About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, October 31, 2013

73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் !

2
ஸ்ரீராமஜயம்



பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின் சுத்தி செய்யும் சக்தியைத் தெரிந்துகொண்ட பெருமை ஒரு பக்கமிருக்கட்டும்.

ஆனால் இந்த ஐந்தையும் ‘பஞ்சகவ்யம்’ [”கோ” என்றால் பசு. ’கவ்யம்’ என்றால் பசு ஸம்பந்தமுள்ளது. ‘பஞ்ச கவ்யம்; என்பது பசு ஸம்பந்தப்பட்ட ஐந்து ] என்று சேர்த்து ஒருவரைச் சாப்பிடச் சொல்லி அவரை சுத்தி பண்ணுகிற போது, அது சரீர சுத்திக்காக மட்டுமில்லை; ஆத்ம சுத்திக்காகவே.

பாபத்தைப் போக்கிப் புண்ணியத்தை உண்டு பண்ணுகிற சக்தியும் பஞ்ச கவ்யத்துக்கு இருக்கிறது. 

மந்திரபூர்வமாக அதை ப்ராசனம் பண்ணுவதால் [உட்கொள்வதால்] இந்த சக்தி இன்னமும் விருத்தியாகிறது. 



’மங்களம்’ என்றால் மங்களம்தான். ஆனந்தமாக ..... அதிலேயே ஒரு கம்பீரத்தோடு, தூய்மையோடு, ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதால் அது ’மங்களம்.’

எங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசுள்ள சந்தோஷத்தை விருத்தி பண்ணவேண்டும். 

நாமும் மங்களமாக இருந்துகொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும். 


oooooOooooo


தீபாவளிக்கும் 
பெரியவாளுக்கும் 
என்ன  சம்பந்தம்?

 [Mr. Sivan Krishnan]

ரொம்ப  நெருங்கிய  சம்பந்தம்  என்றே சொல்லலாம்.

தீபாவளி பொழுது விடியலில்  கொண்டாடுகிறோம்.    

வாழ்க்கை  நன்றாக  விடிய  கொண்டாடுகிறோம்.

தீபாவளி சந்தோஷம் தரும்  ஒரு  பண்டிகை.   

பெரியவாளின்  நினைப்பே  குதூகலத்தை  உண்டாக்கும்  ஒரு செயல்.

தீபாவளிக்கு  புதுசு நம் மேலே  ஏறிக்கொள்கிறது.   

பெரியவாளின்  எண்ணமே  நம்  உள்ளத்தை  புதுசு பண்ணி விடுகிறது.

தீபாவளிக்கு  படார்  படார்  பட்டாசு உண்டு.  

பெரியவாளிடம்  படார்  படார்  என்று  புதுப்புது அர்த்தங்கள், விவரங்கள்  நமக்கு கிடைக்கும்.

தீபாவளி  என்றாலே  வண்ண  வண்ண  ஒளி. 

பெரியவா படமே  நமக்கு  ஆன்ம ஒளி  தரும்  ஒரு  சாதனம்.

தீபாவளி இனிப்பு  ரொம்ப தின்றால்  திகட்டும்.   

பெரியவா  உபதேசங்கள்  எவ்வளவு நாம் கேட்டாலும்  இனிக்கும், ஆனால் திகட்டாது . 

[ Thanks to Mr. Sivan Krishnan ]

oooooOooooo



பாமரன் கேள்வியும் 

பரமாச்சாரியார் பதிலும்! 


கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமஹாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது…


கீதையின் காலத்தில் சாஸ்திரப் பிரமாணம் என்பது சரி; ஆனால் இப்போது சாஸ்திரப் பிரகாரம் தேடினால் பலதும் பகுத்தறிவுக்கு ஒட்டமாட்டேன் என்கிறது. 

சாஸ்திரம் என்பது வழக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நியதி என்று கொண்டாலும், அதில் காலமாற்றத்தால் ஏற்பட்ட கசடுகளும் சேர்ந்திருக்குமே! அதனால் பழமையான வேதங்களையே கர்மத்திற்கு பிரதானமாகக் கொள்ளவேணும் என்கிறார்கள். 

அக்காலத்தில் கர்மா இருந்தது; ஆனால் இன்றைக்கு பெருகிவிட்டிருக்கிற ஜனங்களிடையே பஜனை சம்ப்ரதாயம் இல்லை; “பஜனை செய்தே உய்யலாம்’ என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால், கர்மாவின் மீதான பிடிப்பு தளர்ந்து விடுகிறதே! 

தேவை கர்மாவா? பக்தியா? பகவான் யாரிடம் முதலில் தன் பார்வையைப் பதிப்பான்?

வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக அநுஷ்டிப்பவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை, உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். 

இவர்கள் கர்ம அநுஷ்டானம் செய்வோரைப் பார்த்து, “இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம்? கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன்?” என்று தாழ்வாக எண்ணுகிறார்கள். 

கர்ம மார்க்கக்காரர்களோ இவர்களைப் பார்த்து, “செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை; ஆடம்பரமாக மணி அடித்துக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா?’ என்று நினைக்கிறார்கள்.

ஆச்சாரியாள் [ஆதி சங்கரர்] ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால், கர்மத்தையே ஈசுவர பூஜையாகச் செய்யவேண்டும் என்று தெரிகிறது. 

கர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈசுவரனையும் மறக்காமல் இருக்க வேண்டும். கர்மங்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்யவேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈசுவரனிடம் வைத்து அவனுக்குக் கர்மபலனை அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை.

சாமானிய ஜீவர்கள் ஒரு கர்மம் என்று இறங்கிவிட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே தனித்தனியாகக் கர்மாவும் வேண்டும்; பக்தியும் வேண்டும். 

நாளடைவில் கர்மத்தையே பூஜையாகச் செய்கிற உத்தமநிலை சித்திக்கும்; அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும் ஆகலாம்; 

அல்லது பூஜை, கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம் என்கிற சமாதிநிலை ஏற்படலாம்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால் கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா? பூஜை செய்கிறவனிடம் பிரீதி அடைவானா? 

ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்து கொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் அன்போ பாசமோ காட்டாமல், வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும்.

பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். 

ஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான். 

தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். 

ஆனாலும் அந்தக் கர்ம மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாமல், “வெட்டு வெட்டு’ என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவத் பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது.


[ Thanks to Sage of Kanchi 14.09.2013 ]

oooooOooooo

இன்று 31.10.2013 வியாழக்கிழமை 
“கோ வத்ஸ துவாதஸி” 
என்ற மிகச்சிறப்பான நாள்.

அதுபோல வரும் 10.12.2013 செவ்வாய்க்கிழமை
”கோஷ்டாஷ்டமீ” என்ற சிறப்பான நாள்.

இவை இரண்டையும் பற்றி 
தெளிவாக அறிய விரும்புவோர் 
தயவுசெய்து என்னுடைய 
இந்தப்பதிவினைப்பாருங்கள்.

தலைப்பு: “ஸ்வீட் சிக்ஸ்டீன்”
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html

150க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களைப்பெற்ற

மிகச்சிறப்பான வெற்றிப்பதிவு மட்டுமல்ல,
மிகவும் சுவாரஸ்யமான பதிவும் கூட !

காணத்தவறாதீர்கள்.

கருத்தளிக்க மறவாதீர்கள்.


oooooOooooo





அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்.



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

64 comments:

  1. மங்களம்’ என்றால் மங்களம்தான். ஆனந்தமாக ..... அதிலேயே ஒரு கம்பீரத்தோடு, தூய்மையோடு, ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதால் அது ’மங்களம்.’

    எங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசுள்ள சந்தோஷத்தை விருத்தி பண்ணவேண்டும்.

    நாமும் மங்களமாக இருந்துகொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும்.

    மங்களகரமான இனிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. ஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.

    தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான்.

    சிவனிடமே ஏமாற்று வித்தை செல்லுபடியாகுமா என்ன ???

    ReplyDelete
  3. தீபாவளி என்றாலே வண்ண வண்ண ஒளி.

    பெரியவா படமே நமக்கு ஆன்ம ஒளி தரும் ஒரு சாதனம்.

    தீபாவளி இனிப்பு ரொம்ப தின்றால் திகட்டும்.

    பெரியவா உபதேசங்கள் எவ்வளவு நாம் கேட்டாலும் இனிக்கும், ஆனால் திகட்டாது .

    திகட்டாத உபதேசம் அருளும் அருமையான பகிர்வுகள்..

    ReplyDelete
  4. கர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈசுவரனையும் மறக்காமல் இருக்க வேண்டும். கர்மங்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்யவேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈசுவரனிடம் வைத்து அவனுக்குக் கர்மபலனை அர்ப்பணம் செய்வது

    ஆழ்ந்த பொருட் செறிவுடன் ஆத்மார்த்தமான பகிர்வுகள்..!

    ReplyDelete
  5. பஞ்சகவ்யம் விளக்கம் அருமை...

    Mr. Sivan Krishnan அவர்களுக்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    // வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக அநுஷ்டிப்பவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள்... //

    கண்டிப்பாக இங்கும் உண்டு ஐயா...

    இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. உங்களின் கருத்துரைக்காக : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
  7. அன்புள்ள ஐயா ...
    உங்களுக்குள் உங்கள் அன்பு உறவுகள் அனைவருக்கும் . என் உள்ளம் கனிந்த advance தீபாவளி வாழ்த்துக்கள் ...

    முந்தி வாழ்த்து சொல்வதில் ஒரு மகிழ்ச்சி .நன்றி

    ReplyDelete
  8. பூஜை கர்மம் விளக்கம் அருமை

    ReplyDelete
  9. பகவான் தான் விதித்த கர்மங்களைச் செய்பவர்களிடமே ப்ரீதி கொள்வார்.அதற்காக பக்தி செய்யாமலிருக்கக் கூடாது. இரண்டும் அவசியம் என்பதை எவ்வளவு அழகாக விளக்குகிரது பரமாசாரியாரின் பதில்கள். அனுபவித்துப் படித்தேன். அன்ுடன்

    ReplyDelete
  10. இனிய வணக்கம் அய்யா..
    பஞ்சகவ்யம் பற்றிய விளக்கம் அருமை..
    ==
    நிறைமங்களம் எங்கும் தங்கட்டும்..
    நம்மையும் தூய்மையாக வைத்துக்கொண்டு
    பிறரையும் ஆனதமாக வைத்திருக்க விழைவோம்..
    ==
    பாமரனின் கேள்வியும்
    ஆச்சாரியாரின் பதிலும்.. அருமை...

    ReplyDelete
  11. கர்மா பக்தி பற்றிய பரமாச்சாரியாரின் விளக்கம் ஆஹா,அற்புதமான ஆன்மிக விருந்து.

    ReplyDelete
  12. ...தங்கள் பதிவுகள் பதிவுலகில் பவித்திரமான சேவை!

    ReplyDelete
  13. well explained about panchakavyam. Our parents or dear ones scold us when we go wrong. But it may sound bitter to us while someone praise us for the same thing (a sweet coated poison). well explained. Thanks for sharing.

    ReplyDelete
  14. கர்மா. ஸ்தோத்திரம் என்று படிக்கும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. நாரதர் மஹாவிஷ்ணுவிடம் தானே அதிக பக்தி இருப்பவர் என்று நினைக்கிறார், விஷ்ணு அவரிடம் கையில் ஒரு தீபத்துடன் அதை அணையாமல் பாது காத்து உலகைச் சுற்றிவரச் சொல்கிறார். தீபம் அணையாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்திய நாரதர் பகவான் பெயரைக் கூற மறந்து விடுகிறார். விஷ்ணு அது பற்றிக் கேட்டபோது விள்க்கு தீபம் அணையாமல் காப்பதில் கவனம் சென்றதால் பகவானை ஸ்மரிக்க முடியாமல் போயிற்று என்றார். விஷ்ணு ஒரு குடியானவனைக் காட்டி அவன் தன் கடமைகளைச் செவ்வனே செய்த பிறகு இரவு படுக்கப் போகும் முன் ஆண்டவனை நினைத்துத் தொழுவதை காட்டி அவனே சிறந்த பக்தன் என்கிறார் என்பது போல் முடியும் கதை அது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. பூர்வ மீமாம்சை எனச் சொல்லப்படுகின்ற, வேதத்தின் கர்மமார்க்கத்தைப் பற்றிய விவரணையும் அதை அத்வைதம் எப்படி அடித்துத் தள்ளுகிறது என்பதையும் ஸ்ரீபெரியவா திருவாக்கினால் அறிந்து இன்புற்றேன். அருமையான உட்பொருள் உள்ள கட்டுரை.. தங்கள் சேவை போற்றத்தக்கது.

    அனைவருக்கும் என் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. பஞ்சகவ்யம் குறித்த விவரங்களைத் தந்தமைக்கு நன்றி!
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. பஞ்ச கவ்யம் குறித்தும் கர்மானுஷ்டானங்கள் குறித்தும் பெரியவாளின் கருத்துக்கள் அருமை! பகிர்வினுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  18. ’மங்களம்’ என்றால் மங்களம்தான். ஆனந்தமாக ..... அதிலேயே ஒரு கம்பீரத்தோடு, தூய்மையோடு, ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதால் அது ’மங்களம்.’

    எங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசுள்ள சந்தோஷத்தை விருத்தி பண்ணவேண்டும்.

    நாமும் மங்களமாக இருந்துகொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும். //
    அமிர்தமான அமுத மொழி. மிகவும் தேவையான நல்ல அமுத மொழி.
    பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    தீபாவளிக்கும்
    பெரியவாளுக்கும்
    என்ன சம்பந்தம்?//
    சம்பந்தம் விளக்கம் மிக அருமை .

    பெரியவா உபதேசங்கள் எவ்வளவு நாம் கேட்டாலும் இனிக்கும், ஆனால் திகட்டாது .//
    ஆம், உண்மை. திகட்டவே இல்லை! நீங்கள் வழங்கும் பெரியவா அவர்களின் உபதேசங்கள்.

    ஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.

    தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். //
    எவ்வளவு சத்தியமான உண்மை.
    கடமையை செய்யாமல் பலனை எதிர்ப்பார்க்க கூடது அல்லவா?
    மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய அமுத மொழி.

    அருமையான அழகான படங்கள், பகிர்வு மிக அருமை.
    வாழ்த்துக்கள்.
    நன்றிகள்.





    ReplyDelete
  19. இன்று 31.10.2013 வியாழக்கிழமை
    “கோ வத்ஸ துவாதஸி”
    என்ற மிகச்சிறப்பான நாள்.

    சிறப்பான நாளை சிறப்பித்து நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  20. இன்று 31.10.2013 வியாழக்கிழமை
    “கோ வத்ஸ துவாதஸி”
    என்ற மிகச்சிறப்பான நாள்.

    அதுபோல வரும் 10.12.2013 செவ்வாய்க்கிழமை
    ”கோஷ்டாஷ்டமீ” என்ற சிறப்பான நாள்.//

    சிறப்பான நாள் பற்றி தெரிந்து கொண்டேன்.
    சிறப்பான நாட்களை எல்லோருக்கும் தெரியபடுத்துவது மிக சிறந்த பணி.
    வாழ்த்துக்கள்
    நன்றி.

    ReplyDelete
  21. ‘பஞ்சகவ்யம்’ விளக்கம் அறிந்துகொண்டோம்.

    கர்மா,பக்தி விளக்கம் அருமை.

    ReplyDelete
  22. தீபாவளி வாழ்த்துக்கு மிக்கநன்றி.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீப ஒளிதிருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  24. கர்மா,பக்தி விளக்கம் அற்புதம்.மகத்துவம் வாய்ந்த நாட்களை எல்லோருக்கும் அறிவித்தது அருமை! மஹாபெரியவா மத்தாப்புடன் சிரித்தது உள்ளம் கவர்ந்தது!பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  25. பஞ்ச கவ்யம் குறித்தது ஆகட்டும், கர்மானுஷ்டானங்கள் குறித்தது ஆகட்டும் இரண்டும் பெரியவாளின் வாய் மொழியில் மகத்துவமாய் வந்தமை சிறப்பு. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி!
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    Reply

    ReplyDelete
  26. பஞ்ச கவ்யத்தின் மகிமை அறிந்து கொண்டேன்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமினிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. சிறப்பான தகவல்களுடன் கூடிய அருமையான பகிர்வுக்கு மிக்க
    நன்றி ஐயா .அனைவருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    உரித்தாகட்டும் ....

    ReplyDelete
  28. தீபாவளிக்கு புதுசெல்லாம் நம்மேல் ஏறிக்கொள்கிறது... ஹா..ஹா..ஹா.. உண்மை அதுவல்ல.. அதுவா ஏறுவதில்லை:) நாம்தான் ஏற்றிக் கொள்கிறோம்ம்:)..

    எல்லா இடத்திலும் ஒருவாரம் முன்பே தீபாவளிக் கொண்டாட்டம் ஆரம்பமாகிட்டுதே:)..

    உங்களுக்கும் மற்றும் வீட்டில் ஆன்ரி.. குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோபு அண்ணன்.. போன வருடம் வாழ்த்தியதாக நினைவு. அதுக்குள் வந்து விட்டதே அடுத்த தீபாவளி...

    ReplyDelete
  29. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. ஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.

    தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான்.

    இறைவனுக்கு யாவரும் குழந்தைகள் ஆனாலும் இன்னும் நெருக்கமானவர்கள் யாரென்று புரிய வைத்த அருளுரைக்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  31. பஞ்சகவ்யம் சாப்பிட மந்திரம்
    யத்வ கஸ்தி கதம் பாபம் தேகே திஷ்டதி மாமஹே ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ச தஹத்வக்னி ரிவேந்தனம் மஹா ஸங்கல்பம் செய்தவுடன் இந்த மந்திரத்தை சொல்லி பஞ்சகவ்யத்தை அருந்தி பின் நதிகளில் ஸ்னானம் செய்தால் ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தம் ஆகி ஸரீரம் சுத்தமாகிறது என்பது ஐதீகம்

    ReplyDelete
    Replies
    1. Sundaresan Gangadharan November 1, 2013 at 2:45 AM

      வா ... சுந்தர் .... வணக்கம்.

      //பஞ்சகவ்யம் சாப்பிட மந்திரம்:

      “யத்வ கஸ்தி கதம் பாபம் தேகே திஷ்டதி மாமஹே ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ச தஹத்வக்னி ரிவேந்தனம்”

      மஹா ஸங்கல்பம் செய்தவுடன் இந்த மந்திரத்தை சொல்லி பஞ்சகவ்யத்தை அருந்தி, பின் நதிகளில் ஸ்நானம் செய்தால் ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தம் ஆகி ஸரீரம் சுத்தமாகிறது என்பது ஐதீகம்.

      மிக்க நன்றி, சுந்தர். இதுபோன்ற மந்திரங்களும் விளக்கங்களும் பலருக்கும் பயன்படக்கூடும்.

      உன் அன்பான வருகையும், அழகான மந்திரமும் அதன் விளக்கங்களும் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. சந்தோஷம்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  32. அதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும் காயேனவாசா ....
    என்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம் நல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும்
    க்ஷேமத்தை அடைகிறோம் நன்றிஅதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும் காயேனவாசா ....
    என்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம் நல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும்
    க்ஷேமத்தை அடைகிறோம் நன்றிஅதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும் காயேனவாசா ....
    என்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம் நல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும்
    க்ஷேமத்தை அடைகிறோம் நன்றிஅதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும் காயேனவாசா ....
    என்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம் நல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும்
    க்ஷேமத்தை அடைகிறோம் நன்றி

    ReplyDelete
  33. //Message from Mr. Sundaresan Gangadharan :

    Sundaresan Gangadharan has left a new comment on your post "73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் !":

    அதேபோல் எந்த ஒரு கர்மா செய்தபின்னும்,

    "காயேனவாசா .... என்ற மந்திரத்தை சொல்லி பூமியில் அர்க்கியம் விடுவது ஈச்வரார்ப்பனமாக ஆகிறது என்பதும் ஐதீஹம்.

    நல்ல விஷயங்களை பகிர்வதால் அனைவரும் க்ஷேமத்தை அடைகிறோம். நன்றி.//

    My Dear Sundar, WELCOME !

    அவ்வபோது இதுபோன்ற மந்திரங்களை முழுவதுமாக எழுதி, இதுபோல விளக்கம் அளிக்கவும். பலருக்கும் பயன்படக்கூடும்.

    உன் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். ஆத்தில் எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  34. பஞ்ச கவ்யம் பற்றிய விவரங்களுக்கு நன்றி.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. இது படிச்சேன், பின்னூட்டம் போட மறந்திருக்கேன். விபரங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  36. பஞ்ச கவ்யம் பற்றிய விளக்கம் மிக நன்று......

    வட மாநிலங்களில் பஞ்சகவ்யத்திற்கு மதிப்பு மிக அதிகம்...... பல கோசாலைகளில் இவை இப்போது விற்கப்படுகிறது!

    ReplyDelete
  37. சிறப்பான தகவல்களுடன் கூடிய நல்ல பகிர்வு. அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  38. கதம்பப் பதிவு.
    பசு, பஞ்சகவ்வியம் எனப் பல விவரங்கள் அறிந்தது மகிழ்வு.
    பாராட்டுகள்
    இன்று தான் நேரம் வந்தது.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  39. வணக்கம்
    ஐயா

    அறிய முடியாத பல விடயங்கள் இந்த பதிவின் மூலம் அறியக்கிடைத்தமைக்கு மிக்க நன்றி...ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  40. அன்பின் வைகோ

    பசு பஞ்ச கவ்வியம் போன்ற தகவல்கள் புதியது- பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  41. பஞ்ச கவ்யம் பற்றிய விளக்கத்திற்க்கு மிக்க நன்றி ஐயா..வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  42. நான் முன்பே இங்கு வந்தேன்.கோ வத்ஸ துவாதஸி பற்றி தெரிந்துகொண்டு சென்று விட்டேன்.
    மீண்டும் வந்துள்ளேன்.
    நன்றிஈ சார்.
    மிக நல்ல பதிவு
    விஜி

    ReplyDelete
  43. தீபாவளி - பெரியவா கம்பாரிசன் ரசித்துப் படித்தேன்.

    பஞ்ச கவ்யத்தைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொண்டேன்; அதற்கான மந்திரங்களையும் கருத்துக்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி

    ReplyDelete
  44. பஞ்சகவ்யத்தின் மகிமையை அறிந்து கொண்டேன். சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  45. Thanks a lot sir for the information about panchakaaviyam, very informative....

    ReplyDelete
  46. பஞ்சகவ்யம் பற்றி இன்றுதான் அறிந்துகொண்டேன். நன்றி வை.கோ.சார்.

    \\ஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான்.

    தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். \\

    கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்னும் கீதோபதேசம் நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  47. கர்மாவை சிரத்தையாகப் பண்ணுகிறவன்தான் கர்மவீரன் என்று போற்றப்படுகிறான்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 அக்டோபர் வரையிலான 34 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      Delete
  48. கர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈசுவரனையும் மறக்காமல் இருக்க வேண்டும். கர்மங்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்யவேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈசுவரனிடம் வைத்து அவனுக்குக் கர்மபலனை அர்ப்பணம் செய்வது

    ReplyDelete
    Replies
    1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 அக்டோபர் வரை முதல் 34 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      Delete
  49. பஞ்ச கவ்யம் -
    முன்பெல்லாம் பிரசவம் முடிந்தபின் பஞ்சகவ்யம் கூட்டிக் கொடுப்பார்கள். இப்ப இதெல்லாம் பின்பற்றுகிறார்களா என்று தெரியவில்லை. வழக்கம் போல் நம் பெரியவர்கள் செய்து வைத்த அருமையான வழக்கங்களை நாம் செய்யாமல் இருக்கக் கற்றுக் கொண்டு விட்டோம்.

    ReplyDelete
  50. திரு சிவன் கிருஷ்ணன் அவர்களின் சிந்தனை அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  51. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 அக்டோபர் மாதம் வரை முதல் 34 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    ReplyDelete
  52. நம்முட வேலய ஒளுங்கா செய்தா அதுவே போதும்லா.

    ReplyDelete
  53. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 அக்டோபர் மாதம் வரை, முதல் 34 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    ReplyDelete
  54. கர்மாவை செய் பலனை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிடு. எத்தனை பேரு கேக்கப்போறா.

    ReplyDelete
  55. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 அக்டோபர் மாதம் முடிய, என்னால் முதல் 34 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  56. இதுவரை நான் பார்த்த தீபாவளிப் படங்களைவிட இந்த மத்தாப்பூ..மிக மிக சிறப்பூ.!!

    ReplyDelete
  57. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    424 out of 750 (56.53%) within
    11 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 அக்டோபர் மாதம் வரை, என்னால் முதல் 34 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  58. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (21.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=449162625586437

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete