என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....


//மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மந்த்ரம் அல்லது பகவத் நாமம் இல்லாமல் காரியத்தைப் பண்ணுவதில் பிரயோஜனம் இல்லை. 

மநுஷ்யன் செய்கின்ற காரியத்தை, அநேகமாக எல்லா ஜீவ ஜந்துக்களும் தான் செய்கின்றன. ஒரு கிருமியிலிருந்து ஆரம்பித்து எல்லா ஜீவராசிகளும் சாப்பிடத்தான் செய்கின்றன. அப்படியே மநுஷ்யனும் செய்தால் மநுஷ்ய ஜன்மா எடுத்து என்ன பிரயோஜனம்? 

அதனால் தான் இவன் பிராணாஹூதி செய்து பகவன் நாமாவைச் சொன்னபடிச் சாப்பிட வேண்டுமென்று சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது.  //



[இந்த மேற்படிப்பகுதி ஸ்ரீ பரமாச்சார்யாளின் 
அருள் உரையில் நான் படித்தது]




ooooooooooooooooo


காசியில் 
விசாலாஷியாகவும்
அன்ன பூர்ணியாகவும். 



உணவு உண்ணும் முன் 
தெய்வ நினைவோடு
சொல்ல வேண்டிய ஸ்லோகம்


அன்னபூர்ணே 
ஸதா பூர்ணே 
சங்கர ப்ராண வல்லபே !

ஞான வைராக்ய ஸித்யர்த்தம் 
பிக்ஷாம் தேஹி ச பார்வதி !!




[ சிவனின் ப்ராணன் போன்ற 
ஓ அன்னபூர்ணா தேவியே!
ஞானமும் வைராக்யமும் 
கொடுக்கும்படியான 
அன்னத்தை அளிப்பாயாக! ]






சிவனுக்கு அன்னமிட்ட 
காசி அன்னபூரணி


-oOo-


முன்பெல்லாம் வயிற்றுப் பசிக்கு சாப்பாடு கேட்டு பிச்சைக்காரர்கள், நம் வீடு தேடி வருவதுண்டு. இப்போது அது போல பசிக்கு சாப்பாடு கேட்டு வருபவர்கள் மிகவும் குறைந்து போய் விட்டனர்.  அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றிற்குள் நாம் இப்போது போக வேண்டாம்.

சமையல் முடிந்ததும், பச்சரிசியில் செய்த சாதத்தின் மேல் கொஞ்சம் நெய் ஊற்றி, பூஜை அறைக்கு எடுத்துச்சென்று, அங்கு கொஞ்சம் தரையில் தண்ணீர் தெளித்து விட்டு, அந்த நெய் கலந்த சாதத்தை வைக்க வேண்டும். அதன் அருகில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் வைக்க வேண்டும். வேறு ஏதாவது பாயஸம் வடை போன்ற ஸ்பெஷல் அயிட்டம்ஸ் செய்திருந்தாலும் அவற்றையும் இறைவனுக்குப் படைத்து விட்டு, அதன் பிறகு நாம் இன்பமாக ருசிக்கலாம். தேங்காய் உடைத்து, பழம், வெற்றிலை+ பாக்கு போன்றவைகளையும் கூட வைத்து நைவேத்யம் செய்யலாம். 

கோலமிட்டு, ஸ்வாமி விளக்கேற்றி விட்டு, சாதம்+நெய்+குடிநீர் மூன்றையும், புஷ்பம், மஞ்சள் கலந்த அக்ஷதை, கொஞ்சம் தண்ணீருடன் சுற்றி ஸ்வாமி படங்கள் மேல் அவற்றைப் போட்டுவிட்டு, மணி அடித்து, ஊதுபத்தி சூடம் முதலியன காட்டி விட்டு, பிறகு கடவுளை வேண்டிக்கொண்டு, நமஸ்கரித்து விட்டு, அதன் பிறகே நாம் சாப்பிடத் தயாராக வேண்டும். 

இதுபோல பக்தி சிரத்தையுடன் கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவுகளுக்கு தனி ருசி ஏற்படும். அதில் கலந்துள்ள ரசாயன விஷங்களும், அனைத்து தோஷங்களும் இறை அருளால் மறைந்து போகும். உடல் ஆரோக்கியத்திற்கு நிச்சயமான உத்தரவாதம் தருவதான நம்பிக்கையை நமக்கு அளிக்கும்.  

தினமும் சமையல் முடிந்து இறைவனுக்கு நைவேத்யம் செய்த பிறகு, சிறிதளவு சாதத்தில் நெய் ஒரு சொட்டும் பருப்பு கொஞ்சமும் போட்டு, காக்கை வரும் இடமாகப்பார்த்து வைத்து விட்டு, பிறகே நாம் சாப்பிட வேண்டும். இது போல தினமும் காக்கைக்கு அன்னமளிப்பதால் நம் முன்னோர்கள் [பித்ருக்கள்] திருப்தியடைவதாக சொல்லப்படுகிறது.

யாராவது பசிக்குச் சோறு கேட்டு வந்தால், நம்மிடம் உள்ளதை, இல்லையென்று சொல்லாமல், கொஞ்சம் பகிர்ந்தளிப்பதால் ‘அன்ன தானம்’ செய்த புண்ணியம் நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது. 

சாப்பாடு ஒன்றை மட்டுமே நம்மால் பிறருக்கு, அவர் வயிறு முட்டப்போட்டு, அவர் வாயாலேயே மனம் திறந்து ”போதும் போதும்” என்று சொல்லும் அளவுக்கு அளிக்க முடியும். 


வேறு எந்த தான தர்மங்கள் செய்தாலும் “போதும்” என்ற வார்த்தையை, நாம், தானம் பெற்றுக் கொள்பவரிடமிருந்து மனப்பூர்வமாகச் சொல்ல வைக்க முடியாது. 

இது போன்று தினமும், ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வதற்கும், காக்கைக்கு அன்னமிடவும், பசியுடன் வருவோர்க்கு அன்னதானம் செய்வதற்கும், மனமிருந்தும், நடைமுறையில் அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள், சுலபமாக வேறொன்றும் செய்யலாம். 

நடமாடும் தெய்வமாக விளங்கிய நம் மஹா ஸ்வாமிகள் அவர்களால், மிகச்சுலபமான வழியாக நமக்குச் சொல்லிக்கொடுத்த ”பிடியரிசித்திட்டம்” என்பது தான் அது.

அதாவது, தினமும் நாம் சமைக்க அரிசி எடுத்துக்கொள்வோம் தானே. அந்த அரிசியில் ஒரு கைப்பிடி அரிசியும், அத்துடன் ஒரு மிகச்சிறிய தொகையும் [அவர்கள் இந்தத்திட்டத்தை அறிவித்த போது, தினமும் ஒரு பைசா மட்டும் என்றார்கள் - இப்போது தான் ஒரு பைசா என்பதே கிடையாதே!]  எடுத்து தனியாக பூஜை அறையில் ஒரு பானையில் போட்டு மூடி வைத்து விடவேண்டும்.  இப்போது அந்த ஒரு பைசாவுக்கு பதிலாக 50 பைசாவோ அல்லது தினம் ஒரு ரூபாயோ அவரவர்கள் செளகர்யப்படி வைத்துக்கொள்ளலாம். 

மாதம் ஏதாவது ஒரு நாள், அதாவது அமாவாசை / பெளர்ணமி / பிரதோஷம் / சங்கடஹர சதுர்த்தி / ஏகாதஸி போன்ற ஏதோ ஒரு விசேஷ நாளில், அதில் சேர்ந்துள்ள அரிசியையும், காசுகளையும், யாராவது ஓர் ஏழையைத்தேடி நாமே வலியச்சென்று சந்தோஷத்துடன் கொடுத்து விட்டு வரவேண்டும்.  


யாரும் அது போன்ற ஏழையொருவர் நம் கண்களுக்குப் புலப்படவில்லையா? அதனால் பரவாயில்லை; நேராக ஏதாவது ஒரு கோயிலில் கொண்டுபோய் சேர்த்துவிட வேண்டியது. 

எவ்வளவு சுலபமானதொரு தர்மத்திற்கு வழிகாட்டியுள்ளார்கள்! என சற்றே நினைத்துப் பாருங்கள். இன்றும்கூட எனக்குத்தெரிந்து எவ்வளவோ பேர்கள் அந்தப்பெரியவரின் வழிகாட்டுதலின்படி இதை மிகவும் சிரத்தையாகச் செய்து, போகும் வழிக்குப் புண்ணியத்தைச் சேர்த்து வருகின்றனர். 

இதைப்படிக்கும் யாராவது ஒருவர் இதன்படி நாளை முதல் செய்ய ஆரம்பித்தாலே போதும், அவர்களை அந்த ”தர்மம் தலை காக்கும்” என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

-=-=-=-=-=-=-=-=-=-

சுத்தமான சுகாதாரமான இடத்தில், சுத்தமாக சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்ட, ஸாத்வீகமான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். 


நமக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமே ஏற்படவும், நாம் நல்ல செயல்களை மட்டுமே செய்யவும், நாம் உண்ணும் உணவும், அதைத் தயாரித்தவரின் மனநிலையும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை தயவுசெய்து உணருங்கள். 


எனவே கூடுமான வரை நமக்குத் தேவையான உணவுகளை, நம் வீட்டிலேயே, நம் மீது நலம் விரும்பிகளாக இருப்பவர்கள் மூலமாகவோ அல்லது நமக்கு நாமேவோ[சுயம்பாகம்] தயாரித்து உண்பதே சாலச்சிறந்தது.

நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, பேசிக்கொண்டோ, தொலைகாட்சிகள், கணினி போன்றவற்றில் கவனம் செலுத்திக்கொண்டோ, காலில் காலணி அணிந்து கொண்டோ உணவு சாப்பிடுவதை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்.  


நம் வலது கை FREE ஆக இருக்கும் போது, எக்காரணம் கொண்டும் தண்ணீர் அருந்தவோ, காஃபி,  டீ, பால் முதலிய பானங்கள் அருந்தவோ இடது கையைப் பயன்படுத்தாதீர்கள். 


அதே போல பிறருக்கு ஏதாவது கொடுக்கும்போதோ, பிறரிடமிருந்து ஏதாவது நாம் வாங்கும் போதோ நம் வலது கையையே பயன் படுத்த வேண்டும். இடது கையைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 


நம் குழந்தைகளுக்கும் இதை பழக்கப்படுத்த வேண்டும். 


உணவு உட்கொள்ளும் முன்பு அந்த உணவை நோக்கிக் கும்பிட்டவாறே சொல்ல வேண்டிய 
   

அன்னபூர்ணே, ஸதா பூர்ணே, சங்கர ப்ராண வல்லபே !
ஞான வைராக்ய ஸித்யர்த்தம், பிக்ஷாம் தேஹி ச பார்வதி !!

என்பதைச் சொல்ல தயவுசெய்து மறந்து விடாதீர்கள்.






-oooooOooooo-

[மீண்டும் மற்றொரு வித்யாசமான 
பதிவில் நாளை சந்திப்போம்]

35 கருத்துகள்:

  1. நமக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமே ஏற்படவும், நாம் நல்ல செயல்களை மட்டுமே செய்யவும், நாம் உண்ணும் உணவும், அதைத் தயாரித்தவரின் மனநிலையும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை தயவுசெய்து உணருங்கள்.


    எனவே கூடுமான வரை நமக்குத் தேவையான உணவுகளை, நம் வீட்டிலேயே, நம் மீது நலம் விரும்பிகளாக இருப்பவர்கள் மூலமாகவோ அல்லது நமக்கு நாமேவோ[சுயம்பாகம்] தயாரித்து உண்பதே சாலச்சிறந்தது.

    நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, பேசிக்கொண்டோ, தொலைகாட்சிகள், கணினி போன்றவற்றில் கவனம் செலுத்திக்கொண்டோ, காலில் காலணி அணிந்து கொண்டோ உணவு சாப்பிடுவதை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்.


    நம் வலது கை FREE ஆக இருக்கும் போது, எக்காரணம் கொண்டும் தண்ணீர் அருந்தவோ, காஃபி, டீ, பால் முதலிய பானங்கள் அருந்தவோ இடது கையைப் பயன்படுத்தாதீர்கள்.


    அதே போல பிறருக்கு ஏதாவது கொடுக்கும்போதோ, பிறரிடமிருந்து ஏதாவது நாம் வாங்கும் போதோ நம் வலது கையையே பயன் படுத்த வேண்டும். இடது கையைப் பயன் படுத்துவதைத் தவிக்க வேண்டும்.


    நம் குழந்தைகளுக்கும் இதை பழக்கப்படுத்த வேண்டும். //

    அருமையான குறிப்புகளய்யா.இஸ்லாமிய மதத்திலும் சாப்பிடும் முன்னர் இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் என்று கூறியே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

    சாப்பிடும் முறைகளையும்,பழக்கவழக்கங்களையும் எப்படி பேண வேண்டும் என்பதையும் இஸ்லாம் கூறுகின்றது.

    இதெல்லாம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்தது என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  2. அருமையான குறிப்புக்கள் பாஸ்

    பதிலளிநீக்கு
  3. என்றும் நாம் மறக்க கூடாத தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  4. உணவு உண்ணுவதற்கு முன் செய்ய வேண்டியதைப்பற்றி மிகவும் அற்புதமாக விவரித்து இருக்கீங்க.
    அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நல்ல விளக்கங்கள்....

    இங்கே வடக்கில் சாப்பிடுவதற்கே [ரொட்டி] இரண்டு கைகளையும் பயன்படுத்துகிறார்கள்... - அதுவும் தந்தூரி ரொட்டி என்றால் நிச்சயம்... :(

    பதிலளிநீக்கு
  6. Very useful info.
    You have explained very well why such things are done...

    பதிலளிநீக்கு
  7. "உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் மனதார பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட்டால் நோயற்றவாழ்வில் வாழ்லாம என்பதை அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  8. ஞானமும் வைராக்கியமும் சித்திக்க பிரார்த்தனை செய்யும் அழகான ஸ்லோகப் பகிர்வு பயன் மிக்கது..

    பதிலளிநீக்கு
  9. வேறு எந்த தான தர்மங்கள் செய்தாலும் “போதும்” என்ற வார்த்தையை, நாம், தானம் பெற்றுக் கொள்பவரிடமிருந்து மனப்பூர்வமாகச் சொல்ல வைக்க முடியாது. /

    அன்னதானம் ஒன்றே உயிர் வளக்கும் அற்புத தானம்..

    பதிலளிநீக்கு
  10. ”பிடியரிசித்திட்டம்”

    எத்தனை அருமையான திட்டம்!

    பதிலளிநீக்கு
  11. ”பிடியரிசித்திட்டம்”

    எத்தனை அருமையான திட்டம்!

    பதிலளிநீக்கு
  12. \\சாப்பாடு ஒன்றை மட்டுமே நம்மால் பிறருக்கு, அவர் வயிறு முட்டப்போட்டு, அவர் வாயாலேயே மனம் திறந்து ”போதும் போதும்” என்று சொல்லும் அளவுக்கு அளிக்க முடியும்.


    வேறு எந்த தான தர்மங்கள் செய்தாலும் “போதும்” என்ற வார்த்தையை, நாம், தானம் பெற்றுக் கொள்பவரிடமிருந்து மனப்பூர்வமாகச் சொல்ல வைக்க முடியாது. \\

    எவரும் மறுக்க முடியாத உண்மையினை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    \\எனவே கூடுமான வரை நமக்குத் தேவையான உணவுகளை, நம் வீட்டிலேயே, நம் மீது நலம் விரும்பிகளாக இருப்பவர்கள் மூலமாகவோ அல்லது நமக்கு நாமேவோ[சுயம்பாகம்] தயாரித்து உண்பதே சாலச்சிறந்தது.
    நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, பேசிக்கொண்டோ, தொலைகாட்சிகள், கணினி போன்றவற்றில் கவனம் செலுத்திக்கொண்டோ, காலில் காலணி அணிந்து கொண்டோ உணவு சாப்பிடுவதை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்.\\

    உண்ணும் உணவை மதிக்கவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதன் காரணத்தை உணர்ந்து பிள்ளைகளும் பின்பற்ற வேண்டும். இந்நாளில் பெரியவர்களே தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு என்ன உண்கிறோம் என்று தெரியாமலேயே உண்கிறார்கள். உணவுப்பழக்கம் மாறவேண்டும்.

    ஆன்மீகத்தோடு ஆரோக்கியத்திற்கும் வழிகாட்டும் நல்லதொரு பதிவு. பாராட்டுகள் வை.கோ. சார்.

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அவசியமான பதிவு. பிடியரிசி அலோசனை பற்றி பகிர்ந்தது ரொம்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். நிச்சயம் இது மனதில் கொண்டு இனி சிலதேனும் செய்யும் பழக்கம் நம்மிடையே வரும். "அன்னபூர்ணே" ஸ்லோகம், ப்ரியமானது, சுலபமானது, அர்த்தம் புரிந்து அழகாய் சொல்ல நினைவூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. பயனுள்ள பதிவு சார். அனைவரும் கடைபிடிக்க வேண்டிய தகவல்கள் தான்....

    பதிலளிநீக்கு
  15. ஸாதிகா said...
    //அருமையான குறிப்புகளய்யா.இஸ்லாமிய மதத்திலும் சாப்பிடும் முன்னர் இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் என்று கூறியே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

    சாப்பிடும் முறைகளையும்,பழக்கவழக்கங்களையும் எப்படி பேண வேண்டும் என்பதையும் இஸ்லாம் கூறுகின்றது.

    இதெல்லாம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்தது என்பதில் ஐயமில்லை.//

    எனக்கு நிறைய முகமதிய நண்பர்களுடன் பழக்கம் உண்டு. அவர்களில் பலர் என்னிடம் மிகுந்த பாசத்துடனும் மரியாதையுடனும் இன்றும் பழகி வருபவர்களே.

    உங்கள் இஸ்லாமிய மதத்தில் தினம் ஐந்து வேளை தொழுகை செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

    வேறொரு பாதிக்கப்பட்ட நபருக்குத் துணையாக ஏழு நாட்கள் ஒரு மசூதிக்குச்சென்று, தினம் ஒரு மணி நேரம் ஒரு முகமதிய நண்பர் வெகு ஸ்ரத்தையாக குரானிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை ஓதி பாதிக்கப்பட்டவருக்காக சிகித்சை அளித்ததை நான் அருகில் இருந்து ஈடுபாட்டுடன் கேட்டவன்.

    எங்கள் அதர்வண வேதத்தில் உள்ள பலவிஷயங்கள், இன்னும் தீவிரமாக சீக்கிரமாக வேலைசெய்யக்கூடிய வகையில் குரானின் அந்தப்பகுதியில் உள்ளதாக ஒருவர் [ஹிந்துமத காளி உபாசகர்] கூறக்கேட்டுள்ளேன்.

    ஓர் ஊரைச்சென்றடைய பல வழிகள் இருப்பது போல, அந்த ஒரே பரம்பொருளை அடைய பல மதங்கள்
    ஏற்பட்டுள்ளன என்பதே உண்மை.

    எல்லா மதமுமே அன்பையும், மனித நேயத்தையுமே தான் போதிக்கின்றன.

    இதை எல்லோருமே உணர்ந்து கொண்டால் ஜாதி மத இன நிற மொழிக் கலவரங்களுக்கோ, சண்டை சச்சரவுகளுக்கோ இடமே இல்லை.

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  16. இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்களைக்கூறீயுள்ள

    திருவாளர்கள்:

    K.s.Rajh
    வெங்கட் நாகராஜ்
    பழனி கந்தசாமி ஐயா

    திருமதிகள்:

    திருமதி பி.எஸ்.ஸ்ரீதர்
    மீரா
    ராம்வி
    உஷா ஸ்ரீகுமார்
    இராஜராஜேஸ்வரி
    கீதமஞ்சரி
    ஷக்திப்ரபா
    கோவை2தில்லி

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  17. நமது இல்லத்தில் வற்றாது தானியங்கள் பெருக ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசியை இட்டு, அதில் சிறிய அன்னபூரணி விக்கிரத்தினை வைத்து பூஜை அறையில் வைக்கவேண்டும். நல்ல பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. சந்திர வம்சம் said...
    //நமது இல்லத்தில் வற்றாது தானியங்கள் பெருக ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசியை இட்டு, அதில் சிறிய அன்னபூரணி விக்கிரத்தினை வைத்து பூஜை அறையில் வைக்கவேண்டும். நல்ல பதிவு.
    நன்றி.//

    நல்ல தகவல். அன்பான தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நம்பிக்கைபாண்டியன் said...
    //பயணுள்ள கருத்துக்கள்!//

    Thank you very much, Sir.

    பதிலளிநீக்கு
  20. Jaleela Kamal said...
    //அக்கறையான அறிவுரைகள்//

    Thanks a Lot.
    vgk

    பதிலளிநீக்கு
  21. Sir,
    We the older generation people somewhat observing all these since we had time to here what our elders told.
    But unfortunately this present generation people doesnot have time to observe any formalities which are told by our forefathers.
    You are doing a very good job sir.
    By reading this through computer,let the younger generation know things and adopt.
    If so I am the first person to be happy.
    Thanks for the nice post sir.
    viji

    பதிலளிநீக்கு
  22. viji said...
    //Sir,

    We the older generation people somewhat observing all these, since we had time to hear what our elders told.

    But unfortunately this present generation people do not have time to observe any formalities which are told by our forefathers.

    You are doing a very good job sir.

    By reading this through computer,let the younger generation know things and adopt.

    If so I am the first person to be happy.

    Thanks for the nice post sir.
    viji//

    THANK YOU VERY MUCH, FOR YOUR KIND ENTRY AND VALUABLE COMMENTS, MADAM.vgk

    பதிலளிநீக்கு
  23. அன்னம் பிரம்மம் என்று சொல்வார்கள். அதை பக்தியுடன் வழிபடுவது நன்மை பயக்கும்.

    பதிலளிநீக்கு
  24. நம் அடிப்படை தேவைகளூ அனைத்தயும் தருவது இறைவனே அவர் கொடுப்பதை அவருக்கு நிவேதனம் செய்து பிறகு நாம் உண்ண வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 28, 2015 at 10:50 AM

      //நம் அடிப்படை தேவைகள் அனைத்தையும் தருவது இறைவனே அவர் கொடுப்பதை அவருக்கு நிவேதனம் செய்து பிறகு நாம் உண்ண வேண்டும்.//

      ஓக்கே, சந்தோஷம், அப்படியே செய்யுங்கோ ! :)

      நிவேதனம் ஆன பிறகு மறக்காமல் என்னையும் கூப்பிடுங்கோ ! :) நானும் பிரஸாதம் உண்ண வேண்டும்! :)

      நீக்கு
  25. உணவு பற்றிய விஷயங்கள் அருமை.

    வாசனை அவனுக்கு
    உணவு நமக்கு.

    வாசனை அந்தப் பரந்தாமனை அடைவதாலேயே நம் உணவு மிகவும் சுத்தமாகி விடுகிறது.

    இந்தப் பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும் பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டியவை.

    வருங்கால சந்ததியினருக்கு உங்கள் வலைத்தளம் ஒரு பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு
  26. நாங்க கூட சாப்பிடும்முன்ன குரரானிலிருந்து சில விகள் ஓதுவோம். நல்ல வெசயம்தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 17, 2015 at 12:55 PM

      வாங்கோ முருகு, வணக்கம்.

      //நாங்க கூட சாப்பிடும்முன்ன குரரானிலிருந்து சில வரிகள் ஓதுவோம். நல்ல வெசயம்தானே.//

      நல்ல விஷயம்தான். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      நீக்கு
    2. ஆன்மீகத்துடன் ஆரோக்கிய விஷயங்களும் சொல்லி இருக்கிறீர்கள் எல்லாருமே கடைப்படிக்கும்படி சுலபமானதும்கூட. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே இது போல நல்ல விஷயங்களை எல்லாருமே சொல்லிக்கொடுக்கலாம் சாப்பாடு விஷயத்தில் தான் வயிறும் மனதும் நிறம்பி போதும் என்று திருப்தி அடலகிறது.

      நீக்கு
  27. மிக உன்னதமான விஷயங்களை உள்ளடக்கிய பதிவு...நீங்கள் கூறியவற்றில் பலவற்றை எனது பாட்டி- அம்மம்மா கடைபிடித்துவந்தார்கள்...நானும் முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு