About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, December 11, 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6



Dr. VGK அவர்களின் இந்த ஒப்பற்ற நூல் ஐந்து பெரிய பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. பாகம்-1 இல் 1.1 பிக்ஷாண்டார் கோயில், 1.2 திருவானைக் கோயில், 1.3 ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வந்தவர், 1.4 கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு வந்தவர், 1.5 மகாராஷ்ட்ரத்திலிருந்து தமிழ்நாடு வந்தவர், 1.6 கண்டர மாணிக்கத்து ராமபத்ர தீக்ஷிதர், 1.7 கோபாலனின் திருவிசைநல்லூர் பயணம், என ஏழு தலைப்புகளில் உப பிரிவுகளாக கொடுக்கப்பட்டுள்ளன. ‘பாட்டி சொன்ன பழங்கதைகள்’ என்ற தலைப்பில் கொசுறாக சில செய்திகளும் இறுதியில் தனியொரு பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  அது என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

பாகம்-1 உட்பிரிவு-1.1 இல், எடுத்தவுடன் பிக்ஷாண்டார் கோயில் கிராமம் பற்றி ஆரம்பித்துள்ளது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தி மகிழ்வித்து விட்டது. அதனாலேயே, சோம்பேறியான நான், மிகவும் சுறுசுறுப்புடன், ஒருவித எழுச்சியுடன் இந்த நூலை உடனடியாகப் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.  

01-05-1972 அன்று, முதன் முதலாக நான் பிக்ஷாண்டார் கோயில் கிராமத்திற்குச் செல்ல நேர்ந்தது. அன்று நான் சென்று வந்த புத்தம்புதிய அம்பாஸீடர் காரின் பதிவு எண்:  MDG 1034. அங்கு அதே நாளில்தான் முதன் முதலாக என்னவளுடன், எனக்கு பெண் பார்க்கும் படலம் இனிதே நடைபெற்று முடிந்தது. அப்போது எனக்கு வயது: 22+, அவளுக்கு வயது: 18+ 
      

அதிலிருந்து ஆரம்பித்து 14.11.1995 வரை பிக்ஷாண்டார்கோயில் கிராமத்துடனான எனது உறவு மிகவும் வலுவாகவே இருந்து வந்தது. இப்போதும் அங்கு போனால், என்னை வரவேற்று, ஊஞ்சலில் அமரச்செய்து, தாகத்திற்கு ஒரு சொம்பு தீர்த்தமாவது கொடுத்து உபசரிக்க, ஒருசில உறவுகள் இன்னும் பெயரளவில் ஒட்டிக்கொண்டுதான் உள்ளனர். 

அப்போது அந்தக்காலக்கட்டத்தில் இருந்த, மிக அமைதியான பிக்ஷாண்டார் கோயில் கிராமத்திற்கும், இன்றைய அதி நவீனமான அதே கிராமத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள வித்யாசங்கள் ஏராளம். அப்படியொரு கிராமம் அடியில் இருப்பதே சுத்தமாகத் தெரியாதபடிக்கு புதிய மேம்பாலம் போட்டுள்ளார்கள். அக்ரஹாரம் செல்லும் வழியில் இருபுறமும் பச்சைப்பசேல் என்று இருந்த நெல் வயல்கள், இப்போது கான்கிரீட் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள் என அடியோடு மாறிப்போய் உள்ளன. 

எனக்கு 03.07.1972 இல் திருமணம் நடைபெற்றதும், இதே பிக்ஷாண்டார்கோயில் கிராம அக்ரஹாரத்தில்தான். ஒரு வீட்டின் வாசலில், பெரிய பந்தல் போடப்பட்டு, மிகவும் எளிமையாக, சாஸ்திர சம்ப்ரதாயங்களின்படி, நான்கு நாட்கள் ஒளபாஸனத்துடன் எங்கள் திருமணம் இனிதே நடைபெற்றது.


    
 

மாலை மாற்றிடும் முதல் படத்தில் எங்கள் இருவருக்கும் இடையே, சிரித்த முகத்துடன் தோன்றுபவர், எனது மனைவியின் சொந்த தாய் மாமாவும், எனது சொந்த அத்தை பிள்ளையும், ஆன ‘ஆங்கரை பெரியவா’ என அன்புடன் அழைக்கப்பட்ட ஓர் மிகப்பெரிய மஹான் ஆவார். அவருக்கான அதிஷ்டானம், திருச்சி கரூர் மார்க்கத்தில் காவிரிக்கரையின் அருகே பழூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இவரைப்பற்றி 20 சிறுபகுதிகள் கொண்ட ஓர் தொடர் எனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது நினைவில் இருக்கலாம். பகுதி-1 க்கான இணைப்பு: http://gopu1949.blogspot.com/2012/02/blog-post_14.html   

Link to listen my Audio speech in you-tube about this Great Swamigal: https://youtu.be/OoMeuzmdC-k   



அதே பிக்ஷாண்டார்கோயில் அக்ரஹாரத்தில் என் மாமியார், மாமனார் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற தைர்யத்தில், 1980-ம் ஆண்டு வாக்கில், 16 அடி அகலம், 200 அடி நீளம் உள்ள, அக்ரஹார பழைய வீட்டை (மேற்கூரை முழுவதும் ஓடுகளால் வேய்ந்த மிகவும் பழமையான வீடு - வீட்டின் ஒருபக்க சுவர் மட்டுமே நமக்குச் சொந்தமாகும்), நான் வாழ்க்கையில் முதன்முதலாக, அசையாச் சொத்தாக வாங்கினேன். மாதம் ரூ. 125 க்கு அதனை வாடகைக்கு விட்டிருந்தேன். வீட்டில் நுழைந்து சுமார் நூறடி தாண்டியதும், அதன் கொல்லைப்புறம் ஆரம்பித்துவிடும். அங்கு வளர்ந்திருந்த 4-5 தென்னை மரங்களிலிருந்து வெகு ஸ்வீட் ஆன இளநீர் கிடைத்துக் கொண்டு இருந்தது. உண்மையிலேயே மிகவும் இனிமையான நாட்கள் அவை.

 

பிறகு என் மாமனார் காலமாகி, மாமியாரும் காலம் ஆவதற்குள், இனி, நான் வாங்கியிருந்த இந்த வீட்டுக்கு Care Taker and Co-ordinator ஆக யாரும் இருக்கப்போவது இல்லை என்ற அச்சத்தினால், 1994-ம் ஆண்டு அந்த வீட்டினை நான் விற்று விட்டேன். 

1980-இல், சுமார் 3200 சதுர அடிகள் கொண்ட அந்த வீட்டை, நான் வாங்கிய விலை ரூ. 35,000 மட்டுமே. 1994 இல் அந்த வீட்டை நான் விற்றவிலை ரூ. 70,000 மட்டுமே.  இன்றைக்கு அதன் தரை மதிப்பு (GROUND VALUE) மட்டுமே ரூ. 70,00,000 (எழுபது லக்ஷங்கள்) ஆகும்.  எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அது எனக்கு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். எல்லாம் நன்மைக்கே. இன்றும் பகவத் க்ருபையால் எனக்குக் குறையொன்றும் இல்லை என்பதை அறிய இதோ சில இணைப்புகள்: 






தர்ம சிந்தனை + பக்தி சிரத்தையுள்ள வெள்ளந்தியான மனிதர்கள் பலர் வாழ்ந்துவந்த மிக அருமையான கிராமம் பிக்ஷாண்டார்கோயில். அங்கு அந்த அக்ரஹாரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் பஜனைகளும், சிவன் கோயிலில் அன்றாட பூஜைகளும் மிகச் சிறப்பாக நடந்து வந்தன. 

திருச்சி, ஆல் இந்தியா ரேடியோவில், தனி ஆவர்த்தனமாக, காளிங்க நர்த்தன இசைச் சொற்பொழிவு நிகழ்த்திய, புகழ் பெற்ற பாலசுப்ரமணிய பாகவதர்; ஜானகிராம பாகவதர், நாராயண பாகவதர், எனது மாமனாரும் தனுர்மாத அதிகாலை உஞ்சவ்ருத்தி பஜனையை தலைமை ஏற்று செய்துவந்தவருமான, வைத்யனாத பாகவதர் போன்ற, பக்திமான்கள் வாழ்ந்து வந்த நல்ல கிராமம் அது. 

’ஈஸம்பலத்தி அம்மன்’ என்பது அங்குள்ள மிகவும் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த கிராம தேவதை ஆகும். கிராம தேவதைக்கான சித்திரைத் தேர் மற்றும் திருநாள் நேரங்களில் ஆண்டுதோறும் ஒருமுறை, இப்போதும் நாங்கள் அங்கு போய் வருவது உண்டு. ஓராண்டு இந்த அம்மனின் திருநாள் சமயம் இந்தக்கோயிலில் வேண்டிக்கொண்டு, பூப்பந்தல் போட்டுவிட்டு வந்தோம்.

பிக்ஷாண்டார்கோயில் அக்ரஹார சிவன் கோயில் குருக்களை ஒருநாள் நான் சந்தித்தபோது, ”இந்தக் கோயிலுக்கு அடியேன் ஏதேனும் பொருள் வாங்கித்தரலாமா, அவ்வாறாயின் எந்தப்பொருள் உபயோகமாக இருக்கும்?” என விஜாரித்தேன். கோயிலில் நித்யப்படி பூஜைக்கான மணி, மிகவும் தேய்ந்துவிட்டதாகவும், அதனை வாங்கிக்கொடுத்தால் நல்லது என்றும் என்னிடம் சொன்னார். உடனடியாக திருச்சி மங்கள் அண்ட் மங்கள் கடைக்குப்போய், நல்ல இனிய நாதம் ஒலிக்கும், பெரிய வெங்கல மணி ஒன்று வாங்கி, நித்யப்படி பூஜைக்கு அளிக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்தது. 

துர்க்கை அம்மன் இல்லாமல் இருந்த அந்த சிவன் கோயிலில் பிறகு (1990 என ஞாபகம்) ஓர் துர்க்கையை பிரதிஷ்டை செய்தார்கள். அப்போது அந்த ஊர் பெரியவர் ஸ்ரீ ஹாலாஸ்யம் ஐயர் அவர்கள் எனக்கு இட்ட அன்புக் கட்டளைப்படி, அடியேன் காஞ்சீபுரம் சென்று, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் பிரார்த்தித்து, அவர்கள் கையால் தொட்டு ஆசீர்வதித்துக்கொடுத்த ஓர் செம்பு யந்திரத் தகடு வாங்கிவந்து கொடுக்கும் பாக்யமும் எனக்குக் கிடைத்தது. அந்த யந்திரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து அதனைக் கீழே பதித்து அதன் மேல், அந்த சிவன் கோயிலில், துர்க்கையம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். 

பிக்ஷாண்டார் கோயில் அக்ரஹாரத்தில் என் மாமனார்-மாமியார் வீட்டுக்கு அருகே சற்றே நான்கு வீடுகள் முன்பாக, சுமார்  நூறு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ஸ்ரீ ஹாலாஸ்யம் ஐயர் + ஜெயலக்ஷ்மி மாமி, என்னால் என்றுமே மறக்க முடியாத, உத்தம தம்பதியினர் ஆகும். அதில் அந்த ஜெயலக்ஷ்மி மாமி (தன் 95 வயதுக்கு மேல் - மூக்குக் கண்ணாடி ஏதும் அணியாமலேயே) என் சிறுகதைத் தொகுப்பு நூல்களை ரசித்துப்படித்து போஸ்ட் கார்ட் மூலம், அவர்கள் கையால் விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தார்கள். For more details, please Refer my Post:  http://gopu1949.blogspot.com/2013/03/3.html

  

பிக்ஷாண்டார்கோயில், திருச்சி நகரத்தை ஒட்டியதோர் அழகிய கிராமம். திருச்சி No. 1 டோல்கேட்க்கு மிக அருகில் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. ’உத்தமர் கோயில் இரயில்வே ஸ்டேஷன்’ என்பது, பிக்ஷாண்டார் கோயில் கிராம அக்ரஹாரத்திற்கு வெகு அருகிலேயே உள்ளது. ஏராளமான நகரப் பேருந்து வசதிகளும் உள்ளன.  முக்கொம்பிலிருந்து மூன்றாகப் பிரியும் காவிரி ஆறு, அய்யன் வாய்க்கால் என்ற பெயரில் இந்த கிராமத்தை ஒட்டி ஓடுகிறது. சகல வசதிகளும் நிறைந்த மிகச் செழிப்பானதொரு கிராமம். இங்கிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பினால் 10-15 நிமிடங்களில், ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், திருச்சி டவுன் ஆகிய இடங்களை அடைந்து விடலாம். 

வைணவ 108 திவ்யதேச திருத்தலங்களில் ஒன்றும், மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் சந்நதிகள் உள்ள கோயில் என்ற பெருமையுமுடைய, 'உத்தமர்கோயில்' என்ற திவ்யதேசக் கோயில் இந்த பிக்ஷாண்டார்கோயில் கிராமத்தையொட்டி நடந்துசெல்லும் தூரத்தில் உள்ளது. 108 திவ்ய க்ஷேத்திரங்களில் முதல் ஐந்தான ஸ்ரீரங்கம், உறையூர், உத்தமர்கோயில், திருவெள்ளறை, அன்பில் ஆகிய ஐந்துமே திருச்சி அருகிலேயே உள்ளன என்பது தனிச்சிறப்பாகும். 




திருச்சியிலிருந்து, திருச்சி-சென்னை மார்க்கத்தில், இரயிலில் கிளம்பினால் ஸ்ரீரங்கம் தாண்டியதும், உத்தமர்கோயில் இரயில் நிலையம் உடனே வந்துவிடும். ஸ்ரீரங்கத்திற்கும் உத்தமர் கோயிலுக்கும் இடையே உள்ளது கொள்ளிடம் ஆற்றுப் பாலம் மட்டுமே.


 
  
இந்த உத்தமர்கோயில் இரயில் நிலையத்தில் இறங்கினால், ஐந்தே நிமிடங்களில், நடந்து பிக்ஷாண்டார்கோயில் அக்ரஹாரத்தை நாம் அடைந்து விடலாம்.

உத்தமர் கோயில் இரயில் நிலையம் தாண்டிய பிறகு, பிக்ஷாண்டார்கோயில் என்றே ஒரு இரயில் நிலையம் உள்ளது. பிக்ஷாண்டார்கோயில் அக்ரஹாரம் போக வேண்டியவர்கள் தப்பித்தவறி கூட அங்கு பிக்ஷாண்டார்கோயில் இரயில் நிலையம் போய் இறங்கிவிடக் கூடாது. அங்கிருந்து இங்கு திரும்பி அக்ரஹாரத்திற்கு வருவது மிகவும் கஷ்டமாகிவிடும். இரயில்வே ஸ்டேஷனுக்கு பெயர் வைப்பதில், அந்தக் காலத்திலேயே, இவ்வாறு ஒரு குழப்பம் ஏற்படுத்தியுள்ளார்கள். Uttamarkoil Railway Station is only the nearest one to Bikshandarkoil Village. Bikshandarkoil Railway Station is situated nearby another Village called Kooththoor. மிகவும் கூத்தாக உள்ளது அல்லவா !

Dr. VGK அவர்கள், இந்தத் தனது நூலில் பிக்ஷாண்டார்கோயிலை ஏன் ஆரம்பத்திலேயே, முதன் முதலாகக் கொண்டு வரவேண்டும் என்ற கேள்விக்கு உடனடியாக விடை கிடைத்தது எனக்கு.  Dr. VGK அவர்களின் மூதாதையர் ஆன மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி அவர்களைப் பற்றிய இவரின் பல்வேறு ஆராய்ச்சி + தேடல்களினால் மட்டுமே, இந்த அருமையான நூல் நமக்குக் கிடைத்துள்ளது. மேலும் அந்த மகான் பிறந்து வளர்ந்த  பிக்ஷாண்டார்கோயில் கிராமமும், இதனால் சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதாவது 17-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், பிக்ஷாண்டார்கோயில் கிராமத்தில், ஸ்ரீவத்ச கோத்ரத்தைச் சார்ந்த, யஜுர்வேத பண்டிதர் ஒருவர், ’வைத்தியநாத சாஸ்திரி’ என்ற பெயரில் வாழ்ந்துள்ளார்.  அடுத்த தலைமுறையினர்களால் அவர் இன்னும் நினைக்கப்படுவதற்குக் காரணம், அவரது புகழ்பெற்ற மகன் ‘மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி’ என்பவரே. இவர் 1673 வாக்கில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.  அப்போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ’கோபாலன்’ என்பது மட்டுமே.  

கோபாலனுக்கு ஐந்து வயதிலேயே அக்ஷராப்யாசம் நடந்து, தன் தந்தையிடமே தமிழ், சமஸ்கிருதம், எண் கணிதம் போன்றவற்றை வீட்டிலேயே கற்கிறார். அதன்பின் எட்டு வயதில் அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டு, பூணூல் அணிந்துகொண்டு, காயத்ரி மந்திரம் ஜெபித்து வந்துள்ளார்.  இவையெல்லாம் பிக்ஷாண்டார்கோயில் கிராமத்திலேயே நடந்துள்ளன. 

பிறகு திருவானைக்கோயிலில் உள்ள வேத பாடசாலைக்கு வேதம் கற்க, அங்கிருந்த மஹா பண்டிதரான அப்பு சாஸ்திரி என்பவரிடம் அனுப்பி வைக்கப்படுகிறார் கோபாலன். அக்ஷராப்யாசம், உபநயனம், வேதம் கற்றல் போன்ற பல்வேறு சடங்குகள் பற்றி Dr. VGK அவர்கள் தனது நூலில் மிகவும் விஸ்தாரமாகவும், தெளிவாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும்படியும், தனக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார்கள்.

-=-=-=-

நூலின் இரண்டாம் பகுதியில் 2.1 கோபாலனுக்குக் கிடைத்த ஆருயிர் நண்பன், 2.2 சிவராமன் சதாசிவ பிரம்மேந்திரர் ஆகிறார், 2.3 போதேந்திரரின் முடிவு, 2.4 கிணற்றில் வந்த கங்கை, 2.5 சுப்ரமணிய கர்ண அமிர்தம், 2.6 சதாசிவர் ஆச்ரமத்தை விட்டு நீங்கினார், 2.7 கோபாலனுக்கு குரு இட்ட பணிகள் ஆகியவை பற்றி விஸ்தாரமாக எழுதப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்கு கொசுறாக நூலாசிரியர் Dr. VGK அவர்கள் பல்வேறு மகான்களின் சமாதிகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்து ஆராய்ந்தது பற்றிய செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அவரின் கடின உழைப்புக்கு நாம் தலை வணங்கித்தான் ஆக வேண்டும்.

-=-=-=-

நூலின் மற்ற பகுதிகள் பற்றிய விஷயங்களை மேலும் நாம் தொடர்ந்து பேசுவோம். 



 



தொடரும் ...




என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


41 comments:

  1. தொடர்ந்து வருகிறேன்.    புத்தகம் படிக்கும்  ஆவல் பெருகுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். December 11, 2019 at 5:39 AM

      வாங்கோ மை டியர் ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’! வணக்கம்.

      //தொடர்ந்து வருகிறேன். புத்தகம் படிக்கும் ஆவல் பெருகுகிறது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  2. கடிதங்களில் அதை தான் வாங்கும் நாளைக் குறிக்கும் வழக்கம் என் அப்பாவுக்கும் உண்டு.    நீங்கள் அந்த மாமி எழுதிய போஸ்ட் கார்டில் ரிஸீவ்ட் என்றுகையெழுத்திட்டு தேதியும் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கவும் எனக்கு என் அப்பா ஞாபகம் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். December 11, 2019 at 5:41 AM

      //கடிதங்களில் அதை தான் வாங்கும் நாளைக் குறிக்கும் வழக்கம் என் அப்பாவுக்கும் உண்டு. நீங்கள் அந்த மாமி எழுதிய போஸ்ட் கார்டில் ரிஸீவ்ட் என்று கையெழுத்திட்டு தேதியும் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கவும் எனக்கு என் அப்பா ஞாபகம் வந்தது.//

      அனுபவம் வாய்ந்த அந்தக்கால மனிதர்களின் இவ்வாறான மிகச் சிறிய செயல்கள்கூட மிகவும் அர்த்தம் வாய்ந்ததாக இருக்கும். என்னிடமும் அதுபோன்ற வழக்கம் எப்படியோ இறையருளால் இயற்கையாகவே அமைந்துள்ளது.

      அதையும் கூர்ந்து கவனித்துச் சொல்லியுள்ள தங்களின் கழுகுப் பார்வைக்கு என் நன்றிகள்.

      Delete
  3. தங்களது இளமையில் எடுத்த போட்டோக்கள் அருமை. கடிதம் வந்தால் அதில் தாங்கள் எழுதும் குறிப்பு சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. Unknown December 11, 2019 at 8:14 AM

      வாங்கோ, வணக்கம். தாங்கள் யார் என்பது எனக்கு UNKNOWN ஆக உள்ளது. கமெண்ட்ஸ் முடியும் இடத்தில் ஒரு சின்ன கோடிட்டு தங்கள் பெயரையும் டைப் செய்து அனுப்பியிருக்கலாம்.

      //தங்களது இளமையில் எடுத்த போட்டோக்கள் அருமை. கடிதம் வந்தால் அதில் தாங்கள் எழுதும் குறிப்பு சிறப்பு.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      Delete
  4. விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டபடியால் வரத் தாமதம் ஆயிற்று. பதிவினை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University December 11, 2019 at 9:27 AM

      வாங்கோ முனைவர் அவர்களே, வணக்கம்.

      //விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டபடியால் வரத் தாமதம் ஆயிற்று.//

      அதனால் பரவாயில்லை. வாழ்த்துகள்.

      //பதிவினை ரசித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  5. நானும் பிச்சாண்டார் கோயில் அக்ரஹாரத்தில் உள்ள பண்ணையார் சொக்கலிங்கம் சாலையில் உள்ள ஜனனி கார்டன் அடுக்கு மாடி குடியிருப்புக்கு அடிக்கடி வருவதுண்டு. எனது தந்தை அங்கெ இருந்தார். தற்போது தங்கை, மற்றும் சில உறவினர்கள் அங்கு உள்ளனர். கிராமத்தை நினைவு படுத்த சந்தை மட்டும் வாரம் ஒருமுறை அங்கு கூடுகிறது. 

    ReplyDelete
    Replies
    1. jk22384 December 11, 2019 at 9:45 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நானும் பிச்சாண்டார் கோயில் அக்ரஹாரத்தில் உள்ள பண்ணையார் சொக்கலிங்கம் சாலையில் உள்ள ஜனனி கார்டன் அடுக்கு மாடி குடியிருப்புக்கு அடிக்கடி வருவதுண்டு. எனது தந்தை அங்கே இருந்தார். தற்போது தங்கை, மற்றும் சில உறவினர்கள் அங்கு உள்ளனர்.//

      அப்படியா? சந்தோஷம்.

      //கிராமத்தை நினைவு படுத்த சந்தை மட்டும் வாரம் ஒருமுறை அங்கு கூடுகிறது.//

      சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தாங்கள் சொல்லும் பண்ணையார் பங்களா மட்டுமே, அக்ரஹாரத்திற்குச் செல்லும் பாதையில் இடதுபுறமாக, பெருமாள் கோயிலுக்கு முன்பு, பிள்ளையார் கோயிலுக்கு எதிரே, தனித்து இருந்தது. சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வயல்களாக இருந்தன. இரவு 7 மணிக்கு மேல் கிராமத்தின் சாலையில் நடந்து செல்வதே கஷ்டம். மின் விளக்கு வசதிகள் இன்றி ஒரே இருட்டாக இருக்கும். தவளைகள் கத்திக்கொண்டு இருக்கும். பாம்புகள் நட மாட்டமும் உண்டு.

      1974-இல் மே மாதம் ஒருநாள் நான் திருச்சி டவுனிலிருந்து கிளம்பி திருச்சி-மணச்சநல்லூர் (Town Bus Route No. 27) பஸ்ஸில் ஏறி இரவு 8 மணிக்கு பிக்ஷாண்டார் கோயில் பஸ் நிறுத்தத்தில் அய்யன் வாய்க்காலை ஒட்டி, இறங்கி சாலையை கிராஸ் செய்து, அக்ரஹாரத்தை நோக்கி நடந்து செல்ல நினைத்தேன். கூட என் வழித் துணைக்கு அன்று யாருமே இல்லை. என்னிடம் டார்ச் லைட் கூட இல்லை. ஒரே கும்மிருட்டு. வெகு தூரத்தில் அக்ரஹாரத்திலிருந்து யாரோ ஒருவர் தலையில், வெள்ளை முண்டாசு கட்டியபடி, வாயில் சுருட்டு ஊதியபடி வருவதைக் கண்டேன். கொள்ளிவாய் பிசாசோ என பயந்து விட்டேன். அப்போது மணச்ச நல்லூரிலிருந்து திருச்சி செல்லும் மற்றொரு டவுன் பஸ் வருவதைக் கண்டேன். கையைக்காட்டி, பஸ்ஸை நிறுத்தி அதில் ஏறி, திருச்சி டவுனில் இருந்த என் வீட்டுக்கே திரும்பி வந்து விட்டேன். :) அது ஒரு காலம்.

      நீங்கள் சொல்லும் ஜனனி கார்டனெல்லாம் இப்போது சமீபத்தில் ஓர் 20-25 ஆண்டுகளுக்குள் வந்துள்ளவை.
      முன்பெல்லாம் வயல்களைத் தவிர, மேல அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம் என்ற இரண்டே இரண்டு அக்ரஹாரங்கள் மட்டுமே உண்டு.

      Delete
  6. இந்தப் பகுதி நன்றாக வந்துள்ளது.

    புத்தகப் பகுதி மற்றும் உங்கள் கதையையும் கலந்துகட்டி அடித்திருக்கிறீர்கள்.

    சில பெயர்களை முன்னமே உங்கள் இடுகையில் படித்துள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் December 11, 2019 at 11:12 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //இந்தப் பகுதி நன்றாக வந்துள்ளது.//

      அது நன்றாக வந்துதான் ஆகவேண்டும். என்னுடைய கடின உழைப்பினால் உருவாகியது அல்லவா ! :)

      //புத்தகப் பகுதி மற்றும் உங்கள் கதையையும் கலந்துகட்டி அடித்திருக்கிறீர்கள்.//

      அதுதான் என் வழக்கம். கொஞ்சம் ஒரு சின்ன GAP கிடைத்தால் போதும். அதில் நுழைந்து அலசி கலக்கிப்புடுவேன். நான் கொடுக்கும் எந்தப் பதிவும் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. ஹிஹிஹிஹிஹி ! :)

      //சில பெயர்களை முன்னமே உங்கள் இடுகையில் படித்துள்ளேன்//

      அப்படியா ..... மிகவும் சந்தோஷம் !

      Delete
  7. இளமையில் உலக்கை மாதிரி ஒல்லியாகவும், மனைவி சமையலை உண்டு களித்து தூண் போன்று ஆகிவிட்டீர்கள் என்று சொன்னால் அதில் உண்மை எத்தனை சதவிகிதம் கோபு சார்?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் December 11, 2019 at 11:18 AM

      //இளமையில் உலக்கை மாதிரி ஒல்லியாகவும், மனைவி சமையலை உண்டு களித்து தூண் போன்று ஆகிவிட்டீர்கள் என்று சொன்னால் அதில் உண்மை எத்தனை சதவிகிதம் கோபு சார்?//

      100% உண்மைதான்.

      எப்படியிருந்த நான் ..... இப்படி ஆகிவிட்டேன் ..... என நினைத்து அடிக்கடி கண்ணீர் சிந்தியபடி, நள்ளிரவில், சூடான பஜ்ஜி + பக்கோடா + குணுக்கு போன்றவற்றில் ஏதாவது ஒன்றோ இரண்டோ, செய்துகொடுக்கச் சொல்லி, அதனை வாங்கி சாப்பிட்டு, சற்றே ஆறுதல் அடைவதும் உண்டு. இதுபோல எது சாப்பிட்டும் என் எடையான 92 to 94 Kg யை என்னால் குறைக்கவே முடியவில்லை, ஸ்வாமீ. :(((((

      Delete
  8. உத்தமர் கோவிலுக்கு சில மாதங்கள் முன்பு வந்திருந்தேன். அங்கிருந்து பிஷாண்டார் கோஙில் நடக்கும் தூரமா?

    காஞ்சியிலும் ஒவ்வொரு பகுதி ஒவ்வொரு கிராம்மாக இருந்தது, இப்போ எல்லாமே ஒரே ஊராக வளர்ந்துள்ளது. இன்னும் கொஞ்ச வருடங்களிங் கிராமங்கள் இருந்த அடையாளமே தெரியாது

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் December 11, 2019 at 11:22 AM

      //உத்தமர் கோவிலுக்கு சில மாதங்கள் முன்பு வந்திருந்தேன்.//

      அப்படியா ! மிகவும் சந்தோஷம்.

      //அங்கிருந்து பிஷாண்டார்கோயில் நடக்கும் தூரமா?//

      ஆமாம். உத்தமர்கோயில் குருக்கள்கள் + பட்டாச்சாரியா போன்றோர் தங்கி வசிக்கும் இடமே, மிக அருகில், 5 நிமிட நடை தூரத்தில் உள்ள, பிக்ஷாண்டார்கோயில் கிராம அக்ரஹாரத்தில் மட்டுமே.

      Delete
    2. 1974 to 1976 காலக்கட்டத்தில், அங்கு உத்தமர் கோயிலில் வரதன் என்று ஒரு பட்டாச்சாரியார் இருந்தார். கோயிலில் மட்டும் தொலைபேசி வசதி இருந்த காலம் அது. அப்போது பிரஸவித்து, என் மனைவி தன் தாய் வீடு சென்றிருந்த சமயங்களில், நான் என் மனைவிக்கு ஏதேனும் அவசரச் செய்தி சொல்ல வேண்டுமானால், இந்த வரதன் என்பவரைத் தொடர்பு கொண்டு அவரிடம் சொல்லி அனுப்புவேன். அவர் பிக்ஷாண்டார் கோயில் அக்ரஹாரத்தில் உள்ள என் மாமனாரிடம் போய்ச் சொல்லி விடுவார். மிகச் சிறந்த தூதுவனாக இருந்து உதவினார். இன்று அவர் எங்கு இருக்கிறாரோ .. எப்படி இருக்கிறாரோ

      Delete
  9. வீடு வாங்குவது, அதன் மதிப்பு உயர்வது எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம்தான்.

    என் ராசியும் நிலம் வீடு வாங்கினால் கிணற்றில் போட்ட கல் போல் இருந்து, போட்ட காசு வந்தால் போதும் என்று ஆகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் December 11, 2019 at 11:25 AM


      //வீடு வாங்குவது, அதன் மதிப்பு உயர்வது எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம்தான். என் ராசியும் நிலம் வீடு வாங்கினால் கிணற்றில் போட்ட கல் போல் இருந்து, போட்ட காசு வந்தால் போதும் என்று ஆகிவிடும்.//

      நான் இது வரை இரண்டு வீடுகளையும், சுமார் பத்து வீட்டு மனைகளையும் வாங்கி விற்றுள்ளேன். அவற்றின் இன்றைய மதிப்பில், எனக்கு பலகோடி ரூபாய்கள் நஷ்டங்கள். என்ன செய்வது? போனால் போகட்டும். மிகவும் நிம்மதியே. எல்லாம் நன்மைக்கே.

      ‘எதைக் கொண்டுவந்தோம் ... எதைக் கொண்டு போகப் போகிறோம்’ என்ற மிக உயர்ந்ததோர் ஞான நிலையை எட்டியாச்சு, ஸ்வாமீ.

      Delete
  10. புத்தகத்திற்கான படங்கள் முன்னமே போட்ட படங்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  11. இனிய நினைவுகள்...

    தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, Mr DD Sir.

      Delete
  12. போஸ்ட் கார்டில் அவர்கள் கையால் விமர்சனம் - நீங்க புத்தகத்தோடே உங்க அட்ரஸ் பிரின்ட் பண்ணின கார்டையும் அனுப்பிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

    இது நல்ல மெதட். வாசகர் அனுப்பின விமர்சனத்தை பத்திரமா வச்சுக்கலாம்.

    ஆனா எனக்குக் கொடுத்த புத்தகத்தில் கார்ட் இல்லையே. வழக்கொழிந்து போயிடுச்சோ?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் December 11, 2019 at 12:20 PM

      //போஸ்ட் கார்டில் அவர்கள் கையால் விமர்சனம் - நீங்க புத்தகத்தோடே உங்க அட்ரஸ் பிரின்ட் பண்ணின கார்டையும் அனுப்பிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.//

      ஆமாம். அது என் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் (சுமார் 200 நபர்கள்) என் முதல் இரண்டு சிறுகதைத்தொகுப்பு நூல்களையும் அன்பளிப்பாக அளித்தபோது, SELF ADDRESS POST CARD களையும் ஒவ்வொருவருக்கும் இணைத்தே கொடுத்திருந்தேன்.

      //இது நல்ல மெதட். வாசகர் அனுப்பின விமர்சனத்தை பத்திரமா வச்சுக்கலாம்.//

      சுமார் 10% ஆசாமிகள் மட்டுமே, நான் கொடுத்த போஸ்ட் கார்ட் மூலம் எனக்கு விமர்சனம் அனுப்பியிருந்தார்கள். மீதி 90% ஆசாமிகள், அந்த கார்டில் இருந்த என் விலாசத்தின் மேல் ஒரு வெள்ளைப் பேப்பரை ஒட்டி, வேறு யாருக்காவது கடிதம் அனுப்ப பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன். :)

      //ஆனா எனக்குக் கொடுத்த புத்தகத்தில் கார்ட் இல்லையே. வழக்கொழிந்து போயிடுச்சோ?//

      உங்களுக்கு நான் புத்தகம் கொடுத்த அன்று போஸ்ட் கார்ட் என் கைவசம் இருந்திருக்காது, ஸ்வாமீ.

      http://gopu1949.blogspot.com/2018/11/blog-post.html
      தாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' !

      Delete
  13. பிக்ஷாண்டார்கோயில் கிராம அக்ரஹாரத்தில் உங்கள் திருமணம் ,அந்த இனிய நினைவுகளை சொல்லும் அழகிய படங்கள்.

    பழைய நினைவுகளுடன் புத்தகவிமர்சனமும் நன்றாக இருக்கிறது.
    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு December 11, 2019 at 3:06 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பிக்ஷாண்டார்கோயில் கிராம அக்ரஹாரத்தில் உங்கள் திருமணம், அந்த இனிய நினைவுகளை சொல்லும் அழகிய படங்கள்.//

      நாளுக்குநாள் வயதாகி, வழுவட்டையாகி, வரும்போது, அந்த இளம் வயது போட்டோக்கள் மட்டுமே, நம்மை இன்று மகிழ்விக்கின்றன.

      ’வழுவட்டை’ என்றால் என்ன? என்று அறிய விரும்புவோர் செல்ல வேண்டிய பதிவுக்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.com/2014/04/vgk-13.html

      தலைப்பு:
      ’வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !! (நகைச்சுவை கதை)

      //பழைய நினைவுகளுடன் புத்தகவிமர்சனமும் நன்றாக இருக்கிறது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
      தொடர்கிறேன்.

      Delete
  14. உங்கள் திருமண காலத்திற்கு அழைத்து சென்று விட்டீர்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. அ.முஹம்மது நிஜாமுத்தீன் December 11, 2019 at 11:06 PM

      வாங்கோ நண்பரே, வணக்கம்.

      //உங்கள் திருமண காலத்திற்கு அழைத்து சென்று விட்டீர்கள்!!!//

      ஆம் நண்பரே ! இல்லாதுபோனால் பதிவு DRY SUBJECT போல ஆகிவிடும், அல்லவா, அதனால்தான். :)

      Delete
  15. //கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.//

    ஆஹா, கோடி கோடியாய் இன்பம் தரும் கோலாகல வரிகள் இவை.

    //ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.//

    அடாடா ..... மனித மனங்களை அறிவுபூர்வமாக உணர்ந்து, மனப்பூர்வமாக எழுத்தில் வடித்து அசத்தியுள்ளீர்கள்.

    //அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.//

    இங்கு திருச்சியில் அடிக்கும் வெயிலுக்கு, எங்கள் இருவரையுமே ஜில்லென்று குளிர வைத்து அசத்திவிட்டீர்கள்.

    //இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள். ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.//

    நகைச்சுவைக்காக மட்டுமே தாங்கள் சொன்னது என்றாலும், எதையும் சொல்லுவோர் சொன்னால் அதில் ஒரு தனி ருசி இருக்கத்தான் செய்கிறது. அதனால் நாங்களும் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டியுள்ளது. :)

    //இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்...அடியேன்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆழமான, விரிவான, விசித்திரமான, வித்யாசமான, விலாவரியான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள், ஆசிகள் மற்றும் நன்றிகள். ALL THE BEST, Sir ! :))))

    ReplyDelete
  16. அழகான நினைவலைகள்

    ReplyDelete
    Replies
    1. ரிஷபன் December 13, 2019 at 10:57 AM

      //அழகான நினைவலைகள்//

      மிக்க நன்றி. எங்கள் திருமணம் நடைபெற்ற அந்தக் காலத்தில் (1972) நம் இந்திய திருநாட்டில் கலர் போட்டோக்களோ, வீடியோக்களோ கிடையாது.

      நினைவலைகளை அழகாக்க, நான் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு சிரமப்பட்டுள்ளேன். :)))))

      Delete
  17. தங்களின் திருமண நாள் புகைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. உத்தமர் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். பிக்ஷாண்டார் கோயிலுக்கு சென்றதில்லை. முனைவர் VGK அவர்களின் தீவிர ஆராய்ச்சிக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி December 15, 2019 at 12:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்களின் திருமண நாள் புகைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.//

      சந்தோஷம். அன்று மொத்தம் எடுக்கப்பட்டதே சுமார் 40 (Black & White) புகைப்படங்கள். அதில் தேறியவை சுமார் 20 மட்டுமே. ஒவ்வொன்றும் 2 அங்குலம் X 2 அங்குலம் மட்டுமே உள்ள சதுரமான, மங்கிய, மிகச் சிறிய போட்டோக்கள். சமீபத்தில் அவற்றையெல்லாம் தேடி எடுத்து, ஒரு புகைப்பட கலைஞரிடம் கொடுத்து, சற்றே பெரியதாக்கி, வர்ணம் கொடுத்தும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன். அதை இங்கே இப்போது உபயோகப்படுத்திக் கொண்டேன். :)

      //உத்தமர் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். பிக்ஷாண்டார் கோயிலுக்கு சென்றதில்லை.//

      ஓஹோ, அப்படியா! நல்லது. ஆம், திருமூர்த்தி ஸ்தலம் என்பதாலும், பெருமாளின் 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்று என்பதாலும் ‘உத்தமர்கோயிலுக்கு’ வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இப்போதெல்லாம் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும், அங்கு கூட்டம் தாங்காமல் உள்ளது.

      //முனைவர் VGK அவர்களின் தீவிர ஆராய்ச்சிக்கு பாராட்டுகள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  18. அன்புடையீர்,
    வணக்கம். தங்களது கட்டுரையைப் படித்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. தங்களது திருமணம் எங்களது அக்ராஹாரத்தில் நடந்தது இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. அப்பொழுது நான் SSLC படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய தந்தை காலமாகி 42 வருடங்கள் ஆகியும் அவரை நினைவில் வைத்து தங்களது கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Mahal Periyavar.  December 17, 2019 at 7:34 AM

      //அன்புடையீர், வணக்கம். // 

      வாங்கோ மாப்பிள்ளை, வணக்கம். ஆசீர்வாதங்கள்.

      //தங்களது கட்டுரையைப் படித்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. //

      மிக்க மகிழ்ச்சி.

      //தங்களது திருமணம் எங்களது அக்ராஹாரத்தில் நடந்தது இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. அப்பொழுது நான் SSLC படித்துக் கொண்டிருந்தேன்.//

      இருக்கலாம். அப்போது எனக்கு உங்களைத் தெரியாமல்தான் இருந்தது. பிறகு 11.05.1984 அன்று தாங்களே என் பெரிய அக்காவுக்கு மாப்பிள்ளையாக ஆகும் பாக்யம், எங்களுக்குக் கிடைத்தது. இதனால், இப்போது நாம் ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவினர் ஆகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹம்.

      //என்னுடைய தந்தை காலமாகி 42 வருடங்கள் ஆகியும் அவரை நினைவில் வைத்து தங்களது கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததற்கு மிக்க நன்றி.//

      எனக்குக் கல்யாணம் ஆன முதல் 2-3 வருடங்களுக்குள் (1972-1975) ஒரு தடவை, மார்கழி மாத பஜனை பூர்த்திக்கோ அல்லது அங்குள்ள பெருமாள் கோயிலில் நடைபெற்ற ராதா கல்யாண வைபவத்திற்கோ என் மாமனார் மற்றும் மைத்துனர் அழைப்பின் பேரில் நான் உங்கள் ஊரான பிக்ஷாண்டார்கோயிலுக்கு வந்திருந்தேன். அங்கு பெருமாள் கோயிலில் எல்லா பாகவதர்களும் சேர்ந்து அதிகாலை முதல் மதியம் வரை, பல்வேறு கீர்த்தனங்கள் பாடி. உற்சாகமாக பஜனை செய்தார்கள்.

      அதில் தங்கள் தந்தை நன்கு உரத்த குரலில் (மைக் ஏதும் இல்லாமலேயே) கணீரென்று பாடினார். எனக்கு இன்னும் அவரை நன்கு நினைவில் உள்ளது. அன்று அவர் பாடி மகிழ்வித்த கீர்த்தனங்கள் தனித்தன்மை வாய்ந்தவைகளாக இருந்தன. 

      பக்தி சிரத்தையுள்ள, இதுபோன்ற ஸத்சங்க பாகவதாள்களின் + நம் முன்னோர்களின் வளர்ப்பினால் மட்டுமே, நாம் இன்றுவரை ஏதோ செளகர்யமாக இருந்து வருகிறோம் என்று நினைக்கத்தோன்றுகிறது. :)  

      பிரியமுள்ள கோபு மாமா

      Delete
  19. அற்புதமாக இருக்கின்றது. அக்ரஹாரம் பற்றியும் உங்கள் திருமணம் பற்றியும் அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். திருமண படங்கள் உங்கள் நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவும்.

    ReplyDelete
    Replies
    1. kowsy December 19, 2019 at 5:31 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //அற்புதமாக இருக்கின்றது. அக்ரஹாரம் பற்றியும் உங்கள் திருமணம் பற்றியும் அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். திருமண படங்கள் உங்கள் நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவும்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம். :)

      Delete
  20. பிக்ஷாண்டார் கோவில் பற்றிய தங்கள் வர்ணனை அவ்வளவு இதம். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு உத்தமர்கோவில் போயிருக்கிறேன். அப்போது அவ்வூர் பற்றிய இதுபோன்ற அரிய தகவல்கள் தெரிந்திருக்கவில்லை. பிக்ஷாண்டார் கோவில் கிராமத்தோடு தொடர்புடைய தங்கள் நினைவலைகள் வெகு சுவாரசியம். தங்கள் திருமணப் புகைப்படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. கீதமஞ்சரி January 16, 2020 at 4:01 PM

      வாங்கோ மேடம். வணக்கம்.

      //பிக்ஷாண்டார் கோவில் பற்றிய தங்கள் வர்ணனை அவ்வளவு இதம்.//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு உத்தமர்கோவில் போயிருக்கிறேன். அப்போது அவ்வூர் பற்றிய இதுபோன்ற அரிய தகவல்கள் தெரிந்திருக்கவில்லை.

      அடடா, அப்படியா? ஆஹா ! மிகவும் சந்தோஷம்.

      //பிக்ஷாண்டார் கோவில் கிராமத்தோடு தொடர்புடைய தங்கள் நினைவலைகள் வெகு சுவாரசியம். தங்கள் திருமணப் புகைப்படங்கள் அழகு.//

      மிகவும் DRY SUBJECT ஆக உள்ளது, என சிலர் இந்தத் தொடர் பதிவுகளை முழுவதும் படிக்காமல் விட்டுவிடலாம் என எனக்குத் தோன்றியதால், அந்த கிராமம் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களையும், அபூர்வமான சில புகைப்படங்களையும் தேடிப் பிடித்து சிரமப் பட்டு, சேர்க்க நேர்ந்தது. :)

      தங்களின் அன்பான, அபூர்வ வருகைக்கும், அழகான என் மனதுக்கு இதமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      Delete