செல்கிறாள். வாழ்த்துகள்.
அதிராவிடமிருந்து நான் களவாடியதாகச் சொல்லும் இரண்டு ஹேண்ட்
பேக்ஸ் தவிர மேலும் இங்கு எட்டு ஹேண்ட் பேக்குகள் தரப்பட்டுள்ளன.
[அசலும் வட்டியுமாக வழங்கப்பட்டுள்ளன.
மிகவும் அநியாய கந்து வட்டி தான் ;) ]
பேக்ஸ் தவிர மேலும் இங்கு எட்டு ஹேண்ட் பேக்குகள் தரப்பட்டுள்ளன.
[அசலும் வட்டியுமாக வழங்கப்பட்டுள்ளன.
மிகவும் அநியாய கந்து வட்டி தான் ;) ]
இல் அதிரா கொடுத்துள்ள
கமெண்ட்க்கு என் பதில்.
athira August 28, "2013 at 1:23 AM",
// "அனைவருக்கும் வாழ்த்துக்கள்.", // O.K.,
*****புள்ளிவிபரங்களை அழகாக கணினியில், பதிவு செய்து இறுதி அறிக்கை தயாரித்த கிளி*****
//"இந்தக் கிளி மட்டும் என் கையில கிடைச்சிச்சு:) அவ்ளோதான்ன்ன்:))"//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
இதற்க்குத்தான், ”கிளியை வளர்த்துப் பூனை கையில் தரலாமா” என்று ஓர் பழமொழி சொல்லுவாங்கோ.;)))))
இருப்பினும் இந்த ’அதிராமியாவ்’ என்ற பூனை ரொம்ப சமத்து.
என் கிளியின் மீது அதற்கு தனியான பிரியம் உண்டு.
இதோ என் கிளியும் ’அதிராமியாவ்’ என்ற பூனையும் எவ்ளோ அன்பா இருக்குதுன்னு இந்த இரண்டு படங்களிலும் பாருங்கோ.
பூனை மடி மெத்தையடி .........
புகுந்து விளையாடும்மா ..... ;)))))
THE ART OF MILITARY STRATEGY
படிக்கும் மியாவ் !
கணினி பயிலும் கிளி
இதன் தொடர்ச்சி இப்போதே!
ஆனால் தனிப்பதிவாக தொடர்கிறது
ஆனால் தனிப்பதிவாக தொடர்கிறது
அதிரா [ஸ்வீட் சிக்ஸ்டீன்] இப்போது திரும்பக்கிடைத்து விட்டதில்
ReplyDeleteஎல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியே.
இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
ஹையோ நான் எங்கே காணாமல் போனேன்ன்.. ஆகவும் மிஞ்சிப்போனா ஒபாமா அங்கிளின் மீட்டிங் இல் இருந்திருப்பேன்ன் அதைப் போய்க் காணவில்லை என சொல்லிட்டார் கோபு அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
Deleteஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி ராஜேஸ்வரி அக்கா.
ReplyDeleteரோஷ்ணியின் அம்மா தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ திருச்சிக்கு வந்து தங்கியுள்ள நல்லவேளை தான், வ்ரண்டு போயிருந்த அகண்ட காவிரியில், இன்று தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது; மழையும் கணிசமான அளவில் பொழிந்து வருகிறது, என்று இங்கு எங்கள் ஊரெல்லாம் ஒரே பேச்சு ! ;).
இவர்கள் அடிக்கடி வழங்கிடும் ’கதம்பம்’ மணக்கத்தான் செய்கிறது.
மணக்கும் கதம்பத்தை
வண்ண மயமாய் வாழ்த்துகிறோம் ..!
மகிழ்ச்சியளிக்கும் படங்கள்.. அந்தப் பூனை எப்போது படித்து முடிக்கும்?..
ReplyDeleteNice post,Are you from trichy,glad to know.I am from trichy too
ReplyDeleteஎன் தோழி ஆதிராவிற்க்கு இரட்டைக் குழந்தைகள் கிடைத்துள்ளனவா ?...!!!!மனம் மகிழ்வின் உச்சிக்கே சென்று விட்டது .வாழ்த்துக்கள் முதலில் யாருக்குச் சொல்வது ?..!!தேடித் தேடி அருமையான படங்களைப் பகிர்ந்து அசத்தியுள்ள உங்களுக்கா அல்லது ஆதிராவிற்க்கா ?.....அங்கே கருவருறையில் இருந்து ஜெனித்த பொன் மணிகள் !இங்கே இதயக் கோவிலில் இருந்து மலர்ந்த அன்புக் காணிக்கைகள் ! இருவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ........
ReplyDeleteபோங்கோ அம்பாளடியாள் எனக்குச் ஷை ஷையா வருது:)).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி வாழ்த்தியமைக்கு..
Deleteஅன்பின் வை.கோ - ஒரு விருந்துக்குச் சென்று இப்பொழுது தான் திரும்ப வந்தோம் - மணி 01.09.2013 இரவு 10:19. அங்கு 02.09.2013 அதிகாலை 3 மணீயாக இருக்கும். இன்னும் ஒரு 6 மணி நேரம் தூங்கி விட்டு - மற்ற 5 பதிவுகளையும் படித்துவிடுகிறேன்.
ReplyDeleteநல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அனைத்தும் அட்டகாசம் ஐயா ... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆஹா, இரட்டைப் பரிசு அடித்த அதிராவுக்கு வாழ்த்துகள். அருமையான கெட்டிக் கதம்பம். இங்கே ஶ்ரீரங்கத்திலேயே இருந்தும் கோவை2தில்லியை இணையம் மூலமாய்த் தான் பார்க்க முடியுது. அதுவும் எப்போவோ ஒரு முறை. :))))) மற்றப் பதிவுகள் பின்னர் பார்க்கிறேன். இப்போ back to pavilion for cooking and all that. :)))
ReplyDeleteஹையோ முருகா.. ஊரில தலை காட்ட முடியுதா எனக்கு:))..
Deleteநீங்க பயந்திடாதீங்கோ கீதா, மீ இப்பூடித்தான்:).. மிக்க நன்றி.
அன்பின் வை.கோ - கோவை2தில்லி வெங்கட் நாகராஜ் ஸ்ரீரங்கத்தில் தான் இருக்கிறார்களா - பரவாய் இல்லையே - அவர்க்ளையும் கீதா சாம்பசிவத்தினையும் அக்டோபர் 6 திருச்சி வரும்போது சந்திக்க விரும்புகிறோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் வை.கோ - புதுமுகங்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்தமை நன்று. அத்த்னை பேருக்கும் அன்பளிப்புகள் - பலே பலே
ReplyDeleteஅதிராவினைத் தேடித்தேடி கண்டுபிடித்து அறிமுகம் செய்தமை நன்று. கிசுகிசுத்தகவல் -இரட்டைக் குழந்தைகள் - அதிராவிற்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சீனா அண்ணன் நீங்களுமா?.. ஹையோ விடுங்கோ என்னை மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:)).. ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி.
Deleteஅன்பின் வைகோ
ReplyDelete“பத்து புள்ள தங்கச்சிக்குப் பொறக்கணும் ....... நான் பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும் ....... மாமான்னு அழைக்கணும் ......... மழலை எல்லாம் பேசணும் ....... ;)))))” சூப்பர் சூப்பரோ சூப்பர்.
பரிசு மழை - 10 பெண்களுக்குக்கான கைப்பைகள் - மர்ரும் ஐஸ்கிரீம் etc etc etc
அதிராவின் மறுமொழிக்குப் பதில் மொழி
தங்களூக்கு நேரம் எங்கிருந்து கிடைக்கிறது
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
கோவை2தில்லி ஆதி முன்பே அறிமுகம் என்றாலும் இன்றைய புதுமுக டைட்டிலுக்காகப் பாராட்டுகள். அதிராவை சில நாட்களாகத்தான் அறிவேன். அவர் பக்கம் சென்றுவந்தாலே மனம் இலகுவாகிவிடும். அவருக்கும் இனிய வாழ்த்துக்கள். பின்னூட்டமிட்டவர்களையும் பெருமைப்படுத்தும் தங்களுக்கு மீண்டும் என் பணிவான நன்றிகள்.
ReplyDeleteமியாவும் நன்றிகள் கீதமஞ்சரி.
Deleteஅதிராவிற்கு வாழ்த்துக்கள். இரட்டை குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோவை2 தில்லி வலைத்தளம் வைத்து இருக்கும் ஆதிக்கு வாழ்த்துக்கள்.
என்ர திருப்பரங் குன்றத்து வைரவா...:)) மிக்க நன்றி கோமதி அரசு.
Delete@சீனா சார்,
ReplyDeleteகோவை2தில்லி இங்கே தான் இருக்காங்க. வெங்கட் டில்லியில் ஒரு காலும், ஶ்ரீரங்கத்தில் ஒரு காலுமாக இருக்கிறார். இப்போதைக்கு நாங்க ஶ்ரீரங்கம் தான். எங்கானும் போக நேர்ந்தால் தகவல் தெரிவிக்கிறேன். அக்டோபர் ஆறாம் தேதி ஶ்ரீரங்கத்தில் தான் இருப்பேன் என எண்ணுகிறேன்.
ஆஹா... அதிராவுக்கு இரட்டை குழந்தைகளா? ரொம்ப ரொம்ப சந்தோஷம் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் தாய் சேய் நலமுடன் இருக்க பிரார்த்தனைகள்...
ReplyDeleteதிருமதி வெங்கட் கோவை டு தில்லி..
இருவருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...
அண்ணா பூனைக்குட்டிகளின் படமும் கிளிகளின் படமும் கைப்பை அப்பப்பா... எவ்ளோ....
அதோடு அதிராவைப்பற்றி இத்தனை அழகா நீங்க எழுதியது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிக்க வைத்தது அண்ணா...
அதிராவுக்கு என் சார்பில் அன்பு வாழ்த்துகளை நீங்களும் சொல்லுங்கோ அண்ணா...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...
ஹையோ நல்லூர்க் கந்தா... இனியும் நான் இங்கின இருப்பனோ:)).. இதோ தேம்ஸ் கரையிலே.. ஒரு அழகிய உயிர்:)) தீக்குளிக்கப் போகிறது... பக்கத்திலே ஒரு கடிதம்:) அதில் காரணம் எழுதியிருக்கு:)) முதலில் ஃபயர் எஞ்சினுக்கு அடிச்சுப் போட்டு வந்து கடிதத்தைப் படிச்சு:)).. அதுக்குக் காரணமானவரைப் பிடிச்சுக்கொடுங்கோ:))... ஹையோ பார்த்துக் கொண்டிருக்காமல் ஃபயர் எஞ்சினுக்கு அடியுங்கோ...:))
Deleteகோபு அண்ணன் “அங்கின” களவெடுக்கும் அவசரத்தில:) ஒண்டை ரெண்டு என எடுத்து வந்திட்டார்ர்... ஹையோ ஹையோ:))..
மிக்க நன்றி மஞ்சு.
இப்பதிவினில் தங்களால் பாராட்டுப் பெற்ற சகோதரிகள் ’கோவை2தில்லி’ ஆதி மற்றும் அதிரா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி.
Delete
ReplyDeleteகோவை2தில்லியின் கதம்பம் மிகவும் மணக்கிறது...
அதிராவுக்கு நல்வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி மேனகா.
Deleteஹா..ஹா..ஹா.. எப்பூடி கோபு அண்ணன் இப்பூடி?.. இதனால்தான் உங்கள் கணனிக்கே பொறுக்கவில்லையோ என்னவோ:).. சரி இப்ப அதுவா முக்கியம்...:)
ReplyDeleteபுதுமுகம் 2 - கோவை2தில்லி.. தற்சமயம்.. திருச்சி2சிறீரங்கம்.. ஆதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் மியாவும் நன்றி..
கோபு அண்ணன் விரைவில் மீண்டும் வருகிறேன்ன்.. அனைத்துக்கும் ஒயுங்கா:) பதில் எழுத.. இப்போ நான் கொஞ்சம் அல்ல:)) கொஞ்சம்கூட:) பிஸி.. மனிச்சுக்கொள்ளுங்க..
அதுவரை என் காண்ட்பாக்குகள் பத்திரம்... அந்த ருவின்ஸ்ல ஒருவர்மேல “அஞ்சு” கண்போட்டிட்டமாதிரி தெரியுதே:)).. எதுக்கும் அவர்களும் பத்திரம்.. மீண்டும் வருகிறேன்... இப்போதைக்கு மிக்க மிக்க நன்றி.
கிசு கிசுக்ககள் எல்லாம் போடுகிறீர்களே பதிவில். குமுதத்துடன் போட்டியா.
ReplyDeleteஇரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகியிருக்கும் திருமதி ஆதிராவிற்கு வாழ்த்துக்கள்.
திருமதி ஆதிவெங்கட்டிற்கும் வாழ்த்துக்கள்!
அச்சச்சோஒ.. இப்போ பின்னூட்டங்கள் படிக்க, நிலைமை கவலைக்கிடமாகிக்கொண்டு போகுதே... என்ர சிவனே...:)).. யாமறியோம் பராபரமே...:))
Deleteமிக்க நன்றி.
இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான திருமதி அதிராவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநேற்று முன்தினம் திருமதி ஆதி வெங்கட் அவர்களை பதிவர் திருவிழாவில் சந்தித்தேன். திரு வெங்கட், குழந்தை ரோஷ்ணியையும் பார்த்தேன். அழகான தம்பதிகள் (touch wood)
திரு வெங்கட் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்!
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete
Deleteமிக்க நன்றி.
///இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான திருமதி அதிராவிற்கு வாழ்த்துக்கள்.////
ஹையோ முருகா ... கோபு அண்ணன், ஒளிச்சது போதும் வெளில வாங்கோஓஓஓஓஓ :))... இங்கே ஒரு பூஸ் தீக்குளிக்கப் போகிறதூஊஊஊஊ:)..
எங்கிருந்துதான் கிடைக்கின்றனவோ இவ்வளவு அழகான படங்கள்!
ReplyDeleteபடங்களுடன் பதிவையும் இரசித்தேன் ஐயா! நன்றி!
Aha Athira...
ReplyDeleteOre vali..rendu kulandai super.
Congragulations dear. Takecare yourself and children....
Gopu sir, engerunnthu pudikarenga evvallu bags.....?
nanum thedi thedi parkiren chennaiyil eppadi oru bageikkaka...
Kili....Poonai...Rendum friendsaga.....
Aha aha rombave rachi rachichu parthen.
Enakku padam parka rombave pudikkum..
Thanks for the post Sir.
//Aha Athira...
DeleteOre vali..rendu kulandai super.//
இது என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)).... கோபு அண்ணன் கெதியா வெளில வாங்கோ...:)
கோவை டு டில்லி ஆதிக்கும் ...மியாவ் அதிராவுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆமா அந்த பூனை என்ன புத்தகம் வாசிக்குது ....:))army strategy yil எப்படி மீன் பிடிப்பது பற்றியதா :))
//இந்த கிசுகிசுப்புபற்றி, மறுப்பு அறிக்கை ஏதும் வெளிவராமல் இருப்பது மர்மங்களையும் அனைவரின் ஆவல்களையும் மேலும் அதிகரிப்பதாக உள்ளது. //
ReplyDeletemee tooooo :))
you too? karrrrrrrrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrrrrrrrrr *1000000000000000000000:)
Deleteபரிசுகளில் எனக்கு மிகவும் பிடித்தது அந்த ஆரஞ்சு பைதான் :)
ReplyDeleteநோஓஓஓஓஓஓ இது அநீதி.. அழிச்சாட்டியம்...என் ஒரேஞ் பாக்கில் கண்போட்டிட்டா அஞ்சு:) என் நித்திரை போச்சே:))
DeleteCongrats to Adhira with little cute babies. The cat is really sweet and always very busy reading...
ReplyDeletelovely gifts and prizes to everyone...
ஹையோ பிறியா.. விடுங்கோ என்னை விடுங்கோ.........:)
Deleteபுதுமுகமாய் அறிமுகமாகி பரிசு பெற்றதற்கு மிக்க நன்றி சார்...
ReplyDeleteஇரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் ஆதிராவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
என்ர சிவனே.. இதோ விரைவில் பதிவாக வெளிவருகிறது... விபரம்..
Deleteநன்றி.
இருவருக்கும் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமியாவும் நன்றி.
Deleteகோபு அண்ணனுக்கு என் வன்மையான கண்டனங்கள்...:)) ஏன் எதுக்கென ஆரும் குறுக்குக் கேள்வி கேட்கப்பூடா சொல்லிட்டேன்ன்ன்:)).. அதுக்காக காண்ட் பாக்குகளை வேணாம் எனச் சொல்லிடுவேன், டபக்கென எடுத்திடலாம், எண்டு மட்டும் ஆரும் பகல் கனவு கண்டிடாதீங்க:)).. எங்கிட்டயேவா:)).. ஹா..ஹா..ஹா...
ReplyDeleteathira September 6, 2013 at 6:41 AM
Deleteஅன்புள்ள அதிரா, வாங்கோ வாங்கோ என 20 தடவைகள் சொல்லியிருக்கிறேன் என கற்பனை செய்துகொள்ளுங்கோ.
உண்மை கசக்கத்தான் செய்யும். அதிராவின் கண்டனங்களை கற்கண்டுகள் என நினைத்து சுவைத்து மகிழ்ந்தேன்.
//கோபு அண்ணனுக்கு என் வன்மையான கண்டனங்கள்...:)) ஏன் எதுக்கென ஆரும் குறுக்குக் கேள்வி கேட்கப்பூடா சொல்லிட்டேன்ன்ன்:))..//
அதெல்லாம் யாரும் [என்னைத்தவிர] அதிராவின் வம்புக்கே வர மாட்டார்கள். அவர்களெல்லாம் ரொம்ப நல்லவங்களாக்கும்.
//அதுக்காக காண்ட் பாக்குகளை வேணாம் எனச் சொல்லிடுவேன், டபக்கென எடுத்திடலாம், எண்டு மட்டும் ஆரும் பகல் கனவு கண்டிடாதீங்க:)).. எங்கிட்டயேவா:)).. ஹா..ஹா..ஹா...//
அதெல்லாம் யாரும் அப்படியெல்லாம் அல்பமாக நினைக்கவே மாட்டாங்கோ.
அதிராவுக்கு அடுத்தடுத்து நிகழப்போகும் எட்டு இரட்டைப்பிரசவங்களுக்கும் சேர்த்து தான் 8 ஹேண்ட் பேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன, என்பது எல்லோருக்குமே தெரியுமாக்கும்.
8*2= பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க .... ஸ்வீட் 16 அதிரா என வாழ்த்துகிறோம்.
அதிராவுக்கு சமீபத்தில் நிகழ்ந்த இரட்டைப்பிரஸவம் பற்றி, வழக்கம்போல ஒரே கொயப்பமாக ஓர் பதிவு வெளியிட்டுள்ளார்கள்.
இது எல்லோருடைய தகவல்களுக்காகவும் மட்டுமே.
இணைப்பு இதோ:
http://gokisha.blogspot.in/2013/09/blog-post_7.html
தலைப்பு:
என் பேபிக்குப் பெயர் வைக்க வாங்கோ!!!
அதிராவிற்கு வாழ்த்துக்கள். இரட்டை குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோவை2 தில்லி வலைத்தளம் வைத்து இருக்கும் ஆதிக்கு வாழ்த்துக்கள்.
காவிரியில் கரை புரண்டு
ReplyDeleteஓடும் வெள்ளத்தை
மிஞ்சுதையா
உந்தன்
கற்பனை வெள்ளம்
படித்தேன் ,சுவைத்தேன்
ரசித்தேன்
பாராட்டுக்கள்
யாருக்கு வாழ்வுண்டு-அதுவரை பொறுப்பாயடா -
ReplyDeleteமகாகவி காளிதாஸ்.
காத்திருந்த கிளிகளுக்கு
நல்லதொரு வாய்ப்பை நல்கியுள்ளீர்கள்
கிளிகள் பெற்ற வாய்ப்பு தாங்களுக்கும்
கிடைக்காதா என்று ஏங்குகின்றன காகங்கள் ;
எலா இடங்களிலும் எப்போதும்
அவருடனேயே இருக்கும் எங்களைப் பற்றி
எல்லோரையும் காக்கை பிடிக்கும் VGK கவனிக்காதது
மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
எங்கள் சூப்பர் ஸ்டாரே கருப்புதான்
எனக்கு பிடிச்ச கலரு என்று ஒத்துக்கொண்டுள்ள நிலையிலும்,
சாப்பாட்டு பிரியரான நீங்கள் 'கருப்பே அழகு, காந்தலே ருசி 'என்ற பழமொழியை மறந்துதொடர்ந்து எங்கள் இனத்தை
உதாசீனம் செய்வது கண்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்
என்று பறவை முனியம்மா அவர்களிடம் முறையிட்டதாக
எனக்கு ஈ-மயில் வந்துள்ளதை
Inline image 1
உங்களுக்கு தெரிவித்துவிட்டேன்.
அந்த விஷயத்தை உங்கள் காதில் போட்டுவிட்டேன்.
நீங்கள் கவனித்து எங்கள் இனத்தின் நியாயமான நீண்ட நாளைய கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்
பறவைகள் சார்பாக-காகம் (படம் தனியாக அனுப்பியுள்ளேன் எடுத்து உங்கள் பதிவில் இணைத்துக்கொள்ளவும்)
தவறும் பட்சத்தில் அல்ப்ரெட் ஹிச்காக் படத்தில் வரும் காகங்கள் போல் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் காலும் எனக்கு வந்துள்ளது
அப்புறம் உங்கள் இஷ்டம்.
யாருக்கு வாழ்வுண்டு-அதுவரை பொறுப்பாயடா -
ReplyDeleteமகாகவி காளிதாஸ்.
காத்திருந்த கிளிகளுக்கு
நல்லதொரு வாய்ப்பை நல்கியுள்ளீர்கள்
கிளிகள் பெற்ற வாய்ப்பு தாங்களுக்கும்
கிடைக்காதா என்று ஏங்குகின்றன காகங்கள் ;
எலா இடங்களிலும் எப்போதும்
அவருடனேயே இருக்கும் எங்களைப் பற்றி
எல்லோரையும் காக்கை பிடிக்கும் VGK கவனிக்காதது
மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
எங்கள் சூப்பர் ஸ்டாரே கருப்புதான்
எனக்கு பிடிச்ச கலரு என்று ஒத்துக்கொண்டுள்ள நிலையிலும்,
சாப்பாட்டு பிரியரான நீங்கள் 'கருப்பே அழகு, காந்தலே ருசி 'என்ற பழமொழியை மறந்துதொடர்ந்து எங்கள் இனத்தை
உதாசீனம் செய்வது கண்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்
என்று பறவை முனியம்மா அவர்களிடம் முறையிட்டதாக
எனக்கு ஈ-மயில் வந்துள்ளதை
Inline image 1
உங்களுக்கு தெரிவித்துவிட்டேன்.
அந்த விஷயத்தை உங்கள் காதில் போட்டுவிட்டேன்.
நீங்கள் கவனித்து எங்கள் இனத்தின் நியாயமான நீண்ட நாளைய கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்
பறவைகள் சார்பாக-காகம் (படம் தனியாக அனுப்பியுள்ளேன் எடுத்து உங்கள் பதிவில் இணைத்துக்கொள்ளவும்)
தவறும் பட்சத்தில் அல்ப்ரெட் ஹிச்காக் படத்தில் வரும் காகங்கள் போல் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் காலும் எனக்கு வந்துள்ளது
அப்புறம் உங்கள் இஷ்டம்.
தகவல்களை அதிராவே அதிரும் அளவிற்கு பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா. பாராட்டுக்குளும் பரிசுகளும் மிக அருமை. அப்புறம் கேட்க மறந்துட்டேனே! படங்கள் எல்லாம் என்கிருந்து தான் சேகரிக்கீறீர்களோ1 அனைத்தும் அருமை. நன்றி அய்யா.
ReplyDeleteஅதிராவின் இரட்டைக் குழந்தைகளுக்கும்,அவருக்கும் நல்வாழ்த்துக்கள். கோவை தில்லி ஆதிவெங்கட்டிற்கும்,மனங்கனிந்த பாராட்டுக்கள். பின்னூட்டங்கள் படிக்க மிக்க ஸந்தோஷமாக இருக்கிறது. அன்புடன்
ReplyDeleteதெரியப்படுத்தப்பட்ட புது முகங்களுக்கு வாழ்த்து! அதிராவுக்கு ஸ்பெஷல் வாழ்த்து!
ReplyDeleteஎன் துணைவியின் வலைப்பூவையும் இந்தப் பகிர்வில் குறிப்பிட்டமைக்கு நன்றி வை.கோ. ஜி.
ReplyDeleteஅதிரா ஒரு கணம் நம்பிட்டேன்
ReplyDeleteஇத்தனை மியாவ் படங்களையும் பார்க்கும் பிரிட்டானிய பூஸ் அகம் மகிழ்ந்திருப்பாரே!
ReplyDeleteசாதனைக் கிளிகளின் சாதனைகள் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்!
ReplyDeleteReply
புஸ்தகம் படிக்கும் பூனை அதிசயம்.
ReplyDeleteஅதிராவை அறிமுகப் படுத்துவதென்றால் இத்தனை பூசார்கள் தேவை தான். ஆனா அநியாயத்துக்கு அந்தப் பெண்ணை வம்புக்கு இழுத்திருக்கேளே!. படிச்சுட்டு கிளம்பி திருச்சிக்கு வந்திருக்கணமே அந்தப் பொண்ணு.
ReplyDeleteபடங்கள் பதிவுகள் சூப்பர் எங்கேந்துதான் சேகரிக்குறீங்களோ
ReplyDeleteபுதுமுகங்கள் அறிமுகம் செய்த விதம் சூப்பரு.அதிராவங்க தேம்ஸுக்கு போயிருவேன்னு அலப்புறாங்களே யக்கோவ் தேம்ஸ் ல மொளங்கா அளவுலாவது தண்ணி ஓடுமா??????????
ReplyDeletemru September 13, 2015 at 5:38 PM
Deleteவாங்கோ முறுக்கு / முருகு / mru, வணக்கம்.
//புதுமுகங்கள் அறிமுகம் செய்த விதம் சூப்பரு.அதிராவங்க தேம்ஸுக்கு போயிருவேன்னு அலப்புறாங்களே யக்கோவ் தேம்ஸ் ல மொளங்கா அளவுலாவது தண்ணி ஓடுமா??????????//
கழுத்தளவு தண்ணி இருக்குமோ என்னவோ, நாம் அங்குபோய்த் தலைகீழாக நின்றால் :)))))
மொதகவே வந்துபிட்டேன் போலலாகீது.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள் நன்றிகள் சொன்னவிதம் புதுமை அருமை.
ReplyDeleteகுட்டிஸ் இரட்டை என்றால் அது கிளப்பிடும் பட்டை..சந்தோஷம்...ஆனா 24 x 7 டூட்டி பாக்கணும்கோ...ஒவ்வொருத்தர் டேஸ்டுக்கும் தகுந்த மாதிரி கிஃப்ட் எங்கேதான் புடிக்கிறீங்களோ??
ReplyDelete:)
ReplyDeleteஹா ஹா ஹா கோபு அண்ணன் கொடுத்த லிங்கைப் பிடிச்ச பிடியில் இங்கு வந்து தொப்பெனக் குதிச்சுப் படிச்சேன் மீண்டும், நீண்ட காலத்துக்குப் பின் படிக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கு.... இதுக்காகத்தான் நானும் புளொக் எழுத ஆரம்பித்ததே... பின்னூட்டங்கள் இல்லாவிட்டாலும் இது ஒரு டயறி போல இருக்கும்.
ReplyDelete//athira December 21, 2016 at 12:48 PM
Deleteவாங்கோ .... ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரடி அதிரா, வணக்கம்.
ஆஹா இதோ http://engalblog.blogspot.com/2016/12/blog-post_20.html இங்கிருந்து இங்கு வந்துள்ளீர்களோ ! மிக்க மகிழ்ச்சி :)
//ஹா ஹா ஹா கோபு அண்ணன் கொடுத்த லிங்கைப் பிடிச்ச பிடியில் இங்கு வந்து தொப்பெனக் குதிச்சுப் படிச்சேன்.//
அச்சச்சோ ! தொப்பெனக் குதித்ததில் ஏதேனும் படக்கூடாத இடத்தில் உங்களுக்கு அடி பட்டிருக்குமோ என்ற கவலை எனக்கு இப்போது ஏற்பட்டு விட்டது. :)
//மீண்டும், நீண்ட காலத்துக்குப் பின் படிக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கு....//
நீண்ட நாட்களுக்குப்பின் உங்களை இங்கு பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே.
அந்த இரட்டைக்குழந்தைகளுக்கும் இப்போது மூன்று வயது முடிந்து மூன்று மாதங்களும் ஆகியிருக்குமே. அதனால் இப்போது வேறு ஏதேனும் விசேஷம் உண்டா? :)))))
//இதுக்காகத்தான் நானும் புளொக் எழுத ஆரம்பித்ததே... பின்னூட்டங்கள் இல்லாவிட்டாலும் இது ஒரு டயறி போல இருக்கும்.//
ஆமாம். நீங்கள் சொல்வது மிகவும் சரியே. உங்களைப் போன்றவர்கள் இப்போது பதிவுலகம் பக்கமே வராததால் நானும் புதுப்பதிவுகள் ஏதும் தருவதே இல்லை. பெரும்பாலும் நிறுத்திக்கொண்டே விட்டேன்.
தங்களின் மீண்டும் வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு அண்ணன்
எவ்வளவு சுவாரசியமான கும்மி?! இன்னமும் புதுப்பொலிவுடன் இருக்கிறது
ReplyDeleteமோகன்ஜி June 7, 2017 at 2:12 PM
Delete//எவ்வளவு சுவாரசியமான கும்மி?! இன்னமும் புதுப்பொலிவுடன் இருக்கிறது.//
இது எங்களுக்குள் 4-5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் கும்மியாகையால், இன்றும் என் பதிவுகளில் நீடித்துக்கொண்டே வருகிறது. :)
//மோகன்ஜிJune 7, 2017 at 2:12 PM
ReplyDeleteஎவ்வளவு சுவாரசியமான கும்மி?! இன்னமும் புதுப்பொலிவுடன் இருக்கிறது///
ஹா ஹா ஹா கும்மிக்கு குறைவேது:).. லிங் பார்த்து திரும்ப வந்து படிச்சேன்ன் .. படிக்க சந்தோசமாகவே இருக்கிறது.. இவை எல்லாம் பொக்கிசமே.. ஆனா இங்கு முதல் பின்னூட்டம் போட்டவ நம்மோடு இல்லையே இப்போ:(.
asha bhosle athira June 13, 2017 at 11:18 PM
Delete//ஆனா இங்கு முதல் பின்னூட்டம் போட்டவ நம்மோடு இல்லையே இப்போ:(.//
:((((((((((((((((((((((((((((((((((((((((((
ஆமாம். அதை நினைக்க நினைக்க எனக்கு எப்போதும் துக்கம் தாங்காமலேயே உள்ளது.
2016-2017 ஆண்டுகளில் சில தவிர்க்க இயலாத பதிவர் சந்திப்புகள் + நூல் மதிப்புரைகள் தவிர நான் வேறு எந்தப் புது பதிவுகளும் தராமல் இருப்பதற்குக் காரணமே
தங்கமான அவர்களின் இந்த திடீர் மறைவு மட்டுமே.
அவர்களைப்போல என் பதிவுகள் அனைத்துக்கும் உடனுக்குடன், சிரத்தையாகவும், நிறையவும் பின்னூட்டம் கொடுத்தவர்கள் வேறு யாருமே கிடையாது.
நினைக்க நினைக்க இன்று என்னால் என் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. :(((((((((((((