About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, September 9, 2013

47] பிறர் நலம் பேணுதல்.

2
ஸ்ரீராமஜயம்
”தான் இன்னொருவரைக்காட்டிலும் உயர்ந்தவன் என்று நினைக்கிறதே பாபம்” என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. 

மஹான்களும் இப்படித்தான் நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள்.

சத்திய இலக்கணம் என்னவென்றால் பிறத்தியார் ஒருவருடைய நலனே நோக்கமாயிருக்க வேண்டும்.  அதற்காக வேறொருவருக்கு கெடுதல் பண்ணி இவர்களுக்கு நன்மை செய்வதாக இருக்கக்கூடாது.  

அதாவது எவருக்கும் கெடுதல் உண்டாக்காததாக இருக்க வேண்டும். சுயலாபம், சுயநலம் கலக்காமல் இருக்க வேண்டும்.

யாருக்கு எதெது நன்மை பண்ணுமோ அதைப் பிரியமாகச் சொல்வதுதான் சத்தியம்.

வரதட்சணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்தும் பழக்கமும் தொலய வேண்டும்.


oooooOoooooகண் தெரியாத பாட்டிக்கு 
மஹாபெரியவாளின் அருள்

பெரியவா திருவிசநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது, இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர் வந்தார். அது தெரிந்த பெரியவா, தன்னிடம் கைங்கர்யம் செய்து வந்த கண்ணனை அழைத்து, "அவருக்கு தங்க இடம் முதலிய ஏற்பாடுகளைச் செய்து கொடு. மேலும் அவர் மிகுந்த ஆசாரம் உடையவர்.  ஆதனால் நீயே ஒரு பலகாரம் செய்து கொடுத்துவிடு” என்றும் கூறினார்.

“நானாகவே அவர் இருக்குமிடம் சென்று தரிஸனம் தருகிறேன். கண் தெரியாத அவர் என்னைத்தேடி இங்கு வர வேண்டாம்” என்றும் தெரிவிக்கச் சொன்னார். 

கண்ணன் அவ்வாறே செய்தார். சிறுது உப்புமாவை கிண்டி அவள் எதிரே வைத்து “சாப்பிடுங்கள்” என்று உபசரித்த கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது. 

அதை நைவேத்தியம் செய்வதுபோல் சுற்றிவிட்டு அந்த அம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார். உடனே அவள் கையில் ஓர் ஸ்ரீசக்ரம் வந்து சேர்ந்தது. மறுபடியும் ஏதோ செய்தார். அது மறைந்து விட்டது. அதைப் பார்த்த கண்ணன், பெரியவாளை அவர் தர்ஸனம் செய்யும்போது தானும் கூடவே இருப்பதென்று முடிவு செய்தார். 

”இவர் என்ன மாயமந்திரங்கள் செய்யப்போகிறாரோ! இவருக்கு ஸ்வாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப்போகிறதோ!”  என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன் காத்திருந்தார், கண்ணன். 

கண்ணன் பெரியவாளிடம் போய், அவர் தரிஸனத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லி, தான் எதிர்பார்க்கும் சந்தர்ப்பம், சீக்கரம் வராதா என ஏங்கினார். 

“ராத்திரி வரேன்னு சொல்லிவிடு” என்று அவரைப்பெரியவா அனுப்பப் பார்த்தார். கண்ணனுக்கு ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாக கழிந்தது. கடைசியில் அவர் எதிர்பார்த்த நேரமும் வந்தது.

இரவு எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம். அங்கொன்றும் இங்கொன்றும் முணுக் முணுக் என்று எரியும் கைவிளக்குகள் ஒளியில், பெரியவா நடந்து வந்து அந்த அம்மா எதிரில் அமர்கிறார்.

“நான் வந்துவிட்டேன்” என்று குரல் கொடுக்கிறார். 

அவளும் நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள்.

“எதற்கு வந்திருக்கிறாய்” என்று வினவுகிறார், எல்லாம் தெரிந்த ஸ்வாமிகள்.

“உங்களுக்குத்தெரியாதா ஸ்வாமீ! எனக்கு இன்னும் சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிஸனம் கிடைக்கவில்லையே! எனக்கு அது தான் வேண்டும். அதற்காகத்தான் வந்தேன்” என்கிறாள்.

’என்ன நடக்கப் போகிறதோ?’ என்று கண்ணன் ஆவலுடன் காத்திருக்க ... பரமாச்சார்யாளோ, “அப்படியா! நீ சிறிது நேரம் தியானம் பண்ணு” என்றார்.

கண்ணனிடம் “நான் ஜாடை காட்டுவேன், அப்போது எல்லா விளக்குகளையும் அணைத்துவிடு” என்று கட்டளை இடுகிறார். 

காலை முதல் அந்த நொடிக்குக் காத்திருந்த கண்ணனுக்குப் பெருத்த ஏமாற்றம். கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே .... என்ன செய்வது? என்று. ஆனால் பெரியவா உத்தரவினால் எதுவுமே செய்ய முடியாதே!

பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டன. அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்து பெரிய கூக்குரல் எழுந்தது.

“நான் ஜோதி தரிஸனம் கண்டேன் ... கண்டேன்!” என்று கூத்தாடினார். 

“போதும் .... போதும்! காமாக்ஷி நிறுத்திவிடு! நிறுத்திவிடு” என்று அலறினாள். 

உடனே பெரியவா விளக்கையெல்லாம் ஏத்தச் சொல்லிவிட்டு , விடுவிடுவென்று நடந்து மறைந்து விட்டார்கள்.

போவதற்கு முன் கண்ணனிடம், “அந்த அம்மாவை ஊருக்கு அனுப்பிவிடு” என்று சொன்னார்.

அந்த அம்மாள் கிளம்பும்முன் கண்ணன் அவரிடம், ”என்ன நடந்தது? ஏன் கத்தினீர்கள்? நீங்களாவது சொல்லி விட்டுப்போவீர்களா?” என்று கெஞ்சினார். 

அவரும் “நான் கேட்ட ஜோதி தரிஸனம் சஹஸ்ராரத்தில் எனக்குக் கிடைத்து விட்டது. அதை இரண்டு நிமிடங்களுக்கு மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச்சொல்லி அலறினேன்” என்றார். 

எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால், இத்தனை எளிதில், ஒருவருக்கு ஜோதி தரிஸனம் காணும்படிச் செய்ய முடியும்? பெரியவா இறைவன்தான் என்று நினைத்தால் மட்டுமே புரியும்! தவிர மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.

எத்தனைப்பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிஸனத்தை ஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப் புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்திற்கு வேறு எப்படி விளக்கம் தர முடியும்?

அவரது அனுக்ரஹத்தால், உயர்ந்த ஒன்றைக் கேட்டுப்பெறுபவர்களே பாக்யசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்.[பகிர்ந்து கொண்டுள்ள ஸ்ரீ. எஸ். கணேச சர்மா என்பவருக்கு என் நன்றிகள்.]


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

49 comments:

 1. அன்பின் வை.கோ

  அருமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் படம் - ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு புதுப் படம் . அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. // யாருக்கு எதெது நன்மை பண்ணுமோ அதைப் பிரியமாகச் சொல்வதுதான் சத்தியம். //

  அன்பின் வை.கோ - உண்மை இதுதான் உண்மை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. மஹா பெரியவர்களைப் பற்றிக் கேட்பதும் சிந்திப்பதும் சுகம் தான்!..

  ReplyDelete
 4. //அவரது அனுக்ரஹத்தால், உயர்ந்த ஒன்றைக் கேட்டுப்பெறுபவர்களே பாக்யசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்.//

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் கருணையைப் பெற்ற பலரில் இவரும் ஒருவர்.

  நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. ஸஹஸ்ராரத்தில் ஜோதியைக் கண்ட ்அந்த அம்மா யாரோ. இப்படியெல்லாம் பக்தி பண்ணினவர்கள் மத்தியில்தான் நாமும் இருக்கிறோம். எவ்வளவு பாக்கியசாலி. எதையெல்லாம் பக்தியினாலே பெற முடியும். இன்னொரு ஜென்மாவிலாவது+கிடைக்கட்டும். மனது உருகி விடுகிறது. பிறருக்கு உதவி மனதினால் எண்ணினால்க்கூட போதும்.
  ஒரு ரயிலில் வந்து மறு ரெயிலில்+ போகும் அளவிற்கு ஜோதிதரிசனம் போதும் என்ற அளவிற்கு.
  எங்காவது அவர்களிருந்தால் தரிசிக்கலாம் போல உள்ளது. உருக்கமான பதிவு. அன்புடன்

  ReplyDelete
 6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ த 1ஸ்ட்டு என வந்தேன்ன்.. அப்பூடி இல்ல:)) சரி முதலிடம் கிடைக்கேல்லையாம் பிறகேன் இப்போ கியூவில இடிபடுவான்ன்ன்.. மீ போட்டுப் பிறகு வாறன்:))..

  ReplyDelete
 7. எவருக்கும் கெடுதல் உண்டாக்காததாக இருக்க வேண்டும். சுயலாபம், சுயநலம் கலக்காமல் இருக்க வேண்டும்.
  நன்று சொன்னீர் ஐயா நன்றி

  ReplyDelete
 8. //அவரது அனுக்ரஹத்தால், உயர்ந்த ஒன்றைக் கேட்டுப்பெறுபவர்களே பாக்யசாலிகள்.// intha anukragam pera antha amma evvalavu punniyam seithirukka vendum?!!

  ReplyDelete
 9. //அவரது அனுக்ரஹத்தால், உயர்ந்த ஒன்றைக் கேட்டுப்பெறுபவர்களே பாக்யசாலிகள்.// intha anukragam pera antha amma evvalavu punniyam seithirukka vendum?!!

  ReplyDelete
 10. எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிகொண்டிருந்தால்
  உன்னை பற்றி சிந்திப்பது எப்போது ?
  தெய்வமே !
  உன்னை பற்றி சிந்தனை செய்யாவிடில்
  உன்னை காண்பது எவ்வாறு கூடும்?

  ReplyDelete
 11. எவருக்கும் கெடுதல் உண்டாக்காததாக இருக்க வேண்டும். சுயலாபம், சுயநலம் கலக்காமல் இருக்க வேண்டும்.//
  அமுத மொழி அமுதம்.

  //அவரது அனுக்ரஹத்தால், உயர்ந்த ஒன்றைக் கேட்டுப்பெறுபவர்களே பாக்யசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்.//

  உண்மை ,எதைகேட்டுப் பெற வேண்டும் என்பது அந்த அம்மாவுக்கு தெரிந்து இருக்கிறது. அவர்கள் பேறு பெற்றவர்கள் தான் அதில் சந்தேகம் இல்லை.
  அருமையான பகிர்வுகளை கொடுக்கும் உங்களுக்கு எங்கள் வணக்கங்கள், நன்றிகள் சார்.

  ReplyDelete
 12. எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால், இத்தனை எளிதில், ஒருவருக்கு ஜோதி தரிஸனம் காணும்படிச் செய்ய முடியும்?
  பெரியவா இறைவன்தான் என்று நினைத்தால் மட்டுமே புரியும்!
  தவிர மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.

  சக்திமிக்க பெரியவாளின் சாதனை குன்றில் இட்ட ஜோதியாக ஜொலிக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 13. எவருக்கும் கெடுதல் உண்டாக்காததாக இருக்க வேண்டும். சுயலாபம், சுயநலம் கலக்காமல் இருக்க வேண்டும்.

  யாருக்கு எதெது நன்மை பண்ணுமோ அதைப் பிரியமாகச் சொல்வதுதான் சத்தியம்.

  வரதட்சணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்தும் பழக்கமும் தொலைய வேண்டும்

  அனுக்ரஹ அமுதமாய் பொழியும் வரிகள்..!!

  ReplyDelete
 14. “நான் கேட்ட ஜோதி தரிஸனம் சஹஸ்ராரத்தில் எனக்குக் கிடைத்து விட்டது. அதை இரண்டு நிமிடங்களுக்கு மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச்சொல்லி அலறினேன்” என்றார்.

  எத்தனை சக்திவாய்ந்த ஸ்ரீவித்யா உபாசகி ..!
  சஹஸ்ராரத்தில் ஜோதி தரிசனமும் பெற்று அனுக்ரஹ அமுதம் வர்ஷிக்கக் கிடைக்கப்பெற்றாரே..!

  ReplyDelete
 15. அவரது அனுக்ரஹத்தால், உயர்ந்த ஒன்றைக் கேட்டுப்பெறுபவர்களே பாக்யசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்.

  கற்பக விருட்சத்தின் நிழலில் அற்பமானவற்றைக் கேட்காமல்
  உயர்ந்த அமுதத்தைக்கேட்டுப்பெற்ற பாக்யசாலி...!

  ReplyDelete
 16. Aha.......
  No wards to express.
  viji

  ReplyDelete

 17. நல்ல ஓர் பதிவு. பகிர்வுக்கு நன்றி கோபு சார். கண் தெரியாத மாது ஸஹஸ்ராரத்தில் ஜோதி --- அது என்ன என்று விளங்கவில்லை------------ ( காண.?) உணர விளக்குகள் ஏன் அணைக்கப்படவேண்டும்.எனக்கு இதன் தாத்பரியம் தெரியவில்லை. அந்த மாது ஏதோ செய்து ஸ்ரீசக்கரம் வரவழைத்ததுபோல் , அவரினும் சக்தி மிக்கவர் பெரியவர் என்று உணர்த்தவா இந்த நாடகம். மனதில் எழுந்த கேள்விகள் கருத்தாய்ப் பதிவிட்டு விட்டேன். இதனால் பெரியவரை நான் குறைத்து எண்ணுவதாக நினைக்கக் கூடாது. நன்றி.

  ReplyDelete
 18. நன்றாக சொன்னீர்கள் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 19. அழகாக கூறியிருக்கிறீர்கள்....

  வாழ்த்துகள் அய்யா...

  ReplyDelete
 20. மஹா பெரியவரின் பகிர்வு அருமை...
  அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 21. Hey.....v r blessed and foutunste to read ur articles about His Holinss jagathguru Sankaracharya.....

  ReplyDelete
 22. //வரதட்சணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்தும் பழக்கமும் தொலய வேண்டும்.//

  இது மட்டும் நடந்தால் மிக நல்லது....

  அருமையான அருள்மொழிகள்..... தொடர்கிறேன்.

  ReplyDelete
 23. சஹஸ்ராரம் என்ரலால் என்ன என்று புரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அந்த பாட்டி நிறைய புண்ணியம் செய்திருப்பவர் என்று புரிகிறது.மகா பெரியவரின் அருள் பற்றி படிப்பது மனதிற்கு ஒரு வித நிம்மதியை தருவதாக அமைகிறது. நன்றி வைகோ சார்.

  ReplyDelete
 24. மூத்த பதிவர் GMB அவர்கள் சொன்ன “நல்ல ஓர் பதிவு. பகிர்வுக்கு நன்றி கோபு சார். கண் தெரியாத மாது ஸஹஸ்ராரத்தில் ஜோதி --- அது என்ன என்று விளங்கவில்லை------------ ( காண.?) உணர விளக்குகள் ஏன் அணைக்கப்படவேண்டும்.எனக்கு இதன் தாத்பரியம் தெரியவில்லை. ” என்ற கருத்துரையையும், சகோதரி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் சொன்ன “சஹஸ்ராரம் என்றால் என்ன என்று புரியவில்லை “ என்று வினவியதையும் நானும் இங்கு பதிகின்றேன். கொஞ்சம் விளக்கவும். அதேபோல பாட்டி, சக்கரம் என்று வருகிறது. கொஞ்சம் புரியும்படி விளக்கவும்.

  ReplyDelete
 25. ''...அவரது அனுக்ரஹத்தால், உயர்ந்த ஒன்றைக் கேட்டுப்பெறுபவர்களே பாக்யசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்...''
  ஆச்சரியமான தரிசனம்.
  மிக்க நன்றி பதிவிற்கு.
  இறையருள் பொலியட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 26. மனித உடம்பில் அமைந்துள்ள ஆறு ஆதார சக்கரங்கள் மூலாதரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சஹஸ்ராரம். இந்த சஹஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ் தாமரை சக்கரம் ஒருவரின் சிரசின் தலையின் உச்சியில் அமைந்துள்ளது...

  அந்த அம்மா பேறு பெற்றவள்...''

  ReplyDelete
 27. It feels really grt to read these divine posts.Thanks a lot for sharing

  ReplyDelete
 28. //வரதட்சணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்தும் பழக்கமும் தொலய வேண்டும்.//

  கரீட்டு:) இப்பூடிச் சொல்லிட்டு.. நீங்களே 60 ஆம் கல்யாணத்தை டாம்பீகமா.. நடத்தினா?:))..

  இப்பூடி எழுதிட்டு, நீங்களே.. வீடு கார் வைரம் என ஊரில் இல்லாச் சீதனம் எல்லாம் கொடுத்தா?:))... எப்பூடித் தொலையும்?:)) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)).. ஹா..ஹா..ஹா.. இனியும் கோபு அண்ணன் இண்டநெட்டில டவுறி கொடுப்பாரா?:))... ஹா..ஹா..ஹா.. விடுங்கோ விடுங்கோ வழிவிடுங்கோ குறுக்க நிக்க வாணாம்ம்ம்:)... எங்கே என் முருங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

  ReplyDelete
 29. பாட்டியின் குட்டிச் சம்பவம் மெய் சிலிர்க்க வைக்குது. ஆனா எனக்கொரு சந்தேகம்.. ஏன் அந்தக் காலத்தில மட்டுமே இப்படி அதிசயங்கள் நடந்துது? இப்போ ஏன் இப்படி நடப்பதில்லை...?????

  ReplyDelete
 30. மஹா பெரிய‌வரின் பகிர்வை படிப்பதும் மிகப் பெரிய பாக்கியம்..தொடர்கிறேன் ஐயா!!

  ReplyDelete
 31. எவருக்கும் கெடுதல் உண்டாக்காததாக இருக்க வேண்டும். சுயலாபம், சுயநலம் கலக்காமல் இருக்க வேண்டும்.//
  யாருக்கு எதெது நன்மை பண்ணுமோ அதைப் பிரியமாகச் சொல்வதுதான் சத்தியம்.//

  அற்புதமான அமுதமொழி! ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவாளின் அருமையான படம் ! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 32. ஜோதி தரிசனத்தை கண்ட அந்த அம்மா பேறு பெற்றவள் தான்...

  ReplyDelete
 33. \\சத்திய இலக்கணம் என்னவென்றால் பிறத்தியார் ஒருவருடைய நலனே நோக்கமாயிருக்க வேண்டும். அதற்காக வேறொருவருக்கு கெடுதல் பண்ணி இவர்களுக்கு நன்மை செய்வதாக இருக்கக்கூடாது.\\

  மிகச் சரியான நோக்கு. மிகத் தெளிவான நோக்கம். பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 34. அம்மா பேறுபெற்றவர். அமுத மழையில் நனைகின்றோம்.

  ReplyDelete
 35. //”தான் இன்னொருவரைக்காட்டிலும் உயர்ந்தவன் என்று நினைக்கிறதே பாபம்” என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. //
  எத்தனை பேர்களுக்கு இது புரியும்? புரிந்து உணர்ந்தவர் யார்?

  திரு ரிஷபன் அவர்களின் பின்னூட்டத்தில் சஹஸ்ராரம் என்பதன் பொருள் புரிந்தது.

  ஜோதியை கண்டு பேறு பெற்ற அந்தப் பெண்மணியைப் பற்றித் தெரிந்து கொண்டது எங்கள் பாக்கியம்.

  ReplyDelete
 36. ஊரிலே இல்லை ஒரு வாரமா! :) மெதுவாத் தான் வந்திருக்கேன். அருமையான பதிவு. இது குறித்து ஏற்கெனவே படிச்சும் இருக்கேன். பகிர்வுக்கு நன்றி. :))

  ReplyDelete
 37. ஊரிலே இல்லை ஒரு வாரமா! :) மெதுவாத் தான் வந்திருக்கேன். அருமையான பதிவு. இது குறித்து ஏற்கெனவே படிச்சும் இருக்கேன். பகிர்வுக்கு நன்றி. :))

  ReplyDelete
 38. http://aanmiga-payanam.blogspot.in/2007/05/16.html

  http://aanmiga-payanam.blogspot.in/2007/05/17.html

  மூலாதாரம் முதல் சஹஸ்ராரம் வரை உள்ள சக்கரங்களின் விளக்கத்தை மேற்கண்ட சுட்டியில் நேரமும் விருப்பமும் இருந்தால் வாசிக்கலாம். :)))))) நன்றி.

  ReplyDelete
 39. very lovely and divine post sir, I am sorry Iam kind of held up with several things sir so I not able to visit ur post regularly...

  ReplyDelete
 40. சுயநலமின்றி பிறருக்காக நல்லதுசெய்வது மஹத்தானதுமற்றவரைவிட தாம் உயர்ந்தவர் என நினைப்பதுஅஹம்பாவம் ஸஹஸ்ராகாரத்தில் கண்தெரியாத ஸ்ரீவித்யாஉபாஸகிக்கு ஜோதிதரிஸனம் கிடைக்கசெய்த மஹாபெரியவாளின் தெய்வசக்தி சிலிர்க்கவைக்கிறது நன்றி

  ReplyDelete
 41. லீலைகள் பலவிதம்.

  ReplyDelete
 42. மகா பெரியவாளின் கருணையே கருணை.

  ReplyDelete
 43. கண்தெரியாதவருக்கு ஜோதி தரிசனம் செய்து வைக்க அந்த பரமாச்சாரியரால் மட்டுமே முடியும்

  ReplyDelete
 44. இந்த குருசாமி ஆராருக்கோ இன்னாலாமோ அற்புதங்க பண்ணிகாட்டுறாக

  ReplyDelete
 45. சஹஸ்ராகாரத்தில் ஜோதி தரிசனம் கண்டுவிட்டேன் அதை இரண்டு நிமிடங்களுக்குமேல் பார்க்கமுடியலை. சிறப்பான பக்தி தரிசனம் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலி.

  ReplyDelete
 46. யாரைக்கு எதை எங்கே எப்பொழுது தரவேண்டும் பக்தர்களுக்கு அளிப்பதில் அவருக்கு இணை அவரேதான்..

  ReplyDelete
 47. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (22.06.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/420701395099227/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete