About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, February 27, 2012

I Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]

I Q  TABLETS 
[ ஐக்யூ டாப்லெட்ஸ்]


நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஒரு ஆச்சாரமான தென்னிந்தியரும் ஒரு வெள்ளைக்கார துரையும் சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்தனர்.  

சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு எட்டு மணிக்குக் கிளம்பிய ரயில் மறுநாள் காலை ஏழு மணிக்கு விஜயவாடாவை அடைந்தது. வெள்ளைக்கார துரை ஏற்பாட்டின் படி அவருக்கு மிகவும் பிரமாதமான அருஞ்சுவையுடன் கூடிய அனைத்துக் காலை சிற்றுண்டிகளும் பணியாள் ஒருவரால் வழங்கப்பட்டன.


தென்னிந்தியர் தனது நாலு அடுக்கு டிபன் கேரியரின் முதல் அறைலிருந்து இரண்டே இரண்டு இட்லிகளை மட்டும் எடுத்து சாப்பிட்டார்.


அதே போல ’வால்டேர்’ என்று அன்று அழைக்கப்பட்ட தற்போதைய விசாகப்பட்டிணத்தில் வெள்ளைக்கார துரைக்கு ரெயில்வே சிற்றுண்டி சாலையால், மிகப்பெரிய அளவில் மிகச் சிறப்பான மதிய சாப்பாடு விருந்தாகவே அளித்து மகிழ்விக்கப்பட்டது.

இப்போதும் நம் தென்னிந்தியர் தனது டிபன் கேரியரின் இரண்டாவது அடுக்கிலிருந்து நான்கு இட்லிகளை மட்டுமே எடுத்து சாப்பிட்டார்.


இந்த மனிதரைப் பார்த்து அந்த வெள்ளைக்காரர் மிகவும் வியந்து போனார். அவருக்கு இவரின் செயல் ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை. என்ன நடக்கிறது இங்கே என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தும் ஏனோ ஒரு தயக்கத்தில், தொண்டை வரை வந்த சொற்களை வாயிலிருந்து வெளியே விடாமல், நாகரீகம் என்ற பெயரில் அமைதியாகவே இருந்து விட்டார்.

இதே செயல் இரவு எட்டு மணிக்கு ’பெர்ஹாம்பூர்’ என்ற ஸ்டேஷன் வந்ததும், மீண்டும் இரவு டின்னர் நேரத்திலும் நடந்ததால், வெள்ளைக்காரரால் பொறுமையாக இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

“ஐயா, நீங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வேளா வேளைக்க்ச் சாப்பிட்டு வரும் அந்த வெள்ளைப் பண்டம் என்ன?” என்றார்.

“ஐயா, இதன் பெயர் " IQ Tablets [ ஐக்யூ டாப்லெட்ஸ்]”; 


தென்னிந்தியர்களாகிய எங்களால் இதை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு, பேரெழுச்சியுடன் ஒருசில நாட்கள் கழித்து விட முடியும்” என்றார் நம்மாளு.

“ஆஹா! அப்படியா, மிக்க மகிழ்ச்சி!! இதை எப்படித் தயார் செய்கிறீர்கள் என்பதை எனக்குத் தாங்கள் சற்றே விளக்கமாகச் சொல்ல முடியுமா?” என்ற மிகுந்த ஆவலுடன் கேட்டார் அந்த வெள்ளைக்காரர்.

தென்னிந்தியரும், அதற்குத் தேவையான மூலப்பொருட்கள், அவைகள் தயாரிக்கும் முறைகள் முதலியவற்றை மிகவும் சிரத்தையுடன் அழகாக அற்புதமாக விபரமாக விளக்கிக் கூறினார்.

இதைக்கேட்டு மகிழ்வடைந்த வெள்ளைக்காரர், “எனக்கு அதில் இரண்டைத்தர முடியுமா? தாங்கள் எனக்கு இலவசமாகத் தர வேண்டாம். அதற்கு எவ்வளவு தொகை கேட்கிறீர்களோ, அதை நான் தங்களுக்குத் தந்து விடுகிறேன்” என்றார்.

ஒரு நிமிடம் தயங்கி யோசித்த தென்னிந்தியர் பிறகு பேசலானார்:

“ஐயா, என்னிடம் மீதியுள்ளது மூன்றே மூன்று மட்டுமே; அதை நான் நாளை காலையில் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் சாப்பிடலாம் என்று நினைத்திருந்தேன்; 

இருப்பினும் நான் ரயிலிலிருந்து இறங்கியவுடன், அருகில் உள்ள என் சொந்தக்காரர் வீட்டுக்குப் போக இருப்பதால், அங்கு காலை சிற்றுண்டி எனக்கு எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை நான் எப்படியும் சமாளித்துக் கொள்வேன்;

நீங்கள் என்னிடம் ஆசைப்பட்டுக் கேட்பதால் உங்களுக்கு அவற்றைத் தருவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒரு IQ Tablet [ஐக்யூ டாப்லெட்] ரூபாய் 20 ஆகுமே” என்றார். 

[ இந்தச் சம்பவம் நடைபெற்ற காலக்கட்டத்தில் விலைவாசிகள் மலிவோ மலிவு - ஒரு இட்லி 5 பைசா; ஒரு ரூபாய்க்கு 20 இட்லிகளும், 20 ரூபாய்க்கு 400 இட்லிகளும், 60 ரூபாய்க்கு 1200 இட்லிகளும் கிடைத்த காலம் அது ] 

இதைக்கேட்டதும் அந்த வெள்ளைக்காரருக்கு ஒரே மகிழ்ச்சி. தனக்கு இன்று அந்தப்பொருள் கிடைப்பதற்கான தன் அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்து போய், மகிழ்ந்து போய், உடனடியாக 3 டாப்லெட்ஸ்களையும் [இட்லிகளையும்] பெற்றுக்கொண்டு, ரூபாய் 60 பணமும் கொடுத்து விட்டார். டாப்லெட்ஸ்களை [இட்லிகளை] உண்டுவிட்டு தூங்கிப்போனார், வெள்ளைக்காரர். 

மறுநாள் காலை ஹெளரா ஸ்டேஷனில் இருவரும் பிரிய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. 

வெள்ளைக்காரர் கண் விழித்தெழுந்ததும் தென்னிந்தியரைப் பார்த்து, “ஐயா, இந்தப்பொருளைச் செய்வது பற்றிய முழு செய்முறைகளும், ஒன்று விடாமல் எனக்குச் சொல்லி விட்டீர்களா! அல்லது ஏதாவது சிலவற்றை சொல்லும் போது நடுவில் விட்டு விட்டீர்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“சுத்தமாக ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விபரமாகச் சொன்னேனே, ஐயா” என்றார் தென்னிந்தியர்.

“அப்படியானால், பிறகு ஏன் இந்த டாப்லெட்ஸ் விலை மிகவும் அதிகமாக உள்ளன?” என்று கேட்டார், வெள்ளைக்காரர். 

.........
.............
....................
..........................
................................
.......................................
.............................................
.....................................................

“நான் தான் சொன்னேனே ஐயா, அவைகள் யாவும் IQ TABLETS [ஐக்யூ டாப்லெட்ஸ்] என்று; 

நேற்று இரவு தான், முதன்முறையாக நீங்கள் மூன்றே மூன்று டாப்லெட்ஸ் மட்டும் சாப்பிட்டுள்ளீர்கள்; 

அவை இப்போது நன்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டன பாருங்கள்; 

உங்களை நன்கு சிந்திக்க வைத்துள்ளன பாருங்கள். 

என்னிடம் கேள்விகள் கேட்கத் தூண்டியுள்ளன பாருங்கள்; 

அதனால் தான் அவைகளின் விலை சற்று அதிகம்; 

அப்போ நான் வரட்டுமா .....” 

என்று சொல்லி விடைபெற்று, ரயிலிலிருந்து இறங்கி விட்டார், அந்த புத்திசாலித் தென்னிந்தியர். 

-o-o-o-o-o-o-

[This is a short story in English forwarded by my friend VIJI of BHEL. 
Only the translation in Tamil is done by me - vgk]  

31 comments:

 1. புத்திசாலித் தென்னிந்தியர். ..
  புத்திசாலித்தனமும், நகைச்சுவையும் விரவிய கதை ! பாராட்டுக்கள்...

  ReplyDelete
 2. IQ TABLETS [ஐக்யூ டாப்லெட்ஸ்] சாப்பிட்டவுடன் விரைவாக செயல்படும் சிறப்பான உணவுதான்..

  ReplyDelete
 3. I Q டேப்ளட்ஸ் ......மிக அருமை .

  ReplyDelete
 4. மாணவர்கள் பரீட்சை நேரத்தில் எழுதும் நாட்களில் இட்லி போன்ற ஆவியில் வேக வைத்த உணவை உண்பது சிறந்ததென்று நாங்க பள்ளி படிக்கும்போது எங்க ஆசிரியை கூறினார் .
  REASON இப்பதான் புரிகிறது .

  ReplyDelete
 5. கீதமஞ்சரி அவர்கள் வலை வழியே
  தங்கள் வலைப்பதிவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது.
  பல தடவைகள் பல வலைப்பதிவுகளில்
  பல பின்னூட்டங்களில் தங்களின் எழுத்தைச்
  சந்தித்திருக்கிறேன், சிலாகித்திருக்கிறேன்
  வியந்திருக்கிறேன் எழுத்தில் தங்கள் நுடபத்தை
  உவந்திருக்கிறேன் தங்கள் எழுத்தில் காணும்
  எளிமையையும் அடக்கத்தையும் எண்ணி எனினும்
  திருச்சிக்காரர் என்னும் பின்னணியில்
  சந்திப்பதும் சிந்திப்பதும்
  இதுவே முதல் தடவை.

  திருச்சியின் பல கோணங்களை
  விரிவாகவும் விளக்கமாகவும்
  விவரித்தமைக்குத் தங்களை
  எத்தனை பாராட்டினாலும் தகும்.

  மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள நாலு வீதிகளில் ஒன்றான‌
  வடக்கு ஆண்டார் தெருவிலே தான் நான் வளர்ந்தேன்.

  எங்கள் இ.ரெ.உயர்னிலைப்பள்ளி, அதை நிறுவியவர் என் கணித ஆசிரியர்.
  எங்கள்தூய வளவனார் கல்லூரி எர்ஹார்ட் எங்கள் முதல்வர்.
  வையம் முழுவதும் தமிழ் நோட்ஸ் படிக்க வைத்த‌
  ஐயம்பெருமாள் கோனார் என் தமிழ் ப்ரொஃபசர்.
  நந்திகோவில் தெரு நாகனாத சுவாமி
  ஆங்கமர்ந்து அருள் தரும் ஆஞ்சனேயன்.
  ஆண்டார் தெரு யார் ஆண்டாரோ நினைவில் இல்லை !!
  அரசமரத்தின் எதிரே
  கையிலே வாளுடன் காட்சி தரும் கருப்பண்ணசாமி
  ஆண்டவர் கோவிலிலே
  ஆண்டுக்கொருமுறை ஆடுக்ள் பலியாகும்

  தெப்பக்குளமருகே வானப்பட்டரை மாரியம்மன்
  திருவிழா காலத்து தீமிதி உற்சவங்கள்
  இன்னும் நினைவில் உள்ளது.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 6. ரொம்பவும் அருமையான கதை. இட்லியில் அடங்கியிருக்கு சூட்சுமம் :-))

  ReplyDelete
 7. இவர் விற்றது மூன்று இட்லி. அவர் வாங்கியதோ 1200 இட்லிகள்.என்ன வில்லத்தனம்?

  நல்ல நேர்மையான கதை. பாராட்டுக்கள் வை.கோ.சார்.

  ReplyDelete
 8. புத்திசாலி தென்னிந்தியர்... IQ டேப்லெட்ஸ் பெயர் சூப்பரா இருக்கே...

  நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 9. Here after I will name it I.Q Tablet to Idli while giving to my grandson.
  viji

  ReplyDelete
 10. இட்லிக்கு இத்தனை மகத்துவமா??புத்திசாலி தென்னிந்தியர் ஒரே நிமிஷத்தில் 60 ரூபாய் சம்பாதித்து விட்டாரே!!

  ReplyDelete
 11. தென்னிந்தியர்களின் புத்திசாலித்தனத்தை அருமையாக சித்தரித்திருக்கிறீர்கள். இட்லி பிரியர்கள் எல்லாம் இதைப்படித்தால் மிகவும் மகிழ்ந்து போவார்கள் என்பது நிச்சயம்!!

  ReplyDelete
 12. இனி இட்லியை பார்க்கும் பொழுதெல்லாம் ஐக்யூ டாப்லெட்ஸ் நினைவுக்கு வந்து விடும்

  ReplyDelete
 13. வெள்ளைக்காரர் எங்காவது இட்லி விலையை விசாரித்தால் நம்மள பத்தி என்ன நினைப்பார்!!...சரி கதைக்கு கையுண்டா காலுண்டா!!!

  இட்லி சாப்டனும்னு ஆசைய தூண்டிவிட்டுவிட்டது கதை.

  ReplyDelete
 14. IQ Tablets - அட இட்லிக்கு என்ன அருமையான பெயர்....

  சமர்த்தர் தான் அந்த நபர்....

  நல்ல தமிழாக்கம்..... தொடருங்கள்....

  ReplyDelete
 15. அருமையான கதை
  செட்டியார் முறுக்கா
  சரக்கு முறுக்கா என்பார்கள்
  இங்கே இரண்டும் முறுக்கு
  இதைப் பதிவாக்கித் த்ந்த நீங்களும் முறுக்கு
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. IQ TABLETS
  அருமை!அருமை!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 17. அன்பின் வை.கோ - ஐக்யூ சூப்பர் - நம்மாள் நம்மாளு தான் - ரசிச்சேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 18. அருமையான கதை.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 19. ரொம்ப ஸ்வாரசியம்.
  இட்லி லேசான ஆகாரம் மிகச்சிறந்த உணவு

  ReplyDelete
 20. இட்லியா !! ஆஹா !!
  சூடாக...கொதிக்க கொதிக்க , கை வச்சா கை பழுத்துடணும், இப்பதான் இறக்கி வச்சதா !! வெரி குட்.
  இரண்டே இரண்டு,
  இதயம் நல்லெண்ணை கலந்த இட்லி மிளகாய் தூள் ( அம்பிகா அல்லது ஆச்சி தயாரிப்பு )
  இன்னும் இரண்டு இட்லி,
  தேங்காய் சட்னி.
  இன்னும் இரண்டு, இட்லி,
  கொத்தமல்லி சட்னியுடன்
  இன்னும் இரண்டு இட்லி,
  வெங்காய சாம்பார் (சின்ன வெங்காயம் போட்டது)
  இன்னும் இரண்டு இட்லி
  கத்தரிக்காய் கொத்சுடன்,
  கடைசியாக இரண்டே இரண்டு,
  கெட்டி தயிருடன்....

  அப்பாடா !! காலை டிஃபன் முடிஞ்சது ...
  அடியே !!
  மத்தியானச் சாப்பாட்டுக்கு என்ன வச்சிருக்க ?

  என்ன இட்லியா ?
  சரி.சர், தொட்டுக்க புளிக்காய்ச்ச, தொட்டுக்க கருவடாம் பொரிச்சு வை.
  பத்தே பத்து. அதுக்கு மேலே வேண்டாம்.
  வயசான காலத்துலே உடம்புக்கு ஒத்துக்காது.

  இன்னிக்கு வேற டாக்டர் பத்தியமா சாப்பிடுங்கன்னு சொல்லியிருக்காரு.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 21. தமிழன் அந்த காலத்திலேயே மற்றவர்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவன் என்பதை இந்த கதை மிக அழகாக எடுத்துரைக்கிறது. ஏமாற்றுவபன் ஒரு காலத்தில் கண்டிப்பாக மற்றவர்களால் ஏமாற்றப்படுவான், இப்போது தமிழர்கள் ஏமாறும் காலம்.

  ReplyDelete
 22. :))))))))

  நல்ல நகைச்சுவை...ஆனாலும் ஒரு அப்பாவி மனிதரை ஏமாற்றிவிட்டாரே...இது புத்திசாலித் தனமா மொள்ளமாறித்தனமா? :( ....ஹ்ம்ம்...

  ReplyDelete
 23. இட்லிக்கு இந்தப் பெயர் நல்ல பொருத்தம்தான். வீட்ல இட்லி பண்ணினா ஐயோ தினசரி இட்லியா தோசை பண்ண முடியாதோன்னுதான் கேப்பாங்க. இந்த கதை படிச்சா இட்லிக்கு மாறிடுவாங்க.

  ReplyDelete
 24. உண்மையிலே உணவுப் பண்டங்களில் மிகவும் உயர்ந்தது நம்ப இட்லி தான்னு பல ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்.

  நாம தான் ஐயோ இட்லி, தோசையான்னு அலுத்துக்கறோம். நம்ப இட்லி, தோசைக்கு ஈடு, இணையே கிடையாது.

  ReplyDelete
 25. ஹா ஹா ஐ க்யூ டேப்லட் (நாம சுடுர இட்டளிக்கு) இத்தர மவுசா தென்னிந்திய ஆளு பொளைக்க தெரிஞ்ச ஆளுதா.

  ReplyDelete
  Replies
  1. mru October 18, 2015 at 5:56 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //ஹா ஹா ஐ க்யூ டேப்லட் (நாம சுடுர இட்டளிக்கு) இத்தர மவுசா தென்னிந்திய ஆளு பொளைக்க தெரிஞ்ச ஆளுதா.//

   :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   Delete
 26. ஹாஹா நம் தென் இந்திய இட்லிக்கு வந்த வாழ்வைப்பாருங்க. ஐ. கயூ. டாப்லெட் நல்ல பேரா இருக்கே.. இனிமே இதப்படிக்கிறவா இட்லினு சூல்ல மாட்டாங்க ஐ. க்யூ டாப்லெட்டுனுதான் சொல்வாங்கபோல.

  ReplyDelete
 27. ஐ கியூ டாப்லட்ஸ் என்றவுடன் ஏதோ I.Q. QUESTIONSஸ் வரப்போகுதோன்னு உள்ளாற போனாக்க நம்மூரு மல்லிப்பூ இட்லி...வெள்ளக்காரனுங்க இதுக்கு ஜொள்ளு விடுறத நானே கண்ணால பாத்திருக்கேன்.

  ReplyDelete
 28. https://www.youtube.com/watch?v=PGYzSHGUDGo
  இதை சில நாட்களுக்கு முன் காண நேர்ந்தது! இட்லியின் சிறப்பை அறியாமல் பீட்சா பர்கர் தேடும் இளைஞர் அறிய வேண்டியது!

  ReplyDelete