என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 21 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-7 of 16 [31-39]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 


 



திரு. விச்சு அவர்கள் 

[16.02.2012]

 

கதையினைப் பற்றி சொல்லும்போது வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. தினமலர் போட்டிக்காக அவர் எழுதிய என் உயிர்தோழியில் பாட்டியும் பேத்தியின் சிந்தனையுமாக இருக்கும் ஒரு கதை.


மற்றொன்று ஜாதிப்பூ. ஒரு பூ விற்கும் பெண்மணியினைப் பற்றிய கதை. இதில் சுவராஸ்யமான திருப்பமும் உள்ளது.

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:

’ஜாதிப்பூ’

”பூக்களை விட ... 


அந்தப்பூக்காரி ... 


நல்ல அழகு ! ”


எனவே காணத்தவறாதீர்கள் ! :)

 


திருமதி. 

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி 

அவர்கள் 

[ 02.03.2012 ]


 
வை. கோபாலகிருஷ்ணன் 
யாரைப் பெருமைப் படுத்துகிறார் பாருங்கள்.  




திருமதி. ஸாதிகா அவர்கள் 


[ 05.03.2012 ]  



வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்கச் செய்து என் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கொடுத்த ஐயா சீனா அவர்களுக்கும், என் எழுத்தில் நம்பிக்கை வைத்து எனக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி ஊக்கமும் ஆக்கமும் தந்து பரிந்துரை செய்த ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், மற்றும் வலைச்சர ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.





திருமதி. ஸாதிகா அவர்கள் 


[ 06.03.2012 ]  





1.யானைக்கும் அடிசறுக்கும் என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல அதி முன் ஜாக்கிரதைக்காரான முகுந்தனின் அனுபவத்தை தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவை ததும்ப அழகிய நடையில் வை.கோபாலகிருஷ்ணன் எழுதிய இந்த சிறுகதையை ரசித்து வாசித்தால் சிரித்து மகிழலாம்.


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:

’முன்னெச்சரிக்கை முகுந்தன்’

 


 

 














திருமதி. ஸாதிகா அவர்கள் 

[ 11.03.2012 ]  






ஒரு வாரகாலமாக வலைச்சரத்தில் கிடைத்த ஆசிரியர் பணியில் பெரிதும் உவகை அடைகிறேன். வாய்ப்பு கொடுத்த சீனா ஐயா, மற்றும் வலைச்சரக் குழுவினருக்கும், பரிந்துரை செய்த வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

 


கீதமஞ்சரி 

திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் 


[ 12.03.2012 ]  




வலைச்சரத்தில் நானும் ஒரு வாரத்துக்கு ஆசிரியர் என்பதை இன்னும் என்னால் 
நம்பமுடியவில்லைவலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவுறும் வேளையில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைகீதமஞ்சரியின் முதல் பிறந்தநாள் பரிசெனக் கொண்டுமனங்கொள்ளாப் பூரிப்பும் புளகாங்கிதமும் அடைகிறேன்அதே நேரத்தில்இந்த இனிய தருணம்என் எழுத்தின்பால் எனக்கிருக்கும் பொறுப்புணர்வையும் நினைவில் நிறுத்தி எச்சரிக்கிறதுஇந்த அரிய வாய்ப்பை நல்கிய சீனா ஐயாவுக்கும், என் மீது நம்பிக்கை வைத்துஎன்னைப் பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நெகிழ்வோடு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 




கீதமஞ்சரி 



திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் 




[ 15.03.2012 ]  






வைகோபாலகிருஷ்ணன் சார்  கதையில் வர முனியம்மா   மாதிரி வேலைக்காரி கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்!

…. அவளும் அது மாதிரி நினைப்பாளே..நமக்கு நல்ல எசமானியம்மா வேணும்னு.

ஏன் நான் நல்ல எசமானியா இல்லையா?

அதிலென்ன சந்தேகம்நீ என்னை விரட்டுற விரட்டைப் பார்த்தாலே அது புரிஞ்சிடுமே.




கீதமஞ்சரி 



திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் 




[ 16.03.2012 ]  




 


ஆரம்பிச்சாச்சாஎத்தனை வயசானாலும் பிறந்த வீட்டுப் பாசம் போவுதா பாரு
பிறந்தவீட்டுப் பெருமை பேசறேன்னு பெண்கள் படுத்துற பாட்டையும்  தன் சொல்லமுடியாத சோகத்தையும்
வை.கோபாலகிருஷ்ணன் சார் 
தன்னோட பவழம்கதையில 
அழகா நச்சுனு சொல்லிட்டார்.  





{ Left out in the List and Included only on 12.05.2015 - vgk }




10 06 2012 


திரு. டி.என்.முரளிதரன் அவர்கள்
மூங்கில் காற்று



நான் சாதாரணமானவன் ஆனால் சாதிக்க நினைப்பவன் என்று சொல்லும் 
வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 
அருமையான பதிவுகளை இட்டு அசத்திவருகிறார். 
அனுபவங்களை அழுத்தமாக  பதிவாக்கும் 
வல்லமை இவருக்கு இருக்கிறது. 
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 
'இனி துயரம் இல்லை' என்ற சிறுகதை. 
இளமை உணர்வுகளை படம் பிடிக்கும் அருமையான சிறுகதை




திரு. சீனி [கவிதை] 


அவர்கள் 



{ 21.08.2012 }







பதிவுலகின் - மூத்தவர்கள்!
அதுதான்- முத்துக்கள்!

 கோபால கிருஷ்ணன் ஐயா!

 

 



நாக்குக்குச் சட்னியும் .... கண்களுக்குச் சிட்னியும்

http://gopu1949.blogspot.sg/2012/03/blog-post_24.html



 






 செல்வி: 


நுண்மதி

https://nunmadhi.wordpress.com/

அவர்கள்



{ 20.06.2012 }










திரு. வை.கோபால கிருஷ்ணன் அவர்கள். இவ்வளவு நேரமும் எந்தப் பதிவைக் குறிப்பிடுவது எனத் தெரியாமல், அவரது பதிவிற்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். 

இவரது பதிவுகள் பலவற்றை ( நூற்றுக்கும் மேல் ) ஒரே இரவில் படித்து முடித்திருக்கிறேன்.

 







 திருமதி. 


ஜலீலா கமல் 

அவர்கள். 



{ 21.09.2012 }


 

   
   உண்மை சற்றே வெண்மை :

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும் திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே!”


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுவதுமான மீள் பதிவுக்கான இணைப்பு:

’உண்மை சற்றே வெண்மை’

 
 


//“முதலிலே காய் என்ன விலைன்னு சொல்லும்மா, நீ சொல்லும் விலையை வைத்துத் தான், நான் உங்கிட்ட தேங்காய் வாங்கலாமா வேண்டாமான்னு முடிவே செய்யணும் //
என்றார்.

//அவளும் சற்று நேரம் மனக்கணக்குப் போட்டு குழம்பி விட்டுஅவரிடம் இருபத்திரெண்டு ரூபாயைக் கொடுத்து விட்டு  .......................... 

கணக்கு சரியாப்போச்சாசாமீ?”// என்றாள்


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:

ஏமாற்றாதே ! .......... ஏமாறாதே !!

  




”போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். 

பணம் அதிகம் செலவானாலும், நல்ல ஒரிஜினல் டாக்டரிடம் போய் பல்லைக் காட்டுங்கள் ..... ஹி ஹி .. ஹி .. என்ன நான் சொல்லுவது, புரிகிறதா?



பணம் இன்று போகும் !   நாளை வரும் !! “

புத்தம் புதிய பல்வேறு நகைச்சுவைப் படங்களுடன் கூடிய 

மேற்படி சிறுகதையின் மீள்பதிவுக்கான இணைப்பு:

’பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ?’

 
கண்ணும் கண்ணும் 


கொள்ளையடித்தால்


’காதல்’ என்று அர்த்தம் ! 


பல்லும் பல்லும் 

பாக்ஸிங் போட்டால் !!!!! :)

பல்லைக்கடித்துக்கொண்டு ..... டக் ஆஃப் வார் !

 









இவர்கள் அனைவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள். 
தொடரும்

 




நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்


வலைச்சர ஆசிரியர்




நம் பேரன்புக்குரிய தங்கச்சி 


திருமதி. 


 மஞ்சு பாஷிணி 


அவர்கள்.





’மஞ்சு’வின் அன்பின் ஆழம் 


கடலைவிட மிகப்பெரியது !






’பஞ்சு’ போன்ற ’மஞ்சு’வின் அன்பினை


ஒரே பகுதியாக என்னால் 


தர இயலாமல் உள்ளது.




எனவே நாளைக்கு அவற்றை


நான்கு பகுதிகளாக பிரித்து 


 

 


நான்கு கப்பல்களில் ஏற்றி


அவைகள் தனித்தனியாக 


வெளியிடப்பட உள்ளன.



காணத்தவறாதீர்கள் !









என்றும் அன்புடன் தங்கள்
[வை.கோபாலகிருஷ்ணன்]

24 கருத்துகள்:

  1. அருமையான தொகுப்பு. பொறுமையின் சிகரம். வாழ்த்துகிறேன்.
    கூடவே கொஞ்சம் பொறாமையும் கூட. என்னால் இப்படிச் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
  2. அழகாகத் தொகுத்து வெளியிட்டுள்ளீர்கள் நானும் தங்களை மறக்காமல் வலைச்சரத்தில் எழுதியிருப்பது கூடுதல் சந்தோசம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இன்று இடம்பெற்ற அனைத்து மலர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    மலர்களை வலைச்சரத்தில் இணைத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கும், அறிமுகம் செய்யப் போகும் மஞ்சுபாஷிணிக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இணைத்த படங்கள் அனைத்தும் மனத்தைக் கவர்கின்றன ஐயா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. அன்பு வணக்கங்கள் அண்ணா....

    படங்களின் வரிசை மிக மிக அழகு அண்ணா...

    அற்புதமான அறிமுகப்படலங்கள்.... அழகிய தொகுப்பு...

    க்ரியேட்டிவிட்டியும் ரசனையும் இருந்தாலே போறும்.... இதைப்போல் அழகாக செய்துவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கீங்க அண்ணா..... அனைவருக்குமே அன்பு வாழ்த்துகள் !!

    பதிலளிநீக்கு
  7. படங்களும், பதிவும் மிக அருமை...

    பதிலளிநீக்கு
  8. முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் சொல்வது போல நீங்கள் பொறுமையின் சிகரம்தான். இவ்வளவு படங்களையும், இவ்வளவு மனிதர்களையும் எப்படித்தான் தெரிவு செய்தீர்களோ? தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  9. அன்பு நணபர் வை.கோ

    அருமையான பதிவு.

    தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய சக பதிவர்களை இங்கு நினைவில் நிறுத்தி அவர்களைப் பாராட்டியும் நன்றி கூறியும் அனைவரையும் அறிமுகப் படுத்தியும் தங்கள் பணிச்சுமைக்கு நடுவேயும் - இத்தனை படங்களுடன் - தனித்தனியே ஒவ்வொருவரைப் பற்றீயும் சில வரிகள் எழுதியும் - சிரமம் பார்க்காமல் பதிவிட்டமை நன்று.

    தங்களைப் பாராட்ட சொற்களே இல்லை.

    நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. நல்ல தொகுப்பு. உங்களை அறிமுகம் செய்தவர்கள் என்று குறிப்பிட்டு இருப்பவர்களில் ஒரு சிலர் எனக்குத் தெரியாதவர்கள்.....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான தொகுப்பு என்னையும் இங்கு குறிப்பிட்டமைக்கு மிக்க மகிழ்சி

    பதிலளிநீக்கு
  12. வலைச்சரத்தில் நமக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்திருந்த நிலையில் தங்களுடைய முயற்சியால் எனக்கு வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு கிடைத்ததை என்னால் மறக்கவே முடியாது. குறைந்த பதிவுகளே போட்டிருந்த நிலையில் எந்த அளவுக்கு என் எழுத்தின்மீது தங்களுக்கு நம்பிக்கை இருந்தால் என்னைப் பரிந்துரைத்திருப்பீர்கள். இப்போதும் எண்ணி வியக்கிறேன். மனம் நிறைந்த நன்றி கோபு சார். ஒவ்வொருவரையும் இப்படி முறைப்படுத்தி தொகுத்து பதிவாய் அளிக்க எவ்வளவு மெனக்கெடவேண்டும். கடின உழைப்பையும் திட்டமிடலையும் உங்களிடமிருந்துதான் கற்கவேண்டும். மனம் நிறைந்த பாராட்டுகள் சார்.

    பதிலளிநீக்கு
  13. என்ன சொல்ல

    பாராட்டிப் பாராட்டி எனக்கு கைதான் வலிக்கப் போகிறது.

    உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம், ஏராளம்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  14. இந்த என் பதிவினில் ஏற்கனவே கொண்டுவர விட்டுப்போயுள்ள என்னுடைய இரண்டு வலைச்சர அறிமுகங்கள், இப்போது இன்று என்னால் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

    அவைகளுக்கு முறையே 36/02/03 + 36/03/03 என புதிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    இது அனைவரின் பொதுவான தகவலுக்காக மட்டுமே.

    VGK

    பதிலளிநீக்கு
  15. இந்த என் பதிவினில் ஏற்கனவே கொண்டுவர விட்டுப்போயுள்ள என்னுடைய மற்றொரு வலைச்சர அறிமுகம் [Dated 10.06.2012] இப்போது இன்று Sl. No. 36/03/03 க்கும் Sl. No. 37க்கும் இடையே என்னால் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது அனைவரின் பொதுவான தகவலுக்காக மட்டுமே.

    VGK

    பதிலளிநீக்கு
  16. இதில நிறய பேரை எனக்கு தெரியவே இல்லயே. மகும்.......... எப்படி தெரியவரும் ஒழுங்கா பதிவு எழுதி மத்தவங்க பதிவும் படிச்சு பாத்தா தானே தெரியும்

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:16 PM

      //அருமையான அறிமுகங்கள்...//

      வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  18. அட இது நம்ம ஆளுஙகனுபிட்டு ஆரச்சொல்லினிங்கனு படத்த பாத்துகிடுடதுமே சிரிப்பாணி பொத்துகிச்சி. பின்ன இன்னா ரயிலு ஏரோப்மேன் மொட்ட மாடிலலா ஏறி குந்திகிட்டிருக்காங்களே.

    பதிலளிநீக்கு
  19. படங்கள் சிரிப்பை வரவைக்கிறது. மலர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. தொகுப்புடன் சேர்ந்த வண்ணப்பூ...மணக்கிறது..

    பதிலளிநீக்கு
  21. படங்களுடன் கூடிய பதிவு மனம் கவர்ந்தது!

    பதிலளிநீக்கு