என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 1 மார்ச், 2014

VGK 05 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - காதலாவது கத்திரிக்காயாவது !





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 05 -  ” காதலாவது கத்திரிக்காயாவது   ”





மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து













இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 






    



இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்: 



அதில் ஒருவர்


திரு. J. அரவிந்த் குமார் 


அவர்கள்



பொறியியல் பட்டதாரியான இவர்

தற்சமயம் ஆஸ்திரேலியாவில் 

பணியாற்றி வருகிறார்.


வலைத்தள முகவரி

கதையில் பரமுவின் கண்களுக்கு 
நல்விருந்தாய் காமாட்சி அமைந்தது போல

இந்த இளைஞருக்கு மிகவும் பிடித்தமான
வாழ்க்கைத்துணை  விரைவில் அமையவேண்டி

மனதாரப் பிரார்த்திக்கிறோம்  
அன்புடன் ஆசீர்வதிக்கிறோம்.

{  Who is that Very Lucky Bride !  }

ALL THE BEST !
Mr. J. ARAVIND KUMAR Sir !!










 





இரண்டாம் பரிசினை வென்றுள்ள 



திரு. J. அரவிந்த் குமார் 


 அவர்களின் விமர்சனம் இதோ:






’கத்தரிக்காய் முற்றினால் 
கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் ??!!’

என்று பழமொழிசொல்வார்கள் .. அது உண்மைதான் போலிருக்கிறது..

காதல் வங்கியில் பொக்கிஷமாக பாதுகாப்பாக பூட்டப்பட்ட காதல் இன்றோ ”காதலாவது ..... கத்திரிக்காயாவது” என்று  காய்கறி விற்கும் காமாட்சியாலும், மெஸ்ஸிற்கு காய்கறிகள் வாங்கவரும்  தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பரமுவாலும் பெரியமார்க்கெட்டுக்கே வந்துவிட்டதே..!

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் கட்டியிழுத்தாய் என்று காந்தமாக கவர்ந்து காதலில் வீழ்த்திவிட்டதே இந்த காதல் ..!

மலர்ந்து மணம் பரப்ப தயாராக இருக்கும் வாசமுள்ள மலரை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக  வைத்துப் பூட்டினாலும் அதன் சுகந்தம் விகசித்து வாசம் வீசி காட்டிக்கொடுப்பது போல ஏதோ ஒரு வித பாசமும், நேசமும் மலரத் தொடங்கி பூத்துக்குலுங்கி காட்டிக்கொடுத்துவிட்டதே ..!


எட்டாவது வரை மட்டும் படித்துள்ள போதும், கணக்கு வழக்கில் புலியான காமாட்சியை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது என்று சொற்சித்திரத்தால் காமாட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார் கதை ஆசிரியர்.. 

உண்மைதான். கணிணி படித்த இன்றைய தலைமுறையினருக்குத்தானே கூட்டலுக்கும் கழித்தலுக்கும் கால்குலேட்டர் தேவைப்படுகிறது..!

காய்கறிக்காரர்கள், பால் தயிர் விற்பவர்கள் போன்ற எளிய மக்கள் கணக்கு வழக்கில் மனக்கணக்காகவே சொல்வதை கண்டே இருக்கிறோம்.. 


மார்க்கெட் அராஜகங்கள் நம் கண்முன்னே காண்பவைதான் .. அதை சமாளிக்க கொழுகொம்பு தேடும் கொடியாக காமாட்சி - பரமுவின் ஆதரவான உதவிகளால் அவன் மீது படரத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை.


”தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு?” இவள் மேனியில் தன் கண்களை மேயவிட்டவாறே, ஒரு கேலிச் சிரிப்புடன், அன்றொருநாள் அந்த நடுத்தர வயதுக்காரன், கிண்டலாக இரட்டை அர்த்தத்தில் கேட்டவனுக்கு பத்ரகாளியாய் மாறி வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் என்பது போல் தராசுத்தட்டையே ஆயுதமாக மாற்றி சின்னமார்க்கெட்டே அதிரும் வண்ணம் குடிகாரனை சமநிலைக்குக் கொண்டு வந்தது ஔவை ஷண்முகி படத்தில் கமல்ஹாசனின் காய்கறிமார்க்கெட் சண்டையை நினைவடுத்தவும் தவறவில்லை..! 

படித்த பக்குவமான பண்புள்ள இளைஞனான பரமுவும் தைரியமான காமாட்சியும் ஒருவருக்கொருவர் உதவியாக  இருந்ததால் குடிசை வீட்டில் சிம்னி விளக்குடன் குடியிருந்த காமாட்சி, ஜன்னல் உள்ள ஓட்டு வீட்டில் மின்சார விளக்கு, ஃபேனுடன், வாடகைக்கு குடி போகும் அளவுக்கு, அவளின் காய்கறி வியாபாரம் கை கொடுத்து உதவியது. 

இடுப்பில் கட்டிகொள்ள ஒரு பட்டுப்புடவையும், கழுத்தில் போட்டுக்கொள்ள இரண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கலியும் வாங்க வேண்டும் என்ற  எளிய ஆசைகூட அவளது சேமிப்பினால் கைகூடமுடியாமல் சாண் ஏறினால் முழம் சறுக்கும் இன்றைய விலைவாசி உயர்வையும் சுட்டிக்காட்டுகிறார் கதை ஆசிரியர்..!

காமாட்சிக்கு உதவிய நேரத்தில் காலில் அடிபட்ட பரமுவின் மருத்துவ செலவுக்கு அந்த சேமிப்புப் பணமே கைகொடுக்கிறது ..

விசேஷமாக சூடான சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்துடன் நமக்குக்கிடைக்கும் ஆனந்த செய்தி முதல் பரிசுத் தொகையான ஐயாயிரம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமுவின் சிறுகதையின் பெயர் காதலுக்கு உதவிய காய்கறிகளாம்..!

ஏன் ??! ’காதலாவது கத்தரிக்காயாவது’ என்று தன் கதைக்கு ஆசிரியர் பெயர் வைத்துவிட்டதால் பரமு ’காதலுக்கு உதவிய காய்கறிகள்’ என்று பெயர் சூட்டிவிட்டானோ என்னவோ..!

தவித்த வாய்க்குத்தண்ணீர் கிடைத்தது போல், சேமிப்பெல்லாம் மருத்துவமனை செலவுகளுக்கு கரைந்து போன  நிலையில் பாலைவனத்தில் இளைப்பாறக்கிடைத்த சோலை வனமாய் அவர்களின் நல்லமனதிற்கு இறைவனின் கருணையாகக் கிடைத்த பரிசு மகிழச்செய்கிறது.. உணர்ந்து பார்த்தால் அந்தப் பணத்தின் அருமை புரியும்..!

அடுத்த கடிதமும் -  பரமுக்கு வங்கியில் கிடைத்த நிரந்தர வேலை  கோடி சூரியப்பிரகாசமாய் நம் முகத்தையும் மலரச்செய்கிறது..!

கதையில் லயித்துப்போய் அவர்களின் சுக துக்கங்களில் நாமும் பங்குகொண்டாற்போல்  நல்ல நல்ல செய்திகளாக கடிதத்தில் கொண்டுவந்த காமாட்சியின் கரங்களை கண்களில் ஒற்றிக்கொள்கிறோமே மானசீகமாக .. அது தான் கதாசிரியரின் கதை சொல்லும் கைதேர்ந்த நேர்த்தியின்  தனித்திறமை..!

தன் எதிர்காலக்கனவுகளையும் காதலையும் ஒருங்கே கூறி இயற்கையின் ஆசிகளையும் சுப சகுனங்களாகச் சித்தரிக்கும் கதையின் நிறைவுப்பகுதியில் நாமும் அவர்களுடன் சந்தோஷத்தில் திளைக்கிறோம்..! 

கதாநாயகனுக்கு, கதாநாயகி மேல் ஏற்பட்ட தீராத  காதலைக் கசக்கிப் பிழிந்து, ஜூஸ் ஆக்கி, படிக்கும் வாசகர்கள் அனைவரும் விரும்பிக் குடிக்கும் விதமாக அணு அணுவாக தான் அனுபவித்து வந்த உணர்வுகளை அ னு ப வ த் தே ன் கலந்து எழுதியுள்ள கதைதான் .. காதலாவது ..கத்தரிக்காயாவது .. என்ன ஒரு அழகான கதை..! 

வாழ்க்கையிலும் இப்படி சொல்லி வைத்தாற்போல் உதவிகளும் தரமான உண்மையான காதலும் கிடைத்தால் சொர்க்கமாகத்தான் இருக்கும் ..!! 


 







மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

இனிய நல்வாழ்த்துகள்.




 


Mr. J. ARAVIND KUMAR 

with 


Mrs. N. SINDHU ARAVIND KUMAR




On Wednesday 

the 20th January 2016

at Coimbatore.


 



     



இரண்டாம் பரிசினை 



வென்றுள்ள மற்றொருவர் யார் ?







திருமதி :


ராஜலக்ஷ்மி பரமசிவம்

அவர்கள்

வலைத்தளம்: 

“அரட்டை”

rajalakshmiparamasivam.blogspot.com












இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் 


அவர்களின் விமர்சனம் இதோ: 







கத்திரிக்காய்களுக்கு நடுவில்  காதலும்,  கரை புரண்டோடும் என்று விளக்கும் அழகிய காதல் கதை. ஆசிரியருடைய "காதல் வங்கி" கதை போலவே இந்தக் கதையிலும்  வில்லன் என்று யாரையும்  நடுவில் கொண்டு வராமல்  கதை எழுதிய கதாசிரியரை  எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதே  வில்லனின் செயல்கள் தான். ஆனால் வில்லனே இல்லாமல் அதே சமயத்தில் கதையை தொய்வு இல்லாமல்  எழுதியிருக்கும் நடை  ஆச்சர்யப்பட வைக்கிறது.

இந்தக் கதையில் பரமுவும், காமாட்சியும், நாயகன் நாயகிகள். வில்லன் என்பது  பரமுவின் உள்ளுணர்வு மட்டுமே. பரமு தன் காதலை சொல்லாமல் விட்டு விடுவானோ என்கிற எதிர்பார்ப்பை ஏகத்துக்கு அதிகமாக்கிக் கொண்டே போய், இறுதியில் அவன் காதலை   வெளியிட வைத்து கதையை  முடித்திருப்பது  நல்ல விறுவிறுப்பு. 

காமாட்சி , மற்றும் பரமு இருவருமே  நாம் தினசரி சந்திக்கும் மனிதர்கள்.. அவர்கள் இருவருடைய எண்ணங்கள்  எல்லாம் மிக உயர்ந்தவை. காமாட்சியின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியும், அதைக் கண்டு பயந்து பரமு தன காதலை தன மனதிற்குள்  பூட்டி வைத்து விடுவதும்  அதற்குச் சான்று. 

இருவரும், ஒழுக்கத்தில், குணத்தில் ஒருவரை ஒருவர்  விஞ்சி நிற்கிறார்கள்  என்றே சொல்லலாம். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பரமு , காமாட்சிக்கு உதவுவது  அவன் காதலினால் தான் என்று  நமக்குத் தோன்றுகிறது.. ஆனால் அது  உதவும் மனப்பான்மை   அதிகமாக இருப்பதனால் தான் என்பதே என் கணிப்பு.. அதை தன் கதையில் அவர் சொல்லியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. 

பரமுவை நமக்கு அறிமுகப்படுத்தும் போது அவனை ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தி இருப்பது, ஆசிரியரின் எழுத்தார்வத்தைக்  குறிக்கிறது.

காமாட்சி தானாகட்டும், தன்னுடைய நெடுநாளைய ஆசையான  சேலை, நகை வாங்குவதற்காக சேர்த்து வைத்த பணத்தை, பரமுவின் உடல் நலத்திற்காக செலவிடுவது நெகிழ்ச்சியளிக்கிறது. அங்கே காமாட்சியின் கருணையும், காதலும் வெளிப்பட்டு விட்டது.

பரமு  விபத்தில் சிக்கும் வரை, காமாட்சிக்கு பரமு மேல் காதல் உண்டா இல்லையா என்று வாசகர்களை யூகிக்க வைக்கும் கதாசிரியர், ஆஸ்பத்திரிக்கு  அழைத்து சென்ற அவசரத்திலும், பரமுவை  நன்கு கவனித்துக் கொண்டதாக சொல்லும் போதும் தான் காமாட்சியின் காதலை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். பெண்ணின் இந்தத் தற்காப்பு  குணத்தை  மனதில்  வைத்துக் கதை புனைந்து   யதார்த்தை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

"இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தி விடக் கூடாதா"  .. என்கிற வாசகர்களின் ஆர்வத்தை எகிற வைக்கிறார் ஆசிரியர்.

பரமுவும் குணமாகி, வங்கி வேலையும் கிடைத்து, இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் போது  அப்பாடி... என்றிருக்கிறது.

எனக்கு இந்தக் கதையில் ஒரு சின்னக் குறை. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதை  வெளிப்படையாகச்  சொல்லி  கதையை முடித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.  அதனால் என்ன?

பரமு-காமாட்சி இருவருக்கும் விரைவில் திருமணம் முடிந்து, வங்கியில் மிகப்பெரிய பதவியை பரமு எட்டிப் பிடித்து, கண்ணிற்கு அழகாய் இரு குழந்தைகள் பிறந்து, பல்லாண்டுக் காலம் இந்தக் குடும்பம் எல்லா செல்வமும், நலமும் பெற்று நீடுழி வாழ  என் ஆசிகள் பல!

பாராட்டுக்கள் கோபு  சார் !






  



மனம் நிறைந்த பாராட்டுக்கள்  + 

இனிய நல்வாழ்த்துகள்.




    



    


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.












நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் 

வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo







இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 

கதையின் தலைப்பு:



”ஆப்பிள் கன்னங்களும் 


அபூர்வ எண்ணங்களும் !”





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


06.03.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள் 











என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

34 கருத்துகள்:

  1. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்க்கு இனிய வாழ்த்துகள்..

    கதையில் பரமுவின் கண்களுக்கு நல்விருந்தாய் காமாட்சி அமைந்தது போல இந்த இளைஞருக்கு மிகவும் பிடித்தமான
    வாழ்க்கைத்துணை விரைவில் அமையவேண்டி மனதாரப் பிரார்த்திக்கிறோம் அன்புடன் ஆசீர்வதிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://jaghamani.blogspot.com/2016/01/blog-post_28.html

      மிக்க மகிழ்ச்சி. :)

      புதுமண தம்பதியினரான திருநிறைச் செல்வன் J. அரவிந்த் குமார் அவர்களுக்கும், திருநிறைச்செல்வி சிந்து அவர்களுக்கும் எங்களின் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் + நல்லாசிகள்.

      கோவை அன்னை சாரதாம்பாள் அருளால் தம்பதியினர், செளக்யமாகவும், சந்தோஷமாகவும், எல்லா நலங்களும், வளங்களும் பெற்று நீடூழி வாழப் பிரார்த்திக்கிறோம்.

      சந்தோஷமாக .... மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      நீக்கு
  2. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம்
    அவர்களுக்கு மனம் நிறைந்த
    இனிய நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. இரண்டாம் பரிசினை வென்ற ராஜலஷ்மி மேடத்துக்கும், அர்விந்த் குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இரண்டுமே அருமையான விமர்சனங்கள்.

    பதிலளிநீக்கு
  4. திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும், திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. இரண்டாம் பரிசு பேரருள திரு. அர்விந்த் குமாருக்கு என் பாராட்டுக்கள். இனிய இல்லாம் அமைய என் ஆசிகள் பல.

    பதிலளிநீக்கு
  6. அரவிந்தவெளிநாட்டில் வாழ்ந்தாலும் அழகு தமிழில் இவ்வளவு நேர்த்தியாக விமர்சனம் எழுதியிருந்ததைப் பார்த்து வியந்தேன். பரிசுக்குத் தேர்வானதுக்குப் பாராட்டுக்கள் அர்விந்த்! நிஜ வாழ்விலும் இனிய துணை கிடைக்க வாழ்த்துக்கள். இரண்டாம் பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கும் ராஜலட்சுமி அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்..

      தங்கள் வாழ்த்துகள் ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தாயாக எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.அரவிந்த் குமார் எங்கள் மகன்.. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் அவர் தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக தினமும் ஸ்கைப்பில் பேசும் போது சில பதிவுகளை ,கதைகளை , வாய்விட்டுப்படிக்குமாறு செய்வேன்.. உற்சாகமாகப்படித்து என்னுடன் கதையின் நிறை குறைகளை விவாதிப்பார்.. எனவே இந்த சிறுகதைப் போட்டியை மையமாக வைத்தே அவரது எழுத்துத்திறமையை வளர்க்க போட்டியில் கலந்துகொள்ள உற்சாகமளித்தேன்..அவர் பாணியில் எழுதி பரிசும் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது..!
      வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் இனிய நன்றிகள்..!

      நீக்கு
    2. Kalayarassy G March 1, 2014 at 10:40 PM

      //அரவிந்தவெளிநாட்டில் வாழ்ந்தாலும் அழகு தமிழில் இவ்வளவு நேர்த்தியாக விமர்சனம் எழுதியிருந்ததைப் பார்த்து வியந்தேன். பரிசுக்குத் தேர்வானதுக்குப் பாராட்டுக்கள் அர்விந்த்!

      நிஜ வாழ்விலும் இனிய துணை கிடைக்க வாழ்த்துக்கள்.//

      தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மேடம். தங்களின் வாழ்த்துப்படியே அவருக்கு நிஜவாழ்விலும் இனிய துணை இப்போது கிடைத்துள்ளது.

      மேலும் முழு விபரங்களுக்கும், தம்பதியினரின் புகைப்படங்களைப்பார்க்கவும் இதோ இந்தப்பதிவுக்குச் செல்லவும்:

      http://jaghamani.blogspot.com/2016/01/blog-post_28.html

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  7. திரு. J. அரவிந்த் குமார் மற்றும் திருமதி. இராஜலஷ்மி பரமசிவம் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. parisu mazahiyil thodarnthu naniyum Rajalakshmi avarkalukkup paaraattukal. Thiru Arvind avarkalukkum vaazththukkal.

    பதிலளிநீக்கு
  9. திருஅரவிந்தகுமார்,ராஜலக்ஷ்மி ரொம்பவே நல்ல விமரிசனம்.பரிசு பெற்றதற்கு இரட்டிப்புப் பாராட்டுகள். வாழ்த்துகள்
    அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. இரண்டாம் பரிசு பெற்றுள்ள அரவிந்த் குமார் அவர்களுக்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

  11. திரு VGK அவர்களின் சிறுகதை VGK விமர்சனப் போட்டியில், இரண்டாம் பரிசினை வென்ற சகோதரர் J. அரவிந்த் குமார் மற்றும் சகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவம் இருவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. இரண்டாம் பரிசினை வென்ற ராஜலஷ்மி மேடத்துக்கும், அர்விந்த் குமார் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    தொடரட்டும் பரிசு மழை.

    பதிலளிநீக்கு
  13. இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. இந்த வெற்றியாளர் அவர்கள், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://rajalakshmiparamasivam.blogspot.in/2014/03/3.html
    திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  15. ஜே.அரவிந்த் குமார் அவர்களின் விமரிசனம் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  16. பரிசினை வென்ற திருமதி ராஜலஷ்மி மேடம், திரு அரவிந்த் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. பரிசினை வென்ற திருமதி ராஜலஷ்மி அவர்களுக்கும், திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    அதுசரி இப்ப திரு அரவிந்த் குமார் அவர்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? கேட்டு சொல்லுங்க. மண்டை குடையுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 27, 2015 at 7:23 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //பரிசினை வென்ற திருமதி ராஜலஷ்மி அவர்களுக்கும், திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      //அதுசரி இப்ப திரு. அரவிந்த் குமார் அவர்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? கேட்டு சொல்லுங்க. மண்டை குடையுது.//

      உங்களுக்கும் மண்டை குடைய ஆரம்பித்துவிட்டதா? எனக்கும் அதே குடைசல் தான். இதை யாரிடம் எப்படி நான் கேட்பது என்ற தயக்கமும் எனக்கு உள்ளது. எனினும் முயற்சிக்கிறேன். ஒருவேளை தெரிந்தால் கட்டாயம் சொல்கிறேன்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
    2. அன்புள்ள ஜெயா, வணக்கம்மா.

      //அதுசரி இப்ப திரு. அரவிந்த் குமார் அவர்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? கேட்டு சொல்லுங்க. மண்டை குடையுது.//

      இனி தங்களுக்கு மண்டை குடைசல் வேண்டாம் ஜெயா. 20.01.2016 அன்று திரு. J. அரவிந்த்குமார் அவர்களுக்கு, கோவை சாரதாம்பாள் ஆலயத்தில் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.

      மேலும் மற்ற விபரங்களுக்கும், புதுப் பொண்ணு மாப்பிள்ளை படம் காணவும் இதோ இந்தப்பதிவினைப் பாருங்கோ.

      http://jaghamani.blogspot.com/2016/01/blog-post_28.html

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    3. அன்புள்ள ஜெயா,

      இந்த என் பதிவிலும் தம்பதியினரின் படத்தை இப்போது இணைத்துள்ளேன்.

      பொதுவாக Copy & Paste செய்ய இயலாது. ஏதோ என் அதிர்ஷ்டம் இன்று விடியற்காலம் ஐந்து மணிக்கே என் கண்களில் பட்டது. உடனே அதனை ஆவலுடன் Copy செய்ய முயற்சித்தேன். பலித்து விட்டது. :)

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    4. மிக்க நன்றி கோபு அண்ணா

      அங்கும் வாழ்த்தி விட்டேன்.

      //ஏதோ என் அதிர்ஷ்டம் இன்று விடியற்காலம் ஐந்து மணிக்கே என் கண்களில் பட்டது. //

      உங்களுக்கு அதிர்ஷ்டத்துக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் தாராளமா, நிறைய இருக்கு.

      நீக்கு
    5. Jayanthi Jaya January 30, 2016 at 4:52 PM


      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //மிக்க நன்றி கோபு அண்ணா
      அங்கும் வாழ்த்தி விட்டேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      **ஏதோ என் அதிர்ஷ்டம் இன்று விடியற்காலம் ஐந்து மணிக்கே என் கண்களில் பட்டது.**

      //உங்களுக்கு அதிர்ஷ்டத்துக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் தாராளமா, நிறைய இருக்கு.//

      ஹைய்யோ ! நிஜமாவா? உங்களுக்கா எனக்கா ன்னுதான், எனக்கு ஓர் சின்ன சந்தேகம், ஜெ. :)

      வருகைக்கு மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
    6. Jayanthi Jaya January 30, 2016 at 4:52 PM


      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //மிக்க நன்றி கோபு அண்ணா
      அங்கும் வாழ்த்தி விட்டேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      **ஏதோ என் அதிர்ஷ்டம் இன்று விடியற்காலம் ஐந்து மணிக்கே என் கண்களில் பட்டது.**

      //உங்களுக்கு அதிர்ஷ்டத்துக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் தாராளமா, நிறைய இருக்கு.//

      ஹைய்யோ ! நிஜமாவா? உங்களுக்கா எனக்கா ன்னுதான், எனக்கு ஓர் சின்ன சந்தேகம், ஜெ. :)

      வருகைக்கு மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  18. பராசு வென்ற திருமதி ராஜலட்சுமி மேடம் திரு அரவிந்த குமாரவங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. திருமதி ராஜலஷ்மி மேடம் திரு அரவிந்த குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் காதல் மலர்ந்த விதத்தை ரசித்து சொல்லி இருக்கிறார் அரவிந்தகுமார் ராஜலஷ்மி மேடம் கதையை வில்லனே இல்லாமல் பரபரப்பாக சொன்ன விதத்தை ரசிச்சு சொல்லி இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  20. வாழ்க்கையிலும் இப்படி சொல்லி வைத்தாற்போல் உதவிகளும் தரமான உண்மையான காதலும் கிடைத்தால் சொர்க்கமாகத்தான் இருக்கும் ..!!// உங்களுக்கு அனேகமாக காதல்-கல்யாணமோ அல்லது கல்யாண-காதலோ வாய்த்திருக்கக்கூடும். வாழ்த்துகள். நல்ல விமர்சனம். வெற்றிக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  21. புதுமணத்தம்பதியினர் அரவிந்த் குமார் & சிந்து அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்! வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி January 29, 2016 at 7:59 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //புதுமணத்தம்பதியினர் அரவிந்த் குமார் & சிந்து அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்! வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!//

      தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)

      நன்றியுடன் கோபு

      நீக்கு