About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, November 17, 2011

அழகு நிலையம்


அழகு நிலையம்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

நீண்ட நாட்களாக வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு, ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளரான பதவி உயர்வுடன், சொந்த ஊருக்கே மாற்றலும் ஆகிவிட்டது.

சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கே வந்துள்ள அவருக்கு, ஊரில் ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்கள் அதிசயமாக இருந்தன. புதிய பலமாடிக்கட்டடங்கள், வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், போக்குவரத்து நெருக்கடிகள், புதிய பேருந்து நிலையங்கள், மக்கட்தொகைக்குப் போட்டிபோட்டு பெருகியுள்ள வாகனங்கள். மொத்தத்தில் அமைதியாகவும் சற்றே சோம்பேறித்தனமாகவும் இருந்த அந்த ஊர், ஆரவாரமாகவும் சுறுசுறுப்பாகவும் மாறியுள்ளது.

அவர் அந்தக்காலத்தில் வழக்கமாக சம்மர் க்ராப் அடித்துக்கொள்ளச் செல்லும் “அழகு நிலையம்” என்ற முடி திருத்தும் கடை மட்டும் அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் அதே மங்கிய போர்டுடன் ”அழகு நிலையம் - உரிமையாளர்: ‘பங்காரு” எனக் காட்சியளித்தது.











சுழலும் நாற்காலிகளில் நால்வர் அமர்ந்திருக்க, இவர் மட்டும் வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் ஒன்றாக, அங்கிருந்த சற்றே ஆடும் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து செய்தித்தாள்களைப் புரட்டிக்கொண்டிருந்தார்.


கட்டிங் + ஷேவிங் முடிந்த ஒருவர் நல்ல சுகமான தூக்கத்தில் இருந்தார். அவர் முகத்தில் தண்ணீரால் ஸ்ப்ரே செய்யப்பட்டு, டர்க்கி டவலால் முகம் ஒத்தப்பட்டு, பிறகு ஸ்நோவும் பவுடரும் அடிக்கப்பட்டு எழுப்பி விடப்பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்திருந்தார். 


[பார்பர் ஷாப்பில், நம்முடைய நல்ல சுகமான தூக்கத்தைக் கலைக்காமல் அந்த நாவிதர் ஏதாவது நம் தலையிலும் முகத்திலும் மாற்றி மாற்றி, சீப்பு, கத்தி, கத்தரியால் ஏதாவது கைவேலைகள் மணிக்கணக்காகச் செய்து கொண்டே இருந்தால் தேவலாமே;  அந்த சுகமே தனி தானே; அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாதே;  அதற்கு எவ்வளவு ஆயிரககணக்கில் பணம் கேட்டாலும் கூட கொடுத்து விடலாமே என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு. அந்த சுகம் பற்றி அனுபவித்தவர்களுக்கே புரியும்; அனைவருக்கும் தெரிய நியாயமில்லை;அதனால் கதைக்குத் திரும்புவோம்] 


தலைக்கு மேல் இருந்த தலையாய வேலை முடிந்து எழுந்து சென்றவர் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை கைத்துண்டால் நாலு தட்டு தட்டிவிட்டு, “சார் நீங்க வரலாம்” என்று அழைத்த அந்த முடிதிருத்தும் தொழிலாளியை உற்றுப் பார்த்த நமச்சிவாயத்திற்கு, அவரை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்துப் பழகிய முகம் போலத் தோன்றியது. 


”சார், கட்டிங்கா, ஷேவிங்கா அல்லது இரண்டுமா” என்று கேட்டவாறே நமச்சிவாயத்தைச் சுழல் நாற்காலியில் அமர வைத்து, மடித்து வைத்திருந்த ஒரு வெள்ளைத்துணியை உதறி,  பொன்னாடை போல அவருக்குப் போர்த்தி, கழுத்தில் சற்றே இடைவெளி கொடுத்து சொருகி விட்டான், அந்தத் தொழிலாளி.


”கட்டிங் + ஷேவிங் இரண்டுமே தான்” என்றார் நமச்சிவாயம்.


வெகு அழகாக முடி வெட்டப்பட்டு, மையாக அரைத்த பருப்புத்தொகையல் போல, பளிச்சென்று வழுவழுப்பாக ஷேவிங் செய்யப்பட்ட முகத்துடன், நமச்சிவாயம் ஒரு பத்து வயது குறைந்தது போலக் காணப்பட்டார். 


அங்கிருந்த கட்டண விபர அட்டைப்படி கட்டிங்+ஷேவிங் ஐம்பது ரூபாய் என்று போட்டிருந்தும், வடக்கே உள்ள ஊர்களைவிட இது மிகவும் மலிவு என்று எண்ணிய நமச்சிவாயம், பத்து ரூபாய் டிப்ஸ் சேர்த்து சலவை நோட்டுக்களாக ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களை அவனிடம் கொடுத்தார்.


“ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று ஒரு கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டவன், ”நீங்க இந்த ஊருக்குப் புதுசா, சார்?  உங்களை இதற்கு முன்பு நான் எங்கேயோ பார்த்தாற்போல உள்ளது, சார்” என்றான், அந்த முடி திருத்தும் தொழிலாளி.


”எனக்கும் உன்னைப் பார்த்ததும் அது போலத்தானப்பா தோன்றியது. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் தான் நான். முப்பது வருடங்களுக்கு முன்பு இதே ஊரில் தான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு சென்னைக்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு உத்யோக விஷயமாக வடக்கே பல ஊர்களில் பணியாற்றிவிட்டு , இப்போது திரும்ப இந்த ஊருக்கே, பணிமாற்றமாகி வந்துள்ளேன்” என்றார்.


’எந்த ஸ்கூலில் படித்தீர்கள் சார்” என்றதும் நமச்சிவாயம் தான் பதினோராவது வகுப்பு படித்த பள்ளியின் பெயரைச்சொல்லி, படித்து முடித்த வருஷத்தையும் சொன்னதும், “அப்போ உங்க பெயர் நமச்சிவாயம் தானே?” என்று கேட்டு தன் வலது முழங்கையைத் திருப்பிக்காட்டினான், அந்தத் தொழிலாளி.  ஆழமாகப் பல் பதிந்திருந்த தழும்பு ஒன்று அங்கு காணப்பட்டது. 


”டேய் அப்போ நீ ராஜப்பாவாடா?; ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிவிட்டாயேடா; என்று சொல்லி அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டு விட்டார் நமச்சிவாயம். 


பள்ளியில் படிக்கும் போது நமச்சிவாயத்தை விட ராஜப்பா அதிக மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்தவன். அவனுடைய கெயெழுத்து மணிமணியாக அழகாக இருக்கும். அழகாக ஓவியம் வரையும் திறமையும் அவனுக்கு உண்டு. விஞ்ஞான பாடத்தில் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் என்றால் மிக அழகாக வரைந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிடுவான். 


எந்த ஒரு வேலையையும் முழுமையாகத் தெளிவாகத் தப்பேதும் இல்லாமல், அழகாக நேர்த்தியாக விரைவாகச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவன். ஆசிரியர்கள் அனைவருக்குமே அவனை மிகவும் பிடிக்கும். நமச்சிவாயத்திற்கு அந்த நாட்களில் முதன் முதலாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்த குருநாதரும் இதே ராஜப்பா தான்.


ராஜப்பாவும் நமச்சிவாயமும் ஆறாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு வரை, ஒரே வகுப்பறையில் ஒன்றாகவே பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து படித்த ஆருயிர் நண்பர்கள்.


ஆறாவது படிக்கும் போது ஏதோ அவர்களுக்குள் ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையில், நமச்சிவாயம் ராஜப்பாவின் முழங்கைப்பக்கம்,தன் பல் பதியுமாறு நன்றாகக் கடித்து விட்டார்.


ஒருவருக்கொருவர் பழைய மலரும் நினைவுகளில் மூழ்கி, கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டு, பிறகு அந்த அழகு நிலையத்தில் அனைவரும் தங்களையே பார்க்கின்றனர் என்பதை அறிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.


”நீ என்னடா இந்தத் தொழிலுக்கு வந்து விட்டாய்? மேற்கொண்டு படித்து வேறு ஏதாவது நல்ல வேலைக்குப் போய் இருப்பாய் என்றல்லவா நினைத்தேன்” என்று பரிவுடன் கேட்டார் நமச்சிவாயம்.


ராஜப்பா ஸ்கூல் படிப்பு முடிந்ததும் தனக்கு ஏற்பட்ட, தன் தந்தையின் திடீர் மறைவையும், குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய நிர்பந்தங்களையும், மிகவும் கஷ்டமான பொருளாதார சூழ்நிலைகளையும் எடுத்துக்கூறினான்.


மேற்கொண்டு படிப்பைத்தொடர முடியாமல் போய் விட்டதையும் விளக்கினான். தானும் பலவிதமான வேலை வாய்ப்புக்களுக்கு முயற்சித்து, எதுவும் பலனின்றி, கடைசியில் தங்கள் பரம்பரையின் குலத்தொழிலாகிய இந்த முடி வெட்டும் தொழிலில் இறங்கியதில், அதுதான் இன்றுவரை ஏதோ தன் வயிற்றுப் பிழைப்புக்கு வழிகாட்டி வருவதாகச் சொன்னான்.


இப்போது நோய் வாய்ப்பட்டுள்ள இந்தக் கடையின் முதலாளி பங்காரு அவர்களும், இந்தக் கடையை யாரிடமாவது விற்றுவிட முடிவு செய்து, முயற்சித்து வருவதாகவும், அவ்வாறு அவர் ஒருவேளை செய்து விட்டால், தான் பார்த்துவரும் இந்தத் தொழிலுக்கும் ஆபத்து வரலாம் என்றும் அது தான் தனக்கு இப்போதுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது என்று, தன் வருத்தத்தை ராஜப்பா நமச்சிவாயத்திடம் பகிர்ந்து கொண்டான்.


அந்தக்கால பள்ளித் தோழன். பால்ய வயதில் தன் ஆருயிர் நண்பன். தனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்த குரு, இவ்வாறு தன் கஷ்ட நிலைமையை எடுத்துக்கூறியதும், நமச்சிவாயம் அவன் மேல் இரக்கம் கொண்டு ஏதாவது அவனுக்கு உதவி செய்திட விரும்பினார். 


மறுநாள் தன்னை தன் அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கூறி, தன் விசிடிங் கார்டு ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு, விடைபெற்றுச் சென்றார்.


மறுநாள் அந்த குளுகுளு ஏ.ஸீ. அறைக்குள் நுழைந்த ராஜப்பா பிரமித்துப்போய் விட்டான். 


ஜி. நமச்சிவாயம், சீஃப் மேனேஜர் என்று அழகிய பெயர் பலகை; சிம்மாசனம் போன்ற இருக்கை. படுத்துப் புரளலாம் போல ஒரு மிகப்பெரிய மேஜை; காலிங்பெல் பட்டனை அழுத்தினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்கும் எடுபிடி ஆட்கள்;  கால்வாசி மேஜைக்கு மேல் பல வண்ணங்களில், புத்தம் புது மாடல்களில் நிறைய தொலைபேசி இணைப்புகள்; அழகிய பூப்போட்ட வண்ணத்திரை சீலைகள்; கண்ணுக்கு ரம்யமான பல பூந்தொட்டிகள், கலர் கலராக மிதந்து வரும் அழகான மீன்களுடன் கூடிய மீன் தொட்டிகள்.  தன்னுடன் ஒரே வகுப்பில் படித்த தன் நண்பர் நமச்சிவாயத்தின் இன்றைய நிலைமையையும்,உயர்ந்த மரியாதைக்குரிய சமூக அந்தஸ்தையும் நினைத்து மிகவும் பெருமைப்பட்டான், ராஜப்பா.


தயங்கி நின்ற அவனை, தானே தன் சீட்டிலிருந்து எழுந்து போய், கைகுலுக்கி வரவேற்று, அங்கிருந்த கும்மென்ற பந்தாவான சோபாவில் அமரச்செய்து, தானும் அவனுடன் மிக நெருக்கமாக அமர்ந்துகொண்டு, இரண்டு ஆப்பிள் ஜூஸ் கொண்டுவருமாறு ஆர்டர் செய்தார், நமச்சிவாயம்.


நமச்சிவாயம் அளித்த வங்கிக்கடன் உதவி மூலம், அந்த அழகு நிலையம் ராஜாப்பாவுக்கே சொந்தமாக்கப்பட்டது. அந்தக்கடை மிகவும் நவீனப் படுத்தப்பட்டது. விஸ்தரிக்கப்பட்டது. குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டன. சுத்தம் மற்றும் சுகாதாரம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு சில தொழில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அந்தக்கடையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கலர் டீ.வி. பொருத்தப்பட்டது. தொலைபேசி இணைப்பும் வாங்கப்பட்டது. 


”முடி வெட்டிக்கொள்ள நினைப்போர் முன் பதிவு செய்து கொள்ளலாம் - தொடர்புக்கு தொலைபேசி எண்:  .............................. குறித்த நேரத்தில் காலதாமதமின்றி சேவை செய்து அனுப்பப்படும்”  என்று விளம்பரப் படுத்தப்பட்டது.


வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயத்தினால் கடையின் திறப்பு விழா நடைபெற்றது.


நமச்சிவாயத்தின் ஆருயிர் நண்பனான ராஜப்பா இப்போது அந்தக் கடையின் முழு உரிமையாளராக ஆக்கப்பட்டிருந்தார்.  நேர தாமதம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, சிறந்த சேவை அளிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள்  அந்தக்கடைக்கே சென்று தங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளித்து வந்தனர். 








“செய்யும் தொழிலே தெய்வம் - அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று நினைத்து, உண்மையாக உழைத்து வந்த ராஜப்பாவை, தெய்வம் கை விடவே இல்லை. நமச்சிவாயம் என்ற நண்பர் ரூபத்தில் வந்து கை தூக்கி விட்டுள்ளது.


நேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா!




-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-






இந்தச் சிறுக்தை ’வல்லமை’ மின் இதழில்
15.11.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது
Ref: http://www.vallamai.com/archives/10415/



52 comments:

  1. நல்ல சிறுகதை... நட்பின் அழகினைச் சொன்னது உங்கள் அழகு நிலையம் சிறுகதை.....

    ReplyDelete
  2. “செய்யும் தொழிலே தெய்வம் - அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று நினைத்து, உண்மையாக உழைத்து வந்த ராஜப்பாவை, தெய்வம் கை விடவே இல்லை. நமச்சிவாயம் என்ற நண்பர் ரூபத்தில் வந்து கை தூக்கி விட்டுள்ளது.

    குசேலன் குபேரன் நட்பின் வலிமை ..

    ஆழமாகப் பதிந்தது பல்மட்டுமல்ல.. அவர்களின் நட்பும்தான்..

    ReplyDelete
  3. அந்த சுகம் பற்றி அனுபவித்தவர்களுக்கே புரியும்; அனைவருக்கும் தெரிய நியாயமில்லை;/

    ஆமாம் ..ஆமாம்.. தலையில் ஒன்றுமிலாதவர்கள் கூட எதற்காக அழகுநிலையம் செல்கிறார்கள் என்று
    அழுத்தம் திருத்தமாக கதையில்
    அறிவிப்பு கொடுத்தது மிகவும்
    அழகு!

    ReplyDelete
  4. நேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா!

    அழகான அருமையான கதையின் நடைக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வழக்கம்போல் இதுவும்
    அருமை ஐயா!

    வல்லமை இதழில் வந்தமைக்கு
    கன் பாராட்டுக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. நல்ல நட்புக்கு உதாரணமாக கதை சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  8. அருமை நட்பின் பெருமை சொன்ன ரத்தின கதை, உழைப்பின் உயர்வையும் சொல்லி சென்றது அதனிலும் அருமை
    த ம 5

    ReplyDelete
  9. நல்ல நட்புக்கு பெருமை சேர்த்த கதை .மிகவும் அருமை

    ReplyDelete
  10. நட்பு ஒரு நல்ல உணர்வு.இதில் இரு நண்பர்களுக்கும் அந்த உணர்வில் மதிப்பு இருக்கிறது. நண்பன் உதவி செய்தால் கூட அதன் மதிப்பறிந்து உழைத்து செயல்பட்டு காமித்திருக்கிறார் ராஜப்பா.
    நல்லதொரு கதை.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  11. தொடர்ந்து சிறுகதைகளாகவே படிக்க போர் அடிக்கிறது சாரே... வேறு ஏதாவது புதுசா முயற்சி பண்ணுங்களேன்...

    ReplyDelete
  12. //Philosophy Prabhakaran said...
    தொடர்ந்து சிறுகதைகளாகவே படிக்க போர் அடிக்கிறது சாரே... வேறு ஏதாவது புதுசா முயற்சி பண்ணுங்களேன்...//

    31.12.2011 வரை மட்டும் தயவுசெய்து சகித்துக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு முதல், ஏதாவது புதுசா முயற்சி பண்ண முயற்சிக்கிறேன்.

    [உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட போர் அடிக்க ஆரம்பித்து விட்டது.
    ஆலோசனைக்கு நன்றிகள்.

    அன்புடன் vgk]

    ReplyDelete
  13. நல்ல சிறுகதை
    த.ம-7

    ReplyDelete
  14. நட்பின் ஆழத்தை அழகாக சொல்லி அசத்திட்டீங்க சார்!

    ReplyDelete
  15. மதிப்பு கூட்டப்படவும் நட்பின் மதிப்பறிந்த
    நண்பர்கள் கிடைக்கவேண்டியிருக்கிறது
    அதன் மதிப்பறிந்து பயன்படுத்திக்கொள்ள்ளும் நபரும்
    அவசியம் வேண்டியதாக இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  16. நட்பின் பெருமையை உணர்த்தும் நல்ல கதையாக இருந்தது.

    வல்லமையில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. நல்ல நட்பு.உழைப்பு உயர்வு தரும்&நல்ல கதை.

    ReplyDelete
  18. “செய்யும் தொழிலே தெய்வம் - அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று நினைத்து, உண்மையாக உழைத்து வந்த ராஜப்பாவை, தெய்வம் கை விடவே இல்லை. நமச்சிவாயம் என்ற நண்பர் ரூபத்தில் வந்து கை தூக்கி விட்டுள்ளது.


    நேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா!//

    உண்மை உண்மை .



    நட்பின் பெருமை, உழைப்பின் பெருமை சொல்லும் அருமையான கதை.

    ReplyDelete
  19. [பார்பர் ஷாப்பில், நம்முடைய நல்ல சுகமான தூக்கத்தைக் கலைக்காமல் அந்த நாவிதர் ஏதாவது நம் தலையிலும் முகத்திலும் மாற்றி மாற்றி, சீப்பு, கத்தி, கத்தரியால் ஏதாவது கைவேலைகள் மணிக்கணக்காகச் செய்து கொண்டே இருந்தால் தேவலாமே; அந்த சுகமே தனி தானே; அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாதே; அதற்கு எவ்வளவு ஆயிரககணக்கில் பணம் கேட்டாலும் கூட கொடுத்து விடலாமே என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு. அந்த சுகம் பற்றி அனுபவித்தவர்களுக்கே புரியும்; அனைவருக்கும் தெரிய நியாயமில்லை;அதனால் கதைக்குத் திரும்புவோம்]

    இதில் ஒரு வரிகூட விடாமல் நான் ஒப்புக்கொள்கிறேன். நான் நேரடியாகவே கேட்டிருக்கிறேன். ஒருநாள் வருமானத்தைத் தந்துவிடுகிறேன். என்னை இந்த நாற்காலியில் உட்காரவைதது கத்தியை வைத்துக்கொண்டு ஏதாவது செய். அப்படியே சுகமாய் இருக்கிறது என்று.

    கதை உண்மை நட்பை உரைக்கிறது. அருமை

    ReplyDelete
  20. செய்யும் தொழிலே தெய்வமென்று உழைத்து முன்னேற நினைப்பவர்களுக்கு தெய்வம் ஏதாவது ரூபத்தில் வந்து உதவும். இங்கு ராஜப்பாவுக்கு நமசிவாயம் என்னும் நண்பர் உருவில். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. நேற்றுதான் முடி வெட்டிக் கொண்டு வந்தேன்.. சலூன் அனுபவமே பல கதைகள் தரும்.
    வல்லமை பிரசுரத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. 'கத பறையும் போள்' தமிழில் 'குசேலனா'கி, இப்போது 'அழகு நிலையம்' போல் மாறி இருக்கிறது...! இது போன்று வாழ்வில் எல்லாம் சுலபமாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

    -பருப்பு ஆசிரியன்

    ReplyDelete
  23. வம்சி சிறுகதைப்போட்டியில் 45 கதை அனுப்பி வாலாற்று சாதனை படைத்தமைக்கும், போன வாரம் தமிழ்மணம் முதல் இடம் பிடித்தமைக்கும் நட்சத்திர பதிவர் ஆனதற்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  24. நட்பின் அருமையை அழகுற சொல்லியுள்ளீர்கள்.
    வல்லமை இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. நமச்சிவாயம் வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்து ராஜாப்பாவுக்கு உதவியது அவர் அன்றாட வேலையில் ரொம்ப சாதாரணமான ஒன்று. ஆனால் ராஜாப்பாவிற்கோ அது அசாதாரண உதவி; அவர் வாழ்க்கைப் பாட்டிற்கே வழிவகுத்தது மாதிரி ஆயிற்று. நமச்சிவாயம் மாதிரி எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

    பள்ளிகளில் பழைய மாணவர்களின் சந்திப்பு என்று ஏற்பாடு செய்வார்கள்;
    ஒன்றாகப் படித்த பழைய நட்புகள் வெவ்வேறு துறைகளில் வீசி எறியப் பட்டு பல வருடங்கள் கழித்து அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் சந்தித்து மகிழ்ச்சியில் திளைப்பதே தனி அனுபவம் தான். நமச்சிவாயம்- ராஜப்பா சந்திப்பு அப்படியான ஒரு சந்திப்பை எனக்கு நினைவுபடுத்தி யது. நல்ல கதை என்பதை விட நல்ல நோக்கமுள்ள கதையைச் சொன்னமைக்கு பாராட்டுகள், கோபு சார்!

    ReplyDelete
  26. //தன்னுடன் ஒரே வகுப்பில் படித்த தன் நண்பர் நமச்சிவாயத்தின் இன்றைய நிலைமையையும்,உயர்ந்த மரியாதைக்குரிய சமூக அந்தஸ்தையும் நினைத்து மிகவும் பெருமைப்பட்டான், ராஜப்பா//

    நேர்மையாக வாழ விரும்பும் ஏழை மக்களுக்கே உரித்தான எண்ணங்கள் .
    நல்ல விறு விறுப்பான கதை .

    ReplyDelete
  27. கேட்காமல் செய்யும் உதவியில் இருக்கிறது நட்பின் அழகு! அது உங்கள் கதையில் இருக்கிறது!

    ReplyDelete
  28. ஆஹா ஷேவ் செய்யப்பட்ட முகத்தை மையாக அரைத்த ப்ருப்புத்த் துவையலோடு ஒப்பிட்ட புதுமியே புதுமை. சிறப்பான் கதை'

    ReplyDelete
  29. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    //ஆஹா ஷேவ் செய்யப்பட்ட முகத்தை மையாக அரைத்த ப்ருப்புத்த் துவையலோடு ஒப்பிட்ட புதுமியே புதுமை. சிறப்பான் கதை'//

    Respected Madam,

    Welcome!

    Namaskarams to you!!

    I am very happy for your kind visit & valuable comments.

    You have correctly touched and pointed out the very smooth "Paruppuththokaiyal" which I compared for a shaved portion.

    With kind regards,

    Thank you very much Madam. vgk

    ReplyDelete
  30. மிகவும் சிறப்பான சிறுகதை!!!

    ReplyDelete
  31. அழகான கருத்துக்களுடன் அழகு நிலையம். நல்ல கதை. நன்றி சார்.

    ReplyDelete
  32. இது கதையா., நிஜமா கோபால் சார்..:)

    ReplyDelete
  33. நட்பைப்பற்றிய சிறுகதை அருமை!

    உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்!
    அவசியம் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
    www.muthusidharal.blogspot.com

    ReplyDelete
  34. இந்தச்சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்குரிய அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
  35. உங்கள் கதைகளின் postive vibes எம் போன்ற ரசிகர்களுக்கு விருந்து.

    ReplyDelete
  36. Shakthiprabha said...
    //உங்கள் கதைகளின் postive vibes எம் போன்ற ரசிகர்களுக்கு விருந்து.//

    அழகு நிலையத்திற்கு தங்களிடமிருந்து வந்துள்ள அழகான கருத்துரைக்கு மிக்க நன்றி. அன்புடன் vgk

    ReplyDelete
  37. பால்ய சிநேகத்தை மறக்காமல் நமச்சிவாயம் செய்த உதவி மிகவும் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  38. உண்மைதான் அய்யா, சிறு வயது நட்பு என்றும் பிரியாது. உதவி அதவிடுங்க. உண்மையான நட்பு இன்று எங்கே பார்க்க முடியுது. சிறு வயதில் தேரியாத சாதி சமயம் பணம் இவையெல்லாம் திருமணத்திற்கு பின் தான் நட்புக்கு தெரியவரும் போலும். கதையா இது? உண்மை நிகழ்வு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. mageswari balachandran May 6, 2015 at 10:50 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உண்மைதான் அய்யா, சிறு வயது நட்பு என்றும் பிரியாது. உதவி அதவிடுங்க. உண்மையான நட்பு இன்று எங்கே பார்க்க முடியுது. சிறு வயதில் தேரியாத சாதி சமயம் பணம் இவையெல்லாம் திருமணத்திற்கு பின் தான் நட்புக்கு தெரியவரும் போலும். கதையா இது? உண்மை நிகழ்வு. நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நியாயமான அலசலுக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  39. நட்பு என்பது மயில் இறகால் வருடிக் கொடுப்பது போல இதமாகவும் சுகமாகவுமு
    இருக்கணும். இவர்களின் நட்பு போல. அது இல்லாமல் நெருஞ்சி முள்ளாய் குத்துர மாதிரி இருந்தால் அந்த நட்பு தொடரக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்May 21, 2015 at 10:06 AM

      //நட்பு என்பது மயில் இறகால் வருடிக் கொடுப்பது போல
      இதமாகவும் சுகமாகவும் இருக்கணும்.//

      மிகச்சரியாக அழகாகச் சொல்லியிருக்கீங்க. சந்தோஷம்.
      தங்களின் இந்தப் பின்னூட்டமே மயில் இறகால் வருடிக்
      கொடுப்பது போல என் மனதுக்கு ஹிதமாகவும், சுகமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. :)

      // இவர்களின் நட்பு போல. //

      நம் நட்புபோல என்றும் சொல்லலாம்தானே ! :)

      //அது இல்லாமல் நெருஞ்சி முள்ளாய் குத்துற மாதிரி
      இருந்தால் அந்த நட்பு தொடரக் கூடாது.//

      கரெக்டூ. கரெக்டூ, கரெக்டூ. கரெக்டூ.

      சிலர் நம் அருகிலேயே இருந்து தினமும்
      நெருங்கிப்பழகியும் நெருஞ்சி முள்ளாய் அவ்வப்போது
      நம்மைக் குத்துவதும் உண்டு.

      வேறுசிலர் எங்கேயோ கண்காணாத இடத்தில் இருந்தும்
      தனது ஆறுதலான அன்பான வார்த்தைகளால் மயில் இறகு
      போல மனதை வருடி விடுவதும் உண்டு. :)

      உலகம் பலவிதம்.

      Delete
  40. //வெகு அழகாக முடி வெட்டப்பட்டு, மையாக அரைத்த பருப்புத்தொகையல் போல, பளிச்சென்று வழுவழுப்பாக ஷேவிங் செய்யப்பட்ட முகத்துடன், நமச்சிவாயம் ஒரு பத்து வயது குறைந்தது போலக் காணப்பட்டார். //

    கல, கலவென்று சிரித்தேன்.
    கண்ணில் நீர் வர சிரித்தேன்.

    இப்படி ஒரு உதாரணம் யாராவது சொல்லி இருக்க முடியுமா?

    எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ?

    நல்ல நட்புக்கு இலக்கணம்மாகத் திகழ்ந்து விட்டார் நமசிவாயம்.

    ReplyDelete
    Replies
    1. அதென்னாது பருப்பு தொவயல். ராஜப்பா நமச்சிவாயம் நல்ல நட்புக்கு உதாரண சனங்க.

      Delete
    2. mru October 14, 2015 at 1:01 PM

      //அதென்னாது பருப்பு தொவயல்.//

      இந்த உங்கள் கேள்விக்கு நம் அன்புள்ள ஜெயா மாமியே வந்து நீண்ட விளக்கம் தருவாங்க என நம்புகிறேன். ஊருக்குப்போய் இருக்காங்க. இப்போ வர நேரம்தான். பார்ப்போம். :)

      அன்புடன் குருஜி கோபு

      Delete
  41. mru

    பருப்புத் துகையல் தெரியாதா?
    அடடா! நல்ல குளிர் நாளிலயோ, மழை வெளியே சோ என்று கொட்டிக் கொண்டிருக்கும்போதோ

    பருப்புத் துவையல்
    வற்றல் குழம்பு
    சீரக, மிளகு ரசம்
    டாங்கர் பச்சடி,
    சுட்ட அப்பளம் (எங்க வீட்டுல பொரிச்ச அரிசி அப்பளம்தான் கேப்பாங்க)

    இதெல்லாம் சாப்பிட்டதே இல்லையா?

    துவரம் பருப்பு, ரெண்டு மிளகாய் வற்றல், ஒரு டீஸ்பூன் மிளகு மூன்றையும் கொஞ்சூண்டு எண்ணை விட்டு வறுத்து உப்பு சேர்த்து மையா, வெண்ணையா, அரைச்சா அதுதான் பருப்புத் துகையல். தேங்கா எல்லாம் சேர்த்தா பருப்புத் துகையலோட ஒரிஜினல் டேஸ்ட் போயிடும். அதனால நோ தேங்கா.

    அவ்வளவு சூப்பரா வழு வழுன்னு ஷேவிங் செய்திருந்தாராம் நமச்சிவாயம். என்ன ஒரு உதாரணம் பாருங்க. இதெல்லாம் இவருக்கு எப்படி தான் தோணறதோ தெரியல.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya October 16, 2015 at 1:54 PM to mru

      வாங்கோ, வணக்கம்மா. மிக்க நன்றி ஜெ. :)

      தங்களின் பருப்புத் துகையல் செய்முறை பக்குவ விளக்கமும் + அதனுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய Combination Items விபரங்களும் + சாப்பிட வேண்டிய Season & Reason ஆகிய அனைத்துமே சூப்பரோ Superb !

      இவற்றைப்படித்த எனக்கே இப்போது நாக்கில் ஜலம் ஊற வைத்து விட்டீர்கள் ஜெயா :)

      //அவ்வளவு சூப்பரா வழு வழுன்னு ஷேவிங் செய்திருந்தாராம் நமச்சிவாயம். என்ன ஒரு உதாரணம் பாருங்க. இதெல்லாம் இவருக்கு எப்படி தான் தோணறதோ தெரியல.//

      :)))))))))))))))))))))))))))))))) !!!!!!!!!!!!!!!!!!!!!!

      அது தான் உங்க கோபு அண்ணா ஸ்டைலாக்கும். :)

      {mru = Miss. Mehrun Niza ..... College Student}

      Delete
  42. ஜயந்தி ஆண்டி பருப்பு தொவயல் குறிப்புக்கு நன்றிங்க. துவரம் பருப்புனாகாட்டி இந்த சாம்பாருலலா போடுவமே அதா?( கேலி பண்ணிபிடாதிங்க) நா இப்ப ரண்டு மாசமா தா அம்மி கிட்டால கேட்டு கேட்டு சமயலு கத்துகிடுதேன். எங்கூட்ல ஒடச்ச பருப்பு வாங்கறதில்ல. முளு பயறு அதாது கொள்ளு பயிறு தட்டபயிறு மொச்சபயிறு பச்ச பயிறு உளுந்து பயிறுன்னுபிட்டு முளு பயிறு தானியமாதா வாங்கிகிடுவம் அதல்லாதா வெல மலிவா கெடைக்கும்ல. போன மாச ரேஷனுல இந்த தொவரம் பருப்பு ஒரு கிலோ தந்துபிட்டாக. எங்கூட்ல மாசம் ஒருக்கா தூ சாம்பாரெல்லா செய்யும். இந்த பருப்பில தொவயல் செய்யலாம்னதும் ஒடனே கேட்டுபிட்டேன். ஒடனே ( ஓடி) வந்து சொல்லினிங்க. நீங்க சொல்லின படிக்காப்லியே தொவயலு செஞ்சி ட்டேன். சூப்பரா இருந்திச்சி. பொறத்தால இன்னமும் வத்த கொளம்பு சீரா ரசம் டாங்கரு பச்சடின்னுபிட்டு சொல்லினிங்க. அதுகளயும் குறிப்பு தாரீகளா (தரமிடியுமா)

    புதுசா கத்துகிடரதால புது ஐட்டம்னதும் அது எப்பூடி பண்ணறதுன்னுபிட்டு வெளங்கிகிட ஆச
    குருஜியோட கமண்டு பாக்சில இதெல்லா சொல்லினா அவங்களுக்கு டிஸ்டர்ப்பு ஆகுமில்ல. தனியா என் மெயிலுல சொல்லினாபரவால்ல லா. என மெயிலு ஐ டி குருஜி கட்டன இருக்குது ( குருஜி என் மெயிலு ஜெயந்தி ஆண்டிகிட்டால கொடுத்துபிடுரீங்களா)

    ஆண்டி நானு எளுதுரது சரியா வெளங்கிகிட ஏலுதா. உங்க அல்லார போல நல்லா தமிளு எளுத வரதில்ல ஸாரி

    ReplyDelete
  43. பருப்பு துவையல் போல மொழு மொழுனு ஷேவ் பண்ணி இருப்பதைப்படித்ததும் எனன்னையறியாமல் சிரிப்பு வந்தது. பால்ய சிநேகிதர்களின் உரையாடல் யதார்த்தம்

    ReplyDelete
  44. நேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா/// ஆம் அதுவும் அழகோ அழகு நிலையம்தான்...!

    ReplyDelete
  45. WHATS APP COMMENTS RECEIVED ON 08.10.2018 FROM Mrs. VIJI KRISHNAN, RAIL NAGAR, TIRUCHI

    -=-=-=-

    'Alagu nilayam' story is an example for true friendship.

    -=-=-=-

    Thanks a Lot விஜி !

    அன்புடன் வீ..ஜீ !!

    Ours is also an example for True Friendship only. Is it not ? :)

    珞

    ReplyDelete