என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

காணாமல் போன கைக்கடியாரம்


காணாமல் போன கைக்கடியாரம்




ஒரு விவசாயி தன் வயல் அருகே இருந்த மிகப்பெரிய தானிய சேமிப்புக்கிடங்கில் தன் கைக்கடியாரத்தை எங்கோ தொலைத்து விட்டதை உணர்ந்தார். 

எங்கு தேடியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை. அவரைப்பொருத்தவரை அது ஒரு சாதாரண கடியாரம் அல்ல. செண்டிமெண்ட்டாக இருந்த நினைவுப்பொருள். அதனால் அதற்கான மதிப்பு மிகவும் அதிகமே.

எல்லா இடத்திலும் அதைத்தேடியும் காணாமல் வருத்தப்பட்டு வெளியே வந்தபோது, தானிய சேமிப்புக்கிடங்குக்கு வெளியே நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கிறார். அவர்களிடம் விஷயத்தைக் கூறி அவர்கள் அனைவருமாக உள்ளே போய் தேடிக்கண்டுபிடித்துத் தருமாறு சொல்லுகிறார். 

கண்டெடுத்துக் கொடுப்பவருக்கு தகுந்ததோர் சன்மானம் பரிசாகத் தருவதாகவும் அறிவிக்கிறார்.

அனைத்துச் சிறுவர்களும் ஆவலுடன் சேர்ந்து தேடியும் காணாமல் போன அந்த பொருள் கிடைக்கவில்லை. அந்த விவசாயி உள்பட அனைவரும் வீடு திரும்ப நினைக்கும் போது ஒரே ஒரு சிறுவன் மட்டும், ”தனக்கு மட்டும் அதைத் தேட இன்னொரு சந்தர்ப்பம் தர முடியுமா” எனக் கேட்டுக்கொள்கிறான்.

துடிப்புடன் இருந்த அந்தச்சிறுவனை நோக்கிய விவசாயி, அவனை மீண்டும் தனியே உள்ளே செல்ல அனுமதிக்கிறார். ”தாராளமாக உள்ளே சென்று வா; வென்று வா” என்றும் ஊக்கமளிக்கிறார். 

உள்ளே சென்றவன் சற்று நேரத்திலேயே வெற்றியுடன், கையில் கைக்கடியாரத்துடன் திரும்ப வருகிறான். அவனைப்பார்த்த விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்படுகிறது. 

“நீ மட்டும் எப்படி வெற்றி பெற முடிந்தது? மற்றவர்கள் எதனால் வெற்றி பெற முடியாமல் போனது? என்று ஆச்சர்யத்துடன் வினா எழுப்பினார்.

”அமைதியாக தரையில் அமர்ந்து, என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு ’கவனித்தல்/கேட்டல்’ [Listen] என்ற ஒன்றை மட்டுமே நான் செய்தேன். நான் மட்டுமே தனியாக இருந்ததால் நிசப்தம் நிலவியது. தங்கள் கைக்கடியாரத்தின் ’டிக்டிக்’ என்ற ஒலியை என்னால் நன்கு கேட்க முடிந்தது.   அந்த ஒலி வந்த திசையை நோக்கி ஓடி அதை என்னால் சுலபமாகக் கண்டுபிடித்து எடுத்துவர முடிந்தது” என்றான் அந்தச் சிறுவன்.


-o-o-o-o-o-o-o-

அமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.

தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.

-o-o-o-o-o-o-o-




[This is a short story in English forwarded by my friend VIJI of BHEL. 
Only the translation in Tamil is done by me - vgk]  



44 கருத்துகள்:

  1. தம்மாத் துண்டு கதை தான்! ஆனால் அம்மாம்பெரிசு கருத்து இருக்குல்ல?

    பதிலளிநீக்கு
  2. படபடப்பிலும் இரைச்சலிலும் தவறான முடிவுகள் தான் எடுக்க முடியும். அமைதியான மன நிலையில் நல்ல முடிவு எடுக்கலாம்.
    சூப்பர் ஸ்டோரி.

    பதிலளிநீக்கு
  3. மிகச் சிறிய விஷயம்தான்
    ஆயினுமது சொல்லிப் போகும் படிப்பினை
    மிக மிகப் பெரியது
    மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. நல்ல படிப்பினையுடன் கூடிய கதை நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  5. Obviously, common sense is uncommon! In a complex world, we often tend to complicate matters when easy, time-old solutions, might be at hand.

    பதிலளிநீக்கு
  6. அமைதியான நிலையில் எடுக்கும் முடிவு பெரும்பாலும் சரியாகவே இருக்கும். நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  7. கதை அருமையான கருத்தை நமக்கு சொல்லிச் செல்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  8. அமைதியான மனமே தெளிவாக யோசிக்கும் என்பதை இந்தக் கதை அழகாக சொல்கிறது...

    பதிலளிநீக்கு
  9. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் வழங்கியுள்ள

    திருவாளர்கள்:
    =============

    ஆரண்யநிவாஸ்
    ஆர்.ராமமூர்த்தி அவர்கள்

    ரிஷ்பன் Sir அவர்கள்

    ரமணி Sir அவர்கள்

    D. சந்த்ரமெளலி Sir அவர்கள்

    திருமதிகள்:
    ===========

    மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்

    கீதா 6 அவர்கள்

    லக்ஷ்மி அவர்கள்

    மாதேவி அவர்கள்

    கொவை2தில்லி அவர்கள்

    விஜி அவர்கள்

    உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  10. அமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.

    அருமையான கருத்தை தெளிவாக உணர்த்திய கதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  11. தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.

    முத்தாய்ப்பான வரிகள் சீராய் சிந்தித்துச் சிறக்க துணைபுரியும்..

    பதிலளிநீக்கு
  12. ”அமைதியாக தரையில் அமர்ந்து, என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு ’கவனித்தல்/கேட்டல்’ [Listen] என்ற ஒன்றை மட்டுமே நான் செய்தேன்

    அமைதியாய் அமர்ந்து இதயத்தின் ஒலியை மட்டுமே கவனித்தால் நிறைந்த பலன்களைப் பெறலாம்..

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வை.கோ

    அருமையான கதை - சிந்தனை நன்று - இறுதியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய அறிவுரை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. இராஜராஜேஸ்வரி said...
    /அமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்./

    //அருமையான கருத்தை தெளிவாக உணர்த்திய கதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//
    =========================
    இராஜராஜேஸ்வரி said...
    /தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்/

    //முத்தாய்ப்பான வரிகள் சீராய் சிந்தித்துச் சிறக்க துணைபுரியும்..//
    ======================
    இராஜராஜேஸ்வரி said...
    /”அமைதியாக தரையில் அமர்ந்து, என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு ’கவனித்தல்/கேட்டல்’ [Listen] என்ற ஒன்றை மட்டுமே நான் செய்தேன்/

    //அமைதியாய் அமர்ந்து இதயத்தின் ஒலியை மட்டுமே கவனித்தால் நிறைந்த பலன்களைப் பெறலாம்..//
    ===================

    தங்களின் அன்பான வருகைக்கும்,
    குட்டியூண்டு கதையாக இருப்பினும், மிகப்பெரியதாக, ஒரு முறைக்கு மூன்று முறைகளாகப் பின்னூட்டம் அளித்துப் பதிவினைப் பெருமைப் படுத்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. குட்டியூண்டு கதை ஆனால் மாபெரும் உண்மை ..

    பதிலளிநீக்கு
  16. cheena (சீனா) said...
    //அன்பின் வை.கோ

    அருமையான கதை - சிந்தனை நன்று - இறுதியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய அறிவுரை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா//

    அன்புள்ள ஐயா, வணக்கம்.

    நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகையும், வாழ்த்துகளும் என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டது. மிக்க நன்றி ஐயா. vgk

    பதிலளிநீக்கு
  17. angelin said...
    //குட்டியூண்டு கதை ஆனால் மாபெரும் உண்மை ..//

    குட்டியூண்டு கதைக்கு தங்களின் அன்பான வருகை, மாபெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பதே உண்மை.
    Thank you, Madam. vgk

    பதிலளிநீக்கு
  18. Rathnavel Natarajan said...
    //அருமையான கருத்து.
    நன்றி ஐயா.//

    தங்களின் அன்பான வருகைக்கும், ’அருமையான கருத்து’ என்ற சொற்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  19. இந்தக் கடிகாரம் மணியை மட்டுமல்ல வழியையும் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  20. கே. பி. ஜனா... said...
    //இந்தக் கடிகாரம் மணியை மட்டுமல்ல வழியையும் காட்டுகிறது.//

    அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி, Sir

    பதிலளிநீக்கு
  21. எவ்வளவு சிறப்பானத் தத்துவம் பொதிந்த கதை. நிதானிக்கும் மனதில் தெளிவான முடிவுகள் பிறப்பது நிச்சயம். பகிர்வுக்கு மிகவும் நன்றி வை.கோ. சார்.

    பதிலளிநீக்கு
  22. //தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.// எத்தனை பெரிய விஷயத்தினை அழகாய்ச் சொல்லியது இக்கதை....

    மிக அருமையான கதையை அழகிய தமிழில் மொழிபெயர்த்து தந்ததற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  23. கடுகு சிறிதாயினும் காரம் பெரிதென்பது போல் சிறிய கதையானாலும் கருத்தாழமிக்க அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  24. கீதமஞ்சரி said...
    //எவ்வளவு சிறப்பானத் தத்துவம் பொதிந்த கதை. நிதானிக்கும் மனதில் தெளிவான முடிவுகள் பிறப்பது நிச்சயம். பகிர்வுக்கு மிகவும் நன்றி வை.கோ. சார்.//

    =================

    பழனி.கந்தசாமி said...
    சிறந்த தத்துவம்.

    =====================

    வெங்கட் நாகராஜ் said...
    *தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.*

    எத்தனை பெரிய விஷயத்தினை அழகாய்ச் சொல்லியது இக்கதை....

    மிக அருமையான கதையை அழகிய தமிழில் மொழிபெயர்த்து தந்ததற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    ======================

    ஸாதிகா said...
    //கடுகு சிறிதாயினும் காரம் பெரிதென்பது போல் சிறிய கதையானாலும் கருத்தாழமிக்க அருமையான கதை.//

    =======================

    தங்கள் நால்வரின் அன்பான வருகைக்கும் அழகான ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  25. சின்ன கதை என்றாலும் மிகப்பெரிய நீதியை கற்றுக்கொடுத்து விட்டது.பகிர்வுக்கு நன்றி, சார்.

    பதிலளிநீக்கு
  26. RAMVI said...
    //சின்ன கதை என்றாலும் மிகப்பெரிய நீதியை கற்றுக்கொடுத்து விட்டது.பகிர்வுக்கு நன்றி, சார்.//

    தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  27. எளிமையான கதையின் மூலம் வலிமையான கருத்து. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  28. Shakthiprabha said...
    //எளிமையான கதையின் மூலம் வலிமையான கருத்து. நன்றி சார்.//

    எளிமையான எனக்கு
    வலிமையான உங்களின் கருத்தும்
    மகிழ்விக்கின்றன. நன்றி, ஷக்தி.

    பதிலளிநீக்கு
  29. சின்ன கதை எவ்வளவு பெரிய உண்மையை உரைக்கிறது.அருமையான கதையும் கருத்தும்.

    பதிலளிநீக்கு
  30. thirumathi bs sridhar said...
    //சின்ன கதை எவ்வளவு பெரிய உண்மையை உரைக்கிறது.

    அருமையான கதையும் கருத்தும்.//

    ரொம்ப நன்றிங்க, மேடம்.

    பதிலளிநீக்கு
  31. சிறு கதை மூலமாக நல்ல கருத்து சொல்லிட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் June 1, 2015 at 6:30 PM
      சிறு கதை மூலமாக நல்ல கருத்து சொல்லிட்டீங்க.//

      அப்படியா ! ஓக்கே !! தாங்க் யூ !!!

      நீக்கு
  32. அமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.

    தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.

    அருமையான கருத்தை அழகாக சுட்டிக் காட்டிய சிறுகதை.

    பதிலளிநீக்கு
  33. சின்னகத வளியா நல்ல வெசயம் சொல்லினிங்க. மனது அமைதியா வச்சிருந்தா சாதிச்சுபோடலாதா. அந்த மனசு எப்பூடி அமைதி படுத்திகெடணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 18, 2015 at 5:49 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //சின்னகத வளியா நல்ல வெசயம் சொல்லினிங்க. மனது அமைதியா வச்சிருந்தா சாதிச்சுபோடலாதா. அந்த மனசு எப்பூடி அமைதி படுத்திகெடணும்//

      :) அதே .... அதே ! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)

      நீக்கு
  34. மனதை அமைதியாக வைத்துக்கோண்டால் எல்லாமே சாத்தியமாகலாம்தான் அது தானே அடங்காமல் ஆட்டம் காட்டுது.

    பதிலளிநீக்கு
  35. [This is a short story in English forwarded by my friend VIJI of BHEL.
    Only the translation in Tamil is done by me - vgk] // மொழிபெயர்ப்பு என்ற உணர்வு ஏற்படாத வண்ணம் உங்கள் பாணியிலேயெ உள்ளது. அருமை

    பதிலளிநீக்கு
  36. சிறுவனின் சாதுர்யம்வியக்க வைக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு