நகைச்சுவை உணர்வுகள் உள்ளவரும்,
எனது அருமை நண்பரும்,
என்னுடன் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில்
ஆனால் வேறு பிரிவினில் பணியாற்றியவரும்,
வலைப் பதிவருமான
ஆரண்ய நிவாஸ் திரு. R. ராமமூர்த்தி அவர்களின்
முதல் சிறுகதைத் தொகுப்பு நூல்
“ஆரண்ய நிவாஸ்”
வெளியீடு, திருச்சி திருவானைக்கா அருகேயுள்ள
அவரது இல்லத்தில்
நேற்று 02.08.2014 சனிக்கிழமை மாலை
இனிதே நடைபெற்றது.
திருச்சி எழுத்தாள நண்பர்கள் மட்டுமின்றி,
வெளியூரிலிருந்து ஒருசில பிரபல எழுத்தாளர்களும்,
எழுத்தார்வம் கொண்ட எங்கள் அலுவலக நண்பர்களும்,
அவர் வசிக்கும் பகுதியில் வாழும் சில நண்பர்களும்,
அவரின் நெருங்கிய உறவினர்களுமாக
சுமார் 50 பேர்களுக்கு மேல் இந்த இனிய விழாவினில்
பங்கேற்று சிறப்பித்திருந்தார்கள்.
ஆறரை மணிக்குத் துவங்கிய விழாவுக்கு
நாலரை மணிக்கே எனக்கு என் வீட்டுக்கே கார்
அனுப்பி வைத்துக் கூட்டிச்சென்று விட்டார்கள்.
என் வீட்டிலிருந்து அவர் வீட்டுக்கு காரில் செல்ல
அதிகபக்ஷம் அரை மணி நேரம்
மட்டுமே ஆகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கு கோபாலி என அன்புடன் அழைக்கப்படும்
தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள் தலைமை ஏற்றார்கள்.
’கைகள் அள்ளிய நீர்’ திரு. சுந்தர்ஜி,
Ms. மாதங்கி மெளலி அவர்கள்
அவருடைய தந்தை அஷ்டாவதானி அவர்கள்,
திருச்சி கவிதாயினி திருமதி. தனலக்ஷ்மி பாஸ்கரன் அவர்கள்
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு சென்றதில் எனக்கு நேற்று சிலரின்
புதிய அறிமுகங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி.
விழா ஏற்பாடுகள் அனைத்துமே
அவர் வீட்டின் முன்புறம் அமைந்துள்ள
வெகு அழகான தோட்டத்தின், வெட்ட வெளியில்
மிகச்சாதாரண முறையில்
எளிமையாகவும், புதுமையாகவும்,
மிகச்சிறப்பாகவும் நடைபெற்றது.
Just a Casual Homely Meet
No other General Formalities
திரு. ராமமூர்த்தி அவர்களின் தாயார் அவர்கள் முன்னிலையில்
அவரின் தந்தை அவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது.
மிகவும் அனுபவசாலியான அவரின் தந்தைக்கு வயது 90.
[He is a Retired TNEB Official - Retired from Services during 1982]
முதலில் அவர் பேசிய பிறகு வந்திருந்த பலரும்
தங்களைப் பற்றி தாங்களே அறிமுகம் செய்துகொண்டு
பேச அனுமதிக்கப்பட்டனர்.
அந்த விழாவினில் என்னால்
என் கேமராவில் எடுக்கப்பட்ட
ஒருசில புகைப்படங்கள்
இதோ தங்களின் பார்வைக்காக
’ஆரண்ய நிவாஸ்’ என்ற பெயர் பலகையுடன்
காட்சியளிக்கும் அவரின் இல்லத்தின் நுழைவாயில்
அவரால் நேற்று வெளியிடப்பட்ட
“ஆரண்ய நிவாஸ்”
என்ற சிறுகதைத்தொகுப்பு நூலின் மேல் அட்டை.
[வெளியீடு: நந்தி பதிப்பகம், தஞ்சாவூர்-6]
அவர்கள் இல்லத்தின் பூஜை அறை
திருமதி ராமமூர்த்தியுடன் திரு. ராமமூர்த்தி
திரு. ராமமூர்த்தி அவர்களின் தாய் தந்தை
திரு. ராமமூர்த்தியுடன்
யாரோ அவர் யாரோ ?
பொன்னாடையுடன்
திரு. ராமமூர்த்தி அவர்கள்.
திரு. சுந்தர்ஜி அவர்களுக்கு
பொன்னாடை அளித்து கெளரவித்தல்
திரு. ராமமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரி.
இவரும் ஓர் கவிதாயினியாக உள்ளார்.
கவிதை நூல் ஒன்றும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்கள்.
திரு. ராமமூர்த்தி அவர்களின் தம்பியும்,
ஓவியரும், பதிவருமான எல்லென்
[திரு. லக்ஷ்மி நாராயணன்]
அவர்கள் தன் தந்தையுடன்.
”ஆரண்ய நிவாஸ்” சிறுகதைத் தொகுப்பு நூல் வேளியீடு
[இடமிருந்து வலமாக]
திருமதி ராமமூர்த்தி அவர்கள்
கோபாலி எனப்படும் தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள்
திரு. ராமமூர்த்தி அவர்களின் தந்தை + தாய்
நூல் வெளியிட்ட திருவாளர்: ராமமூர்த்தி அவர்கள்
கிருஷ்ணா என்ற புனைப்பெயருடன் ‘கல்கி’ வார இதழில்
இதுவரை கணக்கிலடங்காத சிறுகதைகள் எழுதிவரும்
திரு. பாஸ்கர் அவர்கள்.
BHEL இல் மேலாளராகப் பணியாற்றி வரும்
இவரும் என் இனிய நண்பரே !
நம் பதிவர் Ms. மாதங்கி மெளலி அவர்கள்
அஷ்டாவதானியான தன் தந்தையுடன்.
திருச்சியின் பிரபல கவிதாயினியான
திருமதி. தனலக்ஷ்மி பாஸ்கர் அவர்களும்
தஞ்சாவூர்க் கவிராயர் அவர்களும்.
விடைபெற்றுச் சென்ற
ஒவ்வொருவருக்கும் அன்புடன்
அளிக்கப்பட்ட பூச்செடி.
My Dear Ramamoorthi Sir,
வணக்கம். நேற்றைய விழா மிகவும் அருமை, இனிமை, எளிமை + பசுமை.
மிக அழகான இயற்கைச்சூழலில், எழுத்தாளர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக சேர்ந்து அமர்ந்து பேசி மகிழ்ந்து கொண்டாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எழுதும் அளவுக்கு பொது நிகழ்ச்சிகளில் பேசத்தயங்கும் என்னையும் வற்புருத்தி பேச அழைத்து, மிகப்பெரிய கரவொலி வாங்கும் அளவுக்கு பேச வைத்த பெருமை தங்களை மட்டுமே சேரும்.
முன்பின் பார்த்திராத அந்த அஷ்டாவதானியாகிய [Ms. மாதங்கி மெளலி அவர்களின் தந்தை] என் கதைகளை வலைத்தளத்தினில் அவ்வப்போது படித்து வருவதாகவும் .... அதில் ‘சுடிதார் வாங்கப்போறேன்’ என்ற தலைப்பினில் நான் எழுதியிருந்த நகைச்சுவைக்கதையை http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html மிகவும் ரசித்ததாகவும் சொன்னது எனக்கு மிகப்பெரிய பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
மிகச்சோம்பேறியான நான் நேற்று தங்களின் விழாவினில் கலந்துகொள்ளணும் என்ற தங்களின் ஆசையால் போக வர கார் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது என்னை மிகவும் மகிழவும் நெகிழவும் வைத்தது. தங்களின் இந்த ஆத்மார்த்தமான மனிதாபிமானம் மிக்கச் செயல் என்னை வியக்க வைத்தது. அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
மிகவும் வயதான ஆனால் சுறுசுறுப்பான தங்களின் தாய் தந்தையை நீண்ட நாட்களுக்குப்பின் நேற்று பார்த்ததிலும், மனம் விட்டுப்பேசியதிலும் எனக்கு அளவிடமுடியாத சந்தோஷம் ஏற்பட்டது.
நான் முதன் முதலில் உள்ளே நுழைந்ததும் தாங்கள் கொடுத்த ஜூஸ் அருமை. அதன்பின் விழாவின் இடையே பாக்குமட்டைத் தட்டினில் அளிக்கப்பட்ட ஸ்வீட் பாக்கெட், முரட்டு இட்லிகள் இரண்டு, முரட்டு தோசை ஒன்று, பட்டிணம் பக்கோடா இரண்டு, இரண்டுவித சட்னிகள் + சாம்பார், பேப்பர் கப்பினில் காஃபி என அனைத்துமே ருசியாக இருந்தன. என் வீட்டுக்கு வந்து அப்படியே படுத்துவிட்டேன். வேறு எதுவுமே என் வயிற்றுக்குத்தேவைப்படாமல் போய் விட்டது. ;)
வருகை தந்த அனைவருக்குமே தாங்கள் முஹூர்த்தப்பை போல பூச்செடி ஒன்றினைக்கொடுத்து அனுப்பியது, பசுமைப் புரட்சியாக மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
தாங்கள் அன்பளிப்பாக அளித்துள்ள தங்களின் முதல் சிறுகதைத்தொகுப்பு நூலைப் பொறுமையாகப் படித்துவிட்டு பிறகு கருத்துச்சொல்வேன்.
அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
நம் அருமை நண்பரும் என் எழுத்துலக மானசீக குருநாதருமான திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் சார் அவர்களின் நேற்றைய மகத்தான சேவைகளுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள்
கோபு
பின் குறிப்பு:
எல்லாம் நிறைவாகவே இருந்தும் எனக்கு ஒரேயொரு சின்னக்குறை:
*’நம்மாளு’ வையும், எனக்கு மிகவும் பிடித்தமான அந்த தாங்கள் சொன்ன
‘ஸ்நேகா” வையும் என் கண்களிலேயே காட்டாமல் இருந்துட்டீங்களே !
*http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6217.html
பின் குறிப்பு:
எல்லாம் நிறைவாகவே இருந்தும் எனக்கு ஒரேயொரு சின்னக்குறை:
*’நம்மாளு’ வையும், எனக்கு மிகவும் பிடித்தமான அந்த தாங்கள் சொன்ன
‘ஸ்நேகா” வையும் என் கண்களிலேயே காட்டாமல் இருந்துட்டீங்களே !
*http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_6217.html
*http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_16.html
ஆரண்ய நிவாஸ்” சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteஆரண்ய நிவாஸ்” என்கிற பெயரே பூத்துகுலுங்கும் பூஞ்சோலையாக வசீகரிக்கிறது ..பாராட்டுக்கள்.!
நல்ல நிகழ்ச்சி ஒன்றினைப் பற்றி அருமையான புகைப்படங்களுடன் முதல் ரிபோர்ட்! பால கணேஷ் வருகிறேன் என்று சொல்லியிருந்தாரே... வரவில்லையா? இயற்கையான சூழலில் தோட்டத்தில் அமைந்த நிகழ்ச்சி என்பதே சிறப்பாக இருந்திருக்கும். ராமமூர்த்தி ஸார் அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். இன்னும் பலப்பல புத்தகங்கள் வெளியிட 'எங்கள்' வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த முறை திருச்சி வரும்போது திரு. ராமமூர்த்தி அவர்களை நேரில் சந்திக்க வேண்டும். அருமையான ஒரு புத்தக வெளியீட்டு விழா பற்றிய பதிவுக்கு நன்றி கோபு சார்.
ReplyDeleteஅன்பின் வை,கோ
ReplyDeleteஆரண்ய நிவாஸ் - சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி.
நிக்ழச்சிக்குச் சென்று, கலந்து கொண்டு, வாழ்த்திப் பேசி , புகைப்படங்கள் பல எடுத்து , அததனை நிகழ்வுகளையும் உள்வாங்கி, ஒரு அருமையான பதிவாக வெளியிட்டமை நன்று,
பாராட்டுகள்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
திரு ஆரண்ய நிவாஸ் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா சிறப்புற நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதை அழகிய பதிவாக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள். கோபு சார். படங்கள் அத்தனையும் அற்புதம்.
ReplyDeleteஆழ்த்துக்கள்.......
ஆஹா! படித்து மகிழ்ந்தேன். எழுத்தாளர்கள் சந்திப்பு என்றாலே பரவசம்! நெகிழ்ச்சி! மகிழ்ச்சிதான்! எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteஇந்தமாதிரி இயற்கையான வீட்டு சூழலில் நடைபெற்றால்தான் விழா களைகட்டுகிறது! புகைப்படங்களில் பெரும்பாலானவர்களின் முகத்தில் மலர்ச்சி! இப்படி குடும்பவிழாக்களுக்குச் சென்றுவந்தாலே ஒரு ரீசார்ஜ் ஆன உணர்வுதான்! அடுத்தகதை ரெடி பண்ணுங்க வாத்யாரே! மிகவும் யதார்த்தமான ஒரு பதிவு! என்றும் அன்புடன் MGR
ReplyDeleteஅதுவும் BHEL குடும்பம் வேறா! அந்த இனிமை, நெருக்கம்! ஆஹா! என்னைப்போல அனுபவித்தவர்களுக்கே புரியும்! நன்றி! என்றும் அன்புடன் MGR
ReplyDeleteஅதுவும் BHEL குடும்பம் வேறா! அந்த இனிமை, நெருக்கம்! ஆஹா! என்னைப்போல அனுபவித்தவர்களுக்கே புரியும்! நன்றி! என்றும் அன்புடன் MGR
ReplyDeleteஒரு பதிவர் தனது படைப்புகளை நூலாக வெளியிடுவது என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். திருச்சி பதிவர் திரு ‘ஆரண்ய நிவாஸ்’ ஆர்.ராமமூர்த்தி அவர்கள் தனது கனவு இல்லத்தின் பெயரிலேயே சிறுகதைத் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்! ஒரு சிறு குழந்தையைப் போல ஆர்வத்துடன் புறப்பட்டுச் சென்று நூல் வெளியீட்டு விழாவை, தனது கேமராவினுள் அடக்கி வந்து வலைப்பதிவில் தந்த திரு V.G.K அவர்களுக்கு நன்றி! என்னையும் நீங்கள் அன்புடன் அழைத்து இருந்தீர்கள். சூழ்நிலை காரணமாக வர இயலாமல் போய்விட்டது. உங்கள் பதிவில் உள்ள போட்டோக்களைப் பார்த்தவுடன் கலந்து கொள்ளாத குறை நீங்கி விட்டது.
ReplyDeleteஅமைதியான முறையில் எளிய விழா. நூல் வெளியீடு என்பது மிகவும் அரிய பணியாகும். நூல் ஆசிரியருக்கும் துணை நின்ற அனைவருக்கும், பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
ReplyDeleteஇந்த ’குடும்ப’ விழாவிற்கு வந்து பெருமைப்படுத்திய தங்களுக்கும் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி,சார்.
ReplyDeleteவிழா நிகழ்வுகளை அழகாய் கணமுன்னே காட்சிப்படுத்தினர்கள்.
ReplyDeleteஆனால் ஒரு மனக்குறை:
அந்த முரட்டு இட்லிகளையும் முரட்டு தோசையையும் கண்ணில் காட்டவேயில்லையே தாங்கள்?
Mohamed Nizamudeen August 3, 2014 at 4:08 PM
Deleteவாருங்கள், வணக்கம்.
//விழா நிகழ்வுகளை அழகாய் கண்முன்னே காட்சிப்படுத்தினீர்கள்.//
;))))) மிக்க நன்றி.
//ஆனால் ஒரு மனக்குறை:
அந்த முரட்டு இட்லிகளையும் முரட்டு தோசையையும் கண்ணில் காட்டவேயில்லையே தாங்கள்?//
தவறுதான். நான் காட்டியிருக்கத்தான் வேண்டும். அதற்காக முதலில் என்னை மன்னிக்கவும்.
அவர்கள் அளித்த தட்டிலிருந்து .... இட்லியிலிருந்து ..... தோசையிலிருந்து ..... எல்லாமே மஹா முரடாக வெயிட் ஆக இருந்ததினால், என்னால் அவற்றை ஒரு கையில் வைத்துக்கொண்டு மற்றொரு கையில் கேமரா பிடித்து பேலன்ஸ் செய்து போட்டோ பிடிக்க இயலவில்லை.
மேலும் பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்று சொல்வார்கள் அல்லவா !
அதுபோல இந்த மஹா முரடான தீனிகளை பதிவில் கொண்டுவரணும் என்பதும் தோன்றாமல் பத்தோடு பதினொன்றாக பறந்தும் மறந்தும் போயிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
மீண்டும் மன்னிக்கவும்.
அவரின் அடுத்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவர் வீட்டுக்கு நான் செல்ல நேர்ந்தால், இறை நாட்டம் அதுபோல அமைந்தால், கட்டாயமாக அவற்றை காட்சிப்படுத்திவிடுகிறேன், ஐயா. ;)))))
அன்புடன் கோபு
அருமையான பகிர்வு சார்,
ReplyDeleteவிழாவின் வசீகரங்களை வார்த்தைகளால் வடிவமைத்து இருக்கின்றீர்கள், படிக்கும் போதே வந்து போன ஒரு உணர்வு. நன்றி பகிந்தமைக்கு
Padangaludan pathivu arumai.pakirvukku vazhthukkal
ReplyDeleteவிழா நிகழ்ச்சியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். மிக அருமையான பதிவு
ReplyDeleteவிழாவிற்கு நேரில் வர இயலாத என் போன்றவர்களுக்கு இந்த படங்கள் மூலம் நேரில் கலந்து கொண்ட உணர்வு.......
ReplyDeleteவிழா நாயகர் மூவார் முத்து அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தன்யனானேன்....
ReplyDeleteஆரண்ய நிவாஸ்” சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநாங்களே நேரில் கலந்து கொண்டது போல் இருந்தது.
படங்கள் எல்லாம் அருமை.
விழாவில் நேரில் பங்கு பெற்ற திருப்தி இந்தக் கட்டுரையை படிக்கும் பொழுது ஏற்பட்டது. நன்றி. வாழ்த்துகள் - ஆ நி ரா அவர்களுக்கு!
ReplyDeleteதிருவாளர்கள் சுந்தர்ஜி,தஞ்சாவூர் கவிராயர் ,ரிஷபன்,மற்றும் தங்களை ப் போன்ற முதிர்ந்த ( அ. து.-senior )
ReplyDeleteபதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கருதியே நாங்கள் இருவரும் -மாதங்கியும் நானும் -மிகுந்த
ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் ;தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல் முழு நிகழ்ச்சியும்
ஆர்ப்பாட்டமின்றி மிகுந்த உள்ளன்போடு எல்லோருமே செயல்பட்டார்கள் ;இது எங்களை மிகவும் கவர்ந்தது ;
திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி குடும்பத்த்தினரின் விருந்தோபாலில் நாங்கள் திகைத்த்து விட்டோம்
என்பதே உண்மை ( வெறும் புகழ்ச்சியில்லை ) ; எங்களையும் புகைப்படம் எடுத்த்து தங்கள் பகிர்வில்
குறிப்பிட்டமைக்காக தங்களுக்கு பிரத்திதியேக நன்றி.
மாலி.
Mail message from chandrasekaran subramaniam [LATHIGAR] 19:25 (11 minutes ago) to me :
ReplyDelete//I am at Srirangam only. Had I known of this issue before hand, I would have attended and met you in person and had your blessings sir. Seen all the Photos. Nice meeting. Thanks a lot Sir//
http://rishaban57.blogspot.com/2014/08/blog-post.html
ReplyDeleteதிரு. ரிஷபன் அவர்களின் மேற்படி பதிவினில் திரு. தஞ்சாவூர்க் கவிராயர் அவர்களால் ’ஆரண்ய நிவாஸை முன்வைத்து’ எழுதி வாசிக்கப்பட்ட புகழுரை வெளியிடப்பட்டுள்ளது.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
http://aaranyanivasrramamurthy.blogspot.in/2014/08/blog-post_4.html
ReplyDeleteஆரண்ய நிவாஸ் திரு.ராமமூர்த்தி அவர்களின் மேற்படிப் பதிவினில் பதிவர் திரு. மோகன்ஜி [வானவில் மனிதன்] அவர்கள் ‘ஆரண்ய நிவாஸ்’ சிறுகதைத் தொகுப்பு நூலைப்பற்றிச் சொல்லியுள்ள ’அணிந்துரை’ வெளியிடப்பட்டுள்ளது.
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் நூலைப் பற்றிய தங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteChellappa Yagyaswamy August 4, 2014 at 10:07 PM
Deleteவாருங்கள், வணக்கம்.
//ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் நூலைப் பற்றிய தங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.//
எப்படியும் இந்த ஆண்டில் [2014 இல்] என்னால் இயலாது. அடுத்த ஆண்டு பார்ப்போம்.
என் வலைத்தளத்தில் நடைபெற்றுவரும் 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகள் முடியவே அக்டோபர் 2014 ஆகும். அதன் பின் எனக்குக்கொஞ்சம் [ஓரிரு மாதங்களாவது] முழு ஓய்வு தேவைப்படும்.
தங்களின் ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பிற்கு மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.
அன்புடன் VGK
பதிவு மிக அருமை. இந்த சமயம் நான் ஸ்ரீரங்கத்தில் இல்லாமல் பெங்களூருவில் இருக்கிறேனே என்று மட்டுமல்ல திருச்சி .. எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போயிற்றே எனவும் வருத்தப் பட்டேன்.விரைவில் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்புக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.இத்தகைய ஆர்வத்தைத் தொண்டும்படியாக வெளியிட்டுள்ள தங்கள் பதிவுக்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும்.
ReplyDeleteநூல் வெளியீடு புகைப்படம் அருமை திரு.ராமமூர்த்தி ஐயாக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete''யாரோ அவர் யாரோ ?''
என்ன அழகு எத்தனை அழகு என் கண்ணே பட்டிடும் அழகு
பவித்ரா நந்தகுமார் August 4, 2014 at 11:59 PM
ReplyDeleteவாங்கோ, வணக்கம்.
//நூல் வெளியீடு புகைப்படம் அருமை திரு.ராமமூர்த்தி ஐயாக்கு வாழ்த்துக்கள்//
OK
*****''யாரோ அவர் யாரோ ?''*****
//என்ன அழகு எத்தனை அழகு என் கண்ணே பட்டிடும் அழகு//
என்ன கிண்டலா ? தாங்கள் அழகோ அழகாக இருப்பதால் தானே இந்தக்கிண்டல் ! ;)))))
உங்கள் வயதில் நானும் உங்களைவிட அழகாக சினிமா ஹீரோ போல இருந்தவனாக்கும். சந்தேகமாக இருந்தா என் வீட்டுக்கார அம்மாவைக் கேட்டுப்பாருங்கோ.
இல்லாவிட்டால் என் பழைய போட்டோக்களைப் பாருங்கோ. இதோ இந்தப்பதிவினில் கூட என் 21-22 வயது போட்டோ உள்ளது. http://gopu1949.blogspot.in/2011/07/1.html
உங்கள் நூல் வெளியீட்டுக்குத்தான் என்னால் நேரில் வந்து கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. ஏனெனில் நீங்க எனக்கு கார் அனுப்பவே இல்லை ;)))))
அப்புறம் நலம் தானே?
தங்களின் அபூர்வமான வருகையும், அசத்தலான, அழகான வேடிக்கையான, நகைச்சுவையான, உரிமையுடன் கூறியுள்ள கருத்துக்களும் என்னை மகிழவும் நெகிழவும் செய்தன.
இதுபோல அடிக்கடி என் பதிவுகள் பக்கமும் வந்தால்தான் என்னவாம் ! ஏதேனும் ஒரு சிறுகதை விமர்சனப் போட்டியிலாவது கலந்து கொள்ளக்கூடாதா? இன்னும் 12 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஏதாவது ஒன்றில் கலந்து கொள்ளவும். பரிசினை அள்ளவும்.
பிரியமுள்ள கோபு [VGK]
ஆகா! கலந்து கொள்ள முடியாமல் போச்சே! ரொம்ப நாளா சிரமம் எடுத்து செய்த முயற்சி வெற்றிகரமாக முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
ReplyDeleteபதிவும் படமும் இமெயிலும் டாப்பு.
ஆரண்யவிலாஸ் திரு. ராமமூர்த்தி சார் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவினை நேரில் கண்ட நிறைவை அளித்துவிட்டது தங்களுடைய இந்தப் பதிவு. இயற்கை சார்ந்த சூழலில் இயற்கையாக எளிமையாக அதே சமயம் நிறைவாக விழா நடந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் சொந்த மண்ணின் படைப்பாளிகளைப் பார்த்து நெஞ்சுக்குள் பெருமிதம் வழிகிறது. நூலாசிரியருக்கு இனிய வாழ்த்துகள். நிகழ்வினை வெகு அழகாக படங்களுடன் பதிவிட்டு பலரும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி கோபு சார்.
ReplyDeleteஇயற்கையான சூழல் - இனிமையான உணவும் உபசரிப்பும் - விழா நாயகன் ராமமூர்த்தி சாருடைய பால்ய தோழர்கள் அதிலும் அந்த காரைக்குடி நண்பர், உறவினர்கள் இவர்கள் அனைவரும் ராமமூர்த்தி சாருடன் அந்த நாளைய நினைவுகளை நகைச்சுவை இழையோட பகிர்ந்து கொண்ட நினைவுகள் - எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தையாரின் ஆசியோடும் தந்தையார் அவர்கள் நெகிழ்வான பேச்சு .....அப்பப்பா! நேரம் போனதே தெரியாமல், என்னை மறந்து லயித்தேன். விழா நிகழ்வை கண்முன் நிறுத்திய வைகோ சாரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதிலும் மனம் தொட்டது கவிராயரின் மதிப்புரையும் இடையிடையே சுந்தர்ஜி யின் குறும்பான குறுக்கிடலும் காமென்ட்சும், ஆஹா...!!!! ஒரே ஒரு குறை வீட்டில் போய்தான் நினைவு வந்தது. படைப்பாளரை பேச வைத்திருக்கலாமே என்று. ரிஷபன் ஸார் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடையில் ஒரு துள்ளலோடும், மாறாத புன்னகையோடு வந்தவர்களை வரவேற்ற பாங்கும் என் சார்பாக பொன்னாடை போர்த்தி சேவை(?!) செய்த விதம், நன்றி ரிஷபன் :)
ReplyDeletedhana lakshmi August 5, 2014 at 2:59 PM
Deleteவாங்கோ ... தங்களின் அபூர்வ வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.
//இயற்கையான சூழல் - இனிமையான உணவும் உபசரிப்பும் - விழா நாயகன் ராமமூர்த்தி சாருடைய பால்ய தோழர்கள் அதிலும் அந்த காரைக்குடி நண்பர், உறவினர்கள் இவர்கள் அனைவரும் ராமமூர்த்தி சாருடன் அந்த நாளைய நினைவுகளை நகைச்சுவை இழையோட பகிர்ந்து கொண்ட நினைவுகள் - எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தையாரின் ஆசியோடும் தந்தையார் அவர்கள் நெகிழ்வான பேச்சு .....அப்பப்பா! நேரம் போனதே தெரியாமல், என்னை மறந்து லயித்தேன். விழா நிகழ்வை கண்முன் நிறுத்திய வைகோ சாரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதிலும் மனம் தொட்டது கவிராயரின் மதிப்புரையும் இடையிடையே சுந்தர்ஜி யின் குறும்பான குறுக்கிடலும் காமென்ட்சும், ஆஹா...!!!!//
தாங்கள் சொல்லியுள்ள எல்லாமே மிகவும் இனிமை தான். மனதுக்கு மிகவும் சந்தோஷம் தான் அளித்தன.
// ஒரே ஒரு குறை வீட்டில் போய்தான் நினைவு வந்தது. படைப்பாளரை பேச வைத்திருக்கலாமே என்று. //
நானும் இதை மிகவும் உணர்ந்தேன். திரு. ராமமூர்த்தியுடனும் கேட்டே விட்டேன்.
நிகழ்ச்சி முடிய இரவு மிகவும் நேரமாகிவிட்டதாலும், அது ஒரு மிகச்சாதாரணமான Formality Speech ஆக அமைந்து விடும் என்பதாலும், அதுபோல பேசவில்லை என்று அடக்கத்துடன் கூறினார்.
//ரிஷபன் ஸார் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடையில் ஒரு துள்ளலோடும், மாறாத புன்னகையோடு வந்தவர்களை வரவேற்ற பாங்கும் என் சார்பாக பொன்னாடை போர்த்தி சேவை(?!) செய்த விதம், நன்றி ரிஷபன் :)//
திரு. ரிஷபன் சார் அவர்களின் அன்புக்கட்டளைக்கு அடி பணிந்தே, தங்களின் சார்பாக அவர் போர்த்திய பொன்னாடைக் காட்சியை நான் என் பதிவினில் வெளியிடவில்லை.
அவருக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால், அவர் புகைப்படத்தினை எங்குமே நான் தனியாகப்போட்டு Highlight செய்யவும் இல்லை.
>>>>>
இயற்கையான சூழல் - இனிமையான உணவும் உபசரிப்பும் - விழா நாயகன் ராமமூர்த்தி சாருடைய பால்ய தோழர்கள் அதிலும் அந்த காரைக்குடி நண்பர், உறவினர்கள் இவர்கள் அனைவரும் ராமமூர்த்தி சாருடன் அந்த நாளைய நினைவுகளை நகைச்சுவை இழையோட பகிர்ந்து கொண்ட நினைவுகள் - எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தையாரின் ஆசியோடும் தந்தையார் அவர்கள் நெகிழ்வான பேச்சு .....அப்பப்பா! நேரம் போனதே தெரியாமல், என்னை மறந்து லயித்தேன். விழா நிகழ்வை கண்முன் நிறுத்திய வைகோ சாரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதிலும் மனம் தொட்டது கவிராயரின் மதிப்புரையும் இடையிடையே சுந்தர்ஜி யின் குறும்பான குறுக்கிடலும் காமென்ட்சும், ஆஹா...!!!! ஒரே ஒரு குறை வீட்டில் போய்தான் நினைவு வந்தது. படைப்பாளரை பேச வைத்திருக்கலாமே என்று. ரிஷபன் ஸார் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடையில் ஒரு துள்ளலோடும், மாறாத புன்னகையோடு வந்தவர்களை வரவேற்ற பாங்கும் என் சார்பாக பொன்னாடை போர்த்தி சேவை(?!) செய்த விதம், நன்றி ரிஷபன் :)
ReplyDeletedhana lakshmi August 5, 2014 at 2:59 PM
Deleteவாங்கோ .... மீண்டும் வணக்கம்.
தங்களை நான் இதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் சந்தித்துப்பேசியுள்ளேன். பல நிகழ்ச்சிகளில் தங்களின் இனிய குரலில் இறைவணக்கப் பாடல்களைக் கேட்டு ரஸித்துள்ளேன். இதுபோன்ற பல கூட்டங்களில் தங்களின் இனிய சொற்பொழிவினைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.
தங்களை இந்த நிகழ்ச்சியிலும் மீண்டும் சந்திக்க வாய்ப்புக்கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.
அத்துடன் நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது மீண்டும் தங்களுடனும், திரு. ரிஷபன் அவர்களுடனும் சேர்ந்தே காரில் பேசிக்கொண்டே நாம் வந்தது மேலும் மட்டற்ற மகிழ்ச்சியினை அல்லவா அளித்தது. ;)
தங்களின் கவிதைத்தொகுப்பு நூலை நான் மிகவும் ரஸித்து என் பழைய பதிவு ஒன்றினில் வெளியிட்டுள்ளேன்.
தாங்கள் அதை பார்த்தீர்களோ ... இல்லையோ .... இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html
தலைப்பு: ”முன்னுரை என்னும் முகத்திரை”
அனைத்துக்கும் என் அன்பான இனிய நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
அருமையான பதிவு. அழகான புத்தக வெளியீடு. அசத்தீட்டீங்க கோபால் சார். என் வலையுலக ( நீண்டநாள் :):) :) நண்பர் ஆர் ஆர் ஆருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteடிஃபனை கண்ணில் காமிச்சிருக்கலாம். படிச்சே ஜொள்ஸ்.. :) :) :)
அடுத்த முறை எங்கே இருந்தாலும் வந்திடுறேன் ஆர் ஆர் ஆர் சார். :)
புத்தக விமர்சனத்தையும் போடுங்க கோபால் சார்.:)
Thenammai Lakshmanan August 5, 2014 at 3:37 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//அருமையான பதிவு. அழகான புத்தக வெளியீடு. அசத்தீட்டீங்க கோபால் சார்//
சந்தோஷம். மிக்க நன்றி.
//டிஃபனை கண்ணில் காமிச்சிருக்கலாம். படிச்சே ஜொள்ஸ்.. :) :) :)//
இந்தக்கேள்விக்கு மேலே திரு. Mohamed Nizamudeen அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். படித்துக்கொள்ளவும். பிறகு மீண்டும் ஜொள்ஸ்.... தொடரவும்.
//புத்தக விமர்சனத்தையும் போடுங்க கோபால் சார்.:)//
மேலே திரு. Chellappa Yagyaswamy அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். அதுவே தங்களுக்கும் பொருந்தும்.;)
அன்புடன் கோபு
முன்பே பதிவைப் படித்து கருத்துரையிடாமல் போனதால் (ரிஷபன் சாரை தேடிய கண்களுக்கு தென்படவில்லை என்பதால் தான்) மீண்டும் வந்தேன். காரணம் புரிந்தது.
ReplyDeleteமூவார் சார் நூல் வெளியீட்டை எங்களுக்கும் காட்சிப்படுத்தியமைக்கு நன்றி!!
விழாவிற்கு நேரில் சென்று வந்த உணர்வைத் தந்தது தங்களது பதிவு. ஆர்.ஆர்.ஆர் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்க தயவில் கால யந்திரத்தில் ஏறி வெளியீட்டு விழாவில் நாங்களும் பங்கேற்று விட்டோம். நன்றி!
ReplyDelete//திரு. ராமமூர்த்தி அவர்களின் தாயார் அவர்கள் முன்னிலையில்
ReplyDeleteஅவரின் தந்தை அவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது.
மிகவும் அனுபவசாலியான அவரின் தந்தைக்கு வயது 90.
[He is a Retired TNEB Official - Retired from Services during 1982]
முதலில் அவர் பேசிய பிறகு வந்திருந்த பலரும்
தங்களைப் பற்றி தாங்களே அறிமுகம் செய்துகொண்டு
பேச அனுமதிக்கப்பட்டனர்.
//என்ன தவம் செய்தாரோ? எத்தனை பேருக்கு இந்த பாக்யம் கிட்டும்? நேரில் பங்கேற்றது போன்ற உணர்வைத் தந்த பதிவு! பதிவிட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
அட?? இதுக்குத் தான் கணேஷ் பாலா வரதாக இருந்தார் போல! அவர் தானே உங்களோடு இருக்கார்? ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தியை மிகவும் வயதானவர் என எண்ணிக் கொண்டிருந்தேன். :)))) ஹிஹிஹி
ReplyDeleteநாங்க ஶ்ரீரங்கத்தில் இருந்திருந்தால் கட்டாயமாய் வந்திருப்போம். பரவாயில்லை. உங்கள் மூலம் விழாவைப் பார்த்து விட்டோம். தாமதமாய்ப் பார்த்தாலும் பார்த்தது தானே கணக்கு. டிஃபன் தான் கிடைக்கலை. :))))
நாங்களும் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது போல் உணர்ந்தோம்.
ReplyDelete:)
ReplyDeleteகூடவே இருந்து விழாவை கண்டு களித்தோம்.
ReplyDeleteஅட நானும் வந்து விழாவில் கலந்து கொண்டது போலவே இருக்கிறதே. இதுவும் இந்த கோபு அண்ணாவின் கைங்கர்யமே.
ReplyDeleteபடங்கல்லா சூப்பரு. ஒங்க எளுத்து தெறமயால எங்க அல்லாரயும் அங்கிட்டு கூட்டிகிட்டு போயிட்டீங்க. இட்டளி தோச எங்கன போச்சி????
ReplyDeleteஆரண்யநிவாஸ் சாருக்கு வாழ்த்துகள் எங்களுக்கெல்லாம் கார் அனுப்பாமலேயே அங்கு கூட்டிச்சென்ற உங்களுகு நன்றி.
ReplyDelete;-)))
ReplyDelete:))
ReplyDeleteஆரண்யநிவாஸ் சாரின் உங்களின் ஆழ்ந்த நட்பு புரிகிறது. நூல் வெளியீட்டு விழாவை அழகான படங்களுடன் தொகுத்து வழங்கியது. சிறப்பு. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteஸ்ரத்தா, ஸபுரி... February 6, 2016 at 10:39 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//ஆரண்யநிவாஸ் சாரின் உங்களின் ஆழ்ந்த நட்பு புரிகிறது. நூல் வெளியீட்டு விழாவை அழகான படங்களுடன் தொகுத்து வழங்கியது. சிறப்பு. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//
தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.
மீண்டும் ஒருமுறை இன்று, இப்பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் இந்த பதிவைப் படித்து முடித்ததும், இந்த புத்தகத்தை வாங்க தஞ்சாவூர் நந்தி பதிப்பகம் தேடி அலைந்ததும், அங்கு இல்லாத படியினால், உங்களிடம் போன் செய்து கேட்ட பிறகு, திருச்சி ஆதிகுடி காபி கிளப்பில், அல்வாவும் பட்டணம் பக்கோடாவும் சாப்பிட்டுவிட்டு, கல்லா பெட்டியில் ‘ஆரண்யநிவாஸ்’ வாங்கியதும் நினைவுக்கு வருகின்றன. இந்த நூலைப் படித்து முடித்த கையோடு நானும் ஒரு நூல் விமர்சனம் செய்துள்ளேன்.
ReplyDeleteதி.தமிழ் இளங்கோ February 3, 2017 at 4:40 AM
Deleteவாங்கோ ஸார், வணக்கம்.
//மீண்டும் ஒருமுறை இன்று, இப்பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. //
ஆம். 03.08.2014 அன்றே அழகானதொரு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். மீண்டும் இங்கு தங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
//உங்களின் இந்த பதிவைப் படித்து முடித்ததும், இந்த புத்தகத்தை வாங்க தஞ்சாவூர் நந்தி பதிப்பகம் தேடி அலைந்ததும், அங்கு இல்லாத படியினால், உங்களிடம் போன் செய்து கேட்ட பிறகு, திருச்சி ஆதிகுடி காபி கிளப்பில், அல்வாவும் பட்டணம் பக்கோடாவும் சாப்பிட்டுவிட்டு, கல்லா பெட்டியில் ‘ஆரண்யநிவாஸ்’ வாங்கியதும் நினைவுக்கு வருகின்றன.//
நன்றாக நினைவில் உள்ளது. அதுவும் அதில் ஒரே நாளில் நிறைய பிரதிகள் வாங்கிய நபர் இந்த உலகிலேயே நீங்கள் ஒருவர் மட்டுமே என ஆனந்தக் கண்ணீருடன் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி என்னிடம் சொல்லி மகிழ்ந்திருந்தார் :)
//இந்த நூலைப் படித்து முடித்த கையோடு நானும் ஒரு நூல் விமர்சனம் செய்துள்ளேன்.//
அதுவும் எனக்கு நன்கு நினைவில் உள்ளது. இதோ அந்தத் தங்களின் பதிவுக்கான இணைப்பு:
http://tthamizhelango.blogspot.com/2014/08/blog-post_15.html
மிக்க நன்றி, ஸார்.
அன்புடன் VGK