என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 8 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.



’கீதமஞ்சரி’


திருமதி

 கீதா மதிவாணன்  

அவர்களின் பார்வையில்...


வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக சிறுகதை விமர்சனங்களுக்கான மாரத்தான் போட்டியொன்று கிட்டத்தட்ட முடியவிருக்கும் இவ்வேளையில் இப்போட்டி பற்றிய ஒரு அலசலை முன்வைப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். இப்படியொரு போட்டியை நடத்தலாம் என்று யோசித்து முடிவு செய்ததோடு அதைத் திட்டமிட்டபடி சிறப்பாக நடத்தி இறுதிக்கட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கும் கோபு சார் அவர்களுடைய அயராத உழைப்புக்கு தலைவணங்குகிறேன்.

எத்தனை எத்தனை விதமான கதைகள்! கதாபாத்திரங்கள்! குணாதிசயங்கள்! சிரிக்கவும், சிந்திக்கவுமாய், ரசிக்கவும், வியக்கவுமாய், மகிழவும் நெகிழவுமாய்… எத்தனை எத்தனை நிகழ்வுகள்! அனுபவங்கள்! புனைவுகள்! 

கோபு சாரின் கதைகளை ஊன்றிக் கவனித்தால் ஒவ்வொரு கதையிலும் ஒரு சிறப்பைக் காணலாம். ஒரு நகைச்சுவைக் கதையில் கூட நல்ல சிந்தனை ஒன்று மறைந்திருக்கும். சீரியஸான கதையிலும் ஆங்காங்கே நகைச்சுவைத் தூவல்கள் வாசிப்போரை இளைப்பாற்றும். சாதாரணமானவன் என்று சொல்லி ஒரு அசாதாரணமானவனைப் பற்றி நமக்கு அறிமுகப்படுத்துவார். அரக்கி போல் ஒருத்தியை அறிமுகப்படுத்தி அவளுள்ளிருக்கும் இரக்கசுபாவத்தை வெளிப்படுத்துவார். மனிதர்கள் நல்லவர்களாக இருக்க, சூழ்நிலை பிரச்சனைகளை உருவாக்கும் காரணியாக அமைந்த கதைகள் பல. தன் சொந்த அனுபவங்களோடு புனைவும் பிணைந்து அழகான கதைகளாக வெளிப்படுத்துவதுமுண்டு.

எல்லாவிதமான குணாதிசயம் கொண்ட மனிதர்களையும் 
கோபுசாரின் கதைகளில் பார்க்கலாம்
பெரும்பாலும் வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் மாந்தர்களே 
கதாபாத்திரங்களாய் உலாவருவது சிறப்பு. 
நாம் அவர்களைக் கண்டும் காணாமல் கடந்து போகிறோம்

கோபு சாரோ அவர்களைக் கதையின் நாயகர்களாக்கி விடுகிறார். 
வாழ்க்கையில் தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடத்தில் நல்ல கூரிய 
அவதானிப்பும்அவற்றைக்கொண்டு கதைக்களத்தை உருவாக்குவதும்
சொல்ல வந்ததைத் தடங்கலின்றி சரளமாகச் சொல்லும் 
எழுத்துவன்மையும் அவரது பலம்.

பலவீனம் என்றால் அவரது கதைகளில் பல இடங்களில் 
கதையோடு தொடர்புடைய 
சிந்தனைகளைப் புகுத்துவது என்பேன்
அதாவது கதையை வாசிக்கும்போதோ வாசித்த 
பின்னரோ வாசகரின் எண்ணத்தில் தோன்றுவதையும் 
அவரே தன் கதையில் எழுதி
விடுகிறார்.. 
சாதாரணமாய் ஒரு கதாசிரியர் தன் கதாபாத்திரங்களோடு 
பயணிக்கையில்  தனக்குத் தோன்றும் எண்ணங்களைக் 
கதையில் புகுத்துவது தவறன்றுஆனால் இது
கதாமாந்தரின் வாயிலாய் வெளிவரவேண்டும்
கதையைவிட்டு வெளியே வந்து 
கதாசிரியரின் சொந்தக் கருத்துகளாகக் காண்பிக்கப்படுதல் கூடாது
அதுவும் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளவிருக்கும் 
கதையில் அப்படிப்பட்ட பத்திகள் 
தவிர்க்கப்பட்டால் நன்றாக இருக்கும்
ஏனெனில் அவை கதை பற்றிய வாசகரின் மாற்றுப் பார்வைக்கு 
இடங்கொடாமல் கதாசிரியரின் பார்வையோடு இணைந்துகொண்டு
வாசகரின் சிந்தனாத்திறனுக்கு ஓய்வு கொடுத்துவிடுகின்றன
இதைத் தவிர அவரது கதைகளில் மைனஸ் பாயிண்ட் என்று எதுவும் இல்லை.

ஒரு கதையை நிதானித்து வாசிக்கவும், அதன் உள்ளார்ந்த சாரத்தை உணரச்செய்வதுமான கலையை எனக்கு மட்டுமன்று, என்னைப் போன்ற பல வாசகருக்கும் கற்றுத்தந்தவை இந்த விமர்சனப் போட்டிகள். பதிவுலகில் பலரும் பல பதிவுகளை நிதானமாக வாசித்துக் கருத்திடுவதில்லை. ஓடுகிற ஓட்டத்தில் கதையை வாசித்துவிட்டு அருமை, பிரமாதம், பாராட்டுகள் என்ற டெம்ப்ளேட் கமெண்டுகளைக் கொடுத்துவிட்டு அடுத்தப் பதிவுக்குப் பாயும் வாசக நெஞ்சங்களை, வாசிப்பின் ஆழம் அறியச்செய்யும் வகையில் அற்புதமாய் சிந்தித்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பான போட்டி இது என்பேன்.

போட்டியை அறிவித்துவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் ஒவ்வொரு நிலையிலும் களத்தில் இறங்கி வாசகருக்கு உற்சாகமளிக்கும் வகையில் அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் நினைவூட்டியும், பரிசு பெற்ற விவரங்களைத் தொகுத்தளித்து அறியச்செய்வதும், ஊக்கப்பரிசு, ஹாட்ரிக் பரிசு என்று பரிசுகளை வள்ளன்மையோடு அள்ளி வழங்குவதுமாக நம் கூடவே பயணித்து இறுதிவரை வழிநடத்திய, நடத்திக்கொண்டிருக்கும் கோபு சார் அவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதுமானதன்று.

பஜ்ஜீன்னா பஜ்ஜிதான் கதையில் அஷ்டாவதானி என்று 
பஜ்ஜிபோடுபவரைக் குறிப்பிடுவார். 
அஷ்டாவதானி அல்லது எண்கவனகர் என்பதற்கு ஒரே நேரத்தில் 
எட்டு வேலைகளில் கவனமாக இருப்பவர் என்று அர்த்தம்
உண்மையில் கோபுசாரின் பன்முகத் திறமையைப் பார்க்கும்போது 
இவரை ஒருஅஷ்டாவதானி என்ன அதற்கும் 
மேலே தசாவதானிசோடகவதானி என்று  கூட சொல்லலாம் போல் 
எனக்குத்தோன்றுகிறது
கோபு சாரும் எத்தனைப் பேருடைய வேலைகளை 
தனியொருவராக எடுத்து செய்து கொண்டிருக்கிறார்?

இந்தப் போட்டியில் கோபு சாரின் பொறுப்புகள் என்னென்னவென்று பார்ப்போம்.

1.  புதுமையானதொரு போட்டியை நடத்தலாம் என்று யோசித்து 
சிறுகதைகளுக்கான விமர்சனப்போட்டி என்று முடிவு செய்தது.

2.  தகுதியான ஒருவரை நடுவர் பொறுப்பில் நியமிக்க விரும்பி
அவரை இன்னாரெனத் தேர்ந்தெடுத்தது.

3. உரியவருடன் பேசி அவரை சம்மதிக்க வைத்தது.

4.  வாசகர்களுக்குப் போட்டி பற்றி அறிவித்தது.

5. போட்டிகளுக்கான பரிசுத்தொகையைத் தம் கைப்பணத்திலிருந்தே 
கொடுக்க முன்வந்தது.   (இதுவரை எவரும்கொடுத்திராத அளவுக்கு 
தாராளமாக பரிசுத்தொகையை அறிவித்ததும் ஒரு சாதனைதான்.)

6.   வாராவாரம் வெளியிட வேண்டிய சிறுகதைகளைத்தேர்ந்தெடுத்து 
முறைப்படுத்துதல்

7.   வாரந்தோறும் குறித்த நாளில் குறித்த நேரத்தில் பதிவிடல்

8.   சிறுகதைகளுக்குரிய படங்களைத் தெரிந்தெடுத்து இணைத்தல்

9.  கதைகள் வெளியிடப்பட்ட தகவல்களை உடனுக்குடன்
மின்னஞ்சல் மூலம் வாசகர்களுக்கு அறிவித்தல்

10.  வாசகர்களிடமிருந்து வரும் விமர்சனங்களை 
முறைப்படுத்திவரிசை எண் அளித்தல்

11.  அவற்றை நடுவருக்கு அனுப்பிவைத்தல்

12. நடுவரிடமிருந்து வரும் முடிவுகளை அந்தந்த நாளில் 
முறையாக அறிவித்தல் (முதல்இரண்டாம்மூன்றாம் பரிசுகளை 
ஒட்டுமொத்தமாக வெளியிடாமல் பிரித்து தனித்தனி 
பதிவாக்கிவெளியிடுவது)

13.  பரிசு பெற்றவர்க்கு ஊக்கமளிக்கும் வகையில் அவரைப்பற்றியக்  குறிப்புகள் மற்றும் புகைப்படங்களுடன் 
வெளியிடுதல்

14. யார் யார் எந்தெந்த பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள் 
என்ற விவரத்தை விரல்நுனியில் வைத்திருத்தல்

15.          மூன்றாம்நான்காம்ஐந்தாம் ஆறாம் முறைகள் என்று 
தொடர் பரிசுகள் பெறும்போது ஹாட்ரிக் பரிசு என்று 
குறிப்பிட்டுப்பாராட்டுதல்

16.  பத்து சிறுகதைகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 
அனைத்தையும் தொகுத்து ஒரு பதிவாக்கி வெளியிடல்

17.  அவரவர்க்குரிய பரிசுப் பணத்தை உரியவர் மூலம் 
வங்கிக்கணக்கில் அனுப்ப ஏற்பாடு செய்தல்

18.  அவரை சரியான நேரத்தில் தொடர்பு கொண்டு தொகையையும்
விவரங்களையும் அனுப்பிவைத்தல்.

19.  பரிசுத்தொகை வந்து சேர்ந்துவிட்டதா என்று 
உறுதிப்படுத்திக்கொள்ளல்

20.  விமர்சனத்துக்குரிய நாள் நெருங்கும் வேளையில் 
மின்னஞ்சல் மூலம் நினைவுபடுத்துதல்

21.  அவ்வப்போது நடுவர் அவர்களின் கருத்துகளையும் 
குறிப்புகளையும் விமர்சகர்களுக்கு வழங்குதல்

22.  அறிவிக்கப்பட்டப் போட்டிகளுக்கு இடையில் போனஸ் பரிசு
ஹாட்ரிக் பரிசுதனக்குத் தானே நீதிபதி போட்டிநடுவர் யார் என்ற 
புதிய புதிய போட்டிகளை அறிவித்து வாசகர்களை ஊக்குவித்தல்.

23.  பரிசுபெற்றவர்களைப் பாராட்டும்போது எந்தவிதக் 
கஞ்சத்தனமும் இல்லாமல் தாராளமாய்ப் பாராட்டுதல்.

24.  போட்டியை முடிவுக்குக்கொண்டுவரும் வேளையிலும் 
போட்டிபற்றிய பேட்டியை எடுத்து பலருக்கும் அதன்மூலம் 
பயனுள்ள தகவல்களை வழங்குதல்….

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

கோபு சாரின் இந்தப் போட்டியால் அவருக்கு என்ன நன்மை? அவரது கதைகளைப் பலரும் பலமுறை வாசிக்கிறோம். கதையின் குறை நிறைகளைப் பற்றி ஒரு அலசுகிறோம். அலசல் மட்டுமல்ல, அலசிப் பிழிந்து காயப்போட்டும் விடுகிறோம். ஆனாலும் ஆரம்பத்திலிருந்த அதே வேகத்தோடு, அதே உற்சாகத்தோடு தொடர்ந்து இப்போட்டியை நடத்த அவரால் எப்படி முடிகிறது? அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நமக்குப் பல உண்டு.

முக்கியமாக, நான் அவரைப் பார்த்து வியந்துபோவது, அவருடைய நேர மேலாண்மை கண்டுதான். ஒரு ராணுவக் கட்டுக்கோப்புடன் அவர் கடமையாற்றும் திறம் கண்டு வியக்கிறேன். திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி, திட்டமிட்ட பதிவை வெளியிடும் பாங்கும், உரிய நேரத்தில் உரியவர்களுக்கான சிறப்புப் பதிவுகளை வெளியிடுவதும், மனந்திறந்து தாராளமாய்ப் பாராட்டுவதையும் அவரிடம் நான் கண்டு வியக்கும் மற்ற சிறப்பம்சங்கள்.

கோபு சாரின் திறமைகளைக் குறிப்பிட்டுவிட்டு நடுவர் அவர்களுடைய பங்களிப்பு பற்றிக் குறிப்பிடாதிருப்பது நியாயமன்று. கோபு சாருடைய எண்ணத்தைச் செயலாக்கிய ஜீவி சாரின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் எழுத்தில் எழுதி மாளாது. இணைந்த கைகளாய் இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் இப்போட்டியில் தத்தம் பங்கைத் திறம்பட ஆற்றியமை பெரும் பாராட்டுக்குரியது.

ஆரம்பத்தில் விமர்சனமெழுதத் தயங்கிய, எழுதிய விமர்சனங்களையும் சரியான முறையில் எழுதத் தெரியாமல் தவித்த எனக்கு போகப்போக விமர்சனமெழுதும் சூத்திரம் வசப்படத் தொடங்கியது. 

தொடர்ந்து கிடைத்த பரிசுகள் என் விமர்சனத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன.  புதிய பாணிகளிலான விமர்சனங்களை எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு பாணியும் பலராலும் சிலாகிக்கப்பட்டது. வெற்றிப் பாதையில் என்னைத் தொடர்ந்த பலருக்கும் அது பயன்பட்டது என்பதில் எனக்குப் பெருமையே.

சில கதைகளுக்கான விமர்சனத்தை நான் வெகு பிரமாதமாக 
எழுதியிருப்பதாக எனக்குத்தோன்றும்
ஆனால் ஒரு பரிசுகூட அதற்குக் கிடைத்திருக்காது
சில சமயம் இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாம் 
என்று தோன்றும்
ஆனால் பரிசு கிடைத்திருக்கும்
வருகிற விமர்சனங்களைக் கொண்டே அது பரிசுக்குரியதாய்த் 
தேர்வாகிறது என்றாலும் பல விமர்சனங்கள் உண்மையில் மிகவும் 
சிறப்பாகவே எழுதப்பட்டு வருகின்றன.  
பலருடைய விமர்சனப் பாணியிலிருந்தும் பல விஷயங்களைக் 
கற்றுக்கொண்டேன் என்பது உண்மை. 
என் வெற்றிகளின் இரகசியமும் கூட. 
இவை தவிர நடுவராகப் பொறுப்பேற்ற ஜீவி சாரின் பல 
பின்னூட்டங்களும் விமர்சனம் பற்றிய கருத்துக்கோவைகளும் 
பலவிதங்களில் பயனுள்ளவையாக அமைந்தன.

இடையில் தனக்குத் தானே நீதிபதி என்ற போட்டியை 
கோபு சார்அறிவித்தார்
இறுதி நிலையில் உள்ள ஒன்பது விமர்சனங்களிலிருந்து 
பரிசுக்குரிய ஐந்தினைத் தேர்ந்தெடுக்கச்சொல்லியிருந்தார்
அதில் பல விமர்சனங்கள் ஒரே தரத்தில் சிறப்பாக இருந்தன
அவற்றை வாசித்தபோதுதான் நடுவரின் பங்கு 
எவ்வளவு சிரமம் வாய்ந்தது என்று புரிந்தது
அதை விமர்சகர்களுக்கு உணர்த்தியதற்காகவும் 
கோபு சார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

விமர்சனப்போட்டிகள் என்னும் பேருந்தில் ஓட்டுநரும் நடத்துநருமாய் கோபு சாரும் ஜீவி சாரும் பொறுப்புகளை வகிக்க, உல்லாசமாய்ப் பயணிக்கிறோம் வாசக விமர்சகர்களாகிய நாங்கள். வாராவாரம் சிறுகதை நிறுத்தத்தில் இறங்கி கதை பற்றிய விமர்சனத்தோடு மறுபடியும் பயணத்தைத் தொடர்கிறோம். இடையில் பரிசுகளையும் பெற்றுக் கொள்கிறோம். இந்தப் பயணம் இன்னும் சில வாரங்களோடு முடியப்போகிறதே என்ற வருத்தம் இருந்தாலும் இந்தப் பயணத்தின் வாயிலாய்க் கற்றுக்கொண்டவை அதிகம்.

ஒரு படைப்பை மாற்றுக்கண்ணோட்டத்துடன் பார்க்கவும், மாற்றுச்சிந்தனையோடு அணுகவுமான புதியதொரு வாசிப்பனுபவத்தையும் எழுத்தனுபவத்தையும் வழங்கியுள்ள இப்புதுமையான போட்டித்தொடரை உருவாக்கி செயலாக்கம் வடித்த கோபு சார் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாய் நின்ற ஜீவி சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். 

      

 

     

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய 

திருமதி கீதா மதிவாணன் அவர்களே !






தங்களுக்கு முதலில் அடியேனின் 

அன்பான வணக்கங்கள்


தாங்கள் மனம் திறந்து இங்கு சொல்லியுள்ள கருத்துக்கள் யாவும் மிகவும் பாராட்டத்தக்கவை. பொதுவாகவே தங்களின் எழுத்துக்கள் எப்போதுமே என்னைப் பொறாமைப்பட வைப்பதாகவே அமைந்துவிடுகின்றன. இங்கும் இதிலும் இன்றும் அப்படியே. 


//ஓடுகிற ஓட்டத்தில் கதையை வாசித்துவிட்டு அருமை, பிரமாதம், பாராட்டுகள் என்ற டெம்ப்ளேட் கமெண்டுகளைக் கொடுத்துவிட்டு அடுத்தப் பதிவுக்குப் பாயும் வாசக நெஞ்சங்களை, வாசிப்பின் ஆழம் அறியச்செய்யும் வகையில் அற்புதமாய் சிந்தித்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பான போட்டி இது என்பேன்.//

மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். என் ஸ்பெஷல் நன்றிகள். 

நான் ஆரம்பித்த இந்தப்போட்டியின் அடிப்படை நோக்கமே இதுதான். இதுபோல டெம்ப்ளேட் கமெண்டுகள் கொடுப்பவர்களின் வருகையையும், அவர்கள் எனக்குக் கொடுக்கும் கருத்துக்களையும் நான் அடியோடு வெறுக்கிறேன். சிலசமயங்களில் மட்டும் அவர்களுக்கான என் பதில்களில் என் வெறுப்பினை அவர்களுக்கு உணர்த்தியும் உள்ளேன். 

இதைவிட கொடுமை என்னவென்றால், பதிவினைக் கொஞ்சமும் படிக்காமலேயே பிறர் கொடுத்துள்ள கமெண்ட்ஸ்களில் ஏதேனும் ஒன்றினை அப்படியே COPY AND PASTE செய்து தனது கமெண்ட்ஸ் ஆகப் போட்டுச்செல்வோரும் முன்பெல்லாம் உண்டு. இதுபோன்றவர்களை நான் அடையாளம்கண்டு மின்னஞ்சலில் தொடர்புகொண்டு, அவர்களின் செயலை அப்படியே உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி கண்டித்ததும் உண்டு. அவர்களில் சிலர் தங்கள் போக்கினைப் பிறகு மாற்றிக்கொண்டனர். இன்னும் சிலர் அதன்பிறகு காணாமலேயே போய்விட்டனர். இரட்டிப்புச் சந்தோஷப்பட்டேன்.

பதிவினை முழுவதும் படிக்காமலேயே, இதுபோன்ற டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் கொடுக்கும் ஆசாமிகள், என் பதிவுக்கு வருகை தருவதால் எனக்கு எந்த ஆனந்தமும் ஏற்படப்போவது இல்லை. அதுபோலவே அவர்கள் என் பதிவுகளுக்கு வருகை தராததால் எனக்கு எந்தவொரு துக்கமும் ஏற்படப்போவதும் இல்லை.  

அடடா, இவர் என் பதிவுக்கு வருகை தந்துள்ளாரே என நினைத்து ஒரே குஷியாகி அவர்களின் பதிவுகளுக்கு உடனே ஓடோடிச் சென்று கருத்தளிப்பவனும் நான் அல்ல. இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்துகொண்டால் எனக்கும் மகிழ்ச்சியே / நிம்மதியே.



என்னுடைய பலத்தினையெல்லாம் பலவரிகளில் எழுதி தாங்கள் எனக்கு ஷொட்டுக்கொடுத்துள்ளதைவிட, பலகீனங்களையும் சிலவரிகளில் எழுதி குட்டுக்கொடுத்துள்ளதில் தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவை யாவும் உண்மையே. எனக்கே அவைபற்றி நன்றாகத்தெரிகிறது. தங்களைப்போல வேறு சிலரும் இதுவரை எனக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால் எனக்கென்னவோ என் பாணியை மாற்றிக்கொள்ள முடியாமல் உள்ளது. சுருங்கச்சொல்லி விளங்க வைக்கவோ, சொல்லவரும் கருத்துக்களை முழுவதுமாகச் சொல்லாமல் முழுங்குவதிலோ எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. 

மேலும் இந்தப் போட்டிக்கான கதைகளை நான் ஒரிஜினலாக எழுதி வெளியிடும்போது, பிற்காலத்தில் இதுபோன்ற ஒரு விமர்சனப்போட்டி நடத்தப்போகிறோம் என்று நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. 

குறிப்பாக விமர்சனப்போட்டிகளுக்கு என வெளியிடும் கதைகள் விலாவரியாக இருக்கக்கூடாது, அவை ’சிக்’கென இருக்க வேண்டும் என்பதை சமீபத்தில் நம் நடுவர் திரு. ஜீவி சார் அவர்கள் சொல்லியும், தங்களின் பல விமர்சனங்களில் தாங்கள் ஜாடைமாடையாக... இலைமறை காய்போல எனக்கு உணர்த்தியும், நான் நன்கு அறிந்து கொண்டுள்ளேன். 

In fact,  VGK-32, VGK-33, VGK-34 ஆகிய மூன்று கதைகளிலும் மட்டும், என்னுடைய ஒரிஜினல் வெளியீடுகளிலிருந்து ஒரு 10% வரிகளை மட்டும் நானே நீக்கிவிட்டு பிறகுதான் வெளியிட்டுள்ளேன்.  

[கால் வலிக்க வலிக்க, கால் மணி நேரம் மட்டும், அன்னநடை நடந்துபோன சிரமத்திற்காக, ஜில்லென்று குடித்த 2 பன்னீர் சோடாக்களுக்குப்பிறகு 4 பஜ்ஜிகள் + 4 வடைகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று தன் உடல் எடையைக் குறைக்கவேண்டி முடிவு எடுத்தாரே ஒரு  கதை மாந்தர் ... அதுபோல, என்னால் இவற்றிலும் 10%க்கு மேல் வரிகளை நீக்க மனம் வராமல் போய் விட்டது. :)] 

இங்கும் தாங்கள் அந்த சிறுகுறைகளை... பலவீனங்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளதற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனி நான் புதிய கதைகள் எழுதும்போதாவது நிச்சயமாக இவைகள் என் மனதினில் தைத்து நினைவூட்டிடும் அல்லவா! அதற்காகவே தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.


இந்தக்கட்டுரையின் பலவரிகளில் என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டியே எழுதியுள்ளீர்கள். எனக்கான பொறுப்புகள் என மிகப்பெரிய பட்டியலே போட்டுக்காண்பித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியே. 

தாங்கள் எழுதியுள்ள இந்த மிகப்பெரிய பட்டியலிலிருந்தே தங்களின் கூர்மையான பார்வையையும், புத்திசாலித் தனத்தையும், ஆத்மார்த்தமான புரிதல்களையும் என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது.


இந்தப்போட்டிகளில் நடுவர் அவர்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும், ஆர்வமும், வேகமும், விவேகமும் என்னால் இங்கு எழுத்தில் எடுத்துரைக்கவே முடியாதவைகளாக உள்ளன. 

நேரில் சந்திக்காமலேயே, ஒருவரின் எழுத்துக்களின் தரத்தினை வைத்தே, அவரின் குணத்தையும், தரத்தையும், தனித்தன்மைகளையும் மிகச்சரியாக எடை போட்டுவிட என்னால் மிகச்சுலபமாக முடியும். இது நான் என் வாசிப்பு அனுபவத்தால் கற்றுக்கொண்டுள்ள ஓர் சைக்காலஜி. அதுபோல எனக்கு அதிர்ஷ்டவசமாக அமைந்தவரே நம் நடுவர் ஜீவி சார் அவர்கள். 



இரட்டைமாட்டு வண்டியின் இணையான இருமாடுகள் போல இந்தப் போட்டிகளின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நாங்கள் இருவரும் இரவினில் பெரும்பாலும் சரியாகத் தூங்காமல்கூட, மாடாய் உழைத்துள்ளோம் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். 

என் உழைப்பினையும் ஆர்வத்தினையும் அவர் மதித்து உணர்ந்து பெருமைப்பட்டார். அதுபோல அவர் உழைப்பினையும் ஆர்வத்தினையும் நான் மதித்து உணர்ந்து பெருமைப்பட்டேன். ஜாடிக்கு ஏற்ற மூடி போல வீ.........ஜீ   யாகிய எனக்கு  ஜீ.........வீ  யாகிய நடுவர் அமைந்தது. :)

நடுவர் திரு. ஜீவி அவர்களின் தீர்ப்புக்களில் நான் இதுவரை ஒருமுறையேனும் குறுக்கிட்டது இல்லை. பரிசுக்கான தீர்ப்புகளில் நடுவர் அவர்களுக்கு நான் முழு சுதந்திரம் கொடுத்து விட்டேன். 

நடுவில் சில ஆச்சர்யமான பரிசு அறிவிப்புகளின் போது மட்டும் அவருடைய தீர்ப்புக்களுக்கான ACTUAL JUSTIFICATION என்ன என்பதை அவர்களாகவே எனக்கு விளக்கிச் சொல்லியுள்ளார்கள். அவைகளும் எனக்கு மிகவும் நியாயமாகவே தோன்றின.

VGK-35 பூபாலன் சிறுகதைக்கு, பரிசுக்குத்தேர்வான விமர்சனங்களை வெளியிடுவதில் மட்டுமே பல்வேறு சோதனைகள் எங்களுக்கு ஏற்பட்டன. அதையும் ஒருவாறு நாங்கள் சமாளித்து வெற்றி கண்டுவிட்டோம். 

இந்தத் தனக்குத்தானே நீதிபதி  போட்டியைப் பற்றி எனக்கு எடுத்துச்சொல்லி  ஐடியா கொடுத்ததே நம் நடுவர் திரு. ஜீவி அவர்கள் தான். 

இதற்காக கூடுதலாக பரிசுத்தொகை தங்களுக்குச் செலவாகுமே ... பரவாயில்லையா, கோபு சார்” என என்னிடம் தயக்கத்துடன் கேட்டிருந்தார்கள். 

”இந்தப்போட்டிகளுக்காக நான் எவ்வளவோ செலவழிக்கப் போகிறேன், இது என்ன சார் பிரமாதம் .... இந்தப் ’போட்டிக்குள் போட்டி’ புதுமாதிரியாக உள்ளது ... நிச்சயமாகச் செய்வோம், சார்” என்று நான் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கூறினேன்.  

அதன் பிறகே அவரால் இறுதிச்சுற்றுக்கு முந்திய சுற்றில் தேர்வான ஒன்பது விமர்சனங்களின் பட்டியல் எனக்கு அனுப்பப்பட்டன.  [Otherwise பரிசுக்குத்தேர்வான ஐந்து விமர்சனங்களுக்கான இரகசியக் குறியீட்டு எண்களை மட்டுமே எனக்கு அவர் அனுப்பி வைப்பது வழக்கமாகும்.] 

இந்தத் ’தனக்குத்தானே நீதிபதி - போட்டிக்குள் போட்டி’க்காக நாம் எல்லோரும் நம் நடுவர் அவர்களுக்கும் நன்றி சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் தங்கள் கவனத்திற்கு இங்கு கொண்டுவர விரும்புகிறேன்.




    


மற்றபடி, போனஸ் பரிசுகள், ஹாட்-ட்ரிக் பரிசுகள், அதற்கான விதிமுறைகள், நடுவர் யார்...யூகியுங்கள் போட்டி முதலியன என்னால் மட்டுமே மிகவும் ஆழமாகவும், ஆக்கபூர்வமாகவும் சிந்தித்து தன்னிச்சையாக முடிவெடுத்து, அழகாக வடிவமைத்து செயல்படுத்தப்பட்டவை. 

இந்த என் தொடர் போட்டிகளை மேலும் உற்சாகமாகவும், தொய்வின்றியும், மிகவும் வெற்றிகரமாகக் கொண்டுசெல்ல அவைகள் மட்டுமே பெரிதும் உதவியாக இருந்தன என்பதை நாம் யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. தக்க நேரத்தில் தக்கதொரு நல்ல முடிவெடுக்கத் தோன்றிய என்னை நானே இதற்காகப் பாராட்டிக்கொள்கிறேன். 

அதுபோல மட்டும் நான் செய்யாமலிருந்திருந்தால் இந்தப்போட்டிகள் இந்த அளவுக்கு மாபெரும் வெற்றிகளை கண்டிருக்கவே முடியாது என்பதே இதில் மறைந்துள்ள மிகப்பெரிய உண்மையாகும்.

உதாரணமாக ஒருவர் இளம் வயதில் ஓர் பணியில் சேர்கிறார். அப்போது அவருக்கு ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓர் பதவி தரப்படுகிறது. அவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் போதும்  அதே பதவி, அதே சம்பளம் என்றால் அவருக்கு எப்படியிருக்கும்? அலுத்துப்போய் விடும் .... அவரால் நிம்மதியாகப் பணியாற்றவும் முடியாது .... அந்த வேலையில் தொடரவும் முடியாது .... வெறுத்துப்போய் ஓடிவிடுவார். தற்கொலைகூட செய்துகொள்ள முயல்வார். 


அதனாலேயே, வருடாவருடம் இன்கிரிமெண்ட்ஸ், பதவி  உயர்வு, சம்பள உயர்வு, பஞ்சப்படி உயர்வு, ஓவர் டைம் பேமெண்ட்ஸ், போனஸ், இன்ஸெண்டிவ்ஸ், கிஃப்ட்ஸ், இலவச மருத்துவ உதவிகள், குழுக்காப்பீடுகள் (Group Insurance), குறைந்த வட்டியில் வீட்டுக்கடன், வாகனக்கடன், குழந்தைகளின் கல்விக்கான வசதிகள் + சலுகைகள்  என ஏதேதோ பெயர்களில் அவ்வப்போது கொடுக்கப்பட்டு, அவர் தன் பணியை விட்டு விலகிச்சென்றுவிடாமல், அவருக்கு மேலும் மேலும் ஓர் உற்சாகம் அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தால் தரப்பட்டு வருகின்றன. 


அதே டெக்னிக் மட்டுமே, இங்கு என்னாலும் இந்தப்போட்டிகளில் வேறு விதமாகக் கடைபிடிக்கப்பட்டுள்ளன என்பதை, இங்கு எல்லோருக்குமே வெளிப்படையாக நான் சொல்லிக்கொள்கிறேன். 



    


இனி நாம் இந்தப்போட்டியின் நிறைவு விழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது மட்டுமே பாக்கியுள்ளன.  ஏதோ நான்மேற்கொண்ட ஒரு புதுமுயற்சி, முதல் முயற்சி, அதுவும் மாபெரும் மராத்தான் முயற்சி தங்களைப்போன்ற பலராலும் வரவேற்கப்பட்டு, தங்கள் அனைவரின் உற்சாகமான ஒத்துழைப்பினால் இவ்வளவு தூரம் வெற்றி நடைபோட்டு இறுதிக்கட்டத்தையும் அடைய இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தப்போட்டியின் நிறைவு விழாவில் சுமார் 20 சாதனையாளர்களை அடையாளம் காட்டி கெளரவித்து மேலும் பல பரிசுகள் வழங்க வேண்டும் என எனக்குள் நானே முடிவு செய்து வைத்துள்ளேன் என்பதையும் பெரும் மகிழ்ச்சியுடன் இங்கு அறிவித்துக்கொள்கிறேன். 


//விமர்சனப்போட்டிகள் என்னும் பேருந்தில் ஓட்டுநரும் நடத்துநருமாய் கோபு சாரும் ஜீவி சாரும் பொறுப்புகளை வகிக்க, உல்லாசமாய்ப் பயணிக்கிறோம் வாசக விமர்சகர்களாகிய நாங்கள். வாராவாரம் சிறுகதை நிறுத்தத்தில் இறங்கி கதை பற்றிய விமர்சனத்தோடு மறுபடியும் பயணத்தைத் தொடர்கிறோம். இடையில் பரிசுகளையும் பெற்றுக் கொள்கிறோம். இந்தப் பயணம் இன்னும் சில வாரங்களோடு முடியப்போகிறதே என்ற வருத்தம் இருந்தாலும் இந்தப் பயணத்தின் வாயிலாய்க் கற்றுக்கொண்டவை அதிகம்.//

மிகஅற்புதமாக எழுதப்பட்டுள்ள இந்தத்தங்களின் கட்டுரைக்கும், மிக அருமையான அலசல்களுடன் கூடிய எழுத்துக்களுக்கும் நான் தலை வணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன்.

பிரியமுள்ள கோபு 

 


பின்குறிப்பு: 

தாங்கள் 15th to 21st September, 2014  வலைச்சர ஆசிரியராக இருந்தபோது என்னைப்பற்றியும், என் வலைத்தளத்தினைப்பற்றியும், குறிப்பாக இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றியும் மிகச்சிறப்பாக எடுத்துக்கூறி, அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததை என்னால் என்றும் மறக்கவே இயலாது. தங்களின் அளவுகடந்த பேரன்புக்கு மீண்டும் என் நன்றிகள். 


நம் பதிவுலகின் சாதனைத் திலகம் வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்கள் தளத்தில் வாராவாரம் சிறுகதை விமர்சனப்போட்டி நடைபெற்று வருவதை அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இங்கு சென்று அறிந்துகொள்ளலாம்.

இந்தவார சிறுகதை எலிஸபத் டவர்ஸ்எலியால் கிலிபிடித்து எலிபிடிக்க முயன்ற கதையை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார். அதற்கான விமர்சனம் எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் வியாழன் அன்றே ஆகும். இன்னும் ஐந்து வாய்ப்புகளே உள்ளன. இதுவரை பங்கேற்காதவர்களும் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகள்.



    


நினைவூட்டுகிறோம்


இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான

இணைப்பு:




கதையின் தலைப்பு:



VGK-38


மலரே ... குறிஞ்சி மலரே !



விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்



09.10.2014


 வியாழக்கிழமை


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.



போட்டியில் கலந்துகொள்ள 

மறவாதீர்கள் !



இன்னும் தங்களுக்கு இருப்பதோ 


மூன்று வாய்ப்புகள் மட்டுமே !


என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்

42 கருத்துகள்:

  1. வித்தியாசமான பதிவு.
    இருவருக்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. /பெரும்பாலும் வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் மாந்தர்களே கதாபாத்திரங்களாய் உலாவருவது சிறப்பு.
    நாம் அவர்களைக் கண்டும் காணாமல் கடந்து போகிறோம்
    கோபு சாரோ அவர்களைக் கதையின் நாயகர்களாக்கி விடுகிறார்.
    வாழ்க்கையில் தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடத்தில் நல்ல கூரிய அவதானிப்பும், அவற்றைக்கொண்டு கதைக்களத்தை உருவாக்குவதும், சொல்ல வந்ததைத் தடங்கலின்றி சரளமாகச் சொல்லும் எழுத்துவன்மையும் அவரது பலம்.// உண்மையான வரிகள்! ஆழமாகவும் அருமையாகவும் தன் கருத்தினைப் பதிவு செய்துள்ள திரு. கீதா மதிவாணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  3. மணிகளாக வந்து விழுந்திருக்கும் விமரிசனத்திற்கே விமரிசனம் செய்த கீதா மதிவாணன் அவர்களின் நுணுக்கமான கட்டுரைக்கு மிக நன்றி. ஆழ உழுத அனுபவம் கிடைக்கிறது. அவரை இந்த விதமாக எழுதத் தூண்டிய கோபு சாருக்கு எத்தனை பாராட்டுகளைக் குவித்தாலும் போதாது. இதுபோலப் பதிவுலகில் சாதித்தவர் எவரும் இல்லை. அதுவும் ஜீவி போன்ற பண்பாளர் கதைகளுக்கு நீதி வழங்குவது மஹா அருமை. அவரை இந்தப் பதிவுகளில் சந்த்திதது மிக மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அழகான கருத்துரைக்கு மிகவும் நன்றி வல்லிம்மா.

      நீக்கு
    2. வல்லிசிம்ஹன்October 8, 2014 at 12:44 PM

      வாங்கோ, நமஸ்காரங்கள், வணக்கம்.

      //மணிகளாக வந்து விழுந்திருக்கும் விமரிசனத்திற்கே
      விமரிசனம் செய்த கீதா மதிவாணன் அவர்களின்
      நுணுக்கமான கட்டுரைக்கு மிக நன்றி. ஆழ உழுத அனுபவம் கிடைக்கிறது.//

      அழகாகக் கோயில் மணி அடித்ததுபோல கிணீரென்று
      சொல்லியுள்ளீர்கள்.

      ‘ஆழ உழுத அனுபவம்’ என்னும் அர்த்தபுஷ்டியான
      சொற்கள் மிகவும் பொருத்தமே.

      திருமதி. கீதா அவர்கள் எதையும் நுணுக்கமாகவே எழுதுபவர்கள் என்ற
      சுகானுபவத்தை நானும் கடந்த ஒன்பது மாதங்களாக மிகவும் அனுபவித்து ரஸித்து மகிழ்ந்து வருகிறேன்.

      இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில் 99.99%
      எழுத்துப்பிழையே இல்லாமல் விமர்சனம் எழுதுபவர்கள்
      எனக்குத்தெரிந்து ஐந்தே ஐந்து பேர்கள் மட்டுமே. அதில்
      இவரும் ஒருவர் என்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சி.

      மேலும் இவர்கள் எங்க ஊர் / நம்ம ஊர் [திருச்சி] பெண்ணும் ஆவார். அதனாலும் இவருக்கு எதிலும் ஒரு PERFECTNESS இருப்பதில் ஆச்சர்யம் இல்லை என நானும் எனக்குள் நினைத்து கர்வப்பட்டு மகிழ்ந்துகொள்வது உண்டு.

      //அவரை இந்த விதமாக எழுதத் தூண்டிய கோபு சாருக்கு
      எத்தனை பாராட்டுகளைக் குவித்தாலும் போதாது. //

      அடடா, எழுத்துலகில் இத்தனை சாமர்த்தியசாலிகளும்கூட இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்துகொள்ள முடிந்ததே, இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகளால் மட்டுமே. அது என் பாக்யம்.

      இயற்கையாகவே, கீதமஞ்சரி திருமதி. கீதா அவர்களின் எழுத்துக்கள் எப்போதுமே சுடர்விட்டு நன்கு பிரகாசிக்கும் தீபம் போன்றவை மட்டுமே. இவரை நான் ஒன்றும்
      தூண்டிவிடவில்லை. நான் அறிவித்த இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் ஒருவேளை சற்றே தூண்டிவிட்டிருக்கலாம்.

      விமர்சனங்களைத் தவிர, இவர் எனக்கு எழுதும் அனைத்துக் கடிதங்களிலும் ஒருவித அமைதி, தன்னடக்கம், பெளவ்யம், வாத்சல்யம், சொல்ல வந்ததை வெகு அழகாகச் சொல்லும் நேர்த்தி என எல்லாவித சிறப்பம்சங்களையும் நான் உணர்ந்து மகிழ்ந்துள்ளேன். இப்படிப்பட்ட தனித்தன்மை, தனித்திறமை, எழுத்தார்வம் வாய்ந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள இந்தப்போட்டி எனக்கும் உதவியுள்ளதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியே.

      //இதுபோலப் பதிவுலகில் சாதித்தவர் எவரும் இல்லை. //

      இதை தாங்கள் கூறி நான் கேட்க ....... தன்யனானேன்.

      நடுவில் எனக்கு ஏற்பட்ட எவ்வளவோ எதிர்பாராத சோதனைகளுக்கும் பிறகு இந்த மாபெரும் வெற்றியை/சாதனையை நான் அடையப்போவது, தெய்வானுக்கிரஹமும் + ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியாவாளின் அனுக்கிரஹமும் மட்டுமே என நினைக்கிறேன்.

      //அதுவும் ஜீவி போன்ற பண்பாளர் கதைகளுக்கு நீதி வழங்குவது மஹா அருமை. //

      ’பண்பாளர்’ என்ற அழகிய மிகப்பொருத்தமான சொல்லுடன் இதை எழுதிய தங்களின் பொற்கரங்களை மானஸீகமாக என் கண்களில் ஒத்திக்கொள்கிறேன்.

      //அவரை இந்தப் பதிவுகளில் சந்தித்தது மிக மகிழ்ச்சி.//

      அவரைப்பற்றியும், அவரின் எழுத்துக்கள் பற்றியும்,
      எழுத்தினில் அவருக்கு இருக்கும் ஆர்வம் பற்றியும்,
      எழுத்தாற்றலில் அவருக்கு உள்ள பாண்டித்யம் பற்றியும்,
      இதுவரை இந்தப்போட்டிகளில் பங்குபெற்று பரிசுகள்
      பெற்றுள்ளவர்களில் பலரும்கூட சரிவர புரிந்துகொள்ளாத நிலையில், என்னைப்போன்ற, தங்களைப்போன்ற, திரு. அப்பாதுரை சார் போன்ற, திரு. ஸ்ரீராம் போன்ற சிலராவது அவரைப்பற்றி ஓரளவு நன்கு அறிந்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

      அவர் இந்த என் போட்டிகளுக்கு நடுவராக அமைந்தது நான் செய்ததோர் பாக்யம். இந்தப்பதிவுலகில் அவரையும் அவரின் எழுத்துத் திறமைகளையும் உணர்வோர் மட்டுமே பாக்யசாலிகள் என்பேன்.

      //உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தெளிவான
      கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு
      நன்றிகள். தாங்கள் இந்தப் போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொள்ளா விட்டாலும், அவ்வப்போது இங்கு வருகை தந்து கருத்துக்கள் கூறிவருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப்போட்டிகளின் வெற்றிக்கு தங்களைப் போன்ற அனுபவசாலிகளான பெரியோர்களின் ஆசிகள் + உற்சாகமூட்டிடும் இதுபோன்ற பின்னூட்டங்கள் மட்டுமே காரணமாக அடியேன் நினைக்கிறேன்.

      தொடர்ந்து வாங்கோ ..... மிக்க நன்றி.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  4. வல்லிம்மா பத்திரிகை எழுத்துக்களில் மிகுந்த பரிச்சயம் உள்ளவர். தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அவர் மனசில் உலா வந்தவை. அவர் இங்கு வந்து பொறுமையுடன் இதையெல்லாம் படித்து கருத்திடுவது நமக்கெல்லாம் பெருமை.

    தங்கள் அன்பிற்கு ரொம்பவும் நன்றி, வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் எனக்கு மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. மிக்க நன்றி ஜீவி சார்.

      நீக்கு
  5. ///ஒரு படைப்பை மாற்றுக்கண்ணோட்டத்துடன் பார்க்கவும், மாற்றுச்சிந்தனையோடு அணுகவுமான புதியதொரு வாசிப்பனுபவத்தையும் எழுத்தனுபவத்தையும் வழங்கியுள்ள இப்புதுமையான போட்டித்தொடரை உருவாக்கி செயலாக்கம் வடித்த கோபு சார் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாய் நின்ற ஜீவி சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். ///
    எனது பாராட்டுதல்களையும் இணைத்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் அனைவரின் பாராட்டுகளுக்கும் உரியவர்கள் அவர்கள்! கருத்துக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  6. இப்போட்டித் தொடரின் அத்தனை அம்சங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் அலசியிருக்கும் கீதாவிற்குப் பாராட்டுக்கள்! மாற்றுச்சிந்தனை+கண்ணோட்டத்துடன் கூடிய புதுவித எழுத்தனுபவம்+வாசிப்பனுபவம் கிடைத்தது என்று அவர் கூறியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. திருமதி கீதா மிக அழகாக தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார். மிகவும் ரசித்தேன். கோபு சாரின் பொறுப்புகளை பட்டியலிட்டு அவர் அதை முடித்த விதம் பற்றியும் சொல்லியிருப்பது மிகவும் அருமை கீதா .

    டெம்ப்ளேட் விமரிசனம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதும் கோபு சார் சொல்லியிருப்பதும் பல சமயங்களில் நாம் கண் கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    கதாசிரியர்களுக்கு ஆலோசனை ஒன்றை முன் வைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. கதை எழுதும் போது, கீதாவின் ஆலோசனையை கண்டிப்பாக நானும் மனதில் கொள்வேன். அதற்கு என் நன்றிகள் கீதா.

    அவர் சொல்வது போல் ஓட்டுனரும், நடத்துனருமாக இந்தக் கதை விமரிசன வாகனத்தை ஓட்டி வந்திருக்கும் கோபு சாருக்கும், நடுவர் ஜீவி சாருக்கும் என் இனிய பாராட்டுக்கள்.

    அருமையான நேயர் கடிதத்தைத் தந்த திருமதி கீதாவிற்கும், அதைப் படிக்கும் வாய்ப்பை நல்கிய கோபு சாருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் ஆலோசனையையும் பொருட்டாக குறிப்பிட்டுப் பாராட்டிய தங்களுக்கு என் அன்பான நன்றி மேடம்.

      நீக்கு
  8. பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் Phd மாணவர் போன்று, அய்யா V.G.K அவர்களின் சிறுகதைகளை திறனாய்வு செய்து தனது கருத்துக்களை வெளியிட்ட சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றி!

    மேலும் சகோதரி அவர்கள், அய்யா V.G.K அவர்களின் நேர மேலாண்மை போன்ற குணாதிசயங்களையும் விவரித்து பாராட்டி சொல்லி இருக்கிறார். பொதுவாகவே காசுத் துறையில் (CASH DEPARTNENT) பணிபுரிபவர்களுக்கு , வேலையின் தன்மையின் காரணமாக, நேர மேலாண்மை (TIME MANAGEMENT) என்பது பழக்கமாகி விடுகிறது ஓய்வு பெற்ற பின்பும் அவர்கள் அதனை நிர்வகிக்கிறார்கள். அந்த வகையில் திரு V.G.K அவர்கள் B.H.E.L – இல் சிறந்த நிர்வாகியாக இருந்து, அடுத்தவர்களிடமும் பாராட்டைப் பெற்று இருப்பார் என்று நினைக்கிறேன்.

    திரு V.G.K அவர்கள் தனது பதிலில் பின்னூட்டம் போடுகிறேன் பேர்வழி என்று , அனாவசிய ஆரவாரம் செய்யும் “ஆகா ஓகோ பேஷ் பேஷ்” பேர்வழிகளைப் பற்றி கிண்டலடித்து இருப்பதை ரசித்தேன். குறிப்பாக சிலர் படிக்காமலேயே பின்னூட்டம் போடும் ரசவாத வித்தையை எரிச்சலோடு நையாண்டி செய்து இருப்பது கவனத்திற்கு உரியது. ஒரு படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்,

    இரவினில் ஆட்டம்
    பகலினில் தூக்கம்
    இதுதான் எங்கள் உலகம்

    என்று பாடுவார். ஆனால் அய்யா அவர்களும் நடுவர் ஜீவி அவர்களும் சிறுகதை விமர்சனப் போட்டியை சிறபாக நடத்த வேண்டி எப்போதுமே தூங்குவதில்லை (கருமமே கண்ணாயினார்) என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. வாசிப்பின் ஆழம் அறியச்செய்யும் வகையில் அற்புதமாய்
    சிந்தித்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பான போட்டி பற்றி நுணுக்கமான தகவல்களை ஆராய்ச்சிக்கண்ணோட்டத்துடன் கட்டுரையாக வடித்தமைக்குப் பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் கோபு சார் & கீதா

    முழுமையான அலசல்

    கோபு சார் முதலில் ஒரு விஷயம். இப்போதெல்லாம் 4 வரிக்குமேல் போட்டால் யாரும் படிக்காமல் ஓடிப்போய் விடுகிறார்கள் . நம்மைப்போல விதிவிலக்குகளும் உண்டு.

    ஆனால் விமர்சனம் & பின்னூட்டம் எழுத சோம்பல். அல்லது அவரச எண்ட்ரி. 5 ப்லாகிலும் போஸ்ட் போடவேண்டுமே நான். ஹிஹி மன்னிக்க. (நன்றாகக் கொட்டி விட்டீர்கள். நடு மண்டையில் வலிக்கிறது. :))

    கீதா ராஜி அனைவரும் மிகச் சிறப்பான விமர்சகர்கள். ஒவ்வொரு பாயிண்டாக கீதா சொல்லியதில் எனக்கு அந்த எடிட்டிங் கைவசப்பட்டதில்லை. நானும் உங்க கேஸ்தான். பலரும் சொல்லிட்டாங்க. எடிட் பண்ணா சொல்ல வந்தது புரியாம போயிடுமோன்னு எலாங்கேட்டா ஆயிடும். யாராவது நமக்காக எடிட் பண்ணாலும் ஐயோ வெட்டிட்டாங்களேன்னு இருக்கும்.

    முதலில் தாங்கள் கூறியபடி போட்டிகள் அறிவிக்கும் முன்னர். இது பற்றிய விவரங்கள் அனுப்பி இருந்தீர்கள். அதில் முடிந்தவரை தொடர்ந்து பதிவேற்றுதலும் போட்டி நடத்துதலும் பரிசு வழங்கலும் உண்டு என்று கூறி இருந்தீர்கள். அதன் படி 100 சதவிகிதம் செயல்பட்டு வருகிறீர்கள். அதற்கு பாராட்டுகள். ஷொட்டுகள். சபாஷ் , பலே பலே எல்லாம். :)

    அடிக்கடி வர இயலாத என்னைப் போன்றவர்களை மன்னிக்கவும்.

    எங்களுக்கெல்லாம் கீதா சொன்னது போல் நீங்கள் ஒரு ஊக்கமூட்டி. எந்த வயதிலும் சுறுசுறுப்பாக எப்படி செயல்படுவது என்பது பற்றிய ஒரு வாழும் எடுத்துக்காட்டு.

    உங்களைப் பற்றி இன்னும் புகழ்ந்து கொண்டே போகலாம். வாசிப்பையும் விமர்சனத் திறமையையும் பலரிடம் அதிகரித்து இருக்கின்றீர்கள். கண்கூடாகத் தெரிகிறது.

    மேலும் அந்தப் பரிசுத் தொகைகள் எல்லாம் என் சோம்பேறித்தனத்தால் எனக்குக் கிடைக்காமல் போகிறது.. ஹ்ம்ம் வடை போச்சே.. இருக்கட்டும். பார்ப்போம் இன்னும் 3 இருக்காமே.

    வேறு ஏதோ வேலைகளில் வந்து போஸ்ட் போட்டு ஃபேஸ்புக் ரெண்டு ஐடி, ஒரு பேஜ், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், இண்டிப்லாகர் எல்லாவற்றிலும் 5 ப்லாக் போஸ்டையும் ஓடவே சரியா இருக்கு. நான் என் இடுகைகளைக் கூட இவ்ளோ பெரிசா எழுதினது இல்ல. :)

    சொக்கா அடுத்த ஆயிரம் பொன்னையும் எனக்கே கொடுப்பா. (முதல்ல என்ன அந்தச் சிறுகதையைப் படிச்சி விமர்சனம் எழுதும் எண்ணத்தைக்கொடு. ) பரிசு கிடைக்காம போயிட்டா எல் கே ஜி புள்ள மாதிரி வெக்கமா இருக்குமே.. எதுக்கும் ட்ரை பண்ணிப் பார்ப்பமா வேண்டாமா..

    ஹிஹி சாரி கோபு சார் நான் மனசுக்குள்ள பேசிக்கிட்டேன். அது வெளியே விழுந்துடுச்சு போல இருக்கு. பார்க்கலாம் சார். வாழ்த்துகள் உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும். தெய்வம் துணை இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க அடுத்த போட்டியில் உங்களோடு போட்டி போட இப்போதே தயாராகிக் கொள்கிறேன். பாராட்டுக்கும் கருத்துரைக்கும் நன்றி தேனம்மை.

      நீக்கு
    2. Thenammai Lakshmanan October 9, 2014 at 2:36 PM
      //வணக்கம் கோபு சார் & கீதா//

      வாங்கோ, வணக்கம்.

      //முழுமையான அலசல்//

      :) சந்தோஷம்.

      //கோபு சார் முதலில் ஒரு விஷயம். இப்போதெல்லாம் 4 வரிக்குமேல் போட்டால் யாரும் படிக்காமல் ஓடிப்போய் விடுகிறார்கள்.//

      இது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. அந்த நாலு வரியையேகூட யாராவது நாலு பேர் மட்டுமே சிரத்தையாகப் படிப்பார்கள் தெரியுமோ? :)

      // நம்மைப்போல விதிவிலக்குகளும் உண்டு.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! SAME BLOOD GROUP ! :) இது எனக்கு ஏற்கனவே நீங்க சொன்னதுதான். என் 200வது பதிவில் http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

      //ஆனால் விமர்சனம் & பின்னூட்டம் எழுத சோம்பல். அல்லது அவரச எண்ட்ரி. 5 ப்லாகிலும் போஸ்ட் போடவேண்டுமே நான். ஹிஹி மன்னிக்க//

      தாங்கள் பெரிய இடம். மிகவும் பிஸியானவர்கள் என எனக்குத்தெரியும். ஏதோ இங்கு வந்து கொஞ்சம் எட்டிப்பார்த்ததில் சந்தோஷமே.

      //(நன்றாகக் கொட்டி விட்டீர்கள். நடு மண்டையில் வலிக்கிறது. :))

      அச்சச்சோ ! VERY VERY SORRY Madam. நான் யாரையோ குட்ட நினைத்தபோது தாங்கள் குறுக்கே வந்து தங்களின் நடு மண்டையை நீட்டி விட்டீர்கள். குட்டிய எனக்கும் கையும் மிகவும் வலிக்குதுதாக்கும். :) ஆயிண்மெண்ட் தடவிக்கொண்டுள்ளேன். :)

      //கீதா ராஜி அனைவரும் மிகச் சிறப்பான விமர்சகர்கள். ஒவ்வொரு பாயிண்டாக கீதா சொல்லியதில் எனக்கு அந்த எடிட்டிங் கைவசப்பட்டதில்லை. நானும் உங்க கேஸ்தான். பலரும் சொல்லிட்டாங்க. எடிட் பண்ணா சொல்ல வந்தது புரியாம போயிடுமோன்னு எலாங்கேட்டா ஆயிடும். யாராவது நமக்காக எடிட் பண்ணாலும் ஐயோ வெட்டிட்டாங்களேன்னு இருக்கும்.//

      அதே அதே ... சபாபதே ! நாம் எழுதுவதை பிறர் வெட்டுவதாவது ! :) விட மட்டோம் .... போராடுவோம் .... வெற்றிபெறுவோம். :)

      //முதலில் தாங்கள் கூறியபடி போட்டிகள் அறிவிக்கும் முன்னர். இது பற்றிய விவரங்கள் அனுப்பி இருந்தீர்கள். அதில் முடிந்தவரை தொடர்ந்து பதிவேற்றுதலும் போட்டி நடத்துதலும் பரிசு வழங்கலும் உண்டு என்று கூறி இருந்தீர்கள். அதன் படி 100 சதவிகிதம் செயல்பட்டு வருகிறீர்கள். அதற்கு பாராட்டுகள். ஷொட்டுகள். சபாஷ் , பலே பலே எல்லாம். :)//

      குறிப்பிட்ட சிலரிடம் இதற்கான வரவேற்பு எப்படியிருக்கும் என 2013 டிஸம்பர் மாதமே கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தேன். பலர் பலவிதமாகச் சொல்லியிருந்தார்கள். ஒரே குழப்பமாகத்தான் இருந்தது. இருந்தும் துணிந்து இறங்கி ஓரளவு வெற்றிகரமாக நடத்தி முடிக்க இருக்கிறேன்.

      //அடிக்கடி வர இயலாத என்னைப் போன்றவர்களை மன்னிக்கவும். //

      அதனால் பரவாயில்லை மேடம். அடுத்தவாரம் இரண்டும், அதற்கு அடுத்த வாரம் இரண்டும் சுவாரஸ்யமான நேயர் கடிதங்கள் வெளியிடப்பட உள்ளன. முடிந்தால் வந்து படித்துப்பாருங்கோ போதும்.

      //எங்களுக்கெல்லாம் கீதா சொன்னது போல் நீங்கள் ஒரு ஊக்கமூட்டி. எந்த வயதிலும் சுறுசுறுப்பாக எப்படி செயல்படுவது என்பது பற்றிய ஒரு வாழும் எடுத்துக்காட்டு. //

      மிக்க நன்றி.

      //உங்களைப் பற்றி இன்னும் புகழ்ந்து கொண்டே போகலாம். வாசிப்பையும் விமர்சனத் திறமையையும் பலரிடம் அதிகரித்து இருக்கின்றீர்கள். கண்கூடாகத் தெரிகிறது.//

      :) சந்தோஷம்.

      //மேலும் அந்தப் பரிசுத் தொகைகள் எல்லாம் என் சோம்பேறித்தனத்தால் எனக்குக் கிடைக்காமல் போகிறது.. ஹ்ம்ம் வடை போச்சே.. இருக்கட்டும். பார்ப்போம் இன்னும் 3 இருக்காமே.//

      ஆம். இன்னும் இரண்டு மட்டுமே உள்ளன.

      //வேறு ஏதோ வேலைகளில் வந்து போஸ்ட் போட்டு ஃபேஸ்புக் ரெண்டு ஐடி, ஒரு பேஜ், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், இண்டிப்லாகர் எல்லாவற்றிலும் 5 ப்லாக் போஸ்டையும் ஓடவே சரியா இருக்கு. நான் என் இடுகைகளைக் கூட இவ்ளோ பெரிசா எழுதினது இல்ல. :)//

      நீங்க பாவம் .... மிகவும் சிரமப்பட்டு எழுதித்தள்ளியுள்ளீர்கள். நான் கூட பின்னூட்ட அகல நீளத்தைப்பார்த்ததும், மஞ்சுபாஷிணி எழுதியதோ என நினைத்து விட்டேன். :)

      //சொக்கா அடுத்த ஆயிரம் பொன்னையும் எனக்கே கொடுப்பா. (முதல்ல என்ன அந்தச் சிறுகதையைப் படிச்சி விமர்சனம் எழுதும் எண்ணத்தைக்கொடு. ) பரிசு கிடைக்காம போயிட்டா எல் கே ஜி புள்ள மாதிரி வெக்கமா இருக்குமே.. எதுக்கும் ட்ரை பண்ணிப் பார்ப்பமா வேண்டாமா..//

      பரிசெல்லாம் கிடக்கட்டும். முடிந்தால் ஒரு ஜாலிக்காக எழுத முயற்சி செய்யுங்கோ. இதில் கட்டாயம் ஏதும் இல்லை. பரிசுக்குத்தேர்வானால் மட்டுமே அது பிறரின் கவனத்திற்குக்கொண்டுவரப்படும். Otherwise தாங்கள் விமர்சனம் எழுதி அனுப்பியதே என்னைத்தவிர வேறு யாருக்குமே தெரியாது. இரகசியமாகவே இருக்கும்.

      //ஹிஹி சாரி கோபு சார் நான் மனசுக்குள்ள பேசிக்கிட்டேன். அது வெளியே விழுந்துடுச்சு போல இருக்கு. பார்க்கலாம் சார். வாழ்த்துகள் உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும். தெய்வம் துணை இருக்கும். //

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ண்ண்ண்ண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  11. நான் எழுதியிருக்கும் கடிதத்தை சிறப்பு செய்யும் விதத்தில் தாங்கள் ஒவ்வொன்றுக்குமான தங்கள் கருத்தை எழுதியிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. தங்களுடைய கடின உழைப்பையும் திட்டமிடலையும் இப்போட்டி பற்றி அறிந்த எவருமே சொல்லாமல் விளங்கிக்கொள்வர். நடுவர் அவர்களுடனான தங்கள் நட்புறவும் புரிதலும் கூட சொல்லாமலே புரிந்துகொள்ள முடிகிறது. தங்களுடைய அன்புக்கும் மனந்திறந்த பாராட்டுகளுக்கும் அன்பான நன்றி சார்.

    மற்ற பின்னூட்டங்களுக்கும் முன்னதாக இதைத்தான் முதலில் எழுதியிருந்தேன். பிரசுரமாகாததை கவனிக்கவில்லை. இப்போதுதான் கவனித்தேன். மறுபடியும் பதிவு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரிOctober 9, 2014 at 5:46 PM

      //மற்ற பின்னூட்டங்களுக்கும் முன்னதாக இதைத்தான் முதலில் எழுதியிருந்தேன். பிரசுரமாகாததை கவனிக்கவில்லை. இப்போதுதான் கவனித்தேன். மறுபடியும் பதிவு செய்கிறேன். //

      பரவாயில்லை. அது ஏனோ எனக்கு வந்து சேரவில்லை என நினைக்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி, மேடம்.- Gopu

      நீக்கு
  12. கீதாமஞ்சரிக்கு முதலில் வாழ்த்துக்கள். அம்மா பக்கத்தில் இருந்தால் தொடர் வெற்றிக்கு சுற்றி போட வேண்டும். அழகான விமர்சனத்திற்கு. சாரின் நிறைகளையும் கதைஓட்டம் தடைபடாமல் இருக்கு அவருக்கு சில ஆலோசனைகள் சொன்னதும் மிக அருமை கீதா.

    எதை செய்தாலும் அதை அருமையாக நிறைவாக செய்ய எடுத்துக் கொள்வதில் சாருக்கு நீங்களும் குறைந்தவர் இல்லை கீதா.

    //விமர்சனப்போட்டிகள் என்னும் பேருந்தில் ஓட்டுநரும் நடத்துநருமாய் கோபு சாரும் ஜீவி சாரும் பொறுப்புகளை வகிக்க, உல்லாசமாய்ப் பயணிக்கிறோம் வாசக விமர்சகர்களாகிய நாங்கள். //
    அழகாய் சொல்லி விட்டீர்கள்.

    ஒத்த அலைவரிசையில் இருப்பவர்களை நட்பு ஒன்று சேர்க்கும் என்பார்கள் , அது போல் ஜீவி சாரும், கோபு சாரும் எப்போதும் வெறும் அருமை என்ற சுருக்கமான கருத்தை விரும்பமாட்டார்கள். அவர்கள் எழுத்தை விமர்சித்து இரண்டு வரியாவது எழுதினால் மகிழ்வார்கள்.கருத்துக்ளுக்கு தொடர்ந்து பதில் கொடுத்து அதைஅருமையான கலந்துரையாடலாக மாற்றும் திறமை படைத்தவர்கள்.

    இருவருமே ஜாடிக்கு ஏற்ற மூடி, நீங்கள் சொல்வது போல் .

    வை.கோ சாருக்கும், ஜீவி சாருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மேடம். தாங்கள் சொன்னதை அம்மாவிடம் சொன்னேன். அகமகிழ்ந்து நன்றி தெரிவித்தார்கள்.

      நீக்கு
    2. கோமதி அரசு October 11, 2014 at 2:44 PM

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீண்ட கருத்துக்களுக்கும், எங்கள் மூவரையும் நன்கு புரிந்துகொண்டு பாராட்டி, வாழ்த்தியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  13. மிக அழகாகவும், அருமையாகவும் அனைத்தையும் எடுத்துச் சொல்லிப் பாராட்டி மகிழ்ந்திருக்கும் கீதமஞ்சரிக்குப் பாராட்டுகள். உண்மையில் இவரின் எழுத்துத் திறமை வியக்க வைக்கிறது. அதோடு நேரம் எப்படிக் கிடைக்கிறது என்பதும் வியப்பாக இருக்கிறது. வைகோ சாரின் தீவிர உழைப்புக்கு இம்மாதிரியான விமரிசனங்களே பெரிய பரிசாகும். இதைவிடப் பெரிய பரிசு ஏதும் அவருக்குத் தேவை இல்லை. இம்மாதிரிப் பல நண்பர்களைப்பெற்ற பரிசை விடப் பெரிய பரிசு வேறெதுவும் இல்லை.

    வைகோ சாருக்கும் பாராட்டுகள். கீதமஞ்சரிக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam October 12, 2014 at 4:46 PM

      //வைகோ சாரின் தீவிர உழைப்புக்கு இம்மாதிரியான விமரிசனங்களே பெரிய பரிசாகும். இதைவிடப் பெரிய பரிசு ஏதும் அவருக்குத் தேவை இல்லை. இம்மாதிரிப் பல நண்பர்களைப்பெற்ற பரிசை விடப் பெரிய பரிசு வேறெதுவும் இல்லை. //

      :) புரிதலுக்கு மிக்க நன்றி. வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். இதுவரை வாழ்க்கையில் எவ்வளவோ பரிசுகள் நானும் வாங்கியாச்சு.

      இருப்பினும் நம் திருமதி கீதா மதிவாணன் அவர்களின் இந்த நேயர் கடிதத்தைவிட மிகப்பெரிய பரிசு வேறு எதுவும் உண்டோ? என்று தான் நானும் நினைத்து மகிழ்கிறேன். அதையே தாங்களும் இங்கு சொல்லி விட்டீர்கள். :) நன்றி.

      இருப்பினும் தங்களுடையது உள்பட இன்னும் மேலும் சிலரின் நேயர் கடிதங்கள் வெளியிடப்பட உள்ளன அல்லவா! அவற்றையும் படித்துவிட்டு அதன்பிறகு ஓர் இறுதி முடிவுக்கு வாங்கோ / எனக்கும் இதுபோல அவற்றைப்பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லுங்கோ.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
    2. Geetha Sambasivam October 12, 2014 at 4:46 PM

      //வைகோ சாருக்கும் பாராட்டுகள். கீதமஞ்சரிக்கும் பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - கோபு

      நீக்கு
    3. தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மேடம். நேரம்தான் பெரும்பிரச்சனை. கோபு சாரையும் அவருடைய சுறுசுறுப்பையும் நினைத்துக்கொண்ட மாத்திரத்தில் ஆச்சர்யமாக இருக்கும். எப்படியும் விமர்சனம் எழுத நேரம் ஒதுக்கிவிடுவேன். நம் திறமையை வெளிப்படுத்த அமைந்த அருமையா வாய்ப்பு அல்லவா அது!

      நீக்கு
  14. தங்கள் பணியைப் பாராட்ட வார்த்தையில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... October 29, 2014 at 10:44 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்கள் பணியைப் பாராட்ட வார்த்தையில்லை...//

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. VGK

      நீக்கு
  15. கீதா மதிவாணன் மிக அருமையாக போட்டியைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஒவ்வொருவரும் என்னமா அலசி ஆராய்ந்து கருத்தெல்லாம் சொல்றா..அப்பாடியோ இதெல்லாம் நமக்கு தெரியாத கலை. ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்து ஜோரா ஒரு கைதட்டலையும் கொடுத்துட்டு போயிண்டே இருப்பேன் அம்புட்டுதேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் September 4, 2015 at 1:51 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //ஒவ்வொருவரும் என்னமா அலசி ஆராய்ந்து கருத்தெல்லாம் சொல்றா.. //

      கீதமஞ்சரி வலைத்தளப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் மிகச்சிறப்பானதோர் எழுத்தாளர். அவர்கள் எதையும் அலசி ஆராயாமல் கருத்துச்சொல்லவே மாட்டார்கள்.

      அவர்களின் எழுத்துக்களைப் படிக்க எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும். அவை கற்கண்டாக இனிக்கும்.

      இப்போதுகூட சமீபத்தில் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ என்ற தலைப்பிலான நூலை நானும் சமீபத்தில்தான் .... இந்த அட்டைக்கு அந்த அட்டை .... முழுவதுமாக மனதில் வாங்கிக்கொண்டு ரசித்துப்படித்து முடித்துள்ளேன்.

      என்றாவது ஒரு நாள், ‘என்றாவது ஒரு நாள்’ நூல் பற்றி என்னுடைய புகழுரைக் கருத்துக்கள் என் வலைத்தளத்தினில் (கூடிய சீக்கிரமே) வெளியிட நினைத்துள்ளேன்.

      //அப்பாடியோ, இதெல்லாம் நமக்கு தெரியாத கலை.//

      கரெக்ட். உங்களைப்போலவேதான் நானும். நல்லவேளையாக ’நமக்கு’ என என்னையும் தங்களுடன் சேர்த்துச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி :)))))

      //ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்து ஜோரா ஒரு கைதட்டலையும் கொடுத்துட்டு போயிண்டே இருப்பேன்.
      அம்புட்டுதேன்.//

      அதுதான் நமக்கு (நம் இருவருக்கும்) நல்லது. அப்படியே செய்வோம். :) மிக்க நன்றீங்கோ.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  17. ஹாட்ரிக்கா அடிக்கறவங்களுக்கு கடிதம் எழுதுவதா கடினம். மெத்த சுலபமம்மா கீதா உங்களுக்கு அது.

    வாழ்த்துக்கள் கீதா மதிவாணன்.

    பதிலளிநீக்கு
  18. பெரிசு கடதாசி பெரிசு பெரிசா கமண்டு அல்லா படிச்சிகிட்டு போயிகிட்டேஇருக்கீனுங்க.

    பதிலளிநீக்கு
  19. விமரிசனம்லாம் சிறப்பாக எழுதியவருக்கு நேயர்கடிதம் எழுதவா சொல்லித்தரணும். சிறப்பா எழுதி இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  20. //ஒரு படைப்பை மாற்றுக்கண்ணோட்டத்துடன் பார்க்கவும், மாற்றுச்சிந்தனையோடு அணுகவுமான புதியதொரு வாசிப்பனுபவத்தையும் எழுத்தனுபவத்தையும் வழங்கியுள்ள இப்புதுமையான போட்டித்தொடரை உருவாக்கி செயலாக்கம் வடித்த கோபு சார் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாய் நின்ற ஜீவி சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். // உண்மைதான். நன்றி.

    பதிலளிநீக்கு
  21. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு