ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-5
பக்தி மார்க்கம் - பகுதி 1 of 4
பக்தி மார்க்கம் - பகுதி 1 of 4
பக்தி மார்கத்தின் சிறப்பையும், பகவந் நாம மஹிமையைப் பற்றியும் ஸ்ரீ ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அவ்வப்போது விவரித்த விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பக்தி மார்கம் இரண்டு புறமும் தெரியும் விளக்குப்போல் (ரேழியில் ஏற்றி வைத்திருக்கும் தீபம் போல்) கர்ம மார்கத்திலும், ஞான மார்கத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
2. ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீமத் பகவத் கீதையில் குணாதீதன், பக்தன், ஞானி இந்த மூன்று நிலைகளிலும் இருப்பவர்களை பற்றி வர்ணிக்கும்போது சொல்லிய ஸ்லோகங்களின் அர்த்தங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். [Synonyms]
3. யக்ஞம் பூர்த்தியானவுடன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயனம் செய்யும்படி சொல்லியிருக்கிறது.
4. யக்ஞத்தின் விராம காலத்தில் [இடைவேளைகளில்] தான் ஸ்ரீ நாரதர் பிரஹ்லாத சரித்திரமும், துருவசரித்திரமும் சொன்னார்.
5. ஸ்ரீ சூத பெளராணிகா செளணகாதி ரிஷிகளுக்கு ஸ்ரீமத் பாகவதம் சொன்னதும் யக்ஞம் நடக்கும் போதுதான்.
6. அச்யுத, அனந்த, கோவிந்த, கேஸவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதிசூதன, திருவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப, தாமோதர [மொத்தம் 15 நாமங்கள்] 3 வேளைகள் சந்தியாவந்தன சமயத்திலும்,இதைத்தவிர தினம் ஆசமனம் செய்ய வேண்டிய சமயங்களிலும் (கைகால்கள் அலம்பினவுடனும், ஜலஸ்பர்ஸம், சரீர செளகர்யம் செய்துகொண்டவுடனும்) அனேக தடவைகள் ஒரு நாளில் வருவதால் பகவந் நாமத்தை குறைந்தது 300, 400 தடவைகள் சொல்லும்படி நேருகிறது. நம்மை அறியாமல் routine ஆக இலாபம் கிடைக்கிறது. அச்யுத, அனந்த, கோவிந்த நாமாக்கள் அசுரர்கள் விட்ட வியாதி யந்திரத்தை உடைக்க ஸ்ரீ துர்கா தேவி உபயோகித்த அஸ்திரமாகச் சொல்லியிருக்கிறது.
7. பூஜை, பித்ரு தர்ப்பணம் முதலிய கார்யங்கள் செய்யும் போதும் சங்கல்பத்தில் பகவத்ஸ்மரணம் செய்யச்சொல்லி விட்டு பகவந் நாமாவைத்தான் [ராம ராம ராம - கோவிந்த கோவிந்த கோவிந்த] சொல்லும்படி வைத்திருக்கிறார்கள்.
[பூஜையில்:
ததேவலக்னம் ஸுதினம் ததேவ, தாராபலம் சந்த்ரபலம் ததேவ, வித்யாபலம் தைவபலம் ததேவ, லக்ஷ்மிபதே: அங்க்ரியுகம் ஸ்மராமி!!
பித்ரு தர்ப்பணத்தில்:
அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபிவா:!
ய: ஸ்மரேத்புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி: !!
மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் !
8. ஞான மார்கத்திலும் ப்ரம்மசூத்திர பாஷ்யத்தின் முடிவில் ஸ்ரீ ஆதிசங்கரர் சகுண ப்ரம்மமாகிற பகவானை சரணமடைந்தவர்களுக்கும் ப்ரம்ம சாக்ஷாத்காரம் ஏற்படும் என்று ஒரு ஸ்லோகம் சொல்லி பூர்த்தி செய்திருக்கிறார்.
9. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்திலும் 81 ஆவது ஸ்லோகத்தில் “பக்தமானஸ ஹம்ஸிகா” என்றும் 154 ஆவது ஸ்லோகத்தில் “முனிமானஸ ஹம்ஸிகா” என்றும் வருகிறது. இதிலிருந்து பக்தனும் முனியும் [ஞானியும்] ஒரே மாதிரியாக ஸ்ரீ அம்பாளின் அனுக்கிரஹத்தை பெறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ லலிதாம்பிகை
தொடரும்
பக்தி மார்கம் இரண்டு புறமும் தெரியும் விளக்குப்போல் (ரேழியில் ஏற்றி வைத்திருக்கும் தீபம் போல்) கர்ம மார்கத்திலும், ஞான மார்கத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குபக்தியில்லாத கர்மமோ
பக்தியில்லாத ஞானமோ
பயன்தரும் என்று சொல்லமுடியதே!
பக்தனும் முனியும் [ஞானியும்] ஒரே மாதிரியாக ஸ்ரீ அம்பாளின் அனுக்கிரஹத்தை பெறுகிறார்கள்
பதிலளிநீக்குஹம்ஸப்பறவைபோல் அழகான பகிர்வுகள்..
பயன்மிக்க பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
//இதிலிருந்து பக்தனும் முனியும் [ஞானியும்] ஒரே மாதிரியாக ஸ்ரீ அம்பாளின் அனுக்கிரஹத்தை பெறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.//
பதிலளிநீக்குஅருமை.பக்தி மார்க்கத்தினை பற்றிய அருமையான விளக்கம்.பகவானின் நாமத்தினை சொல்லுவதால் பெறும் ஏற்றத்தை மிக அழகாக விவரித்துள்ளீர்கள்.
பக்தி மார்க்கம் பற்றிய சிறப்பான பகிர்வு!
பதிலளிநீக்கு//பக்தி மார்கம் இரண்டு புறமும் தெரியும் விளக்குப்போல் (ரேழியில் ஏற்றி வைத்திருக்கும் தீபம் போல்) //
பதிலளிநீக்குநல்ல விளக்கம்...
Fine post.
பதிலளிநீக்குMust read it.
viji
நல்ல பகிர்வு
பதிலளிநீக்குபக்தி மார்கம் இரண்டு புறமும் தெரியும் விளக்குப்போல்..
பதிலளிநீக்குஅழகாய் பிரவசனம் செய்கிறீர்கள்..
// ரிஷபன் said...
பதிலளிநீக்குபக்தி மார்கம் இரண்டு புறமும் தெரியும் விளக்குப்போல்..
அழகாய் பிரவசனம் செய்கிறீர்கள்..//
சிவ சிவா!
பிரவசனம் நான் செய்யவில்லை.
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் செய்தது.
நான் காதால் கேட்டது, படித்தது, அதில் எனக்கு மிகவும் பிடித்த சிலவற்றை பகிர்வது, அத்தோடு சரி.
பக்தி மார்கம் இரண்டு புறமும் தெரியும் விளக்குப்போல்
பதிலளிநீக்குஅருமையான் பதிவு
-காரஞ்சன்(சேஷ்)
//ஆதிசங்கரர் சகுண ப்ரம்மமாகிற பகவானை சரணமடைந்தவர்களுக்கும் ப்ரம்ம சாக்ஷாத்காரம் ஏற்படும் என்று ஒரு ஸ்லோகம் சொல்லி பூர்த்தி செய்திருக்கிறார்./// நன்றி...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு சார்.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
//பக்தி மார்கம் இரண்டு புறமும் தெரியும் விளக்குப்போல்..//
பதிலளிநீக்குஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவர்களின் விளக்கம் அருமை.
நல்ல பகிர்வுக்கு நன்றி சார்.
NICE POST
பதிலளிநீக்குஈஸ்வரனை அடைய பக்தி மார்க்கமே எளிதானது. எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடியது. அதுவே தலையானது.
பதிலளிநீக்குஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் அவர்களின் விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு.
பதிலளிநீக்குபூந்தளிர் June 1, 2015 at 6:00 PM
நீக்குஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் அவர்களின் விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு.//
சந்தோஷம். மிக்க நன்றி.
பக்தி மார்கம் இரண்டு புறமும் தெரியும் விளக்குப்போல் (ரேழியில் ஏற்றி வைத்திருக்கும் தீபம் போல்) கர்ம மார்கத்திலும், ஞான மார்கத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.//
பதிலளிநீக்குபக்தியே முக்திக்கு வழி.
புதிது, புதிதாய் தெரிந்து கொள்கிறோம்.
நன்றி.
எங்காளுகளுக்கு அல்லா ஒரே சாமிதா. உங்காளுகளுக்கு நெறய நெறய சாமிகள்ளாம் இருப்பாங்க போல
பதிலளிநீக்குmru October 17, 2015 at 3:21 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//எங்காளுகளுக்கு அல்லா ஒரே சாமிதா. உங்காளுகளுக்கு நெறய நெறய சாமிகள்ளாம் இருப்பாங்க போல.//
பரம்பொருள் ஒருவரே தான். அவரின் உண்மையான உருவம் நம் கண்களுக்கும் கற்பனைக்கும் எட்டாதது மட்டுமே.
இருப்பினும் அவரவர்கள் பார்வையில், அவரவர் விருப்பம்போல, உருவத்தை கற்பனை செய்துகொண்டு வழிபட்டுக்கொள்ளலாம் என்ற சலுகை அளித்துள்ளார்கள்.
எப்படியோ இறை பக்தியுடன், நல்லவர்களாக வாழ்ந்தால் போதும் என்று இப்படியெல்லாம் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். அவ்வளவுதான்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
பூஜை காலங்களாலும் பித்ரு காரியங்களிலும் பகவன் நாமா ஸ்மரித்து விட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்மது சரியான விஷயம்தான்
பதிலளிநீக்குபக்தனும் முனியும் [ஞானியும்] ஒரே மாதிரியாக ஸ்ரீ அம்பாளின் அனுக்கிரஹத்தை பெறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.//அதிலும் பக்தனுக்குத்தான் முதலிடம்...
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்கு