என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 18 அக்டோபர், 2014

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]



முக்கிய அறிவிப்பு 

இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான 

கடைசி கதையாக இருப்பதால்
இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து

நேற்று வெள்ளிக்கிழமை முதல்
 வரும் திங்கட்கிழமை வரை 
தினம் ஒரு பகுதியாக
வெளியிடப்பட்டு வருகிறது. 

நான்கு பகுதிகளையும் 
பொறுமையாகப் படித்து
ஒரே விமர்சனமாக 
எழுதி அனுப்பி வைத்தால் போதுமானது. 


விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

இறுதி நாள்: 26.10.2014 
ஞாயிற்றுக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 40

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:




மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதைத் தொடர் 

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

பகுதி-1 க்கான இணைப்பு:  

http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html

பகுதி-2

ட்டென துள்ளி எழுந்தான் மனோ, தன் படுக்கையிலிருந்து


இதுவரை தான் கண்டதெல்லாம் வெறும் கனவு தான் என்பதை அறிந்து, சிரித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்கி முகம் கழுவச்சென்றான்.


மாடியிலிருந்து கீழ் வீட்டு வாசலை நோக்கினான். அனு வழக்கம் போல கோலம் போட அமர்ந்திருப்பதை அறிந்து கொண்டான்.  




இந்த பாவாடை சட்டை தாவணியுடன் கோலமிட, வெளியே தெருவில் அமர்ந்திருக்கும் அனு, சற்று முன்பு புடவையுடன், நிறை மாத கர்ப்பிணியாய், என் மனைவியாய், என்னுடன் எப்படி என் கைப்பிடிக்குள் சிக்கினாள். நினைக்க நினைக்க அவனுக்கு ஒரே சிரிப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. 


சதா சர்வ காலமும் நம் மனதிலும், நினைவிலும், அன்பிலும், ஆசையிலும் இருப்பவர்கள், கனவிலும் வரக்கூடும் என்று நினைத்து தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.


அனு வீட்டு மாடிப்போர்ஷனில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தான் மன நல மருத்துவ மனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ.


உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. 


வெள்ளைப்பணம், கறுப்புப்பணம் என பணத்திற்காக பேயாக அலையும் மனிதர்கள், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர், சாமி பெயரைச் சொல்லி கோயில் பணத்தைக் கொள்ளையடிப்போர், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போர், கஞ்சா கடத்துவோர், எதைப்பற்றியும் கவலையின்றி சதாசர்வ காலமும் குடி போதையில் மிதப்போர், பொடி, புகையிலை, வெற்றிலை பாக்கு, பீடி சிகரெட் சுருட்டுப் பிரியர்கள், காதல் போதையில் காமக்களியாட்டம் போடுவோர், காதல் தோல்வியால் மனம் உடைந்தோர்; 


கம்ப்யூட்டர், லாப்டாப், சாட்டிங், கார், பைக், செல்போன், சினிமா, டி.வி, டி.வி.சீரியல்கள், புடவைகள், நகைகள், புத்தகம், அரசியல், லாட்டரி, சூதாட்டம், சீட்டாட்டம், ஷேர்மார்க்கெட், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என சிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோர்; 


கற்பனை உலகில் மிதப்போர், திடீரென இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளைச் சந்திப்போர், நெருங்கிய சொந்தங்களின் மரணங்களால் அன்பை இழப்போர், விபத்துகள், கொலை, கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் நஷ்டங்களால் பாதிக்கப்பட்டோர் என பலவகை விசித்திர நோயாளிகளை தினமும் பார்த்துப் பழகிவிட்ட மனோவுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும். 


கீழ் வீட்டுப்பெண் அனுராதாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அவனுக்குத் தோன்றியது, இங்கே அவன் புதிதாகக் குடிவந்த சமயம். அவள் ஒரு கோலப்பைத்தியம் என்று ஆரம்பத்தில் நினைத்தவன் தான், மனோ.


அதிகாலையில் எழுந்து, வீட்டு வாசலைப்பெருக்கி சாணத்துடன் கூடிய நீர் தெளித்து, கோலம் போடக் குனிந்தால் என்றால், சுமார் ஒரு மணி நேரம் குத்துக்காலிட்டு, இங்கும் அங்கும் தத்தித்தாவி மிகவும் அழகாகக் கோலம் போடுபவள்.   


விடியற்காலம் எழுந்து வாக்கிங் போய் விட்டுத் திரும்பும் மனோவை அன்றைய தினம் அனுவால் போடப்பட்ட அழகிய புத்தம் புதிய மிகப்பெரிய கோலம் வரவேற்று, அவனை மிகவும் வியப்படையச் செய்யும்.  


நாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கி விட்டன.  


”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.


கோலத்தைச் சற்று நேரம் நின்று ரசித்துப்பார்த்து விட்டு, மாடி ஏறிப்போகும் மனோவை, சில நேரங்களில் அனுவும் வீட்டுக்குள்ளிருந்து கதவிடுக்கு வழியாகவோ, ஜன்னல் இடுக்கு வழியாகவோ பார்ப்பதுண்டு.


எந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்!


மார்கழி மாதம் நெருங்கி விட்டது. பனி அதிகமாகக் கொட்டுகிறது. விடியற்காலம் வாக்கிங் போவதையே மனோ அடியோடு நிறுத்தி விட்டான். காரணம் கொட்டும் பனி மட்டுமல்ல. 



வாசலில் கோலம் போடும் அனுவை தன் அருகே அழைத்து ரசித்திட நேற்று அவன் புத்தம் புதியதாக வாங்கி வந்திருக்கும் பவர்ஃபுல் பைனாக்குலரும் தான்.


தினமும் அதிகாலை மனோதத்துவ டாக்டரின் மனதிற்கும், கண்களுக்கும் விருந்தளித்தது அந்த பைனாக்குலர். பருவமங்கையான அனுவின் அழகை அணுஅணுவாக அள்ளிப்பருகி ரசிக்க முடிந்தது, அவனின் மாடி அறையின் ஜன்னலிலிருந்தபடியே. 



என்னதான் மனோ தத்துவப் படிப்பு படித்த டாக்டர் என்றாலும், மனோவுக்கும் இளம் வயதல்லவா .... அவனுக்குள்ளும் ஓர் மனம் உண்டல்லவா .... அதிலும் ஓர் காதல் உணர்வு துளிர்க்குமல்லவா .... !


பாவாடை, சட்டை, தாவணியில், காதில் தொங்கும் ஜிமிக்கிகளுடன், காலில் கொஞ்சும் கொலுசுகளுடன், வாழைத்தண்டு போன்ற வழுவழுப்பான கைகளில் அணிந்த கண்ணாடி வளையல்களின் ஒலிகளுடன், தலை நிறைய பூவுடன், அன்ன பக்ஷியொன்று தத்தித்தத்தி தாவித்தாவி வட்டமிட்டு கோலம் வரையும் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமென்று தோன்றியது மனோவுக்கு. 


அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் தன் பைனாக்குலரால் மிகத்துல்லியமாக ரசித்து மகிழ்ந்தான் மனோ. 


அந்த மிகச்சிறிய அழகிய பட்டாம்பூச்சிக்கு அனுவை நெருங்கி முத்தமிடக் கிடைத்துள்ள வாய்ப்பு தனக்குக் கிடைக்க வில்லையே என்று, அதன் மேல் பொறாமை ஏற்பட்டது, மனோவுக்கு.  




தொடரும்



    



/ இந்தக்கதையின் தொடர்ச்சி 
நாளை வெளியாகும் /

காணத்தவறாதீர்கள் !

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !!

இதுவே இந்தப்போட்டியில்
கலந்துகொள்ளத் தங்களுக்கான 
இறுதி வாய்ப்பு !!!

     



தகவலுக்காக


 

 


VGK-38 - மலரே ..... குறிஞ்சி மலரே !
விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள்
25.10.2014 சனிக்கிழமை
முதல் வெளியிடப்படும்.

21.10.2014 முதல் 24.10.2014 வரை
தினமும் ஒரு நேயர் கடிதம் வீதம் வெளியிடப்படும்


 

என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்




21 கருத்துகள்:

  1. வார்த்தைக்கோலமிட்ட
    வண்ணக்கவிதையாய் அருமையான கதை..!

    பதிலளிநீக்கு
  2. மனநோயளிகள் பட்டியல் , ஆசைகளின் பட்டியல் படிக்கும் போது நினைவுக்கு வருவது :- விசு படம் என்று நினைக்கிறேன் பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் சொல்வது எல்லோரும் ஒரு வித பைத்தியங்களே! ஒரு சிலருக்கு வெளியில் தெரியுது சிலருக்கு தெரிவது இல்லை என்பது தான்.
    மனோ தத்துவ டாகடர் மனோ பெயர் பொருத்தம் அற்புதம்.
    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  3. சட்டுனு கதை ட்ராக் மாறி விட்டதே! :)))))

    பதிலளிநீக்கு
  4. தொடர்கிறேன்! கனவு நினைவானதா பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  5. ஊடலோ என்று நினைத்தால் காதலே இப்போதுதானா? காதலிலும்
    உங்கள் கதை இலக்கணம், எப்படி, என்ன பார்க்கலாம்.? அன்புடன்

    பதிலளிநீக்கு
  6. அடடா... நேற்றைய கதை சம்பவம் கற்பனையா??!!!

    சரிதான்!

    மனோவின் மனக் கனவுகள், நிஜமாகுமா?

    நாளை வந்து படிப்போம், இறை நாட்டமிருந்தால்...!

    பதிலளிநீக்கு

  7. //VGK-38 - மலரே ..... குறிஞ்சி மலரே !
    விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள்
    25.10.2014 சனிக்கிழமை
    முதல் வெளியிடப்படும்.//

    நேயர் கடிதம் வெளியீட்டைக் கவனித்தேன். இதைக் கவனிக்கலை. :)))) அதைத் தாண்டிப் படிச்சிருக்கேன். :))))

    பதிலளிநீக்கு
  8. பதிவே போட்டால் வெளியாகறதுக்குப் பிரச்னையா இருக்கு! பின்னூட்டத்துக்குக் கேட்கணுமா! :))))) இங்கே இணையமும் சொதப்பல். மின்சாரமும் போயிட்டுப் போயிட்டு வருது. இப்போ இரண்டு நாட்களாக மின்சாரம் இருக்கு! தீபாவளி காரணமா அல்லது வேறு காரணமா, அறியேன்! :)))

    பதிலளிநீக்கு
  9. இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-40.html

    போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    VGK

    பதிலளிநீக்கு
  10. இன்னும் காத்திருக்கணுமா..சரி சரி வேற வழி.

    பதிலளிநீக்கு
  11. அச்சச்சோ அம்பூட்டுதானா. அடுத்த பதிவுக்கு காத்திருக்கோணுமோ.

    பதிலளிநீக்கு
  12. எல்லாம் கனவா. நல்ல திருப்பம்தான். அடுத்ததாக என்ன டவிஸ்ட் வச்சிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  13. தொடர்கதைபோல ஒரு ஆர்வத்தைத் தூண்டும்....தொடரும்.

    பதிலளிநீக்கு
  14. மனோ காணும் கனவு பிராதிதம் (ஆசைப்பட்டவற்றைக் காணுதல்) எனும் வகையோ என எண்ணத்தோன்றுகிறது.
    குடியிருக்கும் வீட்டில் உள்ள அனு, அவனின் மனம் கவர்ந்த பெண்ணாகி, மார்கழிப் பனியும் அவனின் நடைப்பயிற்சிக்குத் தடை போட, எண்ணத்தில் நிறைந்தவளைக் கண்டு இரசிக்க நவீன பைனாகுலர் சகிதம் ஜன்னலோரம் நித்தம் ஆஜராகிவிடுகிறான் மனோ.

    அவனுடைய பார்வையில் அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு விஷயத்தில் பைத்தியம்தான் என விவரிக்கும் இடத்தில் விரியும் பட்டியலைப் படிக்கையில் நமக்கும் பைத்தியம் பிடித்துவிடும் போல் உள்ளது. மனிதரில் இத்தனை வகை பைத்தியங்களா? என வியக்க வைக்கிறது.
    “கோலப்பைத்தியம்” என அனுவை நினைத்த மனோவும் அவள் கோலத்தை இரசிக்கும் பைத்தியமாகிவிடுகிறான். அவளின் கோலம் அவன் மனதுள் அழியாக் கோலமாகிவிடுகிறது. அன்புக்கோலமாகிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

      //“கோலப்பைத்தியம்” என அனுவை நினைத்த மனோவும் அவள் கோலத்தை இரசிக்கும் பைத்தியமாகிவிடுகிறான். அவளின் கோலம் அவன் மனதுள் அழியாக் கோலமாகிவிடுகிறது. அன்புக்கோலமாகிவிடுகிறது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  15. இந்தப் போட்டிக்கான, இந்த விறுவிறுப்பான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    40 + 32 + 36 + 43 = 151

    அதற்கான இணைப்புகள் (பகுதி-1 to பகுதி-4):

    http://gopu1949.blogspot.in/2011/10/1-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/10/2-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/10/3-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/10/4-of-4.html

    பதிலளிநீக்கு
  16. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-03-03-third-prize-winners.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு