என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 8 பிப்ரவரி, 2012

HATTRICK AWARD OF THIS FEBRUARY FIRST WEEK

2
ஸ்ரீராமஜயம்


வெற்றி மீது வெற்றி வந்து 
என்னைச்சேரும்!

அதை வாங்கித்தந்த பெருமை 
எல்லாம் உங்களைச் சேரும்!!
திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களால்
THE VERSATILE BLOGGER AWARD
04.02.2012 அன்று எனக்கு முதலாவது 
விருதாக வழங்கப்பட்டது.
திருமதி சந்திரகெளரி அவர்களால்

LIEBSTER BLOG AWARD [ GERMAN ]

06.02.2012 அன்று எனக்கு 
அடுத்ததோர் விருது வழங்கப்பட்டது.


இன்று 08.02.2012 அன்று மேலும் ஓர் மகிழ்ச்சியான, 
இனிமையான தொலைபேசித் தகவல் வந்துள்ளது. 


”மனிதனை தரிஸிக்க” 

என்ற தலைப்பில் நான் எழுதி, 
என்றைக்கோ அனுப்பியிருந்த சிறுகதையொன்று 

சர்வதேச அளவில் 

நடத்தப்பட்ட போட்டியொன்றில் 

இரண்டாம் பரிசுக்குத் 

தேர்வாகியுள்ளதாக சற்றுமுன் 
கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

என் வலைத்தளத்தில் சிறுகதைகள் எழுதுவதை நான் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டிருப்பினும், இந்தகைய விருதுகள் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி தொடர்ந்து சிறுகதைகள் தான் எழுத வேண்டும் எனச்சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. 

இன்று 08.02.2012 அன்று கிடைத்துள்ள இந்த இனிய தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இந்த சிறுகதைப்போட்டிக்கு அவர்கள் கொடுத்திருந்த நிபந்தனைகளில் ஆன்மிகமும், மனித நேயமும் சேர்ந்த கதைக்கருவாக இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.   

இந்தப் பரிசுக்குத் தேர்வாகியுள்ள சிறுகதையை நான் பிறகு ஒருநாள் 
என்வலைத்தளத்தில் வெளியிடுகிறேன்.


என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்
08.02.2012 

34 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் சார்.ஆனால் வலைதளம் துவங்கிய பின் உங்களுக்கு முனைவர் .குணசீலன் என்பவரால் இலக்கியத் தேனீ என்ற விருது முதன் முதலில் உங்களுக்கு கிடைத்ததை மறந்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. // thirumathi bs sridhar said...
  வாழ்த்துகள் சார்.ஆனால் வலைதளம் துவங்கிய பின் உங்களுக்கு முனைவர் குணசீலன் என்பவரால் இலக்கியத் தேனீ என்ற விருது முதன் முதலில் உங்களுக்கு கிடைத்ததை மறந்துவிட்டீர்கள்.//

  அதை நான் மறக்கவில்லை மேடம்.
  இந்த இடுகையின் தலைப்பைப் பார்த்தீர்களா?

  இந்த ”பிப்ரவரி மாதம் தொடர்ந்து வந்துள்ள வெற்றிகள்” என்று தானே குறிப்பிட்டுள்ளேன். அவர் எனக்கு அளித்த விருது சென்ற வருடக்கணக்கில் அல்லவா வருகிறது!

  இப்போ OK வா?

  இருப்பினும் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. மகிழ்ச்சி. வாழ்த்துகள். கதையினைப் பகிர்ந்திடக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கு சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்! தங்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
  எனக்கும் விருதளித்த உங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா,
  விருதுகள் உங்களை வந்தடைந்து
  அதன் அழகை மெருகூட்டிக் கொள்கிறது.
  வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 6. சிறுகதை போட்டியில் பரிசு கிடைத்தமைக்கு மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கள்.மேலும் பற்பல விருதுகளும் பரிசுகளும் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. மிக மிக மகிழ்ச்சி சார்.....

  சிறுகதைகள் எழுதுவதில் உங்கள் திறன் எல்லோரும் அறிந்தது... நீங்கள் இன்னும் தொடர்ந்து இப்படிச் சிறுகதைகள் எழுதி புத்தகங்களிலும், உங்கள் வலைப்பூவிலும் தொடர்ந்து வெளியிடவேண்டும்....

  வாழ்த்துகள் சார்...

  பதிலளிநீக்கு
 8. சர்வதேச அளவில்

  நடத்தப்பட்ட போட்டியொன்றில்

  இரண்டாம் பரிசுக்குத்

  தேர்வாகியுள்ளதாக சற்றுமுன்
  கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.//

  நிறைவான வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..

  பதிலளிநீக்கு
 9. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்!
  அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உங்களைச் சேரும்!!/

  மேலும் பல வெற்றிகள் பெற இறையருளைப் பிரார்த்திக்கிறோம்..

  பதிலளிநீக்கு
 10. என் வலைத்தளத்தில் சிறுகதைகள் எழுதுவதை நான் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டிருப்பினும்//

  தொடரவேண்டுமென்பதே இறைவன் இந்த பரிசுத் தேர்வுகளின் மூலம் உணர்த்த விரும்பும் செய்தியாக இருக்கலாம்..

  பதிலளிநீக்கு
 11. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கதை போட்டியில் தங்களின் கதை பரிசு பெற்றது பற்றி மிகவும் மகிழ்ச்சி வை.கோ. சார். வாழ்த்துக்கள்.

  கதையை சீக்கிரமாக வெளியிடுங்க.. படிக்க காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 12. மிக்க மகிழ்ச்சி ஐயா..சர்வதேச வெற்றிக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துக்கள் சார். அந்த சிறுகதையை படிக்க ஆவலாக உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் பாஸ் கலக்குங்க

  பதிலளிநீக்கு
 15. கோப்பு சார், வாழ்த்துக்கள். மேலும் பல பரிசுகள் உங்களை அடையட்டும். அந்த வெற்றிக் கதையை படிக்க காத்திருக்கிறேன் :-)

  பதிலளிநீக்கு
 16. ஆஹா!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  ரொம்ப சந்தோஷமா இருக்கு :)

  பதிலளிநீக்கு
 17. சர்வதேச அளவில் இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் சார்.

  சிறுகதைகளை தொடர்ந்து தாருங்கள்..... எல்லா கதையுமே சந்தோஷத்தில் முடிவதும் தங்களுடைய சிறப்பு சார்....

  பரிசு பெற்ற கதையை வலைப்பூவில் பகிர்ந்திடுங்கள்....

  பதிலளிநீக்கு
 18. அன்பின் வை.கோ - மிக்க மகிழ்ச்சி - தகுதி உடைய தங்களுக்கு வாசகர்கள் / பதிவர்கள் தேர்ந்தெடுத்து விருது வழங்கி உள்ளனர். தங்கள் சிறுகதைக்குப் அரிசு கிடைத்ததும் நன்று. யூ டிசர்வ் தெம்.

  மேன் மேலும் நல்விருதுகளும் - பரிசுகளூம் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 19. சர்வதேச அளவிலான சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு என்பது மிகவும் பாராட்டுக்குரியது. தங்கள் சிறுகதைத் திறனுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு. எனவே மீண்டும் சிறுகதைகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

  மேலும் பெற்றிருக்கும் இரண்டு வலைத்தள விருதுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ சார்.

  பதிலளிநீக்கு
 20. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் கூறி வாழ்த்தி சிறப்பித்துள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 21. உங்கள் சிறுகதைக்குப் பரிசு கிடைத்ததற்குப் பாராட்டுகள். கதையை சீக்கிரம் வெளியிடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி April 25, 2015 at 6:57 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உங்கள் சிறுகதைக்குப் பரிசு கிடைத்ததற்குப் பாராட்டுகள். கதையை சீக்கிரம் வெளியிடுங்கள்.//

   பரிசுப்பணம் கைக்கு வந்ததும், என் வலைத்தளத்தினில் அந்தக் கதையை வெளியிடலாம் என்று இருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்தப்பரிசுத்தொகை இன்றுவரை என் கைக்கு கிடைக்கவில்லை, ஐயா.

   பரிசுக்குத் தேர்வான கதை என்று விளம்பரம் செய்து, என் கதையையும் ஓர் சிற்றிதழில் அச்சிட்டு வெளியிட்டும் விட்டார்கள். அந்த இதழ் இன்னும் என்னிடம் உள்ளது.

   போட்டி அறிவித்தவர்கள் எனக்கான பரிசுத்தொகையை காசோலையாக சிற்றிதழ் ஆசிரியரிடமும் வழங்கி விட்டார்கள் எனத்தெரிகிறது.

   அந்த சிற்றிதழ் ஆசிரியருக்கு அதை என்னிடம் கொடுக்க இன்னும் ஏனோ மனம் வரவில்லை. ஏதோ அவர்களின் சிற்றிதழ் ஆரம்பித்து 10 வருட நிறைவு விழா நடத்தப்போவதாகவும். அந்த விழாவினில் என்னை கெளரவித்துத் தருவதாகவும், வேறொரு நிகழ்ச்சியில் என்னை நேரில் சந்தித்தபோது ஒரு நாள் என்னிடம் தெரிவித்தார்.

   அவ்வாறு அவர் சொல்லியே இரண்டு வருடங்கள் ஆச்சு.

   இதிலும் ஏதோ ஊழல் நடந்துள்ளது என நான் சந்தேகப்படுகிறேன்.

   கடைசியில் என்னதான் செய்கிறார் பார்ப்போம் எனப் பொறுமை காத்து வருகிறேன்.

   என் கைவசம் எல்லா சாட்சியங்களும் பத்திரமாகவே உள்ளன. அதன் முடிவு தெரிந்தபிறகு, என் கதை இந்த என் வலைத்தளத்தில் கண்டிப்பாக வெளியிடப்படும். - VGK

   நீக்கு
 22. ஸ்வாமி வரமு கொடுத்தும் பூசாரெ வரம் கொடுக்கலயா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 28, 2015 at 10:42 AM

   //ஸ்வாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலயா?//

   ஆமாம்மா, சிவகாமி. அதே .... அதே, சபாபதே.

   அந்த சிற்றிதழ் பத்திரிகை ஆசிரியர் பயங்கரமான பொருளாதார நெருக்கடிகளில் இப்போது உள்ளார். சமீபத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவியும் இறந்துபோய் விட்டதாகச் சொல்லி என்னிடம் வருத்தப்பட்டார். கடந்த ஓராண்டாக அந்த சிற்றிதழும் வெளிவராமல் உள்ளது என்றும் கேள்விப்பட்டேன். என்றாவது ஒருநாள் எனக்குத் தர வேண்டிய பணத்தினை கட்டாயமாகத் தந்துவிடுவதாகவும் சொல்லியுள்ளார். அதனால் நானும் அவருக்கு மேலும் நெருக்கடி ஏதும் கொடுக்காமல், போனால் போகட்டும் என விட்டு வைத்துள்ளேன்.

   அவரும் இங்கு எங்கள் உள்ளூர் ஆசாமி மட்டுமே. ஸ்வாமி கொடுத்த வரத்தை பூசாரி என்றாவது ஒருநாள் என்னிடம் சேர்ப்பித்து விடுவார் என நான் இன்னும் நம்புகிறேன். :)

   எனக்கு அந்தப்பணம் முக்கியமல்ல. இருப்பினும் என் படைப்புக்கான அங்கீகாரம் மிகவும் முக்கியம். அவ்வாறு கிடைத்த அந்த அங்கீகாரம் முழுமை அடைய இந்தப் பணமும் முக்கியமாகிறது. அதனால் மட்டுமே அதனை நானும் இன்னும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். பார்ப்போம்.

   God is Great !

   நீக்கு
 23. என் வலைத்தளத்தில் சிறுகதைகள் எழுதுவதை நான் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டிருப்பினும், இந்தகைய விருதுகள் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி தொடர்ந்து சிறுகதைகள் தான் எழுத வேண்டும் எனச்சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. //

  அதையேதான் நானும் சொல்றேன். தயவு செய்து உங்க சிறுகதைகளை இங்க பதியுங்கள்.

  விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. பாராட்டுகள் வெற்றி மீது வெற்றி வந்து ஒங்கள சேராம வேர யாரப்போயி சேரும்.

  பதிலளிநீக்கு
 25. மனிதனை தரிசிக்க சர்வதேச போட்டியில பரிசு வென்றதற்கு வாழ்த்துகள் பெற்ற விருதுகளுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 26. ஹாட்ரிக் பரிசு...எல்லா பரிசையும் ஆஞ்சநேயரே அடியோட அள்ளிகிட்டு வந்து வாத்தியார்கிட்ட குடுக்க வர்றாப்பல இருக்கு..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு