About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, August 17, 2014

VGK 29 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - அட்டெண்டர் ஆறுமுகம்
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு : VGK-29  


 அட்டெண்டர் ஆறுமுகம்  இணைப்பு:


 

 


 மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  ஐந்து
  
இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள்.   


மற்றவர்களுக்கு:     


முதல் பரிசினை முத்தாக


 வென்றுள்ளவர்கள்  இருவர்:அதில் ஒருவர் 


கீத மஞ்சரிதிருமதி  கீதா மதிவாணன்  
அவர்கள்

 


முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள கீத மஞ்சரிதிருமதி கீதா மதிவாணன் 

அவர்களின் விமர்சனம் இதோ:நம்மைச் சுற்றியுள்ள பல கடைநிலை ஊழியர்களின் உளப்போக்கை நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதே இல்லை. அப்படியே கண்டுகொண்டாலும் அதைப் பெரிய விஷயமாகப் பொருட்படுத்துவது இல்லை. ம்முடனே வாழும் நமக்காக வாழும் அவர்களுக்கும் சின்னச் சின்ன ஆசைகளோ ஏக்கங்களோ உண்டு என்பதையும் அவை நிறைவேற்றப்படும்போது அவர்கள் அடையும் மகிழ்வுக்கும் மனநிறைவுக்கும் அளவே இல்லை என்பதையும் நமக்குணர்த்தும் ஒரு அற்புதமான கதை இது. யானை உண்ணும் கவளத்திலிருந்து சிந்திய பருக்கைகள் கோடி எறும்புகளை ஜீவிக்க வைக்கும் என்கிறது நீதிநெறி விளக்கம். அதுபோல் நம்மாலியன்ற சிறு உதவிகளைச் செய்யும்போது அது அவர்களுடைய உள்ளத்தில் எவ்வளவு பெரிய ஆறுதலைத் தருகிறது என்பதையும் இக்கதை நமக்குணர்த்துகிறது.

அட்டெண்டர் ஆறுமுகம் பற்றிய வர்ணனைகள்ஒவ்வொன்றும் அவரை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றனஎன்னதான் உழைப்பாளியாகவேலை தெரிந்தவராகஅன்பானவராகபொது அறிவு உள்ளவராகநேர்மையாளராக இருந்தாலும் ஒரு அலுவலகத்தில் அட்டெண்டர் நிலையிலிருப்பவர்க்கு தன் பதவியைத் தக்கவைக்க ஆரம்ப நிலையில் போட்ட கூழைக்கும்பிடு ஓய்வு பெறும்வரை தொடர வேண்டிய அவசியம் இருப்பதை ஆரம்ப வரிகளே சொல்லிவிடுகின்றனஅவர் கண்களில் தெரியும் ஏக்கத்துக்கான காரணமும் கதையை வாசிக்க வாசிக்க நமக்கு விளங்குகிறது.

வருடக்கணக்காக மற்றவர்களுக்கு வேலைக்காரனாகவே இருந்துகொண்டிருக்கிறோமேஎன்றாவது நாமும் நாலு பேரை வேலைவாங்கும் நிலைக்கு வரமுடியுமா என்னும் ஏக்கமே அதுஅட்டெண்டர் ஆறுமுகம் என்று சொல்வதை மேதகு ஆளுநர்மாண்புமிகு அமைச்சர் என்பது போல் மகிழ்வாக உணர்ந்தாலும் அவரை அறியாமலேயே அவருக்குள்ளிருக்கும் அந்த ஆழ்மன ஏக்கமும் தாழ்வு மனப்பான்மையும்தான் அவரை மாப்பிள்ளை வீட்டாரிடத்தில் தன்னை அட்டெண்டர் என்று அறிமுகப்படுத்திக்கொள்வதில் தயக்கத்தை உருவாக்கியுள்ளதுஅதை கதாசிரியர் நேரடியாக சொல்லவில்லை என்றாலும் ஆறுமுகத்தின் ஆதங்கத்தின் மூலம் நம்மை உணரச் செய்துவிடுகிறார்.

ஆறுமுகத்தின் ஆசை தவறென்று சொல்வதற்கில்லைஇத்தனை வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போதுதானே தன் ஆசையை ஆதங்கத்தை வெளியிடுகிறார்அதுவும் யாருக்காகதன் மகளுக்காகஒரு அட்டெண்டர் என்றால் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் தன்னை மதிப்பார்களாஉரிய மரியாதையைக் கொடுப்பார்களாஎன்பதை விடவும் தன் மகள் வாழப்போகும் இடத்தில் ஒரு அட்டெண்டரின் மகள்தானே என்ற ஏளனத்தோடு நடத்தப்பட்டுவிடக் கூடாது என்ற கவலையும் கூடுதல் காரணம் என்று தோன்றுகிறது.

அதை மிகச்சரியாகப் புரிந்துகொண்ட மானேஜரை நாம் பாராட்ட வேண்டும்மானேஜரின் கதாபாத்திரம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதுசாதாரணமாக எரிந்துவிழும் கடுகடுக்கும் மானேஜர்களையே கதைகளில் பார்த்த நமக்கு இப்படி ஒரு அனுசரணையாக அதுவும் ஒரு அட்டெண்டரிடம் கனிவாகப் பேசும் மானேஜர் நம்மைக் கவனிக்க வைக்கிறார்வேலை நேரம் முடிந்து எல்லோரும் வெளியேறிய பின் மானேஜரும் வீட்டுக்குக் கிளம்பும் அவசரத்தில் இருப்பார்அன்றையப் பணி முடித்த சோர்வும் காணப்படும்அந்நிலையிலும் ஆறுமுகத்திடம் நிதானமாகப் பேசி அவரது மகள் திருமணத்துக்கு என்னென்ன தேவை என்று யோசித்து கேட்கிறார்பணமாகட்டும்பத்திரிக்கை அடிப்பதாகட்டும் எல்லாவற்றையும் தானே செய்துதருவதாகச் சொல்கிறார்அவர் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை ஆறுமுகம் சொல்லும்போது அதிலிருக்கும் நியாயத்தை உணர்ந்து உடனடியாக ஆகவேண்டியவற்றை செய்து ஆறுமுகத்தின் ஆசையை நிறைவேற்றுகிறார்அலுவலகத்தில் ஒரு கடைநிலை ஊழியர் என்றாலும் அவரது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் முதலாளியின் குணாதிசயம் நம்மை ஈர்ப்பதில் வியப்பென்ன?

கதையின் மூன்றாவது கதாபாத்திரம் ஆறுமுகத்தின் சம்பந்திஉலகவியலைப் புரிந்துகொண்ட மாமனிதர்எதை நினைத்து ஆறுமுகம் கவலைப்பட்டாரோ அதை மிகச்சரியாக புரிந்துகொண்டதோடு ஆறுமுகத்தின் மன வருத்தத்தையும் தன் வருடும் வார்த்தைகளால் போக்கிவிடுகிறாரேஆறுமுகத்தைப் போலவே அவரும் கடைநிலையிலிருந்து கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு முன்னேறியிருக்கவேண்டும்அவருடைய அப்பா காலத்து நிகழ்வைக் குறிப்பிடுவதொன்றே சான்றுஅவர் சொல்வது போல் மனசாட்சிக்கு விரோதமான காரியமெதுவும் செய்யாமல் நியாயமான முறையில் உழைத்துப் பிழைக்கும் மனத்துக்கு வந்தனை செய்து வணங்கவேண்டுமன்றோஎந்தத் தொழிலாய் இருந்தால் என்னசெய்யும் தொழிலே தெய்வம் அல்லவா?

ஆறுமுகத்தின் வருத்தம் போக்கும் அலுவலக மானேஜர்எதிர்கால சம்பந்தி ஆகிய இரண்டு கதாமாந்தர்களின் பாத்திரப்படைப்பு வெகு அற்புதம்ஆறுமுகத்திடம் அவர்கள் புரிதலுடனும் பரிவுடனும் பழகும் சூழல் நம்மை நெகிழச்செய்கிறதுஆறுமுகம் போன்றவர்களின் தாழ்வுமனப்பான்மையைப் போக்கும் விதமாக தன்னாலான காரியங்களை ஆற்றும் இருவரும் போற்றப்படவேண்டியவர்கள்ஆக மொத்தம் மனத்துக்கு இதமானதும்சகமனிதனுக்கு சரியான மதிப்பளிப்பதும்,வாழ்க்கையின் யதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளச் செய்யும் துணிவைத் தருவதுமான அருமையான கருகதாசிரியருக்குப் பலமான பாராட்டுகள். 

-oOo-


Thanks a Lot, Madam.


- vgk   மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


    


அனைவருக்கும் இனிய 

கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்

    

முதல் பரிசினை  முத்தாக


வென்றுள்ள மற்றொருவர்


 Mr.. E.S. SESHADRI


அவர்கள்


 

முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள

திரு.

 E.S. சேஷாத்ரி 


  
அவர்களின் விமர்சனம் இதோ
இந்தக் கதை வாயிலாகக் கதாசிரியர் பின்வரும் கருத்துகளை நம் மனதில் ஆழமாகப் பதிவு செய்துவிடுகிறார்.

வாழ்வாதாரத்திற்கு ஒருவர் நேரிய வழியில் பொருளீட்டி, பொய் புரட்டின்றி வாழ முற்பட்டு, அதற்காகப் பணிசெய்யும்போது, தன் பதவி குறித்துத் தாழ்வு மனப்பான்மையை எந்தக் காலகட்டத்திலும் கொள்ளக்கூடாது.

ஒரு நல்ல நிர்வாகி தன்னிடம் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் கருத்துக்களைக் கூடக் கேட்டறிந்து, அதில் ஏற்புடையவற்றைப் பரிசீலித்து ஆவன செய்ய முயன்றால், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடத்தில் நன்மதிப்பைப் பெறுவதோடு மட்டுமன்றி, அந்தக் கம்பெனியோ அல்லது அலுவலகமோ ஒரு நல்ல உயர்வைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

பாத்திரத்தை மனதில் பதிய வைப்பதில் ஆசிரியரின் திறன். அட்டெண்டர் ஆறுமுகத்தின் தோற்றத்தை நான்கே வரிகளில் நயம்பட உரைப்பதன் மூலம் வெளிப்படுகிறது..

1978ல் பணிக்குச் சேர்ந்து, 1988ல் தனக்குத் திருமணம் நடைபெற்ற போதும் “அட்டெண்டர் ஆறுமுகம்” என்று அடைமொழியுடன் தன்னை அனைவரும் அழைப்பதைப் பெருமையாக எண்ணிய அவரின் மனதில், தன் பெண்ணுக்கு வரன் தேடும் போதுதான் தன் பதவி குறித்த தாழ்வு மனப்பான்மை அவருக்குள் தோன்றியிருக்கிறது.


என்னதான் மகளின் திருமணத்திற்கான பணம். நகை நட்டு, பாத்திரம் பண்டம் ஆகியவற்றை சேர்த்து வைத்திருந்தாலும் தன் பதவி குறித்து ஒரு தாழ்வு மனப்பான்மை மற்றும் மன உளைச்சல் அவருக்குள் இருப்பதை அவருடைய உரையாடல் மூலம் உணரமுடிகிறது.

பதவி பூர்வ புண்ணியானாம் என்று கூறுவார்கள். நம் கதாநாயகன் ஆறுமுகம், “அட்டெண்டர் ஆறுமுகம்” ஆனது அவரின் பூர்வ ஜென்மப் புண்ணியமே. ஒரு வேலையில் அமர்ந்து, இவ்வளவு நாட்கள் பணிபுரிந்த பின்னர் அவருக்குள் தன் பதவி குறித்து ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது அவசியமில்லாததாகவே தோன்றுகிறது.


அதே நேரத்தில், பள்ளிப்படிப்பு அதிகம் இல்லையென்றாலும், தனது முப்பத்தாறு ஆண்டு பணி அனுபவத்தால் அந்த அலுவலகத்தின் அத்தனை வேலைகளையும் அறிந்த, பொது அறிவு அதிகம் பெற்ற ஆறுமுகத்திற்குப் பதவி உயர்வின் மீதிருந்த ஏக்கம் நியாயமானதாகவும் தோன்றுகிறது.

அந்த ஏக்கத்தின் தாக்கத்தை உணர்ந்தவராகிறார் அந்த அலுவலகத்தின் மேனேஜர். நல்லதொரு நிர்வாகிக்கான பண்புகள் நிறைந்தவராகக் கதாசிரியர் அந்தப் பாத்திரத்தைப் படைத்தது பாராட்டுக்குரியது.

மனிதாபிமானத்துடன் அதற்கு உடனடியாக ஆவன செய்து, 10, 20 மற்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு, அதற்குத் தகுந்தவாறு பதவி உயர்வு அளித்தது ஒரு நல்ல நிர்வாகத்தின் பண்பினை உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என உரைத்த வான்புகழ் வள்ளுவனின் வாக்கினை மெய்யாக்குதல்போல் ஆறுமுகத்தின் கோரிக்கையால் அனைவரும் பதவி உயர்வு பெற்றனரோ?

என்னதான் பதவி உயர்வை அடைந்தபோதும் அடைமொழியுடன் அழைக்கப்படுவதை மாற்ற முடியாமல் போகிறது. இந்த நேரத்தில் நம் கதாநாயகனுக்கு உண்மையை உணர்த்தும் விதத்தில் சம்பந்தி ஆகப் போகிறவரின் தொலைபேசி உரையாடல் அமைகிறது.

அவரது கருத்தாக ஆசிரியர் தம் கருத்தினை அழகாகப் பதியவைக்கிறார். அனைவரையும் அதை ஆமோதிக்கவும் வைத்துவிடுகிறார்.


இன்பம் என்பது துன்பத்தோடு கூடியது. வாழ்வில் இன்பத்திற்கு பணமும் அவசியம். தேவைக்கேற்ப பொருளீட்ட எந்தப் பணியில் இருந்தாலும் திறம்பட செயலாற்றி, நேரிய வழியில் செயல்பட்டு நம் கடமையில் தவறாது இருத்தல் ஒன்றே போதுமானது. பிறர் நம் பதவி குறித்தோ, செயல் குறித்தோ விமர்சிப்பதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

உள்ளத்தனையது உயர்வு. எனவே தாழ்வு மனப்பான்மை அகற்றி, திறம்பட செயலாற்றி வரும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்தினால் உயர்வு நிச்சயம் என்பதை எளிமையான கதாபாத்திரங்களின் துணைகொண்டு, கோர்வையாகவும், ஆழமாகவும் உணர்த்திச் செல்கிறார்.

கதை திருமணத்தோடு சுபமாக முடிக்கப்படுகிறது. ஆறுமுகத்தின் மன உளைச்சல் விலகி மகிழ்வும் தெளிவும் பிறக்கிறது. தையின் முடிவில் மகிழ்வது அவர் மட்டுமல்ல. நாம் அனைவரும் தானே! இத்தகைய கதையைப் படைத்த கதாசிரியருக்கு என் உளமார்ந்த நன்றி!


Thank you very much ....

My Dear E.S. Seshadri Sir ! 


- vgk

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.  
       
Mr. E.S. SESHADRI     


VGK-25 TO VGK-29

  
   
 

     

முதல் பரிசினை முத்தாக வென்றதுடன்


தனது இரண்டாவது ஹாட்-ட்ரிக் பரிசினை 


ஐந்தாம் சுற்றிலும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.காரஞ்சன் (சேஷ்) 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் 


அன்பான இனிய நல்வாழ்த்துகள் Hat-Trick Prize Amount will be fixed later 


according to his Continuous Further Success in VGK-30.  


 
    

  

   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது

.இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.


காணத்தவறாதீர்கள் !அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 


இணைப்பு: 


கதையின் தலைப்பு: VGK-31 


     முதிர்ந்த பார்வை    
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


21.08.2014
இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

        வை. கோபாலகிருஷ்ணன்    
28 comments:

 1. //நம்முடனே வாழும் நமக்காக வாழும் அவர்களுக்கும் சின்னச் சின்ன ஆசைகளோ ஏக்கங்களோ உண்டு என்பதையும் அவை நிறைவேற்றப்படும்போது அவர்கள் அடையும் மகிழ்வுக்கும் மனநிறைவுக்கும் அளவே இல்லை என்பதையும் நமக்குணர்த்தும் ஒரு அற்புதமான கதை இது.//அழகாக விமர்சனம் எழுதி முதற்பரிசினைப் பகிர்ந்துகொள்ளும் திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

  ReplyDelete
 2. முதற்பரிசு கிடைத்திருப்பது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு.வைகோ ஐயா அவர்களுக்கும், விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! வாழ்த்துரைக்கும் இதயங்களுக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete
 3. முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள:
  காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கு
  சிறப்பான விமர்சனத்திற்குப்பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. வந்து பார்த்தால், பின்னூட்ட ஹாலே 'ஹோ'வென்று வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறதே! எப்படியோ இருக்கும் இரண்டு பேரோடு மூன்றாவதாக நானும் சேர்ந்து கொள்கிறேன்!

  ReplyDelete
 5. முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள:
  கீத மஞ்சரி திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

  முதலில் கொடுத்த இரு கருத்துரைகள் காணவில்லை..
  ஆகவே மற்றொன்று................

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி August 17, 2014 at 9:59 PM

   வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   //முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள:
   கீத மஞ்சரி திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..//

   கீத மஞ்சரி திருமதி கீதா மதிவாணன் அவர்கள் சார்பில் தங்களுக்கு என் நன்றிகள்.

   //முதலில் கொடுத்த இரு கருத்துரைகள் காணவில்லை..
   ஆகவே மற்றொன்று................//

   எனக்கு அது வந்து சேரவில்லை. நான் அப்போதே சந்தேகப்பட்டேன். இனி தாங்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பும் முன்பு சேமித்து வைத்துக்கொண்டு ஒரு முறைக்கு இருமுறையாக [சந்தேகத்துக்கு சாம்பாராக] அனுப்பி வைய்யுங்கோ, ப்ளீஸ்.

   [பட்டிக்காடா பட்டணமா படத்தில் ஒரு பாட்டு வரும் ....... ’அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு ............’ என்று.

   அதில் ‘ஒன்னுக்கு ...... ரெண்டாக இருக்கட்டுமே’ என ஒருவரி வரும். ஏனோ அந்தப்பாட்டை என் வாய் இப்போது முணுமுணுத்து வருகிறது. ;)))))

   பிரியமுள்ள VGK

   Delete
 6. சகோதரி கீதா மதிவாணன் மற்றும் நண்பர் ஷேசாத்திரி இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. முதல் பரிசுக்குரியதாய் என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட என் விமர்சனக் கருத்துகளும் சேஷாத்ரி அவர்களுடைய கருத்துகளும் ஒத்தவையாகவே இருப்பதும் இருவருமே முதல் பரிசைப் பகிர்ந்துகொள்வதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. மனம் நிறைந்த பாராட்டுகள் திரு.சேஷாத்ரி அவர்களுக்கு.

  பாராட்டு தெரிவித்துள்ள திரு. சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் ஜீவி சாருக்கும் என் அன்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். போட்டிக்கு வரும் பல விமர்சனங்களில் பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றோடு அவ்வப்போது விமர்சனக் குறிப்புகளும் வழங்கும் நடுவர் அவர்களுக்கும் இத்தகைய அருமையான வாய்ப்பினை அசராமல் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கும் கோபு சார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

  ReplyDelete
 8. பதிவுலகில் எழுதத்தொடங்கிய எனக்கு தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் என் அன்புக்குரிய ’கோபு அண்ணா’ தானே எனக்கு ரோல் மாடல் + மானஸீக குருநாதர்.
  அதனால் என் குருவை வாழ்த்தி, வணங்கி இந்த வலைச்சர ஆசிரியர் பணியைத் தொடங்குகிறேன்.

  இந்த ஒரு வாரமும் கோபு அண்ணாவின் வலைப்பூவிலிருந்து எனக்குப் பிடித்த (பிடிக்காத என்று சொல்ல எந்த இழையும் இல்லை), எனக்கு மிகவும் பிடித்த இழையை தினமும் (தொப்பையப்பனை எல்லா நல்ல செயல்களுக்கும் முன் முதலில் வணங்குவது போல்) முதலில் கொடுத்து பிறகு என் பணியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.//

  இன்றைய வலைச்சர அறிமுகத்தின் ஒரு சிறிய பகுதி..
  இனிய நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி August 18, 2014 at 5:59 PM

   வாங்கோ, வணக்கம்.

   *****பதிவுலகில் எழுதத்தொடங்கிய எனக்கு தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் என் அன்புக்குரிய ’கோபு அண்ணா’ தானே எனக்கு ரோல் மாடல் + மானஸீக குருநாதர்.

   அதனால் என் குருவை வாழ்த்தி, வணங்கி இந்த வலைச்சர ஆசிரியர் பணியைத் தொடங்குகிறேன்.

   இந்த ஒரு வாரமும் கோபு அண்ணாவின் வலைப்பூவிலிருந்து எனக்குப் பிடித்த (பிடிக்காத என்று சொல்ல எந்த இழையும் இல்லை), எனக்கு மிகவும் பிடித்த இழையை தினமும் (தொப்பையப்பனை எல்லா நல்ல செயல்களுக்கும் முன் முதலில் வணங்குவது போல்) முதலில் கொடுத்து பிறகு என் பணியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.*****

   //இன்றைய வலைச்சர அறிமுகத்தின் ஒரு சிறிய பகுதி..
   இனிய நல்வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!//

   அன்புடன் தாங்கள் இங்கு வருகை தந்து, இந்த இனிய செய்தியினை என் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுதான் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் இத்தகைய இனிய தகவல்களால் கூடிய சீக்கரம் 100ஐ எட்டி விடலாம் என நம்புகிறேன்.

   அறிமுகம் எண் 1 முதல் அறிமுகம் எண் 39 வரை, சுமார் 6-7 பதிவுகளாக COMPOSE செய்து வைத்துவிட்டேன். 100ஐ எட்டிய பிறகு அவ்வப்போது வாரம் ஒரு நாள் வீதம் வெளியிடலாம் என நினைத்துக்கொண்டுள்ளேன். திட்டமிட்டுள்ளேன்.

   அதாவது
   1] அறிமுக எண்:
   2] அறிமுகப்படுத்தியவர் வலைச்சர ஆசிரியரின் படம்:
   3] வலைச்சர ஆசிரியரின் பெயர்
   4] அதற்கான வலைச்சர இணைப்பு:
   5] அதில் என் வலைத்தளத்தினைப்பற்றி அவர் எழுதியுள்ள செய்திகள்

   என விபரமாகப் பதிவுகள் கொடுக்க விரும்புகிறேன்.

   இன்னும் அறிமுகம் எண்: 40 முதல் 93 வரை COMPOSING வேலைகள் நிறைய பாக்கி உள்ளன.

   எதற்குமே நேரம் இல்லாமல் உள்ளது. போட்டி வேலைகளிலும் மும்முரமாக மூழ்க வேண்டியுள்ளது.

   பதிலே வராவிட்டாலும்கூட அவ்வப்போது பலருக்கும் மெயில் மூலம் சில இனிய செய்திகளை அறிவித்துக்கொண்டே இருக்க வேண்டியதாகவும் உள்ளது.

   கூடவே வெளிநாட்டிலிருந்து அன்புடன் வருகை தந்துள்ள பேரன் + பேத்தியுடனும் சிலமணி நேரங்களாவது செலவழிக்க வேண்டியுள்ளது.

   நாட்டு நடப்புகளை அறியவோ, பிறர் பதிவுகள் பக்கம் போகவோ நேரமில்லாமல் உள்ளது.

   எனினும் தங்களின் தித்திப்பான இந்தத் தகவலுக்கும், பாராட்டுக்களுக்கும், இனிய நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள VGK

   Delete

 9. // இன்று நாம் மூத்த குடிமக்களின் (SENIOR CITIZENS) வலைத்தளங்களை அறிமுகப் படுத்தி கௌரவிப்போமா?

  என் மானசீக குருநாதர் திரு வை கோபால கிருஷ்ணனும் ஒரு மூத்த குடிமகன் தானே.

  அடுத்தவங்கள கௌரவிக்கறதுல கோபு அண்ணாவுக்கு இணை அவரே தான். இந்த இழையைப் படித்து தெரிந்து கொள்வோமே.

  http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html //

  இன்றைய வலைச்சரத்தின் பகுதி இவைகள்..
  வலைச்சரத்தின் குறிப்பிடத்தக்க பிரபலமாக வலம்
  வருவதற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரிAugust 19, 2014 at 8:21 AM

   *****இன்று நாம் மூத்த குடிமக்களின் (SENIOR CITIZENS) வலைத்தளங்களை அறிமுகப் படுத்தி கௌரவிப்போமா?

   என் மானசீக குருநாதர் திரு வை கோபால கிருஷ்ணனும் ஒரு மூத்த குடிமகன் தானே.

   அடுத்தவங்கள கௌரவிக்கறதுல கோபு அண்ணாவுக்கு இணை அவரே தான். இந்த இழையைப் படித்து தெரிந்து கொள்வோமே.

   http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html *****

   //இன்றைய வலைச்சரத்தின் பகுதி இவைகள்..
   வலைச்சரத்தின் குறிப்பிடத்தக்க பிரபலமாக வலம்
   வருவதற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!//

   வாங்கோ, வணக்கமுங்கோ ...... தித்திப்பான இந்த தகவல் தங்கள் மூலம் கிடைத்துள்ளது மேலும் தித்திப்போ தித்திப்பாக உள்ளதுங்கோ..... இதைப்படித்து விட்டு பிறகு தான் நானே அங்கு சென்று சில கருத்துக்கள் கூறி வந்தேனுங்கோ. மீண்டும் நன்றிங்கோ. இப்போ அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருக்குதுங்கோ. ;(

   பிறகு பார்ப்போமுங்கோ.........

   இனிய வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மீண்டும் மீண்டும் என் நன்றீங்கோ .......

   பிரியமுள்ள VGK

   Delete
 10. தொடர்ந்து முதல் பரிசினைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் திருமதி கீதா மதிவாணனுக்குப் பாராட்டுகள். ஏதானும் ஒரு பரிசைத் தொடர்ந்து பெறும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 11. இரு முறையும் முதல்பரிசு என்றே சுட்டி கொடுத்திருக்கிறீர்களே? இம்முறை இரண்டாம் பரிசு யாருக்கும் இல்லையா?

  ReplyDelete
 12. இவருதான் உண்மையா இத செய்தாரா இல்ல இவர் மனைவியார் செய்தாரா என்பதை அடுத்த முறை அவங்களை சந்திக்கும் போது ரகசியமா கேட்டு உங்களுக்கு சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இருங்க.
  http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html //

  //சரி கடைசியாக ஒருஇலவச இணைப்பு:
  கோபு அண்ணாவின் அன்புப் பரிசு.
  http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html//

  இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு
  இனிய வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.!

  http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_20.html

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி August 20, 2014 at 7:46 AM

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ
   வணக்கமுங்கோ.

   *****இவருதான் உண்மையா இத செய்தாரா இல்ல இவர் மனைவியார் செய்தாரா என்பதை அடுத்த முறை அவங்களை சந்திக்கும் போது ரகசியமா கேட்டு உங்களுக்கு சொல்றேன். அதுவரைக்கும் பொறுமையா இருங்க.
   http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html *****

   நான் தான் செய்தது என்பதை நீங்களாவது நம்புங்கோ.

   வேண்டுமானால் உங்களுக்காக நானே என் கைப்பட [இதர வழக்கமான பருப்புக்களுடன் நன்கு தேறிய A1 Quality முந்திரிப்பருப்பும் ஒரு கிலோ போட்டு, ஸ்பெஷலாகச் செய்து தருகிறேனுங்கோ.

   அந்த ஜெயந்திக்கு மட்டும் இது விஷயம் தெரிய வேண்டாமுங்கோ. நமக்குள் மட்டும் இரகசியமாக இருக்கட்டுங்கோ.

   நம் ஜெயந்திக்கு கொழுப்பு ரொம்பவும் ஜாஸ்தி தானுங்கோ. கொழுப்பெடுத்த குந்தாணி நம்பர் டூ என்றும் சொல்லலாம் தானுங்கோ. ;)

   கொ.எ.கு. நம்பர் ONE யாருன்னு உங்களுக்கே நினைவு இருக்கும் என்று நான் நினைக்கிறேனுங்கோ ......

   என்னை ஏதும் வம்பிழுக்காவிட்டால் தூக்கமே வராது .... இந்த ’ஜெ’க்குன்னு தெரிஞ்சிக்கோங்கோ. என்னிடம் அவ்வளவு ஒரு அபரிமிதமான வாத்ஸல்யம் முங்கோ.

   >>>>>

   *****சரி கடைசியாக ஒருஇலவச இணைப்பு:
   கோபு அண்ணாவின் அன்புப் பரிசு.
   http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html*****

   //இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.!

   http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_20.html//


   மிகவும் சந்தோஷமுங்க !

   இதை ..... இதை ...... இதைத்தான் நானும் தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்தேனுங்கோ.

   தித்திப்பான இந்தச்செய்தி தங்கள் மூலம் என் கவனத்திற்கு இன்றும் வந்துள்ளது மேலும் தித்திப்பாக ஐஸ்கிரீம் போல என் மனதை ஜில்லிட்டுப்போக வைத்துள்ளதுங்கோ.

   தங்களின் அன்பு வருகைக்கும் அழகான இனிய வாழ்த்துகள் + பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்ங்கோ.

   வலைச்சரத்தின் பக்கம் இனிதான் நான் போய்ப்பார்க்க உள்ளேனுங்கோ.

   பிரியமுள்ள கோபு

   Delete
 13. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. V.G.K இன் 29 ஆவது சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசினைப் பெற்ற சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மற்றும் ஈ.எஸ்.சேஷாத்ரி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. கோபு அண்ணாவின் பஜ்ஜின்னா பஜ்ஜிதான் சிறுகதை
  http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html
  http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html
  //

  இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி August 21, 2014 at 11:40 AM

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ,
   வாங்கோ, வாங்கோ, வாங்கோ,
   வணக்கம்.

   நினைத்தேன் வந்தாய் ........ நூறு வயது .......... !
   ..........................................................................................
   ...........................................................................................
   ...........................................................................................

   இந்த இனிய பாடலை என் வாய் இப்போது முணுமுணுக்கிறதாக்கும். ;)

   *****கோபு அண்ணாவின் பஜ்ஜின்னா பஜ்ஜிதான் சிறுகதை
   http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html
   http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html*****


   //இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.!//

   தினமும்
   தித்திக்கத்
   தித்திக்கத்
   திகட்டாமல்

   வாழ்த்திவரும்
   தங்களுக்கு என்
   மனம் நிறைந்த
   இனிய அன்பு
   நன்றிகள்.

   பிரியமுள்ள
   VGK

   Delete
 16. ’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

  அதற்கான இணைப்பு:

  http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

  அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 17. முதல் பரிசினைப் பெற்ற சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மற்றும் ஈ.எஸ்.சேஷாத்ரி அவர்களுக்கும் gனது மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 18. பரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 19. முதல் பரிசினை வென்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. பரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்கக்ஷுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. பரிசு வென்ற திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்திரி இருவர்க்கும் வாழ்த்துகள். ஹாட்ரிக் வெற்றுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. முதற்பரிசு கிடைத்திருப்பது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு.வைகோ ஐயா அவர்களுக்கும், விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! வாழ்த்துரைக்கும் இதயங்களுக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete