என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 25 பிப்ரவரி, 2012

ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே ! [ஸ்ரீமத் ராமாயணம்]


ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-10


ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !
[ஸ்ரீமத் ராமாயணம்]



பட்டாபிராமனையும், சீதாதேவியையும் பட்டாபிஷேக கோலத்தில் மனதில் கீழ்க்கண்டவாறு த்யானம் செய்துகொண்டால் நாம் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம். 

யாதவாப்யுதயத்தில் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகர் சொல்கிறார்:


ஸ்ரீவத்ஸ ஸம்ஸ்தானஜுஷா ப்ரக்ருத்யா, 
ஸ்தானேன ஜிஹ்னேன ச லக்ஷ்ணியெள !

த்ருஷ்டாவபீஷ்டம் (த்ருஷ்டா அபீஷ்டம்) 
பஜதாம் ததாதே ஜகத்பதி தாவிஹ தம்பதி த்வெள !! 


ஸ்ரீ கிருஷ்ணனும் ருக்மினி தேவியும் கல்யாண கோலத்தில் இருக்கும்போது த்யானம் செய்கிறவர்களுக்கு அபீஷ்டத்தைக் கொடுத்தார். Perfect Tense ’ததாதே’ Present Tense இலும் வரும். ஆதலால் இப்போதும் ருக்மினி கல்யாண சரித்திரம் கேட்கிறவர்கள், அந்த தம்பதியை த்யானம் செய்தால் எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பார். 




இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யத்தை வைத்துக்கொண்டு ஸ்ரீ ராம பட்டாபிஷேக கோலத்தில் [ஸ்ரீ ராமரையும் ஸ்ரீ சீதாதேவியையும்] த்யானம் செய்கிறவர்களுக்கும் [மனக்கண்ணால் பார்க்கிறவர்களுக்கும்] எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பார் என்று ஸ்ரீ ஸ்வாமிகள் சொல்லுவது வழக்கம். நாம் எல்லோரும் ஸ்ரீராம பக்தி சாம்ராஜ்யத்தில் நிம்மதியாக இருக்கலாம்.

இப்போது நாம்
 நம் மனக்கண்ணால் 
கற்பனை செய்து பார்ப்போமா!

அயோத்யா நகரம்
ஆயிரங்கால் மண்டபம்
ஸ்வர்ணமயமான ஸிம்ஹாஸனம்
ரத்ன மயமான பீடம்

ஸ்ரீராமரின் திவ்ய ஸ்வரூபம்

பட்டாபிராமர்
ஸிரஸில் ரத்தின க்ரீடம்
திலக ஸோபிதமான நெற்றி
வளைந்த புருவங்கள்
தாமரஸ நேத்ரங்கள் (கண்கள்)
கருணா கர்பித கடாக்ஷம் [பார்வை]
காதுகளில் மகரகுண்டலங்கள்
பருத்த கன்னங்கள்
உன்னத நாஸிகை (மூக்கு)
திவ்ய அதர பிம்பம்
ஸுந்தர மந்த ஹாஸம்
சங்கம் போன்ற கண்டம் (கழுத்து)
திருமார்பில் சந்தனம், முத்துமாலை + புஷ்ப மாலை
தோள்களில் தோள் வளையங்கள்
திருக்கரங்களில் ரத்தின கங்கணங்கள் + கோதண்டம் (வில்)
விரல்களில் ரத்தின மயமான மோதிரங்கள்
சின்முத்திரை 
இடுப்பில் பீதாம்பரம் + தங்க ஒட்டியாணம்
பாதங்களில் ரத்தின நூபுரம்

இவ்வாறு கோடி மன்மதப் பொலிவோடு ஸ்ரீ பட்டாபிராமர் ஜொலிக்கிறார்.


ஸ்ரீ சீதாதேவி ஸ்ரீ ராமருடன்

ஸ்ரீ சீதாதேவி

ஸிரஸில் சூடாமணி
நெற்றியில் குங்குமம்
கண்களில் மை
காதுகளில் தாடங்கம்
மூக்கில் புல்லாக்கு
கழுத்தில் வைர அட்டிகை
திருமார்பில் முத்துமாலை
தோள்களில் தோள்வளைகள்
திருக்கரங்களில் வைரவளைகள்+தாமரை புஷ்பம்
இடுப்பில் பட்டாடை
தங்க ஒட்டியாணம்
பாதங்களில் ஸ்ரீ லக்ஷ்மணஸ்வாமி அன்றாடம் ஸேவிக்கும் ரத்ன நூபுரம், பாத ஸரம்.

இவற்றுடன் கூடிய தங்க விக்ரஹம் போன்றும், மின்னல் கொடி போன்றும் விளங்கும் மஹாலக்ஷ்மியும் நித்ய கல்யாணியுமான சீதாதேவியோடு சேர்ந்திருக்கும் ஸ்ரீராமரைப்பார்க்கும் போது  

மின்னல்கொடி
மேக மண்டலம்

கற்பகக்கொடி
கற்பக வ்ருக்ஷம்

பத்மராக ரத்னம்
இந்த்ரநீல ரத்னம்

இவைகள் ஒன்று சேர்ந்தாற்போல் திவ்ய தம்பதியினர் பிரகாசிக்கிறார்கள்.

அவதார காலத்தில் அயோத்யா நகரவாசிகள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் ஸ்ரீ சீதாதேவியையும் தரிஸனம் செய்து என்ன ஆனந்தத்தை அனுபவித்தார்களோ, அதே ஆனந்தத்தை, மேற்கண்டவாறு பட்டாபிஷேக கோலத்தில் மனக்கண்களால் பார்க்கிறவர்களும், இந்தக் கலியுகத்தில் அனுபவிக்கலாம். 


-o-o-o-o-o-o-






ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் - நல்ல
திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மனு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு..(ஸ்ரீ ராம)

கொண்டல்மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலைக் குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீகத் தாளனுக்கு பூச்சக்ர வாளனுக்கு
தண்டுளவத் தோளனுக்கு ஜானகி மணாளனுக்கு..(ஸ்ரீ ராம)



-o-o-o-o-o-


[ இதன் அடுத்த பகுதியில் மிக முக்கியமான 
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸம்தாத்ரத்தின் 
மஹிமை பற்றி ஸ்ரீ ஸ்வாமிகள் சொன்னது 
இடம்பெற உள்ளது. மிகவும் பயனுள்ள 
விஷயங்கள் அதில் அடங்கியுள்ளன. ]

தொடரும்

44 கருத்துகள்:

  1. படிக்கப் படிக்க பக்திமயம்.
    நிறைவுப்பகுதி அற்புதம்.
    “ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே!”

    அன்புடன், எம்.ஜே.ராமன்

    பதிலளிநீக்கு
  2. படிக்கவே ஆனந்தம் தரும் நல்ல விஷயம்.பகர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. Usha Srikumar said...
    //படிக்கவே ஆனந்தம் தரும் நல்ல விஷயம்.பகர்வுக்கு நன்றி//

    தங்கத்தமிழில் தங்களிடமிருந்து ஓர் தங்கமான பின்னூட்டம்.;)))))

    மிகவும்
    "ஆனந்தம்...ஆனந்தம்...ஆனந்தமே!

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  4. I cannot type anything. Because still I am at Annanthasagaram since in my innermind I immersed with SeethaRamaKalyanam.
    viji

    பதிலளிநீக்கு
  5. மன நிறைவாக இருக்கிறது,ராமர்-சீதை வர்ணனை அழகு!

    பதிலளிநீக்கு
  6. viji said...
    //I cannot type anything. Because still I am at Annanthasagaram since in my innermind I immersed with SeethaRamaKalyanam.
    viji//

    தங்களைப்பற்றியும், தங்களின் பக்தி ஸ்ரத்தைகள் பற்றியும், தங்களுக்கு கிடைத்துள்ள விசேஷ பகவத் அனுக்கிரஹம் பற்றியும், நேற்றே எனக்குத் தாங்கள் நன்கு முழுவதுமாகப் புரிய வைத்துள்ளதால்,இந்தத்தங்களின் பின்னூட்டத்தையும், என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

    வருகைக்கு மிக்க நன்றி, மேடம். vgk

    பதிலளிநீக்கு
  7. thirumathi bs sridhar said...
    மங்களம் ஜெய மங்களம்

    சந்தோஷம். எல்லாமே மங்களகரமாக, ஜெய மங்களமாக முடியட்டும்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  8. Manakkal said...
    //படிக்கப் படிக்க பக்திமயம்.
    நிறைவுப்பகுதி அற்புதம்.
    “ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே!”

    அன்புடன், எம்.ஜே.ராமன்//

    நமஸ்காரம் சார். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சென்னை பித்தன் said...
    //மன நிறைவாக இருக்கிறது,ராமர்-சீதை வர்ணனை அழகு!//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி,Sir.

    பதிலளிநீக்கு
  10. படிக்கப் படிக்க பக்திமயம்.
    நிறைவுப்பகுதி அற்புதம்.
    “ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே

    பதிலளிநீக்கு
  11. //ஸ்ரீ கிருஷ்ணனும் ருக்மினி தேவியும் கல்யாண கோலத்தில் இருக்கும்போது த்யானம் செய்கிறவர்களுக்கு அபீஷ்டத்தைக் கொடுத்தார்// ஆனந்தம் ஆனந்தம்....நன்றி.....

    பதிலளிநீக்கு
  12. Rathnavel Natarajan said...
    //அருமையான பதிவு.
    நன்றி ஐயா.//

    தங்கள் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  13. Lakshmi said...
    //படிக்கப் படிக்க பக்திமயம்.
    நிறைவுப்பகுதி அற்புதம்.
    “ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே//

    தங்கள் அன்பான வருகைக்கும் ஆனந்தமான கருத்துக்களுகும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. Shakthiprabha said...
    //ஸ்ரீ கிருஷ்ணனும் ருக்மினி தேவியும் கல்யாண கோலத்தில் இருக்கும்போது த்யானம் செய்கிறவர்களுக்கு அபீஷ்டத்தைக் கொடுத்தார்// ஆனந்தம் ஆனந்தம்....நன்றி..//

    தங்களின் அன்பான வருகைக்கும் ஆனந்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஷக்தி! ;)

    பதிலளிநீக்கு
  15. படத்தையும் பார்த்துப், படிக்கும்போது மனதுக்கு அமைதியோடு கூடிய மகிழ்வு கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. athira said...
    //படத்தையும் பார்த்துப், படிக்கும்போது மனதுக்கு அமைதியோடு கூடிய மகிழ்வு கிடைக்கிறது.//

    தங்களின் அபூர்வ வருகைக்கும், அமைதியான மகிழ்வான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. யூட்யூப்பிலிருந்து ராமாயணம் சீரியலை டவுன்லோடு செய்து சேகரித்து வருகிறேன். உங்கள் ராமாயணக் கட்டுரைகளையும் கூடவே படிக்க இரட்டிப்பு ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
  18. பழனி.கந்தசாமி said...
    //யூட்யூப்பிலிருந்து ராமாயணம் சீரியலை டவுன்லோடு செய்து சேகரித்து வருகிறேன். உங்கள் ராமாயணக் கட்டுரைகளையும் கூடவே படிக்க இரட்டிப்பு ஆனந்தம்.//

    தங்களின் அன்பான வருகையும், தங்களுக்கு இராமாயணத்தின் மேல் உள்ள ஆர்வத்தைக் கூறியுள்ள விதமும் கேட்க எனக்கும் மிகவும் ஆனந்தம் அளிப்பதாகவே உள்ளன.

    தொடர்ந்து வரப்போகும் ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பற்றி ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் பார்வையில் கூறியுள்ள கருத்துக்கள் யாவும் இராமாயணத்தைப் பற்றியதே.

    அவசியம் அந்த ஸ்ரீமத் சுந்தர காண்டத்தின் அபார மஹிமை பற்றிய எட்டு சிறிய பகுதிகளையும் படிக்கத் தவறாதீர்கள், Sir.

    அவைகள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  19. கோடி மன்மதப் பொலிவோடு ஸ்ரீ பட்டாபிராமர் ஜொலிக்கும் அழ்கான படங்களுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  20. "ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !

    ஆனந்தமான பயனுல்ள பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் -

    மங்களகரமாய் மனம் நிறைத்த பகிர்வுகள்

    ஆனந்தம் பகிர்ந்தன..

    பதிலளிநீக்கு
  22. . Perfect Tense ’ததாதே’ Present Tense இலும் வரும். ஆதலால் இப்போதும் ருக்மினி கல்யாண சரித்திரம் கேட்கிறவர்கள், அந்த தம்பதியை த்யானம் செய்தால் எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பார்.

    படிக்கும் போதே அமிர்தம் வர்ஷிப்பது போல் சுவாமிகளின் கதாம்ருதத்தை உணரவைக்கும் படி அருமையாய் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  23. இராஜராஜேஸ்வரி said...

    /Perfect Tense ’ததாதே’ Present Tense இலும் வரும். ஆதலால் இப்போதும் ருக்மினி கல்யாண சரித்திரம் கேட்கிறவர்கள், அந்த தம்பதியை த்யானம் செய்தால் எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பார்./

    //படிக்கும் போதே அமிர்தம் வர்ஷிப்பது போல் சுவாமிகளின் கதாம்ருதத்தை உணரவைக்கும் படி அருமையாய் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

    தங்களின் அன்பான வருகைக்கும்,
    பல்வேறு கருத்துக்கள் மூலம் பதிவினைப் பெருமைப் படுத்தி சிறப்பித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. மனம் கவர்ந்த பதிவுக்கு நன்றி!
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  25. Seshadri e.s. said...
    //மனம் கவர்ந்த பதிவுக்கு நன்றி!
    காரஞ்சன்(சேஷ்)//

    தங்கள் வருகைக்கும் மனம் கவர்ந்த கருத்தும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ரிஷபன் said...
    //ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா!

    ரிஷபன் said...
    ஆன்மீக சிலிர்ப்பு.//

    ஆன்மிகம் போலவே தங்கள் வருகையும் எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி, Sir.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  27. கே. பி. ஜனா... said...
    //திவ்யமா இருக்கு!//

    மிக்க ந்ன்றி, Sir.

    பதிலளிநீக்கு
  28. அருமையான படங்களுடன் நல்லதொரு பகிர்வாக இருந்தது சார்.

    பதிலளிநீக்கு
  29. கோவை2தில்லி said...
    //அருமையான படங்களுடன் நல்லதொரு பகிர்வாக இருந்தது சார்.//

    தங்கள் அன்பான வருகைக்கும், நல்லதொரு கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  30. //, அதே ஆனந்தத்தை, மேற்கண்டவாறு பட்டாபிஷேக கோலத்தில் மனக்கண்களால் பார்க்கிறவர்களும், இந்தக் கலியுகத்தில் அனுபவிக்கலாம். //

    அருமை.ராம பட்டபிஷேகம் பற்றிய சிறப்பானதொரு பகிர்வு.

    படங்களும் பதிவும் பார்கவே ஆனந்தமாக இருக்கு. நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  31. என் அம்மா தெய்வ திருமணங்களை பற்றி சொல்வதை கேட்டால் நல்லது என்று எங்களை கதை கேட்க அழைத்து செல்வார்கள்.

    நாங்களும் அம்மாவுடன் மகிழ்ச்சியாய் செல்வோம்.
    இப்போது உங்கள் பதிவு மூலம் இக்கதைகளை கேட்கிறேன்.

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  32. அழகான படங்கள் அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் June 1, 2015 at 6:27 PM
      அழகான படங்கள் அருமையான பதிவு. நன்றி.//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      நீக்கு
  33. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே.

    அதனால் ஆனந்த இராமாயணம் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. படங்கலா நல்லாகீது. அவங்க போட்டிருக்கற நகைக பத்தி வெலா வாரியா சொல்லினீங்க. நைகக பேரெல்லாகூட இங்கன படிச்சுபொறவாலதா வெளங்கிட்டன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 18, 2015 at 5:45 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //படங்கலா நல்லாகீது. அவங்க போட்டிருக்கற நகைக பத்தி வெலா வாரியா சொல்லினீங்க. நைகக பேரெல்லாகூட இங்கன படிச்சுபொறவாலதா வெளங்கிட்டன்//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. நகைகள் என்றால், அதுவும் பெண்களுக்கு மிகவும் நன்றாகவே விளங்கிடுமே ! :)

      நீக்கு
  35. ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலம் மனதில இருத்தி ஆனந்தம் அடைந்தோம் சிறப்பான படங்கள் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  36. இவ்வாறு கோடி மன்மதப் பொலிவோடு ஸ்ரீ பட்டாபிராமர் ஜொலிக்கிறார்.// எழுத்துலயே பிக்சரைஸ் செய்துவிட்டீர்கள்...அழகு..

    பதிலளிநீக்கு