About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, February 26, 2012

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை !


ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-11


ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை !
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸம்தாத்ரத்தின் மஹிமையைக் கீழ்க்கண்டவாறு விளக்குவார்.

ஸ்ரீ தர்மபுத்ரர் ஸ்ரீ பீஷ்மரைக் கேட்டு அவரும் பதில் சொல்லி ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாளும் பாஷ்யம் பண்ணியுள்ளதன் கருத்து:-

1.ஸ்ரீ குருவாயூரப்பன் ஒருவனே தேவாதி தேவன்

2.அவன் தான் நாம் எல்லோரும் அடைய வேண்டிய இடம்

3.அவனை ஸ்தோத்ரம் செய்வதே பூஜையாகும்

4.அந்த ஸ்தோத்ரத்தை [அதாவது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை] பக்தியுடன் ஸதா ஜபிப்பதே எல்லாவற்றிலும் சிறந்த தர்மம்

5.பூஜை என்றால் அதற்கு பல ஸாதனங்கள் தேவை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமானது, ஸ்தோத்ரம்+பூஜை இரண்டையும் சேர்த்தே செய்ததாகும்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பூர்வ பாகம் - 15 ஆவது ஸ்லோகம்:

ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோ திகதமோ மத: !
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை ராச்சே நரஸ் ஸதா !!    

6.விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபத்தால் இம்மையில் எல்லாம் கிடைத்து முடிவில் முக்தியும் கிடைக்கும்.

a)ஸ்ரீ பீஷ்மர் விஷ்ணு ஸஹஸநாம ஸ்தோத்ரத்தை தர்மபுத்ரருக்கு சொல்லும்போது ஸ்ரீ கிருஷ்ண பகவானே பக்கத்தில் இருந்தார்.

b)ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் பூர்த்தியானவுடன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை செய்யும்படி ஸ்ரீமத் பாகவத மஹாத்மியத்தில் ஸ்ரீ வியாசர் சொல்லியிருக்கிறார் (பத்மபுராணம் மாஹாத்மியம் 6 ஆவது அத்யாயம் 62/63 ஸ்லோகங்கள்). 


ஸப்தாஹ பாராயணத்தில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் அதைப் போக்கிவிடும். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணத்திற்கு மேல் வேறு ஒன்றுமே இல்லை.

THROUGH THAT, EVERY PERFORMANCE BIDS FAIR TO BECOME FRUITFUL 
IN AS MUCH AS THERE IS NOTHING MORE EFFICACIOUS THAN THAT. நாஸ்தியஸ்த்மாததிகம் யத: !!

c)எல்லா தர்மங்களிலும் மேலான தர்மம் இது. பலஸ்ருதியில் வரும் ஸ்லோகங்கள் எல்லாமே உண்மையானவை தான். EXAGGERATION இல்லை என்று ஸ்ரீ ஆதிசங்கரர் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். 

”த்யெள: சந்த்ரார்க்க நக்ஷத்ர” இத்யாதினா
ஸ்துத்யஸ்ய வாசுதேவஸ்ய மாஹாத்மய 
கதனேனோக்தானாம் பலானாம் ப்ராப்திவசன
யதார்தகதனம் நார்தவாத இதி தர்சய !!  

d)கர்ம மார்க்கத்திலும் யக்ஞம் பூர்த்தியானவுடன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வார்கள். இந்த பாராயணத்தால் எல்லாக் கர்மாக்களும் நன்றாக பூர்த்தியானதாக பகவான் ஏற்றுக்கொள்வார்.

e)ஞான மார்கத்திலும் பாஷ்யம் முடிவில் ஆதிசங்கர பகவத் பாதாள் சகுணப்ரம்மமாகிற பகவானை சரணமடைந்தவர்களுக்கும் ப்ரம்ம சாக்ஷாத்காரம் ஏற்படும் என்று ஒரு ஸ்லோகம் சொல்லி பூர்த்தி செய்திருக்கிறார்.

ஸகுணஸரணாநாமபி அனாவ்ருத்தி ஸித்திரிதி

f)பலஸ்ருதியின் 6 ஆவது ஸ்லோகம்:

யச: ப்ராப்நோதி விபுலம் யாதி ப்ராதாந்யமேவ ச !
அசலாம் ச்ரியமாப்நோதி ச்ரேய: ப்ராப்நோத்யநுத்தமம் !! 

சுத்தமான கீர்த்தியை அடைவான். 
சுற்றத்தார்களுக்குள் முக்கிய ஸ்தானத்தில் இருப்பான்.

g)பலஸ்ருதியின் 8 ஆவது ஸ்லோகம்: @@@@

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத் !
பயாந் முச்யேத பீதஸ்து முச்யேதபந்த ஆபத:

இதன் கடைப்பையாதி ஸங்க்யைப்படி 632 தடவைகள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தால் ஸகல ரோகங்களும் நிவர்த்தியாகும்.        


h)பலஸ்ருதியின் 9 ஆவது ஸ்லோகம்:

துர்காணயதிதரத் யாசு புருஷ: புருஷோத்தமம் !
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமந்வித: !!

இதன்படி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை 538 ஆவர்த்திகள் செய்தால் எல்லாக் கஷ்டங்களும் நிவர்த்தியாகும்.

i) பலஸ்ருதியின் 4 ஆவது ஸ்லோகம்:

தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம் அர்த்தார்த்தீ சார்ந்த மாப்நுயாத் !
காமநவாப்நுயாத் காமீ ப்ரஜார்த்தீ ப்ராப்நு சாயாத் ப்ரஜா !!

இதன்படி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை 782 தடவைகள் படித்தால் ஸத்புத்ர பாக்யம் ஏற்படும்.

j) ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் 1990 இல் ஒரு Devotee க்கு கீழ்க்கண்டவாறு அவர் கையால் எழுதிக் கொடுத்ததைப் பார்ப்போம்:

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண மஹிமைக்கு ஈடு இணையில்லை. அதுவே எல்லா க்ஷேமத்தையும் அளிக்கும். 

அதிலும் ஒரு விஷயம்; 
91 ஆவது தசகத்தில் ஸ்ரீ பட்டத்ரி, 
"சரித்திரம்+ நாமஜபம் இரண்டும் துல்லியமாக இருக்க வேண்டும்" 
என்று உபயத: என்ற வார்த்தையை மறுபடியும் சொல்கிறார். 
[91 ஆவது தசகம், 5 ஆவது ஸ்லோகத்தில்] 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தில் அவதார சரித்திரம் முழுவதும் அடங்கியுள்ளதாக “பட்டர்” என்ற வைஷ்ணவாசார்யார் வியாக்ஞானம் செய்துள்ளார். அதே நேரத்தில் நாம ஜபமும் ஆகிறது. 


ஆகையால் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண ஒன்றின் மூலம், ஒரு நாளில் எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அவ்வளவு நேரம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஜபித்தால் இரண்டையும் [i.e. சரித்திரம், நாமஜபம்] செய்ததாகி விடுகிறது.”

k) ஸ்ரீ மஹாபெரியவாள் தினம் பிக்ஷை செய்ய ஆரம்பிக்கும் முன், அங்கிருக்கும் சிஷ்யர்களை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை சொல்லும்படி சமிக்ஞை செய்வார்கள். [தலையில் கையினால் குட்டிக்கொண்டு சமிக்ஞை செய்வார்கள்; “சுக்லாம்பரதரம்” என்று ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம் ]. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் தினம் இரண்டு ஆவர்த்தி சொல்லுவார்கள். ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம். 

    -o-o-o-o-o-o-o-o-o-பின்குறிப்பு

@@@@
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத் !
பயாந் முச்யேத பீதஸ்து முச்யேதபந்த ஆபத:

[ இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவோ தீராத கொடுமையான வியாதிகள் + ரோகங்கள் ஏற்பட்டு நம்மில் பலரும் சிரமப்படுகிறோம். நோய்வாய்ப்பட்டு பல நாட்கள் ஆஸ்பத்தரியிலோ வீட்டிலோ படுத்த படுக்கையாகிறோம். எவ்வளவோ பணம் செலவழித்து, வைத்தியமும் பார்க்கிறோம். 

அதனுடன் கூட இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தையும், முழு நம்பிக்கையுடனும், பக்தி ஸ்ரத்தையுடனும், மனதை ஒருமுகப்படுத்தி, தொடர்ச்சியாக தினம் 21 முறைகள் வீதம் 30 நாட்களுக்குச் சொல்லி, 31 ஆவது நாள் பாக்கி 2 தடவைகள் சொல்லி [ஆகமொத்தம் 632 ஆவர்த்தி] பூர்த்திசெய்து தான் பார்ப்போமே ! 

கைகால் அலம்பிக்கொண்டு, விளக்கேற்றி வைத்துவிட்டு, வடக்கோ அல்லது கிழக்கோ நோக்கி அமர்ந்து கொண்டு, சொல்லிக்கொண்டே இருந்தால் போதுமே!  மணி, மந்த்ர, ஒளஷதம் என்று தானே நம் முன்னோர்களும் எல்லாவற்றிலும் கடைபிடித்து வந்தார்கள் !

ஏற்கனவே இதுவரை சொல்லி பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்தில் உச்சரிக்க சற்றே சிரமமாக இருக்கும். 

அப்படிப்பட்டவர்கள் [மிகப்பெரிய எழுத்துக்களில் தமிழில் அச்சிடப்பட்டு விற்கப்படும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண புத்தகத்தைப் பார்த்து] தினமும் ஒருமுறை வீதம் கொஞ்சநாட்கள் சொல்லிப் பழகிவிட்டால் அது மனதில் அப்படியே பதிந்து போகும். 

சொல்லச்சொல்ல ருசியோ ருசியாக இருக்கும். மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், தன்னம்பிக்கையையும், தைர்யத்தையும் அளிக்கும். 

பிறகு நன்கு சொல்லவும் உச்சரிக்கவும் பழகிவிட்டபிறகு பலமுறைகள் சொல்வது என, எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம். 

அதிக எண்ணிக்கையான தினம் 21 முறைகள் சொல்லும் போது ஆரம்பத்தில் உள்ள ஸ்லோகங்களையும், கடைசியில் உள்ள பலஸ்ருதிகளையும் ஒரே ஒரு முறை சொன்னால் போதும். நடுவில் உள்ள ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண பிரதான மந்திரங்களான 108 மட்டும் (ஒவ்வொன்றும் 2 வரிகள் மட்டும்) 21 தடவைகள் தொடர்ந்து சொன்னால் போதுமானது.  

அதாவது ஆரம்ப ஸ்லோகம் No. 1:

“விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு: 
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன:

முடிவு ஸ்லோகம் No. 108:

வனமாலீ கதீ சார்ங்கீ சங்கி சக்ரீ ச நந்தகீ !
ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்: வாஸுதேவோ பிரக்ஷது !! 

ஸ்ரீ வாஸுதேவோ பிரக்ஷது ஓம் நம இதி:


இதில் உள்ள ருசியும், பலன்களும், அருமை பெருமைகளும் அதைச்சொல்லி அனுபவத்துப் பார்த்தவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும். 

வைத்தியர்களே வியந்து போகும் அளவுக்கு, நமக்கு வந்த வியாதிகள் பறந்து போகும்; வாழ்க்கையில் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து வெற்றி வாய்ப்புகளும் நம்மை நாடி அவைகளாகவே வந்து சேரும். 

இவையெல்லாம் அனுபவித்து சுகமடைந்த பலரும் சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன். ஏன் ... நானே கூட அவ்வப்போது இதனை என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். vgk ] 


-ooooooooooooooo-
இதன் அடுத்தடுத்த எட்டு பகுதிகளில் ஸ்ரீமத் சுந்தர காண்டத்தின் அபார மஹிமை பற்றி ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருளிய வெகு அருமையான செய்திகள் வெளியிடப்பட உள்ளன. அனைவரும் தவறாமல் படித்துப் பயன்பெறுவீர். 


அன்புடன் 
vgk
தொடரும்

48 comments:

 1. ஸப்தாஹ பாராயணத்தில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் அதைப் போக்கிவிடும்.

  ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணத்திற்கு மேல் வேறு ஒன்றுமே இல்லை.

  ReplyDelete
 2. ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

  சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

  "ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் இந்த வரிகள் முழு சகஸ்ர நாம்த்தைச் சொன்ன பலனைத்தரும்..

  சனிதசையின் தாக்கத்தைத் தவிர்க்கும்..

  ReplyDelete
 3. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தில் அவதார சரித்திரம் முழுவதும் அடங்கியுள்ளதாக “பட்டர்” என்ற வைஷ்ணவாசார்யார் வியாக்ஞானம் செய்துள்ளார். அதே நேரத்தில் நாம ஜபமும் ஆகிறது.

  பல பலன்களை ஒருங்கே அருளும் பெருமைவாய்ந்த ஸ்தோத்திரத்தின் மகிமையை சிறப்பாய் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 4. மணி, மந்த்ர, ஒளஷதம் என்று தானே நம் முன்னோர்களும் எல்லாவற்றிலும் கடைபிடித்து வந்தார்கள் !

  ஐபேடுகள், யூட்யூப் ,சிடி என்று எதிலாவது தினம் ஒருமுறை இல்லத்தில் ஒலிக்கவிட்டால் கேட்டுக்க்கேட்டு எளிதில் பாடமாகிவிடும்..

  ReplyDelete
 5. இராஜராஜேஸ்வரி said...

  //ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணத்திற்கு மேல் வேறு ஒன்றுமே இல்லை.//

  ஆம் உண்மை, உண்மை, உண்மை.
  உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை. உடனடியாக வருகை தந்து மிகச்சிறப்பாகக் கருத்துக்கூறியுள்ளதற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 6. இராஜராஜேஸ்வரி said...
  //ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

  சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

  "ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் இந்த வரிகள் முழு சகஸ்ர நாம்த்தைச் சொன்ன பலனைத்தரும்..

  சனிதசையின் தாக்கத்தைத் தவிர்க்கும்..//

  ஆஹா! இதுவும் அருமை தான்.
  இன்னும் மிகச்சுலபமான வழியாகத்தான் சொல்லிட்டீங்க.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 7. இராஜராஜேஸ்வரி said...
  /ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தில் அவதார சரித்திரம் முழுவதும் அடங்கியுள்ளதாக “பட்டர்” என்ற வைஷ்ணவாசார்யார் வியாக்ஞானம் செய்துள்ளார். அதே நேரத்தில் நாம ஜபமும் ஆகிறது. /

  //பல பலன்களை ஒருங்கே அருளும் பெருமைவாய்ந்த ஸ்தோத்திரத்தின் மகிமையை சிறப்பாய் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.//

  எல்லாம் நானே அனுபவித்து உணர்ந்ததன் ருசிதான் ஏதோ நம்மால் நாலு பேருக்குத்தெரியட்டுமே என்று என்னை எழுத வைத்தது,

  தங்களின் ஊக்குவித்தலுக்கு மிக்க நன்றி, மேடம்.

  ReplyDelete
 8. இராஜராஜேஸ்வரி said...
  /மணி, மந்த்ர, ஒளஷதம் என்று தானே நம் முன்னோர்களும் எல்லாவற்றிலும் கடைபிடித்து வந்தார்கள் !/

  //ஐபேடுகள், யூட்யூப் ,சிடி என்று எதிலாவது தினம் ஒருமுறை இல்லத்தில் ஒலிக்கவிட்டால் கேட்டுக்க்கேட்டு எளிதில் பாடமாகிவிடும்..//

  தற்காலத்திற்கு ஏற்றாற்போல தகுந்த உபாயம் சொல்லியுள்ளீர்கள்.

  தங்களின் உபயோகமான ஆலோசனைக்கு என் பாராட்டுக்கள். நன்றிகள்.

  ReplyDelete
 9. உண்மைதான்!

  நல்ல பதிவிற்கு நன்றி!

  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 10. 5.பூஜை என்றால் அதற்கு பல ஸாதனங்கள் தேவை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமானது, ஸ்தோத்ரம்+பூஜை இரண்டையும் சேர்த்தே செய்ததாகும்.


  ஸஹஸ்ர நாமம் என்று மொட்டையாய் சொன்னால் அது விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத்தான் சொல்லும்! ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு விளக்கம் எழுத நினைத்து தம் சீடரை ‘ஸஹஸ்ரநாம சுவடியை எடுத்து வா’ என்று சொன்னபோது மூன்று முறையும் சீடர் விஷ்ணு ஸ.நா. கொண்டு வந்தாராம். தாம் அதற்கு பாஷ்யம் செய்வதே அம்பாளின் திருவுள்ளம் என்று பாஷ்யம் செய்தாராம்.

  ReplyDelete
 11. Seshadri e.s. said...
  //உண்மைதான்!
  நல்ல பதிவிற்கு நன்றி!
  காரஞ்சன்(சேஷ்)//

  மிக்க நன்றி, நண்பரே!

  ReplyDelete
 12. ரிஷபன் said...
  /5.பூஜை என்றால் அதற்கு பல ஸாதனங்கள் தேவை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமானது, ஸ்தோத்ரம்+பூஜை இரண்டையும் சேர்த்தே செய்ததாகும்./


  //ஸஹஸ்ர நாமம் என்று மொட்டையாய் சொன்னால் அது விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத்தான் சொல்லும்!

  ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு விளக்கம் எழுத நினைத்து தம் சீடரை ‘ஸஹஸ்ரநாம சுவடியை எடுத்து வா’ என்று சொன்னபோது மூன்று முறையும் சீடர் விஷ்ணு ஸ.நா. கொண்டு வந்தாராம்.

  தாம் அதற்கு பாஷ்யம் செய்வதே அம்பாளின் திருவுள்ளம் என்று பாஷ்யம் செய்தாராம்.//

  நானும் இதை எங்கோ கேள்விப்பட்டுள்ளேன் அல்லது படித்துள்ளேன். இந்த இடத்தில் அதை தாங்கள் ஞாபகப்படுத்தியுள்ளதற்கு, மிக்க நன்றி, Sir.

  ReplyDelete
 13. Very nice post sir,
  If any beginners want to chant Vishnu sasharanamam without error,
  can follow Kurukulam programme at Sankara t.v.
  Really very nice post sir.
  viji

  ReplyDelete
 14. படித்து ரசித்தேன்.

  ReplyDelete
 15. நல்ல இடுகை... தில்லியில் கடந்த 40 வருடங்களாக விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸத்ஸங்கம் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாராயணம் நடந்து வருகிறது....

  நல்ல ஸத்விஷயங்களை தொடர்ந்து பகிரும் உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்.....

  ReplyDelete
 16. viji said...
  //Very nice post sir,
  If any beginners want to chant Vishnu sasharanamam without error,
  can follow Kurukulam programme at Sankara t.v.
  Really very nice post sir.
  viji//

  தங்களின் அன்பான வருகைக்கும், புதிதாக ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கற்கவும் உச்சரிக்கவும் விரும்புவோர், சங்கரா டி.வி. யில் காட்டப்படும் 'குருகுலம்' நிகழ்ச்சியைப்பார்த்து பயன் பெறலாம் என்ற அருமையான பயனுள்ளதோர் ஆலோசனை கூறியுள்ளதற்கும், பதிவினைப் பாராட்டியுள்ளதற்கும், என் மனமர்ர்ந்த நன்றிகள், Madam.

  ReplyDelete
 17. பழனி.கந்தசாமி said...
  //படித்து ரசித்தேன்.//

  வாங்கோ சார், மிகவும் சந்தோஷம்.

  ReplyDelete
 18. வெங்கட் நாகராஜ் said...
  //நல்ல இடுகை... தில்லியில் கடந்த 40 வருடங்களாக விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸத்ஸங்கம் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாராயணம் நடந்து வருகிறது....

  நல்ல ஸத்விஷயங்களை தொடர்ந்து பகிரும் உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்.....//

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, வெங்கட் ஜி!

  தில்லியின் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸத்ஸங்கம் பற்றியும் அதில் நடந்து வரும் ஸத்விஷயங்கள் பற்றியும் அறிந்ததில் மகிழ்ச்சி.

  அன்பான ஆசிகளுடன் vgk

  ReplyDelete
 19. விஷ்ணு சகஸ்ரநாமத்தினை பற்றி அற்புதமான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 20. பெருமையின் பெருமையை விளக்கியதற்கு நன்றி.

  ReplyDelete
 21. நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. எனக்கு சின்ன வயதிலிருந்தே... கடவுள் பக்தி அதிகம்.... கிட்டத்தட்டக் காதல் என்றுகூடச் சொல்லலாம்... ஆனால் பின்னாளில் சில அசம்பாவிதங்களால்... கடவுளை நம்பியும் பலனில்லை, எல்லாம் விதிதான் என மனம் எண்ணத் தொடங்கியது...

  //இதில் உள்ள ருசியும், பலன்களும், அருமை பெருமைகளும் அதைச்சொல்லி அனுபவத்துப் பார்த்தவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும். ///

  முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 22. விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்வதினால் வரும் நன்மைகளைச் சொல்லி எங்களையும் வழிநடத்துவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது சார்.

  ReplyDelete
 23. இந்த பதிவு படித்தவுடன் யுட்யூபில் டவுன்லோட் செய்துகொள்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 24. RAMVI said...
  விஷ்ணு சகஸ்ரநாமத்தினை பற்றி அற்புதமான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
  --------------
  Shakthiprabha said...
  பெருமையின் பெருமையை விளக்கியதற்கு நன்றி.
  --------------
  கோவை2தில்லி said...
  விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்வதினால் வரும் நன்மைகளைச் சொல்லி எங்களையும் வழிநடத்துவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது சார்.
  --------------

  தங்கள் மூவரின் அன்பான வருகைக்கும், ஆதரவான அழகிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். vgk

  ReplyDelete
 25. athira said...
  //நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. எனக்கு சின்ன வயதிலிருந்தே... கடவுள் பக்தி அதிகம்.... கிட்டத்தட்டக் காதல் என்றுகூடச் சொல்லலாம்...//

  கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

  //ஆனால் பின்னாளில் சில அசம்பாவிதங்களால்... கடவுளை நம்பியும் பலனில்லை, எல்லாம் விதிதான் என மனம் எண்ணத் தொடங்கியது...//

  இதுபோலத் தங்கள் மனம் எண்ணத் தொடங்கியதில், வியப்பு ஏதும் எனக்கு இல்லை, மேடம்.

  உங்களுக்கு ஒருசில அசம்பாவிதங்கள் நடந்துள்ளது என்பது போல எனக்கும் பலவித சோதனைகளும் வேதனைகளும் இன்றும் கூட இருக்கத்தான் இருக்கிறது.

  சில கஷ்டங்களை நாம் பிறரிடம் பகிர்ந்து கொள்ளக்கூட முடியாது தான், ஒத்துக்கொள்கிறேன்.

  கஷ்டங்களுக்கெல்லாம் விதிப்பயன் என்றும், கடந்துபோன ஜன்மாக்களில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் தான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

  இந்த ஜன்மாவில் எனக்குத் தெரிந்து எந்த பாவமும் செய்யாத என்னால், இதையும் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தான்.

  இருப்பினும் நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்களின் வீர்யம் குறையவும் அல்லது நாம் அந்தக் கஷ்டங்களிலேயே உழன்று தத்தளித்து வேதனைகளிலேயே மூழ்கிவிடாமல் கொஞ்ச நேரமாவது அவற்றை மறந்து Mind க்கு கொஞ்சம் Diversion கொடுக்கவும்,
  நம்மை பக்தி மார்க்கத்தின் ஈடுபடச் சொல்கிறார்கள் என்று தான் நானும் நினைக்கிறேன்.

  இதன் பலனாக கொஞ்சமாவது மனநிம்மதி கிடைத்தாலும் நமக்கு இலாபமே. அதற்காகவே முடிந்தவரை முயற்சி செய்து பார்க்க வேண்டியுள்ளது.

  காலம் காலமாக நம் முன்னோர்களால் அனுஷ்டித்து அவர்களில் பலருக்கும் சுகமளித்த
  விஷயங்களாக உள்ளதால், இதை நாம் நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது.

  //இதில் உள்ள ருசியும், பலன்களும், அருமை பெருமைகளும் அதைச்சொல்லி அனுபவத்துப் பார்த்தவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும். //

  /முயற்சிக்கிறேன்./

  தங்கள் வருகைக்கும், அனுபவக் கருத்துக்களுக்கும் ‘முயற்சிக்கிறேன்’ என்ற சொல்லுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

  மனம் திறந்து பேசியுள்ளதற்கு என் பாராட்டுக்கள்.

  நல்லதையே நினைப்போம்!
  நல்லதே நடக்கட்டும்!!

  vgk

  ReplyDelete
 26. thirumathi bs sridhar said...
  //இந்த பதிவு படித்தவுடன் யுட்யூபில் டவுன்லோட் செய்து கொள்கிறேன். நன்றி.//

  வருகைக்கும் தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி, மேடம்.

  ஏதாவது பார்த்து செய்யுங்க, எனக்கும் சேர்த்து புண்ணியம் தேடித்தாங்க!

  ReplyDelete
 27. என் அப்பாவும், அம்மாவும் ஸ்ரீ விஷ்ணுஸஹஸ்ரநாம சொல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.

  வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகளை சொல்லி வருகிறீர்கள் நன்றி சார்.

  ReplyDelete
 28. அருமையான பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 29. நான் சின்னவளா இருக்கச்சே தாத்தா டெய்லி விஷ்ணு சகஸ்ரநாமம் சத்தமா சொல்லுவாங்க. பாதி ஸ்லோகங்கள் வரை மனப்பாடமே ஆயிடுத்து.

  ReplyDelete
 30. ஈஸ்வர உவாச :
  ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
  ஸஹஸ்த்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.

  சிவன் கூறுகிறார் "ஆயிர நாமங்களுடைய தத்துவங்களையும் ராம என்ற நாமம் கொண்டுள்ளது. எனவே, ஒருவன், ராம நாமத்தை மூன்று முறை ஜபிப்பதால் அந்த ஆயிர நாமங்களையும் ஜபித்தவன் ஆகிறான்"

  ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம்
  நம்பிய பேருக்கு எது பயம்?

  ReplyDelete
 31. ?????---இன்னாமோ மந்திரம் பத்தி சொல்லினா நல்லது நடக்குமறீங்க. அப்பூடிதான?

  ReplyDelete
 32. ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம மகிமை அறிய தந்ததற்கு நன்றிகள்.

  ReplyDelete
 33. வனமாலீ கதீ சார்ங்கீ சங்கி சக்ரீ ச நந்தகீ !
  ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்: வாஸுதேவோ பிரக்ஷது !! //இதனி தினசரி வாழ்வி சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்ற தொகுப்பில் படித்துள்ளேன். ஶ்ரீ ராம ராமேதி ரமே ராமெ மனொரமே..ஸகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானநே..நண்பனின் மகள் எழுதிக்கொசுக்க நான் மனப்பாடம் செய்தது...வலிமை வாய்ந்ததுதான்.

  ReplyDelete
 34. அருமை அருமை நன்றி சார் :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan January 9, 2017 at 3:44 AM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //அருமை அருமை நன்றி சார் :)//

   நேற்று (08.01.2017) வைகுண்ட ஏகாதஸி. நானும் இங்கு என் வீட்டில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பக்தி சிரத்தையுடன் செய்தேன்.

   தங்களின் ’அருமை அருமை’யான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 35. ரொம்ப நல்ல பதிவு. பெரியவா, ஒரு தடவை உடம்பு சரியில்லாமல் (காய்ச்சல்போல்?) feel பண்ணினபோது தன்னுடன் மடத்தில் இருந்தவரை அழைத்துக்கொண்டு, குளத்தில் நீராடி சகஸ்ரநாம பாராயணம் பண்ணிவிட்டு எழுந்தார். மற்றவர்களுக்கு சகஸ்ர'நாம பாராயணத்தின் மகிமையைக் காட்டினார் என்று படித்திருக்கிறேன்.

  காயத்ரியும் விஷ்ணு சகஸ்ரநாமாவும் சொல்பவனைக் கண்போல் காக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை.


  "ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்" - இது எதனால் அப்படிப் பண்ணுகிறார்கள் என்று சொல்லமுடியுமா? சிராத்தத்தின்போது போஜனத்தின்போது (மூவரோ ஐவரோ), கர்த்தாவை புருஷ சுக்தமோ, காயத்ரியோ சொல்லிக்கொண்டிருக்கும்படிச் சொல்வார்கள் (அவர்களது போஜனம் முடியும்வரை). நீங்கள் பெரியவா, பிக்ஷையின்போது ஸ்ரவணம் செய்வார்கள் என்று எழுதியிருப்பது அதன் காரணத்தை அறிய ஆவலுறுகிறேன்.

  உங்கள் பதிவில் கொடுத்துள்ள பல விஷயங்கள் (632, 538, 782) இவைகளை இன்றுதான் கேள்விப்படுகிறேன்.

  632ஐயும் எப்படிச் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

  ரொம்பவும் பயனுள்ள பதிவு.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் January 18, 2017 at 8:24 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ரொம்ப நல்ல பதிவு. பெரியவா, ஒரு தடவை உடம்பு சரியில்லாமல் (காய்ச்சல்போல்?) feel பண்ணினபோது தன்னுடன் மடத்தில் இருந்தவரை அழைத்துக்கொண்டு, குளத்தில் நீராடி சகஸ்ரநாம பாராயணம் பண்ணிவிட்டு எழுந்தார். மற்றவர்களுக்கு சகஸ்ர'நாம பாராயணத்தின் மகிமையைக் காட்டினார் என்று படித்திருக்கிறேன்.//

   இருக்கலாம்.

   //காயத்ரியும் விஷ்ணு சகஸ்ரநாமாவும் சொல்பவனைக் கண்போல் காக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை.//

   ஆமாம். எனக்கும் இவற்றில் மிகவும் நம்பிக்கை உண்டு. நித்தியப்படி ஸ்நானம், பஞ்சகச்சம், திரிகால சந்தியாவந்தனம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், இத்துடன் தினமும் காலையில் மும்முறை ஆதித்ய ஹிருதயத்தையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி சொன்னார் .... என்னிடம் இந்த கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்ற மஹான். இதைத் தவிர வேறு எதையும் நீ(ங்கள்) செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றும் என்னிடம் சொன்னார். பலகாலம் இவற்றையெல்லாம் விடாமல் சிரத்தையாகச் செய்து வந்துள்ளேன். இப்போது கொஞ்சம் சரீர சிரமத்தால், முன்பு போல சிரத்தையாக செய்ய முடிவது இல்லை.

   //"ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்" - இது எதனால் அப்படிப் பண்ணுகிறார்கள் என்று சொல்லமுடியுமா?//

   இது இங்கு பழூரில் நடந்த மஹானின் ஆராதனையின் போது வெளியிடப்பட்டுள்ள புத்தகம் ஒன்றில் உள்ள செய்தியாகும். **காரணம் எனக்கும் சரியாகத் தெரியாது. ஆனால் ஒருவேளை இப்படி இருக்கலாம் என்று ஓர் நியாயமான கற்பனை என்னிடம் உண்டு.**

   //சிராத்தத்தின்போது போஜனத்தின்போது (மூவரோ ஐவரோ), கர்த்தாவை புருஷ சுக்தமோ, காயத்ரியோ சொல்லிக்கொண்டிருக்கும்படிச் சொல்வார்கள் (அவர்களது போஜனம் முடியும்வரை).//

   ஆம். சாப்பிடும் மூன்று பிராமணாள்களில் ஒருவர் விஸ்வேதேவர். இவர் கிழக்கு பார்த்து அமர்வார். ஒருவர் மஹாவிஷ்ணு. இவர் மேற்கு பார்த்து அமர்வார். மற்றொருவர் பித்ரு ஸ்தானத்தை ஏற்பவர். அவர் வடக்கு பார்த்து சாப்பிட அமர்வார். இதைத் தவிர நிறைய வைதீகாளை வரவழைத்து ’அபிஸ்ரவனம்’ என்ற பெயரில் வேத மந்திரங்களைச் சொல்லச்சொல்லி அவர்களுக்கும் சம்பாவனை கொடுப்பது வழக்கம்.

   //நீங்கள் பெரியவா, பிக்ஷையின்போது ஸ்ரவணம் செய்வார்கள் என்று எழுதியிருப்பது அதன் காரணத்தை அறிய ஆவலுறுகிறேன்.//

   ** as stated above **

   //உங்கள் பதிவில் கொடுத்துள்ள பல விஷயங்கள் (632, 538, 782) இவைகளை இன்றுதான் கேள்விப்படுகிறேன்.//

   இவையெல்லாமே ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்ற அந்த மஹான் சொன்னதாக, என்னிடமுள்ள ஓர் புத்தகத்தில் உள்ளது.

   //632ஐயும் எப்படிச் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.//

   இதுபற்றி அந்த மஹானே சொல்லி, அவரின் பூர்வாஸ்ரப் பெண் குழந்தை எனக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தாள்.

   //ரொம்பவும் பயனுள்ள பதிவு.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 36. எப்போதும்போல், இடுகையின் பின்னூட்டங்களும் அதற்கு உங்களின் பதில்களும் கருத்தாழம் மிக்கவையாக இருந்தன.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் January 18, 2017 at 8:26 PM

   //எப்போதும்போல், இடுகையின் பின்னூட்டங்களும் அதற்கு உங்களின் பதில்களும் கருத்தாழம் மிக்கவையாக இருந்தன.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார் :)

   Delete
 37. அடேங்கப்பா அருமை அருமை. வைகுண்ட ஏகாதசி அன்றே படித்து இதை என் ப்லாகில் லிங்க் கொடுத்துள்ளேன் . நீங்க பார்க்கலை சார். பிஸி :)

  அருமையா எழுதி இருக்கீங்க. தினம் சொன்னால் ருசியோ ருசிதான். நேரம் சரியாக வாய்க்க வேண்டும். வேலையோடு வேலையா சரியாக தினமும் படிக்க வாய்ப்பதில்லை எந்தப் பாராயணமும்.

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan January 20, 2017 at 9:17 PM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //அடேங்கப்பா அருமை அருமை. வைகுண்ட ஏகாதசி அன்றே படித்து இதை என் ப்லாகில் லிங்க் கொடுத்துள்ளேன். நீங்க பார்க்கலை சார். பிஸி :)//

   அப்படியா ! ஸாரி ... கவனிக்கத் தவறியிருப்பேன். தகவலுக்கு நன்றிகள்.

   http://honeylaksh.blogspot.in/2017/01/blog-post_81.html

   நேற்று இரவு தேடிக் கண்டுபிடித்துப் படித்துவிட்டு பின்னூட்டமும் கொடுத்துள்ளேன், மேடம்.

   //அருமையா எழுதி இருக்கீங்க. தினம் சொன்னால் ருசியோ ருசிதான். நேரம் சரியாக வாய்க்க வேண்டும். வேலையோடு வேலையா சரியாக தினமும் படிக்க வாய்ப்பதில்லை எந்தப் பாராயணமும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

   Delete
 38. Vanakkam ayya, vaaram orumurai vishnu sahasranamam solluvathu yentral yentha naal sirapudayathu yendru sollungalen.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் இந்த இரு பின்னூட்டங்களும் SPAM இல் மாட்டியிருந்தன. இரண்டு மாதங்கள் கழித்து இன்றுதான் அகஸ்மாத்தாக என் கண்களில் பட்டு வெளியிட நேர்ந்துள்ளது.

   I am very 'Sorry' for my late release. தங்களுக்கான என் பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. >>>>>

   Delete
 39. வணக்கம் ஐயா, விஷ்ணு சஹஸ்ரநாமம் வாரத்தில் ஒரு நாள் சொல்லுவது என்றால் எந்த நாள் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் எந்த நாளிலும் சொல்லலாம். தினமுமேகூடச் சொல்லலாம். சனிக்கிழமை விசேஷம் என்று சொல்லுவார்கள். பகவன்நாமா சொல்ல நாள், கிழமை, நேரம் முதலிய எதுவுமே பார்க்க வேண்டாம். நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

   Delete