About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, December 19, 2014

உலகைக் கவரும் உன்னதமான துபாய்-3

புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்பு.... அமோகமான செல்வச்செழிப்பு.... கட்டுக்கோப்பான ஆட்சி அமைப்பு.... இவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற துபாய், உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை காந்தம்போல இழுக்கும் அற்புத பூமியாகத் திகழ்கிறது. 



1043 அடி உயரமுள்ள ஒரு ஹோட்டல் 






துபாயின் பூகோள அமைப்பு, பல நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொள்வதற்கு இயற்கையிலேயே நல்ல வசதியைக் கொண்டு இருக்கிறது. 

பாரசீக வளைகுடாவின் தென் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள துபாய், மேற்கத்திய மற்றும் கிழக்குப்பகுதி நாடுகளுடன் எளிதாக இணைப்புப்பெற வாய்ப்பாக இருக்கிறது. இயற்கை கொடுத்துள்ள இந்த அருட்கொடையால், ஆரம்ப காலத்திலிருந்து துபாயின் முக்கியத்தொழில் ஏற்றுமதி - இறக்குமதியாக இருந்தது.   இதனால் வேற்று நாட்டவர்களும் அடிக்கடி துபாய்க்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

துபாய் பற்றிய முதல் குறிப்பு:

துபாய், பழம் பெருமை கொண்டது என்றாலும், துபாய் பற்றிய முதல் குறிப்பு 1095-ஆம் ஆண்டு அபு அதுல்லா அல்-பக்ரி எழுதிய ஜியாக்ரபி என்ற புத்தகத்தில் தான் காணப்படுகிறது.

வெனீஸ் நாட்டு முத்து வியாபாரி காஸ்பெரோ பால்பி என்பவர் 1580-ஆம் ஆண்டு, முத்து வணிகத்திற்காக துபாய் வந்து சென்றதை பதிவு செய்து இருக்கிறார். 

18-ம் நூற்றாண்டு வரை துபாய் சிறிய கடற்கரை கிராமமாகவே இருந்தது. அப்போது அங்கு பனியாஸ் என்பவர்கள், அபுதாபியை ஆண்டு வந்த ஷேக் தனூன் என்பவரின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். 

1833-ம் ஆண்டு ஏற்பட்ட உள் நாட்டு மோதல் காரணமாக, அல் அபு பலாசா என்ற குடியினர் அங்கிருந்து பிரிந்து வந்து துபாயில் குடியேறினார்கள்.

மக்தும் வம்சாவளியினர் ஆட்சி:

இவ்வாறான குடியேற்றத்திற்கு தலைமை ஏற்ற ஷேக் உபைத் பின் சயீத் மற்றும் ஷேக் மக்தும் பின் புத்தி  ஆகியோர் துபாய் ஆட்சியாளர்களாக இருந்து மக்களை வழிநடத்தினார்கள். 

1836-ம் ஆண்டு உபைத் மறைவுக்குப்பிறகு, மக்தும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அது முதல் துபாயில் மக்தும் வம்சாவளியினரின் ஆட்சி தொடங்கியது.



துபாயின் தற்போதைய ஆட்சியாளர்
மேதகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் 


துபாய் இப்போது உலகமே வியந்து பார்க்கும் வகையில் செல்வச்செழிப்புடன் விளங்கினாலும், ஆரம்ப காலங்களில் அது பல இன்னல்களை சந்தித்து அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. 

1841-ம் ஆண்டு பர்-துபாய் பகுதியில் அம்மை நோய் வேகமாகப்பரவி பலரைத் தாக்கியது. இதனால் ஏராளமான மக்கள் அந்தப்பகுதியிலிருந்து வெளியேறி, தேரா என்ற பகுதியில் குடியேறினார்கள்.

ஆனால் விதி அங்கும் துரத்தியது. அந்தப்பகுதியில் 1894-ம் ஆண்டு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு, பல வீடுகளை நாசமாக்கின. 

இந்த இன்னல்களையெல்லாம் தாங்கிய துபாய், அதன்பின் வெற்றிகரமாக தனது முன்னேற்ற வாழ்வை நோக்கி வீறு நடை போட்டது.



இதிலுள்ள பெரும்பாலான தகவல்கள்
துபாயில் முதன்முதலாக 10.12.2014 அன்று வெளியிடப்பட்ட
’தினத்தந்தி’ தமிழ் செய்தித்தாளின் 
தொடக்கவிழா சிறப்பு மலரிலிருந்து
எடுத்துப் பகிரப்பட்டுள்ளன





 இந்தக்கட்டுரை மேலும் தொடரும் 



World's Tallest Building - Height 2766 feet
’At the Top - Burj Khalifa - Dubai’





37 comments:

  1. அருமையான தகவல்கள். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இருக்கிறது அவர்களது முன்னேற்றம்.

    தொடரின் முதல் இரண்டு பகுதிகளையும் இனிமேல் தான் படிக்க வேண்டும்......

    ReplyDelete
  2. படத்தை முதலில் பார்த்தவுடன் அது ஒரு பெரிய கப்பல் என்றே நினைத்தேன். ஹோட்டல் என்பது உங்களுடைய குறிப்பினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது.

    துபாய் பற்றிய தினத்தந்தி தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இதன் அடுத்த தொடரை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. டுபாய் பற்றிய விளக்கங்களோடு அருமையான பதிவு... வாழ்க்கையில் முதல் தடவையாக, சோட்டான ஒரு பதிவு போட்டிருப்பது இதுதான் முதல் தடவையாக இருக்கும் என நினைக்கிறேன் கோபு அண்ணன்?:) இல்லையா?:).

    ReplyDelete
  5. உலகமே வியந்து பார்க்கும் வகையில் செல்வச்செழிப்புடன் விளங்கும் துபாய்vபற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு
    பாராட்டுகள்....

    ReplyDelete
  6. நல்லா இருக்குங்க.

    அதிரா சொல்லும் "சோட்டான ஒரு பதிவு" அப்படீன்னா என்னங்க? வயசாகிப் போனதினால இந்த மாதிரி வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிய மாட்டேங்கறது.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி December 20, 2014 at 4:11 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்லா இருக்குங்க.//

      மிக்க நன்றி, ஐயா.

      //அதிரா சொல்லும் "சோட்டான ஒரு பதிவு" அப்படீன்னா என்னங்க? வயசாகிப் போனதினால இந்த மாதிரி வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிய மாட்டேங்கறது.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அவங்க எப்போதுமே கொஞ்சும் கொச்சைத்தமிழ் பேசுபவர்கள். அது நம் யாருக்குமே புரியாது.

      நானும் அவர்களின் மொழியைப் புரிந்துகொள்ள பலநாள் முயற்சித்து ஒரு தனி அகராதியே [Dictionary] உருவாக்கி வந்தேன். கடைசியில் எனக்கு நம் தமிழ்மொழியே மறந்து போகும் அளவுக்கு ஆபத்தாகி விட்டதால் அந்த முயற்சியை அப்படியே பாதியில் நிறுத்திக்கொண்டு விட்டேன்.

      அவர்களின் தமிழ் மொழி விசித்திரமானது. அதைத்தாங்கள் நன்கு கற்றுக்கொள்ள அவர்களின் வலைப்பக்கம்போய் தொடர்ந்து அவர்களின் பதிவுகளைப் படித்து வரவேண்டும்.

      அவர்களிடமே கற்றுக்கொள்ள நானும் ஆசைப்பட்டேன். ஆனால் மிகவும் COSTLY யாக தக்ஷணை கேட்டார்கள். வைர நெக்லஸ், வைரத்தோடுகள், வைர மூக்குத்தி, வைரத்தில் வளையல்கள் என பாடாய்ப் படுத்தி விட்டார்கள். சைஸ் கேட்டிருந்தேன். அதையும் தராமல் ஏதோ வள்ளிக்கு போடுவதற்காக வேண்டிக்கொண்டேன். அனுப்பினால் அனுப்புங்கோ. இல்லாவிட்டால் தெய்வக்குத்தமாகிவிடும் என மிரட்டினார்கள். எனக்குக் கட்டுப்படியாகவில்லை. சரி என்று அப்படியே விட்டுவிட்டேன்.

      மொத்தத்தில் அட்டகாச, அலம்பல், அதிரடி அதிராவான அவர்கள் தன்னை பிரிட்டிஷ் மஹாராணியாரின் ஒரே அருமைப்பேத்தி என்றும், வயது எப்போதுமே ஸ்வீட் சிக்ஸ்டீன்தான் என்றும் கடந்த பலவருடமாகச் சொல்லி வருகிறார்கள். 16 ஓ அல்லது 61 ஓ என்றும் எனக்கு சந்தேகமாக உள்ளது. இரண்டுக்கும் சராசரியாக 16+61=77/2= 38.5 ஆக இருக்கும் என நானாக அனுமானித்துள்ளேன்.

      கோபம் வந்தால் தேம்ஸ் நதியில் குதிப்பேன், முருங்கை மரத்தில் ஏறுவேன், கட்டிலுக்கு அடியில் பதுங்குக்குழியில் மறைவேன், அண்டார்டிக்கா செல்வேன். தீக்குளிப்பேன் என்றெல்லாம் மிரட்டுவார்கள். ஆனால் ஒருபோதும் அவ்வாறெல்லாம் செய்யவே மாட்டார்கள். மிகவும் நல்லவங்க. :)

      சமீபத்தில் அவர்களுக்கு இரட்டைக்குழந்தை பிறந்துள்ளதாக எனக்கோர் செய்தி கிடைத்தது. அதைப்பற்றிகூட என் பதிவினில் எழுதியுள்ளேன்.

      இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

      மொத்தத்தில் பெரிய இடத்து விவகாரம். நமக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ் என இப்போதெல்லாம் நான் ஒதுங்கிக்கொண்டு விட்டேன்.

      தங்களின் இந்த சந்தேகத்திற்கு அவர்களே ஒருவேளை இங்கு வந்து பதில் அளித்தாலும் அளிக்கலாம். எதற்கும் வைர நகைகளைத் தாங்களும் கொஞ்சம் வாங்கி கைவசம் வைத்துக்கொள்ளவும். :)

      அன்புடன் VGK

      Delete
    2. எங்கள் ஜாதியில் நாங்கள் வைரத்தைக் கடையில் பார்ப்தோடு சரி, தொடமாட்டோம், வாங்க மாட்டோம், அணியமாட்டோம். அப்படி ஒரு சம்பிரதாயம்.

      Delete
    3. பழனி. கந்தசாமி December 20, 2014 at 6:08 PM

      அன்புள்ள ஐயா, வணக்கம். மீண்டும் வருகைக்கு நன்றி.

      //எங்கள் ஜாதியில் நாங்கள் வைரத்தைக் கடையில் பார்ப்பதோடு சரி, தொடமாட்டோம், வாங்க மாட்டோம், அணியமாட்டோம். அப்படி ஒரு சம்பிரதாயம்.//

      நீங்கள் வைர நகைகளைத் தொட வேண்டாம், வாங்கவும் வேண்டாம், அணியவும் வேண்டாம். நேர்த்திக்கடனாக அதற்கான அமெளண்டை மட்டும் அவங்க அக்கவுண்டில் கட்டினால் போதும் என்பார்கள்.

      அவங்க சாதாரண அதிரா அல்ல. அலம்பல், அலட்டல், அட்டகாச, அதிரடி அதிராவாக்கும். ஸ்வீட் சிக்ஸ்டீன் வேறு. பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே வாரிசான செல்லப்பேத்தி வேறு. போகப்போக அவங்களிடம் மாட்டினால் தான் அவங்களைப்பற்றி உங்களுக்கு ஓரளவு தெரியவரும்.

      - VGK

      -=-=-=-=-

      [அதிரடி அதிரா ... எங்கிருந்தாலும் உடனே ஓடியாங்கோ ! முனைவர் ஐயா அவர்களுக்கு ஏதோ உங்கள் தமிழ் வார்த்தையில் சந்தேகமாம் :) ]

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
    4. அவங்க பாய்க்கடியில புகுந்தா நான் கோலத்துக்கடியிலேயே புகுவேனே

      Delete
    5. ஹா..ஹா..ஹா... என்ன நடக்குதிங்கே?? நானில்லாத நேரம் எப்படி என்னைப் பற்றிக் கதைக்கலாம்ம்:) பிரித்தானிய காண்ட் கோர்ட்டிலிருந்து சங்கிலி வரும் காண்ட்டுக்கு:)) சொல்லிட்டேன்ன்ன்ன்:))...

      வழி விடுங்கோ.. வழிவிடுங்கோ... நான் இப்பவே தேம்ஸ்க்குப் போகோணும்:)...

      கோபு அண்ணன் பந்தி பந்தியாப் பதில் எழுதினாலும்.. அவர் கேட்ட கேள்விக்குப் பதில் கொடுக்காமல் ஓடுற மீனில நழுவுற மீனா நழுவுறதைப் பார்த்தால்ல் உங்களுக்கும் அதன் அர்த்தம் புரியவில்லைப்போலும்.. ஹா..ஹா...ஹா.... அது short ஆன.. ..சிறிய பதிவு என்றேனாக்கும்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா.. சூடா ஒரு இளநி பிளீஸ்ஸ்:).

      Delete
    6. எங்கூருக்கு வாங்கோ, சூடா என்ன, சோடா எளனியே கொடுத்துடறோம். என்ன்னமோ வைகோ, வைரம் அது இதுன்னு என்னை பயமுறுத்திட்டாரே. கடோசில அது சோடா எளனிதானா?

      Delete
  7. துபாய் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கிறது ஐயா... நன்றி...

    ReplyDelete
  8. அதிசயம்! ஆனால் உண்மை! அருமையான படங்களுடன் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. துபாய் பற்றிய தகவல்கள் அருமை ஐயா...

    ReplyDelete
  10. துபாயை சும்மா சுற்றிப் பார்த்துவிட்டு வராமல், நிறைய தகவல்களோடு வந்து , எங்களுக்கும் பகிர்ந்துக்கொண்டதற்கு வாழ்த்துக்களும், நன்றிகளும் ஐயா.

    ReplyDelete
  11. துபாய் பற்றிய செய்திகளும், படங்களும் அருமை.

    ReplyDelete
  12. துபாய் வரலாறு விளக்கி விட்டீர்கள் கோபு சார். அது மட்டுமா. பிரிட்டன் மகாரானியாரின் செல்லப் பேத்திப் பற்றிய விவரமும் எனக்கு இப்பொழுது தான் தெரிய வந்தது. தகவல்களுக்கு நன்றி கோபு சார்.

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா.... கோபு அண்ணன் இன்னொரு முக்கிய தகவலைச் சொல்ல மறந்திட்டார்ர்.. அதாவது “ஒபாமா அங்கிளின்”:) பேசனல் செக்கரட்டரி யாக வேலை பார்க்கிறேன்:)).

      Delete
    2. ஓஹோ.....அது சொல்ல மறந்துட்டாரே கோபு சார். லண்டனுக்கும் ,வாஷிங்டனுக்கும் பறந்து கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே.

      Delete
  13. துபாய் பற்றி அறியாத என் போன்றவர்களுக்கு நல்ல பயனுள்ள பதிவு. ஆரம்பகாலம் முதல் வணிகத்தில் சிறப்புற்று விளங்கும் துபாயின் வரலாறு அறிவதில் மிகவும் மகிழ்ச்சி. தொடருங்கள் தொடர்ந்து வருகிறேன் கோபு சார்.

    ReplyDelete
  14. அடடா! நான் எங்க போகப் போறேன் துபாய்க்கெல்லாம். நான் ஒருஎல்லை தாண்டாத வல்லியாக்கும். உங்க கட்டுரையைப் படிச்சு, புகைப்படங்களைப் பார்த்து, உங்க கூட பயணித்தது மாதிரி நினைச்சுக்கறேன்.

    துபாய் செய்திகளும், படங்களும் அருமை.

    இந்த அதிரா சொன்ன ”சோட்டான ஒரு பதிவு”

    இதை நான் “ஷோக்கான ஒரு பதிவு”ன்னு சொல்லறேன். ஒருவேளை அதிராவும் அப்படிதான் சொல்லி இருப்பாங்களோ?

    அவங்களுடைய இலங்கைத் தமிழ் ஒரு அருமைத் தமிழ். அதன் ரசிகை நான். அதிரா வாம்மா, வந்து சீக்கிரம் விளக்கம் சொல்லுங்க.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
    Replies
    1. ஜே மாமிதானே.. பெயரை மாத்திட்டீங்களோ??.. சோட்டான என்றால்ல்ல் குறுகிய பதிவு.. சோட் அண்ட் சுவீட் என்பினமெல்லோ:))

      Delete
  15. அருமையான விஷயங்கள்....கண்டிப்பாக துபாய்க்கு ஒருமுறை போயே ஆகணும்!

    ReplyDelete
  16. துபாய் செல்லும் வாய்ப்பு இந்த வருடத்தில்
    கிடைக்கும் போல் உள்ளதால்
    உங்கள் பதிவுகள் எனக்கு நிச்சயம்
    வழிகாட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. துபாய் குறித்த தகவல்களுக்கு நன்றி சார். உலகே வியந்து பார்க்கும் அளவுக்குத் தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  18. துபாய் வரலாறு அறிந்தேன்! நன்றி!

    ReplyDelete
  19. துபாய் பற்றி எதுவும் தெரியஅமலே போய் உஊர் சுற்றி பார்த்து வந்தேன்.
    உங்கள் பதிவு முலம் விசயங்கள் அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. viji December 28, 2014 at 1:20 PM

      வாங்கோ விஜி. வணக்கம்.

      //துபாய் பற்றி எதுவும் தெரியாமலே போய் ஊர் சுற்றி பார்த்து வந்தேன்.//

      ஆஹா, ஏற்கனவே போய்விட்டு வந்துட்டேளா, சந்தோஷம். இப்போ கடந்த 10 வருஷங்களில் அங்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

      //உங்கள் பதிவு முலம் விசயங்கள் அறிந்துகொண்டேன்.//

      மிக்க மகிழ்ச்சி, விஜி.

      பிரியமுள்ள கோபு

      Delete
  20. அதிரா உடான பேசும் உங்கள்அவரை பற்றிய வர்ணனையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. viji December 28, 2014 at 1:22 PM

      வாங்கோ, விஜி.

      //அதிரா உடன் பேசும் உங்களின் அவரை பற்றிய வர்ணனையும் ரசித்தேன்.//

      :))))) சந்தோஷம். மிக்க நன்றி விஜி. :)))))

      பிரியமுள்ள கோபு

      Delete
  21. துபாய் போகாமலே துபாயை கண்டு களித்து வருகிறோம். அதிரா அவர்களின் பின்னாட்டம் இருந்தாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.

    ReplyDelete
  22. துபாய சுத்து பாக்க வந்திட்டன். போயி பாத்த அல்லா எடமும் என்னயும் கூட்டிபோயிடோணும் ஆமா.

    ReplyDelete
  23. துபாய் பற்றிய தகவல்கள் படங்கள் எல்லாமே அழகோ அழகு. இப்பதான் அதிரா அவர்களின் பின்னூட்டம் உங்களான் பின்னூட்டம் பார்க்க கிடைத்தது. ஓ..ஓ.. ரொம்ப பெரிய இடமோ.. அப்ப நமக்கெதுக்கு ஊர் வம்ப்ஸ்ஸஸஸஸஸஸ

    ReplyDelete
  24. துபாய் குறித்த விபரங்களை விபரமாய்த் தந்துள்ளீர்கள். அருமை. கடைசிபடத்தில்தான் உண்மை பரிமாணம் புரிகிறது.

    ReplyDelete