ஒரு ஊரில் ஒரு விவசாயி ஒரு குதிரையும் ஒரு ஆடும் வளர்த்து வந்தார்.
ஒரு நாள் உடல் நலமில்லாமல் போய் விட்ட அவரின் குதிரைக்கு வைத்தியம் செய்ய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டார்.
குதிரையைப் பரிசோதித்த அந்த வைத்தியர் குதிரைக்கு வைரஸ் நோய் தாக்கியிருப்பதாகவும், மூன்று நாட்களுக்கு இந்த மருந்தினைக்கொடுத்து சரியாகிறதா என்று பார்க்கலாம் என்றும், தான் மீண்டும் மூன்று நாட்களுக்குப்பிறகு வருவதாகவும், ஒருவேளை சரியாகாமல் போனால் நாம் அதனைக் கொன்று விடுவதே நல்லது என்றும் சொல்லி விடுகிறார்.
இந்த இவர்களின் சம்பாஷனைகளை அருகே நின்ற அந்த ஆடு உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது.மறுநாள் குதிரைக்கு மருந்து செலுத்தி விட்டு அவர்கள் புறப்பட்டு விட்டனர்.
அந்த ஆடு குதிரையிடம் வந்து “நண்பா! நீ உற்சாகமாக இரு; ஓய்ந்து படுக்காதே; உடனே எழுந்திரு; சுறுசுறுப்பாக என்னுடன் நடந்து வா; இல்லாவிட்டால் அவர்கள் உன்னை ஒரு வழியாகத் தூங்கச்செய்து விடுவார்கள்” என்றது. ஆனாலும் குதிரையால் ஆடு சொன்னது போல உடனே செய்ய முடியவில்லை.
இரண்டாம் நாளும் குதிரைக்கு மருந்து செலுத்தி விட்டுச் சென்றார்கள்.
இரண்டாம் நாளும் ஆடு குதிரையிடம் வந்து அதை உற்சாகப்படுத்தி எழுந்து வருமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டது. அவ்வாறு செய்யாவிட்டால் நீ நிச்சயம் இறக்க நேரிடும் என்று எச்சரித்ததோடு, ”வா ... என்னோடு புறப்படு ... நான் உனக்கு உதவுகிறேன்” என்று ஆறுதலாகப்பேசி அதனை எழுப்ப முயன்றது. ஆனால் குதிரை எவ்வளவோ முயன்றும் அதனால் அது போலச் செய்ய முடியவில்லை.
மூன்றாவது நாளும் மருந்து அளித்து சிகிச்சை செய்த வைத்தியர், குதிரையின் உடல்நிலையில் துரதிஷ்டவசமாக எந்தவொரு முன்னேற்றமும் தெரியவில்லை. எனவே இதை நாம் நாளைய தினமே கொன்று விடலாம். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த வைரஸ் ஊரில் உள்ள மற்ற எல்லாக்குதிரைகளுக்கும் பரவிடக்கூடும் என்று சொல்லிவிட்டுப்போனார்.
அவர்கள் சென்ற பிறகு ஆடு குதிரையிடம் மீண்டும் வந்தது,
”நண்பா, நான் சொல்வதை இப்போது நீ கவனமாகக் கேட்டுக்கொள். இதுவே உனக்கு இறுதி வாய்ப்பு; உடனே மன உறுதி கொண்டு எழுந்திரு; வலிமையுடன் தைர்யமாக என்னுடன் ஓடி வா ,,,,, உம் ,,, அப்படித் தான் ,,,, சபாஷ் ,,,,, உன்னால் நிச்சயம் முடியும் ..... அப்படித்தான் .... மெதுவாக ..... வெரி குட் ..... அவ்வளவே தான் ..... இப்போ வா ,,,,, ஒன் .... டூ ..... த்ரீ ... சூப்பராக உன்னால் இப்போது ஓட முடியும் ..... முயற்சி செய் ..... இது பத்தாது ..... இன்னும் சற்றே வேகமாக ..... எஸ் ,, எஸ் ,,,, குட் ,,,, வெரிகுட் ... அவ்வளவு தான் ... உன்னால் பழையபடி நடக்க முடிகிறது;
நிச்சயமாக உன்னால் ஓடவும் முடியும்; முயற்சி செய் .... உன் உடல் மிகவும் நன்றாகத் தேறிவிட்ட்து ... இனி எந்தக்கவலையோ பிரச்சனையோ இல்லை, உன்னால் இனி பழையபடி வேக வேகமாக இயங்க முடியும்” என்று சொல்லி மிகவும் தன்னம்பிக்கையை அளித்தது.
அதே நேரம் அந்த பண்ணை உரிமையாளரான விவசாயி அவ்விடம் வந்தவர் தன் குதிரை பழையபடி எழுந்து இங்குமங்கும் துள்ளி ஓடுவதை கவனித்து விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்:
“ஆஹா. என் குதிரை அபூர்வமாக தெய்வ சக்தியால் மட்டுமே ஆச்சர்யமாகப் பிழைத்துக் கொண்டுள்ளது;
“ஆஹா. என் குதிரை அபூர்வமாக தெய்வ சக்தியால் மட்டுமே ஆச்சர்யமாகப் பிழைத்துக் கொண்டுள்ளது;
MIRACLE தான் நடந்துள்ளது. இந்த ஆட்டினை அடித்துப்போட்டு கொன்று, விருந்து ஏற்பாடுகள் செய்து, இந்தக்குதிரை பிழைத்து விட்டதை நாம் நாளை கொண்டாடியே ஆக வேண்டும்” என உரக்கக்கத்திச் சொல்கிறார்.
-oOo-
இது போன்ற அநீதிகள் ஆங்காங்கே இன்றும் நடைபெற்றுக்கொண்டு தான் வருகின்றன.
ஒரு வெற்றிக்கான உண்மையான காரணம் என்ன? யார் இந்த வெற்றிக்குப் பின்னனியில் உழைத்துள்ளார்கள்? யாருக்கு வெற்றிக்கான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்? என்பதையே அறியாமல் ஏதேதோ தவறுகள் இழைக்கப்பட்டு விடுகின்றன.
உண்மையான உழைப்பாளியின் உழைப்பு சுரண்டப்பட்டு வருகிறது. யாரோ செய்த கடும் வேலைகளுக்கான, உண்மை உழைப்புக்கான பாராட்டும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் சம்பந்தமே இல்லாத வேறு சிலருக்கு போய்ச்சேர்ந்து, அனாவஸ்யமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெற்றிக்கு உண்மையாக உழைத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டு, விரக்தியடைய நேரிடுகிறது. அவர்களின் இந்த நிலை இன்று ’பலி ஆடுகள்’ நிலையில் தான் உள்ளன.
உரிய அங்கீகாரம் இல்லாமலும் வாழப்பழகுவது என்பதை நாம் கற்றுக்கொள்வதும், நம் தனித்திறமைக்கு எடுத்துக்காட்டு தான் என்பதை, நாம் நினைவில் கொள்வோம்.
”உன்னுடைய வேலையும் உழைப்பும் தொழிற்கல்வி சார்ந்தது அல்ல” என்று யாராவது நம்மிடம் சொல்லி வெறுப்பேற்றினாலும் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டாம்.
தொழிற்கல்வி கற்காமலேயே அனுபவம் வாயிலாகக் கட்டப்படும் பாய்மரக் கப்பல்களும், படகுகளும், சிறுசிறு தோணிகளும், பரிசல்களும் பாதுகாப்பாகவே கரை சேர முடிகிறது.
தொழிற்கல்வி கற்ற நிபுணர்கள் செய்யும் ’டைட்டானிக்’ போன்றவைகள் தான் அனைத்து உயிர்களையும் ஒட்டுமொத்தமாக மரணமடையச்செய்து விடுகின்றன.
-oOo-
[என்றோ மின்னஞ்சல் மூலம்
நான் ஆங்கிலத்தில் படித்த செய்தியினை
சற்றே தேவையான மாற்றங்கள் செய்து
சிறுகதையாக்கித் தமிழில் தந்துள்ளேன். vgk]
இந்த நிலையில் வெற்றிக்கு உண்மையாக உழைத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டு, விரக்தியடைய நேரிடுகிறது. அவர்களின் இந்த நிலை இன்று ’பலி ஆடுகள்’ நிலையில் தான் உள்ளன.
பதிலளிநீக்கு//
கதை மிக அருமை .நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்களும் மிக அருமை .இவ்வுலகில் நிறைய அப்பாவி scapegoats இருக்கிறார்கள்
அருமையான கருத்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
கதை அருமை. குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் மிக அருமை.
பதிலளிநீக்குஅன்புடன் எம்.ஜே.ராமன்.
கதை அருமையாக இருந்தது சார். பாவம் அந்த ஆடு... இது போல் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது....
பதிலளிநீக்குஅருமையான தத்துவக் கதை...
பதிலளிநீக்குஆனாலும் இடையில ஆடு கத்துவது கொஞ்சம் ஓவர்:))))மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))... ,,,,, உம் ,,, அப்படித் தான் ,,,, சபாஷ் ,,,,, உன்னால் நிச்சயம் முடியும் ..... அப்படித்தான் .... மெதுவாக ..... வெரி குட் ..... அவ்வளவே தான் ..... இப்போ வா ,,,,, ஒன் .... டூ ..... த்ரீ ... சூப்பராக உன்னால் இப்போது ஓட முடியும் ..... முயற்சி செய் ..... இது பத்தாது ..... இன்னும் சற்றே வேகமாக ..... எஸ் ,, எஸ் ,,,, குட் ,,,, வெரிகுட் ... அ///
எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))
சிந்திக்க வைக்கும் நல்ல சிறுகதை.
பதிலளிநீக்குகருத்துள்ள கதை.
பதிலளிநீக்குநிறைய பலி ஆடுகள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள்.
மறுபடியும் சுறுசுறுப்பாகக் கதை பதிவீடுகள்.நிறைவாக இருக்கிறது. அண்மையில் எழுதிய எல்லாப் பதிவுகளையும் படித்தேன்.ஐ.க்யூ டாப்லெட்ஸ் மிகவும் ரசித்தேன். சில நேரங்களில் கருத்து இடுவதற்கு மிகவும் சிரமப் பட வேண்டி இருக்கிறது. சிலரது பதிவுகளில் கூகுள் க்ரோம் மூலம் போடும் கருத்துக்கள் காணாமல் போகின்றன. இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் மூலம் வர வேண்டி உள்ளது. சில பதிவுகள் எக்ஸ்ப்லோரரில் தெரிவதில்லை. நானும் இயன்றவரை பின்னூட்டமிட முயல்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - அருமையான சிந்தனை - நாட்டு நடப்பினை அப்படியே கதையாக வடித்தமை நன்று. பரிசுகளும் பதவி உயர்வுகளும் வழங்கப் படும் போது இப்படித்தான் சம்பந்தா சம்பந்த மில்லாமல் யாருக்காவது கிடைக்கும். வெற்றிக்குக் காரணமாக இருந்தவனுக்கு ஒன்றும் கிடைக்காது. நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா
பதிலளிநீக்கு”நண்பா, நான் சொல்வதை இப்போது நீ கவனமாகக் கேட்டுக்கொள். இதுவே உனக்கு இறுதி வாய்ப்பு; உடனே மன உறுதி கொண்டு எழுந்திரு; வலிமையுடன் தைர்யமாக என்னுடன் ஓடி வா ,,,,, உம் ,,, அப்படித் தான் ,,,, சபாஷ் ,,,,, உன்னால் நிச்சயம் முடியும் ..... அப்படித்தான் .... மெதுவாக ..... வெரி குட் ..... அவ்வளவே தான் ..... இப்போ வா ,,,,, ஒன் .... டூ ..... த்ரீ ... சூப்பராக உன்னால் இப்போது ஓட முடியும் ..... முயற்சி செய் ..... இது பத்தாது ..... இன்னும் சற்றே வேகமாக ..... எஸ் ,, எஸ் ,,,, குட் ,,,, வெரிகுட் ... அவ்வளவு தான் ... உன்னால் பழையபடி நடக்க முடிகிறது; ///
பதிலளிநீக்குமனதினில் பதித்துக்கொள்ளக்கூடிய வார்த்தைகள்.அருமையான கதை.உற்சாகமூட்டி முன்னேற வைக்கும் வார்த்தைகள் இவை.
பலிஆடுகள் இருக்கட்டும் ஒரு புறம்.
பதிலளிநீக்குமனதை தளரச் செய்யும் நிகழ்வுகளிலிருந்து மீண்டு வர தன்னம்பிக்கை வார்த்தைகள் உதவுகின்றன என்பது நிரூபணம்.
Very good story..m...
பதிலளிநீக்குநல்ல சிறுகதை....
பதிலளிநீக்குபலி ஆடுகள் சூழ்ந்த உலகத்தில் தான் நாமும்.....
தொழிற்கல்வி கற்காமலேயே அனுபவம் வாயிலாகக் கட்டப்படும் பாய்மரக் கப்பல்களும், படகுகளும், சிறுசிறு தோணிகளும், பரிசல்களும் பாதுகாப்பாகவே கரை சேர முடிகிறது.
பதிலளிநீக்குதொழிற்கல்வி கற்ற நிபுணர்கள் செய்யும் ’டைட்டானிக்’ போன்றவைகள் தான் அனைத்து உயிர்களையும் ஒட்டுமொத்தமாக மரணமடையச்செய்து விடுகின்றன.
அருமை! அருமை!
நல்ல கருத்தினை விளக்கும் கதை!
-காரஞ்சன்(சேஷ்)
நல்ல கதை.பலி ஆடாய் இருக்கிறோம் என்பது இப்படித்தான்.ஒன்று கிடைக்கும்போது ஒன்றை இழக்கிறோம் என்பதும் இப்படித்தான்.
பதிலளிநீக்குஉரிய அங்கீகாரம் இல்லாமலும் வாழப்பழகுவது என்பதை நாம் கற்றுக்கொள்வதும், நம் தனித்திறமைக்கு எடுத்துக்காட்டு தான் என்பதை, நாம் நினைவில் கொள்வோம்.
பதிலளிநீக்குநினைவில் நிறுத்தவேண்டிய பாடம்...
பாவம்தான் பலி ஆடுகள் !
பதிலளிநீக்குகதையோடு நல்ல கருத்துமிருந்தது.
பதிலளிநீக்கு"வா, தப்பி (ஓடி)விடலாம்" என்று குதிரையைக் கூப்பிட்ட ஆடு, இப்பொழுது தான் மட்டும் ஓடிவிட கூடிய வாய்ப்பும் உண்டுதானே?
ஒரு சிறு கதையின் மூலம் அருமையான கருத்துக்கள். நன்றி பகிர்வுக்கு.
பதிலளிநீக்குவருந்த செய்தது :(
பதிலளிநீக்குஇரண்டு வாரங்கள் கணணி வலையில் பிரச்சினை இருந்த காரணத்தினால் எதுவுமே பார்க்க முடியவில்லை. தற்போதுதான் இக்கதை வாசித்தேன். உண்மைதான் உண்மைக் காரணம் எது என்று புரியாமலே பல தவறுகள் நடக்கின்றன. தொடருங்கள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉலகில் பல காரியங்கள் இப்படித்தான் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.
பதிலளிநீக்குநம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கை மற்றவர்கள் சொல்லும் போதுதான் புரிகிறது. இந்த கதையின் மூலம் தெளிவா சொல்லிட்டீங்க. ஆனா ஆட்டின் நிலை யோ பரிதாபம்
பதிலளிநீக்குஅடடா! குதிரைக்கு வந்த கத்தி ஆட்டுக்குப் போய் விட்டதே.
பதிலளிநீக்குஅடடா கெரகமே. ஆடு குதிரைக்கு நல்லது செய்யப்போயி அது பலி ஆயிடிச்சே.
பதிலளிநீக்குmru October 18, 2015 at 6:02 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//அடடா கெரகமே. ஆடு குதிரைக்கு நல்லது செய்யப்போயி அது பலி ஆயிடிச்சே.//
கெரகந்தான் .... கெரகந்தான்
இதை தில்லானா மோகனாம்பாள் படத்தில் நம் மனோரம்மா ஆச்சி [ஜில் ஜில் ரமாமணி] ஏன்ன்ன்ன்ன்ன் என இழுத்துச்சொல்வதுபோலச் சொல்லிப்பாருங்கோ.
நல்ல கருத்துள்ள கதை.
பதிலளிநீக்குகாரணகர்த்தாவையே காலிசெஞ்சு பட்ட கிராம்பு கலக்கி அடி பின்னிட்டாய்ங்களா? உண்மைலயே பலி ஆடாக்கிட்டாங்களே! முடிஞ்சாக்க குதிரையோட லெக் பீஸ கடிக்கவேண்டியதுதானே! என்ன உலகமடா..ஏழைக்கே நரகமடா...
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்கு