என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 29 மார்ச், 2014

VGK 09 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’அஞ்சலை’






’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 09 - ” அ ஞ் ச லை “


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    

மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் 





திருமதி ஞா. கலையரசி   


அவர்கள்




வலைத்தளம்:


”ஊஞ்சல்” 

http://www.unjal.blogspot.com.au/









  





மூன்றாம் பரிசினை வென்றுள்ள 



திருமதி. ஞா. கலையரசி 


 அவர்களின் விமர்சனம் இதோ:




நீதிமன்ற வளாகத்தில் மிகவும் சென்சிட்டிவான கேஸ் அன்று விவாதிக்கப்பட இருந்ததால், கூட்டம் நிரம்பி வழிந்தது. தாயைத் தெய்வமாகப் போற்றும் இந்நாட்டில் பணத்திற்காக குழந்தையை விற்றமைக்காக அஞ்சலையும், வாங்கியதற்காக சிவகுருவும் குற்றவாளிக் கூண்டில்:-

சிவகுரு… சிவகுரு …. சிவகுரு”

“அஞ்சலையின் ஏழைமையை உமக்குச் சாதகமாக்கிக் கொண்டு மூன்று லட்சம் பணம் கொடுத்துக் குழந்தையை வாங்கியதாக உம் மேல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.  அதற்கு நீர் என்ன பதில் சொல்கிறீர்?”

சிவகுரு:- 

“அஞ்சலைக்கு மூன்று லட்சம் பணம் கொடுத்தது உண்மைதான். ஆனால் அது குழந்தைக்கான விலையல்ல.  கணவனை இழந்து நிராதரவாக நிற்கும் இளம்பெண் இந்தச் சமூகத்தில் மானத்துடன் வாழ வேண்டுமானால், அதற்குக் கண்டிப்பாக பணம் வேண்டும். நிரந்தரமான வருவாய் அவளுக்கு வேண்டும் என்பதற்காகவே உதவி செய்தேன்.” 

“அஞ்சலை மேல் யாருக்குமில்லாத கரிசனம், அப்படியென்ன உமக்கு மட்டும்?” 

“ஓராண்டு காலமாக எங்கள் வீட்டில் அவள் வேலை செய்தாள். நாணயத்தின் மறுபெயர் அஞ்சலை.  ஒருமுறை வீட்டைச் சுத்தம் செய்யும் போது கீழே  கிடந்த பதினைந்து பவுன் இரட்டைவடச் சங்கிலியை எடுத்துக் கொடுத்தவள்.   இன்றைக்குத் தங்கம் விற்கும் விலைக்கு அதனை அவள் திருடியிருந்தால், மூன்று லட்சத்துக்கு மேல் அவளுக்குப் பணம் கிடைத்திருக்கும். 

அவள் கணவன் தீவிரச் சிகிச்சை பிரிவில் இருந்தபோது, நான்காயிரம் கொடுத்து உதவியவன் நான்.  இதற்கு முன்னரும் பல தடவை அவளுக்கு நான் பண உதவி செய்திருக்கிறேன்.  கணவனை இழந்து குழந்தையை வைத்துக் கொண்டு தவித்த அவளுக்கு உதவி செய்வதற்காகவும், நல்ல வளமானதொரு எதிர்காலத்தை அவள் குழந்தைக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் அவனை நான் தத்தெடுத்தேன். 

என்னிடமிருக்கும் சொத்துக்கு, ஒரு சேரிக் குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.   எங்கள் உறவுக்காரர்களில் பலர் தங்கள் குழந்தைகளை எனக்குத் தத்துக் கொடுக்க மாட்டோமா எனத் தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கிறார்கள்.  

சேரிக்குழந்தை என்று தெரிந்தால் என் மனைவி அவனைத் தன் குழந்தையாக ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவாளோ என்ற பயத்தினால் தான் என் மனைவி மல்லிகாவிடம் உண்மையைச் சொல்லக் கூடாது என அஞ்சலையிடம் சத்தியம் வாங்கினேன்.  

இக்காலத்தில் அஞ்சலையைப் போல் நம்பிக்கையான, நாணயமான வேலைக்காரி கிடைப்பது மிகவும் அபூர்வம்; அதுவுமில்லாமல் அவள் எங்கள் வீட்டில் வேலை செய்வதால் தன் குழந்தையைப் பிரிய வேண்டிய அவசியமிருக்காது;   அவனது வளர்ச்சியைக் கூட இருந்தே பார்த்து மகிழ முடியும்.  

அவன் விருப்பப்படும் துறையில் படிக்க வைத்து வளமான எதிர்காலத்தை அவனுக்கு என்னால் அளிக்க முடியும். 

மேலும் அக்குழந்தையின் வரவு எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பன்மடங்கு பெருக்கியிருக்கிறது.  என்னுடைய சொத்துக்கு ஒரே வாரிசு அவன் தான்.  அவன் மீது நானும் என் மனைவியும் உயிரையே வைத்திருக்கிறோம்.  

குழந்தையைக் கொடுக்கச் சொல்லி அஞ்சலையை நான் கட்டாயப்படுத்தவில்லை.   முழு சம்மதத்துடன் தான் அவள் குழந்தையை என்னிடம் கொடுத்தாள்.  எனவே அவளை ஏமாற்றிக் குழந்தையை வாங்கினேன் என்றெல்லாம் கூறித் தயவு செய்து அவனை எங்களிடமிருந்து பிரித்து விடாதீர்கள் நீதிபதி அவர்களே!”


“சரி நீங்கள் போகலாம்.”

அஞ்சலை….   அஞ்சலை….  அஞ்சலை…”

“பணத்துக்காக  குழந்தையை விற்றதாய் உம் மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  அதற்கு உம்முடைய பதில்?”


”கும்பிடறேனுங்க சாமி!  சிவகுரு ஐயா எனக்குத் தெய்வம் மாதிரிங்க. நான் கஷ்டப்பட்ட சமயத்திலெல்லாம், அவருதாங்க அப்பப்ப பணம் கொடுத்து உதவினாருங்க.  எம் புருஷன் ஆஸ்பத்திரியில உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தப்ப, அவரு தாங்க பெரிய மனசு பண்ணி நாலாயிரம் ரூபாய் கொடுத்தாரு.  எம் புருஷனும் போனபொறவு இந்தக் கொழந்தையை வைச்சிக்கிட்டு என்னச் செய்யபோறோம்னு நான் கதிகலங்கி நின்னப்ப, இந்த ஐயா தான் தெய்வம் மாதிரி வந்து அந்த ரோசனையைச் சொன்னாருங்க.   நானும் ஒரு மணி நேரம் நல்லா ரோசிச்சிப் பார்த்தேனுங்க.  அது தான் நல்லதுன்னு  மனசுக்குப் பட்டதால சரின்னு ஒத்துக்கிட்டேங்க..”

“எது நல்ல யோசனை?  பணத்துக்காகப்  பெத்த கொழந்தையை விக்கிறதா?  நீயெல்லாம் ஒரு தாயா?  ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு, தாய்மையையே கேவலப்படுத்திட்டியே?”

“சாமி!  என்னென்னமோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?  நீ ஒரு தாயான்னு கேட்கிறீங்க?  மொதல்ல நான் ஒரு பொண்ணு. அப்புறம் தான்  ஒரு தாயி.  என் கற்பைக் காப்பாத்திக்கிட்டு மானத்தோடு நான் வாழனும்னா எனக்குப் பணம் வேணும்.  புருஷனை இழந்துட்டுத் தனிமரமா நிக்கிற எனக்கு உதவி செய்ய வந்தவங்க, எல்லாருமே என் மானத்தைத்  தான் விலையாக் கேட்டாங்க. 

ஒரு பொண்ணுக்கு உயிரை விடவும் மானம் தாங்க பெரிசு.  மானத்தை இழந்துட்டுக் குழந்தையோடு வாழறதை விட, மானத்துக்காக குழந்தையை இழக்கிறதுல தப்பு இல்லேன்னு நான் முடிவு செஞ்சேங்க.  

என் மனசுக்குச் சரின்னு பட்டதை நான் செஞ்சேனுங்க.  பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க நெறையா பணம் வேணும்.  அது எங்கிட்ட இல்லீங்களே!  

என்கிட்ட ஒரு தற்குறியா வளர்றதை விட அங்க இருந்தா என் புள்ளை, நாளைக்கு ஒரு டாக்டராவோ இஞ்சீனியராவோ ஆவான்.  அது எனக்கும் பெருமை தானுங்களே சாமி? 

எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க சாமி. சந்தோஷமா  ஏத்துக்கிறேன்.  ஆனா நான் கஷ்டப்பட்ட நேரத்திலெல்லாம்  தெய்வம் மாதிரி உதவி பண்ணுன சிவகுரு ஐயாவை விட்டுடுங்க சாமி.”  
        
“சரி.  நீர் போகலாம்.”

இருவாரங்களுக்குப் பிறகு:-

நீதிபதி:-- 

மக்களுக்காகத் தான் சட்டங்களே ஒழிய சட்டங்களுக்காக மக்கள் இல்லை.  பணத்துக்காக குழந்தை கைமாறிய இந்த வழக்கில் இருவருமே பரஸ்பரம் நன்மையடைந்திருக்கின்றனர், எந்த விதக் கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லாமல், தம் குழந்தையைத் தத்துக் கொடுக்க இப்பெண் முன் வந்திருக்கிறார்.  

குழந்தையின் மீது சிவகுரு குடும்பத்தினர் அன்பைப் பொழிகிறார்கள். மேலும் ஒரு ஏழைக் குழந்தையின்  வளமான எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இருவருமே குற்றமற்றவர்கள் என்றும் சிவகுருவிடம் குழந்தை வளர்வதில் ஆட்சேபணை ஏதுமில்லை என்றும் தீர்ப்பளித்து இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன். 

மிகவும் சென்சிட்டிவான இவ்வழக்கை இம்மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து தீர்ப்பு சொல்ல இதற்குமுன் இல்லாத அளவுக்கு என்னைச் சிந்திக்க வைத்த வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டுகிறேன்!.  

நன்றியுடன்,
ஞா. கலையரசி



 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



” நாவினால் சுட்ட வடு 





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


03.04.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

32 கருத்துகள்:

  1. மிக மிக அற்புதமான விமர்சனம்
    இந்த அற்புதமான விமர்சனத்திற்கு
    மூன்றாம் பரிசெனில்....
    அடுத்த விமர்சனங்களைப் படிக்க
    மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்

    பரிசுபெற்ற கலையரசி அவர்களுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சன சக்ரவர்த்தி திருவாயால் பாராட்டு எனும் போது மிக்க மகிழ்ச்சியாயிருக்கின்றது. விமர்சனம் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்பதை அவர் எழுதியை வாசித்தே தெரிந்து கொண்டேன். என்னை ஊக்குவிப்பதற்காக இல்லாது, உண்மையான பாராட்டாக இது இருக்கும் பட்சத்தில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்கும்.பாராட்டுக்கு மிக்க நன்றி ரமணி சார்! அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் இந்நேரத்தில், கோபு சார் அவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலும் ஊக்குவிப்புமே இப்போட்டில் கண்டிப்பாக பங்கு பெற வேண்டும் என்று எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தி அதற்காக கடைசி நாளில் க்டைசி மணிநேரத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்குப் பரிசும் கிடைக்கிறதென்றால் மகிழ்ச்சி தானே? கோபு சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      நீக்கு
  2. நல்ல விமர்சனம்.....

    மூன்றாம் பரிசு பெற்ற கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. சரியான தீர்ப்பு... (விமர்சனம்)

    திருமதி ஞா. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  4. திருமதி கலையரசி அவர்களுக்கு உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. திருமதி ஞா. கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களடைய நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தமிழ்முகில்!

      நீக்கு
  7. நல்ல வித்யாசமான விமர்சனம்.... மிக அருமை....


    கலையரசிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை எனப்பாராட்டியதற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இராதா!

      நீக்கு
  8. VGK அவர்கள் நடத்தும் சிறுகதை விமர்சனப் போட்டி – 9 இல், மூன்றாம் பரிசினை வென்றுள்ள சகோதரி ஞா.கலையரசி அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்!

      நீக்கு
  9. "திருமதி ஞா. கலையரசி அவர்கள் வித்தியாசமாக,
    நீதி மன்றம், வக்கீல், குற்றவாளிகள், நடுவர் தீர்ப்பு என்று விமர்சனத்தை சுவைபட தந்து நடுவர் அவர்களை (இது சி.வி.போ. நடுவர்) கவர்ந்து 3-ஆம் பரிசினை அழகாக வென்றுள்ளார். அவரின் இந்த சிறப்பான விமர்சனம் நடுவரை மட்டுமல்லாது எல்லோரையும் கவர்ந்து விட்டது உண்மை"
    என்று நான் தீர்ப்பளிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் தங்களைக் கவர்ந்தது என்பதையறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களது பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்!

      நீக்கு
  10. வித்தியாசமான விமர்சனம்! கதை மூலம் ஒரு வழக்கை மன்றத்துக்குக் கொண்டுவந்து நல்லதொரு தீர்ப்பளித்து மூன்றாம் பரிசை வென்ற திருமதி கலையரசி அவர்களுக்கு இனிய பாராட்டுகள். தொடர்ந்து பரிசு பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களின் வித்தியாசமான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்!

      நீக்கு
  12. அன்பின் கலையரசி

    பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி சீனா சார்!

      நீக்கு
  13. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. நல்லதொரு விமரிசனம் எழுதி மூன்றாம் பரிசினைப் பெற்ற ஞா. கலையரசிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. பரிசு வென்ற கலயரசி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. பரிசு வென்ற ஞா. கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 28, 2015 at 9:07 AM

      //பரிசு வென்ற ஞா. கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள்//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெ. :)

      நீக்கு
  17. பரிசு வென்ற கலையரசி அவங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. திருமதி கலயரசி அவர்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு முறையும் வித்யாசமா விமரிசனம் எழுதுறாங்க இந்தவாட்டி கோர்ட் கேஸ்னு அமர்க்களம் பண்ணியிருக்காஙுக.

    பதிலளிநீக்கு
  19. // மக்களுக்காகத் தான் சட்டங்களே ஒழிய சட்டங்களுக்காக மக்கள் இல்லை. பணத்துக்காக குழந்தை கைமாறிய இந்த வழக்கில் இருவருமே பரஸ்பரம் நன்மையடைந்திருக்கின்றனர், எந்த விதக் கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லாமல், தம் குழந்தையைத் தத்துக் கொடுக்க இப்பெண் முன் வந்திருக்கிறார்.

    குழந்தையின் மீது சிவகுரு குடும்பத்தினர் அன்பைப் பொழிகிறார்கள். மேலும் ஒரு ஏழைக் குழந்தையின் வளமான எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இருவருமே குற்றமற்றவர்கள் என்றும் சிவகுருவிடம் குழந்தை வளர்வதில் ஆட்சேபணை ஏதுமில்லை என்றும் தீர்ப்பளித்து இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன். // விமர்சகர் ஜட்ஜ் போஸ்டில்...நல்ல கற்பனை..

    பதிலளிநீக்கு
  20. பரிசினை வென்ற திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு