About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, November 1, 2013

74 ] பக்தி சிரத்தை.

2
ஸ்ரீராமஜயம்


  

”தெய்வ அருளால் ஒருவனுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மூன்று:

ஒன்று:- 

மனிதப்பிறவி கிடைப்பது; 

இரண்டு:- 

சத்தியத் தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறப்பது; 

மூன்று:- 

மன உத்தமமான ஒரு குரு கிடைப்பது”

என்று ஆசார்யாள் [ஆதி சங்கரர்] “விவேக சூடாமணி” ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

“பக்திசிரத்தை” என்று சொல்வதே வழக்கம். 

அங்கே “பக்தி” என்ற பிரியத்தையும், “சிரத்தை” என்ற நம்பிக்கையையும் எடுத்துச் சொல்கிறோம்.

ஆனால் ஒன்றிடம் பிரியம் இருந்தால்தான் அதனிடம் நம்பிக்கை வரும். 

ஒன்று நம்பகமானதாக இருந்தால் தான் அதனிடம் பிரியம் வரும்.

இப்படி இரண்டும் பிரிக்க முடியாமல் இருப்பதால் ”பக்தியும் சிரத்தையும்” ஒன்றே என்றாகிவிடுகிறது.


-oOo-

ஆரம்பம் முதல், எவனும் கடன் என்றே போகாமல், தன் வருவாயில்தான் காலம் தள்ளுவது என்று ஆக்கிக் கொள்ள வேண்டும்.


oooooOooooo


  
    
அனைவருக்கும் இனிய 
தித்திக்கும் தீபாவளி 
நல்வாழ்த்துகள்
   
  
 

oooooOooooo

“தீபாவளியைக் 

கொண்டாடுவதன் தாத்பர்யம்கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. 

“என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என வேண்டினாள்! 

இந்த வேண்டுகோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. 

“நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்“ என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்“ என்று அருளியுள்ளார் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள்.


தீபாவளிக்கு மூன்று குளியல்கள்:

தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது. 

அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஓரு முகூர்த்த நேரம் கங்கை நதியே இருப்பதாக ஐதீகம். 

அதனால், அந்த நேரத்தில் எண்ணெய் ஸ்நானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது, நரகாசுரன், சத்திய பாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வரவேண்டும். இதற்கு “கங்கா ஸ்நானம்“ என்று பெயர்.

வெந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதிந்த பின், ஆறு நாழிகை நேரம் வரை, காவிரி உட்பட எல்லா புனித நதிகளும் குளிர்ந்த நீரில் இருப்பதாக ஐதீகம். அப்போது, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதற்கு, “துலாஸ்நானம்” என்று பெயர். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவுவரவேண்டும்.

வெளி உடம்பினை தூய்மையாக்கின பின், பெரிய ஸ்நானம் ஒன்றுண்டு. அதுதான் நம் உள் அழுக்கை எல்லாம் அகற்றும்  “கோவிந்தேதி ஸதா ஸ்நானம்“.  அப்போது, நம் ஜீவன் தூய்மையாகிறது. 

பெரிய ஸ்நானம் என்று சொன்னதால், மற்ற இரண்டும் முக்கியமில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மூன்றுமே முக்கியம் தான் என்பதை உணர்ந்து, ஸ்நானம் செய்யுங்கள்.

-oOo-

தீபாவளிப் பண்டிகையை ”பகவத் கீதையின் தம்பி“ என்பார் ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள். 

கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள். — காஞ்சி மஹாபெரியவர்.

[ Thanks to Sage of Kanchi 01 11 2013 ]

oooooOooooo


(ராமாயணம் பற்றி 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
ஒரு ஆராய்ச்சி)ராமாயணம் நம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்த தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். 

வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாச ராமாயணம் என்றெல்லாம் பல ராமாயணங்கள் இருக்கின்றன.


அதில் ஏதோ ஒன்றில் இந்த வித்தியாசமான விஷயம் இருக்கிறது.அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈஸ்வரனே சீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம்! "மரகத மணி வர்ணன்' என்பார்கள். அம்பிகையை "மாதா மரகத சியாமா' என்கிறார் காளிதாசர். முத்து சுவாமி தீட்சிதரும் "மரகத சாயே' என்று மீனாட்சியைப் பாடுகிறார்.


சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரத்தைத் தாண்டி மூலகாரணமாக இருக்கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருவருக்குப் பத்தினியாக பார்வதியாகி இருக்கிறபோது பச்சை நிறமாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள்.
ஸ்ரீராமன் சீதையை விட்டு காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணி விடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு வந்துவிடுகிறது! "காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதற்காக மனைவியை அழைத்துப் போக மறுக்கிறாரே... இவரும் ஓர் ஆண் பிள்ளையா” என்று அவளுக்கு மஹாகோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள். 

"உம்மை மாப்பிள்ளையாக வரித்த என் பிதா ஜனகர், நீர் ஆண் வேடத்தில் வந்திருக்கிற ஒரு பெண் (ஸ்திரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே” என்று ராமரைப் பார்த்துச் சண்டை போடுகிறாள் சீதாதேவி. இது சாக்ஷாத் வால்மீகி ராமாயண வசனம்.

ஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூட்சுமமாக ஞாபகப்படுத்தி விட்டாள் சீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவுக்கு வந்தது. அதற்கு அனுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக சீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.
            

 ராமரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய இராவணனோ பெரிய சிவ பக்தன். 

ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாசத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டு வந்து அசோகவனத்தில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாசத்தைப் பெயர்த்துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈசுவரனைக் கட்டிக்கொள்ள, அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஓடி வந்துவிட்டான். 

மஹா சிவபக்தனாகையால் அவனுக்குத் தன்னுடைய ஈசுவரன்தான் சீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப் போச்சு என்கிற கோபத் தினால், இப்போது அவள் தலையீடு இருக்கக் கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு, சீதையைத் தூக்கி வந்து அசோகவனத்தில் வைத்தானாம். 


 

ஆனாலும் ராட்சச அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில், ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் இராவணனுடைய அன்பு விகாரப் பட்டுக் காமமாயிற்று. 

இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது கொஞ்சம் தெரிந்தது.

ஆஞ்சனேயரைப் பார்த்தவுடனே இராவணன், "இவர் யார்? நந்தியெம்பெருமானா?' என்று நினைக்கிறான். "கிமேஷ பகவான் நந்தி' என்பது வால்மீகி ராமாயண வசனம். சீதாராமர்களின் பரமதாஸனாக இருக்கப்பட்ட அனுமாரைப் பார்த்ததும், கைலாயத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் தாஸனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல இராவணன் பேசுகிறான்.


அம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும். 

ஆனால் நாராயணன் என்கிற புருஷ ரூபம், அம்பாளின் ஸ்திரி ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே... இரண்டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களைச் சகோதர சகோதரியாக வைத்துக் கொள்ளலாம். 

அம்பாளை நாராயணணின் சகோதரி என்று சொல்வதற்கும் புராணக் கதைகள் எல்லாம் பக்கபலமாக இருக்கின்றன.

[நன்றி: அம்ருத வாஹினி 14 10 2013]   
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
04.11.2013 
திங்கட்கிழமை வெளியாகும். 

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

73 comments:

 1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள். — காஞ்சி மஹாபெரியவர்.

  அருமையான உதாரணம்..

  ReplyDelete
 3. அம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈஸ்வரனே சீதையாக உடன் வந்தார்.

  இப்படி ஒரு கதை இருக்கிறதா

  ReplyDelete
 4. தீபாவளி ஸ்நான வகைகளும் பெரியவாள் சொன்ன ராமயண கதையும் மிகவும் அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. s suresh November 1, 2013 at 6:57 AM

   வாருங்கள். வணக்கம்.

   மேலேயுள்ள [என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களின்] மூன்று PROFILE படங்களும், கீழேயுள்ள [என் அன்புத்தங்கை மஞ்சுவின்] நான்கு PROFILE படங்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் வரும் பெரும் குழப்பங்களை, நல்லவேளையாக நடுவில் கிடைத்துள்ள தங்களின் பின்னூட்டம் கொஞ்சமாவது வேறு படுத்திக்காட்டியுள்ளதில் சற்றே எனக்கு நிம்மதி. சந்தோஷம்.

   //தீபாவளி ஸ்நான வகைகளும் பெரியவாள் சொன்ன ராமாயண கதையும் மிகவும் அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!//

   மிக்க நன்றி.

   Delete
 5. பக்தி சிரத்தை ஏன் எதற்காக ஒன்றாய் சேர்த்து சொல்கிறோம் என்பதற்கான அற்புதமான விளக்கம் அண்ணா...

  ப்ரியங்களும் நம்பிக்கையும்.. ப்ரியம் இருக்கும் இடத்தில் நம்பிக்கை கண்டிப்பாக இருக்கவேண்டும்..

  உண்மையே அண்ணா... மிக மிக அற்புதம்.

  ReplyDelete
 6. தான் துன்பப்பட்டாலும் எல்லாரும் ஷேமமா இருக்கணும்னு நினைக்கிற மேன்மையான மனப்பக்குவம் எல்லோருக்குமே இருந்துவிட்டால் உலகமே சமாதானப்பூங்காவாகிவிடுமே.. அன்பு எங்கும் நிறைந்திருக்குமே..

  அண்ணா உங்களுக்கும் மன்னிக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அட அட அட இது ஆச்சர்ய விஷயமா இருக்கே..

  என்னது அம்பாள் தான் ஸ்ரீராமராக அவதரித்தாரா...

  ஈஸ்வரன் தான் சீதையா?

  அற்புதமான இதுவரை நான் அறியாத பகிர்வை தந்திருக்கிறீர்கள் அண்ணா..

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  ReplyDelete
 8. நந்திதேவர் தான் அனுமந்தனாக அவதாரம் எடுத்து ராமருடனே இருந்து காத்தவரா.... அற்புதம் அற்புதம் அண்ணா....

  ReplyDelete
 9. 3 ஆரம்பம் ஆரம்பித்து 3 குளியல்களோடு ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆராய்ச்சியும் மிகவும் அற்புதம் ஐயா...

  படங்கள் மிகவும் அருமை...

  இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. அமுதமொழிகள் அற்புதம்! பக்தி சிரத்தை விளக்கமும் தீபாவளி ஸ்நானம் பற்றிய குறிப்புகளும் அருமை ஐயா! பகிர்விற்கு நன்றி! மீண்டும் ஒருமுறை தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 11. வெகு சிரத்தையுடன் தாங்கள் வழங்கிய பக்திச் சிரத்தை அறிந்தேன். உணர்ந்தேன். நன்றி ஐயா.
  உளங்கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. ஒன்றிடம் பிரியம் இருந்தால்தான் அதனிடம் நம்பிக்கை வரும்.

  ஒன்று நம்பகமானதாக இருந்தால் தான் அதனிடம் பிரியம் வரும்.

  இப்படி இரண்டும் பிரிக்க முடியாமல் இருப்பதால் ”பக்தியும் சிரத்தையும்” ஒன்றே என்றாகிவிடுகிறது.

  பக்திசிரத்தை பற்றி சிறப்பான பகிர்வுகள்..!

  ReplyDelete
 14. நாராயணன் என்கிற புருஷ ரூபம், அம்பாளின் ஸ்திரி ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே... இரண்டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களைச் சகோதர சகோதரியாக வைத்துக் கொள்ளலாம்.

  அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே என்றுதானே அபிராமிபட்டர் அம்பிகையை விளிக்கிறார்....!!!???

  ReplyDelete
 15. ராட்சச அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில், ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் இராவணனுடைய அன்பு விகாரப் பட்டுக் காமமாயிற்று.


  சேர்த்தியாக வைத்து வணங்கவேண்டியதை பிரித்தமையால்
  சேதாரமானது இராவணனின் வாழ்வு...!

  ReplyDelete
 16. கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள். — காஞ்சி மஹாபெரியவர்.

  இனிய திபாவளித்திருநாள் வாழ்த்துகள்...!

  ReplyDelete
 17. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...


  ராம பிரான் பற்றிய அரியாத தகவல்... நல்ல பதிவு...

  ReplyDelete
 18. கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள். — காஞ்சி மஹாபெரியவர்.

  இனிய திபாவளித்திருநாள் வாழ்த்துகள்...!

  ReplyDelete
 19. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. அன்புடன் எம்.ஜே.ராமன்.

  ReplyDelete
 20. அறியாத பல தகவல்களை அறிய வைத்த அய்யாவிற்கு நன்றிகள் பல. தீபாவளி பற்றி இவ்வளவு சொல்ல முடியுமா! அற்புதம் அய்யா அனைத்தும்.பகிந்தமைக்கு நன்றி.
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 21. இந்த ராமாயணம் நான் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் தெய்வக் கதைகள் எல்லாமே நமக்கு நல்லறிவு சொல்பவைதான்.
  இந்த இராமாயண காரண காரியங்கள் எல்லாமே சரியாக பொருந்திகிறதே.
  எந்த ரூபத்தில் வந்தாலும் ,தெய்வம் தெய்வம்தானே !
  அருமையான பதிவு.

  ReplyDelete
 22. வணக்கம்
  ஐயா
  அறியமுடியாத பல தகவல்கள் உங்கள் பதிவின் மூலம் அறியக்கிடைத்துள்ளது... பதிவு அருமை வாழ்த்துக்கள்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 23. நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்“ என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்“ என்று அருளியுள்ளார் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள்.//

  ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அருளிய தீபாவளியை கொண்டாடுவதன் தாத்பர்யம் மிக உன்னதமானது.
  படங்கள் செய்திகள் எல்லாம் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  //வெளி உடம்பினை தூய்மையாக்கின பின், பெரிய ஸ்நானம் ஒன்றுண்டு. அதுதான் நம் உள் அழுக்கை எல்லாம் அகற்றும் “கோவிந்தேதி ஸதா ஸ்நானம்“. அப்போது, நம் ஜீவன் தூய்மையாகிறது.

  பெரிய ஸ்நானம் என்று சொன்னதால், மற்ற இரண்டும் முக்கியமில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மூன்றுமே முக்கியம் தான் என்பதை உணர்ந்து, ஸ்நானம் செய்யுங்கள்.//

  அருமையான விளக்கம்.

  //கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள். — காஞ்சி மஹாபெரியவர்.//
  அருமையான தீபாவளி திருநாள் விளக்கம்.
  இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
  அருமையான் பதிவை வழங்கியதற்கு நன்றி.

  ReplyDelete
 24. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
 25. Dear Mr Gopalakrishnan and co-contributors:

  Best wishes for a Happy Deepavali. May this festive feelings stay with all of us in our hearts in the days ahead.

  Dharmarajan Chandramouli, Jakarta, Indonesia

  ReplyDelete
 26. இனிய தீப ஒளி வாழ்த்துக்கள் ஐயா !
  மனமெல்லாம் மகிழ்வு பெற்றது அழகிய படங்களுடன்
  பகிரப்பட்ட சிறப்பான பகிர்வினைக் கண்டு .இன்பத் திருநாள்
  எல்லோரது வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும் .

  ReplyDelete
 27. வாழ்வில் நாமாக உருவாக்கிக்கொள்ளும் பெரிய சுமை கடன்..
  கடனின்றி வாழ்வினை நம் கட்டுக்குள் நடத்திட எத்தனிக்க வேண்டும்..
  என்ற வரிகள் நெஞ்சம் நிறைத்தது ஐயா...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
  மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 28. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்./

  ReplyDelete
 29. நல்ல பதிவு. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 30. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். அம்பாள் தான் சீதையாக வந்தாள் என்னும் இந்தப் பெரியவாளின் அருளமுதம் தெய்வத்தின் குரலிலும் உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

  இங்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam November 1, 2013 at 8:45 PM

   //அம்பாள் தான் சீதையாக வந்தாள் என்னும் இந்தப் பெரியவாளின் அருளமுதம் தெய்வத்தின் குரலிலும் உள்ளது.//

   இல்லையே மேடம்.

   அம்பாள் பரமேஸ்வரி [பார்வதி தேவி] தான் ஸ்ரீராமனாக வந்தாளாம். பரமசிவன் சீதையாக வந்தாராம், என்றல்லவா இங்கு சொல்லப்பட்டுள்ளது !!!!!

   Any how, OK, Thanks. கங்கா ஸ்நானம் ஆச்சா?

   நான் நேற்று ஓர் சொப்பனம் கண்டேன். அதாவது தீபாவளி முடிந்தவுடன் தாங்கள் ஒரு மிகப்பெரிய உயரிய பதவியை அடையப்போகிறீர்கள்.

   பத்திரிகை, டீ.வி., போன்ற அனைத்து மீடியா நிரூபர்களும் உங்களைப்பேட்டி எடுக்க உங்களை நாடி/தேடி வரப்போகிறார்கள். மிகப்பிரபலம் ஆகப்போகிறீர்கள்.

   Let us wait & see ! ;)))))

   அன்புடன் கோபு

   Delete
 31. ooho, மன்னிக்கவும், அம்பாள் தான் ராமராக வந்தாள் என்பதற்குத் தப்பாகத் தட்டச்சி விட்டேன். தொலைபேசியில் பேசிக் கொண்டே வேலை செய்ததால் கவனிக்கவில்லை. :)))) டைப்போ எரர். உங்கள் அருமையான கனவுக்கு நன்றி. ஏற்கெனவே பிரபலமாத் தானே இருக்கேன்! :))))

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam November 1, 2013 at 9:15 PM

   வாங்கோ, வணக்கம். மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

   //ooho, மன்னிக்கவும், அம்பாள் தான் ராமராக வந்தாள் என்பதற்குத் தப்பாகத் தட்டச்சி விட்டேன். தொலைபேசியில் பேசிக் கொண்டே வேலை செய்ததால் கவனிக்கவில்லை. :)))) டைப்போ எரர்.//

   அதனால் பரவாயில்லை. பிரபலங்கள் தவறு செய்யலாம். என்னைப் போன்ற சாமான்யர்கள் [சாதாரணமானவன்] மட்டுமே தவறு செய்யக்கூடாது. ;)

   //உங்கள் அருமையான கனவுக்கு நன்றி.//

   சூப்பரான கனவு அது. முழுவதுமாக இங்கு சொல்ல எனக்கு இயலவில்லை.

   இதே போன்ற ஒரு கனவு நம் ஸ்ரீமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களும் கண்டார்கள். அதை முன்பே பதிவாகவும் வெளியிட்டார்கள். இணைப்பு இதோ:

   http://ranjaninarayanan.wordpress.com/2012/10/26/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4/

   தலைப்பு: ”லாம்.... எழுதலாம் ... ப்ளாக் எழுதலாம்” [நகைச்சுவை]

   அவசியமாகப்படியுங்கோ. அதில் உள்ள பின்னூட்டங்களையும் படியுங்கோ. பதிவைவிட அவை இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

   //ஏற்கனவே பிரபலமாத் தானே இருக்கேன்! :)))) //

   சந்தோஷம். பணம் பணத்தோடுதான் சேரும் என்பார்கள். அதுபோல ஏற்கனவே பிரபலமான, குபேரனான தாங்கள் மேலும் பிரபலமாகப் போவதில், குசேலன் போன்ற எனக்கு ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. ;))))))

   தாங்கள் என்னுடைய போன பதிவுக்கு வருகை தராமல் இங்கு தாவி வந்துள்ளீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

   அன்புடன் கோபு

   Delete
 32. அப்பப்பா... எவ்வளவு கதைகள். .!? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. பக்திசிரத்தை,தீபாவளி கொண்டாடும் தாத்பர்யம், கடன்சுமை இல்லாது வாழப் பழகுதல், யாவும் அருமையாக இருக்கிறது.
  இந்த பதிப்பே மிகவும் விஷயங்கள் அடங்கியதாக இருக்கிறது.
  நன்றி அன்புடன்

  ReplyDelete
 34. இனிய தீபாவளி காலை வணக்கம் கோபு அண்ணன்... அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. //“நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்“ என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்“ //

  இது புதுசா இருக்கே விளக்கம்... இன்றுதான் இதனை அறிகின்றேன்.

  ReplyDelete
 36. தீபாவளிக் குளியல் பற்றி அறிந்து கொண்டேன்.

  உண்மைதான் எத்தனை பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு. ஆனா வெளிநாட்டவரைப் பொறுத்தவரை.. அதெல்லாம் ஊரோடு போய்விட்டதுபோல ஒரு உணர்வு. இம்முறை மட்டும் சனிக்கிழமையில் வருவதால் எல்லோரும் வீட்டில் இருக்கும் வாய்ப்பாவது கிடைச்சிருக்கு.

  ReplyDelete
 37. //"உம்மை மாப்பிள்ளையாக வரித்த என் பிதா ஜனகர், நீர் ஆண் வேடத்தில் வந்திருக்கிற ஒரு பெண் (ஸ்திரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே” என்று ராமரைப் பார்த்துச் சண்டை போடுகிறாள் சீதாதேவி. இது சாக்ஷாத் வால்மீகி ராமாயண வசனம்.//
  ஓ... நான் வால்மீகி ராமாயணம் படித்ததில்லை.. கம்பரின் ராமாயணம் மட்டுமே படித்திருக்கிறேன்ன்.. அதனாலொ என்னவோ இது புது விஷயமாக இருக்கெனக்கு.

  இம்முறை தீபாவளிப் பட்டாசின் உயரத்துக்கு போய் விட்டது பதிவு:) வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. அம்பாளே சீதையானால்.அம்பாளே நாராயணனின் சகோதரி என்று எப்படிச் சொல்ல முடியும். அம்பாள் என்று சொல்லப் படுவது சக்தி அல்லவா .சீதையும்சக்தியும் ஒன்றானால் அங்கு சிவன் ..... எனக்குக் குழப்பமாக இருக்கிறது. .... சிலவேளை இந்த உறவு முறைகள் எல்லாம் மனிதப் பிறப்பாகிய எங்களுக்கு மட்டுமே நாம் வகுத்துக் கொண்டவையோ ?

  இருந்தாலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. சந்திரகௌரி November 2, 2013 at 12:16 AM

   வாங்கோ, வணக்கம்.

   அனுமன் படத்திற்கு மேல் நீலக்கலரில் எழுதப்பட்டுள்ளவைகளை மட்டும் தயவுசெய்து பொறுமையாக மீண்டும் ஒருமுறை படியுங்கோ.

   //அம்பாள் என்று சொல்லப் படுவது சக்தி அல்லவா. //

   ஆம். சக்தியே தான். சிவபெருமானின் பத்னியான சக்தியே தான்.

   //அம்பாளே சீதையானால்//

   அம்பாளே [பார்வதியே] சீதை என்று இதில் எங்குமே சொல்லப்படவில்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளவும்.

   நன்றாக கவனித்து மீண்டும் படியுங்கோ.

   ஆனால், அதற்கும் ஒருபடி மேலே போய் சிவனே சீதையாக மாறி அவதாரம் எடுத்திருக்கிறார் என்று இந்த குறிப்பிட்ட இராமாயணத்தில் ஆச்சர்யமாகச்
   சொல்லப்பட்டுள்ளதாகத்தான், இங்கு சொல்லப்பட்டுள்ளது.

   //அம்பாளே நாராயணனின் சகோதரி என்று எப்படிச் சொல்ல முடியும். //

   அம்பாள் அதாவது பார்வதி நாராயணின் சகோதரி என்று பல புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளன.

   //சீதையும் சக்தியும் ஒன்றானால் அங்கு சிவன் ..... எனக்குக் குழப்பமாக இருக்கிறது. ....//

   சீதையாக சிவபெருமானும், ஸ்ரீ இராமனாக அம்பாள் பார்வதியும் அவதாரம் செய்திருப்பதாக மட்டுமே சொல்லப்பட்டிருப்பதால், இதில் குழப்பங்களுக்கே
   ஏதும் இடமில்லை.

   தங்களின் கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும், இந்த என் பதிலால் இப்போது கொஞ்சம் தெளிவு கிடைத்திருக்கக்கூடும் என நம்புகிறேன்.

   அன்புடன் VGK

   Delete
 39. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்! மீண்டும் வருவேன்!

  ReplyDelete
 40. //”தெய்வ அருளால் ஒருவனுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மூன்று:
  ஒன்று:-
  மனிதப்பிறவி கிடைப்பது;
  இரண்டு:-
  சத்தியத் தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறப்பது;
  மூன்று:-
  மன உத்தமமான ஒரு குரு கிடைப்பது”
  என்று ஆசார்யாள் [ஆதி சங்கரர்] “விவேக சூடாமணி” ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார்கள்.//
  அருமையான விஷயம் அறிந்து கொண்டோம்;. தங்கள் ஆன்மிகப் பதிவுகள் அற்புதம்!

  ReplyDelete
 41. எத்தனை எத்தனை தகவல்கள். சீதா தேவியாக சிவனே வந்தார் என்பது எனக்கு இது வரை தெரியாத பல தகவல்களில் ஒன்று.....

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete
 42. Wish you and your family a very Happy Deepavali...
  Very interesting information, thanks a lot for sharing it with us...

  ReplyDelete
 43. மன உத்தமமான ஒரு குரு கிடைப்பது.....இது மிகவே சரி.தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனியதீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 44. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 45. நாம் துன்பப் பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்“ என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம் -

  எனும் அடிப்படையினை பதிவு செய்தது அருமை.

  ReplyDelete
 46. அன்பின் வை.கோ - பலப்பல புதிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - தீபாவளியன்று மூன்று தடவை ஸ்நானம் செய்வதில் இருந்து - சிவபெருமானே சீதவாகவும் அம்பாளே இராமராகவும் அவதரித்தார்கள் என்று ஒரு தகவல் - ம்ம்ம்ம்ம் - புதிய தகவல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 47. ஸ்னானம் பற்றிய பகிர்வுக்கு நன்றி பக்தி சிரத்தை விளக்கம் அருமை சாதாரண என் போன்றவர்களுக்கும் புரியக்கூடிய விதத்தில் இருந்தது
  இராமாயணம் யார் சொன்னாலும் எப்படிசொன்னாலும் அதாவது உபகதைகள் பலவாறாக இருந்தாலும் கேட்பதற்கு ஆவலாக இருக்கும் அதுவும் மஹாபெரியவா சொல்லியிருக்கும்போது இன்னும்சுவாரஸ்யமாக உள்ளது

  ReplyDelete
 48. பொதுவாகவே பரமேஸ்வரனின் சகோதரியாக மஹாலக்ஷ்மியும் ஸ்ரீமன் நாராயணனின் சகோதரி யாக அம்பாளையும் பாவித்து சிவ விஷ்ணு பேதம் பார்க்காமல் நாம் பக்தி செய்யவேண்டும் என்பதுதான் பெரியவாளின் கருத்து மதுரை திருவிழா சமயபுரம் மஹமாயிக்கு ஸ்ரீ ரெஙகனாதர் சீர் கொடுக்கும் விழாக்கள் இதை உறுதி ப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 49. மிக நல்லபதிவு.
  புது விடயங்களை அறிந்தேன்.
  தீபாவளி முடியவே வாசித்தேன்
  இனிய பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 50. தீபாவளி ஸ்நானம் பற்றிய விளக்கத்திற்க்கு மிக்க நன்று,அடுத்த முறை இவ்வாறு செய்ய முயற்சிக்கிறேன் ஐயா..

  பெரியவரின் விளக்கம் அற்புதம்..

  ReplyDelete
 51. Learnt many things regarding & related to ramayana through this post. thanks for sharing Gopu Sir

  ReplyDelete
 52. இராமாயணம் குறித்த அபூர்வ இதுவரை
  அறியாத விளக்கமதை தங்கள் பதிவின் மூலம் அறிந்து
  பெரும் மகிழ்வு கொண்டோம்
  தீபாவளி ஸ்நான விளக்கம் சொல்லிப்போனவிதம் அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 53. இராமாயணம் குறித்த அபூர்வ இதுவரை
  அறியாத விளக்கமதை தங்கள் பதிவின் மூலம் அறிந்து
  பெரும் மகிழ்வு கொண்டோம்
  தீபாவளி ஸ்நான விளக்கம் சொல்லிப்போனவிதம் அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 54. நல்ல விளக்கங்களுடன் அற்புதமான பகிர்வு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த தகவல் அத்யாத்ம ராமாயணத்தில் உள்ளது.

   வைகுண்டத்தில் உள்ள நாராயணன்தான் ராமனாக அவதரித்தான் என்று ஒரு புராணம் சொல்கிறது.

   நீங்கள் அம்பாள்தான் ராமனாக அவதரித்தாள் என்று சொல்கிறீர்கள்

   அத்யாத்ம ராமாயணத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் பரப்ரம்மம் ராமன்தான் என்பதை மட்டும். ஏற்றுக்கொண்டு பக்தி பண்ணினால் கடைத்தேறலாம்.

   ராமாயணம் என்றால் ராமன் வாழ்ந்து காட்டிய வழி என்று பொருள். அந்த வழியில் செல்ல முடியாவிட்டாலும் அவன் நாமத்தை சொல்லிக்கொண்டிருந்தால் போதும் இந்த ஜன்மம் கடைத்தேறும் .

   Delete
 55. தீபாவளியை மதிப்பிற்குரியாவர்களுடன் கொண்டாடிவிட்டு எஇங்கு தாமதமாக வருகிறேன்
  ஆச்சர்யமான விஷயங்கள்.
  புதிய செய்தி
  அருமை.
  விஜி

  ReplyDelete
 56. இராமாயணத்தில் இன்னுமொரு கோணம்!! தகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 57. இராமாயணத்தில் இப்படிக்கூட ஒரு கதையா!!!!

  நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 58. தீபாவளி குறித்து எத்தனை அறியாத தகவல்கள்! மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். ஆனாலும் படித்தபோது நிறைய தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 59. தீபாவளி ஸ்நான மகிமையை அறிந்தேன். அதிகாலையில் வெந்நீரில் குளிக்கவேண்டும் என்ற செய்தி சந்தோஷம் தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தீபாவளி ஸ்நானம் பண்ணுவதில கூட இவ்வளவு விஷயம் இருக்கா. இப்ப வாவது தெரிஞ்சுக்க முடிஞ்சுதே

   Delete
 60. //அங்கே “பக்தி” என்ற பிரியத்தையும், “சிரத்தை” என்ற நம்பிக்கையையும் எடுத்துச் சொல்கிறோம்.//

  அருமையான விளக்கம்.

  ReplyDelete
 61. //“என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என வேண்டினாள்! //

  எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நரகாசுரனின் தாய் நினைத்தது எவ்வளவு பெரிய விஷயம்.

  ReplyDelete
 62. //(ராமாயணம் பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஒரு ஆராய்ச்சி)//

  ராமாயணம் பற்றி இதுவரை அறியாத ஒரு தகவல். அருமை.

  அதே போல் கங்கா ஸ்நானம் தெரியும். மற்றவற்றையும் உங்கள் பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன்.

  உங்கள் வலைத்தளம் ஒரு விலை மதிப்பில்லா பொக்கிஷம். அதை பாதுகாப்பதில் உங்கள் ரசிகர்களான, வாசகர்களான எங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 15, 2015 at 9:55 AM

   //உங்கள் வலைத்தளம் ஒரு விலை மதிப்பில்லா பொக்கிஷம். அதை பாதுகாப்பதில் உங்கள் ரசிகர்களான, வாசகர்களான எங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.//

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 63. எங்கட ஆளுகளு தீபாளிலா கொண்டாடுது இல்ல. அப்பாலிக்காவும் அது பத்தின வெவரம்லா வெளங்கிகிட்டன் ஓரளவுக்கு.

  ReplyDelete
 64. ஸ்நான முறைகள் தெரிந்து கொள்ள முடிந்தது. தீபாவளி பற்றி பலவிதமான கதைகள் படிச்சிருக்கேன். அது எது மாதிரியும் இல்லாம இது புதுசு.

  ReplyDelete
 65. தீபாவளியின் சிறப்புகள் குறித்த பதிவும் சிறப்பு. படங்கள் தீபாவளிப்பரிசு...குறிப்பாக மரகதப்பச்சை ராமர் கண்ணுக்கு நிறைவு.

  ReplyDelete
 66. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (22.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=450247575477942

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete