About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, December 21, 2014

உலகைக் கவரும் உன்னதமான துபாய்-5

புர்ஜ் கலிபா

உலகிலேயே மிக உயரமான ’புர்ஜ் கலிபா’ என்ற கோபுரம், துபாயின் வளர்ச்சிக்கு ஓர் அடையாளமாகத் திகழ்கின்றது.  இந்த கோபுரத்தின் மொத்த உயரம் 829.8 மீட்டர். அதாவது 2766 அடி உயரம். துபாய்க்கு சுற்றுலா வருபவர்கள், இந்த அழகிய மிகப்பிரும்மாண்டமான கட்டடத்தை வியந்து பார்த்துச் செல்லத் தவறுவது இல்லை.  

இரவு நேரத் தோற்றம்

ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 20 லட்சம் பேர் இதைப்பார்த்துச் செல்கின்றனர். இந்த அதிசயக்கட்டடம் போல இன்னும் ஏராளமான அம்சங்கள் துபாயில் காணக்கிடக்கின்றன.

இவற்றில் குறிப்பிடத்தக்கவை துபாயின் ஷாப்பிங் மால்கள் என அழைக்கப்படும் வணிக வளாகங்கள். 70-க்கும் மேற்பட்ட இதுபோன்ற மிகப்பெரிய வணிக வளாகங்கள்  துபாயில் இருக்கின்றன.

மிகப்பெரிய வணிக வளாகம்:

இவற்றில் ’துபாய் மால்’ என்று அழைக்கப்படும் வணிக வளாகம், உலகிலேயே மிகப்பெரியது என்ற புகழைக்கொண்டு திகழ்கிறது. 

இங்குள்ள அழகிய நீரூற்று [Dubai Water Fountain Show] சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவரக்கூடியது. 500 அடி உயரத்திற்கு கலர் கலர் மின் விளக்குகளுடனும் வெவ்வேறு வடிவமைப்புகளுடனும் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைப் பார்ப்பது கொள்ளை அழகு.



 


 


 



இவை போன்ற அம்சங்களால் உலகிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நாடுகள் பட்டியலில், துபாய் முக்கிய இடம் பெற்றிருப்பதில் வியப்பு ஏதும் இல்லை.

அனைத்து நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தேவையான எல்லாத் தேவைகளும் நிரம்பப்பெற்று இருப்பதாலும், ஷாப்பிங் எனப்படும் சந்தைப்படுத்துவதில் உலகிலேயே உன்னத இடத்தைப்பிடித்து இருப்பதாலும் சுற்றுலாவிலும் வர்த்தகத்திலும் துபாய் தனித்துவம் பெற்று புகழோடு விளங்குகிறது.

விமானம் மூலம் வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கையில் துபாய் ஏழாவது இடத்தைப் பெற்றிருப்பதில் இருந்து இங்கே வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் அளவை அறிந்து கொள்ளலாம்.  இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

துபாயில் வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் எக்ஸ்போ 2020 என்ற உலக வர்த்தகக் கண்காட்சி , துபாயின் புகழ் மகுடத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இலக்குகளுள் ஒன்றாகத் திகழும் துபாயில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. 




இதிலுள்ள பெரும்பாலான தகவல்கள்
துபாயில் முதன்முதலாக 10.12.2014 அன்று வெளியிடப்பட்ட
’தினத்தந்தி’ தமிழ் செய்தித்தாளின் 
தொடக்கவிழா சிறப்பு மலரிலிருந்து
எடுத்துப் பகிரப்பட்டுள்ளன





 இந்தக்கட்டுரை மேலும் தொடரும் 



World's Tallest Building - Height 2766 feet
’At the Top - Burj Khalifa - Dubai’

   

26 comments:

  1. புர்ஜ் கலிபா கட்டிட உயரம் வியக்க வைக்கிறது. அங்கிருந்து எடுத்தப் புகைப்படம் தான் google plus இல் பகிர்ந்திருந்தீர்கள் என்று நினைக்கிறேன். துபாயை சுற்றிப் பார்த்த மாதிரி இருக்கிறது உங்கள் பதிவைப் புகைப்படங்களுடன் படிப்பதற்கு. நன்றி கோபு சார்.....

    ReplyDelete
  2. ஐ.....து பை.....ஸூப்பரு...

    ReplyDelete
  3. அருமையாக இருக்கிறது டுபாய் நாடு...

    ReplyDelete
  4. "எக்ஸ்போ 2020" கட்டாயம் பார்த்துடப் போறேன். உடம்போட இல்லைனா ஆவியா !

    ReplyDelete
  5. வியக்க வைக்கும் தகவல்கள்...!

    ReplyDelete
  6. படங்களும் செய்திகளும் அருமை ஐயா
    புர்ஜ் கலிபா கட்டிடத்தில் எடுக்கப் பட்ட திரைப்படம் ஒன்று
    மிஷன் இம்பாசிபிள் என்ற பெயரில் வந்துள்ளது
    பார்த்து வியந்திருக்கின்றேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  7. துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலிபாவும், நீருற்றும் என எல்லாமே கண்களைக் கவர்கின்றன.

    ReplyDelete
  8. அருமையான படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி. துபாயைக் குறித்த செய்திகள் அனைத்துமே புதியவை.

    ReplyDelete
  9. அருமையான தகவல்கள். Water Fountain show காணொளியில் பார்த்ததுண்டு.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  10. 2766 அடி உயரம். // நினைத்துப் பார்க்க முடியாத உயரம்..

    ReplyDelete
  11. பிரமிக்க வைக்கும் கட்டிடங்கள்.

    நேரே போனால் ‘பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை பார்த்தா மாதிரி’ வாயைப் பொளந்துண்டு பாப்பேனோ?

    ஒவ்வொண்ணா 'YOU TUBE’ல போய் பார்த்துக்கறேன் கோபு அண்ணா

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  12. கருத்துரைப் பெட்டியில், நண்பர் கில்லர்ஜி து பை என்கிறார்; சகோதரி அதிரா டுபாய் நாடு என்கிறார். நம்மூர் பத்திரிகைகள் துபாய் என்று எழுதுகின்றன. ஆங்கிலத்தில் DUBAI என்று எழுதுகிறார்கள். எது சரியான உச்சரிப்பு என்பதனை கேட்டுச் சொல்லுங்கள்.

    படங்களைப் பார்த்தவுடன், 1001 இரவு அராபியக் கதைகள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. "துபை" என்பதுதான் சரியான உச்சரிப்பு. ஆனால் எல்லோரும் துபாய் என்று சொல்லிப் பழகிவிட்டனர்.

      இன்னொன்று, ஐந்து எழுத்துக்கள் கொண்ட நகரங்கள் எப்போதும் flourish ஆகும் என்பது உலகில் பொது அம்சம்.

      Delete
  13. துபாயைப் பற்றி பலரும் பெருமையாக சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு விவரமான தகவல்களை இப்போதுதான் அறிகிறேன். அழகிய நீரூற்று அசரடிக்கிறது. எக்ஸ்போ 2020 க்கான முயற்சிகள் இப்போதே ஏற்பாடாகி எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது சிறப்பு. படங்களுடன் சுவையான தகவல் பகிர்வுக்கு நன்றி கோபு சார்.

    ReplyDelete
  14. தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  15. அருமையான தகவல்களும் படங்களும்.

    ReplyDelete
  16. 2766?! மலைப்பாக உள்ளது! படங்கள் நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன! நன்றி ஐயா!

    ReplyDelete
  17. படங்களும் பதிவும் எங்க எல்லாரையும் துபாய் கூட்டி சென்று விட்டது.

    ReplyDelete
  18. துபாயில் வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் எக்ஸ்போ 2020 என்ற உலக வர்த்தகக் கண்காட்சி , துபாயின் புகழ் மகுடத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இலக்குகளுள் ஒன்றாகத் திகழும் துபாய் பற்றிய பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 7:11 PM

    வாங்கோ, வணக்கம்.

    //துபாயில் வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் எக்ஸ்போ 2020 என்ற உலக வர்த்தகக் கண்காட்சி , துபாயின் புகழ் மகுடத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.//

    ஆமாம். இப்போதே அதற்கான மிக அதிகமான விளம்பரங்களும், முன் ஏற்பாடுகளும் அங்கு ஜரூராக நடைபெற்று வருகின்றன.

    //சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இலக்குகளுள் ஒன்றாகத் திகழும் துபாய் பற்றிய பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.//

    தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இதற்கு முன்பு என் ஒரேயொரு பதிவுக்கு மட்டும் Dated 08.11.2014 தாங்கள் பின்னூட்டம் போட விடுபட்டுப்போய் உள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். அதற்கான இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_8.html

    ReplyDelete
  20. 2020---ஆஆஆ இப்பவே டிக்கட்டு போட்டுபிடலாமா. அப்பாலகாட்டி கெடைக்காதுல.

    ReplyDelete
  21. புர்ஜ் கலிபா நீரீற்று படங்கள் பகிர்வுகள் நேரில் பார்க்கும் அநுபவம் கிடைக்கிறது.

    ReplyDelete
  22. //பாயில் வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் எக்ஸ்போ 2020 என்ற உலக வர்த்தகக் கண்காட்சி , துபாயின் புகழ் மகுடத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.// நான் எக்ஸ்போ 70தான் பாத்திருக்கேன்...வாத்யார் படத்துல. துபாய்மால்-ல மூக்குப்பொடி எங்கனா கண்ணுல தட்டுபட்டுச்சா வாத்யாரே???

    ReplyDelete
  23. அவ்வளவு பவர்ஃபுல் ஃபோகஸ் லைட்டா??? நீரூற்றிலும் டிஸைன்..

    ReplyDelete