About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, January 2, 2015

எங்கள் பயணம் [துபாய்-17]


To MY BLOG


02.01.2011 To 02.01.2015











அடியேன் 02.01.2011 அன்று முதன்முதலாக 

என் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன். 

   02.01.2012 

முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று 

கொடுத்துள்ள மொத்தப்பதிவுகள்: 200





                                                      

      
02.01.2013 

இரண்டாம் ஆண்டு நிறைவு நாளன்று 

கொடுத்துள்ள மொத்தப்பதிவுகள்: 316  









                                                      
  02.01.2014

மூன்றாம் ஆண்டு நிறைவு நாளன்று 

கொடுத்துள்ள மொத்தப்பதிவுகள்: 459










இன்று 02.01.2015 


என் வலைத்தளத்திற்கு


நான்காவது பிறந்த நாள்





நேற்றுடன் நிறைவடைந்த இந்த முதல்  


நான்கு ஆண்டுகளில் 697 பதிவுகள்  


என்னால் கொடுக்க முடிந்துள்ளதில் மகிழ்ச்சி. 






2011 முதல் 2014 வரை கடந்த நான்கு ஆண்டுகளில்


[4*52=208 வாரங்களில்] 


என் பெயரும் என் வலைத்தளமும்



வலைச்சரத்தில் 108 முறை 


பாராட்டிப் புகழ்ந்து பேசி


வெவ்வேறு வலைச்சர ஆசிரியர்களால் 


அறிமுகம் செய்யப்பட்டுள்ளதில் மேலும் மகிழ்ச்சி.




BLOG STATUS


 371 FOLLOWERS 


Total Page Views: 2,85,190


 



TOTAL NUMBER OF COMMENTS 


SO FAR RECEIVED: 26,171





G+ STATUS:





376 FOLLOWERS


27,50,332 VIEWS





இதுவரை தொடர்ந்து ஆதரவு அளித்து 


ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அன்புள்ளங்கள்


அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்


-oooooooooooooooooooooooooooooooooooooooo-





2004-ம் ஆண்டு துபாய் தமிழ்ச்சங்க 

ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில்

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு

விளையாட்டுப்போட்டிகளில் வென்றவர்களுக்கு

பரிசு அளித்து சிறப்புரை ஆற்றியபோது

எடுக்கப்பட்ட படங்கள்.


 2004-இல் துபாய் தங்கக்கடலில் 
எங்கள் வாரிசுத் தங்கங்களுடன் 

10 ஆண்டுகளுக்குப்பின் 
இப்போது மகன் குடியுள்ள வீட்டுக்குச்செல்லும் முன்
நுழைவாயிலில் பளிங்குத்தரையில் 
பளிச்சென்று ஓர் அழியாக்கோலம்


 

இங்கு எங்கள் ஊரில் எங்களைப்போன்ற சம்சாரிகள் வீடுகளில் பால், தயிர், மோர் இவற்றை பாதுகாத்து கையாள்வதும் நிர்வகிப்பதும் சற்றே சிரமமான காரியமாகும். பழைய பால், புதிய பால், காய்ச்சிய பால், காய்ச்சாத பச்சைப்பால், உரை ஊற்றிய தயிர் / மோர், தயிர் மோரில் புளித்தது / புளிக்காதது என பல பாத்திரங்களில் FRIDGE இல் வைத்துப்பாதுகாப்போம். எடுத்து உபயோகிக்கும் போது இதில் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்படும்.

துபாயில் இந்தத்தொல்லையெல்லாம் இல்லவே இல்லை.  நல்ல தரமான பாலும், தோசைமாவு போல கெட்டியான புளிக்காத  மோரும் அழகான மிகத்தரமான ப்ளாஸ்டிக் கேனில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து மால்களிலும் இவை அன்றாடம் FRESH ஆகக் கிடைக்கின்றன. 

நாங்கள் ஊர் திரும்பும்போது 2 ஒரு லிட்டர் + 2 அரை லிட்டர் மோர் வாங்கி வந்தோம். AL RAWABI - FRESH LABAN - ROBIVIA - FROM 100% FRESH COW'S MILK - PRODUCTION DATE: 12.12.2014 - EXPIRY DATE: 18.12.2014 எனப்போட்டிருந்தது. ருசியோ ருசியாக இருந்தது. 

நம்மூரில் நாம் முழுத்தேங்காயை வாங்கிவந்து, அதைக் கஷ்டப்பட்டு நார் உரித்து, உடைத்து, அழுகல் இல்லையா என சோதித்து, தேங்காய்த்துருவியில் அதைத் துருவி சமையலுக்கு உபயோகிப்பது தானே வழக்கம். அங்கு துபாயில் இந்தக் கஷ்டமெல்லாம் இல்லை. தேங்காய் எனக்கேட்டாலே அழகாக பூப்போலத் துருவிய தேங்காயை ஒரு டப்பாவில் அடைத்து ஜில்லென்று ரெடிமேடாக விற்கிறார்கள். அதில் கொட்டாங்கச்சி துண்டு ஏதும் கலந்து இருக்காது.  வெள்ளை வெளேர் என துருவல் ஜோராக இருக்கும். அப்படியே சமையலுக்கு உபயோகிக்க வேண்டியது தான். எவ்வளவு சுலபமான வேலை !

அதுபோல ஒவ்வொரு மால்களிலும் FRESH ஆன பலவித காய்கறிகள் ஜில்லென்று குளிர்சாதன அறையில் வைத்து விற்கிறார்கள். கத்திரிக்காய் என்றால் அதில் சுமார் இருபது நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட தரமான கத்தரிக்காய்களாக தனித்தனியாக அந்தந்த நாடுகளின் பெயர்களுடன் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஷேப்பில் இருக்கும். அதுபோலவே மற்ற அனைத்துக்காய்கறிகளுமே.


நம் ஊரில் கார்த்திகை மாதம் ஆங்காங்கே சில வீடுகளில் விளக்கேற்றி வைப்போம். கோயில்களில் விளக்கு எரியும். சில மலைகளில் தீபம் ஏற்றப்படும். இங்கு துபாயிலோ தினமும் வருடம் முழுவதும் 365 நாட்களும் அனைத்து கட்டடங்களும் மின் ஒளியில் ஜொலிக்கின்றன. 


இரவினில் துபாய் மாலிலிருந்து ஒரு மிகப்பெரிய சாலை வழியே காரில் வந்தபோது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மரங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜகத்ஜோதியாகத் திகழ்ந்ததைக்கண்டு வியந்து போனேன். தமிழ்நாட்டிலிருந்து போன எனக்கு மின்தடையில்லா பூலோக சொர்க்கத்தைக்காண அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டேன். வேறென்ன செய்ய ?




oooooOooooo


பொதுவாக அந்த நாட்டில் இரவா பகலா என வித்யாசம் தெரியாமல் மின் விளக்குகளால் எல்லா இடங்களும் எப்போதும் ஜகத்ஜோதியாகவே காட்சியளிக்கின்றன.  பெண்களோ குழந்தைகளோ நள்ளிரவில் எங்கும் பயமில்லாமல் சென்று வரலாம். பல நாடுகளிலிருந்து பலரும் பிழைப்பைத் தேடி மட்டும் அங்கு வந்து தங்கியிருப்பதாலும்,  அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் சற்றே கடுமையானதாக இருப்பதாகச் சொல்வதாலும், யாரும் எந்தத்தவறும் துணிந்து செய்ய அஞ்சி நடுங்குவதாகத் தோன்றுகிறது.  

பொதுவாக அந்த நாட்டின் வம்சாவழியினரைவிட, பிழைப்பைத்தேடி பல நாடுகளிலிருந்து அங்கு குடிவந்துள்ளவர்களும்,  அன்றாடம் பல நாடுகளிலிருந்து வந்து போகும் சுற்றுலாப்பயணிகளுமே  மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

எல்லோருக்குமே அவரவர் உழைப்புக்கு ஏற்ப ஓரளவு நல்ல ஊதியம் தரப்படுவதால், பொதுவாக பிறர் பொருளுக்கு யாரும் ஆசைப்படுவது இல்லை. ஷாப்பிங் மால்கள் போன்ற அனைத்துப் பொது இடங்களிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகள் எங்கும் தப்பித்து ஓடிவிடவே இயலாது.  அவர்கள் நாட்டுக்குள் நுழையும் போதே AIRPORT இல் அனைவர் கண்களையும் SCAN செய்து பதிவு செய்து வைத்து விடுகிறார்கள். 

தெருக்களில் சாக்கடைகளையோ, குப்பைகளையோ பார்க்க முடியாது. கொசுத்தொல்லை இல்லை. நம்ம ஊர் போல ஆங்காங்கே தெருக்களின் மேலே தொங்கும் மின்சாரக்கம்பிகளையும் பார்க்க இயலவில்லை. சுத்தமும் சுகாதாரமும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. எங்கு திரும்பினாலும் மூடியுடன் கூடிய அழகிய குப்பைத்தொட்டிகள் [DUST BINS] காணப்படுகின்றன.  சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை மிகவும் பொறுப்புடன் பயன் படுத்துகிறார்கள். தெருக்களில் கீழே எங்கும் குப்பைகளைச் சிந்துவதோ சிதறுவதோ கிடையாது. 

எந்த ஷாப்பிங் மாலுக்குச்சென்றாலும், ஆங்காங்கே பளிச்சென்ற பராமரிப்புடன் டாய்லெட் வசதிகள் உள்ளன. தண்ணீருக்கோ மின்சாரத்திற்கோ பஞ்சமே இல்லை. இதைத்தவிர துடைத்தெரியும் காகிதங்கள் வேறு. டாய்லெட் போய் உபயோகித்துத் திரும்ப நம்ம ஊர்கள் போல சில்லரையோ நோட்டுக்களோ ஏதும் தேவையில்லை. எங்குமே இவை எல்லாமே இலவச சேவைகள் மட்டுமே. 




கார்கள் வழுக்கிச்செல்ல வசதியாக அகன்ற தரமான சாலைகள். குண்டு குழி கிடையாது. கல், மண், மேடு பள்ளங்கள் ஏதும் கிடையாது. சாலையின் குறுக்கே மனிதர்களோ, ஆடு, மாடு, நாய், பன்றி போன்ற பிராணிகளோ வரக்கூடும் என்ற கவலையே இல்லாமல் வாகனம் ஓட்டலாம். SPEED BREAKERS என்று எங்கும் ஏதும் கிடையாது. 


 






40-60, 60-80, 80-120 Kms Speed களுக்குத் தகுந்தாற்போல எங்கும் மூன்று அல்லது நான்கு வாகனங்கள் செல்ல வசதியாக அகலமான சாலைகள் உள்ளன. எதிர்புறம் எந்த வாகனமும் வந்து நம் வாகனத்தில் மோதாது. எதிர்புறம் வரும் வாகனங்களுக்கு இதே போல இணையான தனிப் பாதை. அதுபோல அங்கெல்லாம் வண்டியில் யாரும் ஹாரன் அடிப்பதே கிடையாது. ஹாரன் அடிப்பது அகெளரவமான செயலாகக் கருதுகிறார்கள்.  ஏதேனும் மிகுந்த ஆபத்தான சூழ்நிலை என்றால் மட்டும் மிக அபூர்வமாக மிகச்சிறிய ஹாரன் சப்தம் கேட்க முடிகிறது. SIGNAL தவிர வேறு எங்கும் TRAFFIC JAM ஏற்பட வாய்ப்பே இல்லை. SIGNAL இல் நூற்றுக்கணக்கான வண்டிகள் நின்றாலும் SIGNAL மாறியதும், ஒருசில நிமிடங்களில் அவை அனைத்துமே பறந்து சென்று விடும்.


 


ஆனாலும் INTERNATIONAL DRIVING LICENCE வைத்துக்கொண்டு அங்கு வெகு வேகமாகக் வாகனங்கள் ஓட்டுபவர்களால்கூட, இங்கு எங்கள் திருச்சியின் காந்தி மார்க்கெட் [பெரிய மார்க்கெட்] பக்கம் வண்டி ஓட்டவே முடியாது. இங்குள்ள எங்கள் ஓட்டுனர்கள் மட்டுமே நல்ல திறமைசாலிகள் + கில்லாடிகள் என நான் நினைத்துக்கொண்டேன். குண்டும் குழியுமான குறுகிய ரோட்டில், குறுக்கே எவன் வருவான், எது வரும் என்றே சொல்லமுடியாத ரோட்டில், அனைவரின் காதும் கிழிந்து செவிடாகி விடும் விதமாக ஓயாது ஏர் ஹாரன் அடித்துக்கொண்டு ’சத்திரம் பஸ் ஸ்டாண்டு முதல் பாய்லர் தொழிற்சாலை வரை’ எவ்வளவு வேகமாக பஸ்ஸைக் கஷ்டப்பட்டு ஓட்டிச்செல்கிறார்கள் ! எதிரே வரும் பேருந்துக்கும் இவர் ஓட்டிச்செல்லும் பேருந்துக்கும் நடுவே இரண்டு அங்குல இடைவெளியுடன் எவ்வளவு சாமர்த்தியமாக மோதாமல், உரசாமல், மிக லாவகமாக  ஓட்டிச் செல்கின்றனர் ! நம்மாட்களால் மட்டுமே இதெல்லாம் சாதிக்க முடியும் ! :)


oooooOooooo




13.12.2014 இரவு நாங்கள் புறப்படும் முன்பு
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் 
ஒரு சிறு பகுதியின் தோற்றம்.

துபாயிலிருந்து திருச்சிக்கான 
விமானப் படிக்கட்டுகளில் நாங்கள் ஏறும் முன்பு

துபாய் .... திருச்சி .... விமானப்பயணத்தின் போது

திருச்சி விமான நிலையத்திலிருந்து
14.12.2014 அதிகாலை 2 மணி சுமாருக்கு 
சற்றே திகிலுடன் :) }
வெளியேறும்போது  இங்குள்ள எங்கள் 
இளைய மகனால் தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட படம்.


[ நல்லபடியா திருச்சி வந்து சேர்ந்தாச்சு
பிள்ளையாருக்கு நாலு தேங்காயும் உடைச்சாச்சு ]


ஆனாலும் பயணக்கட்டுரை தொடரும்

25 comments:

  1. தொடரட்டும் உங்கள் வெற்றி நடை...
    4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்த தங்கள் தளத்துக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. மனிதனுக்கு சட்டதிட்டங்கள் இல்லாவிட்டால் ஒழுங்காக இருக்கமாட்டான் பொல இருக்கிறது.

    ReplyDelete
  3. 4வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
    தங்களின் எழுத்துப்பணி மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  4. வியக்க வைக்கும் தேங்காய் தகவல் உட்பட அனைத்தும் அருமை...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    பதிவின் கடைசியில் இரண்டு படங்களை
    இணைத்ததை மிகவும் ரசித்தேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்கள் வலைத்தளத்திற்கு நான்காவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.

    துபாய் பயண அனுபவ கட்டுரை மிக அருமை.
    2004ல் தமிழ்சங்க விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியது மகிழ்ச்சி.
    படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வலைப்பூவின் நான்காம் ஆண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார். தங்களின் எழுத்து மேன்மேலும் தொடர்ந்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைக்கட்டும்.

    ReplyDelete
  8. ஐந்தாம் ஆண்டின் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்! என் வலைப்பூவினை விட மூன்று நாட்கள் சீனியர் வலைப்பூ உங்களுடையது! தொடர்ந்து சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  9. ஐந்தாம் ஆண்டின் தொடக்கம் அமோகமாக இருக்கட்டும். உங்கள் வலைப்பூவிற்கு என் வாழ்த்துகள். அன்புடன்

    ReplyDelete
  10. துபாயைக் கண்டு களிக்க முடிந்தது. அன்புடன்

    ReplyDelete
  11. நான்காவது ஆண்டினில் அடி எடுத்து வைக்கும் தங்கள் வலைத்தளத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    துபாய் ஒரு சொர்க்க பூமி, என்பதனை தங்களது பதிவின் படங்களும் பரவசமான உங்கள் வாசகங்களும் சொல்லுகின்றன.

    நம்ம ஊரு பஸ் டிரைவர்கள் சாமர்த்தியம் யாருக்கும் வராதுதான்.

    ReplyDelete
  12. மேலும் ஒருசில படங்கள் இப்போது தாமதமாக இந்தப்பதிவினில் இணைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இது முதலிலேயே பின்னூட்டமிட்டுள்ள சிலரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    ReplyDelete
  13. முதலில் உங்கள் வலைக் குழந்தையின் பிறந்த நாளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது போல் ஒவ்வொரு வருடமும் நான் வாழ்த்த வேண்டும்.

    புகைப் படங்களைப் பார்த்து மயங்கி, வியந்து நிற்கிறேன்.

    வெளி நாடுகளில் இருக்கும், சுத்தம், வசதி இவைகளைப் பார்த்துத்தான் இங்கிருந்து அங்கு செல்லும் இளைஞர்களை திரும்பி இந்தியா வருவதை விரும்புவதில்லை போலும்.

    நான் திருச்சியில் இருந்திருந்தால் வந்து ஒரு கப் மோர் குடித்திருப்பேன்.

    உண்மைதான். நம்ப ஊர் டிரைவர்கள் கில்லாடிதான். TRAFFICல ஓட்டறதுல மட்டுமா. நம்ப காக்கிச் சட்டைக் காரங்களை சமாளிக்கறதுலயும் தானே.

    2004 துபாய் பயண போட்டோக்களும் அருமை. 2004ல் தமிழ்சங்க விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியது மகிழ்ச்சி.
    படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்களுடனும்,
    வணக்கத்துடனும்

    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  14. வலைத்தளத்தின் நான்காவது பிறந்தநாளுக்கு இனிய வாழ்த்துகள் கோபு சார். இன்னும் தொடர்ந்து பல பதிவுகள் சிறப்பாக எழுதி பதிவுலகில் கோலோச்ச இனிய வாழ்த்துகள்.

    இந்த ஒரு பதிவில்தான் எவ்வளவு தகவல்கள்.. படங்கள்! அடேயப்பா.. உங்கள் உழைப்பு மலைக்கவைக்கிறது. போக்குவரத்து குறித்த உங்கள் கருத்து சரியே.. இப்படி வெகு சிரத்தையான திட்டமிடலுடன் விதிகளை மீறாதபடி வாகனங்களை ஓட்டியவர்களால் நம்மூரில் கொஞ்ச தொலைவு கூட ஓட்டுவது மிகவும் சிரமம். அதற்கு தனித்திறனும் நேர்த்தியான ஓட்டுமுறையும் அவசியம். தங்களுடைய அனுபவங்களை மிக அழகாக வாசிப்போர் ரசிக்கும் வகையில் எழுதியமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  15. நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்கள் வலைப்பக்கம் மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து வளரவும், நீங்கள் பல்வேறு சுவையான பதிவுகளைத் தரவும் மனமார்ந்த வாழ்த்துகள்......

    துபாய்.... தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. வலைப்பக்கத்தின் நான்காம் ஆண்டுக்கு வாழ்த்துகள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பால், மோர் சமாசாரம் உட்பட காய்கள், பழங்கள் என அனைத்துமே யு.எஸ்ஸிலும் கிடைக்கிறது. ஆனால் அங்கே மோர் உரை ஊற்ற வேண்டிய மோரை இந்தியாவிலிருந்து செல்பவர்கள் இங்கிருந்து கொண்டு செல்வதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். நாங்கள் கொண்டு போனதில்லை. செக்யூரிடி செக்கிங்கில் இம்மாதிரியான பொருட்கள் நிராகரிக்கப்பட்டே பார்த்திருக்கிறேன். :))) அங்கிருந்து கொண்டு வரலாமா என்பதும் தெரியவில்லை.

    ReplyDelete
  17. வேகமாய்க் கருத்தைத் தட்டச்சாதே என ப்ளாகர் கூவல்! :))) என்னத்தைச் சொல்ல! :)

    ReplyDelete
  18. அப்பாடி நாலு ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வரீங்களா அதுதான் இப்படி அனுபவ பூர்வமாக ரசித்து எழுத முடிகிறதா பாராட்டுகள்

    ReplyDelete
  19. வலைத்தளத்தின் நான்காவது பிறந்தநாளுக்கு இனிய நல்வாழ்த்துகள் .

    துபாய் அனுபவங்களும் படங்களும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வலைத்தளத்தின் நான்காவது பிறந்தநாளுக்கு இனிய நல்வாழ்த்துகள். துபாய் அனுபவங்களும் படங்களும் அருமை..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க, மேடம்.

      Delete
  20. வலைத்தள்த்தின் நாலாவது பர்த் டேவா. கேக்குலா கெடியாதா?வள்மை போல படங்கல்லா சூப்பரோ சூப்பருங்கோ. நீங்க ரசிச்சத நாங்க அல்லாருமே ரசிக்கனுமுன்னுகிட்டு வெவரமா பதிவுல சொல்லினீங்க. படிக்க படிக்க சந்தோசமா கீதுங்கோ.

    ReplyDelete
  21. 4---வது பர்த்டேக்கு வாழ்த்துகள் படங்களுடன் பகிர்வுகளும் அமர்க்களமாக இருக்கு.

    ReplyDelete
  22. //இங்குள்ள எங்கள் ஓட்டுனர்கள் மட்டுமே நல்ல திறமைசாலிகள் + கில்லாடிகள் என நான் நினைத்துக்கொண்டேன். குண்டும் குழியுமான குறுகிய ரோட்டில், குறுக்கே எவன் வருவான், எது வரும் என்றே சொல்லமுடியாத ரோட்டில், அனைவரின் காதும் கிழிந்து செவிடாகி விடும் விதமாக ஓயாது ஏர் ஹாரன் அடித்துக்கொண்டு ’சத்திரம் பஸ் ஸ்டாண்டு முதல் பாய்லர் தொழிற்சாலை வரை’ எவ்வளவு வேகமாக பஸ்ஸைக் கஷ்டப்பட்டு ஓட்டிச்செல்கிறார்கள் ! எதிரே வரும் பேருந்துக்கும் இவர் ஓட்டிச்செல்லும் பேருந்துக்கும் நடுவே இரண்டு அங்குல இடைவெளியுடன் எவ்வளவு சாமர்த்தியமாக மோதாமல், உரசாமல், மிக லாவகமாக ஓட்டிச் செல்கின்றனர் ! நம்மாட்களால் மட்டுமே இதெல்லாம் சாதிக்க முடியும் ! :)// எப்புடிப்பாத்தாலும் நம்மாளுங்கதான் ஜித்தனுங்க!!! அங்க பிச்சைக்காரங்களை எங்கேயாவது பாக்க முடிஞ்சதா??

    ReplyDelete
  23. 4 ஆண்டுகள் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள். என்ன ஸ்பீடு...???

    ReplyDelete
  24. இரவினில் துபாய் மாலிலிருந்து ஒரு மிகப்பெரிய சாலை வழியே காரில் வந்தபோது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மரங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜகத்ஜோதியாகத் திகழ்ந்ததைக்கண்டு வியந்து போனேன். தமிழ்நாட்டிலிருந்து போன எனக்கு மின்தடையில்லா பூலோக சொர்க்கத்தைக்காண அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டேன். வேறென்ன செய்ய ?
    // சொர்க்கலோகம் என்பது இதுதானோ? 4 ஆண்டுகள் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete