About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, November 10, 2011

திருமண மலைகளும் … மாலைகளும்






திருமண மலைகளும் ... 

மாலைகளும் !



[சிறுகதை]


By வை. கோபாலகிருஷ்ணன்
                                  -oOo-









"நித்யா, நாம் வழக்கமாக சந்திக்கும் பார்க்குக்கு இன்று ஈவினிங் வழக்கமான நேரத்திற்கு வந்துடு.   

நம்ம கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால்,  நாம் நிறைய வேலைகள் பார்க்க வேண்டி இருக்கும்.

கல்யாணத்திற்கு முன்பு, இதுவே நமது கடைசி சந்திப்பாக வைத்துக் கொள்வோம். 

இருவருக்கும் கல்யாணம் என்று முடிவான பிறகு, பார்க் பீச் என்று தனிமையில் நாம் சந்திப்பது தேவையில்லாதது மட்டுமல்ல, யார் கண்ணிலாவது பட்டால், அவர்கள் வம்பு பேசவும் இடமளித்து விடும்” என்றான் செல்போனில் பேசிய ரமேஷ்.  

ரமேஷின் பேச்சு நித்யாவுக்கு நியாயமாகப் பட்டதால் ”மாலையில் கட்டாயம் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்போம்” என்றாள்.

அவரவர்கள் வீட்டில் வெவ்வேறு டிசைனில் தனித்தனியே பிரிண்ட் செய்திருந்த திருமண அழைப்பிதழ்களை பரஸ்பரம் ஒருவொருக் கொருவர் கொடுத்துக் கொண்டனர், வாழ்த்திக் கொண்டனர்.
....................
....................
....................
....................
....................
....................

நேரில் கலந்து கொள்ள இயலாமைக்கு இருவருமே ஒருவருக்கொருவர் வருத்தமும் தெரிவித்துக் கொண்டனர்.

....................
....................
....................
....................             
....................
                                                

அவர்களும் தான் என்ன செய்வார்கள் .... பாவம் !   

நித்யாவின் திருமணம் ஸ்வாமி மலையில். 



அதே தேதியில் ரமேஷின் திருமணம், திருப்பதி மலையில். 




-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-





15. சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்: 


அருள்மிகு தாத்திரீஸ்வரர் 
திருக்கோயில் 
[சுந்தரராஜப்பெருமாள் ] 

இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் 
இருந்து தண்டுரை என்ற ஊருக்கு 
செல்லும் வழியில் 8 கி.மீ., 
தூரத்தில் சித்துக்காடு 
என்ற ஊரில் இத்தலம் உள்ளது. 
குறித்த நேரத்தில் மட்டுமே 
பஸ் உண்டு என்பதால், 
பூந்தமல்லியில் இருந்து 
வாகனங்களில் சென்று திரும்பலாம் .







15/27

31 comments:

  1. பிடித்தது ஐயா...
    ஆனாலும் ஊகிக்க முடிந்தது இரண்டாம் பத்தியிலேயே..

    முதன்முறையாக தங்களின் வலைப்பூவிற்கு வந்துள்ளேன்..
    நட்சத்திர பதிவர் என்றும் அறியப்பெற்றேன்..இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. "மரண அறிவிப்பு" என்றோர் சிறுகதை இடுகையிட்டுள்ளேன்...
    பொழுது கிடைக்கும்போது வாசித்து பார்த்து கருத்து சொல்லுங்கள் ஐயா..

    ReplyDelete
  3. இன்றை சமுக காதலை தற்ப்போது நிகழும் கலாச்சாரத்தை அழகிய சிறுகதையில் அடக்கி அசத்தியுள்ளீர்க்ள...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. ஏற்கனவே படித்திருந்தாலும்,மறுபடி படிக்கும் போதும் அலுக்கவே இல்லை,முடிவில் அவ்வளவு அழகான திருப்பம்.

    ReplyDelete
  5. கடைசியில் வழக்கம்போலவே ட்விஸ்டு. நல்ல பகிர்வு சார்.

    ReplyDelete
  6. அசத்தல் கதை வை. கோ
    யாராவது பார்த்தால்
    என்ற போதே பொறி தட்டியது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. நேரில் கலந்து கொள்ள இயலாமைக்கு இருவருமே ஒருவருக்கொருவர் வருத்தமும் தெரிவித்துக் கொண்டனர்.

    நல்ல திருப்பம் வாழ்க்கையில்!

    ReplyDelete
  8. சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:


    அருள்மிகு தாத்திரீஸ்வரர்
    திருக்கோயில்
    [சுந்தரராஜப்பெருமாள் ] /

    பயன் மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:


    அருள்மிகு தாத்திரீஸ்வரர்
    திருக்கோயில்
    [சுந்தரராஜப்பெருமாள் ] /

    பயன் மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. சுவாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:


    அருள்மிகு தாத்திரீஸ்வரர்
    திருக்கோயில்
    [சுந்தரராஜப்பெருமாள் ] /

    பயன் மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. குட்டியான கதைன்னாலும் கெட்டியான கதைதான்

    ReplyDelete
  12. அருமையாக இருந்தது

    ReplyDelete
  13. சுவையான பகிர்வு... நல்ல திருப்பம்... நட்சத்திர வாரத்தில் தொடர்ந்து அசத்தும் பதிவுகள்... தொடரட்டும்....

    ReplyDelete
  14. The "Pattai Namam" picture at the end aptly summarized the story!

    ReplyDelete
  15. சுவாமி மலை, திருமலை ஆஹா !அருமை.

    நல்ல திருப்பம் கதையில்.

    ReplyDelete
  16. நல்லதொரு திருப்பம் கதையில்.. சுருக்குன்னு முடிஞ்சுட்டாலும் நறுக்குன்னு இருக்கு.

    ReplyDelete
  17. குட்டிக் கதையில் உங்கள் சுட்டித்தனம் தெரிகிறது

    ReplyDelete
  18. முடிவில் நல்ல திருப்பம். சுவாரசியம்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் May 20, 2015 at 11:20 AM

      //முடிவில் நல்ல திருப்பம். சுவாரசியம்//

      சந்தோஷம். அவர்களுக்கு இல்லாவிட்டாலும் நமக்கு !மிக்க நன்றி :)

      Delete
  19. கடைசியில போட்ட அந்த நாமம் எங்களுக்குத்தானே.

    உங்கள் திடீர் திருப்பங்களை யூகிக்க முடியாத வாசகர்களுக்குத்தானே.

    ReplyDelete
  20. அப்பாலிக்க அந்த ரமேசுக்கும் நித்தியாவுக்கும் தான கல்லியாணமுனு நெனச்சி போட்டேன் வேர வேர ஆளுகாரா கூடவா. நல்லா நாமம் போட்டிங்க போங்க.

    ReplyDelete
    Replies
    1. mru September 15, 2015 at 10:51 AM

      //அப்பாலிக்க அந்த ரமேசுக்கும் நித்தியாவுக்கும் தான் கல்யாணமுன்னு நெனச்சி போட்டேன். வேற வேற ஆளுங்க கூடவா. நல்லா நாமம் போட்டீங்க போங்க.//

      :)))))))))))))) மிக்க நன்றி.

      Delete
  21. :))) இங்கிட்டும் இதே தா........

    ReplyDelete
  22. யூகிக்க முடிந்த முடிவுதான். சொல்லிப்போன விதம் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  23. பாதை ஒன்று...திசைகள் வேறோ...???

    ReplyDelete
  24. கதை+. பின்னூட்டங்கள் ரொம்ப. சுவாரசியம்

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco February 22, 2018 at 10:10 AM

      //கதை + பின்னூட்டங்கள் ரொம்ப சுவாரசியம்//

      வாங்கோ மை டியர் ஷம்மு. தங்களின் ரொம்ப சுவாரஸ்யமான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கிஷ்ணா(ஜா)ஜி :)

      Delete