என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... !

2
ஸ்ரீராமஜயம்



தாயன்பைப்போல கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்கும் காண முடியவில்லை. 

பிள்ளை எப்படியிருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலும் கூட, தாயாராகப்பட்டவள், அதைப்பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள்.

’பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்று இதைத்தான் சொல்லுகிறோம். 

‘தேவி அபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்’ என்று அம்பாளிடம் நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக்கேட்டுக்கொள்ளும் துதி ஒன்று இருக்கிறது.

அதிலும் ’துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது’ என்று வருகிறது. 

பரிபூரணமான அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும் அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடியும்.

oooooOooooo

இதை மாற்றினால் போதும்!




[ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அருள் வாக்கு  ]



ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. 

சாஸ்திரத்தில் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யைகளையும் படித்தால் கட்டுப்பெட்டிகளாக இருக்க வேண்டியதேயில்லை. 

அதனால் அவற்றையும் படித்து, மாடர்ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமெண்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.


நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வளவு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலாசாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. 

நமக்கென்று காரியத்தில் பின்னி வைத்திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணினால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படிப்பதில் ஸாரம் எது என்று புரிந்துகொண்டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்சரை வளர்க்க முடியும். 

பிற தேச விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வதற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.

க்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தான் விட்டது. 

அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் STRAIN பண்ணிக் கொண்டாவது (சிரமப்படுத்திக் கொண்டாவது) சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத்தான் வேண்டும். 

நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும்,அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜனமில்லை.

நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம்தான்.

‘பணம்தான் பிரதானம்’ என்பதே அந்த அம்சம். 

பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன.  நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. 

லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

[ Thanks to Amritha Vahini 15.10.2013 ]


oooooOooooo


ஓர் அதிசய நிகழ்வு

ஒருதடவை ஆந்திராவில் மஹாபெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்தசம்பவம் இது. 

வழக்கமான பூஜைநேரம். மஹான் சிறிய காமாட்சி உருவச்சிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்து விட்டார்.


அந்தநேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டுக்கொண்டு 'எனக்குபுடவைகொடு... புடவைகொடு!' என்று கூவினாள், ரகளைசெய்தாள்.



அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல் கந்தலாகக் காட்சியளித்தது. அவளின் இடது முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம் பெரிதாகவே கிழிந்திருந்தது



'பூஜை நேரத்தில் இப்படி ஒரு  தொல்லையா?'  என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை  அங்கே இருந்து விரட்டத் தொடங்கினார்கள்.


அமைதியாக அவளைப் பார்த்த மஹான், அவர்களை பார்த்து கையமர்த்தி விட்டு, ஒரு புடவையைக் கொண்டு வரச்சொல்லி, அதைத் தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார். 

புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டாள்.

அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம். 

அவள் பின்னாலேயே வேகமாகப் போனார். 

ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தினை அந்த சிஷ்யர் கடந்தபோது, அவர் கன்னத்தில் யாரோ 'பளார்' என்று அறைந்தது போலிருந்தது!

அங்கேயே மயங்கி விழுந்தவர், பெரியவா  இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று.


”என்னடா... புடவை என்னாச்சுனு 

பார்க்கப் போனியோ ? 


வந்தவ அம்பாள்டா ... மடையா”



என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தைச் சுட்டிக்காட்டினார் மஹாபெரியவா. 

வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அதே இடத்தில் தான் தேவியின் சிலையில் உடுத்தப் பட்டிருந்த சேலையும் கிழிந்திருந்தது !

தனக்கு என்ன தேவை என்று மஹானிடம் நேரில் கேட்டு பெறும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!


ஸ்ரீமஹாபெரியவா திருவடிகள் சரணம்     

[Thanks to Amritha Vahini  25.10.2013] 

oooooOooooo



FLASH NEWS


மகிழ்ச்சிப் பகிர்வு



மேலும் ஓர் சாதனைக்கிளி



 

திருமதி அம்பாளடியாள் அவர்கள்.



அவர்களின் வலைத்தளத்தில் 

நேற்று முன்தினம் வெற்றிகரமாக தனது 


7 0 0 வது 


கவிதையை வெளியிட்டுள்ளார்கள்.

இணைப்பு இதோ:


இதுவரை  பார்க்காதவர்கள்

அங்கு உடனே சென்று  பார்த்து,

பாராட்டி, வாழ்த்தி மகிழுங்கள். 

 





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

70 கருத்துகள்:

  1. பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை!..

    - இயன்றவரை ஒவ்வொருவரும் இந்த வேத வாக்கினைக் கடை பிடித்தாலே - நாட்டில் குற்றங்கள் குறைந்து விடும்.

    பரமாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி!..

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் வலைத் தளத்தில் என்னையும் கௌரவித்து இட்ட பகிர்வு கண்டு .தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .

    பதிலளிநீக்கு
  3. அம்பாளடியாளுக்கு வாழ்த்துகள். பல பதிவுகளிலும் அவரின் பின்னூட்டங்களைப் பார்த்திருக்கேன். பதிவுக்குப் போனதில்லை. உங்களால் எப்படி எல்லாரோட பதிவுக்கும் போய் அவர்களின் சாதனைகளையும் கணக்கிட முடிகிறது என்பது ஆச்சரியம் தான். எனக்கென்னமோ நேரமே இருப்பதில்லை. :)))) சரியா இருக்கு!

    பதிலளிநீக்கு
  4. ஹிஹிஹி, நான் தான் முதல் போணியோ? இன்னும் போணியாகலை போலிருக்கே! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam October 27, 2013 at 2:19 AM

      //ஹிஹிஹி, நான் தான் முதல் போணியோ? இன்னும் போணியாகலைபோலிருக்கே! :))))

      நீங்க என் பதிவுகளையெல்லாம் சரியாகப்படிப்பதே இல்லை போலிருக்கு.

      இந்த ஒரே ஒரு பதிவை மட்டுமாவது நிறுத்தி நிதானமா தலையோடு கால் படியுங்கோ போதும்.

      http://gopu1949.blogspot.in/2013/10/65-4-4.html

      திருச்சி சாரதாஸிலும், மங்கள் மங்களிலும் வெறும் நாட்களிலேயே கோடிக்கணக்கில் வியாபரம் நடைபெறும். தீபாவளி என்றால் தினமும் பத்து கோடிக்குக் குறையாமல் இருபது கோடி வரைக்கூட வியாபாரம் சக்கை போடு
      போடும்.

      அதுபோலத்தான் என் வலைப்பதிவுலக எழுத்து வியாபாரமும்.

      போணியாகாவிட்டால் கடையை இழுத்துச்சாத்தி விடும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன்.

      ஒரு 25 பேரிலிருந்து 60 பேர்கள் வரை அவர்களாகவே என் பதிவுகளைத் தேடிக்கொண்டு வரவேண்டும்.

      இல்லாதுபோனால் நான் எழுதவே மாட்டேன். இதனால் எனக்கு ஒன்றுமே நஷ்டமே இல்லை.. வாசகர்களுக்கு மட்டுமே பெருத்த நஷ்டமாக்கும்.;)

      யாருமே வருகை தராமல் வெட்டியாக எழுதிக்கொண்டு, தானே பலபெயர்களில் பின்னூட்டம் கொடுத்துக்கொண்டு, தானே பினாமி பெயர்களில் வோட் அளித்துக் கொண்டிருக்கும் மொக்கைப்பதிவர் நான் அல்ல.

      எனக்கு எழுத உற்சாகம் கொடுப்பதெல்லாம் பலரின் பின்னூட்டங்கள் மட்டுமே.

      நான் என்னை எந்தத்திரட்டிகளிலும் இணைத்துக் கொள்ளவில்லை.

      வோட்டுக்காக எழுதுபவனும் அல்ல என்பதை உணரவும்.

      நீங்கள் விளையாட்டுக்காகவே எழுதியிருந்தாலும், நான் இதை சீரியஸ் ஆகவே எல்லோருக்கும் தெரியட்டும் என இங்கு சொல்லியிருக்கிறேன்.

      IN FACT, இன்று வந்திருந்த பின்னூட்டங்களை PUBLISH கொடுக்கவே எனக்கு நேரம் இல்லாமல் பல வேலைகள் இருந்தன. அது தான் உண்மையான காரணம்.

      அன்புடன் VGK


      நீக்கு
    2. நான் விளையாட்டாய்த் தான் கேட்டிருந்தேன். நீங்க சீரியஸாகிட்டீங்க போல. இதே மாதிரி இன்னொருத்தரையும் கேட்டு அவங்களும் தப்பாய் எடுத்துக் கொண்டாங்க. எங்களுக்குள்ளே இது விளையாட்டு. யாரானும் வந்து போணி பண்ணுங்கப்பானு கூப்பிட்டுச் சொல்லிப்போம். அது மாதிரிச் சொல்லிட்டேன். :)))))

      உண்மையில் முதல் பின்னூட்டத்தில் உங்கள் கடின உழைப்பைப் பாராட்டி இருக்கேன். அதைக் கவனிச்சிருக்கக் கூடாதோ! என்னால் எல்லாம் இத்தனை பின்னூட்டங்களுக்குப் பொறுமையா பதில் சொல்லக் கூட முடியாது என்பதே உண்மை! :))))

      நீக்கு
    3. மீசைக்கவிஞன் பாரதியை உங்கள் வரிகளில் கொப்புளிக்கக் கண்டேன்.

      தேடிச் சோறு நிதம் தின்று - பல
      சின்னஞ்சிறு கதைகள் பேசி
      வாடித் துன்பமிக உழன்று - பிறர்
      வாடப் பல செயல்கள் செய்து - நரை
      கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
      கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
      வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
      வீழ்வேன் என்று நினைத்தாயோ?

      - மகாகவி சுப்ரமண்ய பாரதியார்

      நீக்கு
  5. ​படிக்கும் போதே மயிர் கூச்செறிய செய்யும் பதிவு . வாழ்த்துக்கள்.​

    பதிலளிநீக்கு
  6. எந்த புத்தகம் வாங்கினாலும்
    உடனே படித்து முடித்துவிட வேண்டும்

    எப்போதுமே புத்தகம் வாங்கும்போது
    அதை படிக்க வேண்டும் என்ற
    ஆர்வம் அதிகம் இருக்கும்
    எனவே முழுவதும்
    படித்து முடிக்கவேண்டும்.

    படிக்கும்போது (without bias)எந்தவிதமான
    விருப்பு வெறுப்பின்றி படிக்கவேண்டும்.

    அப்போதுதான் அந்த புத்தகத்தை
    எழுதியவரின் கருத்துக்களை
    நாம் உள் வாங்கிக்கொள்ள முடியும்.

    எந்த புத்தகத்தை படித்தாலும் அதில்
    கூறப்பட்டுள்ள நல்ல விஷயங்களை
    நாம் க்ரகித்துக்கொள்ளவேண்டும்

    தினமும் ஒரு சில மணித்துளிகளாவது
    வாங்கிய புத்தகங்களை படிக்க நேரம்
    செலவு செய்யவேண்டும்.

    அதில் ஒரு சிலவற்றையாவது
    நம் வாழ்வில் அனுதினமும்
    நடைமுறைபடுத்த முயற்சிக்க வேண்டும்.

    இல்லாவிடில் பிறர் மெச்ச
    பெரிய புத்தக அலமாரிகள் அமைத்து
    அதில் புத்தகங்களை வாங்கி
    அடுக்குவது பயனற்ற செயல்.

    தேவையற்ற பொழுது போக்கு அம்சங்களிலும்,
    கவைக்குதவாத பேச்சுக்களிலும்,
    பிறர் விஷயங்களை அறிய ஆர்வம்
    காட்டுவதிலும் பொன்னான நேரத்தை
    வீணடிப்பது அறவே தவிர்க்கப்படவேண்டும்.

    அதுவும் ஆன்மீக புத்தகங்களில் கூறப்பட்டுள்ள
    அனைத்து கருத்துக்களையும்
    நாம் பின்பற்ற முடியாது போனாலும்
    பெரியவாவின் அறிவுரைப்படி
    சில அடிப்படைக் கோட்பாடுகளை
    பின்பற்றினால் மட்டுமே நாம்
    இந்த உலகில் மனிதனாக பிறவி
    எடுத்தமைக்கு பொருள் உண்டு.

    நல்ல பதிவு VGK

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வை.கோ

    அருமையான பதிவு - அம்பாளே தனக்கு வேண்டியவற்றை நேரடியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளிடம் கேடு வாங்கிக் கொல்கிறாள் . பிரமாதம் பிரமாதம். அம்பாளின் கருணிஅ மழை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வை.கோ - அம்பாளடியாளை அங்கு சென்று வாழ்த்தி விட்டேன். - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது’ என்று வருகிறது.

    பரிபூரணமான அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும் அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடியும்.

    அம்மாவைப் பற்றி அழகான பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  10. தனது 7 0 0 வது கவிதையை வெளியிட்டுள்ள் சாதனைக்கிளியான அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  11. பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை.

    லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

    பணம் ப்ந்தியிலும் குணம் குப்பையிலும் இருக்கும் நிலையே அனைத்து பின்னடைவுகளுகும் காரணம் ..!

    பதிலளிநீக்கு
  12. ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமெண்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.//

    பழயவற்றை அடித்தளமாக - உறுதியான அஸ்திவாரமாக்கினால் புதுமைகள் வளம் பெறும் ..!

    பதிலளிநீக்கு
  13. பிள்ளை எப்படியிருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலும் கூட, தாயாராகப்பட்டவள், அதைப்பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள்.

    ’பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்று இதைத்தான் சொல்லுகிறோம்.

    வாஸ்தவமான வரிகள்..அமுதமழைக்குப் பராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  14. பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. // சிறப்பான கருத்துக்கள்! பெரியவாளிடம் அம்பாளே வந்து புடவை வாங்கி சென்ற நிகழ்வு அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும்,அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜனமில்லை.// நிதர்சனமான உண்மை! சிறப்பான வாக்கு!

    பதிலளிநீக்கு
  16. அய்யாவிற்கு வணக்கங்கள்..
    சயின்ஸ் படித்தவர்கள் சாத்திரங்களும், சாத்திரங்கள் படிப்பவர்கள் சயின்ஸ் படிக்கும் வேண்டும் என்று கூறிய பெரியாவாளின் பேரறிவாக இருக்கட்டும், அம்பாளே வேண்டியது கேட்டுப் பெற்ற அற்புதமாகட்டும் அனைத்தும் அசர வைக்கிறது. 700 ஆவது கவிதை காணும் சகோதரிக்கு எனது அன்பு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு தங்களுக்கும் நன்றி அய்யா..

    பதிலளிநீக்கு
  17. பரிபூரணமான அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும் அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடியும்//
    உண்மை. அருமையான அமுத மொழி.

    பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை.


    லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.//

    பணம் ஒன்றே வாழ்க்கை என்ற பின் தான் வாழ்க்கை சிக்கல் ஆகி விட்டது . பணத்தைப் பற்றிய சிந்தனையிலேயே நாளும் இருப்பதால் மற்றவைகள் ஒரு பொருட்டாய் தெரிவது இல்லை.
    குரு சொல்வது உண்மை. வாழ்வில் நலம் பெற நல்லவற்றை கடைபிடிப்போம்.

    தனக்கு என்ன தேவை என்று மஹானிடம் நேரில் கேட்டு பெறும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!//
    மெய் சிலிர்க்க வைத்த நிகழ்ச்சி.

    சாதனைக்கிளியான அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துகள்..!
    வாழ்க வளமுடன்.



    பதிலளிநீக்கு
  18. அம்பாளடியாளுக்கு அவர்களுக்கு வாழ்த்துகள்...

    சிறப்பான பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  19. அந்த அம்பாளே உங்கள் மூலம் அம்பாள் அடிகளின் 700 வது கவிதையைப் பார்க்க வைத்தாரோ.?செய்திக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  20. அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துகள்.....

    சிறப்பான அமுத மொழிகள். பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  21. //பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை.

    லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.//
    எனக்கென்றே சொல்வது போலவே இருக்கிறது.

    அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. // உண்மை! அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு



  23. ”என்னடா... புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ ?
    வந்தவ அம்பாள்டா ... மடையா”
    என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தைச் சுட்டிக்காட்டினார் மஹாபெரியவா. // மெய் சிலிர்த்தது! பகிர்விற்கு நன்றீ ஐயா!

    பதிலளிநீக்கு
  24. அதிலும் ’துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது’ என்று வருகிறது
    எதனை பெரிய வார்த்தைகள்..............
    பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை.
    எத்தனை நிதர்சனமான வார்த்தைகள்................
    அம்பலடியாள் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
    தெரிவித்த உங்கள்ளுக்கும் பாராட்டுகள்
    ஆஹாஅம்பாளின் லீலைகள் படிக்க படிக்க உள்ளம் சிலிர்கிறது
    நல்ல பதிர்விற்கு நன்றி.
    விஜி



    பதிலளிநீக்கு
  25. சிறப்பான பகிர்வுகள்.

    700 வது கவிதையை வெளியிட்டுள்ள திருமதி அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. உள்ளக் கமலமது
    உயிர் கொடுத்த பகிர்வுக்கிங்கே
    வண்ண மனத் திரைகள் இட்ட
    வகை வகையான அன்பு
    வாழ்த்துக்களுக்கு என்
    நன்றிகள் பல கோடி உறவுகளே !!...

    பதிலளிநீக்கு
  27. தன்னை வயிற்றில் சுமந்தபோது மசக்கையினால் வாய்க்கு ருசியாக சாப்பிடமுடியாமல் பத்து மாதமும் எத்தனை கஷ்டஙளை அனுபவித்த என் தாயாருக்கு அந்திமகாலத்தில் வாய்க்கு கைப்பிடி அரிசியை த்தான் போடுகிறேன் என்று சங்கரபகவத்பாதாள் மாத்ரு பஞ்சகத்தில் கூறுகிறார் கண்ணில் நீரை வரவழைக்கும் தங்களது பதிவுக்கு நானும் வெறும் நன்றி என்றவார்த்தையைமட்டும் கூறுகிறேன் தன்னை வயிற்றில் சுமந்தபோது மசக்கையினால் வாய்க்கு ருசியாக சாப்பிடமுடியாமல் பத்து மாதமும் எத்தனை கஷ்டஙளை அனுபவித்த என் தாயாருக்கு அந்திமகாலத்தில் வாய்க்கு கைப்பிடி அரிசியை த்தான் போடுகிறேன் என்று சங்கரபகவத்பாதாள் மாத்ரு பஞ்சகத்தில் கூறுகிறார் கண்ணில் நீரை வரவழைக்கும் தங்களது பதிவுக்கு நானும் வெறும் நன்றி என்றவார்த்தையைமட்டும் கூறுகிறேன் தன்னை வயிற்றில் சுமந்தபோது மசக்கையினால் வாய்க்கு ருசியாக சாப்பிடமுடியாமல் பத்து மாதமும் எத்தனை கஷ்டஙளை அனுபவித்த என் தாயாருக்கு அந்திமகாலத்தில் வாய்க்கு கைப்பிடி அரிசியை த்தான் போடுகிறேன் என்று சங்கரபகவத்பாதாள் மாத்ரு பஞ்சகத்தில் கூறுகிறார் கண்ணில் நீரை வரவழைக்கும் தங்களது பதிவுக்கு நானும் வெறும் நன்றி என்றவார்த்தையைமட்டும் கூறுகிறேன் தன்னை வயிற்றில் சுமந்தபோது மசக்கையினால் வாய்க்கு ருசியாக சாப்பிடமுடியாமல் பத்து மாதமும் எத்தனை கஷ்டஙளை அனுபவித்த என் தாயாருக்கு அந்திமகாலத்தில் வாய்க்கு கைப்பிடி அரிசியை த்தான் போடுகிறேன் என்று சங்கரபகவத்பாதாள் மாத்ரு பஞ்சகத்தில் கூறுகிறார் கண்ணில் நீரை வரவழைக்கும் தங்களது பதிவுக்கு நானும் வெறும் நன்றி என்றவார்த்தையைமட்டும் கூறுகிறேன் தன்னை வயிற்றில் சுமந்தபோது மசக்கையினால் வாய்க்கு ருசியாக சாப்பிடமுடியாமல் பத்து மாதமும் எத்தனை கஷ்டஙளை அனுபவித்த என் தாயாருக்கு அந்திமகாலத்தில் வாய்க்கு கைப்பிடி அரிசியை த்தான் போடுகிறேன் என்று சங்கரபகவத்பாதாள் மாத்ரு பஞ்சகத்தில் கூறுகிறார் கண்ணில் நீரை வரவழைக்கும் தங்களது பதிவுக்கு நானும் வெறும் நன்றி என்றவார்த்தையைமட்டும் கூறுகிறேன்

    பதிலளிநீக்கு
  28. சிலிர்க்கும் அமுதமழையில் எங்களைக் குளிப்பாட்டுவதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  29. //பிள்ளை எப்படியிருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலும் கூட, தாயாராகப்பட்டவள், அதைப்பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள்.//
    அர்த்தமுள்ள அற்புதமான வரிகள்!

    பதிலளிநீக்கு
  30. Sundaresan Gangadharan has left a new comment on the post "71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... !":

    //தன்னை வயிற்றில் சுமந்தபோது, மசக்கையினால் வாய்க்கு ருசியாக சாப்பிட முடியாமல், பத்து மாதமும் எத்தனை கஷ்டங்களை அனுபவித்த என் தாயாருக்கு, அந்திம காலத்தில் வாய்க்கு கைப்பிடி அரிசியைத்தான் போடுகிறேன் என்று சங்கரபகவத்பாதாள் [ஆதி சங்கரர்] மாத்ரு பஞ்சகத்தில் கூறுகிறார்.

    கண்ணில் நீரை வரவழைக்கும் தங்களது பதிவுக்கு நானும் வெறும் நன்றி என்ற வார்த்தையை மட்டும் கூறுகிறேன். //

    Thanks a Lot for your Very Very Valuable Comment Sundar - GOPU

    பதிலளிநீக்கு
  31. தாயிற் சிறந்த கோவில் இல்லை,தந்தைசொல் மிக்க மந்திரமில்லை ...பெரியவரின் அற்புத நிகழ்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா!!

    பதிலளிநீக்கு
  32. அம்பாளடியாள் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  33. உங்கள் பதிவை படித்து மெய் சிலிர்த்துப் போனேன். சென்னை சம்ஸ்கிருத கல்லூரிக்கு மஹா பெரியவர் வந்திருந்த போது இதைப்போன்று ஒரு சம்பவம் நடந்ததாக சொல்லுவார்கள். விவரமனைத்தும் தெரியாது. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
    அதைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்.
    திருமதி அம்பாளடியாள் அவர்களின் 700வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  34. மீண்டும் மீன்டும் டைப்பாகீருக்கு நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருக்கு முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  35. எழுநூறு பதிவுகளை தந்த சகோதரி அம்பாள் அடியாளுக்கு ..வாழ்த்துக்கள்

    Angelin

    பதிலளிநீக்கு
  36. அருமையான சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள்!!!. ஸ்ரீ மஹாபெரியவாள் தொடர்புடைய நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்குவதோடு, சக பதிவர்களை பலமாகப் பாராட்டும் தங்கள் நல்ல உள்ளம் கண்டு மகிழ்கிறேன். தங்களுக்கு எல்லா நலமும் வளமும் நிறைய இறையருட்கருணையை வேண்டுகிறேன்.

    அன்புடன்
    பார்வதி இராமச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  37. சகோதரி அம்பாளடியாள் அவர்களுக்கு ஏற்கனவே அவர்களது 700 ஆவது பதிவிற்கு வாழ்த்து சொல்லி விட்டேன். உங்களோடு மீண்டும் ஒருமுறை வாழ்த்து சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!

    பதிலளிநீக்கு
  38. பணம் ஸம்பாதிப்பதுதான் வாழ்வின் நோக்கம் என்றானபின் ஆசாரங்கள்,வித்யாஞானங்கள் எல்லாம் போய்விட்டது. ஸத்யமான வாக்கு. கடைபிடிக்கிரவர்களையும் மட்டமாக நினைக்கும் மனப்போக்கு.. பரவலாக காணப்பட்டாலும், பண்புள்ளவர்களையும் பார்க்க முடிகிறது.
    தாயன்பு,இதற்கு ஈடுஇணை உண்டா. துஷ்ட அம்மா கிடையாது.
    எல்லாம் மனதில் பதியவேண்டிய விஷயங்கள்.
    அமுத மொழிகள் அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  39. அம்பாள் அடியாள் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..அன்புடன்

    பதிலளிநீக்கு
  40. மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய தகவல் ஐயா .நிட்சயமாக நான்
    உங்கள் விருப்பத்திற்கு சம்மதிக்கின்றேன் .ஆனால் இப்போது
    நேரப் பற்றாக் குறை அதிகம் இருப்பதால் உடனும் சம்மதம் என்று சொல்ல முடியவில்லை .இதற்காக வருத்தப்பட வேண்டாம் .நீங்கள் ஆசைப் பட்டது போல் இப் பொறுப்பினை விரைவில் ஏற்றுக் கொண்டு மிகவும் சிறப்பான முறையில்
    பணியாற்றுவேன் .மிக்க நன்றி ஐயா என் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பு கலந்த நம்பிக்கைக்கு .

    பதிலளிநீக்கு
  41. மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  42. ஆண்டவனே நேரில் வந்தால் கூட
    அதனை ஊனக் கண் கண்டோர்
    காண முடியுமா என்ன ?
    அதற்கு மகாப்பெரியவர்களைப் போன்ற
    ஞானக் கண் உடையவர்களால்
    மட்டும்தானே சாத்தியம்
    மெய்சிலிர்க்கச் செய்யும் பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  43. அம்பாள் தனக்கு தேவையானதை கேட்டு பெற்ற சம்பவம் சிலிர்க்க வைத்தது....

    பதிலளிநீக்கு
  44. நெகிழ்த்தும் பதிவு. தாயன்புக்கு ஈடு என்னதான் உண்டு? தாயின் தேவை என்னவென்பதை தாயின்பால் பிரேமையுள்ள பிள்ளையால்தான் அறிய இயலும். இங்கே இந்தப் பிள்ளையும் அறிந்துள்ளது. அற்புதமான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  45. தாயின் மகத்துவம் சொல்லில் அடங்கமுடியாதது அற்புதமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  46. கிளிந்த பட்டுப் புடவைக்கு புதுப்புடவை கேட்டு அம்பாள் புறப்பட்டிருக்கிறா, பெரியவாளும் கொடுத்துவிட்டா.. நாம் கேட்டால் கிடைக்குமோ?:))..

    சாதனைக் கிளிக்கு வாழ்த்துச் சொல்லிட்டேன்ன்ன்..

    பதிலளிநீக்கு
  47. தாயின் அன்புக்கு எல்லையேது? லௌகீக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    யார் கேட்கிறார்கள் இதையெல்லாம்?
    பெரியவாளிடம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; அம்பாளுக்கும் கேட்டது கிடைக்கும்! நிதர்சனமான உண்மை.

    அம்பாளடியாளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  48. Nice write up sir, congrats to Mrs. Ambal Adiyal on her 700th poem... Thanks for sharing...

    பதிலளிநீக்கு
  49. லீலைகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  50. பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை!..


    அம்பாள் தனக்கு தேவையானதை கேட்டு பெற்ற சம்பவம் சிலிர்க்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  51. கயாவில் பிண்டம் போடும் போது ஒரு அரை மணி நேரம் அம்மாவைப் பற்றி சொல்லி, சொல்லி (உன் வயிற்றில் இருந்த போது என்னவெல்லாம் செய்தோம், வெளியே வந்த பின் அம்மாவை எப்படி எல்லாம் படுத்தினோம்) பிண்டம் வைக்கும்போது அழாத ஆண் மகனே இருக்க மாட்டான்.

    அம்மாவுக்கு இணை அவள் ஒருத்தி மட்டுமே தான்.

    தான் வந்து ஒவ்வொரு மனிதனையும் பிரத்யேகமாக கவனிக்க முடியாது என்பதால் தான் அந்த இறைவனே அம்மவைப் படைத்தானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 15, 2015 at 9:14 AM

      வாங்கோ, ஜெயா, வணக்கம்மா.

      //கயாவில் பிண்டம் போடும் போது ஒரு அரை மணி நேரம் அம்மாவைப் பற்றி சொல்லி, சொல்லி (உன் வயிற்றில் இருந்த போது என்னவெல்லாம் செய்தோம், வெளியே வந்த பின் அம்மாவை எப்படி எல்லாம் படுத்தினோம்) பிண்டம் வைக்கும்போது அழாத ஆண் மகனே இருக்க மாட்டான்.//

      ஆமாம் ஜெயா. இது உண்மைதான்.

      சமீபத்தில் தங்களைப்போன்றே என் மீது அலாதி பிரியமுள்ள ஒரு சினேகிதி. எனக்கு அவங்க எழுதியுள்ள கதையைப் படிக்க அனுப்பியிருந்தார்கள். கதையைப் படிக்க எனக்கு மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கதையினில் டிவிஸ்டுகள் ஏராளம். இந்தக்காலப் புதுமைப்பெண்கள் செய்துவரும் புரட்சிகள் தாராளம். :)

      அதில் இந்த கயாவில் பிண்டம் போடும் இடமும் ஓரிடத்தில் கடைசியாக வருகிறது.

      என்றாவது ஒரு நாள் அந்த முழுக்கதையையும் அவர்களின் அனுமதியுடன், என் வலைத்தளத்தினில் ஓர் தொடராக வெளியிடவும் நான் என் மனதில் நினைத்துள்ளேன்.

      அதற்கான படங்களை நானே என் கையால் வரைந்து வெளியிடவும் ஆசையாக உள்ளது.

      பார்ப்போம் .... பிராப்தம் எப்படியோ.

      //அம்மாவுக்கு இணை அவள் ஒருத்தி மட்டுமே தான்.
      தான் வந்து ஒவ்வொரு மனிதனையும் பிரத்யேகமாக கவனிக்க முடியாது என்பதால் தான் அந்த இறைவனே அம்மாவைப் படைத்தானோ?//

      அதே ..... அதே ..... சபாபதே ! :))))) [அதிரா to please note this]


      >>>>>

      நீக்கு
  52. //பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை!..//

    நூத்துக்கு நூறு உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 15, 2015 at 9:15 AM


      **பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை!..**

      //நூத்துக்கு நூறு உண்மை.//

      மிகவும் சந்தோஷம், ஜெயா. :)

      நீக்கு
  53. // ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தினை அந்த சிஷ்யர் கடந்தபோது, அவர் கன்னத்தில் யாரோ 'பளார்' என்று அறைந்தது போலிருந்தது!
    அங்கேயே மயங்கி விழுந்தவர், பெரியவா இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று.//

    நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கப்படாதுன்னு சொன்னா கேட்டா தானே. அவளைப் போய் சோதிக்கலாமா? அதான் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 15, 2015 at 9:17 AM

      **ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தினை அந்த சிஷ்யர் கடந்தபோது, அவர் கன்னத்தில் யாரோ 'பளார்' என்று அறைந்தது போலிருந்தது! அங்கேயே மயங்கி விழுந்தவர், பெரியவா இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று.**

      //நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கப்படாதுன்னு சொன்னா கேட்டா தானே. அவளைப் போய் சோதிக்கலாமா? அதான் வாங்கிக் கட்டிக் கொண்டார்.//

      :))))) அழகாகச் சொல்லியுள்ளீர்கள் :))))) மிக்க நன்றி, ஜெ.

      நீக்கு
  54. அம்பாளடியாள வாழ்த்தலாம்ன்னு பார்த்தா....

    வருஷம் ரெண்டு முடியப் போறதே. இப்ப அந்தப் பொண்ணு எத்தன நூறுகளைத் தாண்டி பதிவு போட்டிருக்கோ. அதுக்கும் சேர்த்து இல்ல வாழ்த்தணும்.

    பதிலளிநீக்கு
  55. Jayanthi Jaya September 15, 2015 at 9:18 AM

    //அம்பாளடியாள வாழ்த்தலாம்ன்னு பார்த்தா.... வருஷம் ரெண்டு முடியப் போறதே. இப்ப அந்தப் பொண்ணு எத்தன நூறுகளைத் தாண்டி பதிவு போட்டிருக்கோ. அதுக்கும் சேர்த்து இல்ல வாழ்த்தணும்.//

    ஆமாம் இதுவரை 941 பதிவுகள் போட்டு ஆயிரத்தை எட்டிப்பிடிக்க எம்பிக்கொண்டுள்ளது, அந்தப்பொண்ணு.

    இதற்கிடையில் ப்ரான்ஸ் கம்பன் கழகத்திடமிருந்து ஏதோ ஒரு மாபெரும் விருதுகூட இந்தப்பொண்ணு பெற்றுள்ளதாக உலகெங்கும் ஒரே பேச்சாக உள்ளது.

    மொத்தத்தில் பெரிய இடம். நமக்கு எதற்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ் .. கண்டுக்காம விட்டுடுவோம். அதுதான் நல்லது.

    தங்களின் அன்பான நான்குமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  56. அம்பாள் அடியாள் அவங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  57. அம்பாள் அடியாள் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    அம்மாவின் பெருமை ஒவ்வொருவரும் படித்துதெரிந்து கொள்ளவேண்டிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  58. // பிள்ளை எப்படியிருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலும் கூட, தாயாராகப்பட்டவள், அதைப்பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள்.// பத்து மாதம் சுமந்து பெற்றவளின் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  59. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (18.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=446210332548333

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  60. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், மீண்டும் ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (19.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/447060249130008/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு