About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, February 15, 2012

நல்வழி காட்டிய நல்லவர்


ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-1

ஸ்ரீ குருவாயூரப்பன்


நம் பாரத தேசத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மக்களுக்கு நல்வழிகாட்டிகளாக இருந்துள்ள மஹான்கள் எவ்வளவோ பேர்கள் இதுவரை இருந்துள்ளனர். அவர்களால் நன்மை பெற்ற மக்களும் ஏராளமாகவே இருந்துள்ளனர். 

இத்தகைய மஹான்களில் ஒரு சிலர் மட்டும் மிகப்பிரபலமாக இருந்துள்ளனர்.

வேறுசிலரோ மஹாஞானிகளாக இருப்பினும் தங்களை வெளியுலகுக்குப் பிரபலப் படுத்திக்கொள்வதையே கூட சுத்தமாக விரும்பாமல், கடைசிவரை மிகவும் எளிமையாகவே வாழ்ந்து மறைந்துள்ளனர்.

இதுபோல தாங்களும் மிகவும் எளிமையாக வாழ்ந்து, சம்சார சாகரத்தில் தத்தளிக்கும் மக்களில், தன்னிடம் பல்வேறு பிரச்சனைகளுடன் அன்றாடம் வந்து போவோருக்கும்,  மிகவும் எளிமையான அதேசமயம் மிகப்பெரிய பலன்கள் தரக்கூடிய அமிர்த ரஸமான மனதுக்கு இதமளிக்கும் மந்த்ரங்களையும்,சிறுசிறு ஸ்லோகங்களையும் மாமருந்துகளாகச் சுட்டிக்காட்டி அருளியுள்ள மஹான்களில் ஒருவராக விளங்கியவரே ”ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ”. 


இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004 வரை] நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுகிறேன். அந்த மஹானைப்பற்றிய பல்வேறு நல்ல செய்திகளையும், அவர் சொல்லிச்சென்ற பக்தி மார்க்கத்தைப் பற்றியும் இந்தப் பதிவின் தொடர்களில், உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த மஹானின் அதிஷ்டானம் அமைந்துள்ள பழூர் என்னும் கிராமம், மிகப் பிரஸித்திபெற்றதோர் நவக்கிரஹ ஸ்தலமாகும். மெயின் ரோட்டிலிருந்து அக்ரஹாரம் செல்லும் வழியின் நடுவிலேயே இந்த நவக்கிரஹ ஸ்தலக் கோயில் அமைந்துள்ளது. அக்ரஹார ஆரம்பத்தில் ஒரு பெருமாள் கோயிலும், அக்ரஹார முடிவில் இந்த மஹானின் அதிஷ்டானமும் உள்ளன. இருபுறமும் வீடுகள் அமைந்த மிகச்சிறிய அழகான கிராமம் பழூர். காவிரிக்கரையருகே அமைந்திருப்பது மேலும் இதற்குத் தனிச்சிறப்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இந்த கிராமத்திற்குள் செல்ல மினி பஸ்கள் உள்ளன. மற்ற நகரப்பேருந்துகளில் சென்றால் மெயின் ரோட்டிலிருந்து அக்ரஹாரத்தை அடைய சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே நடந்து செல்ல வேண்டியிருக்கும். 

ஆட்டோவில் மிகச்சுலபமாக அதிஷ்டானம் வரை சென்று வரலாம். கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர் ரயில் நிலையங்கள் தாண்டியவுடன் இந்த பழூர் நவக்கிரஹ ஸ்தலம் என்ற மிகப்பெரிய அலங்கார வளைவுடன் இந்தக்கிராமம் வந்து விடும். திருச்சி சத்திரம் பேருந்து நிலைய அண்ணா அறிவாலயத்திலிருந்து பழூர் அக்ரஹாரம் வெறும் எட்டு கிலோமீட்டர் மட்டுமே.

வசதி வாய்ப்பும், விருப்பமும் உள்ளவர்கள், திருச்சிப்பக்கம் வரும்போது அவசியமாக இந்த மிகச் சிறிய அதிஷ்டானத்தை, நம்பிக்கையுடன் 12 பிரதக்ஷணங்கள் செய்து, மஹான் சந்நதியில் 4 நமஸ்காரங்கள் செய்து விட்டு, அங்குள்ள பல்வேறு ஆச்சர்யமான படங்களையும் பார்த்துவிட்டு வாருங்கள். அங்குள்ள பசுஞ்சோலை போன்ற இயற்கைச் சூழ்நிலைகளால் மனதுக்கு மிகவும் அமைதியாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் உணர்வீர்கள். 

இந்த அதிஷ்டானம் பற்றி மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள :-

ஸ்ரீ P.S. பாலசுப்ரமணியன் அவர்கள்
பூஜா ஸ்தானீகம்
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அதிஷ்டானம்
பழூர் கிராம அக்ரஹாரம், 
முத்தரசநல்லூர் போஸ்ட்
திருச்சி 620 101 
தொலைபேசி: 0431-2685104 or 9952992126

ஸ்ரீ S. ஸீதாராமன் அவர்கள்
அதிஷ்டான மேலாளர்
பழூர் அக்ரஹாரம்
தொலைபேசி: 9488979201

ஸ்ரீ V. ஜானகிராமன் அவர்கள்
செயலாளர் SGDS Trust
11/21, ரெங்கநாதன் தெரு
திருவல்லிக்கேணி
சென்னை 600 005
தொலைபேசி: 044-28587893 
Mobile: 9962219944

தொடரும்

29 comments:

 1. மிகவும் வியப்பினை உள்ளடக்கிய பதிவு. திருச்சி வரும்போது என் அம்மாவை அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்னும் உந்துதல் பிறக்கிறது. தொடரும் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 2. நல்ல தகவல். மேல் விவரங்களை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. ஐயா,
  வணக்கம்!
  திரு வெங்கட் நாகராஜ் அவர்கள் எனக்கு வழங்கியுள்ள “The Versatile Blogger Award” ஐ தங்களுக்கு வழங்குவதில் நான் மகிழ்வடைகிறேன். தயவு செய்து ஏற்றுக்கொள்ள என்னுடைய வலைப்பூவிற்கு வருகை தர விழைகிறேன். சிறப்பான தொடரும் தங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.
  நன்றியுடன்
  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 4. ///இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004 வரை] நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுகிறேன். அந்த மஹானைப்பற்றிய பல்வேறு நல்ல செய்திகளையும், அவர் சொல்லிச்சென்ற பக்தி மார்க்கத்தையும் பற்றியும் இந்தப் பதிவின் தொடர்களில், உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
  ////

  நான் காத்திருக்கிறேன் வை.கோ சார்....

  ReplyDelete
 5. பழூர் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பற்றி இந்த பதிவில் தான் தெரிந்து கொண்டேன்.சிறப்பான பதிவு. நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 6. OH It is really wounder.
  Sure I will visit here my next trip to Trichi.
  Thanks a lot for the information.
  viji

  ReplyDelete
 7. கணவரின் பெரியம்மா வீட்டிற்கு திருப்பராய்த்துறை செல்லும் போது இந்த பழூர் நவக்கிரக ஸ்தலம் என்ற அலங்கார வளைவை பார்த்திருக்கிறேன்.......

  அடுத்த முறை வரும் போது தாங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு... காவிரிக்கரை கிராமங்கள் அனைத்துமே அழகுதான்.... பலமுறை அந்த வளைவினை கடந்து சென்றாலும் உள்ளே சென்றதில்லை.... அடுத்த முறை செல்கிறேன்...

  தொடரின் அடுத்த பகுதிகளை எதிர்பார்த்து.....

  ReplyDelete
 9. திருச்சிக்காரனாகிய நான் இது வரை தெரிந்துகொள்ளாத ஒரு அற்புத தகவல். திருச்சி வரும்போது செல்லவேண்டும் என்னும் உந்துதல் பிறக்கிறது. தொடரும் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி

  ReplyDelete
 10. பழூர் நவக்கிரஹஸ்தலம் மற்றும் மகானின் அதிஷ்டானம் பற்றிய தகவல்கள் தரிசிக்கத்தூண்டும் வண்ணம் உள்ளது.

  ஸ்தலத்திற்கு செல்லும் வழி புரியும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 11. மூன்று வருடம் முன்பு இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு தங்களுடன் சென்று வர வாய்ப்பு கிடைத்தது .
  தாங்கள் கூறியது போல் நல்ல மன அமைதி கிடைக்கும் அருமையான இடம். இந்த இடத்தை விட்டு வர மனசே வரவில்லை.
  பகிர்வுக்கு நன்றி.

  இன்னொன்றையும் கூறவேண்டும் . திரும்ப வரும் சமயம் குடும்பத்துடன் அமர்ந்து புளியோதரை, தயிர் சாதம் சாப்பிட்டதும் நினைவுக்கு வருகிறது . மொத்தத்தில் மனசுக்கும் கண்களுக்கும் வயிற்றுக்கும் நல்ல விருந்து.

  ReplyDelete
 12. இது போன்ற நல்ல விஷயங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்கு தங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

  ReplyDelete
 13. நல்ல பதிவு.
  அரிய தகவல்கள்.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 14. thanks for the info gopu sir. Just waiting for a blessing from the swamy to give me the opportunity to pay visit to his place atleast once in my life time.

  A small request. Could you please e-mail me the photo of the Anjaneyar which you drew. I initially thought I cannot attempt such a good painting but from that day, the eagerness to make an attempt is ruling me.

  ReplyDelete
 15. /Mira said...
  thanks for the info gopu sir. Just waiting for a blessing from the swamy to give me the opportunity to pay visit to his place atleast once in my life time.

  A small request. Could you please e-mail me the photo of the Anjaneyar which you drew. I initially thought I cannot attempt such a good painting but from that day, the eagerness to make an attempt is ruling me.//

  அன்புள்ள மீரா,

  Thank you very much for your valuable comments.

  I will definitely send that ANJANEYAR picture drawn by me thro' e-mail, if possible today itself.

  So many other people have requested me for that picture [original photo copy in colour] for their pooja room.

  I have yet to take action for its extra colour xerox printing / sending by courier. I will keep your name also in my mind to supply.

  Thanking you,

  vgk

  ReplyDelete
 16. மிகச்சிறிய அழகான கிராமம் பழூர். காவிரிக்கரையருகே அமைந்திருப்பது மேலும் இதற்குத் தனிச்சிறப்பு.

  "நல்வழி காட்டிய நல்லவர்" பற்றி தனிச்சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 17. வசதி வாய்ப்பும், விருப்பமும் உள்ளவர்கள், திருச்சிப்பக்கம் வரும்போது அவசியமாக இந்த மிகச் சிறிய அதிஷ்டானத்தை, நம்பிக்கையுடன் 12 பிரதக்ஷணங்கள் செய்து, மஹான் சந்நதியில் 4 நமஸ்காரங்கள் செய்து விட்டு, அங்குள்ள பல்வேறு ஆச்சர்யமான படங்களையும் பார்த்துவிட்டு வாருங்கள். அங்குள்ள பசுஞ்சோலை போன்ற இயற்கைச் சூழ்நிலைகளால் மனதுக்கு மிகவும் அமைதியாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் உணர்வீர்கள். //
  திருச்சி வரும் போது அவசியம் போய் பார்த்து பலன் அடைகிறோம்.
  நன்றி. அருமையான பதிவு.

  ReplyDelete
 18. மகான்களின் அதிஷ்டானங்களைத் தரிசிக்க பூரவ புண்ணியம் வேண்டும்.

  ReplyDelete
 19. இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004 வரை] நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுகிறேன். அந்த மஹானைப்பற்றிய பல்வேறு நல்ல செய்திகளையும், அவர் சொல்லிச்சென்ற பக்தி மார்க்கத்தைப் பற்றியும் இந்தப் பதிவின் தொடர்களில், உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  மஹான்களுடன் பழகும் வாய்ப்புபெற்ற புண்ணியவான் நீங்கள்.
  இந்தப்பதிவு மூலம் எங்களுக்கும் அந்தப்புண்ணியம் கிடைக்கச்செய்துவிடீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 29, 2015 at 6:03 PM

   **இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004 வரை] நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுகிறேன். அந்த மஹானைப்பற்றிய பல்வேறு நல்ல செய்திகளையும், அவர் சொல்லிச்சென்ற பக்தி மார்க்கத்தைப் பற்றியும் இந்தப் பதிவின் தொடர்களில், உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.**

   //மஹான்களுடன் பழகும் வாய்ப்புபெற்ற புண்ணியவான் நீங்கள்.//

   சந்தோஷம்.மிக்க நன்றி.

   //இந்தப்பதிவு மூலம் எங்களுக்கும் அந்தப்புண்ணியம் கிடைக்கச்செய்துவிட்டீர்கள்.//

   ஆஹா ! மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

   Delete
 20. ஆஹா, எனக்கு இவரைப் பற்றி எதுவுமே தெரியாது. புதிய செய்தி.

  இனி திருச்சிக்கு வருமுன் உங்கள் வலைத் தளத்திற்கு வந்து பார்க்க வேண்டிய இடங்களைக் குறித்துக் கொண்டு தான் வர வேண்டும்.

  //**இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004 வரை] நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுகிறேன். //

  அவருடன் பழகிய உங்களை நேரில் சந்தித்தது என் பாக்கியம்.

  ReplyDelete
 21. காவிரி கரை கிராமத்து பக்கம்லா உங்க பதிவின் வளியா கூட வாரன்

  ReplyDelete
  Replies
  1. :) வாங்கோ, வாங்கோ :) மகிழ்ச்சி + நன்றி.

   Delete
 22. ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்கிற மஹானுடன்33--- வருட பழக்கமா. கொடுத்து வைத்த புண்ணியசாலி. எங்கள்க்கெல்லாம் நல்ல விஷயங்கள் நிறைய கிடைக்கப்போகிறது. ஆர்வமுடன்

  ReplyDelete
 23. 33 ஆண்டுகள் ஒரு சித்தருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு...கொடுத்துவைத்திருக்கவேண்டும்...வைப்ரேஷன் எஃபக்ட் எழுத்துலயும் தெரியுது...

  ReplyDelete
 24. கோவிந்த கோவிந்த ஹரே முராரே
  கோவிந்த கோவிந்த முகுந்த க்ருஷ்ணா
  கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே
  கோவிந்த தாமோதர் மாதவேதி..!

  ReplyDelete
  Replies
  1. Unknown October 28, 2018 at 9:15 PM

   கோவிந்த கோவிந்த ஹரே முராரே
   கோவிந்த கோவிந்த முகுந்த க்ருஷ்ணா
   கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே
   கோவிந்த தாமோதர் மாதவேதி..!//

   மிக்க நன்றி. தாங்கள் யாரோ எனக்குத் தெரியவில்லை. கடைசியில், கோவிந்த தாமோதர் மாதவேதி..! க்குப் பிறகு தங்கள் பெயரை தமிழிலோ ஆங்கிலத்திலோ டைப் செய்து அனுப்பியிருக்கலாம். வாழ்க !

   Delete