என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]



முக்கிய அறிவிப்பு 

இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான 

கடைசி கதையாக இருப்பதால்
இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து

இன்று வெள்ளிக்கிழமை முதல்
 வரும் திங்கட்கிழமை வரை 
தினம் ஒரு பகுதியாக
வெளியிட உத்தேசித்துள்ளேன்.

நான்கு பகுதிகளையும் 
பொறுமையாகப் படித்து
ஒரே விமர்சனமாக 
எழுதி அனுப்பி வைத்தால் போதுமானது. 


விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

இறுதி நாள்: 26.10.2014 
ஞாயிற்றுக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 40

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:




மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதைத் தொடர் 

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


" என்னங்க என்னை இப்படி மாத்தி மாத்தி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க! சீக்கரம் எழுந்துருங்க” அனு முனகினாள்.

அவள் சொல்வது எதையும் மனோ காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.

“ப்ளீஸ் அனு, நீ டெலிவெரிக்குப் புறப்பட்டுப் போய் விட்டால் எனக்கு எவ்வளவு போர் அடிக்கும் தெரியுமா; ஐ வில் மிஸ் யூ ய லாட்; இப்போ என்னைத் தடுக்காதே அனு”

“என்னங்க நீங்க! மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டது போல, புள்ளத்தாச்சியான என்னை இப்படிக்கட்டிக்கிட்டு விடமாட்டேன்கிறீங்க, எனக்கு ரொம்ப சிரமமா இருக்குதுங்க”

”கொஞ்சநேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அனு” மோப்பநாய் போல அவளின் மணிவயிற்றின் மேல் தன் முகத்தை வைத்து ஏதோ முகர்ந்தவாறு மெய்மறந்து அமர்ந்திருந்தான் மனோ.

அவளும் தன் அன்புக் கணவருடன் தனக்கு வரவிருக்கும் தற்காலிகப் பிரிவை எண்ணி, பொறுமையாக, அவருக்கு ஆறுதலாக தன் வலது கையால். அவர் தலையைக்கோதி விட்டுக் கொண்டிருந்தாள். தன் சரீர சிரமத்தால் தன் இடது கையைக் கட்டிலில் ஊன்றியபடி சற்றே சரிந்து அமர்ந்திருந்தாள்.

“சீக்கரமா எழுந்திருங்க, எனக்கு கொஞ்சம்  அப்படியே காலை நீட்டி படுத்துக்கணும் போல இருக்குதுங்க” என்றாள் அனு.

“அடடா, அப்படியா, சரி ... சரி, வா .... வா,  அப்போ நாம படுத்துக்கலாம்” என்றான்.

“சீ .. போங்க! உங்களுக்கு வேறு வேலையே இல்லை. எப்போப் பார்த்தாலும் நேரம் காலம் தெரியாம விளையாட்டுத்தான்”  என்று சிணுங்கினாள்.

மனோ அவளை விட்டு நகருவதாகவே தெரியவில்லை. அன்பினால் அவன் அவளைக் கட்டிப்போட்டுள்ளான் அல்லவா!

”உள்ளே இந்தக்குழந்தை படுத்துது ! வெளியே நீங்க இப்படி படுத்துறீங்க !! உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டு, நான் தவியாத் தவிக்கிறேன், பாருங்க;

பேசாம நீங்க உங்க மனசை மாத்திக்கிட்டு கொஞ்சமாவது பக்தி செலுத்துங்க; கோயிலுக்குப் போயிட்டு வாங்க; இங்கே பக்கத்திலே நிறைய பாகவதாள் எல்லாம் வந்து ஜேஜேன்னு திவ்ய நாம பஜனை நடக்குது. அங்கு போயிட்டு வாங்க;  பஜனை செய்வதைக் கண்ணால் பார்த்தாலும், பக்திப்பாடல்களைக் காதால் கேட்டாலும் புண்ணியம் உண்டுங்க; 


எனக்கு நல்லபடியா ’குட்டி மனோ’ பிறக்கணும்னு உம்மாச்சியை வேண்டிகிட்டு வாங்க” அன்புடன் ஆலோசனை சொன்னாள் அனு. 

“அதெல்லாம் முடியாது, எனக்கு குட்டிமனோ வேண்டாம்; ’அனுக்குட்டி’ தான் பிறக்கணும்;  மேலும் உன்னைவிட்டு ஒரு நிமிஷம் கூட என்னால் நகரவே முடியாது, அனு; 

அங்கேயெல்லாம் போய் பஜனை செய்தால் எனக்கு சரிப்பட்டு வராது; வேண்டுமானால் நாம் இருவரும் இங்கேயே ................” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான்.


இதைக்கேட்டதும் அனு அவனைப் பார்த்து கோபமாக முறைக்க ஆரம்பித்தாள். 


”பூஜை ரூம் நிறைய பக்திப் பாடல், பஜனைப்பாடல் புத்தகங்களாகச் சேர்த்து வைத்திருக்கிறாய் அல்லவா, அதை ஏதாவது எடுத்து நீ பாடினால் நானும் உன்னுடன் கூடவே பாடுகிறேன் என்று சொல்லவந்தேன்” என்று சொல்லி சமாளித்தான்.

உள்ளூரிலேயே, அவர்கள் வாழும் அதே வீட்டிலேயே, கீழ் போர்ஷனில் அனுவின் அம்மா இருப்பதால், உதவி தேவைப்பட்டால் கடைசி நேரத்தில் அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான் மனோ. 


அவர்கள் அனுவுக்கு ஒத்தாசையாக இருக்கிறேன் என்று சொல்லி இங்கு முன்கூட்டியே வந்து உட்கார்ந்து விட்டால், இவர்களின் பிரைவஸிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமே என்ற பயம் மனோவுக்கு.


சற்று நேரத்தில் தன் வயிற்றை தன் இரண்டு கைகளாலும் தடவி விட்டுக்கொண்டு சற்றே நெளிய ஆரம்பித்தாள், அனு.


“ஆ ... ஆ ... அய்யோ, அம்மா! ரொம்ப பளிச்சு பளிச்சுன்னு வலிக்குதுங்க; அடிவயிற்றைச் சுருக்கு சுருக்குன்னு குத்துதுங்க; எழுந்து ஓடிப்போய் கீழ்வீட்டிலுள்ள என் அம்மாவை இங்கே அனுப்பிட்டு, நீங்க போய் டாக்ஸி பிடிச்சுட்டு வந்திடுங்க, ஆஸ்பத்தரியிலே அட்மிட் செய்துடுங்க”  அனு பெரிதாக அலற ஆரம்பித்தாள். 

அனு அலறிய அலறலில், அவளை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த தன் கைகளை விலக்கிக்கொண்டு விட்டான் மனோ. 

சட்டெனத் துள்ளி எழுந்தான், மனோ.




தொடரும்

    


/ இந்தக்கதையின் தொடர்ச்சி 
நாளை வெளியாகும் /

காணத்தவறாதீர்கள் !

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !!

இதுவே இந்தப்போட்டியில்
கலந்துகொள்ளத் தங்களுக்கான 
இறுதி வாய்ப்பு !!!


      


தகவலுக்காக


 

 


VGK-38 - மலரே ..... குறிஞ்சி மலரே !
விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள்
25.10.2014 சனிக்கிழமை
முதல் வெளியிடப்படும்.


21.10.2014 முதல் 24.10.2014 வரை
தினமும் ஒரு நேயர் கடிதம் வீதம் வெளியிடப்படும்


 

என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்






27 கருத்துகள்:

  1. தை வெள்ளிகிழமை அன்று ஜாங்கிரியாக
    இனிப்புடன் ஆரம்பித்த சிறுகதை விமர்சன ரயில் வண்டி தொடர் மனசுக்குள் மத்தாப்பூ ஆக பிரகாசம் பரப்பி தீபாவளி அன்று
    இலக்கை அடையுமாறு திட்டமிட்ட சிந்தனைக்கு
    மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2014 at 8:36 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தை வெள்ளிக்கிழமை அன்று ஜாங்கிரியாக இனிப்புடன் ஆரம்பித்த சிறுகதை விமர்சன ரயில் வண்டி தொடர் மனசுக்குள் மத்தாப்பூ ஆக பிரகாசம் பரப்பி தீபாவளி
      அன்று இலக்கை அடையுமாறு திட்டமிட்ட சிந்தனைக்கு
      மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்..//

      தை வெள்ளிக்கிழமையன்று தூக்கு நிறைய ஜாங்கிரிகளைத் தூக்கமுடியாமல் தூக்கிவந்து [ஹனுமனுக்கு ஜாங்கிரி மாலைகளையும் தனியாக எடுத்து வந்து - பேச்சுத்துணைக்குக் கைக்குழந்தையையும் கூடவே
      கூட்டிவந்து] என்னுடன் இந்த இரயில் பயணத்தை இறுதி வரை கடந்த 40 வாரங்களாகத் தொடர்ந்து வந்துள்ளீர்கள்.

      என் இந்தப் பயணம் இன்பமாக இருந்ததில் தங்களின் பெரும் பங்கு மறக்கவே முடியாததாக அமைந்து போனதில் எனக்கும் என் ’மனசுக்குள் மத்தாப்பூ’வாக மகிழ்ச்சியையே அளித்துள்ளது.

      துரதிஷ்டவசமாக, நாம் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் நெருங்க உள்ளது.

      இலக்கை அடையுமாறு திட்டமிட்டேன், வெற்றியை
      நெருங்கி விட்டேன் எனத் தாங்களே சொல்லி விட்டீர்கள்.
      சந்தோஷம்.

      ஆனால் நான் திட்டமிட்ட இலக்கினை அடைந்து விட்டதாக நான் இன்னும் இப்போதும் நினைக்கவே இல்லை என்பதை மட்டும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      ’இரயில் பயணமாக’ இணைந்து பிறகு பிரியப்போவது
      மனதுக்குக் கஷ்டமாகவே உள்ளது. என்ன செய்வது?

      தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த இனிய
      பாராட்டுகள் +வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய
      அன்பு நன்றிகள்.

      வாழ்க்கைப்பயணத்தில் என்னால் என்றும் மறக்கவே முடியாத ஒருசிலரில் தாங்களும் ஒருவரே !

      அனைத்துக்கும் நன்றியுடன் VGK

      நீக்கு
  2. ஆரம்பம் அசத்தல்! தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. டிவில விளம்பரம் பண்றவங்க உங்களைப் பார்த்து கத்துக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Durai A October 17, 2014 at 5:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //டிவில விளம்பரம் பண்றவங்க உங்களைப் பார்த்து கத்துக்கலாமோ?//

      அவர்கள் கிடக்கிறார்கள் !

      தாங்கள் காணத்தவறாதீர்கள் !!
      கருத்தளிக்க மறவாதீர்கள் !!!

      நீக்கு
  4. அட இது சிறுகதையா?
    அல்லது தொடர்கதையா?
    முதல் பகுதி முடியும்போதே...
    அடுத்து என்ன என்கிற
    ஆர்வத்தை
    உருவாக்கிவிட்டதே!
    தொடர்ச்சி நாளைதானா?

    பதிலளிநீக்கு
  5. அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 17, 2014 at 9:33 PM

    வாருங்கள், நண்பரே, வணக்கம்.

    //அட இது சிறுகதையா? அல்லது தொடர்கதையா?//

    மிகச்சிறிய தொடர்கதை என்று வைத்துக்கொள்ளுங்கள். :)

    //முதல் பகுதி முடியும்போதே... அடுத்து என்ன என்கிற
    ஆர்வத்தை உருவாக்கிவிட்டதே!//

    அதே ஆர்வம் ஒவ்வொரு பகுதிகளின் முடிவின் போதும் தங்களுக்கு உருவாகிக்கொண்டே இருக்கும். கவலையே வேண்டாம்.

    போட்டியின் இறுதிக்கதை அல்லவா ! அதனால் இது சற்றே சுவாரஸ்யமாக த்ரில்லிங்காக இருக்க வேண்டாமா? சஸ்பென்ஸ் கொடுத்து ‘தொடரும்’ போட்டுக்கொண்டே இருக்க வேண்டாமா? :)

    //தொடர்ச்சி நாளைதானா?//

    நாளை அல்ல இன்று நள்ளிரவே இந்திய நேரம் 12.05 க்குப் பிறகு வெளியிட முயற்சிக்கப்படும். தினமும் அப்படியே ! :)

    காணத்தவறாதீர்கள். தூங்கி விடாதீர்கள். போட்டியில் கலந்துகொள்ள மறவாதீர்கள். இன்னும் இருப்பதோ ஒரே ஒரு சான்ஸ் மட்டுமே ! :)))))) ஆஹ்ஹஹ்ஹஹ்ஹா !

    அதன்பிறகு விடுதலை .... விடுதலை .... விடுதலை ..... உங்களுக்கு மட்டுமல்ல ..... எனக்கும் தான் ! :)

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  6. கதை சுவாரஸ்யமாகப் போகிறது. அடுத்து....... என்று கேட்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது உங்கள் கதை, கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam October 17, 2014 at 10:08 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கதை சுவாரஸ்யமாகப் போகிறது. அடுத்து....... என்று கேட்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது உங்கள் கதை, கோபு சார்.//

      இதே சுவாரஸ்யமும் ஆர்வமும் இறுதிவரை உங்களுக்குத் தொடரும். அதனால் மட்டுமே என் இந்தத் ‘தொடரும்’ போடப்பட்டுள்ள தொடரும் ..... :)))))

      தங்களின் அன்பான வருகைக்கும், சுவாரஸ்யத்துடன் கூடிய ஆர்வமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  7. சிறிசுகளின் ஊடல் நன்றாக வர்ணனை. அனுபவித்துப் படிக்க முடியும் சிறிசுகளின் மனப்போக்கு என பலத்த அடிவாரம்.
    அடுத்து படிக்க என்ன ? அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi October 18, 2014 at 1:47 PM

      வாங்கோ, நமஸ்காரம்.

      //சிறிசுகளின் ஊடல் நன்றாக வர்ணனை. அனுபவித்துப் படிக்க முடியும் சிறிசுகளின் மனப்போக்கு என பலத்த அடிவாரம்.//

      மிகவும் சந்தோஷம் மாமி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      //அடுத்து படிக்க என்ன ? அன்புடன்//

      பகுதி-2 வெளியாகிவிட்டது ... இதோ இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-2-of-4.html

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  8. கதை வெகு அருமை. கணவன், மனைவி உரையாடல் அனைத்தும் கனவு என்று தெரிந்து விட்டது ,இரண்டாவதை முதலில் படித்து விட்டேன் தவறுதலாக.
    அருமை கணவன் மனைவி உரையாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு October 19, 2014 at 8:20 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கதை வெகு அருமை.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      //கணவன், மனைவி உரையாடல் அனைத்தும் கனவு என்று தெரிந்து விட்டது//

      அச்சச்சோ :)))))

      //இரண்டாவதை முதலில் படித்து விட்டேன் தவறுதலாக.//

      அதானே பார்த்தேன்.

      சாம்பார் சாதம்..... பிறகு ரஸம் சாதம்..... அதன் பிறகு தயிர் சாதம் எனச் சாப்பிட வேண்டாமோ?

      அநியாயமாக இப்படி மாற்றிச் சாப்பிட்டு விட்டீர்களே ! :)

      //அருமை கணவன் மனைவி உரையாடல்.//

      எப்படிச்சாப்பிட்டாலும் ‘அருமை’ யாக இருப்பதாகச் சொல்லிவிட்டீர்கள், அதுபோதும் எனக்கு.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  9. இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-40.html

    போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    VGK

    பதிலளிநீக்கு
  10. கதை நல்லா ஆரம்பிச்சிருக்கு. அடுத்து என்ன வெயிட்டிஙுகு

    பதிலளிநீக்கு
  11. படித்த கதைதான். ஆனாலும் எப்பொழுதும் படிக்கத்தூண்டும் கதை.

    பதிலளிநீக்கு
  12. கமண்டு போட்ட நெனப்புகீது அதயே இங்க சொல்லினவா புருசன் யொஞ்சாதி பேச்செல்லா ஒட்டு கேட்டினிங்களா அல்லா காட்டி சொந்த அனுபவமா..

    பதிலளிநீக்கு
  13. கதை ரொம்ப நல்லா இருக்கு கணவன் மனைவி உரையாடலில் அவர்களின் அன்னியோன்யம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  14. ரொமான்டிக் பிகினிங்...முதல் டுவிஸ்டோட...தொடரும்...

    பதிலளிநீக்கு
  15. இடைவிடாத(!?) சிந்தனையுடன் இருக்கும் மனநல மருத்துவமனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ , பிரசவத்திற்காகப் பிரிந்து செல்லும் தன் மனைவியைக் கொஞ்சுவதாய்க் கதையைத் துவங்கி, பிரசவ வலி வந்ததாய்க் காண்பித்து கதையை நிறுத்தி, நமக்குள் விறுவிறுப்பைக் கூட்டி அடுத்த பகுதிக்குச் செல்கையில் அது வெறும் கனவு எனக் காண்பிக்கையில் சற்றே ஏமாற்றம் அடைந்தாலும் அடுத்தது என்ன? எனும் எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது.
    அனுவின் வீட்டு மாடிப் போர்ஷனில் மனநலமருத்துவர் மனோ (என்ன பெயர்ப் பொருத்தம்!) வாடகைக்குத் தங்கியுள்ள விவரம் அதன்பிறகுதான் நமக்குப் புரிகிறது.
    தொடர்வோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  16. இந்தப் போட்டிக்கான, இந்த விறுவிறுப்பான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    40 + 32 + 36 + 43 = 151

    அதற்கான இணைப்புகள் (பகுதி-1 to பகுதி-4):

    http://gopu1949.blogspot.in/2011/10/1-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/10/2-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/10/3-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/10/4-of-4.html

    பதிலளிநீக்கு
  17. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-03-03-third-prize-winners.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு