About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, October 19, 2013

67] ஆட்சி மாறியும் ஊழல் மாறாமலேயே .... !

2
ஸ்ரீராமஜயம்





இன்னும் கிட்டத்தில் பிரத்தியக்ஷமாக பார்க்கிறோம். ஒரு லஞ்சம், கரப்ஷன்; வேண்டியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவது, வேலை கொடுப்பது என்றெல்லாம் ஒரு ராஜாங்கத்தார் பண்ணினால் அதற்கு ஜனங்களின் ஆதரவு போய்விடுகிறது என்று எலெக்‌ஷனில் தெரிகிறது. 

ஆப்புறம் வேறுசிலர் ராஜாங்கத்தை அமைக்கிறார்கள். ஆனால் படிப்பினை ஒன்றும் பெற்றதாகத் தெரியக்காணோம். அந்த அதே தோஷங்களை இவர்களும் செய்ததாக ஏற்பட்டு, அடுத்த எலெக்‌ஷனில், அதே கதி இவர்களுக்கும் உண்டாகிறது.

ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே இப்படி ஏற்படுகிறது. ஆகையால் History repeats itself என்று தெரிந்துகொண்டு விடுவதால் மட்டும், அதிலிருந்து நல்ல பாடம் எதையும் படித்துத் தெரிந்து கொள்வதில்லை.


oooooOooooo

அவன் திட்டினானா?

நுங்கம்பாக்கத்தில் ஜம்புலிங்கம் தெருவில் மெயின் ரோடையொட்டி தத்தாஜி என்று ரிசர்வ் வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர் இருந்தார். அவாத்துலதான் பெரியவா வந்தா பூஜையோட தங்குவா. காலையிலே விஸ்வரூபதரிசனம், பிறகு பூஜை, மதியம் ஊரைச் சுற்றி பலருக்கு ஆசி கூற கிளம்பி விடுவார்கள்.

தத்தாஜி மாமா கைங்கர்ய சபாவின் தலைவர். வீடு வீடாகச் சென்று மாதம் ரூபாய் ஒன்று வசூல் செய்து, ஏழைகளுக்கு திருமணத்திற்கும், உபநயனம் போன்ற நல்ல கார்யங்களுக்கும் செலவு செய்வார், புண்யம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று. 

நானும், எனது நண்பன் வைத்தியநாதனும் அடிக்கடி பெரியவாளை தரிசனம் செய்ய செல்வோம்.

ஒருநாள், திடீரென்று பெரியவா எங்களை கூப்பிட்டு, “வீடு வீடாக குடித்தனம் குடித்தனமாக போய் ஒரு ரூபாய் .... ஒரே ஒரு ருபாய் மட்டும் கலெக்ட் செய்து தத்தாஜி மாமாவிடம் குடுங்கோ. இந்தப் பணம் வேதத்திற்காக மட்டும் செலவு செய்ய வேண்டும். இப்போ ஆஸ்ரமத்தில் வேத சம்மேளனம் நடக்கப்போகிறது. 

சீதாராமய்யர் அதன் பொறுப்பைப் பார்க்கட்டும். நீங்கள் இருவரும் கட்டாயமாக எல்லோரிடமிருந்தும் வசூல் செய்யணும். இதன் பலன் எல்லாருக்கும் கிடைக்கணும். 

திட்டுவா, அடிக்க கூட வருவா, ஆனா நீங்க பொறுமையா, பதில் பேசாமல் பெரியவா சொல்லியிருக்கார்ன்னு மட்டும் சொல்லி வசூல் செய்யணும். என்ன புரியறதா?” என்று சொன்னார்.

நாங்களும் “சரி” என்று சொல்லிவிட்டு கிளம்பினோம். அநேகமா யாவரும் மறுக்காமல் பணம் கொடுத்தனர். ஒரு சிலர், “நாளை வாங்கோ” என்று சொன்னார்கள். 

இந்தப் பொறுப்பிலே, நாங்கள் ஒரு ஆயுர்வேத டாக்டர் வீட்டிற்கு சென்றோம். பணம் கேட்டோம். அவர் திட்ட வட்டமாக மறுத்தது மட்டுமில்லாமல் வாயில் வந்தபடி திட்ட ஆரம்பித்தார். பிடிவாதமாக நாங்கள் முயற்சி செய்தோம்.

அப்போது, ராமா கல்யாண மண்டபத்திலிருந்து தள்ளு வண்டியிலே பெரியவா தாரை, தம்பட்டை ஓத, வரும் சப்தம் கேட்டது. சொல்லி வைத்தாற்போல நாங்கள் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தார். 

டாக்டர் உடனே பூர்ண கும்பத்துடன் பெரியாவளை வரவழைக்கலானார். தட்டிலே அரிசி வைத்து பூர்ண கும்பம், அதிலே ரூ 100/- இருந்தது. 

என்ன ஆச்சர்யம். பெரியவா பக்கத்திலே இருந்த ஒரு சிப்பந்தியிடம் அந்த ரூ 100/- ஐ எடுத்து எங்களிடம் குடுக்க சொன்னார். 

“டே, பசங்களா, நீங்க இருந்து ரசீது கொடுத்துட்டு வாங்கோ” என்று உத்தரவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தார். 

அப்போதுதான் புரிந்தது டாக்டருக்கும், நாங்கள் நிஜமாவே பெரியவா சொல்லித்தான் வசூலுக்கு வந்திருக்கிறோம் என்று. 

இது முடிந்து மடத்துக்கு சென்றோம். பெரியவாளிடம், ” இன்னிக்கி ரூ 500/- வசூல் ஆகியது” என்று தெரிவித்தோம்.

பெரியவா கேட்டார், “அவன் திட்டினானா?”

நான் உடனே, “இல்லை இல்லை தருவதாகத்தான் சொன்னார். அதுக்குள்ளே நீங்க வந்துட்டேள். அதனாலே ஒரு ரூபாய்க்கு பதில்  100 ரூபாயாகக் கிடைத்தது” என்றேன்.

உண்மையிலே, பெரியவா மனதுக்குள்ளே சந்தோஷப்பட்டு, எங்களுக்கு பிரசாதம் கொடுத்தார். எங்களுக்கு வேறு என்ன வேண்டும் ஆசி மட்டும்தானே…..


[ஒரு பக்தர் எழுதியுள்ளது. 
Thanks to 'Sage of Kanchi' 27.08.2013]



oooooOooooo






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

50 comments:

  1. அன்பின் வை.கோ

    அருமையான பதிவு - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா கூறாமல் யாரும் பணம் வசூலிக்க மாட்டார்கள் - வேத பாராயணத்திற்காக வசூல் செய்யப்பட்டு அச்செயலுக்காகவெ செலவிடப்பட்டதென .அறிந்து அனவரும் மகிழ்ந்தனர் ( டாக்டர் உட்ப்ட ). நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. மகா பெரியவரின் கட்டளையை ஏற்று பணம் வசூல் செய்ததும் கொடுக்க மறுத்த டாக்டர் பெரியவரிடம் 100 ரூபாய் கொடுத்ததும் சிறப்பு.

    ReplyDelete
  3. ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே இப்படி ஏற்படுகிறது. ஆகையால் History repeats itself என்று தெரிந்துகொண்டு விடுவதால் மட்டும், அதிலிருந்து நல்ல பாடம் எதையும் படித்துத் தெரிந்து கொள்வதில்லை.

    கண்டிப்பாக பாடம் படித்துக்கொள்ளவேண்டும் ..
    துஷ்டரைக் கண்டால் தூர விலகவேண்டும் ..!

    ReplyDelete
  4. நான் உடனே, “இல்லை இல்லை தருவதாகத்தான் சொன்னார். அதுக்குள்ளே நீங்க வந்துட்டேள். அதனாலே ஒரு ரூபாய்க்கு பதில் 100 ரூபாயாகக் கிடைத்தது” என்றேன்.

    சாமார்த்தியமான அழகான பதில்..!

    ReplyDelete
  5. திட்டுவா, அடிக்க கூட வருவா, ஆனா நீங்க பொறுமையா, பதில் பேசாமல் பெரியவா சொல்லியிருக்கார்ன்னு மட்டும் சொல்லி வசூல் செய்யணும். என்ன புரியறதா?” என்று சொன்னார்.


    பொதுக் காரியத்துக்கு போனால் இப்படித்தான்.. பெரியவா சொன்னது எல்லோருக்கும் ஏற்ற அறிவுரை

    ReplyDelete
  6. வீடு வீடாகச் சென்று மாதம் ரூபாய் ஒன்று வசூல் செய்து, ஏழைகளுக்கு திருமணத்திற்கும், உபநயனம் போன்ற நல்ல கார்யங்களுக்கும் செலவு செய்வார், புண்யம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று.

    இப்படி ஒருவரை நேரிலேயே சந்தித்துப் பழகி அவரது கைங்கர்யங்களுக்குத்துணைபுரிந்திருக்கிறோம் ..

    இரண்டு ரூபாய் கொடுத்தால் ஒரு ரூபாயை திருப்பித்தந்துவிடுவார்.. எல்லோருக்கும் புண்ணியம்
    சம அளவாகக்கிடைக்கவேண்டும் என்பார் ..

    மேல் கோட்டை அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் சில காலம் தடைப்பட்டிருந்த காலத்தில் இப்படித்தான் அவர் பணம் வசூலித்து நடத்திக்கொடுத்ததோடு எங்கள் குடும்பத்தையும் இணைத்துக்கொண்டார் ..!

    ReplyDelete

  7. உண்மையிலே, பெரியவா மனதுக்குள்ளே சந்தோஷப்பட்டு, எங்களுக்கு பிரசாதம் கொடுத்தார். எங்களுக்கு வேறு என்ன வேண்டும் ஆசி மட்டும்தானே…..


    ஆத்மார்த்தமான ஆசிகள் தான் எத்தனை பெரும் செல்வம் என்பதை உணர வைத்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  8. Aha ha....
    Arumai.
    Pranam to Periyava.
    viji

    ReplyDelete
  9. ஆசி மட்டும் இருந்தால் போதுமே... அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. பரமாச்சார்ய ஸ்வாமிகளின் ஆசிகளைப் பெற என்ன தவம் செய்திருக்க வேண்டும்!..அழகான பதிவு!..

    ReplyDelete
  11. எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
    அதுபோலதான் புண்ணியமும்
    நல்ல பதிவு.

    அரசியலுக்கு வருவதே
    அகப்பட்டதை சுருட்டதான்

    அவர்களிடம் என்ன நேர்மை
    எதிர்பார்க்கமுடியும்?

    ReplyDelete
  12. பொதுக்காரியங்களுக்காக நிதி கேட்கப்போனால் திட்டுவா,அடிக்கக்கூட வருவா. பொருமையாயிருந்து கேட்கணும்.
    அதே பெரியவரைப் பார்த்ததும் நூரு ரூபாயாக தட்டில் வைக்கத் தோன்றிவிட்டது. மகத்துவம் அவ்வளவு உயர்ந்தது.
    பசங்களுக்கு ஆசிகள் கிடைத்தது ஒன்றே போதும்.
    எல்லாமே அருமை. நல்ல பகிர்வு. அன்புடன்

    ReplyDelete
  13. ஆசி மட்டும் இருந்தால் போதுமே... அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  14. தங்கள் கூற்று உண்மையே! பெரியவர் பெரியவர் தான்! ஐயமில்லை!

    ReplyDelete
  15. பெரியவாளின் அமுத மொழி இன்றும் உண்மையாக இருக்கிறது! ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! தர்மத்தின் பலன் அனைவருக்கும் சேர வேண்டும் என்று அனைவரிடமும் ஒரு ரூபாய் வசூலித்ததும், ஒருவர் தரமாட்டார் என்றதும் தன் தொண்டர்கள் வேதனைப்படக் கூடாது என்று அங்கேயே சென்று ஒன்றுக்கு நூறாக பெற்றுத்தந்த பெரியவாளின் கருணையும் வியக்க வைத்தன! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  16. அற்புதமான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. Well said about the politics and politicians Sir

    ReplyDelete
  18. Nice information.. thxs for sharing..

    ReplyDelete
  19. பெரியவர்கள் ஆசி இருந்தால் பத்தும் நூறாகும்
    என்று விளங்குகிறது ஐயா...

    ReplyDelete
  20. பெரியவரின் அரசியல் நோக்கும் அரசியல்வாதிகள் குறித்தப் பார்வையும் வியக்கவைக்கிறது.

    \\உண்மையிலே, பெரியவா மனதுக்குள்ளே சந்தோஷப்பட்டு, எங்களுக்கு பிரசாதம் கொடுத்தார். எங்களுக்கு வேறு என்ன வேண்டும் ஆசி மட்டும்தானே\\
    உண்மை பக்தர்கள். எதுவேண்டுமோ அதை மட்டுமே எடுத்துக்கொள்ளும் பக்குவத்தினர். சிறப்பான பதிவு. நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  21. “இல்லை இல்லை தருவதாகத்தான் சொன்னார். அதுக்குள்ளே நீங்க வந்துட்டேள். அதனாலே ஒரு ரூபாய்க்கு பதில் 100 ரூபாயாகக் கிடைத்தது” என்றேன்.
    // அற்புதம்! என்னே ஒரு தீர்க்க தரிசனம்!//
    நன்றி ஐயா!

    ReplyDelete
  22. பொதுகாரியங்களுக்கு என்று சிலர் ஏமாற்றி வசூலிப்பதால் உண்மையாக ஈடுபடுபவர்களையும் அறிந்து கொள்ள முடியாமல் டாக்டர் திட்டி விட்டார் போலும்.
    பொது காரியங்களில் ஈடுபடுபவர் பொறுமையாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை பெரியவர் இதன் மூலம் பாடம் சொல்லியிருக்கிறார்...
    மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  23. அருமையான பகிர்வு மஹாபெரியவாளின் தீர்க்கதரிசனம்பற்றியசெய்திக ள்மஹாபெரியவாளை தரிசனம் செய்தகாலத்தை 1974 ஞாபகபடுத்தியது அந்த பாக்ய்ம் சிவாஸ்தானத்தில் 10 நாட்கள் தங்கியிருந்து கிடைத்தது பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  24. ஆட்சி மாறியும் ஊழல் மாறாமலேயே .... ! லஞ்சம்! இது எங்கேயும் எப்போதும் நடப்பது தான்.
    நல்லவர்களால் நல்ல மாற்றங்கள் நிகழட்டும். கடவுள் துணை புரியட்டும்.
    //தத்தாஜி மாமா கைங்கர்ய சபாவின் தலைவர். வீடு வீடாகச் சென்று மாதம் ரூபாய் ஒன்று வசூல் செய்து, ஏழைகளுக்கு திருமணத்திற்கும், உபநயனம் போன்ற நல்ல கார்யங்களுக்கும் செலவு செய்வார், புண்யம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று//
    நல்ல செயல். நல்ல பதிவு.
    பகிர்வுக்கு வாழ்த்துகள். நன்றி ஐயா.

    ReplyDelete
  25. பிடி அரிசி திட்டம் என்றும் பெரியவர் கூறக்கேட்டு அதன்படி நடந்து பலரது பசிப் பிணியை ஓரளவாவது போக்கலாமே. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்,

    ReplyDelete
  26. ''..எங்களுக்கு வேறு என்ன வேண்டும் ஆசி மட்டும்தானே…..'''
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  27. ஒரு ரூபாய் கொடுக்க மறுத்த கதை பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும், அதனால் தான் அந்தப்பக்கம் வந்தாரோ?

    ReplyDelete
  28. அருமையான பகிர்வு...

    ReplyDelete

  29. // அப்போதுதான் புரிந்தது டாக்டருக்கும், நாங்கள் நிஜமாவே பெரியவா சொல்லித்தான் வசூலுக்கு வந்திருக்கிறோம் என்று //

    நிறையபேர் இப்போது ஒரு மஞ்சள் பை, ஒரு ரசீது புத்தகம் என்று கையில் வைத்துக் கொண்டு வருகிறார்கள். உண்மையான ஆட்களா என்ரு தெரிவதில்லை.எனவே நல்ல காரியமாக வசூல் செய்ய வந்தவர்கள் மீது டாக்டருக்கு சந்தேகம் வந்ததில் தப்பு இல்லை. பெரியவர் மூலம் தெரிந்து கொண்டது நல்ல கிளைமாக்ஸ்

    ReplyDelete
  30. ஒரு ருபாய் கேட்டால் நூறு ருபாய் கொடுக்கும் படி சேது விட்டாரே மஹா பெரியவர்.
    அவர் ஆசிகள் நேரடியாகப் பெற்ற நீங்கள் புண்ணியம் செய்தவர் தான்.

    ReplyDelete
  31. ஆசி மட்டும் இருந்தாலே போதும் எதையும் சாதிக்கலாம்,நன்றி ஐயா!!

    ReplyDelete
  32. “இல்லை இல்லை தருவதாகத்தான் சொன்னார். அதுக்குள்ளே நீங்க வந்துட்டேள். அதனாலே ஒரு ரூபாய்க்கு பதில் 100 ரூபாயாகக் கிடைத்தது” என்றேன்.//

    அந்த பக்தர் எவ்வளவு பெருந்தனமையானவர்!
    டாகடர் திட்டியதை சொல்லாமல் தருவதாக சொன்னார் என்று எவ்வளவு அழகாய் சொல்கிறார்.
    பெரியவா அவர்களிடம் பக்தி கொண்டவர்கள் நல்ல குணவானாக இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு இச்சம்பவம்.

    //எங்களுக்கு வேறு என்ன வேண்டும் ஆசி மட்டும்தானே…..//
    குருவிடம் வேறு எதை எதிர்பார்ப்பார் நல்ல சீடர்! ஆசி மட்டும் போதும் அனைத்தும் கிடைத்து விடுமே!.
    நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  33. அன்பின் வை.கோ - ஆட்சி மாறினாலும் ஊழல் மாறாது - மாற்ற விரும்பவில்லை - மாற வேண்டும். மாறித்தான் ஆக வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை. நல்ல பதிவு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா .

    ReplyDelete
  34. பொதுக் காரியங்களில் இறங்கும்போது திட்டு வாங்குவது சகஜம் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார்.....

    லஞ்சம் எங்கும் புறையோடி விட்டது என்பதை அப்போதே சொல்லி இருக்கிறார்....

    ReplyDelete
  35. ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு படிப்பினை தந்து நிற்கிறது.

    ReplyDelete
  36. இது வரை தெரியாத தகவல். பெரியவர் சொல்லியும் மறுக்கிறவர்கள் உண்டோ?

    ReplyDelete
  37. ////ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே இப்படி ஏற்படுகிறது. ஆகையால் History repeats itself என்று தெரிந்துகொண்டு விடுவதால் மட்டும், அதிலிருந்து நல்ல பாடம் எதையும் படித்துத் தெரிந்து கொள்வதில்லை.////

    நாட்டின் உண்மையான அவல நிலை இது . நாமும் எரிகிற கொள்ளியில் நல்ல கொல்லி எது என்று தான் தேடி தோற்கிறோம் .

    ReplyDelete
  38. தலைப்பு பார்த்துட்டு அரசியலோன்னு கொஞ்சம் எதிர்பார்ப்பு!!

    ஒரு ரூபாய் கேட்டதை நூறு ரூபாயாய் மாற்றிய பேருள்ளத்தை என்ன சொல்வது?!!

    ReplyDelete
  39. பக்தர்களை பலவிதமாக பெரியவாள் சோதிக்கிறார்.

    ReplyDelete
  40. னல்ல காரியங்களுக்கு பணம் கொடுக்க ஏன் தயங்கணும். எப்படியோ பெரியவா வசூல் பண்ணிட்டா

    ReplyDelete
  41. // ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே இப்படி ஏற்படுகிறது. ஆகையால் History repeats itself என்று தெரிந்துகொண்டு விடுவதால் மட்டும், அதிலிருந்து நல்ல பாடம் எதையும் படித்துத் தெரிந்து கொள்வதில்லை.//

    ம் எத்தனை தேர்தல் வந்தாலும், கட்சிகள் மாறினாலும் நாம புரிந்து கொள்ளப் போவதில்லை.

    ReplyDelete
  42. // அப்போது, ராமா கல்யாண மண்டபத்திலிருந்து தள்ளு வண்டியிலே பெரியவா தாரை, தம்பட்டை ஓத, வரும் சப்தம் கேட்டது. சொல்லி வைத்தாற்போல நாங்கள் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    டாக்டர் உடனே பூர்ண கும்பத்துடன் பெரியாவளை வரவழைக்கலானார். தட்டிலே அரிசி வைத்து பூர்ண கும்பம், அதிலே ரூ 100/- இருந்தது. //

    வரவேண்டிய நேரத்துல சரியா வந்து சேர்ந்திருக்கார் நம்ப மகா பெரியவா.

    டாக்டரைப் பத்தி போட்டுக் கொடுக்காத அந்த மனிதரை பாராட்டத் தான் வேண்டும். ஆமாம், மகா பெரியவாளின் அருளுக்குமுன் இவையெல்லாம் எம்மாத்திரம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு

      Delete
  43. தரும வெசயங்களுக்கு பணம் கொடுத்திட்டா நல்லதுதானே.

    ReplyDelete
  44. தர்ம காரியங்களுக்கு பணத்தை வசூல் செய்து கொடுத்தவங்களுக்கு புண்ணியம் கிடைக்க செய்து விடுகிறார்களே.

    ReplyDelete
  45. பெரியவர் வந்தா "ஒரு ரூபா தர நினைக்கிறவரும் நூஊறு ரூபா தருவார்"... எதுவும் - சாத்தியம்..

    ReplyDelete
  46. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (11.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=439592153210151

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete