About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, December 10, 2015

சாதனையாளர் விருது ... திருமதி. சிவகாமி அவர்கள் [பூந்தளிர்-3]

அன்புடையீர், 


அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


 
’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்பில் 31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் ஓர் சுலபமான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.


அதற்கான இணைப்பு தங்கள் நினைவுக்காக இதோ:


மேற்படி போட்டியில் கலந்துகொண்டு
வெற்றிபெற, வரும் 31.12.2015 
நிறைவு நாள் ஆகும்.


இதில் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோர் அனைவருக்கும் தலா ரூபாய் ஆயிரம் [Rs. 1000/-] வீதம் ரொக்கமாகப் பரிசளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். 

 சாதனையாளர் 


 திருமதி. 
 சிவகாமி   
அவர்கள்வலைத்தளம்: 
பூந்தளிர்-3 சாதனையாளர் விருது 
திருமதி.
 சிவகாமி   
அவர்கள்
 
வலைத்தளம்:
பூந்தளிர்-3


VAI. GOPALAKRISHNAN என்கிற http://gopu1949.blogspot.in 
வலைத்தளத்தில் என்னால் வெளியிடப்பட்டுள்ள 
முதல் 750 பதிவுகளுக்கும்
  ( 02.01.2011 To 31.03.2015 )
தொடர்ச்சியாக வருகை தந்து 
பின்னூட்டங்கள் இட்டு
சாதனை படைத்துள்ளார்கள்.

அவர்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் 
சாதனைகளைப் பாராட்டி 
Rs. 1,000 /-
[ரூபாய் ஆயிரம்]
ரொக்கப்பரிசும்
சாதனையாளர் விருதும் அளிப்பதில்
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள் !
அன்பான இனிய நல்வாழ்த்துகள் !!

பிரியமுள்ள 
 கோபு 
{ Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html }


’என்றாவது ஒரு நாள்’ 
என்னை நேரில் சந்திக்க நேரும்போது 
இந்தப் பரிசுத்தொகையினை என்னிடமிருந்து 
நேரில் பெற்றுக்கொள்வதாக இவர்கள்
விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.


 
 


என் மீது ஆத்மார்த்தமான, தனி பிரியத்துடன் மின்னஞ்சல்கள் மூலம் பழகி வரும் இவர்கள், இந்தப் பின்னூட்டமிடும் போட்டியில் 24.04.2015 முதல் கலந்துகொள்ள ஆரம்பித்து, 07.09.2015 க்குள் (137 minus 60 = 77 நாட்களுக்குள்) ஏற்கனவே பின்னூட்டமிடாமல் விட்டுப்போய் இருந்த என் அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் அளித்து முடித்துள்ளார்கள். 

மொத்தமான இந்த  137 நாட்களிலும்கூட, நடுவில் உடல்நிலை மிகவும் சரியில்லாத காரணத்தால், ஜூன் ஜூலை ஆகிய சுமார் இரண்டு  மாத காலங்களுக்கு மேல், பின்னூட்டமிடவே, என் பதிவுகள் பக்கம் இவர்களால் சுத்தமாக வர இயலாமல் போய் விட்டது. :(

அதன்பின் 05.08.2015 தொடங்கி ஏதோ அவசரமானதோர் நெருக்கடியுடன் 07.09.2015க்குள், என் பதிவுகள் அனைத்துக்கும் பின்னூட்டமிட்டு, போட்டியை வெற்றிகரமாக முடித்துவிட்டுச் சென்று விட்டார்கள்.

இவர்களின் தாய்மொழி தமிழே என்றாலும், இவர்கள் வாழ்ந்தது, படித்தது, வாழ்க்கைப்பட்டது எல்லாமே வட இந்தியாவில் மட்டுமே என்பதால், பள்ளிப்படிப்பிலும் தமிழினை எழுதவோ, படிக்கவோ, கற்கவோ வாய்ப்பு இல்லாமலேயே இருந்துள்ளார்கள். 

மேலும் பின்னூட்டமிட இவர்களிடம் மேஜை கணினியோ அல்லது மடிக்கணினியோ ஏதும் இல்லாத நிலையிலும் தன்னிடம் உள்ள SAMSUNG SMART PHONE மூலமே அனைத்துப் பின்னூட்டங்களையும் கஷ்டப்பட்டு டைப் அடித்து அனுப்பியுள்ளார்கள்.  

இருப்பினும் இந்தப்போட்டியில் மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டு, மிகக்குறுகிய 77 நாட்களை மட்டும் இதற்காக எடுத்துக்கொண்டு, முதன் முதலாக வெற்றிவாகை சூடியுள்ள பெண் பதிவர்’ என்ற பெருமையை அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


oooooOooooo

அன்புள்ள சிவகாமி,

மனம் நிறைந்த 
நல்வாழ்த்துகள்!

நீங்க ..... எங்கிருந்தாலும் வாழ்க! :)

என்னிடம் நிலுவையில் உள்ள தங்களின் பரிசுத்தொகையினை
விரைவில் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள் எனத்
தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டுக்குள் தற்காலிகமாகத் தங்கியிருந்தபோது
இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ள நீங்கள்,
இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் இடத்திற்கே
இப்போது குடியேறிவிட்டோம் என்பதற்காக
இந்த என் மிகச்சிறிய பரிசினை
அலட்சியப்படுத்தாதீங்கோ !

இதில் என் அன்பும், தனிப்பிரியமும் 
மிகவும் ஆழமாகக் கலந்துள்ளன
என்பதை தயவுசெய்து மறக்க வேண்டாம்.

:) WELCOME :)

பிரியமுள்ள கோபு’பூந்தளிர்’
உடன் பூமணம் கமழும் இந்தப்பதிவு
இந்த 2015ம் ஆண்டின் என் 100வது
பதிவாக அமைந்துள்ளது எனக்கு
மேலும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

மற்ற சாதனையாளர்கள் பற்றிய செய்திகள் 
இனியும் அவ்வப்போது தொடரும்.வெற்றியாளர்கள் பற்றிய ஒட்டுமொத்தச் செய்திகள் 
இறுதியில் தனிப்பதிவாகவும் வெளியிடப்படும். 


என்றும் அன்புடன் தங்கள்
[ வை. கோபாலகிருஷ்ணன் ]

108 comments:

  1. ஆஹா!!மீண்டும் கரும்பு தின்னக் கூலி. வாத்யார்னா ஏதாவது ரூபத்துல யாருக்காச்சும் எதாச்சும் குடுத்துகிட்டே இருக்கணும்போல இருக்கு.
    // தமிழ்நாட்டுக்குள் தற்காலிகமாகத் தங்கியிருந்தபோது
    இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ள நீங்கள்,இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் இடத்திற்கே
    இப்போது குடியேறிவிட்டோம் என்பதற்காக
    இந்த என் மிகச்சிறிய பரிசினை
    அலட்சியப்படுத்தாதீங்கோ !//ஹா..ஹா.ஹா..இதுலயும் வாத்யாரோட பஞ்ச். 77 நாட்களில் 750 பின்னூட்டங்கள். கஷ்டமான வேலைதான். திருமதி. சிவகாமியின் - சபதம் நிறைவேறிவிட்டது. எடுத்ததை முடித்து வெற்றிவாகை சூடிய முதல்-பெண் பதிவாளர் சிறப்பினை பெற்றமைக்கு வாழ்த்துகள் சகோதரி.
    //இவர்களின் தாய்மொழி தமிழே என்றாலும், இவர்கள் வாழ்ந்தது, படித்தது, வாழ்க்கைப்பட்டது எல்லாமே வட இந்தியாவில் மட்டுமே என்பதால், பள்ளிப்படிப்பிலும் தமிழினை எழுதவோ, படிக்கவோ, கற்கவோ வாய்ப்பு இல்லாமலேயே இருந்துள்ளார்கள். // இருந்தபோதும் முதல் நபராக வெற்றிவாகை சூடிய பெருமை பெற்றமைக்கு மீண்டும் வாழ்த்துகள். வாத்தியாரால விசிறிக்கு தரப்படும் விசிறி ...செம காத்து அள்ளி வீசும்னு நெனக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. RAVIJI RAVI December 11, 2015 at 12:32 AM

      வாங்கோ வாத்யாரே, வணக்கம்.

      **தமிழ்நாட்டுக்குள் தற்காலிகமாகத் தங்கியிருந்தபோது
      இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ள நீங்கள், இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் இடத்திற்கே இப்போது குடியேறிவிட்டோம் என்பதற்காக
      இந்த என் மிகச்சிறிய பரிசினை அலட்சியப்படுத்தாதீங்கோ !**

      //ஹா..ஹா.ஹா..இதுலயும் வாத்யாரோட பஞ்ச்.//

      :) மிக்க மகிழ்ச்சி.

      //சிவகாமியின் - சபதம் நிறைவேறிவிட்டது.//

      சூப்பர் .... பஞ்ச் வாத்யாரே !

      //வாத்தியாரால விசிறிக்கு தரப்படும் விசிறி ...செம காத்து அள்ளி வீசும்னு நெனக்கிறேன். //

      விசிறிக்குத் தரப்படும் விசிறி :)

      ரசித்தேன். சிரித்தேன். மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

      அன்புடன் VGK

      Delete
  2. திருமதி சிவகாமி அவர்களின் வெற்றி மிகவும் பாராட்டப்படக்கூடியதே. அதுவும் ஸ்மார்ட் போனில் இருந்தே அத்தனை பின்னூட்டங்களையும் போட மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த மனதிடம் மிகவும் போற்றுதலுக்குரியதே. அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி December 11, 2015 at 4:37 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //திருமதி சிவகாமி அவர்களின் வெற்றி மிகவும் பாராட்டப்படக்கூடியதே. அதுவும் ஸ்மார்ட் போனில் இருந்தே அத்தனை பின்னூட்டங்களையும் போட மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த மனதிடம் மிகவும் போற்றுதலுக்குரியதே. அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.//

      தங்களின் அன்பு வருகைக்கும் புரிதலுடன் கூடிய அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      Delete
  3. ஒவ்வொரு சாதனையாளாரைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவுகள் உபயோகமாக இருக்கும்.
    வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
    Replies
    1. Chokkan Subramanian December 11, 2015 at 4:45 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒவ்வொரு சாதனையாளாரைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவுகள் உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள் ஐயா .//

      மிக்க நன்றி

      Delete
  4. சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஸ்மார்ட் போனில் பின்னூட்டமிடுவதை விட, ஒன்றொன்றாய்ப் பதிவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமம்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். December 11, 2015 at 6:08 AM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

      //சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.//

      தங்களின் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் பூந்தளிர் சிவகாமி சார்பில் என் நன்றிகள்.

      //ஸ்மார்ட் போனில் பின்னூட்டமிடுவதை விட,
      ஒன்றொன்றாய்ப் பதிவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமம்!//

      என்னுடைய இந்தப்போட்டியில் இதுவரை கலந்துகொண்டுள்ள ’ஸ்மார்ட்’ ஆனவர்களில் சுமார் 45% வரை ஸ்மார்ட் ஃபோன் மூலம் பின்னூட்டமிட்டவர்களே என்பதால் அவர்களின் கஷ்டத்தை நானும் நன்கு உணர்ந்து, நானே அவ்வப்போது மெயில் மூலம் பதிவுகளின் லிங்க்ஸ் அனுப்பி உதவிக்கொண்டு இருந்தேன்.

      அதுபோல ஸ்மார்ட் ஃபோன் ஆசாமிகளுக்கு Copy & Paste போடவும் முடியாத சிரமங்கள் இருந்துள்ளன. அதனால் வழக்கம்போல அவர்களால் பதிவினை வரிக்குவரி சிலாகித்து, விரிவாக பின்னூட்டம் இடமுடியாமல் கஷ்டமாக இருந்துள்ளது.

      ஒருகாலத்தில் (2013 இல்) இதே பூந்தளிர் சிவகாமி கணினி மூலம் எனக்கு ஒவ்வொரு பதிவுக்கும் மிக நீண்ட சுவாரஸ்யமான பின்னூட்டங்கள் எழுதி அனுப்பி மகிழ்வித்திருந்தார்கள்.

      இப்போது ஸ்மார்ட் ஃபோன் மூலம் மட்டுமே என்பதால் அவர்களுக்கேகூட அவர்களின் சமீபத்திய பின்னூட்டங்களில் முழு திருப்தி ஏற்படவில்லை.

      அவர்களுக்கே அப்படியென்றால் எனக்கு ????? :)

      தங்களின் அன்பான வருகைக்கு நன்றிகள், ஸ்ரீராம். -

      அன்புடன் VGK

      Delete
  5. திருமதி. சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் December 11, 2015 at 7:14 AM

      //திருமதி. சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துகள்...//

      பூந்தளிர் சிவகாமி சார்பில் தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, Mr DD Sir.

      Delete
  6. பூந்தளிர்’உடன்
    பூமணம் கமழும் 2015ம் ஆண்டின் 100வது
    பதிவாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு..
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி December 11, 2015 at 9:03 AM

      வாங்கோ, வணக்கம்.

      //’பூந்தளிர்’உடன் பூமணம் கமழும் 2015ம் ஆண்டின் 100வது பதிவாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  7. அஹா அஹா !! ///// தமிழ்நாட்டுக்குள் தற்காலிகமாகத் தங்கியிருந்தபோது
    இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ள நீங்கள்,இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் இடத்திற்கே
    இப்போது குடியேறிவிட்டோம் என்பதற்காக
    இந்த என் மிகச்சிறிய பரிசினை
    அலட்சியப்படுத்தாதீங்கோ !//

    உங்க பாணில மிக அருமை. சிவகாமி அவர்களுக்கும் வாழ்த்துகள் சார். வலைத்தளம் கொடுக்கும் சிறப்பு மனிதர்களுக்கு வந்தனங்கள். :)

    ReplyDelete
    Replies
    1. Thenammai Lakshmanan December 11, 2015 at 9:16 AM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //அஹா அஹா !! // :)))))

      **தமிழ்நாட்டுக்குள் தற்காலிகமாகத் தங்கியிருந்தபோது
      இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ள நீங்கள், இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் இடத்திற்கே இப்போது குடியேறிவிட்டோம் என்பதற்காக
      இந்த என் மிகச்சிறிய பரிசினை அலட்சியப்படுத்தாதீங்கோ !**

      //உங்க பாணியில் மிக அருமை.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //சிவகாமி அவர்களுக்கும் வாழ்த்துகள் சார்.//

      பூந்தளிர் சிவகாமி சார்பில் என் நன்றிகள், மேடம்.

      //வலைத்தளம் கொடுக்கும் சிறப்பு மனிதர்களுக்கு வந்தனங்கள். :)//

      தங்களின் அன்பான வருகைக்கும், கலகலப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஹனி மேடம்.

      அன்புடன் கோபால்

      Delete
  8. மிக்க சந்தோஷமாக உள்ளது

    நான் வை,கோ சாரின் அனைத்துப் பதிவுகளுக்கும்
    பின்னூட்டமிட்டிருப்பேன்
    ஏனெனில் நான் விரும்பித் தொடரும்
    அருமையான டாப் டென் பதிவுகளில்
    சாரின் தளம்தான் முதன்மையானது
    விடுதல்கள் சிலவே இருக்க வாய்ப்புண்டு

    ஆனாலும் இப்போது இரண்டு மாதங்களாய்
    ஏற்றுக் கொண்ட பொறுப்புகளின் நெருக்கடியில்
    என்னால் இப்போட்டியில் தொடர முடியாதது
    மிக்க வருத்தமளிக்கிறது

    பரிசு பெற்ற அனைவருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani S December 11, 2015 at 11:36 AM

      வாங்கோ என் அன்புக்குரிய திரு. ரமணி சார் அவர்களே, தங்களுக்கு என் முதற்கண் வணக்கம்.

      //மிக்க சந்தோஷமாக உள்ளது//

      :) மிக்க மகிழ்ச்சி. :)

      //நான் வை,கோ சாரின் அனைத்துப் பதிவுகளுக்கும்
      பின்னூட்டமிட்டிருப்பேன், ஏனெனில் நான் விரும்பித் தொடரும் அருமையான டாப் டென் பதிவுகளில்
      சாரின் தளம்தான் முதன்மையானது.//

      ஆஹா, இந்த செவிக்கு இனிய வரிகளே எனக்குத் தாங்கள் இன்று கொடுத்துள்ள மிக மிக மிக மிகப் பெரிய பரிசாக எண்ணி நான் எனக்குள் மகிழ்கிறேன்.

      //விடுதல்கள் சிலவே இருக்க வாய்ப்புண்டு//

      ஆம் .... உண்மைதான்.

      இந்த என் போட்டிக்கான இறுதி நாள் 31.12.2015 என நானே அறிவித்துவிட்டு, இன்றே 11.12.2015 (20 Days in advance) வெற்றியாளர்களை நான் அறிவிக்க ஆரம்பித்துள்ளதற்கான காரணமே, தங்களைப்போல விடுதல்கள் சில மட்டுமே இருக்க வாய்ப்புள்ளவர்களும், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வெற்றியடையட்டுமே என்ற ஓர் நல்லெண்ணத்தில் மட்டுமே.

      //ஆனாலும் இப்போது இரண்டு மாதங்களாய் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளின் நெருக்கடியில் என்னால் இப்போட்டியில் தொடர முடியாதது மிக்க வருத்தமளிக்கிறது//

      அதனால் பரவாயில்லை சார். இன்றுள்ள சூழ்நிலைகளில் சமுதாயப்பணிக்கு, தங்களைப்போன்றவர்கள் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும், மனம் கவரும் கருத்துக்களுக்கும், சாதனை செய்து. வெற்றியும் பரிசும் பெறும் அனைவரையும் மனமார வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  9. வாழ்த்துக்கள், மிக்க மகிழ்ச்சி,,

    நானும் தொடர்ந்து பின்னூட்டம் இட்டு போட்டியில் முயற்சித்தேன். ஆனால் வேலைக் காரணமாக தொடர இயலவில்லை, வெற்றிபெற போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. mageswari balachandran December 11, 2015 at 12:26 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //வாழ்த்துக்கள், மிக்க மகிழ்ச்சி.//

      சந்தோஷம். :)

      //நானும் தொடர்ந்து பின்னூட்டம் இட்டு போட்டியில் முயற்சித்தேன். ஆனால் வேலைக் காரணமாக தொடர இயலவில்லை.//

      ஆங்காங்கே பரவலாக தங்களின் பின்னூட்டங்கள் என் பதிவுகளில் உள்ளன. தங்கள் முயற்சிக்கு என் நன்றிகள்.

      இந்தப்போட்டியில் நிகழ்ந்துள்ள ஒருசில அதிசயங்களை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

      ஒருவர் என் மொத்தப் பதிவுகளில் 2% மட்டுமே ஏற்கனவே பின்னூட்டமிட்டிருந்தார். முருகு என்ற பெண்ணின் உருக்கமான நேயர் கடிதத்தைப் படித்த இவர் http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html இந்தப்போட்டியில் கலந்துகொள்ளத் துவங்கினார்.

      மீதி 98% பதிவுகளுக்கும், 15.11.2015 ஆரம்பித்து தினமும் 30 பதிவுகளுக்குக் குறையாமல் பின்னூட்டங்கள் இட்டு 08.12.2015 அன்று முடித்துவிட்டார். அவர் எடுத்துக்கொண்டுள்ளது வெறும் 24 நாட்கள் மட்டுமே.

      மற்றொருவர் என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் மூலம், 04.04.2014 அன்றே எனக்கு முதன்முதலாக அறிமுகம் ஆனவர். நான் வெளியிட்டிருந்த என் மொத்தப்பதிவுகளில் 10% பதிவுகளுக்கு மட்டுமே (That too released by me during the year: 2014 only) ஏற்கனவே பின்னூட்டமிட்டிருந்தார்.

      மீதி 90% பதிவுகளுக்கும் 26.11.2015 அன்று மட்டுமே பின்னூட்டமிட ஆரம்பித்து நேற்றுவரை வெற்றிகரமாக 90.8% முடித்துள்ளார். அநேகமாக இன்றோ நாளையோகூட 100% முழுவதுமாக முடித்து விடுவார். பகலெல்லாம் இவரும் ஆபீஸ் வேலைகளில் மிகவும் பிஸியானவர் மட்டுமே. தினமும் இரவு 9 மணி முதல் 12 மணிவரை விழித்திருந்து மிகவும் உற்சாகமாகப் பின்னூட்டங்கள் அளித்து வருகிறார். தங்களைப்போலவே ஆழ்ந்து வாசித்து, அழகாகவும்
      வித்யாசமாகவும் நகைச்சுவையாகவும் பின்னூட்டமிடக்கூடியவர் இவர்.

      இதெல்லாம் Just உங்களின் தகவலுக்காக மட்டுமே.

      //வெற்றிபெற போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் சார்பிலும், வெற்றிபெறப்போகும் அனைவர் சார்பிலும் மிக்க நன்றி, மேடம். - VGK

      Delete
  10. திருமதி சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துக்களும், அவருக்கு பரிசளித்த தங்களுக்கு பாராட்டுக்களும்!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி December 11, 2015 at 1:00 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //திருமதி சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துக்களும், அவருக்கு பரிசளித்த தங்களுக்கு பாராட்டுக்களும்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் எங்கள் இருவர் சார்பிலும் என் மனமார்ந்த அன்பு நன்றிகள், சார். - VGK

      Delete
  11. வணக்கம்
    ஐயா
    மகிழ்வான செய்தி பரிசு பெற்ற திருமதி சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பரிசு வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. ஸ்மார்ட் ஃபோன் பத்தியோ அதில் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிடுவது குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது: புரியாது! எனினும் திருமதி/செல்வி சிவகாமியின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. அவருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நூறாவது பதிவுக்கு உங்களுக்கும் வாழ்த்துகள். இனி வெற்றி பெறப் போகும் சாதனையாளர்களுக்கும், வாழ்த்துகள், பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam December 11, 2015 at 1:57 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஸ்மார்ட் ஃபோன் பத்தியோ அதில் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிடுவது குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது: புரியாது!//

      எனக்குத் தெரியும் + புரியும். ஆனால் பெரிய கீ போர்டில் பழகிவிட்ட என்னாலோ உங்களாலோ அதில் ஒழுங்காகப் பின்னூட்டமிட முடியவே முடியாது. எழுத்துப்பிழைகள் நிறையவே ஏற்படும். a அடித்தால் s விழும் 1 அடித்தால் 2 விழும். நம் பொறுமையை மிகவும் சோதிக்கும்.

      //எனினும் திருமதி/செல்வி சிவகாமியின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. அவருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//

      திருமதி. சிவகாமிதான். செல்வி அல்ல. :) தங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் பூந்தளிர் சிவகாமி சார்பில் என் நன்றிகள்.

      //நூறாவது பதிவுக்கு உங்களுக்கும் வாழ்த்துகள். இனி வெற்றி பெறப் போகும் சாதனையாளர்களுக்கும், வாழ்த்துகள், பாராட்டுகள்.//

      ஆஹா, மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. என் சார்பிலும் வெற்றியாளர்கள் அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள். இவ்விடம் தங்களின் அன்பான வருகைக்கும் என் நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
    2. இதுவும் படிச்சிருக்கேன்! :)

      Delete
    3. நான் இணையத்தில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதால் தான் இந்தப் போட்டியில் பங்கு பெறவில்லை. :) இப்போ இருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு நாள் இணையப் பக்கமே வர முடிவதில்லை! :)

      Delete
    4. Geetha Sambasivam December 23, 2015 at 2:43 PM

      வாங்கோ, வணக்கம் மேடம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்வளிக்கிறது.

      //இதுவும் படிச்சிருக்கேன்! :)//

      சந்தோஷம். ஏராளமான பின்னூட்டங்களில் ஏனோ நானும் தங்களின் வருகையை மறந்துபோய் உள்ளேன். மன்னிக்கவும்.

      >>>>>

      Delete
    5. Geetha Sambasivam December 23, 2015 at 2:44 PM

      //நான் இணையத்தில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதால் தான் இந்தப் போட்டியில் பங்கு பெறவில்லை. :) இப்போ இருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு நாள் இணையப் பக்கமே வர முடிவதில்லை! :)//

      பரவாயில்லை மேடம். சென்ற ஆண்டு 2014 போல தாங்கள் எழுச்சியுடன் இந்த ஆண்டு போட்டிகளில் பங்குகொள்ளாததால், ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை என்னால் உணரமுடிந்தது.

      ஏதோ இந்தப்புதுப்போட்டிகளில் ஒரு கலகலப்பே இல்லை போலவும் உணர முடிந்தது.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மீண்டும் மிக்க நன்றி மேடம். அன்புடன் VGK

      Delete
  13. சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    இந்த வருட 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு December 11, 2015 at 3:38 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
      இந்த வருட 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//

      சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் VGK

      Delete
  14. திருமதி சிவகாமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த வருட நூறாவது பதிவிற்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam December 11, 2015 at 4:46 PM

      வாங்கோ, வணக்கம்.

      //திருமதி சிவகாமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த வருட நூறாவது பதிவிற்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.//

      சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன் VGK

      Delete
  15. சகோதரி சிவகாமி அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுகள்! தங்களுக்கும்! எதற்கு?! இப்படி அழகாய் சொல்லிப் பாராட்டிப் பரிசளித்து ஊக்கம் அளிப்பதற்குத்தான்!!! எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளும்..

    ReplyDelete
    Replies
    1. Thulasidharan V Thillaiakathu December 11, 2015

      வாங்கோ, வணக்கம்.

      //சகோதரி சிவகாமி அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுகள்! தங்களுக்கும்! எதற்கு?! இப்படி அழகாய் சொல்லிப் பாராட்டிப் பரிசளித்து ஊக்கம் அளிப்பதற்குத்தான்!!! எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளும்..//

      சந்தோஷம், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      Delete
  16. திருமதி சிவகாமி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. இதுபோன்ற சிறப்பான பரிசளிப்புக்கு தங்களுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கே. பி. ஜனா... December 11, 2015 at 6:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //திருமதி. சிவகாமி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. இதுபோன்ற சிறப்பான பரிசளிப்புக்கு தங்களுக்கு பாராட்டுக்கள்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      Delete
  17. இப்போதுதான் இந்த பதிவைப் பார்த்தேன். உங்கள் அன்புக் கையால் அந்த வெற்றிப் பரிசைப் பெறப் போகும் சகோதரி சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மீண்டும் வலைப்பக்கம் அவர் வர வேண்டும்; எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ December 11, 2015 at 7:56 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்

      //இப்போதுதான் இந்த பதிவைப் பார்த்தேன். உங்கள் அன்புக் கையால் அந்த வெற்றிப் பரிசைப் பெறப் போகும் சகோதரி சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      //மீண்டும் வலைப்பக்கம் அவர் வர வேண்டும்; எழுத வேண்டும்.//

      வலைவீசிப்பிடித்து, ஒருவேளை சிக்கினால், மீன் தொட்டிக்குள் மடக்கிப்போட்டு, எப்படியாவது அவரை வலைப்பக்கம் நாம் எழுத வைத்துவிடுவோம். :)

      இப்போதைக்குக் கழுவும் மீனில் நழுவும் மீனாக உள்ளார்கள். அதனாலேயே மேலே முதல் படத்தில் மீன்கள் நீந்தும் படத்தைக் காட்டியுள்ளேன். :)

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வேண்டுகோளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      அன்புடன் VGK

      Delete
  18. சகோதரி சிவகாமி அவர்களுக்கு முதற்கண் எனது பாராட்டுகள்!

    2 மாதங்கள் உடல் நிலை சரியின்மை!
    மொத்தமே 77 தினங்கள்!
    கணினி வசதியின்மை!
    கைபேசி வாயிலாகவே பின்னூட்டங்கள்!
    தமிழில் அதிக பரிச்சயமின்மை!

    தனிப்பட்ட சிறப்பு பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் December 11, 2015

      வாங்கோ நண்பரே, வணக்கம்.

      //சகோதரி சிவகாமி அவர்களுக்கு முதற்கண் எனது பாராட்டுகள்!//

      தங்களின் பாராட்டுகளுக்கு பூந்தளிர் சிவகாமி சார்பில் என் நன்றிகள், தோழரே.

      //2 மாதங்கள் உடல் நிலை சரியின்மை!//

      ஆம், நண்பரே. இது சற்றும் எதிர்பாராதது. நானே கேள்விப்பட்டதும் அழுதுவிட்டேன். ஆறுதல் பல கூறினேன். நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாமா என்றுகூட முயற்சித்தேன். இங்கிருந்தே சின்சியராகப் பிரார்த்தனை செய்துகொண்டேன். நல்லவேளையாக சரியாகி நார்மலுக்கு வந்துவிட்டார்கள் என்று கேள்விப் பட்டதும்தான் என் மனதுக்கு நிம்மதியாச்சு.

      //மொத்தமே 77 தினங்கள்!//

      ஆம் பின்னூட்டமிடாமல் விட்டுப்போய் இருந்த பதிவுகளுக்கு மட்டும் 77 நாட்கள்.

      //கணினி வசதியின்மை!//

      ஆம், இது பெரிய கொடுமை, அவர்களுக்கேகூட.

      //கைபேசி வாயிலாகவே பின்னூட்டங்கள்!//

      எப்படித்தான் பொறுமையாகவும், வேக வேகமாகவும் அடித்து அனுப்பி முடித்தார்களோ ... வியப்புதான்.

      //தமிழில் அதிக பரிச்சயமின்மை!//

      முன்பெல்லாம் (During 2013) நிறைய நீண்ட பின்னூட்டங்கள் கணினி மூலம் கொடுத்து மகிழ்வித்திருந்தார்கள்.

      ர, ற, ன, ந, ண போன்ற சிலவற்றை மட்டும் மாற்றிப்போடுவார்கள். அவ்வப்போது நான் அவர்களின் பதிவினிலேயே திருத்தச்சொல்லி சொல்வதும் உண்டு.

      //தனிப்பட்ட சிறப்பு பாராட்டுகள்!//

      தங்கமானவர்கள். பாசத்துடனும், பிரியத்துடனும் கூடிய ஆத்மார்த்தமான இனிய நட்புக்கு எடுத்துக்காட்டானவர்கள்.

      இறைநாட்டத்துடன் கூடிய தங்களின் சிறப்புப் பாராட்டுகளுக்கு முற்றிலும் தகுதியானவர்களே.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பரே.

      அன்புடன் VGK

      Delete
  19. Congratulations!

    Gopu maamaa is amazing !

    ReplyDelete
    Replies
    1. Chitra December 11, 2015 at 10:03 PM

      வாங்கோ சித்ரா, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //Congratulations!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சித்ரா
      {for PoonthaLir Sivakami}

      //Gopu maamaa is amazing !//

      தங்களின் அன்பான வருகைக்கு ‘அற்புதமான’ பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி, சித்ரா.

      பிரியமுள்ள கோபு மாமா

      Delete
  20. வாழ்த்துகள். பூந்தளிர் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. mru December 12, 2015 at 10:18 AM

      வாங்கோ, முருகு, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? உங்களைப் பார்த்து ரொம்ப நாட்கள் / ரொம்ப மாதங்கள் ஆச்சு :(

      //வாழ்த்துகள். பூந்தளிர் மேடம்.//

      ஆஹா, பூந்தளிர் மேடம் சார்பில் முருகுவின் முறுகலான வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      அன்புடன் குருஜி :)

      Delete
  21. பரிசு பெரும் சிவகாமி அவர்களுக்கும் பரிசு தரும் தங்களுக்கும் வாழ்த்துகள் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. S.P. Senthil Kumar December 12, 2015 at 5:12 PM

      வாங்கோ, வணக்கம் சார்.

      //பரிசு பெரும் சிவகாமி அவர்களுக்கும் பரிசு தரும் தங்களுக்கும் வாழ்த்துகள் அய்யா!//

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

      Delete
  22. இந்த பதிவு படித்து வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  23. கோபால் ஸார் சாதனையாளர் விருது கொடுத்து பாராட்டியதற்கு நன்றி.

    ஒருசில விஷயங்கள் பகிர்ந்து கொள்கிறேன் எல்லாருடனும்.

    மூணு வருஷம் முன்ன வலைப்பதிவு தொடங்கினேன். காரணம் தமிழ் எழுத படிக்க கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில்.
    நான் வளர்ந்தது ஸ்கூல் படிப்பு எல்லாம் மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் இருக்கும் நாக்பூரில். ஹிந்தி மராட்டி இங்க்லீஷ் மட்டுமே எழுத படிக்க பேச நன்கு பழக்கம். அக்கம் பக்கத்திலும் ஹிந்தி மராட்டி காராதான். தமிழ் கிடையாது. தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்தேன். வீட்ல தமிழ்ல பேசிப்போம்னு பேருக்குதான். கூடவே ஹிந்தியும் மராட்டியும் கலந்து ஒருவித அவியல் பாஷையில் தான் பேசிப்போம்.

    பூஜைரூம்ல ராமாயணம் மஹாபாரதம் பகவத்கீதை புக் எல்லாம் தலகாணி சைஸில் இருக்கும். அதுவும் சுத்தமான ஆசாரமான மடி யாக எழுத்துகளாக இருக்கும். அந்த புக்ஸ பாத்தாலே தூக்கமா வரும். பாட்டி தாத்தா ஸ்லோகம்லாம் சத்தமாதான் சொல்லுவா. மனப்பாடமாயிடும்.

    எனக்கு தமிழ் எழுத படிக்க கத்துக்க ரொம்ப ஆசையிருந்தது. வீட்ல பர்மிஷன் கிடைக்கலை.
    கம்ப்யூட்டர் இருந்தது. அதில் தேடினப்போ எதேச்சயா ப்ளாக் ரைட்டிங்க பத்தி தெரியவந்தது.

    நுணுக்கமான விஷயமெல்லாம் ஏதும்தெரியாமலே வலைப்பதிவு எழுத ஆரம்பிச்சேன்.

    சிலபேரின் வலைப்பதிவு பக்கம் போயி என்பதிவு பக்கமும் வரச்சொல்லி கமண்ட் போட்டேன்.
    பாக்கி தொடரும்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் December 12, 2015 at 6:27 PM

      வாங்கோ என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பூந்தளிர் சிவகாமி அவர்களே, வணக்கம்மா.

      //கோபால் ஸார் சாதனையாளர் விருது கொடுத்து பாராட்டியதற்கு நன்றி.//

      இதில் உங்களைவிட எனக்குத்தான் ஒரே சந்தோஷம். நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணுமாக்கும். :)

      >>>>>

      Delete
    2. கோபு >>>>> பூந்தளிர் (2)

      //ஒருசில விஷயங்கள் பகிர்ந்து கொள்கிறேன் எல்லாருடனும்.//

      ஆஹா, சந்தோஷம். அப்படியே செய்யுங்கோ.

      //மூணு வருஷம் முன்ன வலைப்பதிவு தொடங்கினேன். காரணம் தமிழ் எழுத படிக்க கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில்.//

      அச்சா, பஹூத் அச்சா. தமிழ் கற்கும் தங்கள் ஆர்வத்திற்கு தலை வணங்குகிறேன்.

      >>>>>

      Delete
    3. கோபு >>>>> பூந்தளிர் (3)

      //நான் வளர்ந்தது ஸ்கூல் படிப்பு எல்லாம் மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் இருக்கும் நாக்பூரில்.//

      அதெல்லாம் சரி.......

      அப்போ ‘ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’ ** கதையில் ஜிகினாஸ்ரீக்கு நடைபெறும் ஓர் முக்கிய நிகழ்வு தங்களுக்கு நடந்ததும் நாக்பூரிலேயேவா? :)

      இனிப்புப்புட்டு எனக்கு அனுப்பிவைக்கவே இல்லையே :( அதனால் எனக்கு இதில் கொஞ்சம் சந்தேகம் ! :)

      ** http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html

      >>>>>

      Delete
    4. கோபு >>>>> பூந்தளிர் (4)

      //ஹிந்தி மராட்டி இங்க்லீஷ் மட்டுமே எழுத படிக்க பேச நன்கு பழக்கம்.//

      ஆஹா, மும்மொழி தெரிந்த முக்கனியல்லவா நீங்கள் ! :) பாராட்டுகள். வாழ்த்துகள்.

      //அக்கம் பக்கத்திலும் ஹிந்தி மராட்டி காராதான். தமிழ் கிடையாது.//

      அடடா. கேட்கவே வருத்தமாக உள்ளதே. ஒருவிதத்தில் நிம்மதி தான். :) நாம் தமிழ் பேசினாலும் அவாளுக்குப் புரியப்போவது இல்லை. :)

      //தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்தேன். வீட்ல தமிழ்ல பேசிப்போம்னு பேருக்குதான். கூடவே ஹிந்தியும் மராட்டியும் கலந்து ஒருவித அவியல் பாஷையில் தான் பேசிப்போம்.//

      தாத்தா பாட்டியுடன் இருந்தது உங்கள் அதிர்ஷ்டம்தான்.

      ’அவியல் பாஷை’ என்பதை ரஸித்தேன். சிரித்தேன்.

      >>>>>

      Delete
    5. கோபு >>>>> பூந்தளிர் (5)

      //பூஜைரூம்ல ராமாயணம் மஹாபாரதம் பகவத்கீதை புக் எல்லாம் தலகாணி சைஸில் இருக்கும். அதுவும் சுத்தமான ஆசாரமான மடி யாக எழுத்துகளாக இருக்கும். அந்த புக்ஸ பாத்தாலே தூக்கமா வரும்.//

      ’சுத்தமான ஆசாரமான மடி’ எழுத்துக்கள்.

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ... ரஸித்தேன். பலக்கச் சிரித்தேன் :)

      கரெக்ட்டூஊஊஊ. தலகாணி என்றாலே நமக்குத் தூக்கம்தானே வரும். ரஸித்தேன். மிக்க மகிழ்ச்சி. :)

      //பாட்டி தாத்தா ஸ்லோகம்லாம் சத்தமாதான் சொல்லுவா. மனப்பாடமாயிடும்.//

      மிகவும் சமத்துக்குட்டி, நீங்கள். சந்தோஷம். :)

      >>>>>

      Delete
    6. கோபு >>>>> பூந்தளிர் (6)

      //எனக்கு தமிழ் எழுத படிக்க கத்துக்க ரொம்ப ஆசையிருந்தது. வீட்ல பர்மிஷன் கிடைக்கலை.
      கம்ப்யூட்டர் இருந்தது. அதில் தேடினப்போ எதேச்சயா ப்ளாக் ரைட்டிங்க பத்தி தெரியவந்தது. //

      ஆஹா, ’தேடினேன்.... வந்தது .... நாடினேன்.... தந்தது’ என அப்போது ஜாலியாகப் பாட்டுப்பாடியிருப்பீர்கள் நீங்கள். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது :)

      >>>>>

      Delete
    7. கோபு >>>>> பூந்தளிர் (7)

      //நுணுக்கமான விஷயமெல்லாம் ஏதும்தெரியாமலே வலைப்பதிவு எழுத ஆரம்பிச்சேன்.//

      அதனால் பரவாயில்லை. எனக்கும் இப்போதும் கணினியில் பல நுணுக்கமான விஷயங்கள் தெரியாமலேயே 800 பதிவுகள் வரை நானும் எழுதிவிட்டேன்.

      >>>>>

      Delete
    8. கோபு >>>>> பூந்தளிர் (8)

      //சிலபேரின் வலைப்பதிவு பக்கம் போயி என்பதிவு பக்கமும் வரச்சொல்லி கமண்ட் போட்டேன்.//

      ஊரில் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோரையும் ஓடிஓடிப்போய் வெற்றிலை-பாக்கு வைத்து அழைத்திருந்தீர்கள். :)

      எனக்கு இன்னும் அது மிக நன்றாக நினைவில் உள்ளது.

      //பாக்கி தொடரும்//

      ஆஹா, மகிழ்ச்சி .... தொடரட்டும்.

      பிரியமுள்ள கோபு

      ooooo

      Delete
    9. ஆமாமா ஊருல எல்லாரையும் போயி பாக்கு வெத்தல வச்சு அழைச்சேனதான். அப்பகூட தேவையான அறிவுரைகள் சொன்னதே நீங்கதானே. அதையெல்லாம் என்னாலயும் எப்பவுமே (மறக்க மனம் கூடுதில்லையே)

      Delete
    10. பூந்தளிர் December 22, 2015 at 6:06 PM

      //ஆமாமா ஊருல எல்லாரையும் போயி பாக்கு வெத்தல வச்சு அழைச்சேன்தான். அப்பகூட தேவையான அறிவுரைகள் சொன்னதே நீங்கதானே. அதையெல்லாம் என்னாலயும் எப்பவுமே (மறக்க மனம் கூடுதில்லையே)//

      :)))))) Good Girl :))))))

      சமத்தோ சமத்தூஊஊஊ.

      Delete
  24. வணக்கம் கோபு சார்! நீங்கள் இந்தப் போட்டி அறிவித்த போது நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கண்மூடித் திறப்பதற்குள் ஓராண்டு ஓடியே போய்விட்டது. 77 நாட்களுக்குள் அனைத்துக்கும் பின்னூட்டம் எழுதி சாதனை படித்த பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! தமிழ் தெரியாத மாநிலத்தில் இருந்து தமிழ் கற்றுக்கொள்ள பிரியப்பட்டு வலைப்பூவும் துவங்கி இப்போது வலையுலகப் பிதாமகன் கைகளால் சாதனையாளர் விருதும் வாங்கப்போகிறார்! அதிலும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பின்னூட்டங்களைக் கஷ்டப்பட்டு அனுப்பியிருக்கிறார் என்றறியும் போது வியப்பு மேலிடுகிறது, மேலும் மேலும் சாதனைகள் படைக்க சிவகாமிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஞா. கலையரசி December 12, 2015 at 6:44 PM

      //வணக்கம் கோபு சார்!//

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நீங்கள் இந்தப் போட்டி அறிவித்தபோது நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கண்மூடித் திறப்பதற்குள் ஓராண்டு ஓடியே போய்விட்டது.//

      அதனால் பரவாயில்லை மேடம்.

      குடும்பத்தலைவி + மிகவும் பொறுப்புள்ள அலுவகப்பணிகள் + வலைத்தள எழுத்துப்பணிகள் + நூல்கள் வாசித்தல், பறவைகள் கூர்நோக்குதல் போன்ற தங்களுக்குப்பிடித்தமான சில பொழுதுபோக்குகள் + ஊர் பயணங்கள் என எவ்வளவோ அன்றாட வேலைகளில் தாங்கள் மூழ்க வேண்டியதாகத்தான் இருந்திருக்கும். அதனால் தங்களுக்கு நேரமில்லாமல் இருந்திருக்கலாம் என்பதை நானும் நன்கு உணர்ந்துள்ளேன்.

      //77 நாட்களுக்குள் அனைத்துக்கும் பின்னூட்டம் எழுதி சாதனை படைத்த பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!//

      சாதனை என்று நன்கு உணர்ந்து சொல்லியுள்ள தங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் நன்றிகளும் மேடம்.

      //தமிழ் தெரியாத மாநிலத்தில் இருந்து தமிழ் கற்றுக்கொள்ள பிரியப்பட்டு வலைப்பூவும் துவங்கி இப்போது வலையுலகப் பிதாமகன் கைகளால் சாதனையாளர் விருதும் வாங்கப்போகிறார்!//

      :) தமிழ் கற்றுக்கொள்ள பிரியப்பட்டு மட்டுமே மிகவும் சிரமப்பட்டு வலைப்பூ துவங்கியுள்ள இவருக்கு விருது வழங்கும் வாய்ப்பு கிடைத்ததில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.:)

      //அதிலும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பின்னூட்டங்களைக் கஷ்டப்பட்டு அனுப்பியிருக்கிறார் என்றறியும் போது வியப்பு மேலிடுகிறது//

      எனக்கும் அதுதான் மிகப்பெரிய வியப்பாக இருந்தது.

      முன்பெல்லாம் (2013 இல்) என் பதிவுகளுக்கு வருகை தந்து, சிரத்தையாகப் படித்து மகிழ்ந்து, மிகவும் விரிவாகவும், அழகாகவும், ஒருவித தனி ஈடுபாட்டுடனும் அதிக வரிகள் பின்னூட்டங்கள் கொடுத்து மகிழ்வித்திருந்தார்.

      இப்போது கணினி இல்லாமல் ஸ்மார்ட் ஃபோன் மூலம் பின்னூட்டங்கள் கொடுக்கும் நிலை மட்டுமே என்பதால் விரிவஞ்சி மிகவும் சுருக்கி விட்டார் ... அது மட்டுமே கொஞ்சம் வருத்தமாகவும் குறையாகவும் இருந்தது எனக்கு. :)

      //மேலும் மேலும் சாதனைகள் படைக்க சிவகாமிக்கு வாழ்த்துக்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      Delete
  25. எவ்வளவு முயற்சிகள் செய்து சாதனையாளராகியுள்ளார். எங்கள் வீட்டிலும் எல்லோரிடமும் எல்லா வசதிகளுமுள்ள போன்கள் உள்ளது. ஸெல்போன் வைத்துக்கொள்வதுகூட நிம்மதியாகப் படுவதில்லை. யாராவது எடுத்து உங்களுக்குப் போன் என்று கொடுப்பதே அதுவும் லேண்ட் லைன் நிம்மதியாக இருக்கிறது. இளம் வயதுக்காரர்கள் முயற்சியுடன் எல்லாவித சாதனைகளும் செய்வது கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவகாமிக்கு வாழ்த்துகளும்,பாராட்டுதல்களும். இம்மாதிரி ஊக்கங்கள் பெற நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள். பாராட்டுதல் உங்களுக்கும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாட்சி December 12, 2015 at 7:38 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //எவ்வளவு முயற்சிகள் செய்து சாதனையாளராகியுள்ளார்.//

      ஆமாம் மாமி. கடுமையான முயற்சிகள்தான் !

      //எங்கள் வீட்டிலும் எல்லோரிடமும் எல்லா வசதிகளுமுள்ள போன்கள் உள்ளது.//

      கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

      //ஸெல்போன் வைத்துக்கொள்வதுகூட நிம்மதியாகப் படுவதில்லை.//

      என்னைப்பொறுத்தவரை இது பெரும்பாலும் மிகவும் தொல்லைதரும் கருவி மட்டுமே. சில சமயங்களில் சில அழைப்புகளை மட்டும் அன்புத்தொல்லை எனக்கருதி நாம் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். சகித்துக் கொள்ளலாம்.

      //யாராவது எடுத்து உங்களுக்குப் போன் என்று கொடுப்பதே அதுவும் லேண்ட் லைன் நிம்மதியாக இருக்கிறது.//

      லேண்ட் லைன் ஹேண்ட் செட் தான் நாம் கையில் பிடித்துக் கொண்டு பேச நிறைவாக இருக்கும். ஸெல்போன் என்ற இது ஏதோ தேய்ந்துபோன சோப்புக்கட்டி போல அல்லவா உள்ளது :)

      சிறு வயதினர் காதோடு காதாக வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் இரகசியம் பேசவும், கொஞ்சி மகிழவும் மட்டுமே இது லாயக்கு :)

      //இளம் வயதுக்காரர்கள் முயற்சியுடன் எல்லாவித சாதனைகளும் செய்வது கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.//

      ஆமாம். ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்.

      //சிவகாமிக்கு வாழ்த்துகளும்,பாராட்டுதல்களும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மாமி.

      //இம்மாதிரி ஊக்கங்கள் பெற நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள். பாராட்டுதல் உங்களுக்கும். அன்புடன்//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். எல்லாவற்றிற்கும் உங்களைப்போன்ற பெரியோர்கள் + நலம் விரும்பிகளின் ஆசீர்வாதம் மட்டுமே காரணமாகும்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  26. ( தொடர்ச்சி)
    கோபால் ஸார் பதிவு பக்கமும் போயி புதிதாக பதிவு எழுத தொடங்கி இருக்கேன் என் பதிவு பக்கமும் வந்து பார்க்க சொல்லி இருந்தேன் வந்தாங்க பின்னூட்டமும் போட்டாங்க.
    நாலு வரி பதிவுல ஆறு ஸ்பெலிங்க் மிஸ்டேக் இருக்கு. அத முதல்ல சரி பண்ணுங்கன்னாங்க. எப்படி சரி பண்றதுன்னு தெரியல. மேலும் சில பதிவுகள் போட்டேன். அப்பவும் ஸார் என்பதிவ படிக்க வரல. எப்ப நான் சொல்லியும்கூட நீங்க தப்பை சரி பண்ணலையோ நான் எப்படி வரமுடியும்.
    வரமாட்டேன்னு ( நக்கீரர்) ( கோபால் சாரைத்தான்) சொல்றேன். இப்படி முட்டல் மோதலில் தான் எங்க ஃப்ரண்ட் ஷிப் ஆரம்பமாச்சு. ரொம்ப மனசுக்கு கஷ்டமாச்சு. அப்புரம் மின்னல் வரிகள் வலைப்பதிவு எழுதுறாங்க இல்லையா பாலகணேஷ் அவர்களிடம் எப்படி தப்பான எழுத்த சரி செய்யணும்னு கேட்டேன். அழகா சொல்லி தந்தது மட்டுமில்ல நிறய விஷயங்களில் ரொம்ம ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்க.இந்த நேரம் கணேஷ் அண்ணாவை நன்றியூடன் நினச்சுக்கறேன்.
    (கணேஷ் அண்ணா நன்றி. எப்படி இருக்கீங்க) கொஞ்சம் விஷயம் தெரிந்ததும் கோபால் சார் பதிவுக்கெல்லாம் வரிக்கு வரி பெரிய பெரிய பின்னூட்டமா போட்டேன். பிறகு தான் என் பதிவெல்லாம் ரெகுலரா படிச்சு நிறய நிறய பின்னூட்டங்கள் போட்டு உற்சாக படுத்தினாங்க. முட்டல் மோதல் எல்லாம் காணாமலே போச்சு. குடும்ப சூழ்நிலையால் ரெண்டு வருஷம் நெட் யூஸ் பண்ணமுடியாம இருந்தது. அப்பதான் ஸார் வலைச்சர ஆசிரியரா பொறுப்பேத்திருந்தாங்க.காணாம போயிருந்த என்னை தேடிப்பிடித்து அறிமுகம் செய்து பெருமைப்படுத்தினாங்க.
    கொஞ்ச நாள் தமிழ்நாட்டில் கோவையில் தங்கி இருக்கவேண்டிய கட்டாயம். நான் தங்கி இருந்த இடத்தில் டெஸ்க்டாப் லாப்டாப் யூஸ் பண்ண முடியாம இருந்தது. ஸோ..... மொபைல் ல நெட் யூஸ் பண்ணிண்டு இருந்தேன். பின்னூட்ட போட்டி பத்தி தெரிய வந்தது. கலந்துகிட்டேன். மொபைல் நெட் மூலம் தமிழ்ல டைப் பண்றது அவ்வளவு ஈஸியா இல்லை. ரெண்டு வரி நாலு வரிலதான் கமண்ட் போட முடிந்தது. நடுவில் கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம் வேறு கஷ்டப்பட்த்தியது. வெற்றி பெற்றிருக்கேனே தவிர நான் போட்ட பின்னூட்டங்கள் எனக்கே திருப்தியா இல்லதான்
    ஸாருடன் முட்டல் மோதலில் ஆரம்பித்த ஃப்ரெண்ட் ஷிப் இன்று அவர் என்னை சாதனையாளராக முதல் ஆளாக பெருமைப்படுத்தி பரிசு அளிக்கும் அளவுக்கு ஸ்ட்ராங்கான ஃப்ரெண்ட் ஷிப்பா ஆயிருக்கு. நன்றி ஸார்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் December 12, 2015 at 8:19 PM

      வாங்கோ சிவகாமி, வணக்கம்மா.

      இப்போ நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா?

      மடை திறந்த வெள்ளம்போல மனம் திறந்து ஏராளமாக, தாராளமாக ஓர் நேயர் கடிதம் போல எழுதி அசத்தியுள்ளீர்கள்.

      இதைப்படிக்க எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்கும்மா. 2013 சிவகாமியையே இன்று நான் திரும்பிப் பார்த்ததுபோல அவ்வளவு சந்தோஷமா இருக்கும்மா.

      இதையெல்லாம் எழுதி அனுப்பியுள்ளது ஸ்மார்ட் ஃபோனிலிருந்தேவா அல்லது டெஸ்க் டாப் / மடிக்கணினி போன்றவற்றிலிருந்தா என்று சொல்லவே இல்லையே :)

      //ஸாருடன் முட்டல் மோதலில் ஆரம்பித்த ஃப்ரெண்ட் ஷிப் இன்று அவர் என்னை சாதனையாளராக முதல் ஆளாக பெருமைப்படுத்தி பரிசு அளிக்கும் அளவுக்கு ஸ்ட்ராங்கான ஃப்ரெண்ட் ஷிப்பா ஆயிருக்கு.//

      ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யோ :)))))))))))))))

      முட்டல் மோதலில் ஆரம்பிக்கும் ஃப்ரண்ட்ஷிப் தான் கடைசிவரை மிகவும் ஸ்ட்ராங்க்காக மனதில் தங்கி இருக்கும் போலிருக்கு. நானும் இதனை அப்படியே ஒத்துக்கொள்கிறேன்.

      சீக்கரம் புறப்பட்டு, எங்காத்துக்கு வந்து, பரிசுப்பணத்தையும் இதர சகல மரியாதைகளையும் பெற்றுக்கொண்டு செல்லவும். இல்லாவிட்டால் நமக்குள் மீண்டும் முட்டல் மோதல் ஆரம்பித்துவிடுமாக்கும். ஜாக்கிரதை ! :)))))))

      மிக்க நன்றிம்மா.

      பிரியமுள்ள கோபு

      Delete
    2. எப்படி எப்படி மறுபடியும் முட்டல் மோதல் ஆரம்பித்துவிடுமா விட்டுடுவேனா என்ன????

      Delete
    3. பூந்தளிர் December 22, 2015 at 6:08 PM

      //எப்படி எப்படி மறுபடியும் முட்டல் மோதல் ஆரம்பித்துவிடுமா விட்டுடுவேனா என்ன????//

      கெட்டிக்காரி, சமத்தோ சமத்தூஊஊஊஊ. அதானே, நமக்குள் முட்டல் மோத ஆரம்பிக்க விட்டுடுவேளா நீங்கள் ..... Never. No more முட்டல் or மோதல். :) இதைக் கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது, மிக்க நன்றிம்மா. :))

      பிரியமுள்ள கோபு

      Delete
  27. நான் தமிழ் எழுத படிக்க கத்துண்டதே என்30---வயதுக்கு மேலதான் அந்த காமெடிய சொல்றேன். ஒரே மாதத்தில் தமிழ் எழுத படிக்கனு ஒரு புக் வாங்கினேன். வேடிக்கை என்னன்னா
    க ச ட த ப எல்லாம் ஹிந்தில நாலு நாலு உண்டு உச்சரிப்பும் வேற மாதிரி இருக்கும். ஆனா தமிழ்ல இதெல்லாமே ஒன்னு ஒன்னுதான். ஒரே கன்ஃப்யூஷனா ஆகும். உதாரணமா. கதா ன்னு தமிழ்ல எழுதினா அது கதையைக்குறிக்கும் அதே கதா னு சொன்னு பீமனின் கதையயும் குறிக்கும் இன்னொரு கதா க்கு அர்த்தம் கழுதையை குறிக்கும் ஆனா உச்சரிப்பு வேறு வேறு மாதிரி வரும் ஒட்டர பசை கம் னு வரும் எந்த க சொல்லணும்னு எழுதணும்னுலாம் மண்ட காஞ்சுடும்...
    இங்லீஷ்ல கூட ரெண்டு டி டி பி பி லாம் இருக்கு தமிழ்ல ஒன்னுதான். ஒரு கட்டத்துல தமிழே வேண்டாம்னு வெறுத்து போச்சு. குமுதம் விகடன் புக் வாங்கி எழுத்து கூட்டி கூட்டி தப்பு தப்பா படிப்பேன். இவ்வளவு அழகா தமிழ் எழுதற என்க்கு இன்று சாதனையாளர் வருது கொடுத்து கௌரவிச்சிருக்காங்க கோபால் ஸார். நன்றியைத்தவிர வேர என்ன சொல்ல முடியும். இதுவரை போட்டினு எதிலும் கலந்துண்டதும் இல்லை பரிசுன்னு எதையும் வாங்கியதும் இல்லை. இந்த அங்கீகாரம் எனக்கு ரொம்ப பெரிசு. தாங்க்ஸ் ஸார். பின்னூட்டப்போட்டில கலந்துண்டதும் மாதா மாதம் லிங்க் அனுப்பி விட்டுப்போன பதிவை நினைவு படுத்தி மாத முடிவில் கன்ஃபர்மேஷன் சர்டிபிகேட் அனுப்பினு எவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்கேள். இதையெல்லாம் மறக்கவே முடியாது.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் December 12, 2015 at 8:43 PM

      //க ச ட த ப எல்லாம் ஹிந்தில நாலு நாலு உண்டு உச்சரிப்பும் வேற மாதிரி இருக்கும்.//

      எனக்கும் இதுபற்றியெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஹிந்தி + சம்ஸ்கிருதம் இரண்டும் ஒவ்வொரு ஆண்டுகள் வீதம் படித்துள்ளேன். இரண்டிலும் பிராத்மிக் மட்டும் படித்து பாஸ் செய்துள்ளேன். இப்போ டச் விட்டுப்போச்சு. இப்போதும் ஹிந்தியை நான் எழுத்துக்கூட்டிப் படித்துவிடுவேன். அதிகமாக எழுத மட்டும் வராது. எந்த ‘க’ போடணும் என்பதில் எனக்குக் குழப்பம் வந்துவிடும். :)

      //ஆனா தமிழ்ல இதெல்லாமே ஒன்னு ஒன்னுதான்.//

      தமிழிலே ‘ர ற ந ன ண ழ’ என்ற எழுத்துக்களை எழுதும்போது தங்களுக்குக் கொஞ்சம் குழப்பங்கள் உள்ளதாக அறிகிறேன். அதனால் பரவாயில்லை. நீங்கள் இவ்வளவு தூரம் ஆர்வமாக தமிழில் எழுதுவதே மிகப்பெரிய விஷயமாகும். பாராட்டுகள். வாழ்த்துகள்.

      ஹிந்தி தெரிந்த நீங்களும், தமிழ் தெரிந்த நானும் சேர்ந்து சுற்றுலா சென்றால், இந்தியாவையே விலைக்கு வாங்கிவிடலாம் :)))))

      //பின்னூட்டப்போட்டில கலந்துண்டதும் மாதா மாதம் லிங்க் அனுப்பி விட்டுப்போன பதிவை நினைவு படுத்தி மாத முடிவில் கன்ஃபர்மேஷன் சர்டிபிகேட் அனுப்பினு எவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்கேள்.//

      இவையெல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல. போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பெற்ற அனைவருக்குமே நான் செய்துள்ளவைதான்.

      //இதையெல்லாம் மறக்கவே முடியாது.//

      என்னாலும் உங்களை என்றுமே மறக்க முடியாது. :)

      மிக்க நன்றி, சிவகாமி.

      பிரியத்துடன் கோபு

      Delete
  28. இந்த பின்னூட்டமெல்லாமே ஸ்மார்ட் ஃபோன்லதான் போட்டேன். மூணு வருஷம் முன்ன நாசிக்ல சொந்தவீடு கட்டினோம். இப்ப அங்கதான் இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் December 12, 2015 at 9:08 PM

      //இந்த பின்னூட்டமெல்லாமே ஸ்மார்ட் ஃபோன்லதான் போட்டேன்.//

      சபாஷ். என்னால் இதை நம்பவே முடியவில்லை.
      ஆச்சர்யமாக உள்ளது.

      தங்களிடமுள்ள அதே சாம்சங் ஸ்மார்ட் ஃபோன் என்னிடம் இருப்பினும் என்னால் அதில் தமிழில் நாலு வரி அடிப்பதற்குள், நாக்குத்தள்ளிப் போய் விடுகிறது. பெரிய சைஸ் டெஸ்க்-டாப் கீ போர்டு என்றால், பக்கம்
      பக்கமாக படு ஸ்பீடாக விடிய விடிய அடித்துத் தள்ளினாலும் எனக்கு சோர்வே ஏற்படுவது இல்லை.

      //மூணு வருஷம் முன்ன நாசிக்ல சொந்தவீடு
      கட்டினோம். இப்ப அங்கதான் இருக்கேன்.//

      இதனை புதிதாக இப்போது இங்கு கேட்பது மனதுக்கு
      மிகவும் சந்தோஷமாக உள்ளது. :)

      ஆஹா. நாஸிக் நல்ல ஊர் ஆச்சே. ஸ்ரீராமபிரான் காலடி பட்ட பஞ்சவடி என்ற புண்யஸ்தலம் அங்கு உள்ளதே.

      உங்கள் ஊர் இரயில்வே ஸ்டேஷனாகிய ‘நாஸிக் ரோடு’க்கு நான் பலமுறை பம்பாய் போகும் போதெல்லாம் வந்துள்ளேன். ஆனால் இறங்கி ஊருக்குள் மட்டும் வந்தது இல்லை.

      ஏனென்றால் நான் வருகை தந்த அந்த நாட்களில் ’பூந்தளிர்’ ஆகிய நீங்கள் அங்கு பூக்கவே இல்லையே :(

      காசி யாத்திரை போனபோது ஜபல்பூரில் இறங்கி ஒரே ஒரு நாள் கமேரியாவில் தங்கி நர்மதா நதியிலும் ஸ்நானம் செய்துள்ளேன்.

      நீங்க எங்கிருந்தாலும் செளக்யமா சந்தோஷமா வாழ்க !

      பிரியமுள்ள கோபு

      Delete
  29. இப்பதான் இந்த பதிவு பார்த்தேன். சாதனையாளர் விருதும் பரிசும் பூந்தளிர் அவர்களுக்கு வாழ்த்துகள். விருது வழங்கிய திரு கோலகிருஷ்ணன் ஸார் அவர்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... December 13, 2015 at 10:55 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இப்பதான் இந்த பதிவு பார்த்தேன்.//

      சந்தோஷம். இந்தமாதம் மட்டும் அடிக்கடி வருகை தந்து பாருங்கோ, ப்ளீஸ். 2-3 நாட்களுக்கு ஒருவர் வீதம் இன்னும் நிறைய சாதனையாளர்களைப் பற்றி பதிவுகள் இந்த என் வலைத்தளத்தினில் வெளியாகிக்கொண்டே இருக்க உள்ளன.

      //சாதனையாளர் விருதும் பரிசும் பெற்ற பூந்தளிர் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

      சாதனையாளர் பூந்தளிர் அவர்கள் சார்பில் தங்கள் வாழ்த்துகளுக்கு என் இனிய நன்றிகள்.

      //விருது வழங்கிய திரு கோலகிருஷ்ணன் ஸார் அவர்களுக்கு பாராட்டுகள்.//

      கோபாலகிருஷ்ணனில் ‘பா’வை விட்டுட்டு கோலகிருஷ்ணன் ஆக்கிட்டீங்கோ. :) பரவாயில்லை. அதுவும் கோகுலகிருஷ்ணன் போல அழகாக வரைந்ததோர் கோலம் போலத்தான் உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
  30. வணக்கம் திரு கோபால்கிருஷ்ணன்ஸார். சாதனையாளர் விருதும் ரொக்கப்பரிசும் பெற்ற திருமதி சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துகள். விருது அளித்த தங்களுக்கும் பாராட்டுகள். அதுவும் ஸ்மார்ட் போனிலேயே 750--- பதிவுகளுக்கும் பின்னூட்டம் போட்டிருப்பது மிகப் பெரிய சாதனைதான். சாதனையாளராக மிகச்சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்துறிக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. srini vasan December 13, 2015 at 11:28 AM

      //வணக்கம் திரு கோபால்கிருஷ்ணன்ஸார்.//

      வாங்கோ ஸார், வணக்கம். கோபாலகிருஷ்ணன் என்ற என் பெயரில் ‘ல’ வுக்கு மேல் ஓர் அழகான புள்ளி வைத்து, மிகச்சாதாரணமானவனாகிய என்னைப் பெரும்புள்ளியாக்கிவிட்டீர்கள்.

      அதுவும் சுமங்கலிகளின் நெற்றிப்பொட்டு போல அழகாகத்தான் உள்ளது :) நன்றி.

      //சாதனையாளர் விருதும் ரொக்கப்பரிசும் பெற்ற திருமதி சிவகாமி அவர்களுக்கு வாழ்த்துகள்.//

      சாதனையாளர் பூந்தளிர் சிவகாமி அவர்கள் சார்பில் தங்கள் வாழ்த்துகளுக்கு என் இனிய நன்றிகள்.

      //விருது அளித்த தங்களுக்கும் பாராட்டுகள்.//

      விருது அளிக்க வாய்ப்புக்கிடைத்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. தங்கள் பாராட்டுகளுக்கு என் நன்றிகள்.

      //அதுவும் ஸ்மார்ட் போனிலேயே 750--- பதிவுகளுக்கும் பின்னூட்டம் போட்டிருப்பது மிகப் பெரிய சாதனைதான்.//

      பூந்தளிர் அவர்கள் உண்மையிலேயே மிகவும் ஸ்மார்ட் ஆனவர்களாகத்தான் இருப்பார்கள் போலிருக்கு. :) நான் இதைப் புரிந்துகொள்வதில் மட்டுமே கொஞ்சம் தாமதமாகியுள்ளது.

      //சாதனையாளராக மிகச்சரியான நபரைத்தான்
      தே ர் ந் தெ டு த் தி ரு க் கீ ங் க .//

      அச்சா ... பஹூத் அச்சா ! :)

      இந்தமாதம் மட்டும் என் பதிவுகள் பக்கம் அடிக்கடி வாங்க. 2-3 நாட்களுக்கு ஒருமுறை வீதம் மேலும் சில புதிய சாதனையாளர் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளார்கள். அதில் இன்று இரவே ஒருவர் தோன்றுவார். :)

      அன்புடன் VGK

      Delete
  31. பின்னூட்டங்களைப் பார்த்தேன் தலை சுற்றுகிறது.

    ReplyDelete
  32. பழனி. கந்தசாமி December 13, 2015 at 7:45 PM

    வாங்கோ சார், வணக்கம். No.3 & No. 59 ஆகிய தங்களின் இருமுறை வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    //பின்னூட்டங்களைப் பார்த்தேன் தலை சுற்றுகிறது.//

    :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    ஒருவேளை பித்தமாக இருக்குமோ என்னவோ. எதற்கும் இஞ்சிச்சாறெடுத்து, எலுமிச்சம்பழம் பிழிந்து, கொஞ்சூண்டு சர்க்கரை போட்டு வெந்நீரில் குடித்துப்பாருங்கோ.

    அன்புடன் VGK

    ReplyDelete
  33. லேட்டா வந்ததில் ஒரு வசதி. பதிவையும் எல்லாருடைய பின்னூட்டங்களையும் பொறுமையாக படித்து ரசிக்க முடிந்தது. சாதனையாளர் வெற்றி பெற்ற பூந்தளிர் அவர்களுக்கு வாழ்த்துகள். விருது வழங்கிய கோபால் சாருக்கு பாராட்டுகள். பூந்தளிர் அவர்களின் பின்னூட்டங்கள் எல்லாமே வெகு சுவாரசியம் அவைகளை தொகுத்து தனி பதிவாகவே போட்டிருக்கலாம். அதில் அவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்காங்க. பூந்தளிர்மேடம் இவ்வளவு எழுத்து திறமையை வைத்துக்கொண்டு ஏன் வலைப்பதிவை கண்டின்யூ பண்ண மாட்றேங்க. பின்னூட்டமே இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியும்னா பதிவும் நன்றாக எழுத முடியுமே. கோபால் சாரும் உங்களுக்கு நிறையா சப்போர்ட் பண்ணுவாங்க. அதுமட்டுமா நிறைய டிப்ஸ் ஐடியா எல்லாம் கொடுத்து உற்சாகப்படுத்துவாங்க. மறுபடி பதிவு எழுத வாங்க மேடம்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... December 14, 2015 at 8:45 AM

      வாங்கோ, வணக்கம்.

      //லேட்டா வந்ததில் ஒரு வசதி. பதிவையும் எல்லாருடைய பின்னூட்டங்களையும் பொறுமையாக படித்து ரசிக்க முடிந்தது.//

      ஆஹா, இதைக்கேட்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷம்.

      //சாதனையாளர் வெற்றி பெற்ற பூந்தளிர் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

      பூந்தளிர் சார்பில் தங்களுக்கு என் நன்றிகள்.

      //விருது வழங்கிய கோபால் சாருக்கு பாராட்டுகள்.//

      பூந்தளிருக்கு விருது வழங்கும் வாய்ப்பு அமைந்ததில் எனக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      //பூந்தளிர் அவர்களின் பின்னூட்டங்கள் எல்லாமே வெகு சுவாரசியம் அவைகளை தொகுத்து தனி பதிவாகவே போட்டிருக்கலாம். அதில் அவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்காங்க.//

      ஆமாம். நானே மிகவும் வியந்து போனேன். :) இந்தப்போட்டியால் சிலரின் தனித்திறமைகளை நாம் அறிய முடிகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

      //பூந்தளிர்மேடம் இவ்வளவு எழுத்து திறமையை வைத்துக்கொண்டு ஏன் வலைப்பதிவை கண்டின்யூ பண்ண மாட்றேங்க. பின்னூட்டமே இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியும்னா பதிவும் நன்றாக எழுத முடியுமே.//

      ஆமாம். அவர்களால் மிகச்சிறப்பாக எழுத முடியும். ஆனால் அவர்களுக்கு அங்கு என்ன பிரச்சனைகளோ. அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என் ஆசையும் விருப்பமுமாகும். இந்த என் போட்டிகளின் அடிப்படை நோக்கமே எல்லோரும் மேலும் மேலும் எழுத்துலகில் ஜொலிக்க வேண்டும் என்பது மட்டுமே.

      //கோபால் சாரும் உங்களுக்கு நிறையா சப்போர்ட் பண்ணுவாங்க. அதுமட்டுமா நிறைய டிப்ஸ் ஐடியா எல்லாம் கொடுத்து உற்சாகப்படுத்துவாங்க.//

      :) நிச்சயமாக .... என்னால் இயன்ற அளவு எல்லோருக்கும் உற்சாகம் கொடுக்கத்தான் நானும் எப்போதும் நினைக்கிறேன்.

      //மறுபடி பதிவு எழுத வாங்க மேடம்.//

      தங்களின் இந்தக்கோரிக்கைக்கு, மறுபடியும் அவங்க இங்கு வந்து பதில் சொன்னால்தான் உண்டு.

      தங்களின் முதல் வருகைக்கும், ஏராளமான தாராளமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  34. மிகவும் குறுகிய காலத்துள் அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு அதுவும் கைபேசி வாயிலாகவே பின்னூட்டமிட்டு போட்டியில் வெற்றிபெற்ற சிவகாமி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். முயற்சி திருவினையாக்கும் என்பதை இவருடைய இச்சாதனையால் பலரும் அறிய நிரூபித்துள்ளார். அதற்கு தங்களுடைய ஊக்கமும் பக்கபலமாக இருந்திருக்கிறது என்பதை அறிய மகிழ்ச்சி. இருவருக்கும் இனிய பாராட்டுகள் கோபு சார்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி December 14, 2015 at 10:23 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மிகவும் குறுகிய காலத்துள் அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு அதுவும் கைபேசி வாயிலாகவே பின்னூட்டமிட்டு போட்டியில் வெற்றிபெற்ற சிவகாமி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். முயற்சி திருவினையாக்கும் என்பதை இவருடைய இச்சாதனையால் பலரும் அறிய நிரூபித்துள்ளார். அதற்கு தங்களுடைய ஊக்கமும் பக்கபலமாக இருந்திருக்கிறது என்பதை அறிய மகிழ்ச்சி. இருவருக்கும் இனிய பாராட்டுகள் கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், எங்கள் இருவருக்குமான இனிய பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  35. மறுபடியும் வாழ்த்து சொல்லி பாராட்டியவர்களுக்கு நன்றி. ஸார் இப்படியெல்ம் ரிப்ளை பின்னூட்டம் கொடுத்து என்னை உசுப்பேத்தி விடுறீங்களா
    மறுபடி பதிவு எழுத வந்துடுவேனாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் December 14, 2015 at 1:16 PM

      வாங்கோம்மா ..... வணக்கம்மா.

      //மறுபடியும் வாழ்த்து சொல்லி பாராட்டியவர்களுக்கு நன்றி.//

      ஆஹா, ஓக்கே. மிக்க மகிழ்ச்சி.

      //ஸார் இப்படியெல்லாம் ரிப்ளை பின்னூட்டம் கொடுத்து என்னை உசுப்பேத்தி விடுறீங்களா?//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நானா ? உங்களைப்போய் உசுப்பேத்தி விடுகிறேனா? நான் உண்டு என் வேலை உண்டு என்று சமத்தாக தேமேன்னு இருப்பவன் ஆச்சேம்மா :)

      //மறுபடி பதிவு எழுத வந்துடுவேனாக்கும்.//

      மறுபடியும் பதிவு எழுத வாங்கோ, வாங்கோ, வெல்கம் .. எஞ்ஜாய் !! :) அதைத்தான் ... நான் மட்டுமல்ல, வாசகர்கள் அனைவரும் ... ஏன் இந்தப்பதிவு உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கித்தவித்து கொண்டு இருகிறதாக்கும் ..... ஹூக்க்க்க்க்க்கும். :)

      இந்த பரிசுகிடைத்த + விருது கிடைத்த செய்திகளையேகூட ஓர் தனிப்பதிவாக உங்கள் வலைத்தளத்தினில் வெளியிட்டு ஆரம்பிக்கலாம்.

      அதற்கு முன்னுதாரணமாக இதோ சில இணைப்புகளைப் பாருங்கோ:

      http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_17.html

      http://manammanamveesum.blogspot.in/2015/11/1.html

      பிரியத்துடன் (உசுப்பேத்திவிடும்) கோபு

      Delete
  36. சாதனையாளர் விருதும் பரிசும் பெற்ற பூந்தளிர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. December 17, 2015 at 5:53 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சாதனையாளர் விருதும் பரிசும் பெற்ற பூந்தளிர் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

      Delete
  37. திருமதி சிவகாமிக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    முதல் சாதனையாளர். அதற்கு ஒரு சிறப்பு வாழ்த்து.

    //பிரியத்துடன் (உசுப்பேத்திவிடும்) கோபு//

    உசுப்பேத்தியும் எனக்கு சுறு சுறுப்பு வரலையே.

    அப்படியே எனக்கு சுறுசுறுப்பு வந்தா இயற்கைக்கே பொறுக்க மாட்டேங்குதே. NET அதான் INTERNET படுத்தும் பாடு வேறு தாங்க முடியலை. லயாவுக்கே சவால் விடுதே.    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya December 17, 2015 at 7:47 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா. உங்களோட இதுபோன்ற ஜாலியான பின்னூட்டங்கள் இல்லாமல் இந்தப்பதிவே மிகவும் டல் அடிப்பதாகத் தோன்றியது.

      இப்போ சும்மா ஜோரா பளிச்சுன்னு டால் அடிக்குது. ’ஜெ’யின் வைரத்தோடு வைர மூக்குத்தியாலும்கூட ஒருவேளை இது இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம். :)

      //திருமதி. சிவகாமிக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஜெயா. சிவகாமி ரொம்ப நல்ல பொண்ணு. ஜெயா போலவே ஜாலி டைப் ... ஸ்வாதீனமாக உரிமை எடுத்துக்கொண்டு ஆத்மார்த்தமான அன்புடன் பழகி வருபவள்.

      //முதல் சாதனையாளர். அதற்கு ஒரு சிறப்பு வாழ்த்து.//

      அதுவும் பெண்கள் அணியின் முதல் சாதனையாளராக்கும். அதுதான் மிகவும் ஆச்சர்யமாக்கும். :)

      **பிரியத்துடன் (உசுப்பேத்திவிடும்) கோபு**

      //உசுப்பேத்தியும் எனக்கு சுறு சுறுப்பு வரலையே.//

      நம்பளைவிட அவளுக்கு எப்படியும் கொஞ்சம் வயசு கம்மியாத்தானே இருக்கும். அதனால் உசுப்பேத்தினால் ஒர்க்-அவுட் ஆகுதுன்னு நான் நினைக்கிறேன். :)

      //அப்படியே எனக்கு சுறுசுறுப்பு வந்தா இயற்கைக்கே பொறுக்க மாட்டேங்குதே. NET அதான் INTERNET படுத்தும் பாடு வேறு தாங்க முடியலை. லயாவுக்கே சவால் விடுதே.//

      PS to GM of BSNL ... (Recently Retired) ஆக இருக்கும் தாங்களே இப்படிச்சொன்னால், என்னைப்போன்ற சாமான்யனும், சாதாரணமானவனும் என்ன செய்வது சொல்லுங்கோ. :)

      Delete
  38. கோபு அண்ணா, இன்னொரு விஷயம்.

    புத்தாண்டில் ஏதாவது போட்டி இருக்கா?
    சிறுகதை விமர்சனப் போட்டியைக் கோட்டை விட்டது போல் இனி இருக்க மாட்டேன். உருண்டு பெரண்டு, அடிச்சு, புடிச்சு எப்படியாவது ஜெயிக்க TRY பண்ணுவேன்னு சொல்ல வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya December 17, 2015 at 7:49 PM

      //கோபு அண்ணா, இன்னொரு விஷயம்.
      புத்தாண்டில் ஏதாவது போட்டி இருக்கா? //

      புத்தாண்டு முதல் இந்த என் வலைப்பூவிலிருந்து காணாமல் போக நினைத்திருக்கும் உங்கள் கோபு அண்ணாவை கண்டுபிடித்துத் தருவோருக்கு பரிசு என்று நீங்கள் வேண்டுமானால் உங்கள் வலைத்தளத்தில் ஓர் போட்டி அறிவிக்கலாம் எனத் தோன்றுகிறது. :)

      //சிறுகதை விமர்சனப் போட்டியைக் கோட்டை விட்டது போல் இனி இருக்க மாட்டேன். உருண்டு பெரண்டு, அடிச்சு, புடிச்சு எப்படியாவது ஜெயிக்க TRY பண்ணுவேன்னு சொல்ல வந்தேன்.//

      ஜெயாவை உருண்டு, பெரண்டு, அடிச்சுப் புடிச்சு எப்படியாவது மேலும் மேலும் துன்புறுத்த கோபு அண்ணாவுக்கு விருப்பமில்லையாக்கும்.

      ஜெயா பாவம் ... இனிமேலாவது கோபு அண்ணாவின் போட்டி கீட்டின்னு தொந்தரவு ஏதுமில்லாமல் ஜாலியாக நிம்மதியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்ற நல்ல எண்ணமாக்கும் எனக்கு. :)

      Delete
  39. Replies
    1. ஆல் இஸ் வெல்....... December 23, 2015 at 2:23 PM

      //Enter your comment...ஸ்ரீ//

      யாருக்கு எழுதியிருக்கீங்க? என்ன எழுதியிருக்கீங்கோ? ஒன்றுமே புரியவில்லை.

      Delete
  40. வெரி ஸாரி ஸார். மொபைல் தகறாறு. ஸைன் அவுட் ஆகவே மாட்டேங்குது. அது செக்பண்றப்போ பை மிஸ்டேக் ஆகி போச்சு. வேற ஒன்னுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... December 23, 2015 at 2:58 PM

      //வெரி ஸாரி ஸார். மொபைல் தகறாறு. ஸைன் அவுட் ஆகவே மாட்டேங்குது. அது செக்பண்றப்போ பை மிஸ்டேக் ஆகி போச்சு. வேற ஒன்னுமில்லை.//

      ஓக்கே, ஓக்கே ..... நோ ப்ராப்ளம். :)

      Delete
  41. ஓ...லேடீஸ் ஃபர்ஸ்டா?? சாதனையாளர் விருது பெறும் முதல் பெண் சாதனையாளர் திருமதி பூந்தளிர் மேடத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. சரணாகதி. December 25, 2015 at 4:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஓ...லேடீஸ் ஃபர்ஸ்டா??//

      ஆமாம். லேடீஸ்தான் ஃபர்ஸ்டூஊஊஊ. அதிலும் பூமணம் கமழும் ’பூந்தளிர்’தான் வெரி ஃபர்ஸ்டூஊ :)

      //சாதனையாளர் விருது பெறும் முதல் பெண் சாதனையாளர் திருமதி பூந்தளிர் மேடத்துக்கு வாழ்த்துகள்//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்வாமீ.

      Delete
  42. சாதனையாளராக முதலில் அறிமுகமாகி பரிசு வென்ற திருமதி பூந்தளிர் மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. siva siva December 26, 2015 at 11:15 AM

      வாங்கோ, வணக்கம். என் வலைத்தளம் பக்கம் தங்களின் முதல் வருகை ? மகிழ்ச்சியளிக்கிறது. :) தொடர்ந்து வாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      //சாதனையாளராக முதலில் அறிமுகமாகி பரிசு வென்ற திருமதி பூந்தளிர் மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  43. திருமதி பூந்தளிர் மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco December 27, 2015 at 10:36 AM

      //திருமதி பூந்தளிர் மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  44. இது இந்தப்பதிவின் பின்னூட்ட எண்ணிக்கை : 100

    மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள் பூந்தளிர் :)

    நூறாண்டு காலம் வாழ்க ! நோய் நொடியில்லாமல் வாழ்க !!

    பிரியமுள்ள கோ>>>>>பூ :)

    ReplyDelete
  45. நேசித்து இங்கு வந்து ஒரு பின்னூட்டம் போட்டேனே கிடைத்ததா இல்லையா???????

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. March 19, 2016 at 10:33 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நேசித்து இங்கு வந்து ஒரு பின்னூட்டம் போட்டேனே கிடைத்ததா இல்லையா???????//

      நேசிக்காமல் போட்டிருக்கும் இது மட்டும்தான் கிடைத்துள்ளது. நேசித்துப் போட்டதாகச் சொல்லியுள்ளது எதுவும் கிடைக்கவில்லை !

      மீண்டும் அனுப்புங்கோ, ப்ளீஸ்....... !

      Delete
  46. ஓ...... பூந்தளிர் மேடமவங்க பேரு சிவகாமிமேடமா. இங்கவந்ததுல நெறய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது. ஸாருக்கு எ...வ்...வ....ள...வு ரசிகர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. March 21, 2016 at 2:12 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஓ...... பூந்தளிர் மேடமவங்க பேரு சிவகாமிமேடமா. இங்க வந்ததுல நெறய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது.//

      இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல. இன்னும் நிறைய செல்லமான பெயர்கள் உள்ளன. என்னிடம் மட்டும் சொல்லியிருக்காங்க. மிகவும் பேர்போனவங்க ! :)

      //ஸாருக்கு எ...வ்...வ....ள...வு ரசிகர்கள்.//

      ஸாருக்கு ரசிகர்களைவிட ரசிகைகள் மிகவும் அதிகம் என ’ஆச்சி’ என்ற பதிவர் என்னை அலைபேசியில் அடிக்கடி கிண்டல் செய்வதும் உண்டு. யார் அந்த ஆச்சி என்று கேட்கிறீர்களா?

      இதோ இந்தப்பதிவுகளில் போய்ப் பாருங்கோ, அவரின் அன்பும் நட்பும் தெரியும்.

      http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html

      http://gopu1949.blogspot.in/2015/01/20.html

      அன்புடன் VGK

      Delete
  47. நேத்து போட்ட கமண்டுனு போட்டேன் அதுதான் நேசித்துனு டைப்பாகி இருந்திருக்கு. ஸாரி ஸாரி

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. March 21, 2016 at 2:17 PM

      வாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் எனக்கு மகிழ்வளிக்கிறது.

      //’நேத்து’ போட்ட கமண்டுனு போட்டேன். அதுதான் நேசித்துனு டைப்பாகி இருந்திருக்கு. ஸாரி ஸாரி//

      அதனால் என்ன? ’நேத்து’ என்பது ’நேசித்து’ என ஆகியிருப்பதில் மேலும் மகிழ்ச்சியே.

      எழுத்துப்பிழையிலும் அது அகஸ்மாத்தாக ஓர் அழகாக அமைந்திருப்பதால் தங்களின் இந்த எழுத்தினை நானும் மிகவும் நேசிக்கிறேன். :)

      எனினும் தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. - VGK

      Delete
  48. ஹப்பா.... இந்த பதிவ இன்னிக்குதான் பாத்தேன்... அதுவும் லிங்க் கிடைத்ததால..பூந்தளிர் மேடம் வாழ்த்துகள்.. பெரிப்பா பாராட்டுகள்.. அவங்க பின்னூட்டம் உங்க ரிப்ளை பின்னூட்டமெல்லாம் அவ்வளவு ஜோரா இருக்கு..

    இப்பலாம் போட்டி+ பரிசுனு எதுவும் வைக்கறதில்லையா..

    ReplyDelete
    Replies
    1. happy March 7, 2018 at 11:38 AM

      வாடிம்மா ..... என் வாயாடி ..... ஹாப்பி. நன்னா செளக்யமா இருக்கிறாயா?

      //ஹப்பா.... இந்த பதிவ இன்னிக்குதான் பாத்தேன்... அதுவும் லிங்க் கிடைத்ததால..//

      இந்த லிங்கை உனக்கு இன்று யாரு கொடுத்தாங்களோ! அவங்களுக்கு என் நன்றிகள்!! :)

      //பூந்தளிர் மேடம் வாழ்த்துகள்.. பெரிப்பா பாராட்டுகள்.. அவங்க பின்னூட்டம் உங்க ரிப்ளை பின்னூட்டமெல்லாம் அவ்வளவு ஜோரா இருக்கு..//

      எங்களுக்கான இந்த உன்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்கூட ஜோராகத்தான் இருக்குது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிடா..... ஹாப்பி.

      //இப்பலாம் போட்டி + பரிசுனு எதுவும் வைக்கறதில்லையா..//

      ஏனோ எனக்கு இந்தப் பதிவுலகமே மிகவும் அலுத்துப்போய் விட்டது. ஒருவேளை மீண்டும் உற்சாகம் ஏற்படுமானால் அதைப்பற்றி சிந்திப்போம்.

      அன்புடன் கோபு பெரிப்பா

      Delete