About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, November 18, 2013

82] பிறருக்கு மரியாதை !

2
ஸ்ரீராமஜயம்




நம்மைவிட உயர்ந்த நிலையிலும், சக்தியிலும் உள்ள பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செய்தல் வேண்டும். வணக்க வார்த்தைகள் சொல்ல வேண்டும். அவர்கள் பெயரைச்சொல்லக்கூடாது. 

சமநிலையில் இருந்தால் “செளக்கியமா” என்று கேட்க வேண்டும். அப்போதும் பெயரைச் சொல்லிக் கூப்பிடக்கூடாது,.

மற்றவர் நம்மைவிட சின்னவராக இருந்தால் மட்டும்தான் பெயரைச் சொல்லி “செளக்யமா” என்று கேட்கலாம்.

நம் அன்புக்குப் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, ”பரமாத்மா, வேஷமாகப் போட்டுக்கொண்ட ஓர் உடலுக்குத்தான் அழிவு உண்டாயிற்று; இப்போது அந்த உடலுக்கு உரியவர் மீண்டும் பரமாத்மாவோடு ஒன்றாகி விட்டார்” என்ற ஞானத்தோடு பிரிவுத்துன்பத்திற்கு ஆளாகாமல் இருப்போமாக!


உடைமைகளை சேர்த்துக்கொள்ள சேர்த்துக்கொள்ள பயம் தான் ஜாஸ்தியாகிறது. 


oooooOooooo

[ 1 ]


அண்மையில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அப்போது தன்னுடைய தந்தைக்கு, காஞ்சிப் பெரியவர் அருளிய… நெகிழ வைக்கும் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.


கோர்ட் கிளார்க் ஷெராஸ்தாரர் ஆனது 
பெரியவா அனுக்ரஹம்


அன்பரின் தந்தை, சென்னை நீதிமன்றத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தவர். அப்போது காஞ்சிப் பெரியவர், சென்னை நகரில் முகாமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் அன்பரின் தந்தையும் பங்கேற்று சேவை புரிந்தாராம். அன்பரின் தந்தை ஓடியாடி உழைத்த விதத்தை காஞ்சி பெரியவாள் நேரில் கண்டு நெகிழ்ந்து போனார்.



முகாம் நிறைவுறும் நாள் வந்தது. அன்றைய தினம், அன்பரின் தந்தையைக் கரிசனத்துடன் அழைத்த பெரியவாள், ”எங்கே வேலை பாக்கறே?” என்று கேட்டிருக்கிறார்.



”கோர்ட்ல கிளார்க்கா வேலை பாத்துண்டிருக்கேன்” என்று பவ்யமாக பதில் அளித்தாராம் அன்பரின் தந்தை.



உடனே பெரியவாள், ”இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?” என்று கேட்க… 

”ஷெராஸ்தார்” என்று பதிலளித்திருக்கிறார் இவர்.

இதையடுத்து பெரியவாள், ”நீ ஷெராஸ்தார் ஆயிடுவே” என்று ஆசீர்வதித்திருக்கிறார்.

சாதாரண கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஷெராஸ்தார் பொறுப்புக்கு வருவதற்குக் கல்வி உள்ளிட்ட தகுதிகள் அவசியம். ஆனால் இந்த அன்பரின் தந்தைக்குக் கல்வித் தகுதி மட்டும் இல்லை. எனவே, ‘இந்தப் பதவி சாத்தியமே இல்லை’ என்று தீர்மானித்து, காஞ்சிப் பெரியவாளின் ஆசியை அடுத்த கணத்தில் இருந்து மறந்தே போனார்.

இதையடுத்து ஒரு சில நாட்களில் டெல்லியில் இருந்து தலைமை நீதிபதி சென்னைக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான பணிவிடைகளை சிறப்பாகச் செய்து கொடுத்தாராம் அன்பரின் தந்தை.

சில நாட்கள் கழித்து, வேலை முடிந்து தலைமை நீதிபதி டெல்லிக்குக் கிளம்பிச் செல்லும்போது, நீதிமன்ற அலுவலகக் குறிப்பேட்டில், ‘இந்த கிளார்க்கின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர் இவர்’ என்று பரிந்துரை செய்திருந்தாராம்!

பிறகென்ன? உரிய நேரத்தில் அந்தப் பரிந்துரை உயரதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, அன்பரின் தந்தைக்கு 'ஷெராஸ்தார்' எனும் பதவி உயர்வு கிடைத்ததாம்.

சில வருடங்களுக்குப் பின், காஞ்சிப் பெரியவர் மீண்டும் சென்னை வர… அன்பரின் தந்தை அந்த முகாமுக்குச் சென்று பெரியவாளை தரிசித்து வணங்கியிருக்கிறார்.

”என்ன… ஷெராஸ்தாரர் ஆயாச்சா?”  
என்று மெள்ள புன்னகைத்தபடியே பெரியவாள் கேட்டதும், அந்த நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து போனாராம் அன்பரின் தந்தை



[Thanks to Amritha Vahini 27.09.2013]

oooooOooooo

[ 2 ]


கலைமகள் திரு சு. நடராஜனுக்கு  கிடைத்த
ஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம். 


கலைமகள் திரு. சு. நடராஜன் பூர்வீகம் சிதம்பரம். இவரது தந்தை ஸ்ரீ ராஜகோபால ஐயர் சிவில் இன்ஜினியரிங் சூபர்வைசர் ஆக, விழுப்புரம் அருகில் உள்ள கண்டாச்சிபுரத்தில் வேலை பார்த்து வந்த போது, திருக்கோவிலூர் அருகில் உள்ள, வசந்த கிருஷ்ணபுரம் கிராமத்தில் ஸ்ரீ பெரியவா, சாதுர்மாஸிய விரதம் முடித்து, நவராத்திரி பூஜைக்கும், அவ்வூரிலேயே தங்கி இருந்த போது, நவராத்திரியில் ஒரு தினம் தன் தந்தையுடன் அங்கு சென்று ஸ்ரீ சுவாமிகளை தரிசித்தார். இதுவே நடராஜன் அவர்களின் முதல் தரிஸனம்.

1953 இல் ஸ்ரீ பெரியவர்கள் சின்ன காஞ்சிபுரத்தில் சாதுர்மாஸ்யதுக்காக தங்கி இருந்தார். நடராஜன் தன் தகப்பனாருடன் அங்கு சென்றார். அப்போது சுவாமிகள் இவரிடம் ‘என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?’ என கேட்டார். 

இவர் ‘எஸ்.எஸ்.எல்.சி.’ தேறி விட்டு, சென்னையில் வேலை தேடி கொண்டு இருக்கிறேன்’ என்றார்.

‘உன் கையெழுத்து நன்னா இருக்குமா?’ - ஸ்வாமிகள் கேட்டார்கள்

”இருக்கும்”  – நடராஜன்.

”மேலூர் ராமச்சந்திர ஐயர் ன்னு ஒத்தர், தாடி வெச்சுண்டு பூஜகட்டுலே இருக்கார். அவர் எழுதின காசி யாத்திரை டைரி செல் அரிச்சிடுத்து, அதை நீ ஒரு புது நோட்டு புத்தகத்திலே எழுதிடு”. என்று உத்தரவு இட்டார்கள் பெரியவா.

சுமார் ஆறு மாத காலம் மடத்தில் தங்கி இருந்து நடராஜன் எழுதினார். அவ்வளவு நாள் திரும்பி கூட பார்க்க வில்லை, பணி முடியப்போகும் முதல் நாள் கூப்பிட்டு ‘உன் வேலை எப்போ முடியும்?’ என்று சுவாமிகள் கேட்டார்கள்.

அதற்கு முதல் நாள் தான் மேலூர் மாமா, நடராஜன் அவர்களிடம், ‘இது முடியபோறது தானே? இன்னொரு நோட்டு புக் கூட ரொம்ப அழுக்கு படிஞ்சு இருக்கு. அதையும் நான் சொன்னதா பெரியவா கிட்ட சொல்லி, உத்தரவு ஆச்சுன்னா, எழுதிப்புடு’ என்றார்.

ஸ்ரீ பெரியவாளிடம் நடராஜன் ‘நாளை முடிஞ்சிடும்’ என்று சொல்லி விட்டு, மேலூர் மாமா சொன்ன புதிய வேலை பற்றி சொன்னவுடன், பெரியவா திடுக்கென்று  சம்பளம் இல்லாம நீ இங்கே வேலை செஞ்சேன்னா உன் ஆயுசு பர்யந்தம் ஆளுக்கொருத்தர் ஏதாவது வேலை சொல்லிண்டே தான் இருப்பா, நீ நான் சொன்னதை முடிச்சு கொடுத்தா போதும்” என்று சொல்லி விட்டார்கள்.

மறுநாள் அந்த எழுத்து வேலை முடிந்தது. அதனை கேட்டறிந்து ”வேலைக்கு இனி முயற்சி செய்” என்று நடராஜனிடம் பெரியவாள் உத்தரவு இட்டார்.

அதற்கு மறுநாள் மடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடராஜன் போய் வந்து கொண்டு இருக்கும் போது இரண்டு மூன்று தடவை ஸ்ரீ பெரியவா இவரிடம் வேலைக்கு என்ன முயற்சி பண்றே?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்து உள்ளார்கள். 

இவருக்கோ ஒரே குழப்பம், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கடைசியில் அன்று இரவு யோசித்து ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் கேட்பார். நாம் நமஸ்காரம் செய்து விட்டு சொல்லி விடலாம் என்று அன்று முழுவதும் பல முறை குறுக்கும் நெடுக்கும் போய் வந்தும் இவரை கண்டு கொள்ளவே இல்லை. பல தடவை முயற்சித்தும் இவருக்கு இடம் கொடுக்கவே இல்லை.

கடைசியில் பூஜை முடிஞ்சு வெளியில் வரும் போது, சற்று தைரியத்தை வரவழைத்து கொண்டு குறுக்கே வந்து நிற்பது போல் ஸ்ரீ பெரியவாள் எதிரில் நடராஜன் சென்றார். இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்றோ என்னவோ, அந்த தெய்வம்  “என்ன?” என்றது.

‘பெரியவா பிரசாதம் கொடுத்து, உத்தரவு கொடுத்தா, மெட்ராஸ் க்கு போய் எதாவது வேலைக்கு முயற்சி பண்ணலாம் ன்னு இருக்கேன். ”

”பிரஸாதம் கொடுத்தா ஊருக்கு போறேன்னு சொல்றியா?” என்றார்கள்.

”ஆமாம்” என்றேன். 

“சரி” என்று சொன்னார்களே தவிர பிரஸாதம் கொடுக்கவில்லை.

1954 மார்ச் 22 ஆம் தேதி, காண கிடைக்காத கண்கொள்ளா காட்சியாக ஓர்‘வைபவம் ஸ்ரீமடத்தில் நடைபெற்றது. அது முடிந்து அவா அவா ஊருக்கு கிளம்ப, பெரிய மனுஷா எல்லாம் பெரியவாளிடம் பிரஸாதம் வாங்க க்யூ வரிசையில் நின்றார்கள்.

க்யூவை கட் பண்ணிட்டு மேனேஜர் ஸ்ரீ விஸ்வநாத ஐயர், ஏதோ மடத்து விஷயமா பேச, பெரியவா இருக்கும் ரூம் உள்ளே போனார். 

அப்போ, ஸ்ரீ பெரியவா, அவரிடம், ”இப்போதான் திருவிடைமருதூர் மகாலிங்க ஐயர் பிரஸாதம் வாங்கிண்டு வெளிலே போறார். அவர்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லி, சிதம்பரம் ராஜகோபாலன், பிள்ளை, (மேனேஜர் க்கு சட்டென்று நினைவு வரவில்லை), அதான், உனக்கு எதுத்தாப்ல ஒக்காந்துண்டு டைரி எழுதினானே, அவனுக்கு ஒரு வேலை பண்ணி வெக்க சொல்லு ” என்றார்.

மேனேஜர் தன் வேலையை முடிச்சிட்டு வெளிலே வந்தார். எதிரில் சுரேஷ்வர சுவாமி சந்நிதியில் ராவ்சாஹிப் ஸ்ரீ மகாலிங்க ஐயர் (ரிடயர்டு டெபுடி அக்கௌன்டன்ட் ஜெனரல்) அவர்கள், பெரியவா கொடுத்த பிரசாதத்தை காகிதத்தில் மடித்து கொண்டு இருந்தார். 

மேனேஜர் அவரை நெருங்கவும், நடராஜன் ஏதோ தற்செயலாக அங்கே சென்ற போது, அவரை அறிமுகம் செய்து வைத்து பெரியவர்களின் உத்தரவையும் தெரிவித்தார்.

பெரியவர்கள் அருளால், கலைமகள் காரியாலயத்தில் சேர்ந்து, ஆசிரியர் குழுவில், ஒருவனாக, எழுத்தாளனாக, முப்பத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

‘கோலாகலமான வைபவத்தில், நெரிசலான நேரத்திலும் சிறு துரும்பாகிய என்னை நினைவில் கொண்டு கருணை மழை பொழிந்த அந்த தெய்வத்தை நான் நாள்தோறும் வணங்கி பணிந்து நிற்கிறேன்’ என்பார் ஸ்ரீ நடராஜன் மாமா.

சுமார் நாற்பது ஆண்டுகள், கண்ணன், மஞ்சரி, கலைமகள் போன்ற பத்திரிக்கைகளின் உதவி ஆசிரியர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றார். 

வேலையில் இருந்து கொண்டே, மயிலை சம்ஸ்கிருத கல்லூரியில் படித்து சாஹித்ய வேதாந்த சிரோன்மணி பட்டம் பெற்றார். 

மடத்தில் குருவாரம், அனுஷம், அவிட்டம், உத்திராடம், வருடாந்திர ஜெயந்தி வாக்யார்த்த சதஸில் கலந்து கொள்வதுடன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பண்டிதர்கள் பெயர், அவர்கள் பேசிய விஷயங்கள் குறித்து பதிவேடு பதிந்து ஆசார்யார்களிடம் வழங்குவார்.

உடல்நலம் குன்றி 2009 ஆம் ஆண்டு பெரியவா திருவடி சேர்ந்தார், திரு. நடராஜன் மாமா.

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

[எங்கோ எதிலோ படித்தேன் - நினைவில்லை]

    
    


திருச்சி மலைக்கோட்டை உச்சியில் 
நேற்று 17.11.2013 ஞாயிறு மாலை 6 மணிக்கு 
திருக்கார்த்திகை மலைதீபம் ஏற்றப்பட்டது.

[ இதைப்பற்றிய மிகத்தெளிவான  படமும்
பல்வேறு சுவையான தகவல்களும் 
கீழ்க்கண்ட இணைப்பினில் 
இன்று வெளியிடப்பட்டுள்ளது.



அதே நேரம் எல்லோர் வீடுகளிலும்
தீபங்கள் அழகாக ஏற்றப்பட்டு
பூஜைகள் நடைபெற்றன.

    

    



    
 




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

54 comments:

  1. ஸ்ரீபரமாச்சார்ய ஸ்வாமிகள் - அக இருளையும் புற இருளையும் அகற்றும் - ஆனந்த ஜோதி!..

    அமுத மழையில் ஆனந்த ஜோதி தரிசனம் செய்வித்த தங்களுக்கு மிக்க நன்றி!..

    ReplyDelete
  2. நெகிழ வைக்கும் சம்பவம் ஐயா...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. நம் அன்புக்குப் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, ”பரமாத்மா, வேஷமாகப் போட்டுக்கொண்ட ஓர் உடலுக்குத்தான் அழிவு உண்டாயிற்று; இப்போது அந்த உடலுக்கு உரியவர் மீண்டும் பரமாத்மாவோடு ஒன்றாகி விட்டார்” என்ற ஞானத்தோடு பிரிவுத்துன்பத்திற்கு ஆளாகாமல் இருப்போமாக!

    ஞான வரிகள் இதமான உபதேசம் ..!

    ReplyDelete
  4. கோர்ட்ல கிளார்க்கா வேலை பாத்துண்டிருக்கேன்” என்று பவ்யமாக பதில் அளித்தாராம் அன்பரின் தந்தை.


    உடனே பெரியவாள், ”இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?” என்று கேட்க…

    ”ஷெராஸ்தார்” என்று பதிலளித்திருக்கிறார் இவர்.

    இதையடுத்து பெரியவாள், ”நீ ஷெராஸ்தார் ஆயிடுவே” என்று ஆசீர்வதித்திருக்கிறார்.//

    ஒரேயடியாக ஜட்ஜ் ஆகவேண்டும் என்றெல்லாம் பேராசைப்படாமல் அடுத்தடுத்த பதவிகளில் முயன்றால் சிரமமல்லாமல் தடையில்லாத முன்னேற்றம் கிடைத்திருக்கிறது,..

    ReplyDelete
  5. கலைமகள் திரு சு. நடராஜனுக்கு கிடைத்த
    ஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம்.

    அற்புதமானது,,!

    ReplyDelete
  6. திருச்சி மலைக்கோட்டை உச்சியில்
    நேற்று 17.11.2013 ஞாயிறு மாலை 6 மணிக்கு
    திருக்கார்த்திகை மலைதீபம் ஏற்றப்பட்டது.

    [ இதைப்பற்றிய மிகத்தெளிவான படமும்
    பல்வேறு சுவையான தகவல்களும்
    கீழ்க்கண்ட இணைப்பினில்
    இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    http://jaghamani.blogspot.com/2013/11/blog-post_9739.html ]

    எமது பதிவுக்கு இணைப்பு கொடுத்து சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

    ReplyDelete

  7. வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன்.

    கோபு அண்ணா, வலை உலகில் இருந்து கொஞ்ச நாட்கள்! இல்லை மாதங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருந்தேன். (விவரங்களை உஙளுக்கு தொலைபேசியில் தெரிவிக்கிறேன்). இப்ப மறுபடியும் வந்துட்டேன்.

    இனி அவ்வப்போது வந்து பதிவு போடுகிறேன்.
    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி.

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANI November 18, 2013 at 2:57 AM

      //வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன்.//

      வாங்கோ ஜெயந்தி, வாங்கோ, மிக்க சந்தோஷம்மா

      //கோபு அண்ணா, வலை உலகில் இருந்து கொஞ்ச நாட்கள்! இல்லை மாதங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருந்தேன். (விவரங்களை உங்களுக்கு தொலைபேசியில் தெரிவிக்கிறேன்).//

      தாங்கள் சொன்னது அத்தனையும் கேட்டு நானும் மன்னியும் எவ்ளோ சந்தோஷம் அடைந்தோம் .... தெரியுமா !!!!!

      தாங்கள் என் பதிவுகளுக்கு வரவில்லையே என்ற தாபமெல்லாம் மறைந்தோடிப் போய் விட்டன.

      ஆனால் நான் இந்தப்பதிவினை தொடர்ந்து வெளியிட்டு வருவதற்கு மூல காரணமே நீங்க தான் ஜெயந்தி.

      இந்தப்பதிவினில் தாங்கள் கொடுத்துள்ள முதல் 2-3 பின்னூட்டங்களை தயவுசெய்து படித்துப் பாருங்கோ ஜெயந்தி.

      http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

      தாங்கள் நடுவில் நீண்ட நாட்களாக வராமல் இருந்த காரணத்தை மற்றவர்கள் அறியட்டும் என நான் நகைச்சுவையுடன் வெளியிட்டுள்ள இந்தப்பதிவினையும்
      அவசியமாகப் படியுங்கோ ஜயந்தி.

      http://gopu1949.blogspot.in/2013/09/55-2-2.html

      ”காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு” எனக்
      கடைசியில் கொடுத்துள்ளேன், பாருங்கோ

      // இப்ப மறுபடியும் வந்துட்டேன்.//

      நேற்று தங்களின் தொலைபேசி அழைப்பு, அதைத்தொடர்ந்து வந்த மெயில்கள் அவற்றின் இணைப்புகள் பார்த்ததிலிருந்து நானும் மன்னியும் சந்தோஷத்தின் எல்லையில் உள்ளோம். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்

      //இனி அவ்வப்போது வந்து பதிவு போடுகிறேன்.//

      ஆஹா, வெரி வெரி ஸ்வீட் நியூஸ். மிக்க நன்றி.

      //நன்றியுடன் ஜெயந்தி ரமணி.//

      மனம் நிறைந்த நல்லாசிகளுடன் கோபு அண்ணா + மன்னி. ;))))))))))))))))))))))))))))))))))

      Delete
  8. பெரியவாளின் வாக்கின் மகிமை மெய் சிலிர்க்க வைக்கின்றது !
    இறைவனது சித்தம் மனிதனது வாழ்வு .சிறப்பான பகிர்வு கண்டு
    மகிழ்ந்தேன் .பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  9. நலம் விசாரிப்பதிலும் இருக்கும் இங்கிதம் கற்றுக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. மலைக்கோட்டை விளக்கு பிரகாசிக்கிறது..உங்கள் வீட்டு ஜன்னலில் எடுத்ததாக தெரிகிறது. அழகு!

    ReplyDelete
  11. மலைக்கோட்டை தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நன்றி.
    மஹா பெரியவரின் கருணையே கருணை. எப்படிஎல்லாம் அவர் நமக்குக் கருணை புரிகிறார்!

    ReplyDelete
  12. பெரியவாளின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்! அவருடைய தீர்க்க தரிசனம் கண்டு வியந்தேன்! ஒவ்வொரு பதிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  13. திருச்சி மலைக் கோட்டையின் அழகோ அழகு ஐயா. தங்கள் வீட்டில் இருந்து எடுத்த படம்என்று நினைக்கின்றேன். நன்றி

    ReplyDelete
  14. //நம்மைவிட உயர்ந்த நிலையிலும், சக்தியிலும் உள்ள பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செய்தல் வேண்டும். வணக்க வார்த்தைகள் சொல்ல வேண்டும். அவர்கள் பெயரைச்சொல்லக்கூடாது.
    சமநிலையில் இருந்தால் “செளக்கியமா” என்று கேட்க வேண்டும். அப்போதும் பெயரைச் சொல்லிக் கூப்பிடக்கூடாது,.
    மற்றவர் நம்மைவிட சின்னவராக இருந்தால் மட்டும்தான் பெயரைச் சொல்லி “செளக்யமா” என்று கேட்கலாம். //

    பெரியவரின் கருத்துரைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இதே போல கைகளைக் குவித்து இறைவணக்கம் செய்வதிலும், பிறருக்குச் செய்வதிலும் சில முறைகள் உண்டு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    உங்கள் பதிவில் திருச்சி மலைக்கோட்டை திருக்கார்த்திகை தீபம் கண்டேன். உவகை கொண்டேன்.


    ReplyDelete
  15. பழைய நாயன்மார்களின் திருவிளையாடல்கள் போன்றது இச்சம்பவங்கள்.
    அருமை.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. //நம் அன்புக்குப் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, ”பரமாத்மா, வேஷமாகப் போட்டுக்கொண்ட ஓர் உடலுக்குத்தான் அழிவு உண்டாயிற்று; இப்போது அந்த உடலுக்கு உரியவர் மீண்டும் பரமாத்மாவோடு ஒன்றாகி விட்டார்” என்ற ஞானத்தோடு பிரிவுத்துன்பத்திற்கு ஆளாகாமல் இருப்போமாக!//

    முற்றிலும் உண்மைதான். ஆனால் அப்படி இருக்கத் தான் முடியறதில்லை. :(

    ReplyDelete
  17. கலைமகள் சு.நடராஜன் குறித்த தகவல்கள் முற்றிலும் புதியவை. முதலில் சொன்னது ஏற்கெனவே படிச்சிருக்கேன்.

    ReplyDelete
  18. மலைக்கோட்டை தீபம் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்; கடைசியிலே பார்க்கவே முடியலை. மறந்தே போச்சு! :(( அன்னிக்கு யாரோ வந்திருந்தாங்களா, அதிலே நினைவிலே வரலை.

    ReplyDelete
  19. பொரியெல்லாம் எடுத்துண்டேன். இந்த வருஷம் பொரி சாப்பிடவே இல்லை. உங்க பதிவிலே கிடைச்சது. :) நன்றி.

    ReplyDelete
  20. வணக்கம்,ஸௌக்கியமா என்று கேட்பதற்கும் இவ்வளவு வழி முறைகள் இருக்கிரது. இவைகள் கேட்க ஸந்தோஷமாக இருக்கிறது. பெரியவாளின் அமுத மொழிகள் எல்லா விஷயங்களிலும் அமிர்தமாக இருக்கிரது. அன்புடன்

    ReplyDelete
  21. Aha
    படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் எழுத்துக்கள்
    படித்து இன்புட்ட்றேன்

    ஆமாம் அது யார் வீட்டு போட்டோ
    அந்த அடையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே
    பொரி உருண்டை தன தெரியும்
    பொரி பருப்புகுட்டி இப்போதான் பார்கிறேன்.
    (பருப்புகுட்டி=பருப்புகூடு)
    அஹ கார்த்திகை ஆச்சு
    காலம் ஓடுகிறது
    என்னக்கும் நல்ல செய்தி எப்போ வருமோ

    ReplyDelete
    Replies
    1. viji November 19, 2013 at 3:35 AM

      வாங்கோ விஜி, செளக்யம் தானே ! அன்பான ஆசிகள்.

      //ஆஹா, படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் எழுத்துக்கள்
      படித்து இன்புற்றேன்//

      மிகவும் சந்தோஷம்மா !

      //ஆமாம் அது யார் வீட்டு போட்டோ?//

      நம்மாத்து போட்டோவே தானம்மா.

      //அந்த அடையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே//

      அதை என் இந்தப்பதிவினிலே பார்த்திருப்பீங்கோ விஜி.

      http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

      ஆனால் ஒரு சின்ன வித்யாசம். அவை யாவும் புழுங்கல்
      அரிசியில் செய்த அடைகள். இந்தப்பதிவில் காட்டியுள்ள இரண்டு அடைகள் மட்டும் உம்மாச்சி நைவேத்யத்திற்காக பச்சரியில் மட்டும், தனியாகச் செய்தவை.

      //பொரி உருண்டை தான் தெரியும்
      பொரி பருப்புக்குட்டி இப்போதான் பார்க்கிறேன்.
      (பருப்புக்குட்டி=பருப்புக்கூடு)//

      ஆஹா, கிளிமொழி போன்ற அழகான மலையாள வாடை
      அடிக்கிறது தங்களின் இந்தப் ’பருப்புக்குட்டி’ என்ற
      சொல்லாடலில்.

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, சிரித்தேன், மகிழ்ந்தேன்.

      நானும் இந்தப்’பருப்புக்குட்டி’ என்பதை இன்று தான்
      முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன், அதுவும் என்
      பேரன்புக்குரிய விஜி என்ற ’பெண்குட்டி’ மூலம். ;)))))

      கடந்த 2-3 வருஷமா எந்தப்பண்டிகைகளையும் நம்
      ஆத்தில் கொண்டாட முடியாமலேயே இருந்தது. இந்த
      பிள்ளையார் சதுர்த்தி முதல் தான் மீண்டும் பண்டிகைகள்
      கொண்டாட ப்ராப்தம் அமைந்தது.

      இந்த பருப்புக்குட்டி ஒரு ஜோடி என் மூன்றாவது சம்பந்தி
      மாமி, செய்து வந்து கொடுத்தது.

      அவற்றைப் பார்த்ததும் எங்களுக்கும் ஒரே ஆச்சர்யமே!

      ஆரஞ்சு மிட்டாய்கள் எல்லாம் போட்டு சிரத்தையாகவும்
      சுவையாக, செய்து வந்து கொடுத்துள்ளார்கள்.

      அதை இன்று தான் நாங்கள் கூட்டிலிருந்து [அதாவது
      பருப்புக்குட்டியிலிருந்து] பிரித்தோம்.

      அதனால் பிரித்தபின் அதை ஓர் போட்டோ பிடித்து இந்தப்பதிவின் கடைசியில் இப்போது சேர்த்தும் விட்டேன்.

      நம் ஆத்தில் செய்தது அடையும், பொரி உருண்டைகளும்
      மட்டுமே.

      //ஆஹக் கார்த்திகையும் ஆச்சு; காலம் ஓடுகிறது
      எனக்கும் நல்ல செய்தி எப்போ வருமோ?//

      எதற்குமே கவலைப்படாதீங்கோ, விஜி. இந்த என்
      தொடரின் 108 பகுதிகளையும் பொறுமையாக மனதில்
      வாங்கிக்கொண்டு படியுங்கோ. அதற்குள் நிச்சயமாக
      ஓர் தெளிவு பிறக்கும். நல்ல செய்தியும் விஜிக்கு
      நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு
      உள்ளது.

      வீணாகக் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதால் எந்த
      ஒரு முன்னேற்றமும் ஏற்படாது. மேலும் கவலையால் நம் உடலும் உள்ளமும் மட்டுமே வேதனைப்படக்கூடும்.

      அதனால் மனதை எப்போதும் ஜில்லுன்னு
      வைத்துக்கொண்டு, சந்தோஷமாக இருங்கோ, ப்ளீஸ்.

      பிரியமுள்ள

      வீ.................ஜீ

      Delete
  22. வணக்கம் அய்யா.
    மலைக்கோட்டை தீபத்தை அழகாக படமாக்கியிருக்கிறீர்கள். தங்கள் இல்லம் இருக்கும் இடத்தை யூகித்துக் கொள்ள முடிந்து. நலம் விசாரிப்பு பற்றிய தகவ்ல் அருமை //கோர்ட் கிளார்க் ஷெராஸ்தாரர் ஆனது பெரியவா அனுக்ரஹம்.// நிச்சயம் உண்மை. திரு. நடராஜன் அவர்கள் பற்றிய தகவல்கள் பெரியாவாளின் அனுக்ரஹம் அருமை அய்யா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. நெகிழ வைக்கும் சம்பவம் ஐயா...
    அருமை.

    ReplyDelete
  24. நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சிகள். படிக்கப் படிக்க கண்கள் பனிக்கின்றன. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  25. பிறருக்கு மரியாதை எப்படிச் செய்யவேண்டும் என காட்டிய அமுத மொழிகள் மிக நன்று.

    பணியில் முன்னேற்றமும், அவர் கொடுத்த வேலையும்..... அப்பா என்ன ஒரு உதவி இது.....

    தொடரட்டும் அமுத மொழிகள்.

    ReplyDelete
  26. பிறருக்கு மரியாதை கொடுத்தல் ..குறிப்பாக பெரியோருக்கு ..மற்றும் நலம் விசாரித்தல் எவ்வளவு அருமையான விஷயங்கள் !!!

    கோர்ட் கிளார்க்கின் அனுபவ பகிர்வும் ,கலைமகள் திரு. சு. நடராஜன் அவர்கள பற்றின பகிர்வும் அற்புதம் ..
    திருக்கார்த்திகை மலைதீபம் bird's-eye view :) கோபு அண்ணா வீட்டிலிருந்து :)

    மீன் கண்ணுக்கு அந்த பருப்பு கூடு !!!! பொன்னிற அடை .பொரி உருண்டை எல்லாம் தெரியுது :)

    பழைய நினைவு சென்னையல் இருக்கப்போ இந்த சீசனில்சீக்கிரம் இருட்டிடுமா, அப்போ சின்ன அகல் விளக்குகள் எல்லார் வீட்லயும் காம்பவுண்ட் சுவர் ,நிலைப்படி என ஜொலிச்சு மாலை நேரத்தில் அழகா இருக்கும் ..

    ReplyDelete
  27. Trichy malakottai pic beautiful. Very important information regarding respecting everyone especially elders.... very nice sir. Thanks a lot for sharing...

    ReplyDelete
  28. அன்பின் வை.கோ

    பிறருக்கு மரியாதை - பதிவு நன்று

    யார் யாருக்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டுமென்ற முறைகள் நன்று - பகிர்ந்தமைக்கு நன்றி

    மகாப் பெரியவாளின் தீர்க்க தரிசனம் - அன்பருக்குப் பதவி உயர்வு - பெரியவா பெரியவா தான்

    கலைமகள் நடராஜனுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் ஆசிர்வாதம் - அனுக்ரஹம் - அருமை

    இராஜ இராஜேஸ்வரியின் பதிவினிற்கு சுட்டி கொடுத்து மலைகோட்டை மகா தீபத்தினைப் பற்றிய பதிவினை வெளியிட்டமை நன்று

    அத்தனை படங்களும் அருமை

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  29. தீர்க்கமான கண்கள் கண்ணாடி வழியே - படமும் அருமை. நல்ல்தொரு பகிர்வு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  30. Very nice.. thanks for sharing,..Pori Urundai looks nice.. I made only vella adai & uppu Adai..No pori urundai.. enga kidaikalai..
    Pori urundai in Paruppu thengai koodu ? its really nice..

    ReplyDelete
  31. இது போன்ற அனுபவங்களைக் கேட்பதே நமது பாக்கியம்தான்.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  32. சிறப்பான பகிர்வு...

    ReplyDelete
  33. அதாரது குறுக்கே நிக்கிறது...:) வழி விடுங்கோ வழிவிடுங்கோ.. மீ பின்னூட்டம் போட வந்திருக்கிறேன்ன்ன்ன்:).

    கார்த்திகை தீபங்கள் ஜொலிக்குது... அது என்னமோ படத்தில பார்ப்பதை விட நேரில் பார்க்கும்போதுதான் பக்திப் பரவசம் கிடைக்கும்.. உடம்பெல்லாம் புல்லரிக்கும்... அப்பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு கோபு அண்ணன்... ஜன்னலோரம் இருந்து... அனைத்தையும் கண்டு களிக்கிறீங்க... வாழ்த்துக்கள்...

    ஊ.குறிப்பு:
    நோஓஓஓஓஓ:) அவசரப்பட்டு எந்த முடிவுக்கு வந்திடாதீங்க.. எப்ப எப்ப நேரம் கிடைக்குதோ.. அப்பப்ப எல்லாம் வந்து படித்து ஒயுங்க அனைத்துப் பின்னூட்டங்களும் போடுவேன்ன்.. அதுவரை பொறுமை பிளீஸ்ஸ்ஸ்:).

    ReplyDelete
  34. நலம் விசாரிப்பதில் கூட முறை இருப்பதை கற்றுக் கொண்டேன்...சிறப்பான பகிர்வு!!

    ReplyDelete
  35. பெரியவாளின் தீர்கதர்சனம் படித்து இன்புற்றோம்.

    மலைக்கோட்டையில் கார்த்திகைதீபம் ஒளிர்கின்றது.

    ReplyDelete
  36. வயதில் பெரியவர்களைப் பார்த்து 'என்ன பெரிசு ? என்று ஏளனமாக அழைக்கும் இக்கால சிறிசுகள் இனியாவது உரிய மரியாதையை அளிக்க கற்றுக் கொள்ளட்டும்.

    குடத்திலிட்ட தீபம் அணையாமல் இருக்கலாம். ஆனால் யாருக்கும் தெரியாது

    ஆனால் குன்றின் மேல் வைத்த தீபம் அனைவருக்கும் இறைவனின் அருளை வாரி வழங்கும்.

    ஒளி வடிவான இறைவன் ஒவ்வொரு மனிதனின் தலையின் உச்சியில் சஹாஸ்ரார சக்கரத்தில் ஒளி வீசி கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்தும் முகத்தான் குன்றின் மேல் தீபம் ஏற்றப்படுகிறது .

    அதன் தத்துவத்தை மகத்துவத்தை ஒவொருவரும் புரிந்துகொண்ட நம்முள்ளே உறையும் இறைவனை அடைய முயற்சி மேற்கொள்ளவேண்டும்

    எதோ கோவிலுக்கு போனோம், சாமி கும்பிட்டோம் என்று( இராம)ல் நாத வடிவமாக இருக்கும் ராம மந்திரத்தை எபோதும் ஜபம் பண்ணிக்கொண்டிருந்தால் இறையருள் கிட்டும் என்பதில் ஐயமில்லை

    படம் அருமை பாராட்டுக்கள் .

    ReplyDelete
  37. நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய சின்னவிஷயங்கள்மஹாபெரியவாமூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது இப்போதுபெரியவர்கள் சின்னவர் என்றமட்டு மரியாதைகள்குறைந்துகொண்டேவருகிறது கார்த்திகை பற்றிய செய்திகள் அருமை பெரியவாளின் தீர்கதரிசனம் ஒவ்வொரு விஷயஙளும் மெய்சிலிர்க்கவைக்கிறது நல்ல பதிவு நன்றி

    ReplyDelete
  38. மரியாதையை எப்படி அளிக்க வேண்டும் என அழகாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெரியவாளின் ஆசிகள் இருந்தால் நடக்காதது எது?!!
    பொரி பருப்புத்தேங்காயை இப்போது தான் பார்க்கிறேன்!!

    ReplyDelete
  39. உடைமைகளை சேர்த்துக்கொள்ள சேர்த்துக்கொள்ள பயம் தான் ஜாஸ்தியாகிறது. //

    உடைமைகள் குறைய குறைய மகிழ்ச்சி. உடைமைகள் சேர சேர அவற்றை பாதுக்காக்கும் வேலை பெரிய வேலை.

    அன்பரின் தந்தைக்கு பெரியவர் ஆசி அருளிய செய்தியை படிக்கும் போது நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனம் மெய் சிலிர்க்க வைககிறது.
    கலைமகள் சு.நடராஜன் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

    மலைதீபம், கார்த்திகை தீப படங்கள், பொரி படங்கள் எல்லாம் அருமை.
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.




    ReplyDelete
  40. பெரியவாளின் கருணை மனதை சிலிர்க்க வைக்கிறது. அமுதமொழியுடன் கார்த்திகை தீப ஒளியும் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

    ReplyDelete
  41. பெரியவா கருணை எந்த ரூபத்தில் எப்போ வெளிப்படணுமோ அப்போ வெளிப்படுகிறது.

    ReplyDelete
  42. பிறருக்கு மரியாதை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது

    ReplyDelete
  43. கோபு அண்ணா சௌக்கியமா?

    ஆத்மார்த்த பக்தர்களுக்கு அருள் புரிவதில் மகா பெரியவாளுக்கு இணை மகா பெரியவாளேதான்.

    :)

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஜெயா, வாங்கோ ... வணக்கம்.

      //வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன்.// என்ற
      Your Comment dt. 18.11.2013 மேலே உள்ளது. அதில் தாங்கள் சொன்னபடியே மீண்டும் இன்று இங்கு வந்துள்ளீர்கள், ஜெயா. மிக்க மகிழ்ச்சி. சந்தோஷமாக உள்ளது. மிக்க நன்றி.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  44. படங்கலா நல்லாருக்கு. நல்ல வேல கெடக்ககூட குருசாமி ஒதவி பண்ணுவாகளா.

    ReplyDelete
  45. படங்கள் இணைப்பு ரொம்ப நல்லா இருக்கு. பெரியவா அருட்கடாஷம் கிடைத்தவா பாக்கியசாலிகள். நல்ல வேலைவேணுமா குழந்தைச்செல்வம் வேணுமா வியூதி தீரணுமா எல்லாவற்றிறகுமே போரியவாளிடம் மருந்து இருக்கு. நீயே கதின்னு நம்மை முழுமையூ ஒப்படைச்சா போறும். மத்ததலாம் அவர் பார்த்துக்கொள்வார்.

    ReplyDelete
  46. உடைமைகளை சேர்த்துக்கொள்ள சேர்த்துக்கொள்ள பயம் தான் ஜாஸ்தியாகிறது. // இன்னும் சொல்லப்போனால் உடைமை என்று எதையும் சொல்லமுடியாது...எப்போ வேணும்னாலும் - உடை-யும்.

    ReplyDelete
  47. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (05.08.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=464898667346166

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  48. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ நேற்று (06.08.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=465970090572357

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete